Jump to content

மலிபன் பிஸ்கட்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அது 1935 ஆண்டு , தென்மாகாணத்தில் இருந்து பிழைப்புக்கும் , உழைப்புக்குமாக கொழும்பு நோக்கி வருகிறான் ஒரு இளைஞன் 

பல்வேறுப்பட்ட சிரமம் , அலைச்சல் , தேடல் , தியாகம் அனைத்தையும் அனுபவித்தான் அந்த இளைஞன் . 

பல வகையான மனிதர்கள்,  பல்வேறு போராட்டங்கள் அனைத்தையும் கடந்து  கொழும்பில் உள்ள முதலாம்  குறுக்கு தெருவில் தேநீர் கடை ஒன்றை நிறுவுகிறான். 

அந்த இளைஞனின்முழுப்பெயர்  பெயர் அங்கல்காஹ கமகே ஹினி அப்புமுஹாமி என்பதாகும் .

கடினமான உழைப்பு , ஓய்வில்லாத முயற்சி , தூக்கமில்லாத வேலை , இப்படியே ஓட்டுகிறான் தேநீர் கடையை. .

சொற்ப வருடத்திலேயே  அந்த இளைஞனின் கடினமான முயற்சிகளுக்கு பலன் கிட்டியது , விரைவிலேயே தேநீர் கடை , ஒரு ஹோட்டலாக மாற்றம் பெற்றது .

கொழும்பின் மலிபன் தெருவிலே அந்த ஹோட்டல் திறக்கப்பட்டதால் , அந்த ஹோட்டலுக்கும் மலிபன் ஹோட்டல் என்ற பெயரையே சூட்டினார் திருவாளர் அப்புஹாமி அவர்கள் .

அவரது உதவி ஒத்தாசைக்கென்ன தங்களின்  சகோதரர்களான A.G.விக்ரமபால மற்றும்  A.G.ஜினதாச ஆகியோரையும் இணைத்து கொண்டார் . 

கூட்டு முயற்சியாலும் , கடின உழைப்பாலும் அவரின் வர்த்தகம் வேகமாக வளர்ந்ததோடு , அது  பல கிளைகளையும்  பரப்பியது .

மலிபன் ஹோட்டலுக்கு மக்களின்  அபிமானமும் , வரவேற்பும் பல மடங்கு பெருகுகிறது.

அதை அப்படியே தக்கவைத்துக்கொண்ட அப்புஹாமி அவர்கள் அடுத்த கட்ட முயற்சிகளை சிந்தித்து , செயலாற்ற தொடங்குகிறார் .

அந்த முயற்சியிலே குதிக்கிறார்  .

அந்த சிந்தனையும் முயற்சியும் , அப்புஹாமி அவர்களை கொழும்பு கொட்டாஞ்சேனையில்  , ஒரு  பேக்கரி தொடங்கி , வியாபாரத்தை விரிவுபடுத்த வைக்கிறது . .

பேக்கரியும் தொடங்கியாயிற்று , அங்கே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த தரம் மற்றும் சுவை கொண்ட தயாரிப்புகளின் மதிப்பும் அதிகரிக்கிறது . 

இதனால் , ஹோட்டலுக்கு போலவே , பேக்கரிக்கும் மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பும் , நற்பெயரும் கிடைக்கிறது .

அப்புஹாமி வழங்கிய நல்ல வியாபாரமே , வாடிக்கையாளர்களிடம் இருந்து அவருக்கு நல்ல மதிப்பை கொடுத்தது .

வியாபாரத்தின் தாரக மந்திரம் வாடிக்கையாளர்கள் என்றால் , அந்த வாடிக்கையாளர்களுக்கு நாம் கொடுப்பதும்  சிறப்பானதாய் இருக்க வேண்டும். அப்படி சிறப்பானதை கொடுத்தால் தான் , வாடிக்கையாளர்களையும் நாம் தக்க வைக்க முடியும்.

இதனை செவ்வனவே செய்தார் அப்புஹாமி , விளைவு நல்ல வாடிக்கையாளர்கள் தக்க வைக்கப்பட்டனர் , அந்த வாடிக்கையாளர்கள் தக்க வைக்கப்பட்டதால் , இவரின் வர்த்தக பெயரும் மக்கள் மனதில் பதிந்தது .

வாடிக்கையாளர்களும் உள்ளனர் , நல்ல பெயரும் இருக்கிறது , இது ஒரு வரமல்லவா ?

இப்போது அடுத்த கட்டத்தை பற்றி யோசித்தார் அப்புஹாமி .

ஒரு இயந்திரமயமாக்கல் மூலமான  உணவு உற்பத்தி செயல்முறையை ஆரம்பிக்க முடிவெடுக்கிறார் .

அந்த முடிவே , 1954 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  , நாட்டின் முதலாவது  இயந்திரம் மூலம் தயாரிக்கப்பட்ட  பிஸ்கட் உற்பத்தியை இலங்கை தீவுக்கு அறிமுகம் செய்கிறது .

அப்புஹாமி முதல் வியாபாரம் பழகிய இடத்தின் பெயரையே , தனது பிஸ்கட் நிறுவனத்திற்கும் வைக்கிறார் - அதுவே மலிபன் என்பதாகும் .

1935 ம் ஆண்டு  தொடக்கம் 1954 ம் ஆண்டு வரையான , வெறும் 19 ஆண்டுக்குள் ஒரு இமாலாய சாதனையே இதுவாகும் .

இன்று மலிபன் நிறுவனமானது பிஸ்கட் துறையில் மட்டுமல்ல , பால்மா வியாபாரத்திலும் தனக்கென தனியிடம் பிடித்துள்ளது .

சிறிய ஆரம்பமே பெரிய அடைவுகள் என்பதற்கு அப்புஹாமி மெலிபன் வீதியில் ஆரம்பம் செய்த மெலிபன் ஹோட்டலும் , இன்றைய அந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் சிறந்த எடுத்துக்காட்டு  .

முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு அப்புஹாமி நல்லதொரு உதாரணம் .

அது போல , கம்பீரமாய் வளர்ந்து நிற்கும் மலிபன் நிறுவனம் ஒரு சான்று .

படித்ததில் பிடித்தது

Copied from : Hafy Abdeen

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0N4hCg53DXZ5xmsoZEyYozSLAkkSA2kGzrfZ88qJNtoxGfS8DDadftdLBUu8h856Cl&id=100068724064386&mibextid=cr9u03

  • Like 5
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

61s-9L2ACOL.jpg

Maliban Cheese bits Tin 245g | Elephant House 4791034012041_large.gif?v=1716467750

s-l1200.webp

மலிபன் பிஸ்கெட்டுகளின் ரசிகன் நான். இப்போதும் இங்குள்ள  தமிழ்க்கடைக்குப் போனால்... இரண்டு பக்கற்  பிஸ்கெட்டாவது வாங்கிக் கொண்டு வருவேன். அதன் வரலாறை அறியத் தந்த ஈழப்பிரியனுக்கு நன்றி. 🙂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மலிபன் பிஸ்கெட்டுகளின் ரசிகன் நான். இப்போதும் இங்குள்ள  தமிழ்க்கடைக்குப் போனால்... இரண்டு பக்கற்  பிஸ்கெட்டாவது வாங்கிக் கொண்டு வருவேன். அதன் வரலாறை அறியத் தந்த ஈழப்பிரியனுக்கு நன்றி. 

எனது பிள்ளைகளுக்கு லெமன் பொவ் பிஸ்கட் என்றால் இப்போதும் அடிபட்டு சாப்பிடுவார்கள்.

படங்கள் இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அப்புஹாமி முதல் வியாபாரம் பழகிய இடத்தின் பெயரையே , தனது பிஸ்கட் நிறுவனத்திற்கும் வைக்கிறார் - அதுவே மலிபன் என்பதாகும் .

👍......

அந்த தெருவில் போனாலே மலிபனின் வாசனை வீசும்.........

1 hour ago, தமிழ் சிறி said:

61s-9L2ACOL.jpg

மலிபன் பிஸ்கெட்டுகளின் ரசிகன் நான். இப்போதும் இங்குள்ள  தமிழ்க்கடைக்குப் போனால்... இரண்டு பக்கற்  பிஸ்கெட்டாவது வாங்கிக் கொண்டு வருவேன். அதன் வரலாறை அறியத் தந்த ஈழப்பிரியனுக்கு நன்றி. 🙂

இந்த தடவை ஊரிலிருந்து வரும் போதும், எத்தனை லெமன் பிஸ்கட்டுகள் வாங்கி வந்தோம்.......... எல்லாம் முடிஞ்சுது.........😌.

இங்கே ஒரு கடை அருகிலேயே இருக்கின்றது. சிங்களவர் ஒருவர் நடத்துகின்றார். இனி இலங்கை போய் வரும் வரையும் அவர் தான் தஞ்சம்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

👍......

அந்த தெருவில் போனாலே மலிபனின் வாசனை வீசும்.........

இந்த தடவை ஊரிலிருந்து வரும் போதும், எத்தனை லெமன் பிஸ்கட்டுகள் வாங்கி வந்தோம்.......... எல்லாம் முடிஞ்சுது.........😌.

இங்கே ஒரு கடை அருகிலேயே இருக்கின்றது. சிங்களவர் ஒருவர் நடத்துகின்றார். இனி இலங்கை போய் வரும் வரையும் அவர் தான் தஞ்சம்..........

கனடாவில் மலிவு.

போனால் வாங்குங்கள்.

கனடாவிலிருந்து யாரும் வரும் போது என்ன வாங்கிவர என்றால்

லெமன் பொவ்

எனக்கு மிக்சர்உம் பகோடாவும்.

