Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2024 at 19:08, வாலி said:

எங்கண்ட ஜப்னா ஹிண்டு ஓல்ட்போய்!

தயவு செய்து  யாரவாது அவருக்கு நல்ல வழியில் வழி காட்டுங்க ஆள் கண்ட அறிவற்ற ஆட்களுடன் சகவாசம் கொண்டு அழியுமுன் .

  • Replies 195
  • Views 18.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நியாயம்
    நியாயம்

    மருத்துவர் அர்ச்சனா கொஞ்சம் அவசரப்பட்டு உள்ளார் என நினைக்கின்றேன். முக்கியமாக சமூக ஊடகங்களில் எதேச்சையாக தனது கருத்துக்களை (உணர்ச்சிகளை) சாவகச்சேரி வைத்தியசாலை சம்மந்தமாக கூறியவை அவருக்கே பல சட்ட சிக்

  • நியாயம்
    நியாயம்

    இலங்கையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவருடன் இன்றும் மருத்துவர் அர்ச்சனாவின் முறைப்பாடுகள் சம்மந்தமாக உரையாடினேன்.  மருத்துவர் அர்ச்சனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுவந்த முறைகேடுகளை து

  • Ahasthiyan
    Ahasthiyan

    25+ வைத்தியர்கள் இருந்தும் முக்கிய மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கபடவில்லை என்றால், நிர்வாகத்தில் குளறுபடிகள் இருக்கின்றது. பணியாளர்களை விட வைத்தியர்கள் தொகை அதிகம் போல் தெரிகிறது.   

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

தயவு செய்து  யாரவாது அவருக்கு நல்ல வழியில் வழி காட்டுங்க ஆள் கண்ட அறிவற்ற ஆட்களுடன் சகவாசம் கொண்டு அழியுமுன் .

அவருக்கு தென்னிலங்கை அரசியல்கட்சியொன்று நல்லவழிகாட்டிக்கொண்டிருக்கிறதாம்! 

புல் பம்ப்கினை ரைசுக்குள்ள ஹைட்பண்ணேலாது! எப்பிடியும் வெளியில தெரியத்தான் போகுது!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, யாயினி said:

போருக்கு முன், போருக்கு பின் எந்த வீட்டில் தாய் , தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மது குடிக்க ஊற்றிக் கொடுத்தாக சரித்திரம் இருக்கிறதா.?எங்காவது கேள்விப் பட்டீர்களா..?

எனக்கு அம்மாள் வருத்தம் வந்தபோது அம்மா பனங்கள்ளு ஊற்றித் தந்தவ, அக்கா குழந்தைபெற்று இருந்தபோது சாராயம் ஊற்றிக் கொடுத்தவ. மதுவை அளவுக்கு மிஞ்சாமல் அளவோடு உடல் நலத்திற்கு ஏற்ப எடுக்கவேண்டும் என டாக்டர் சொல்லவந்ததுபோல் தெரிகிறது.😌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகருக்கு எதிரான வழக்கு  ஒத்திவைப்பு 

Published By: DIGITAL DESK 3   31 JUL, 2024 | 04:15 PM

image

யாழ்ப்பாணம், சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் வைத்திய அத்தியட்சகர் தமக்கு அவதூறு ஏற்படுத்தினார், கடமைக்கு இடையூறு விளைவித்தார் உள்ளிட்ட 5 முறைப்பாடுகள் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது.

அதன் போது, முன்னாள் வைத்திய அத்தியட்சகர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி , வழக்கின் இரு தரப்பினரும் வைத்திய துறை சார்ந்தவர்கள் என குறிப்பட்டதுடன், வழக்கினை இணக்க சபைக்கு மாற்றுமாறு மன்றில் சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

அதற்கு முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆட்சேபணை தெரிவித்ததுடன், வைத்தியர் பொலிஸ் நிலையம் சென்று தான் குற்றம் சாட்டிய நபர்கள் தொடர்பிலான ஆதாரங்களை இதுவரையில் வழங்காதமை தொடர்பிலும் மன்றில் சுட்டிக்காட்டினார்கள்.

அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் 09 ஆம் மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த மன்று, வைத்தியரை பொலிஸ் நிலையம் சென்று வாக்குமூலம் வழங்குமாறும் கட்டளையிட்டது.

https://www.virakesari.lk/article/189906

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் அர்ச்சனா இனி வரும் காலத்தில் தனது சேவையை மன்னாரில் பார்க்கலாம் என்ற மாதிரியான ஒரு பதிவை பகிர்ந்திருக்கிறார்.அவரளவில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட இருப்பதனால் தானே ஒரு இடத்தின் பெயரை குறிப்பிட்டு பதிவிட்டுருக்கிறார்.எவ்வளவு தூரம் உண்மை என்று சொல்லத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2024 at 20:32, யாயினி said:

வைத்தியர் அர்ச்சனா இனி வரும் காலத்தில் தனது சேவையை மன்னாரில் பார்க்கலாம் என்ற மாதிரியான ஒரு பதிவை பகிர்ந்திருக்கிறார்.அவரளவில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட இருப்பதனால் தானே ஒரு இடத்தின் பெயரை குறிப்பிட்டு பதிவிட்டுருக்கிறார்.எவ்வளவு தூரம் உண்மை என்று சொல்லத் தெரியவில்லை.

அங்கேயும் கலவரம் வெடித்திருக்கிறது இவருக்கெதிராக. இவர் சாட்டிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு உரியவர்கள் தண்டிக்கப்பட்டாலன்றி இவர் எங்கேயும் தொழில் புரிய முடியாது, இவரை ஒரு கலகக்காரராகவே துரத்துவார்கள், அதுவரை அவர் அமைதி காப்பது  அவசியம். மக்களின் உணர்வையும் ஆதரவையும் வைத்து தன்னை அடையாளப்படுத்த நினைத்தால்; மக்களின் நிஞாயமான கோரிக்கைகள்  புறந்தள்ளப்பட்டு, குற்றவாளிகள் தப்பிக்கவும் இன்னும் தாம் நினைத்ததை சாதிக்கலாம் எனும்  எண்ணம் எல்லோர் மனதிலும் தோன்றி இவர் ஒரு நகைச்சுவையாளனாக சித்திரிக்கப்படலாம். தேவையற்ற நேர்காணலையும், நேரலையில் தோன்றுவதையும்   தவிர்ப்பதே இவரது தொழிலுக்கும் அவரை நம்பிய மக்களுக்கும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கும்  நன்மை பயக்கும்.  இல்லையேல் எல்லோரையும் சலிப்படைந்து விலத்திப்போக வைத்துவிடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் டொக்டருக்கு நல்லதொரு கடிதம் எழுதி இருக்கிறார். முடிந்தால் படியுங்கள், பின் தெளியுங்கள். 

Prashanthan Navaratnam

#############   ################    ##############   ###############

453156318_1032144564937822_7320720504545

டாக்டர் அர்ச்சுனா இராமநாதன்
சாவகச்சேரி.
11.07.2024
அன்புச் சகோதரா!
வணக்கம்.
நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.
அப் பிரார்த்தனை உங்களுக்கானது மட்டுமன்று,
சாவகச்சேரி மக்களின் நலம்வேண்டியும்,
யாழ்ப்பாண வைத்தியத்துறையின்  நலம் வேண்டியுமாம்.
யாரும் எதிர்பாராத நிலையில், 
பெரியதொரு புரட்சியைத் தனிமனிதராய்ச்;; செய்து முடித்திருக்கிறீர்கள்.
உங்களின் துணிவிற்கு என் வாழ்த்துக்கள்!

நீங்கள் வாய் திறந்து உண்மையை உரைத்த பிறகுதான்,
நம் மண்ணில் வைத்தியத் துறையினர் சிலர் செய்யும், 
அட்டூழியங்கள் பற்றி அறிய முடிந்தது.
எத்தனை இழிவுகள் ! நினைக்கவே மனம் கூசுகிறது.
வெளிப்படையாய் இத்தனை உண்மைகளை நீங்கள் பேசிய பிறகும்,
மேலிடம் உங்களை அகற்றப் பாடுபடுகிறதே அன்றி, 
நீங்கள் சொன்னது பற்றி ஆராய முன்வருவதாய்த் தெரியவில்லை.
அதிலிருந்தே, நடந்த பாவங்களின் வேர், 
எதுவரை சென்றிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

ஆசிரியம், வைத்தியம் என்னும் இரண்டு துறைகளும்,
தொழில்கள் அன்றாம்.  அவை தொண்டுகள்!
அதனால்த்தான் இவ்விரு துறை சார்ந்தாரையும்,
தேவை முடிந்த பின்பும்  மக்கள் வணங்கி நிற்கின்றனர்.
அத் தூய துறையில் இருந்து கொண்டு அதனையும் தொழிலாக்கி,
பணம் தேட முனைந்த சில ஈனர்களின் இழிவை,
உங்களது நெஞ்சத்துணிவால் உலகிற்கு வெளிப்படுத்தி விட்டீர்கள்.
பாராட்டுக்கள்!

உங்களை மரியாதைக் குறைவாய்த் திட்டியும், ஏன் அடித்தும்கூட,
பலர் செய்த மிரட்டல்களையெல்லாம் துச்சமென ஊதித்தள்ளி,
அநியாயத்திற்கு எதிராய் நிமிர்ந்து நின்ற 
உங்களது துணிவை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.
எத்தனை மிரட்டல்கள்.
எத்தனை தூற்றுதல்கள். 
எத்தனை எதிர்ப்புக்கள்.
அத்தனையையும் கடந்து ஆச்சரியப்படுத்துகிறீர்கள்.
வியப்பாய் இருக்கிறது!

உண்மையின் வலிமை மெல்லப்பரவி, 
மக்கள் மனங்களில் படர்ந்து, 
அவர்களையும் கொதித்தெழ வைத்ததும்,
உங்களின் பின்னால் கூட வைத்ததும்,
அதிசயமேயாம்!
ஆனாலும் பல தீய கரங்கள் ஒன்றிணைந்து, 
உங்களை ஒருவிதமாய் அவ்விடத்தை விட்டு அகற்றிவிட்டன. 

உங்களது இச் செயல்களால் நான் மகிழ்ச்சியடைகிறேன். 
போருக்குப் பின்னான யாழ்ப்பாணத்தில் ஒழுக்கம் குறைந்துவிட்டது என்று,
பலரும் ‘வெற்று’  ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் வேளையில்,
அந்த ஒழுக்கயீன வெள்ளத்துக்கும், 
சத்தியத்தால் அணைகட்ட முடியும் எனக்காட்டியது, 
நீங்கள் அடைந்த முதல் வெற்றி. 
எவரது தூண்டுதலும் இன்றி,
ஒரு தனி மனிதனுக்காய் இத்தனை மக்கள் கொதித்தெழுந்த வரலாற்றுச் சாதனை,
உங்களுக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றி.
இயக்கங்களால்கூட இந்தச் சாதனையைச் செய்யமுடியாமல் போயிற்று என்றுதான் சொல்வேன்.
அவர்கள் பின்னால் இருந்த ஆயுத பலமும், அதிகார சக்திகளும் 
உங்களின் செயல்களுக்குப் பின்னால் இருந்திருக்கவில்லை.
அதனால்தான் அச்; சாதனையை வரலாற்றுச் சாதனை என்கின்றேன்.

மணிக்கணக்கில் பேசப்படும் உண்மைகளை விட, 
நிமிடக்கணக்கில் நடைமுறைப்படுத்தப்படும் உண்மைகள்
மேலானவை என நிரூபித்து விட்டீர்கள்.
அதற்காகவும் எனது வாழ்த்துக்கள்!

நண்பனே! உங்களை எதிரிகள் பதவியிலிருந்து தூக்கி எறிந்துவிட்டாலும்  
நீங்கள், அவர்களின் தலைகளின்மேல்
‘அறம்’ என்னும் கூர்வாளைத் தொங்கும்படி  செய்துவிட்டுத்தான் சென்றிருக்கிறீர்கள்.
மக்களை மாக்களாக நினைந்து, 
தம் இஷ்டப்படி இனி அவர்களால் நடக்கமுடியாது.
அவர்களின் செயல்களை மக்களின் ஆயிரம் கண்கள் இனிக் கண்காணிக்கப் போகின்றன.
திருந்த விருப்பப்படாவிட்டாலும், அவர்கள் திருந்துவதற்கான வழியை 
வகுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறீர்கள்.
அந்த வகையில் உங்களது போராட்டம் வெற்றியாகத்தான் முடிந்திருக்கிறது.

அறம் நோக்கிப் போராடத் தலைப்பட்டால் 
அவர்களின் பின்னால் மக்கள் தானாக அணி சேர்வார்கள்; என்ற உண்மையை 
மிகத் தெளிவாக நிலைநிறுத்தி விட்டீர்கள்.
இது நம் அரசியலாளர்களுக்கும் ஒரு பாடமாகட்டும்!  

டாக்டர் அர்ச்சுனா இராமநாதன்
பேராதனை,
26.07.2024
நண்பா! 
நான் உங்களுக்கு எழுதத் தொடங்கிய கடிதத்தின் மேற் பகுதியை
அப்படியே இடையில் விட்டுவிட்டு இலண்டன் செல்ல வேண்டி வந்து விட்டது.
பயணத்தால் வந்து,  அக் கடிதத்தை முடித்து வெளியிடலாம் என நினைந்திருந்தேன்.
திரும்பி வந்து பார்த்தால் நிதானமாகத் தொடங்கிய உங்கள் செயல்கள் 
‘தறிகெட்டுப’; போய்க்; கொண்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது.  
அதிர்ச்சியடைந்தேன்!.
நல்லகாலம் கடிதத்தின் அந்த முதற் பகுதியை,
வெளியிடாமல் சென்றதை நினைந்து உள்ளுர மகிழ்ந்து கொண்டேன்.

மக்கள் தந்த உற்சாகத்தால் தடுமாறிப் போனீர்களோ? 
அல்லது உங்களது இயல்பே இதுதானோ?  தெரியவில்லை. 
வரவரத் தேவையற்ற அறிக்கைகளை நாளுக்குநாள் வெளிப்படுத்தி  
உங்களது மதிப்பை முடிந்தளவு குறைத்து வருகிறீர்கள். 
‘யூடியூபைத’; திறந்தாலே உங்களது சிரித்த (இளித்த) முகத்துடன் கூடிய ஓர் செய்தி 
தினந்தினம் காத்திருக்கிறது.- இது தேவைதானா? 
‘அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதனை மறந்து போகாதீர்கள்!. 
எங்கள் மண்ணில் தொடங்கப்படுகிற போராட்டங்கள் எல்லாம்,
நெறிப்படுத்துவார் இன்றி வீழ்ந்து போவதுதான் விதியோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

தற்போது தொடர்கிற உங்களது முயற்சிகளெல்லாம் 
சத்தியத்திற்கான போராட்டமாகத் தெரியவில்லை. 
அவை உங்களை நீங்களே ஓர் ‘ஹீரோ’ வாக்க முயலும் முயற்சியாகவே தெரிகின்றன.
உங்களைப் பற்றி நீங்களே பெருமையாக அலட்டிக் கொள்ளும் விடயங்கள் 
கேட்பவர்களை வெட்கப்பட வைப்பதோடு அல்லாமல், 
உங்கள் தனி மனித ஒழுக்கத்தைப் பற்றியும் ஐயப்பட வைக்கின்றன.
செய்திப் பசியோடு திரிகின்ற ஊடகநிறுவனங்கள் உங்களைச் சூழ்ந்து கொள்ள, 
நக்கலும், நையாண்டியுமாய் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல்,
அவற்றுக்கு நீங்கள் வழங்கும் பேட்டிகளால்
பலருக்கும் உங்களது மனநிலை பற்றிய ஓர் ஐயப்பாடு தோன்றியிருக்கிறது.
உங்களை “ஹீரோ”வாக்க நினைந்து, 
அநீயாயத்திற்கு “கொமேடியன்” ஆகிப் போய் நிற்கிறீர்கள்.
உங்களுக்காகக் குரல் கொடுக்க முன்வந்த மக்கள் 
இன்று நாணித் தலைகுனிந்து நிற்கின்றனர். 

வீரியத்தைவிடக் காரியம்தான் முக்கியமானது என்பார்கள்.
தற்போதைய உங்களது செயல்களிலோ 
காரியத்தை விட வீரியம் தான் மேல் ஓங்கி நிற்கிறது.
எதிரிகளுக்கு எதிரான தற்போதைய உங்களது சில செயல்களில்,
தேவையற்ற பரபரப்பும், பகைமூட்டிப் பார்க்கும் செயலும்,
வெற்றிக்காக, எல்லைகள் கடந்து செல்ல முயலும் தன்மையும்,
தலை தூக்கி இருப்பது தெளிவாய்த் தெரிகிறது.
எதிரிகளைப் பகை வயப்படுத்துவதை விட, 
அவர்களை அறவயப்படுத்துவதே சிறந்தது.
இப்போது உங்களுக்கு அந்த நோக்கம் இருப்பதாய்த் தெரியவில்லை.

நீங்கள் உண்மை நோக்கிப் போராடுபவரானால்,  
உங்களது செயல்களில் இத்தனை தடுமாற்றங்கள் வர நியாயமில்லை.
நோக்கம் மட்டுமல்ல, செயலும் சரியாக இருக்கவேண்டும் என,  
நினைப்பவர்கள் தான் தமிழர்கள்.
அண்மையில் வெளிவந்த, ‘அரசியலில் குதிப்பேன்!’; என்ற உங்களது அறிக்கையிலிருந்து 
உங்கள் செயல்கள் மட்டுமல்ல, நோக்கமும் தவறென்றே நினைக்க வேண்டியிருக்கின்றது.
அதிசயமாய் நிகழ்ந்த ஓர் அற்புத எழுச்சியை, 
உங்களது புகழ் விருப்புக்காக இழந்து போனீர்கள். 
வருத்தப்படுகிறேன். 

வலிமையானவர்களின் பிழைகளை வெளிப்படுத்தக்கூடாது 
என்ற கட்சியைச் சேர்ந்தவனல்ல நான். 
ஆனால் மக்கள் மன்று, 
வெளிப்படுத்துபவர்களின் தூய்மையையும் மனதில் கொண்டுதான், 
வெளிப்படுத்தப்படும் விடயங்களை ஏற்கும் என்பது நிச்சயம். 
அபூர்வமாகக் கிடைத்த ஓர் நல்ல வாய்ப்பை இழந்து நிற்கிறீர்கள். 
உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். 
“இன்பமே எந்நாளும் துன்பமில்லை”

இலங்கை ஜெயராஜ் Kambavarithy Ilankai Jeyaraj

  • கருத்துக்கள உறவுகள்

அப்பப்போ வைத்தியசாலைகளில் நடந்த ஊழல்கள் அதிகார துஸ்பிரயோகங்கள் ஊடகங்கள் வாயிலாகவும் சில தனிப்பட்ட காணொளிகள்  மூலமும் வெளிவந்தன அப்போதெல்லாம் அரசியல்வாதிகளோ சமூக ஆர்வலர்களோ நடவடிக்கை எடுத்திருந்தால், தட்டிக்கேட்டிருந்தால் இவ்வளவுதூரம் போயிருக்காது. முன்னர் வன்னிப்பிரதேச சுகாதார ஊழியர் ஒருவர் இதை வெளிக்கொணர்ந்தபோது அவரது தலைமையக்கத்தோடு தொடர்பு கொண்டு அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை விட்டார்கள். இவர்கள் சரியாக நடந்திருந்தால், அவர் வெளிப்படுத்த வேண்டிய தேவை வந்திருக்காதே. அவர் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், யார் இந்தக்குறைகளை வெளிப்படுத்த முன்வருவர்? தரங்கெட்டவர்கள், நேர்மையாளரை துரத்துவார்கள் அல்லது அவர்களை சுயமாக இயங்க விடாமல் கட்டுப்படுத்துவார்கள். இவர்களுக்கு திறமை இல்லை அல்லது மக்களுக்கு சேவை செய்யாமல் கள்ள உடம்பு வளர்த்து சம்பளம் வாங்க வேண்டும். இதுவும் ஒரு களவுதான். பலவகை இன்னல்களை அனுபவிக்கும் மக்கள் இவர்களுடன் சண்டை இடாமல் பொறுமையாக, தாமதமாகவேனும் பயன் பெற நினைத்து பேசாமல் இருந்திருக்கலாம், கதைத்தால் இப்போ நடப்பதுபோல் தங்களை தாக்கியதாக பொய் பிரச்சாரம் செய்து பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் இதனால் அவசர நோயாளர் பாதிக்கப்படுவார்கள் என நினைத்து பொறுத்துக்கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் எந்த மனிதனும் நிரந்தரமாக, சுகதேகியாக, அதிகாரத்தோடு, அதே பதவியில் வாழப்போவதில்லையென்கிற உண்மை புரிந்தால் இப்படியெல்லாம் ஆடமாட்டார்கள். இவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டு கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்! படித்தவர்கள் பதவியில் இருப்பவர்கள் பேசும் பேச்சு; பரதேசி, நீ, டேய், உன்ர பதிவுகளை நீதிமன்றம் ஏற்குமா? அப்போ நீதிமன்றம் ஏற்காதென்றால் எது வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம் என்று பொருளா? நீதிமன்றத்தில் அதற்கும் இடமிருக்கு என்பது பேசியவருக்கு தெரியாதுபோல் உள்ளது. ஒருவர் தன் பாதுகாப்புக்காக கொலை செய்யலாம் என்றால், ஏன் குரல் பதிவு செய்ய முடியாது? ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்தால் இறந்தவரின் தொலைபேசியை போலீசார்  சோதனையிடுவதன் காரணம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1722672711239-1-e1722677105335.jp

வைத்தியர் அர்ச்சுனா கைது – 7 ஆம் திகதி வரை விளக்கமறியல்.

மன்னார் வைத்தியசாலைக்குய் அத்துமீறி நுழைந்த அர்ச்சுனா இன்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும்  7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை,பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தமை, அரச சேவைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றசாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்சுனா விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
இன்றைய தினம் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்சுனவை மன்னார் நீதவான் நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய நிலையில் வைத்தியர் அர்சுனாவை எதிர்வரும் 7 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மன்னார் வைத்தியசாலையில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தார். குறித்த மரணம் தொடர்பாக விசாரித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிகளை மேற்கொள்ளப்போவதாகக் கூறி நேற்றைய தினம் மாலை மன்னாருக்கு வைத்தியர் அர்ச்சுனா சென்றிருந்தார்.

மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற வைத்தியர், அங்கு நோயாளர் விடுதிக்குச் சென்று இறப்பு தொட்பான விளக்கத்தைக் கேட்டிருந்தார்.

அங்கு கடமையில் இருந்த வைத்தியர்கள், விதிமுறைகளை மீறி வைத்தியசாலைக்குள் நுழைய வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

பின்னர் அங்கு வாக்குவாதம் இடம்பெற்றதை தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கச் சென்றார்.

இந்த நிலையில் நேற்று வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக மன்னார் வைத்தியர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று காலை வைத்தியர் அர்ச்சுனா மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் எடுப்பதற்காக  வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1394616

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

இவர் தனது அரசியல் பிரவேச விளம்பரத்திற்காக அதிரடி காட்டுவதாக சம்பந்தப்பட்ட வைத்தியர் குற்றம் சுமத்தியிருந்தார். தான் அறிவித்துப்போட்டு வந்ததாக இவர் தெரிவித்திருந்தார். என்ன இருந்தாலும் குட்டையை குழப்பி  சம்பந்தப்பட்டவர்கள் பழிவாங்கும் நிலைமை ஏற்படப்போகிறது இவரது அவசரபுத்தியால். ஏற்கெனவே சாதாரண மக்கள் இவர்களது தெனாவெட்டால் துயரம் அனுபவித்து இவரால் ஒரு விடிவு வருமென எதிர்பார்த்தார்கள் அது வெறும் நாடகமாக மாறி சம்பந்தப்பட்டவர்களுக்கு வெற்றியை கொடுக்கப்போகிறது. இவர் கொஞ்சம் நிதானித்து சட்ட ஆலோசனையுடன் காரியத்தை தொடங்கியிருக்கலாம் அல்லது வெளியிலிருந்து உதவி செய்பவர்களின் கவனத்துக்கு கொண்டு போயிருக்கலாம். சிங்கள அதிகாரியின் பலத்தை நம்பி பெயரை கெடுத்துக்கொண்டதுதான். "பணிசெய் பலனை எதிர்பாராதே" என்று தன்னால் முடிந்ததை முயன்றிருக்கலாம் சும்மா அரசியல் வாதிகளையும் அதிகாரிகளையும் நம்பி அவசரப்பட்டுவிட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

மன்னாரில் நடந்த சாவு தவிர்க்க பட்டிருக்க கூடியதே என்று இங்கேயும் அது சார்ந்த வல்லுனர்களால் சுட்டி காட்ட பட்டுள்ளது. எனவே இவரது கைது மூலம் நல்லது நடக்கட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் டொக்டருக்கு நல்லதொரு கடிதம் எழுதி இருக்கிறார். முடிந்தால் படியுங்கள், பின் தெளியுங்கள். 

Prashanthan Navaratnam

#############   ################    ##############   ###############

453156318_1032144564937822_7320720504545

டாக்டர் அர்ச்சுனா இராமநாதன்
சாவகச்சேரி.
11.07.2024
அன்புச் சகோதரா!
வணக்கம்.
நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.
அப் பிரார்த்தனை உங்களுக்கானது மட்டுமன்று,
சாவகச்சேரி மக்களின் நலம்வேண்டியும்,
யாழ்ப்பாண வைத்தியத்துறையின்  நலம் வேண்டியுமாம்.
யாரும் எதிர்பாராத நிலையில், 
பெரியதொரு புரட்சியைத் தனிமனிதராய்ச்;; செய்து முடித்திருக்கிறீர்கள்.
உங்களின் துணிவிற்கு என் வாழ்த்துக்கள்!

நீங்கள் வாய் திறந்து உண்மையை உரைத்த பிறகுதான்,
நம் மண்ணில் வைத்தியத் துறையினர் சிலர் செய்யும், 
அட்டூழியங்கள் பற்றி அறிய முடிந்தது.
எத்தனை இழிவுகள் ! நினைக்கவே மனம் கூசுகிறது.
வெளிப்படையாய் இத்தனை உண்மைகளை நீங்கள் பேசிய பிறகும்,
மேலிடம் உங்களை அகற்றப் பாடுபடுகிறதே அன்றி, 
நீங்கள் சொன்னது பற்றி ஆராய முன்வருவதாய்த் தெரியவில்லை.
அதிலிருந்தே, நடந்த பாவங்களின் வேர், 
எதுவரை சென்றிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

ஆசிரியம், வைத்தியம் என்னும் இரண்டு துறைகளும்,
தொழில்கள் அன்றாம்.  அவை தொண்டுகள்!
அதனால்த்தான் இவ்விரு துறை சார்ந்தாரையும்,
தேவை முடிந்த பின்பும்  மக்கள் வணங்கி நிற்கின்றனர்.
அத் தூய துறையில் இருந்து கொண்டு அதனையும் தொழிலாக்கி,
பணம் தேட முனைந்த சில ஈனர்களின் இழிவை,
உங்களது நெஞ்சத்துணிவால் உலகிற்கு வெளிப்படுத்தி விட்டீர்கள்.
பாராட்டுக்கள்!

உங்களை மரியாதைக் குறைவாய்த் திட்டியும், ஏன் அடித்தும்கூட,
பலர் செய்த மிரட்டல்களையெல்லாம் துச்சமென ஊதித்தள்ளி,
அநியாயத்திற்கு எதிராய் நிமிர்ந்து நின்ற 
உங்களது துணிவை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.
எத்தனை மிரட்டல்கள்.
எத்தனை தூற்றுதல்கள். 
எத்தனை எதிர்ப்புக்கள்.
அத்தனையையும் கடந்து ஆச்சரியப்படுத்துகிறீர்கள்.
வியப்பாய் இருக்கிறது!

உண்மையின் வலிமை மெல்லப்பரவி, 
மக்கள் மனங்களில் படர்ந்து, 
அவர்களையும் கொதித்தெழ வைத்ததும்,
உங்களின் பின்னால் கூட வைத்ததும்,
அதிசயமேயாம்!
ஆனாலும் பல தீய கரங்கள் ஒன்றிணைந்து, 
உங்களை ஒருவிதமாய் அவ்விடத்தை விட்டு அகற்றிவிட்டன. 

உங்களது இச் செயல்களால் நான் மகிழ்ச்சியடைகிறேன். 
போருக்குப் பின்னான யாழ்ப்பாணத்தில் ஒழுக்கம் குறைந்துவிட்டது என்று,
பலரும் ‘வெற்று’  ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் வேளையில்,
அந்த ஒழுக்கயீன வெள்ளத்துக்கும், 
சத்தியத்தால் அணைகட்ட முடியும் எனக்காட்டியது, 
நீங்கள் அடைந்த முதல் வெற்றி. 
எவரது தூண்டுதலும் இன்றி,
ஒரு தனி மனிதனுக்காய் இத்தனை மக்கள் கொதித்தெழுந்த வரலாற்றுச் சாதனை,
உங்களுக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றி.
இயக்கங்களால்கூட இந்தச் சாதனையைச் செய்யமுடியாமல் போயிற்று என்றுதான் சொல்வேன்.
அவர்கள் பின்னால் இருந்த ஆயுத பலமும், அதிகார சக்திகளும் 
உங்களின் செயல்களுக்குப் பின்னால் இருந்திருக்கவில்லை.
அதனால்தான் அச்; சாதனையை வரலாற்றுச் சாதனை என்கின்றேன்.

மணிக்கணக்கில் பேசப்படும் உண்மைகளை விட, 
நிமிடக்கணக்கில் நடைமுறைப்படுத்தப்படும் உண்மைகள்
மேலானவை என நிரூபித்து விட்டீர்கள்.
அதற்காகவும் எனது வாழ்த்துக்கள்!

நண்பனே! உங்களை எதிரிகள் பதவியிலிருந்து தூக்கி எறிந்துவிட்டாலும்  
நீங்கள், அவர்களின் தலைகளின்மேல்
‘அறம்’ என்னும் கூர்வாளைத் தொங்கும்படி  செய்துவிட்டுத்தான் சென்றிருக்கிறீர்கள்.
மக்களை மாக்களாக நினைந்து, 
தம் இஷ்டப்படி இனி அவர்களால் நடக்கமுடியாது.
அவர்களின் செயல்களை மக்களின் ஆயிரம் கண்கள் இனிக் கண்காணிக்கப் போகின்றன.
திருந்த விருப்பப்படாவிட்டாலும், அவர்கள் திருந்துவதற்கான வழியை 
வகுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறீர்கள்.
அந்த வகையில் உங்களது போராட்டம் வெற்றியாகத்தான் முடிந்திருக்கிறது.

அறம் நோக்கிப் போராடத் தலைப்பட்டால் 
அவர்களின் பின்னால் மக்கள் தானாக அணி சேர்வார்கள்; என்ற உண்மையை 
மிகத் தெளிவாக நிலைநிறுத்தி விட்டீர்கள்.
இது நம் அரசியலாளர்களுக்கும் ஒரு பாடமாகட்டும்!  

டாக்டர் அர்ச்சுனா இராமநாதன்
பேராதனை,
26.07.2024
நண்பா! 
நான் உங்களுக்கு எழுதத் தொடங்கிய கடிதத்தின் மேற் பகுதியை
அப்படியே இடையில் விட்டுவிட்டு இலண்டன் செல்ல வேண்டி வந்து விட்டது.
பயணத்தால் வந்து,  அக் கடிதத்தை முடித்து வெளியிடலாம் என நினைந்திருந்தேன்.
திரும்பி வந்து பார்த்தால் நிதானமாகத் தொடங்கிய உங்கள் செயல்கள் 
‘தறிகெட்டுப’; போய்க்; கொண்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது.  
அதிர்ச்சியடைந்தேன்!.
நல்லகாலம் கடிதத்தின் அந்த முதற் பகுதியை,
வெளியிடாமல் சென்றதை நினைந்து உள்ளுர மகிழ்ந்து கொண்டேன்.

மக்கள் தந்த உற்சாகத்தால் தடுமாறிப் போனீர்களோ? 
அல்லது உங்களது இயல்பே இதுதானோ?  தெரியவில்லை. 
வரவரத் தேவையற்ற அறிக்கைகளை நாளுக்குநாள் வெளிப்படுத்தி  
உங்களது மதிப்பை முடிந்தளவு குறைத்து வருகிறீர்கள். 
‘யூடியூபைத’; திறந்தாலே உங்களது சிரித்த (இளித்த) முகத்துடன் கூடிய ஓர் செய்தி 
தினந்தினம் காத்திருக்கிறது.- இது தேவைதானா? 
‘அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதனை மறந்து போகாதீர்கள்!. 
எங்கள் மண்ணில் தொடங்கப்படுகிற போராட்டங்கள் எல்லாம்,
நெறிப்படுத்துவார் இன்றி வீழ்ந்து போவதுதான் விதியோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

தற்போது தொடர்கிற உங்களது முயற்சிகளெல்லாம் 
சத்தியத்திற்கான போராட்டமாகத் தெரியவில்லை. 
அவை உங்களை நீங்களே ஓர் ‘ஹீரோ’ வாக்க முயலும் முயற்சியாகவே தெரிகின்றன.
உங்களைப் பற்றி நீங்களே பெருமையாக அலட்டிக் கொள்ளும் விடயங்கள் 
கேட்பவர்களை வெட்கப்பட வைப்பதோடு அல்லாமல், 
உங்கள் தனி மனித ஒழுக்கத்தைப் பற்றியும் ஐயப்பட வைக்கின்றன.
செய்திப் பசியோடு திரிகின்ற ஊடகநிறுவனங்கள் உங்களைச் சூழ்ந்து கொள்ள, 
நக்கலும், நையாண்டியுமாய் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல்,
அவற்றுக்கு நீங்கள் வழங்கும் பேட்டிகளால்
பலருக்கும் உங்களது மனநிலை பற்றிய ஓர் ஐயப்பாடு தோன்றியிருக்கிறது.
உங்களை “ஹீரோ”வாக்க நினைந்து, 
அநீயாயத்திற்கு “கொமேடியன்” ஆகிப் போய் நிற்கிறீர்கள்.
உங்களுக்காகக் குரல் கொடுக்க முன்வந்த மக்கள் 
இன்று நாணித் தலைகுனிந்து நிற்கின்றனர். 

வீரியத்தைவிடக் காரியம்தான் முக்கியமானது என்பார்கள்.
தற்போதைய உங்களது செயல்களிலோ 
காரியத்தை விட வீரியம் தான் மேல் ஓங்கி நிற்கிறது.
எதிரிகளுக்கு எதிரான தற்போதைய உங்களது சில செயல்களில்,
தேவையற்ற பரபரப்பும், பகைமூட்டிப் பார்க்கும் செயலும்,
வெற்றிக்காக, எல்லைகள் கடந்து செல்ல முயலும் தன்மையும்,
தலை தூக்கி இருப்பது தெளிவாய்த் தெரிகிறது.
எதிரிகளைப் பகை வயப்படுத்துவதை விட, 
அவர்களை அறவயப்படுத்துவதே சிறந்தது.
இப்போது உங்களுக்கு அந்த நோக்கம் இருப்பதாய்த் தெரியவில்லை.

நீங்கள் உண்மை நோக்கிப் போராடுபவரானால்,  
உங்களது செயல்களில் இத்தனை தடுமாற்றங்கள் வர நியாயமில்லை.
நோக்கம் மட்டுமல்ல, செயலும் சரியாக இருக்கவேண்டும் என,  
நினைப்பவர்கள் தான் தமிழர்கள்.
அண்மையில் வெளிவந்த, ‘அரசியலில் குதிப்பேன்!’; என்ற உங்களது அறிக்கையிலிருந்து 
உங்கள் செயல்கள் மட்டுமல்ல, நோக்கமும் தவறென்றே நினைக்க வேண்டியிருக்கின்றது.
அதிசயமாய் நிகழ்ந்த ஓர் அற்புத எழுச்சியை, 
உங்களது புகழ் விருப்புக்காக இழந்து போனீர்கள். 
வருத்தப்படுகிறேன். 

வலிமையானவர்களின் பிழைகளை வெளிப்படுத்தக்கூடாது 
என்ற கட்சியைச் சேர்ந்தவனல்ல நான். 
ஆனால் மக்கள் மன்று, 
வெளிப்படுத்துபவர்களின் தூய்மையையும் மனதில் கொண்டுதான், 
வெளிப்படுத்தப்படும் விடயங்களை ஏற்கும் என்பது நிச்சயம். 
அபூர்வமாகக் கிடைத்த ஓர் நல்ல வாய்ப்பை இழந்து நிற்கிறீர்கள். 
உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். 
“இன்பமே எந்நாளும் துன்பமில்லை”

இலங்கை ஜெயராஜ் Kambavarithy Ilankai Jeyaraj

கம்பவாரிதி இப்போது என்ன கூற வருகின்றார்? 

அரசியல் செய்வது ஒன்றும் தவறான விடயம் இல்லை. 

இலவச கல்வி பெற்று மருத்துவராகி பின் சம்பளம் வாங்கிக்கொண்டு மருத்துவ தொழிலை தமது வசதிக்கேற்ப பயன்படுத்துவது தவறு. மக்களின் அறியாமையை பயன்படுத்தி நோயாளிகளை ஏமாற்றுவது தவறு.  

மருத்துவர் அர்ச்சனா அரசியலில் ஈடுபடுவதால் குடி மூழ்கி போகாது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2024 at 22:23, வாலி said:

அவருக்கு தென்னிலங்கை அரசியல்கட்சியொன்று நல்லவழிகாட்டிக்கொண்டிருக்கிறதாம்! 

புல் பம்ப்கினை ரைசுக்குள்ள ஹைட்பண்ணேலாது! எப்பிடியும் வெளியில தெரியத்தான் போகுது!

🤣.........

மூன்று நாட்கள் காத்திருந்தும் பூசணிக்காய் இன்னும் வெளியில தெரியவில்லை.............

நாமல் இந்த வாரம் தாங்கள் சில இளம், புதிய தமிழர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கின்றார். அந்த இளம் தமிழர்களில் ஒருவர் ஒரு காலத்தில் இலங்கையின் ஜனாதிபதியாகக் கூட வரலாம் என்றும் அவர் சொன்னார்.

இரண்டு உண்மைகள் இப்ப தெரிஞ்சாகணும்...........😜.   

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் அர்ஜுனா அரசியலுக்கு இன்னும் தயாரில்லை என்றே கருதுகிறேன்.இப்போ அவருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை பல அரசியல் கழுகுகள் தங்களுக்கு சாதகமாகவும்  அவரின் இருப்பை இல்லாமல் செய்யவும் பயன்படுத்தும். அதற்கு முதல் அவர் தனது நேர்மையையும் பொறுமையையும் காத்து மக்கள் அவர்மேல் வைக்கும் மதிப்பு உண்மையானது, அவர் மக்களுக்கு உண்மையாய் இருப்பார் என்பதை காட்டுவதே இப்போதைய அவரது முதற் கடமை. இவர்களைபோன்றவர்களையே சிங்களம் தேடும். காரணம்; மக்கள் மதிப்பு, வாக்கு வங்கியை உயர்த்தும், மிக எளிதில் உணர்ச்சி வயப்படக்கூடியவர், எளிதில் ஏமாற்றி எதிலும் சிக்க வைக்கலாம். அவர் செய்தது சரியாகிலும் வரம்பு மீறி செயற்படுவதனால் தனது தொழிலை, மதிப்பை இழந்து சொல்லவந்த உண்மையை நீர்த்துபோகச்செய்து விடுவார் போலுள்ளது. இவர் இப்போ செய்ய வேண்டியது அரசியலல்ல தான் வைத்த குற்றச்சாட்டு உண்மையானது என நிறுவி சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும், தன் மீது வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நிரூபித்து அதிலிருந்து வெளிவரவேண்டும், அதற்கு சட்டத்தரணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி பொறுமை காத்து பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இப்போ அவர் ஒரே நேரத்தில் பல தோணிகளில் கால் வைத்து சில நாளில் பிரபல்யமடைந்து அரசியல் செய்யும் கனவை விட்டு ஒன்றொன்றாக கவனமாக கையாள கற்றுக்கொள்ள வேண்டும். அவர் இந்த தேர்தல் காலத்தை அனுபவமாக கூர்ந்து கவனித்து பின்வரும் நாட்களில் இறங்கலாம், இப்போ அரசியல் முடிவை எடுத்தால் பின்வரும் நாட்களில் மிகுந்த மன அழுத்தத்தை அனுபவிப்பார்.  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

மன்னாரில் நடந்த சாவு தவிர்க்க பட்டிருக்க கூடியதே என்று இங்கேயும் அது சார்ந்த வல்லுனர்களால் சுட்டி காட்ட பட்டுள்ளது. எனவே இவரது கைது மூலம் நல்லது நடக்கட்டும் 

இவர் அதிரடியாக களம் இறங்கியது தவறு. அங்கே போய் நின்று கொண்டு, அவர்  மீது நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்கிறார். அதற்கு அங்கு நின்ற ஒருவர், உங்களுக்குந்தான் இருக்கிறது என்கிறார். இவர் செய்திருக்க வேண்டியது அந்தக்குடும்பத்துக்கு ஆதரவாய் இருந்து ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தின் மூலம் உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியை பெற்றுக்கொடுத்து இருக்கலாம், இப்போ என்ன நடந்தது? திடீரென களத்தில் குதித்து, போர்களமாகி கைது செய்யப்பட்டிருக்கிறார். இதை வேறு மாதிரி கையாண்டு இருந்தால் குற்றவாளியை சிக்க வைத்திருக்கலாமல்லவா? முன் ஆயத்தம், யோசனை இல்லாமல் இப்படி சுடுகுது மடியைப்பிடி என்று எல்லாவற்றயும் ஒரே நேரத்தில் கையிலெடுத்து இப்படி போட்டுடைக்கலாமா? சாவகச்சேரி நீதிமன்றம் இவருக்கெதிராக பிடியாணை பிறப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவருக்காக ஆயராகும் சட்டத்தரணிகளுக்காக   எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எதற்கும் ஒரு வரைமுறை உண்டு, அதை மீறுவதனாலேயே இவர் இப்படி விமர்சிக்கப்படுகிறார். அதை அவர் கடைபிடித்திருந்திருந்தால் இவருக்குப்பதிலாக குற்றம் சாட்டப்பட்டவர் அல்லவா கைது செய்யப்பட்டிருப்பார்? இப்போ, எதிரிகள் பலரை ஒன்றாக தனக்கெதிராக இணைத்து விட்டிருக்கிறார். இவர் எங்கு போனாலும் துரத்தப்படுவார், தான் வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்காதவரை!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 

இவை வைத்தியர் அதிலும் வைத்திய நிர்வாக பதவியில் உள்ளார். அவருக்கு தெரிந்து இருக்கும் அல்லவா?

மேலும் செயல் என்பது இவ்வாறு தான். நாம் நினைத்து செல்லும் பாதையை களம் மற்றும் பகை மாற்றிவிடும். அதற்காக செய்யாமல் இருக்க முடியாது அல்லவா??

அதனால் தான் இவர் மன்னாரிலும் களத்தை திறந்து விட்டுள்ளார் என்று எழுதினேன். ஆனால் தமிழர்களின் நிலை என்ன என்றால் இனி அவர் வெளியே வந்து தான் விட்ட இடத்திலிருந்து தொடர வேண்டும் 😪

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

இவர் அதிரடியாக களம் இறங்கியது தவறு. அங்கே போய் நின்று கொண்டு, அவர்  மீது நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்கிறார். அதற்கு அங்கு நின்ற ஒருவர், உங்களுக்குந்தான் இருக்கிறது என்கிறார். இவர் செய்திருக்க வேண்டியது அந்தக்குடும்பத்துக்கு ஆதரவாய் இருந்து ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தின் மூலம் உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியை பெற்றுக்கொடுத்து இருக்கலாம், இப்போ என்ன நடந்தது? திடீரென களத்தில் குதித்து, போர்களமாகி கைது செய்யப்பட்டிருக்கிறார். இதை வேறு மாதிரி கையாண்டு இருந்தால் குற்றவாளியை சிக்க வைத்திருக்கலாமல்லவா? முன் ஆயத்தம், யோசனை இல்லாமல் இப்படி சுடுகுது மடியைப்பிடி என்று எல்லாவற்றயும் ஒரே நேரத்தில் கையிலெடுத்து இப்படி போட்டுடைக்கலாமா? சாவகச்சேரி நீதிமன்றம் இவருக்கெதிராக பிடியாணை பிறப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவருக்காக ஆயராகும் சட்டத்தரணிகளுக்காக   எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எதற்கும் ஒரு வரைமுறை உண்டு, அதை மீறுவதனாலேயே இவர் இப்படி விமர்சிக்கப்படுகிறார். அதை அவர் கடைபிடித்திருந்திருந்தால் இவருக்குப்பதிலாக குற்றம் சாட்டப்பட்டவர் அல்லவா கைது செய்யப்பட்டிருப்பார்? இப்போ, எதிரிகள் பலரை ஒன்றாக தனக்கெதிராக இணைத்து விட்டிருக்கிறார். இவர் எங்கு போனாலும் துரத்தப்படுவார், தான் வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்காதவரை!

இதோ நான் சொன்னதற்கான அடுத்த கட்டம்:

மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். 

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மன்னார் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் பல வருட காலமாக இடம் பெற்று வரும் தென்பகுதியில் உள்ள வீட்டில் இருந்துகொண்டு சம்பளம் பெறும் மற்றும் மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவாக பல இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்படும் ஊழலை அண்மையில் எனது "மருத்துவ மாபியா" கட்டுரையில் அம்பலப்படுத்தியிருந்ததுடன் ஊறுபடும் நிலையில் உள்ள நோயாளிகளை குறிப்பாக இரவில் உடனடியாக வைத்தியர்கள் கவனிக்காவிட்டால் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்து இருந்தேன். 

இந்த கட்டுரை வெளியிட்டு சில தினங்களுக்குள் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற கவனக்குறைவு காரணமாக இரவு அனுமதிக்கப்பட்ட 27 வயது தாய் காலை வரை எந்த வித சிகிச்சையுமின்றி இருந்ததனால் உடல்நிலை மோசமாகி உயிரிழந்து இருக்கிறார். வழமை போல வைத்தியசாலைக் குறிப்புகளில் பொய்யாக உரிய சிகிச்சை இடம்பெற்றதாக குறிப்பிட்டு பின்னர் விசாரணை என்று சில குழுக்களை அமைத்து அனைத்தையும் முடிமறைக்கும் செயல்பாடுகள் இடம் பெறும் . இவை அனைத்தையும் GMOA மாபியா குழுவினர் மேற்பார்வை செய்து இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கடைசியில் குற்றமற்றவர்கள் என்று நிர்வாகத்தையும் மிரட்டி முடிக்கும். இந்த அவலத்துக்கு இந்த சந்தர்ப்பத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தக் கொடுமைகள் தொடரும். 

இதற்கிடையில் நிர்வாகமும் GMOA மாபியாவும் இணைந்து மக்களை ஏமாற்றும் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். ஸ்தாபன கோவையின் 31.5.2.பிரிவு (கீழ் இணைக்கப்பட்டுள்ளது ) மிகவும் தெளிவாக ஒரு அரசாங்க அதிகாரியின் பொறுப்பற்ற செயலால் மோசமான பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர் உடனடியாக பணி நீக்கம் (interdiction ) செய்யப்படவேண்டும் என்று கூறுகிறது. இதுவரை இந்த அனாவசிய உயிரிழப்புக்கு காரணமான வைத்தியசாலை ஊழியர்கள் எவரும் ஏன் பணி நீக்கம் செய்யப்படவில்லை? அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் அவர்களது பெயர்கள் ஏன் இன்னமும் வெளியிடப்படவில்லை ? 

வைத்தியசாலைக்கு அப்பால் பட்ட வேறு அரசாங்க திணைக்களங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணையின் பின்பு குற்றமற்றவராக இருந்தால் மட்டுமே மீண்டும் பணிக்கு இணைத்துக் கொள்ளப்படுவார். ஆனால் இங்கே தெளிவாக ஒரு உயிரிழப்பு கவனக் குறைவு காரணமாக இடம் பெற்று இருக்கிறது. ஆனால் எவரும் பணி நீக்கம் செய்ய படவுமில்லை. அதே நேரம் பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் நீதியான விசாரணை இடம்பெறும் என்றும் அதன் பின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்ற தமது வழமையான பம்மாத்துக் கதைகளை GMOA மாபியா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலை நிர்வாகம் கூறி வருகிறது. 

இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க மன்னாரில் உள்ள தமிழ் பேசும் மக்கள் முன்வர வேண்டும். குற்றவாளிகள் எந்த வித தாமதமும் இன்றி பணி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதை நீங்கள் செய்ய தவறினால் தொடர்ந்து கவனக் குறைவு காரணமாக பல உயிரிழப்புகளை சந்திக்க வேண்டி வரும். 

அதே வேளை இறந்த நோயாளியின் உறவினர்கள் தாமதம் இன்றி போலீஸ் நிலையத்தில் கவனக் குறைவால் இடம்பெற்ற இந்த இறப்பு தொடர்பாக உரிய முறைப்பாட்டை செய்ய வேண்டும். மன்னாரை சேர்ந்த சட்டத்தரணிகள் இலவசமாக இந்த அநியாயத்துக்கு எதிராக போராட முன்வரவேண்டும். நீதிமன்றின் ஊடாக 1. பொலிஸ் மூலம் குற்றச் செயலுக்கான வழக்கு மற்றும் 2. இறப்புக்கான நட்டஈடு கோரி சிவில் வழக்கும் தாக்கல் செய்யப்பட வேண்டும்

ஒரு குற்றவாளி ஆவது முறையாக தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் தான் இந்த மருத்துவ மாபியா திருந்த வாய்ப்புள்ளது. அதைவிடுத்து பல கட்டுரைகள் விரிவுரைகள் சமூக ஊடக பதிவுகள் மூலமாக இவர்கள் திருந்தப் போவதில்லை மனம் வருத்தப் போவதும் இல்லை. 

உடனடியாக மன்னாருக்கு நான் வரும் சூழ்நிலை காணப்படாத நிலையில் இது தொடர்பாக ஆலோசனை பெற விரும்புவோர் என்னுடன் 0779068868 தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முடியும் 

நன்றி 

Dr முரளி வல்லிபுரநாதன் 

4.8.2024

https://www.facebook.com/share/p/ifukxJct4R8pBWu4/

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே என்ன நடந்தது??

அந்த இளம் தாய்க்கு இழைக்கப்பட்ட அநீதியும் கொடுமையும் அதிர்ச்சியையும் கடுங்கோபத்தையும் ஏற்படுத்துகிறது. என்ன நடந்தது என்பதை வாசித்துப் பாருங்கள்.

மன்னார் முருங்கன் பிரதேசத்திலுள்ள தம்பனை எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண் திருமதி.சிந்துஜா தனது முதலாவது பிரசவத்தை மன்னார் பொது மாவட் வைத்தியசாலையில் பலத்த போராட்டத்தின் பின்னர் சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் குழந்தையினைப் பெற்றுக் கொண்டார்.

திருமதி.சிந்துஜா பட்டப் படிப்பினை மேற்கொண்டு முடிக்கும் தறுவாயில் உள்ள வேளையில் தனது எதிர்கால கனவுகளுடன் தாயாகும் பாக்கியம் பெற்றிருந்தார்.

வைத்தியசாலையிலிருந்து தாயும் குழந்தையும் சுகமாக வெளியேறி தங்களது வீட்டில் தனது தாயாரின் அரவணைப்பில் இருந்த நிலையில் 5வது நாள் மட்டில் அசாதாரணமாக பெண்ணுறுப்பின் வழியில் இரத்தம் கசிவதை அவதானித்துள்ளார். மாலை நேரம் நெருங்கும் போது, கூடுதலான இரத்தம் வெளியேறத் தொடங்கிய நிலையில், அசிரத்தையாக இருந்ததை உணர்ந்து, தாயாரினதும் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தலின் முடிவில் 1990 அம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து பிரதேச வைத்தியசாலை முருங்கனிற்குக் கொண்டு சென்று அங்கு காலதாமதமின்றி மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார். தயார் மிகவும் நம்பிக்கையுடன் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு இரவு 2.00 மணியளவில் கொண்டு சென்று தனது மகளை விடுதி இலக்கம் 06 இல் அனுமதித்தார்.

அங்கு கடமையில் இருந்த தாதிகள் கொண்டுவரப்பட்ட நோயாளியை குளியலறைக்குச் சென்று இரத்தம் தோய்ந்திருந்த உடுப்புக்களை கழுவிவரும்படி பணித்துள்ளனர். அதன் படி கழுவிவிட்டு வந்த நோயாளியை கட்டிலில் படுக்கவைத்துவிட்டு ஏதோ ஒரு கருவியைக் கையில் பொருத்திவிட்டு தங்களது ஓய்வு அறைக்குச் சென்றுவிட்டனராம்.

தனது மகளிற்கு ஏதாவது பரிகாரம் நடக்கும், வைத்தியர் வருவார் என ஏக்கத்துடன் இருந்த தாய் பொறுக்கமுடியாது தாதியர்களின் ஓய்வு அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு தாதியர்கள் கைத்தொலைபேசியை வைத்து நோண்டிக் கொண்டிருந்ததை அவதானித்தார். தயார் பொறுத்துக் கொள்ள முடியாது ‘மகளின் நிலையைப் பாருங்கள்’ என்று அழுத போது, தாதியர்கள் அதட்டலான குரலில் ‘கையில் கருவி பொருத்தியுள்ளோம். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்’ என்று தாயாரை விரட்டியுள்ளனர். 

‘கையில் பொருத்திய கருவியை கைத்தொலைபேசியில் பார்த்தால் மட்டும் போதுமா? மகளின் உடம்பிலிருந்து வெளியேறும் இரத்தத்தை பார்க்க முடியுமா?’ என்று தாயார் தனக்குத்தானே கூறிக்கொண்டு வந்து, மீண்டும் மகளின் கட்டிலருகில் வந்து கடவுளை வேண்டிக் கொண்டு கையில் மகளின் சிறு குழந்தையையும் வைத்துக் கொண்டு காலை வரையும் இருந்ததாகவும் தயார் கூறுகிறார்.

காலை ஏழு மணியளவில் புதிய தாதியர்கள் கடமைக்கு வந்ததும் மீண்டும் தாதியர்களிடம் அணுகி தனது மகளின் பரிதாப நிலையை சொல்லி அழுதுள்ளார். 

நிலைமையினை உணர்ந்த புதிய தாதியர்கள் மீண்டும் மகளை பாத்றூம் போய்க் கழுவிவிட்டு வரும்படி கூறியுள்ளார்கள். தாயார் மிகவும் கஷ்டப்பட்டு கைத்தாங்கலாக மகளைக் கூட்டிக்கொண்டு சென்று கழுவிவிட்டு மீண்டும் கட்டிலடிக்கு வரும் வழியில் மகள் தலைசுற்றுவதாகக் கூறி திடீரெனக் கீழே விழுந்துவிட்டார். இந்நிலையில் தாயார் போட்ட கூக்குரலில் எல்லோரும் ஓடி வந்து கீழே கிடந்த மகளைத் தூக்கி கட்டிலில் வளர்த்தினார்கள். பின்பு ஏதோ ஏதோவெல்லாம் செய்தார்கள். காலை 7.30 மணியளவில் மூன்று வைத்தியர்கள் அவசர அவசரமாக வந்து மயக்க நிலையில் இருந்த மகளை தள்ளு வண்டிக்கு மாற்றி வைத்து தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு ஒப்பரேசன் அறைக்குக் கொண்டு சென்றனர். 

தாயார் மகளின் கைக்குழந்தையுடன் காவல் இருந்ததாகவும், 11 மணியளவில் ஒரு வைத்தியர் வந்து தாயாரைப் பார்த்து பெரிய ஐயா கதைக்க வரும்படி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பெரிய ஐயா பின்வருமாறு தயாரிடம் கூறினாராம். “அம்மா உங்கள் மகளிற்கு நிறைய இரத்தம் போய்விட்டது. இப்போது மூச்சுவிட முடியாது கஷ்டப்படுகிறா. நாங்கள் குழாய் போட்டு சுவாசிக்க காற்று கொடுக்கிறோம். இனி அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப் போகிறோம்” என்றாராம். அதற்குத் தாயார் “நாங்கள் நடுச்சாமத்தில் இங்கு கொண்டுவந்தோம். மகள் மயங்கி விழும்வரை ஏன் ஐயா நீங்கள் ஒருத்தரும் வந்து பார்க்கவில்லை” என்று கூறி அழுததாகவும் தயார் கூறுகிறார்.

அவ்வேளையில், அங்கு வந்த இன்னுமொரு டொக்டர் ஏதோ இங்கிலீசில் பெரிய டொக்டருடன் கதைத்த முறையை அவதானித்த போது, ஏதோ விபரீதமாக மாறுவதை தான் உணர்ந்ததாகத் தாயார் கூறுகிறார். அவ்விடத்தை விட்டு உடனே டொக்டர்மார் உள்ளே சென்று விட்டனராம். 

ஏறத்தாழ அரைமணித்தியாலம் கழித்து பெரிய டொக்டர் மீண்டும் வந்து தாயாரிடம் இவ்வாறு கூறினாராம். “உங்கள் மகளைப் போய்ப் பாருங்கள். நாங்கள் என்ன செய்ய முடியும்” என்றாராம். தாயார் மிகவும் ஆத்திரப்பட்டு “அடப்பாவிகளா! எல்லோரும் சேர்ந்து எனது மகளைக் கொன்று விட்டீர்களா? என பத்திரகாளியாக மாறியது மட்டும்தான் செய்யக் கூடியதாக இருந்ததாம். தன் மகளின் உயிர் மீண்டும் வருமா? சிறு கைக்குழந்தை தன் தாயின் பாலைக் குடிக்குமா? அதற்கு என்ன பதில்? பணிப்பாளர் வந்து கூறுகிறார் தாய் இறந்ததற்குக் காரணம் தெரியாதாம். பிணப்பரிசோதனை செய்துவிட்டுத்தான் கண்டுபிடிக்க வேண்டுமாம். 

இது என்ன கதை? எங்களுக்கே தெரியும். இரத்தம் வெளியேறுவதை எப்படி நிற்பாட்டுவது என்று தெரிந்தால் நாங்கள் ஏன் இங்கு கொண்டு வரவேண்டும்? இரத்தம் ஓடுவதை நிற்பாட்ட அதைக் கண்டுபிடிக்க பிணப்பரிசோதனை செய்து தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் வைத்தியசாலையை சுடலையாக மாற்றுங்கள். பிணப்பரிசோதனை செய்பவர் உடல் பாகங்களை வெட்டியெடுத்து கொழும்புக்கு அனுப்புவார். அதற்கான பதில்கள் கொழும்பிலிருந்து கடைசி வரை வராது. வரும், வரும் என்று கடைசி வரை கூறி எங்களை இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்க, அலுத்துப்போய் நாங்களாகவே விலகிச் செல்வதற்கு செய்யும் தந்திர வேலைகைள் தான் என அறியாமல் போவதற்கு மன்னார் காட்டில் வாழும் நரிக் கூட்டமோ அல்லது கழுதைக் கூட்டமோ அல்ல நாங்கள். 

இவ்விடயம் தொடர்பாக கடந்த நான்கு நாட்களாக நாம் பல்வேறுபட்டவர்களிடம் ஆலோசனை நடாத்தியிருந்தோம். அதன் தொகுப்பை இங்கு முன்வைக்கிறோம்.

1. வைத்தியசாலையிலிருந்து பிரசவத்தின் பின் தாய் வீடு திரும்பியிருந்தால் உடனடியாகவும்மேலும், ஐந்து தடவைகள் அடுத்துவரும் பத்து நாட்களிற்குள் பிரதேச குடும்பநலமாது கள விஐயம் செய்து தாயினதும், சிசுவினதும் சுகாதார நிலைமைகளை அவதானித்து அப்பகுதிக்குரிய சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிக்கையிடல் வேண்டும் என கடமை அறிவுறுத்தல் பட்டியல் உள்ளது என்று சொல்லப்படுகிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டதா?

2. சிசேரியன் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப் பட்ட தாய் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டார். விடுதியில் அனுமதிக்கப்படும் நோயாளரை உடனடியாகக் கவனித்து அது பற்றி கடமை வைத்தியருக்கு அறிவிக்க வேண்டிய கடமைப் பொறுப்பினை தாதியர்கள் மேற் கொண்டனரா? (எந்நிலையில் நோயாளர் வருகை தந்தாலும் உடனடியாக அவ்வேளையில் பொறுப்பிலுள்ள வைத்தியருக்கு அறிவிக்க வேண்டும்)

3. புதிதாக விடுதிகளுக்கு அனுமதிக்கப்படும் நோயாளர்களை 15 நிமிடங்களிற்குள் வைத்தியர் பார்வையிடல் வேண்டும் என்ற கடமைப் பட்டியல் உள்ள போதும், ஏன் வைத்தியர் இரவு 2.00 மணிக்கு வந்து நோயளரைப் பார்வையிடாது காலை 7.30 மணிக்கு வந்தார்?

4. விடுதி 06 இற்குரிய இரவுக் கடமைக்குரிய வைத்தியர் அன்றைய தினம் கடமைக்கு வந்திருந்தாரா? அவர் இரவு வைத்தியசாலையில் தங்கியிருந்தாரா?

5. சிசேரியன் சத்திரசிகிச்சைக்குட்பட்ட நோயாளி இரத்தப் பெருக்குக் காரணமாக விடுதிக்கு வந்த போது, தாதியர்கள் நடந்து கொண்ட கடமைப்பொறுப்பு நடவடிக்கைகள் ஏற்புடையதா?

மேற்படி இளம் குடும்பப் பெண் வைத்தியசாலையில் வைத்து மனிதப் படுகொலைக்குட்படுத்தப்பட்டதற்கு சமூகம் எடுக்கும் நடவடிக்கைகள் தான் என்ன? இச்சம்பவத்தில் வைத்தியசாலைச் சமூகம் நடந்து கொண்டுள்ள முறைமை வைத்தியசாலை முறைமைக்கு உட்பட்டதா? இதுதான் இலங்கை மாவட்ட வைத்தியசாலைகளின் சாதாரண நடைமுறைகளா? இவை பொதுமக்களிற்குத் தெரியாதா? நோயாளிகளுடனான தொடர்பாடல்களில் அரச வைத்தியசாலைகளின் பொதுவான நடைமுறைகள் என்ன? சாதாரண பொதுமக்கள் தொடக்கம் மதப் பெரியார்களே!, கற்றோரே!, இளம் குடும்பத் தலைவர்களே!, எதிர்காலத்தில் தாயாகக் காத்திருக்கும் இளம் பெண்களே! நீங்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள்? நேற்று சிந்துஜா. நாளை யாரோ ?

copied post

https://www.facebook.com/share/b8EK2FpTq7HrEq8S/

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும்!

தெய்வத்துக்கு நிகராக கருதப்படுகின்ற மருத்துவத்துறையில் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புக்கூறலும் தொடர்ந்து குறைந்து வருவதாகவே தோன்றுகிறது.
"வைத்தியரிடமும் வக்கீலிடமும் உண்மையை மறைக்க கூடாது" என்று சொல்வார்கள். அதற்காக வைத்தியர்களும் வக்கீல்களும் உண்மைகளை மறைப்பது நியாயமாகுமா?

1.மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற இளம் தாயின் மரணம் தொடர்பில் மருத்துவமனையோ அல்லது மாகாண மருத்துவத்துறையோ அல்லது GMOA போன்ற மருத்துவ சங்கங்கள் ஏதாவது விளக்கமளிக்கும் அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ளனரா?
அவ்வாறு எதுவும் இல்லை எனின் அதற்கான காரணம் என்ன?

2. எமது நாட்டின் மருத்துவத்துறை உலகின் பல நாடுகளின் மருத்துவத்துறையை விட மேம்பட்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அந்த மருத்துவத்துறையினுள் இருக்கும் ஊழல்வாதிகள்/ சுயநல்வாதிகளின் செயற்பாடுகளை தட்டிக்கேட்க வக்கில்லாமல் மொத்த துறையும் இயங்குவது என்பது வெட்கக்கேடானது என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. அவ்வாறானவர்களின் செயற்பாடுகளால் தான் உண்மையில் மருத்துவத்துறையின் மாண்பை பாதுகாக்கும் பல வைத்தியர்களும் அவப்பெயர் வாங்கும் நிலை உருவாகிறது.

3. டாக்டர். அரிச்சுணாவின் பல அணுகுமுறைகளில் எனக்கு மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், மேற்படி மன்னார் வைத்தியசாலை விடையத்தில் நீதிகேட்டு பொதுமகனாக வந்த அரிச்சுணாவை கைதுசெய்வதிலும், ஜாமீனை நிராகரிப்பதிலும் காட்டிய அக்கறையை ஏன் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கான நீதியில் குறிப்பாக தாயை இழந்த அந்த பச்சிளங் குழந்தைக்கான நீதியில் காட்ட முடியவில்லை?
குறைந்தபட்சம் இந்த இழப்பினை புரிந்துகொள்ளும் பண்பையாவது மருத்துவத்துறை சார்ந்தவர்கள் கொண்டிருப்பது அத்திய அவசியம் அல்லவா? ஆனால் அந்த வைத்தியசாலையில் எடுக்கப்பட்டிருந்த  காணொளிகளில் வார்த்தைகளை உமிழ்ந்த வைத்தியர்கள் அல்லது காற்சட்டையுடன் நின்று பேசிக்கொண்டிருந்த (ஆள் என்ன பதவி என்று தெரியவில்லை) நபர் உள்ளிட்டவர்களின் நடத்தையை பார்க்கும் போது உண்மையில் அந்த அப்பாவிப் பெண்ணிற்கு அநீதி இழைக்கப்படும் வாய்ப்பு இருப்பதையே ஒரு சாதாரண பார்வையாளனாக உணர முடிகிறது. 
இவ்வாறான நடத்தைகள் தானே பல வைத்திய சாலைகளில் மக்களின் நம்பிக்கை குறைவதற்கு காரணமாகின்றன.

4. அரிச்சுணா விடையத்தில் அவரது அணுகுமுறைகள் தவறு என்று குரல் கொடுத்த GOMA உள்ளிட்ட சங்கங்ஙளும் வைத்தியர்களும் ஏன் இவ்வாறான விடையங்களில் வாய் திறக்கவில்லை? அரிச்சுணாவுக்காக பகீஸ்கரித்த எந்த வைத்தியரும் மன்னார் விடையத்தில் அமைதி காப்பது ஏன்?
மறுபடியும் சொல்கிறேன். இதை நான் அரிச்சுணாவை ஆதரித்து எழுதவில்லை. சாமானியனாக அரிச்சுணா போன்றவர்களுக்கே கேள்வி கேட்க அனுமதி இல்லாத போது சாதாரண மக்களுக்கான நீதி எட்டாக்கனியாக அல்லவா இருக்கப்போகிறது.

5. யாழ் வைத்தியசாலையில் சில காலங்களுக்கு முன்னன் கையை இழந்த சிறுமிக்கான விசாரணை அறிக்கை எங்கே?
என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
பிரச்சினைகள் நடக்கும் போது விசாரணைகள் நேர்மையாக முன்னெடுக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையுபன் நடவடிக்கை எடுக்கப்பட்டால் வைத்தியத்துறையின் மாண்பும் மேம்படும். மக்களும் சந்தேகப்படமாட்டார்கள்.

6. மன்னார் மாவட்டம் மட்டுமல்ல வடக்கின் அரசியல்வாதிகள் எங்கே போனார்கள்? அரிச்சுணாவுக்கு ஆதரவு பெருகிய போது அதை வளைத்துப்போட வரிசையாக சென்றவர்கள் மன்னார் விடையத்தில் மௌனம் காப்பது ஏன்?
இதுவரை சார்ந்வர்களிடம் இருந்து ஒரு பேட்டியை கூட காணமுடியவில்லை.
விசாரணை என்ன அமெரிக்காவிலா நடக்கிறது? 

வடக்கை பொறுத்தவரை வெளியில் இருந்து அழிப்பதை விட உள்ளே இருப்பவர்களின் சுயலாபங்களுக்காகவும் உண்மைகளை மூடி மறைத்து மறைத்தே எம்மையும் எமது மாண்பையும், உண்மையான வைத்தியர்களின் சேவைகளையும் களங்கப்படுத்தி அழித்துக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

அரிச்சுணாவின் அணுகுமுறைகளிலும் ஆணவப் பேச்சுகளிலும் எனக்கு உடன்பாடு இல்லை ஆயினும் அரிச்சுணாவால் ஒட்டுமொத்த மருத்துவத்துறையின் முறைகேடுகளை பேசமுடிந்திருக்கிறது. அந்த தற்துணிவு பலருக்கும் இருந்ததில்லை. இதனால் மருத்துவத்துறை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் இன்று  பல விழிப்புணர்வுகளை தேடிக்கொண்டிருக்கின்றார்கள். நிறைய அவதானிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்! ஒரு நாள் இல்லை ஒருநாள் இது பலபெரும்புள்ளிகளை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடும்.  பலரை வாழ்நாளில் மீளமுடியாத நிலைகளில் தள்ளவும் கூடும்.

இந்தப் பதிவு நல்ல மருத்துவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலுமே எழுதப்படுகின்றது. இப்படியே மருத்துவத்துறையில் உள்ளும் வெளியும் அழுத்தங்கள் அதிகரித்துக்கொண்டிருந்தால் எம்மிடம் எஞ்சியிருக்கும் சில நல்ல மருத்துவர்களையும் இழந்துவிடுவோம்.
மருத்துவத்துறையில் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் என்று உருவாகிறதோ அன்றுதான் உண்மையான மாபியா அழியும்.

நன்றி

திருநாவுக்கரசு தயந்தன்
2024.08.06

https://www.facebook.com/share/7H2mKsKqyirjhqEB/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 31/7/2024 at 02:04, யாயினி said:

இப்போது நீங்கள் சொன்ன மாதிரி தான் டொக்டர் அர்ச்சுனா விடயம் போக போகிறது போல் உள்ளது 🙄 அரசியல் கட்சியோடு டீல் பேசினார் என்று   சொல்கின்றார்கள், புலம் பெயர் தமிழர்கள் எல்லோரும் தனக்கு பின்னால் என்றாராம்

  • கருத்துக்கள உறவுகள்

சஜித்தின் கட்சி கூட்ட மேடையில் சகோதர மதமான முஸ்லிம் மதத்தவர்கள் தங்களது மேடையில் தமிழர் ஒருவர் டொக்டர் அர்ச்சுனா நிற்பது தங்கள் வாக்கு வங்கியை பாதிக்கும் என்று சொல்லி டொக்டர் அர்ச்சுனாவை இறக்கி விட்டார்களாம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.