-
Tell a friend
-
Topics
-
Posts
-
உங்கள் கருத்திற்கு நன்றி, மன்னிக்கவும் உங்கள் கருத்துடன் உடன்பாட்ட்ற்கு வரமுடியாமைக்கு, சில கோட்பாடுகளை எந்த வித பின்புலத்தினையும் கவனத்தில் கொள்ளாமல் அவ்வாறே உள்வாங்குதல் எனும் முறைமையிலான கற்கை நெறியினை Kind learning என அழைக்கிறார்கள், இந்த வகையிலேயே வரலாற்றினையும் (பொதுவான வரலாறாக இருந்தாலும் மத சார்பிலான வரலாறாக இருந்தாலும்) அணுகிறார்கள். இதனால் திரைமறைவில் காணப்படும் உள்குத்துக்களை அறிய முடிவதில்லை அல்லது அறிய விரும்புவதில்லை இது நீண்ட கால நிலைத்தன்மையினை பாதிக்கிறது. இந்த வரலாற்று புரளிகள் உள்ளடி வேலைகளை அறிந்து கொள்வதற்கு புரிந்துணர்வு ஏற்படுத்தக்கூடிய பாரம்பரியமற்ற கற்கைநெறி வேண்டும் என கூறப்படுகிறது இதனை Wicked learning என அழைக்கிறார்கள், இந்த பாரம்பரியமற்ற கற்கை நெறியினை பின்வரும் உதாரணத்தில் கூறலாம். நாம் பாரம்பரிய முறை கற்றல் நெறிகளின் பின்புலம் கொண்டவர்களாக இருப்பதால் சில நடைமுறை ஒவ்வாத விடயங்களுக்கான விடைகளை காண முயற்சிப்பதில்லை அல்லது விரும்புவதில்லை என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). எனது கருத்து சில தற்பொது எமக்கு பிடிக்காத விடயங்களை கடந்து போவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படாது அதனை எதிர்கொள்ள எமது வரலாற்று தவறுகளை கற்று கொள்ளவேண்டும் என மற்றவர்கள் கூறும் விடயம் சரியாக இருக்கும் என கருதுகிறேன்.
-
உங்களுக்கு என்ன பயன் என்று தெரியவில்லையா ?? தெரியாத நீங்கள் எப்படி நாங்கள் பயன்கள் என்று சொல்பவற்றை மறுத்து அளிக்க முடியும்?? பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம். வகுப்பு மற்றும் பல்கலைகழகத்தில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் படித்தது பிழை என்றாகி விடுமா??? இல்லை இல்லை ஒருபோதும் இல்லையால்லவா. ?? அதேபோல போராட்டத்தால் பயன்களில்லை என்று சொல்ல முடியாது நிறையவே பயன்கள் உண்டு அதில் முக்கியமானது உரிமை என்றால் என்ன என்று தெரியாத பாமர மக்கள் கூட்டம் உரிமையை பற்றி அறிந்துள்ளார்கள் அதாவது தங்களின் உரிமைகள் பற்றியும் அதற்காக போராட்டங்களை செய்ய வேண்டிய தேவைகள் பற்றியும் அறிந்து உள்ளார்கள் இப்போது சாவகச்சேரியில். நடக்கிறது பார்க்கவில்லையா??
-
By ரசோதரன் · பதியப்பட்டது
எல்லோரும் ஃபுட்பால் பார்க்கிறாங்களே என்று நானும் பார்ப்பமே என்று தேட............ இது தான் என் தேடலில் வந்தது.......🤣 -
By வீரப் பையன்26 · Posted
ம்ம்ம்ம் உண்மையை எழுதினால் உங்களிடத்தில் இருந்து பதில் இதை தான் எதிர் பார்க்க முடியும்🫤 சம்பந்தர் கூட்டத்தால் தமிழர்கள் அடைந்த பலன் என்ன அதை 4வரி எழுதிட்டு போங்கோ😁..................கூடுதலா தலைவர் மூலம் தமிழர்கள் அடைந்த பலனை ஆதாரத்தோடு எழுதுகிறேன்......................... -
உலகம் முழுவதும் இதுதான் கள நிலவரம். ☹️
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
- 0 replies
Picked By
மோகன், -
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts