Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

images-3.jpeg?resize=300,168

டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய சதித்திட்டம் : மறுக்கும் ஈரான்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை படுகொலை செய்வதற்கு ஈரானே சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும், இது குறித்து ஒரு வாரத்திற்கு முன்னரே அமெரிக்க அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயதுடைய தோமஸ் மேத்யூ க்ரூக்ஸுக்கும், ஈரானிய சதிக்கும் நேரடி தொடர்பு உள்ளதா? என்பது குறித்து இன்னும் தெரியவரவில்லை என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சதி குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள ஈரான், இது ஆதாரமற்ற, ஈரானுக்கு களங்கம் விளைவிக்கும் குற்றச்சாட்டு என தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, ஐ,நாவுக்கான ஈரானின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில்,

ஈரான் நாட்டின் பார்வையில் ட்ரம்ப் ஒரு குற்றவாளி எனவும், ஜெனரல் சுலைமானியின் படுகொலைக்காக அவர் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், டொனால்ட் ட்ரம்பை, ஈரான் சட்டத்தின் வழியிலேயே சந்திக்கும் எனவும் ஐ நாவுக்கான ஈரானின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பென்சில்வேனியா மாநாட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே சதித் திட்டம் தொடர்பான எச்சரிக்கை கிடைத்ததாகவும், இது குறித்து ட்ரம்ப் பேரணி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டதாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, ட்ரம்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவித்த அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள்,

இந்த சதித் திட்டம் பற்றி தாம் முன்னதாகவே அறிவித்ததை தற்போது, ட்ரம்ப் பேரணி ஒருங்கிணைப்புக் குழு மறுத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை பென்சில்வேனியாவில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில், அவரது காதில் காயம் ஏற்பட்ட நிலையில் நூலிழையில் உயிர் தப்பினார். இந்தத் தாக்குதலில் அவரது ஆதரவாளர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1392560

  • Replies 70
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, நியாயம் said:

சீ. என். என் இப்போது நல்லாய்த்தான் முக்குகின்றது. 😁

கடந்த பல மாதங்களாக அமெரிக்காவில் என்ன நடைபெற்று வருகின்றது என்பது உன்னிப்பாக அவதானிக்கும் அனைவரும் அறிந்ததே. 

டொனால்ட் ரிரம்ப்பை படு கேவலப்படுத்தினார்கள். தொடர்ச்சியாக வழக்குகள் தொடுத்தும் குற்றம் சுமத்தியும் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப்பை ஓரம் கட்டினார்கள். ஒதுக்கப்படவேண்டிய கீழ்த்தரமான மனுசன் என நிறுவ படாதபாடு பட்டார்கள். அவர் குடும்பமே வியாபாரம் செய்ய முடியாத அளவுக்கு எல்லாவற்றையும் முடியுமான அளவு முடக்கினார்கள்.

இவ்வளவற்றையும் தாண்டி சிங்கம் கர்ச்சித்து எழுந்தது. இப்போது டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு அமோக ஆதரவு கிடைக்க தொடங்கி உள்ளது. எலான் மாஸ்க் மாதம் 40 மில்லியன் டாலர்கள் தொகையை டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒதுக்கி உள்ளார். 

டொனால்ட் டிரம்ப் மீது வெறுப்பை தூண்டியதில் சீ. என். என் ஊடகத்திற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அவரை கொலை செய்ய முயற்சித்த குற்றவாளி சீ. என். என். போன்ற இடது சாரி ஊடகங்களினால் மண்டை கழுவப்பட்ட ஒருவராக விளங்க வாய்ப்பு அதிகம். 

இப்போது தாம் நல்ல பிள்ளை ஆட்டம் காண்பிக்க ஈரான் கதை அளக்கின்றார்கள். 

எவ் பி ஐ தாங்கள் ஏன் டிரம்ப் அவர்கள் சுடப்பட்ட, கொலையாளி உட்கார்ந்த கூரையை கண்காணிக்கவில்லை என்பதற்கு தகுந்த பதில் இல்லை. டிரம்ப் அவர்கள் பாதுகாப்பு விடயத்தில் வேண்டுமென்றே உதாசீனம் செய்யப்பட்டுள்ளது என்றே கருதவேண்டி உள்ளது. 

இனி ஈரானை இதற்குள் செருகி அதற்குள் ஒளிந்து கொள்ள வேண்டியதுதான். 

ஆனால் ஒன்று ஜனாதிபதியாக சிங்கம் மீண்டும் வந்ததும் டிரம்ப் அவர்களுக்கு எதிராக கூடி நின்று கும்மி அடித்தவர்கள் அனைவரும் துண்டை காணோம் துணியை காணோம் என்று கால் பிடரியில் அடிக்க ஓடப்போகின்றார்கள். 

உண்மைதான்...
ஜேர்மனியிலும் ட்ரம்பை எவ்வளவு கழுவி ஊத்த  முடியுமோ அவ்வளவிற்கு கழுவி ஊத்திய ஊடகங்கள் ஒருசில அரசியல்வாதிகள் எல்லாம் இப்பவே டொனால்ட் ரம்ப் அவர்களை "ஐயா" போட வெளிக்கிட்டு விட்டனர்.

சிஎன்என் ஊடகமும் அடுத்த ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் தான் என்ற பாணியில் ஊத ஆரம்பித்து விட்டனர்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

images-3.jpeg?resize=300,168

டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய சதித்திட்டம் : மறுக்கும் ஈரான்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை படுகொலை செய்வதற்கு ஈரானே சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும், இது குறித்து ஒரு வாரத்திற்கு முன்னரே அமெரிக்க அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயதுடைய தோமஸ் மேத்யூ க்ரூக்ஸுக்கும், ஈரானிய சதிக்கும் நேரடி தொடர்பு உள்ளதா? என்பது குறித்து இன்னும் தெரியவரவில்லை என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சதி குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள ஈரான், இது ஆதாரமற்ற, ஈரானுக்கு களங்கம் விளைவிக்கும் குற்றச்சாட்டு என தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, ஐ,நாவுக்கான ஈரானின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில்,

ஈரான் நாட்டின் பார்வையில் ட்ரம்ப் ஒரு குற்றவாளி எனவும், ஜெனரல் சுலைமானியின் படுகொலைக்காக அவர் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், டொனால்ட் ட்ரம்பை, ஈரான் சட்டத்தின் வழியிலேயே சந்திக்கும் எனவும் ஐ நாவுக்கான ஈரானின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பென்சில்வேனியா மாநாட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே சதித் திட்டம் தொடர்பான எச்சரிக்கை கிடைத்ததாகவும், இது குறித்து ட்ரம்ப் பேரணி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டதாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, ட்ரம்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவித்த அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள்,

இந்த சதித் திட்டம் பற்றி தாம் முன்னதாகவே அறிவித்ததை தற்போது, ட்ரம்ப் பேரணி ஒருங்கிணைப்புக் குழு மறுத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை பென்சில்வேனியாவில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில், அவரது காதில் காயம் ஏற்பட்ட நிலையில் நூலிழையில் உயிர் தப்பினார். இந்தத் தாக்குதலில் அவரது ஆதரவாளர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1392560

இப்ப‌ ஆள் ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு க‌ற்ப‌னையில் செய்தி வெளியிடுகின‌ம்.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, நியாயம் said:

டொனால்ட் டிரம்ப் மீது வெறுப்பை தூண்டியதில் சீ. என். என் ஊடகத்திற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அவரை கொலை செய்ய முயற்சித்த குற்றவாளி சீ. என். என். போன்ற இடது சாரி ஊடகங்களினால் மண்டை கழுவப்பட்ட ஒருவராக விளங்க வாய்ப்பு அதிகம். 

எதையும் உங்கள் "தலைக்குள்" மட்டுமே ஊகித்து நம்பிக் கொள்ள எந்த ஊடகத்தையும் நீங்கள் பார்க்க வேண்டியதில்லை😎.

ஆனால், எல்லா ஊடகங்களிலும் வந்திருக்கும் தகவல் இது: கொலை முயற்சி செய்தவர் பதிவு செய்யப் பட்ட சிவப்புக் கட்சி வாக்காளர் (வயது 20, எனவே 2020 இல் ட்ரம்ப் தோற்ற பின்னர், ஜனவரி 6 கலவரமெல்லாம் கண்ட பின்னர் தன்னை ட்ரம்ப் கட்சியோடு அடையாளப் படுத்தியிருக்கும் ஒருவர்). இவை தரவுகள். உங்கள் கருத்துக்கள் பலவற்றின் அடிப்படையில், நீங்கள் சமூகவலை ஊடகங்களின் பின்னூட்டங்களில் இருந்து உலக நிகழ்வுகளைப் புரிந்து கொள்ளும் ஒருவர் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நம்ம ஆளுங்கடா இவனுங்க..🤣  😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, Justin said:

நான் வலதுசாரி, இடதுசாரி, நடுவில் நிற்பவை, மதில் மேல் பூனை.. எல்லா விதமான ஊடகங்களையும் பார்ப்பது, வாசகர் கருத்துக்களும் பார்ப்பது. 

20 வயது கொலையாளி; இந்தப்பையன் பற்றி பல தகவல்கள் வருகின்றன. 

இவன் இப்படியொரு முடிவு எடுத்ததன் பின்னால் இடது சாரி ஊடகங்கள் டொனால்ட் டிரம்ப் மீதான வெறுப்புணர்வை வளர்த்துவிட்டமை, வெறுப்பை தூண்டியமை காரணம் இல்லை என உங்களால் மறுக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, குமாரசாமி said:

உண்மைதான்...
ஜேர்மனியிலும் ட்ரம்பை எவ்வளவு கழுவி ஊத்த  முடியுமோ அவ்வளவிற்கு கழுவி ஊத்திய ஊடகங்கள் ஒருசில அரசியல்வாதிகள் எல்லாம் இப்பவே டொனால்ட் ரம்ப் அவர்களை "ஐயா" போட வெளிக்கிட்டு விட்டனர்.

சிஎன்என் ஊடகமும் அடுத்த ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் தான் என்ற பாணியில் ஊத ஆரம்பித்து விட்டனர்.

இங்கே மிகப்பெரியதொரு அடி என்ன என்றால் எலான் மாஸ்க் மாதம் நாற்பது மில்லியன் டாலர்கள் டொனால்ட் டிரம்ப் அவர்கள் வெற்றி பெறுவதற்கு ஒதுக்குவதாக அறிவித்தமை. இதுபற்றி சீ என் என் ஏமாற்றத்துடன் ஒரு ஒப்பீட்டை செய்துள்ளது. கொள்கையளவில் எதிரும் புதிருமாக உள்ளவர்கள் எப்படி கைகோர்க்கமுடியும் எனும் அளவில் அவர்கள் ஆய்வு அங்கலாய்க்கின்றது. 

இடது சாரிகளின் கடும்போக்கு அதாவது வலதுசாரிகளையே மிஞ்சும் அளவிலான கடும்போக்கு எலான் மாஸ்க் முடிவில் செல்வாக்கு செலுத்தலாம். 

இவர்கள் பெரிய பயம் என்ன என்றால் நிதி ஆதரவு ஒரு பக்கம் போக மாஸ்க்கின் ஆதரவாளர்கள் எக்ஸ் தளத்தில் பின்தொடரும் 175 மில்லியன் பயணர்கள் ஆதரவும் டொனால்ட் டிரம்ப் பக்கம் திரும்பும் என்பதும் ஆகும். 

மாஸ்க் இற்கு எந்த குதிரை வெற்றி பெறும். எந்தக்குதிரைக்கு பந்தயம் கட்டவேண்டும் என்பது விளங்கிவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, nochchi said:

பாவம் தமிழினம் யே.ஆர் காலம்முதல் இன்றைய ரணில் காலம்வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படிச் சிங்கள அரசுகளுக்கு முட்டுக்கொடுத்துவருகிறது என்பதை உற்றுநோக்கினால் இவர்களுக்காகவா என்று தோன்றும்.

சிறு மாற்றம் செய்ய வேண்டுகிறேன் நொச்சி அவர்களே! இலங்கை சுதந்திரமடைந்து இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றிய காலம் முதல்….

தமிழர்களை ஏமாற்ற முடியாது. சிங்களப் பெரும்பான்மையை உயர்த்திச் சிங்களம் அங்கு அரசை நிறுவிக்கொண்டால் திருகோணமலையை தனவசப்படுத்திக்கொள்ளலாம் என்ற நப்பாசை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இருந்து வந்துள்ளது. அதனால்தான் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் திருகோணமலையை அமெரிக்காவுக்கு கொடுத்து வட்டுக்கோட்டைத் தீர்மானப்படி தமிழர் அரசமைத்து அதன் ஆதரவோடு திருகோணமலையையே எங்கள் தலைநகராக்கிக் கொள்ளலாம் என்று வெளிப்படையாகவே மேடையில் பேசியதை  நானும் கேட்டுள்ளேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, நியாயம் said:

இங்கே மிகப்பெரியதொரு அடி என்ன என்றால் எலான் மாஸ்க் மாதம் நாற்பது மில்லியன் டாலர்கள் டொனால்ட் டிரம்ப் அவர்கள் வெற்றி பெறுவதற்கு ஒதுக்குவதாக அறிவித்தமை. இதுபற்றி சீ என் என் ஏமாற்றத்துடன் ஒரு ஒப்பீட்டை செய்துள்ளது. கொள்கையளவில் எதிரும் புதிருமாக உள்ளவர்கள் எப்படி கைகோர்க்கமுடியும் எனும் அளவில் அவர்கள் ஆய்வு அங்கலாய்க்கின்றது. 

இடது சாரிகளின் கடும்போக்கு அதாவது வலதுசாரிகளையே மிஞ்சும் அளவிலான கடும்போக்கு எலான் மாஸ்க் முடிவில் செல்வாக்கு செலுத்தலாம். 

இவர்கள் பெரிய பயம் என்ன என்றால் நிதி ஆதரவு ஒரு பக்கம் போக மாஸ்க்கின் ஆதரவாளர்கள் எக்ஸ் தளத்தில் பின்தொடரும் 175 மில்லியன் பயணர்கள் ஆதரவும் டொனால்ட் டிரம்ப் பக்கம் திரும்பும் என்பதும் ஆகும். 

மாஸ்க் இற்கு எந்த குதிரை வெற்றி பெறும். எந்தக்குதிரைக்கு பந்தயம் கட்டவேண்டும் என்பது விளங்கிவிட்டது. 

என்னதான் இருந்தாலும் சிஎன்என் குத்துக்கரணம் அடிச்ச மாதிரி எந்தவொரு குரங்காலையும் அடிக்க ஏலாது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, குமாரசாமி said:

நம்ம ஆளுங்கடா இவனுங்க..🤣  😎

டிரம்ப் சுடப்பட்ட தருணத்தை வீடியோவில் நடித்துக்காட்டிய உகண்டா சிறுவர்கள் - சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பு

Published By: RAJEEBAN   18 JUL, 2024 | 03:03 PM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை உகண்டாவை சேர்ந்த சிறுவர்கள் நடித்துக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

trump_shooting_ukan.jpg

டிரம்ப்மீது தாக்குதல் நடத்தப்பட்ட மறுநாள் டிக்டொக்கெர் பிளட்அக் தலைமையிலான சிறுவர் குழுவினர் டிரம்ப்மீது தாக்குதல் இடம்பெறும் தருணத்தை வீடியோவில் நடித்துக்காட்டியுள்ளனர்.

மரத்தினால்  துப்பாக்கிகளை செய்து,  அவர்கள் வீடியோவில் நடித்துள்ளனர். டிரம்ப் துப்பாக்கி சூட்டின் பின்னர் நிலத்தில் அமர்ந்து பின்னர் எழும்பி கைமுஷ்டிகளை உயர்த்தி கோசமிடுவதை டிரம்ப்போன்று நடித்த சிறுவன்  செய்து காட்டியுள்ளான்.

மில்லியன் கணக்கானவர்கள் சமூக ஊடகங்களில் இதனை பார்த்துள்ளனர்.

டிரம்பை படுகொலை செய்யும் முயற்சி உலகம் முழுவதும் அதிர்ச்சியுடன் பார்த்தது என்பதை சிறுவர்களின் இந்த வீடியோ வெளிப்படுத்தியுள்ளதாக  பலர் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோவிற்காக சிறுவர்கள் டிரம்பின் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிமிடத்தின்  உண்மையான ஒலிகள் அலறல்கள் சத்தங்களை பயன்படுத்தியுள்ளனர்.

ஒரு சிறுவன் டிரம்ப்போல தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாய்வு மேசையின் பின்னால் நின்று உரையாற்றியுள்ளான்.

டிரம்ப் போன்று கைகளை உயர்த்தி போராடுவோம் என அவன் சத்தமிட்டுள்ளான்.

trump_shooting_ukan1.jpg

இரகசிய சேவைபிரிவினர் டிரம்பை உடனடியாக பாதுகாப்பாக அழைத்து செல்ல முயன்றவேளை அவர் மீண்டும் தனது கைமுஷ்டியை உயர்த்திக் காண்பித்ததையும் அந்த உகன்டா சிறுவன் நடித்துக் காட்டியுள்ளான்.

கொலை முயற்சி சர்வதேச அளவில் பதற்றத்தையும் அமெரிக்காவில் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு குறித்த கவலையையும்  ஏற்படுத்தியுள்ள அதேவேளை அமெரிக்காவில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து வேடிக்கையாக பேசுவதற்காக பலர் இந்த வீடியோவை பயன்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் நடைபெறுவதை முழு உலகமும் பார்க்கும் என்பதை மக்கள் மறந்துவிட்டனர் என  ஒருவர் தெரிவித்துள்ளார்.

trump_shooting_ukan2.jpg

https://www.virakesari.lk/article/188767

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/7/2024 at 15:25, குமாரசாமி said:

என்னதான் இருந்தாலும் சிஎன்என் குத்துக்கரணம் அடிச்ச மாதிரி எந்தவொரு குரங்காலையும் அடிக்க ஏலாது..

சீ என் என் ஐ பேக் மீடியா என டிரம்ப் அவர்கள் எப்பவோ முத்திரை குத்திவிட்டார். அப்போது நாம் அதை உணரவில்லை. காலம் கடந்து உணர்கின்றோம். 

மேலே @nochchi அமெரிக்க அரசியல் பற்றி நாம் அலட்டுவான் ஏன் எனும் தொனியில் கருத்து இட்டுள்ளார். 

பைடனின் தலைமைத்துவத்தின் தோல்வியாகவே நாம் காசா மற்றும் உக்ரைன் அழிவுகளை பார்க்கலாம். தமிழ் மக்களுக்கு நேரடியாக இல்லாவிட்டாலும் அமெரிக்க அரசியலில் ஸ்திரத்தன்மை காணப்படும்போது மறைமுகமாக பல அனுகூலங்கள் கிடைக்கலாம். 

இங்கு இன்னோர் விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும். காசா அழிவுகள், முள்ளிவாய்க்கால் அழிவுகள் வந்தபோது அமெரிக்காவை கோலோச்சுபவர்கள் யார் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். 

டிமோகிராட்ஸ் வந்தால் எமக்கு நல்லது என்பது ஒரு பிரமையே தவிர அதில் உண்மை ஏதும் இல்லை தானே?

டமில்ஸ் போ ஓபாமா என கூவித்திரிந்தவர்கள் இப்போது என்ன செய்கின்றார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நியாயம் said:

Tamils for Obama முக்கிய புள்ளிகள் (சிலர் தமிழ்சிறியின் உறவினராகவும் இருக்கக் கூடுமென ஊகிக்கிறேன்) 2016 முதல் Tamils for Trump  என்ற உத்தியோக பூர்வமற்ற அமைப்பாக மாறி விட்டார்கள். குறைந்த பட்சம் நான் வாழும் மாநிலத்தில் இது நடந்திருக்கிறது. ஏன் இந்த "குத்துக் கரணம்"😎 நடந்தது? என்று தேடினால் காரணம் ஒபாமா தமிழர்களைக் காக்கவில்லையென்பதல்ல: கறுப்பின மக்களைப் பிடிக்காது, இங்கே கையைத் தூக்கி உள்ளே வந்து பிரஜையான தமிழர்களுக்கே தென்னமெரிக்கர்கள் வேலி பாய்ந்து வருவது பிடிக்காது, உழைக்கும் காசுக்கு வரி கட்டப் பஞ்சி (ஆனால், பள்ளிக்கூடம் அமெரிக்கன் ஸ்ராண்டர்ட்டில் இருக்க வேண்டுமென்ற ஆசை😂) இப்படியாகப் பல காரணங்களால் தமிழ்ஸ் fபோர் ஒபாமா இப்போது தமிழ்ஸ் fபோர் ட்ரம்ப்!

நிச்சயமாக அமெரிக்காவில் ட்ரம்ப் ஸ்திரமான ஆட்சி தந்தால் தமிழர்களுக்கு ஒரு முடிவு வரும் தான்: ஐ.நாவில் இலங்கை மீதான போர்க்குற்றங்களை நோண்டாமல் விடுவார்கள், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி என்ற ரீதியில் இருந்த கரிசனையும் போய் விடும். எனவே சிங்களத் தரப்பு எல்லாவற்றையும் நினைத்த மாதிரிச் செய்ய, தமிழர்களுக்கு ஒரு முடிவு வரும் என நம்பலாம்.

பி.கு: எந்த ஒரு சமகால அவதானிப்பும், வரலாற்றுத் தேடலும் இல்லாமல் கருத்துகள், ஊகங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள்👍.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Donald Trump மீதான கொலை முயற்சி குறித்து சந்தேகம் வலுக்கிறது 👇

US மிசோரி செனற்ரர்  ஜோஸ் ஹொலே யின் குற்றச்சாட்டு  

Hawley Reveals New Whistleblower Allegations Exposing ‘Loose’ Security Ahead of Trump Assassination Attempt

Friday, July 19, 2024

Today, U.S. Senator Josh Hawley (R-Mo.), wrote a letter to Department of Homeland Security (DHS) Secretary Alejandro Mayorkas, demanding answers behind the U.S. Secret Service's botched security rollout at President Donald Trump's July 13 rally. The letter comes after multiple whistleblowers contacted Senator Hawley's office with disturbing new information behind the assassination attempt on the former president. "Whistleblowers who have direct knowledge of the event have approached my office. According to the allegations, the July 13 rally was considered to be a ‘loose’ security event," wrote Senator Hawley. "For example, detection canines were not used to monitor entry and detect threats in the usual manner. Individuals without proper designations were able to gain access to...

Read More

Hawley Requests More Records Behind Assassination Attempt on President Trump, Opens Office Whistleblower Tip Line

https://www.hawley.senate.gov/press-releases/

US Secret Service ஐ ஈரான் விலைக்கு வாங்கிவிட்டதோ,..🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, நியாயம் said:

டமில்ஸ் போ ஓபாமா என கூவித்திரிந்தவர்கள் இப்போது என்ன செய்கின்றார்களோ?

ஈழடமில்ஸ்சின்  கோமாளி  வேலைகளில் ஒன்று

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டொனால்ட் ரம்ப் அவர்கள் தான் பதவிக்கு வந்தால் உக்ரேன் மற்றும் காஸா போர்களை உடனடியாக நிறுத்துவேன் என மீண்டும் கூறியுள்ளார்.
இது உலகிற்கு நல்ல விசயம் தானே.

அத்துடன் புதிய எண்ணைக் கிணறுகளும் தோண்டப்படும் எனவும் கூறியுள்ளார்.

Wars: He will "stop the war in Ukraine", which would never have happened if he were still in office. And he will also end the war against Israel. After all, Iran was bankrupt during his time.

Close borders, stop wars and “Drill, baby, drill!”

  • கருத்துக்கள உறவுகள்
Posted

‘தோட்டா என்னை நோக்கி வந்தபோது…’ - தாக்குதல் முயற்சி குறித்து டிரம்ப் சொன்னது என்ன?

"கடவுளின் கருணையால் உயிரோடு இருக்கிறேன்" - டிரம்ப் மாநாட்டு உரையி கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,"கடவுளின் கருணையால் உயிரோடு இருக்கிறேன்," என்றார் டிரம்ப் கட்டுரை தகவல்
  • எழுதியவர், மைக் வென்ட்லிங்
  • பதவி, மில்வாக்கியில் நடைபெற்ற குடியரசு கட்சி மாநாட்டிலிருந்து
  • 19 ஜூலை 2024

அமெரிக்க அரசியலை புரட்டிப்போட்ட சில கொந்தளிப்பான வாரங்களையடுத்து, வியாழக்கிழமை (ஜூலை 18) இரவு மூன்றாவது முறையாக குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான வேட்புமனுவை ஏற்றுக்கொண்ட டொனால்ட் டிரம்ப், தேச ஒற்றுமை மற்றும் பலம் ஆகியவற்றை வலியுறுத்தினார்.

அமெரிக்க இசைக்கலைஞர் கிட் ராக்கின் இசை நிகழ்ச்சி, உலகளாவிய கலப்பு தற்காப்புக் கலை அமைப்பான அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப்பின் தலைவர் டானா ஒயிட்-இன் வரவேற்புரை, தனது அடையாளமாக விளங்கும் மேல்சட்டையை கிழித்தெறிந்து, டிரம்ப்பை ஆதரித்துப் பேசிய முன்னாள் மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன், டிரம்ப்பின் பிரசார பாடலான ‘காட் பிளெஸ் தி யு.எஸ்.ஏ’ பாடலின் இசை நிகழ்ச்சி ஆகியவை இந்த மாநாட்டில் நிகழ்த்தப்பட்டன.

டொனால்ட் டிரம்ப் மேடையில் தோன்றியபோது, பிரமாண்டமான மின்விளக்குகளால் எழுதப்பட்ட அவருடைய பெயர் தோன்றியது.

ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக அமைந்த டிரம்ப்பின் பேச்சு, தொடக்கத்தில் ஆக்ரோஷமாக அமைந்தாலும் பின்னர் அடிக்கடி தனது உரையிலிருந்து விலகி அமைதியாகப் பேசினார்.

சமீபத்தில் அவருடைய உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை விளக்கிய டொனால்ட் டிரம்ப், தான் தெய்வீக தலையீட்டால் தான் உயிர்பிழைத்ததாகத் தெரிவித்தார்.

அமெரிக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை டிரம்ப் வலியுறுத்திய போதிலும், ஜனநாயகக் கட்சி தலைவர்களை அவரால் கேலி செய்யாமல் இருக்க முடியவில்லை

டிரம்பின் இந்த உரையில் கவனிக்க வேண்டிய ஐந்து முக்கியமான விஷயங்கள் என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"கடவுளின் கருணையால் உயிரோடு இருக்கிறேன்" - டிரம்ப் மாநாட்டு உரையி கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,"வலது காதின் மேல் பகுதியில் தோட்டா ஒன்று துளைத்துச் சென்றது,” என்றார் டிரம்ப்.

‘கடவுளின் கருணையால் இங்கு இருக்கிறேன்’

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாக்குதல் முயற்சியை டிரம்ப் தன் பேச்சில் நினைவுகூர்ந்தார்.

குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் மத்தியில் பேசிய அவர், “என் உயிரைப் பறிப்பதற்கு கால் அங்குலம் அளவில் என்னை நோக்கி தோட்டா வந்தது,” என்றார்.

டெலிபிராம்ப்ட்ரில் குடியேற்றம் தொடர்பான விளக்கப்படத்தைப் பார்ப்பதற்காக தான் லேசாக தலையை சாய்த்ததாக அவர் கூறினார்.

“அந்த விளக்கப்படத்தைப் பார்க்க என் வலதுபக்கம் திரும்ப தொடங்கினேன். நல்லவேளையாக, நானும் இன்னும் அதிகமாக திரும்பவில்லை. அப்போது, உச்ச ஸ்துதியில் விசில் போன்ற சத்தத்துடன் வலது காதின் மேல் பகுதியில் தோட்டா ஒன்று துளைத்துச் சென்றது,” என்றார் டிரம்ப்.

“அது என்ன? அது தோட்டாவாகத் தான் இருக்க முடியும் என எனக்குள் நான் கூறிக்கொண்டேன்,” என்றார்.

விரைவாக மேடைக்கு வந்த ரகசிய சேவை முகவர்கள் 'மிக தைரியமானவர்கள்' என டிரம்ப் தெரிவித்தார்.

“எல்லாம்வல்ல இறைவனின் கருணையால் தான் உங்கள் முன் நான் இப்போது நிற்கிறேன்,” என அவர் கூறினார்.

“இது அதிர்ஷ்டவசமானது என பலரும் கூறுகின்றனர். அப்படியும் இருக்கலாம்,” என்றார்.

தாக்குதல் முயற்சி நிகழ்ந்த பென்சில்வேனியாவின் பட்லரில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் குழுமியிருந்த பார்வையாளர்கள் பதற்றம் மற்றும் கூட்டநெரிசலை ஏற்படுத்தாமல் இருந்ததற்காக பாராட்டு தெரிவித்தார்.

“அவர்கள் என்னை விட விரும்பவில்லை, அவர்களின் முகங்களில் இருந்த அன்பை நீங்கள் பார்த்திருக்கலாம்,” என்றார் அவர்.

"கடவுளின் கருணையால் உயிரோடு இருக்கிறேன்" - டிரம்ப் மாநாட்டு உரையி கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,"அமெரிக்க வரலாற்றில் மோசமான அதிபர்களுள் ஒருவர் பைடன்."

பைடனை ஒருமுறை மட்டுமே குறிப்பிட்ட டிரம்ப்

பலவழிகளில் ஜோ பைடனின் கொள்கைகள் குறித்து டிரம்ப் கடுமையாக விமர்சித்தாலும், தன் அரசியல் எதிரியின் பெயரை ஒருமுறை மட்டுமே நேரடியாக குறிப்பிட்டார். தன்னுடைய மற்ற பொதுக் கூட்டங்களில் அடிக்கடி குறிப்பிட்டது போலவே, அமெரிக்க வரலாற்றில் மோசமான அதிபர்களுள் ஒருவர் பைடன் என டிரம்ப் குறிப்பிட்டார்.

“இந்த நாட்டுக்கு அவர் நிகழ்த்திய சேதங்கள் நினைக்க முடியாத அளவு பெரிது,” என டிரம்ப் கூறினார்.

அதிபர் தேர்தலில் பைடன் போட்டியிடுவது குறித்து நிச்சயமற்ற சூழல் நீடிக்கிறது. கடந்த புதன்கிழமை கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட பைடன், டெலவாரே-யில் உள்ள தன் வீட்டில் ஓய்வில் உள்ளார்.

அதிபர் தேர்தலில் பைடன் போட்டியிடுவது குறித்து பாரக் ஒபாமா போன்ற ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் கேள்வி எழுப்புவதாக வரும் தகவல்கள், புதிய வேட்பாளருக்கு வழிவிட்டு போட்டியிலிருந்து விலகுமாறு கூறும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிகரித்துவரும் நிலையிலும், தேர்தலில் போட்டியிடுவதாக பைடன் தெரிவித்துள்ளார்.

"கடவுளின் கருணையால் உயிரோடு இருக்கிறேன்" - டிரம்ப் மாநாட்டு உரையி கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2020 அதிபர் தேர்தலில் நடைபெற்ற மோசடி காரணமாகவே தான் தோற்க நேர்ந்ததாக அடிப்படையற்ற வாதத்தையும் பலமுறை முன்வைத்தார்

தவறான கூற்றுகள்

“தெற்கு எல்லையில் தான் (டிரம்ப் ஆட்சிக்காலத்தில் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் பொருட்டு) எழுப்பிய சுவற்றில் மீதமுள்ள பணிகளும் முடிக்கப்படும்,” என அவர் உறுதியளித்தார். இந்தக் கூற்று துல்லியமானது அல்ல, அவருடைய ஆட்சிக்காலத்தில் 500 மைல் தொலைவுக்கும் குறைவாகவே கட்டி முடிக்கப்பட்டது.

“மளிகை பொருட்கள் 50% விலை உயர்ந்துவிட்டது, எரிவாயு 60-70% உயர்ந்துவிட்டது, அடமான விகிதம் நான்கு மடங்கு உயர்ந்துவிட்டது,” என பணவீக்கம் மிக அதிகமாக இருப்பதாக அவர் சித்தரித்தார்.

அமெரிக்க வாக்காளர்களிடையே பணவீக்கம் முக்கியமான பிரச்னையாக உள்ளது. ஆனால், பைடன் ஜனவரி 2021-இல் அதிபரானதிலிருந்து சுமார் 20% அளவுக்குதான் விலைகள் உயர்ந்துள்ளன.

2020-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் நடைபெற்ற மோசடி காரணமாகவே தான் தோற்க நேர்ந்ததாக அடிப்படையற்ற வாதத்தையும் பலமுறை முன்வைத்தார்.

"கடவுளின் கருணையால் உயிரோடு இருக்கிறேன்" - டிரம்ப் மாநாட்டு உரையி கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,டிரம்ப் உரை நிகழ்த்திய பின்னர் அவருடைய குடும்பத்தினர் மேடையில் தோன்றினர்.

மேடையில் கூடிய டிரம்ப்பின் குடும்பம்

வழக்கமாக நடைபெறுவது போலவே, டிரம்ப்பின் குடும்பத்தினர் மேடையில் கூடியதுடன் மாநாடு நிறைவடைந்தது.

ஆனால், டிரம்ப்பின் குடும்பத்தினர் தற்போது இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமல்லாமல், குடியரசு கட்சியின் உண்மையான அதிகார செல்வாக்கு படைத்தவர்களாகவும் கட்சியின் வாரிசுகளாக உருவெடுக்கும் சாத்தியக்கூறு உள்ளவர்களாகவும் திகழ்கின்றனர்.

டிரம்ப்பின் மகன்கள் எரிக் மற்றும் டான் ஜூனியர் இருவரும் மாநாட்டு பேச்சுகளில் முக்கிய இடம் வகித்தனர், தன் தந்தை துணை அதிபரை தேர்ந்தெடுப்பதில் குறிப்பிடத்தகுந்த செல்வாக்கு செலுத்தும் நபராக டான் ஜூனியர் உள்ளதாக தகவல் உள்ளது.

இந்த வார ஆரம்பத்தில், எரிக்கின் மனைவி லாரா டிரம்ப், கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். குடியரசு தேசிய குழுவின் இணை தலைவராக, தேர்தல் பரப்புரையில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார்.

கோல்ஃப் விளையாட்டில் ஆர்வம் மிக்கவரான டிரம்ப்பின் மூத்த பேத்தி கய் டிரம்ப் உள்ளிட்ட அவருடைய குடும்பத்தில் அதிகம் அறியப்படாத சிலர் குறித்தும் இம்மாநாட்டின் வாயிலாக அறிய முடிந்தது. 17 வயதான கய் டிரம்ப், நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க முடியாது.

டிரம்ப் குடும்பத்தை சேர்ந்த மற்றவர்கள் அதிகம் அறியப்படாதவர்கள். பொதுவெளியில் அரிதாகவே தோன்றும் மெலானியா டிரம்ப் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார், ஆனால் இத்தகைய நிகழ்ச்சிகளில் அமெரிக்க வேட்பாளர்களின் மனைவிகள் வழக்கமாக செய்வதுபோன்று அவர் மேடையில் உரை நிகழ்த்தவில்லை.

அதேபோன்று, தன் கணவர் ஜாரெட் குஷ்னெருடன் கலந்துகொண்ட டிரம்ப்பின் மகள் இவாங்கா, மாநாட்டில் மட்டும் பங்கேற்றார். ஒருகாலத்தில் தன் தந்தைக்கும் நெருங்கிய ஆலோசகராக இருந்த இவாங்கா, கடந்த முறை டிரம்ப்பின் ஆட்சிக்காலம் முடிவுற்ற பின்னர் அரசியலில் இருந்து விலகிக்கொண்டார்.

"கடவுளின் கருணையால் உயிரோடு இருக்கிறேன்" - டிரம்ப் மாநாட்டு உரையி கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,டிரம்ப் பேச்சுக்கு ஆரவாரம் செய்யும் குடியரசு கட்சி பிரதிநிதிகள்

ஒற்றுமைக்கான செய்தி

தேசிய ஒற்றுமை எனும் கருத்தை டிரம்ப் தனது பேச்சில் மேலோட்டமாக நிறுவ முயற்சி செய்தார். ஆனால், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் அவர்களின் கொள்கைகளை தீவிரமாக விமர்சிப்பதிலிருந்து சில சமயங்களில் அவர் விலகியிருந்தார்.

தனது பேச்சின் தொடக்கத்தில், “வெவ்வேறு இனம், மதம், நிறம், கோட்பாடுகள் கொண்ட அனைவருக்காகவும் பாதுகாப்பான, வளம்மிக்க, சுதந்திரம் கொண்ட புதிய சகாப்தத்தை நாம் அனைவரும் இணைந்து தொடங்குவோம்,” எனத் தெரிவித்தார்.

“ஒட்டுமொத்த அமெரிக்காவுக்குமான அதிபராவதற்காக நான் போட்டியிடுகிறேன், பாதி அமெரிக்காவுக்காக அல்ல. ஏனெனில், பாதி அமெரிக்காவுக்கு வெற்றி பெறுவது வெற்றி அல்ல,” என அவர் தெரிவித்தார்.

எனினும், முக்கிய ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் மீதும் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டின் மிகப்பெரிய சங்கங்களுள் ஒன்றான யுனைடட் ஆட்டோ வொர்க்கர்ஸ் தலைமை மீதும், முன்பு திட்டமிடப்படாத வகையில் உடனடி விமர்சனங்களை முன்வைப்பதிலிருந்து டிரம்ப் விலகவில்லை. பைடன் மீதான அவருடைய விமர்சனங்களுள் ஒன்றாக, அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் முன்னாள் அவைத்தலைவர் நான்சி பெலோசியை 'பித்துப்பிடித்தவர்' என கூறினார்.

தனக்கு எதிராக உள்ள வழக்குகள் குறித்து குறிப்பிட்ட அவர், “நம் நாட்டை அழிப்பதால் அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.

“ஜனநாயகக் கட்சி நீதித்துறையை பயன்படுத்துவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்,” என டிரம்ப் வலியுறுத்தினார்.

டிரம்ப்பின் அரசியல் வாழ்க்கை முழுவதும், குடியேற்றம் தொடர்பான பிரச்னை முக்கிய பேசுபொருளாக இருந்துவந்துள்ளது.

“இத்தகைய படையெடுப்பு காரணமாக, பல்லாயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் கொல்லப்படுகின்றனர்,” என அவர் சட்ட விரோத குடியேற்றத்தைக் குறிப்பிட்டனர். “பல ஆண்டுகளுக்கு முன்பு அதிபர் டுவைட் டி அய்சன்ஹவ் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்ததைவிட, அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கை (சட்ட விரோத குடியேறிகள் மீது) மேற்கொள்ளப்படும்,” என அவர் உறுதியளித்தார்.

1954-ஆம் ஆண்டில் மெக்சிகோவை சேர்ந்த பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

வரலாற்றில் மிக நீண்ட மாநாட்டு பேச்சுகளுள் ஒன்றான இந்த உரையில், அதிகமாக குடியேற்றம் குறித்து பேசினார். “இந்த உலகுக்கு நாம் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளோம், நாம் முட்டாள் என நினைத்து உலகம் நம்மை பார்த்து சிரிக்கின்றது,” என அவர் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, Justin said:

Tamils for Obama முக்கிய புள்ளிகள் (சிலர் தமிழ்சிறியின் உறவினராகவும் இருக்கக் கூடுமென ஊகிக்கிறேன்) 2016 முதல் Tamils for Trump  என்ற உத்தியோக பூர்வமற்ற அமைப்பாக மாறி விட்டார்கள். குறைந்த பட்சம் நான் வாழும் மாநிலத்தில் இது நடந்திருக்கிறது. ஏன் இந்த "குத்துக் கரணம்"😎 நடந்தது? என்று தேடினால் காரணம் ஒபாமா தமிழர்களைக் காக்கவில்லையென்பதல்ல: கறுப்பின மக்களைப் பிடிக்காது, இங்கே கையைத் தூக்கி உள்ளே வந்து பிரஜையான தமிழர்களுக்கே தென்னமெரிக்கர்கள் வேலி பாய்ந்து வருவது பிடிக்காது, உழைக்கும் காசுக்கு வரி கட்டப் பஞ்சி (ஆனால், பள்ளிக்கூடம் அமெரிக்கன் ஸ்ராண்டர்ட்டில் இருக்க வேண்டுமென்ற ஆசை😂) இப்படியாகப் பல காரணங்களால் தமிழ்ஸ் fபோர் ஒபாமா இப்போது தமிழ்ஸ் fபோர் ட்ரம்ப்!

நிச்சயமாக அமெரிக்காவில் ட்ரம்ப் ஸ்திரமான ஆட்சி தந்தால் தமிழர்களுக்கு ஒரு முடிவு வரும் தான்: ஐ.நாவில் இலங்கை மீதான போர்க்குற்றங்களை நோண்டாமல் விடுவார்கள், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி என்ற ரீதியில் இருந்த கரிசனையும் போய் விடும். எனவே சிங்களத் தரப்பு எல்லாவற்றையும் நினைத்த மாதிரிச் செய்ய, தமிழர்களுக்கு ஒரு முடிவு வரும் என நம்பலாம்.

பி.கு: எந்த ஒரு சமகால அவதானிப்பும், வரலாற்றுத் தேடலும் இல்லாமல் கருத்துகள், ஊகங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள்👍.

நான் அரசியல் ரீதியான கண்ணோட்டத்தில் கூறவில்லை. இலங்கையின் பொருளாதாரம் நிமிர்ந்தால் எமது மக்களின் வாழ்க்கைத்தரமும் சற்று முன்னேறும். 

கமலா அக்கா தான் இனி பந்தயக்குதிரை எனும்படியாக செய்திகள் உலாவுகின்றன. சுண்டுக்குளி, மானிப்பாய் என இரு தரப்பார் கமலா அக்காவின் அடிக்கு சொந்தம் கொண்டாடுகின்றார்கள். இனி என்ன டமில்ஸ் போ கமலா ஹரிஸ் என இன்னோர் கோசத்தை போடவேண்டியதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

‘கடவுளின் கருணையால் இங்கு இருக்கிறேன்’

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாக்குதல் முயற்சியை டிரம்ப் தன் பேச்சில் நினைவுகூர்ந்தார்.

 உலகின் முக்கிய வல்லரசு அமெரிக்காவினது முன்னாள்,வருங்கால ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் அவர்களே கடவுளை முன்னிலைப்படுத்துகின்றார்.
இதையே நான் சொன்னால் மூட நம்பிக்கை என்பர்.😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/7/2024 at 08:04, Paanch said:

சிறு மாற்றம் செய்ய வேண்டுகிறேன் நொச்சி அவர்களே! இலங்கை சுதந்திரமடைந்து இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றிய காலம் முதல்….

பாஞ் அவர்களுக்கு நன்றி, தங்களின் கூற்று ஏற்புடையதே. ஆனால், ஆயுதவழிப் போராட்டம் உலக வல்லாதிக்க சக்திகளால் வீழ்த்தப்பட்ட பின்னான சூழலில் மெத்தப்படித்த மேதாவி அரசியல்வாதிகள் ஏன் வரலாற்றை மீள்நோக்கிப் பார்க்க முனையாது தகிடுதத்த அரசியலில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்.  உங்களுக்கு நினைவுள்ள விடயம்கூட இந்த அரசியல்வாதிகளுக்கு நினைவில்லையெனலாமா?

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/7/2024 at 16:03, நியாயம் said:

மேலே @nochchi அமெரிக்க அரசியல் பற்றி நாம் அலட்டுவான் ஏன் எனும் தொனியில் கருத்து இட்டுள்ளார். 

On 19/7/2024 at 16:03, நியாயம் said:

தமிழ் மக்களுக்கு நேரடியாக இல்லாவிட்டாலும் அமெரிக்க அரசியலில் ஸ்திரத்தன்மை காணப்படும்போது மறைமுகமாக பல அனுகூலங்கள் கிடைக்கலாம். 

அமெரிக்க அரசியல் தமிழின அழிவுதொடங்கிய காலத்திலும் உறுதிமிக்க ஆட்சியைக் கொண்டவையாகவே இருந்தன. தமிழரது போராட்டத்தை அழித்துவிடுவதிலும் குறியாக இருந்த நாடுகளில் முதன்மையானதும் அமெரிக்காவே. 
 யெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாகப் பிரகடணம் செய்த டொ.றம்பா காஸாவைப் பாதுகாத்திருப்பார். வேண்டுமென்றால் இஸ்ரேலுக்கு இன்னும் கொஞ்ச உதவியைக்கூடச் செய்திருப்பார். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

hq720.jpg?sqp=-oaymwEhCK4FEIIDSFryq4qpAx

God saved Trump with one head turn

Edited by தமிழ் சிறி

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.