சோறு சாப்பிடும் போது கறுக்கு மொறுக்கு என்று கடிபட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலிபன் பிஸ்கட்டுகள் தரம் சிறப்பானது.......லெமன் பவ் எல்லாம் மூன்று மூன்று பக்கட்டுகளாக சேர்த்து வைத்து விற்பனை செய்வார்கள்.......தூரப்பயணங்களுக்கு நல்லா இருக்கும்.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

மலிபன் பிஸ்கட்டுகள் தரம் சிறப்பானது.......லெமன் பவ் எல்லாம் மூன்று மூன்று பக்கட்டுகளாக சேர்த்து வைத்து விற்பனை செய்வார்கள்.......தூரப்பயணங்களுக்கு நல்லா இருக்கும்.......!  😁

எனது நண்பனுக்கு சுகர் வருத்தம்.அவனும் மலிபன் பிஸ்கட் சாப்பிடலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

எனது நண்பனுக்கு சுகர் வருத்தம்.அவனும் மலிபன் பிஸ்கட் சாப்பிடலாமா?

உங்கள் கேள்வி... பக்கத்து இலைக்கு பாயாசம் போலுள்ளது. animiertes-gefuehl-smilies-bild-0048.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

எனது நண்பனுக்கு சுகர் வருத்தம்.அவனும் மலிபன் பிஸ்கட் சாப்பிடலாமா?

அவருக்கு மலிபன் கிறீம்கிறெக்கர் கொடுக்கலாமண்ணா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எனது நண்பனுக்கு சுகர் வருத்தம்.அவனும் மலிபன் பிஸ்கட் சாப்பிடலாமா?

அதை அவர் தனது உடல் நிலையைப் பொறுத்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும்......!

அது அவரது சீனி அளவைப் பொறுத்தது ....... என்வரையில் எனக்கும் சுகர் உண்டு......காலையில் ஒரு அளவான சீனி போட்ட பால்கோப்பி பின் தோட்டத்துக்குள் வேலைகள் செய்வேன்.......10 / 11 க்குள் ஒரு தேநீர் சீனியுடன் அல்லது பனங்கட்டி ஒரு துண்டு + இரண்டு பிஸ்கட் ........ மதியம் ரெண்டு மரக்கறி தயிர் அல்லது மோர், அப்பளம் +மிளகாய்யுடன்  சாப்பாடு சிறிது நேரத்தின்பின் ஒரு மணித்தியாலம் நித்திரை பின் கொஞ்சம் வீட்டு வேலைகள் 4 /5 ல் சீனி போட்ட தேநீர் +நொறுக்குத்தீனி (வாரத்துக்கு ரெண்டு விழாக்கள் நடப்பதால் பலகாரப்பைகள் எப்பவும் மேசையில் இருக்கும்).......இரவு தோசை 3, இடியப்பம் 5, இட்லி 3, நூடில்ஸ் + குஸ்குஸ் ஒரு கையளவு இவற்றுள் ஏதாவது ஒன்று ....... பின் மெட்ரோபோமின் 500 ஒன்று அல்லது இரண்டு குளிசை அதன்பின் உறக்கம்......... கண்டநேரமும் கண்டபடி சாப்பிடுவதில்லை ....... (என்னவோ தெரியாது தோசை + சாம்பல்  சாப்பிடும்போது மட்டும் பாதிகிளாஸ் கொக்கோகோலா குடிப்பேன் அது மிகவும் பிடிக்கும்...... குளிசையும் 2 போடுவேன்).........!

வீட்டில் நிக்கும் நாட்களில் இவை  தவறாமல் நடக்கும்......மற்றும்படி மகள், மகன், பெறாமக்கள் எங்க வீட்டில் நிக்க விடுகினம்.......பாதிநாட்கள் வாகனத்துடன் தெருவிலதான் சீவியம்.......அதனால் பிளாஸ்கில் கோப்பியும் பிஸ்கட்டும்தான் தெய்வம்......!   😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

அண்ணை தொடர்ந்து இரத்தச் சக்கரை அளவுகளை கண்காணிக்கிறனிங்களா? இரவு உணவின் பின் 12 மணித்தியால விரதத்தின் பின்னான இரத்தச் சக்கரை அளவும் பகலில் உணவருந்தி 2 மணிநேரத்தின் பின்னான இரத்தச் சக்கரை அளவும் கண்காணிப்பது அவசியம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஏராளன் said:

அண்ணை தொடர்ந்து இரத்தச் சக்கரை அளவுகளை கண்காணிக்கிறனிங்களா? இரவு உணவின் பின் 12 மணித்தியால விரதத்தின் பின்னான இரத்தச் சக்கரை அளவும் பகலில் உணவருந்தி 2 மணிநேரத்தின் பின்னான இரத்தச் சக்கரை அளவும் கண்காணிப்பது அவசியம்.

அந்த மெஷின் இருக்கு அது வாரத்துக்கு ஒருமுறை பார்ப்பது சராசரி 120 ல் இருந்து 160 க்குள் இருக்கும்.......எனக்கு 90 க்கு கீழே போனால் உடம்பில் களைப்பு தெரியும் அப்போது ஒரு யூஸ் ஏதாவது குடிப்பது வழக்கம்........ஆயினும் கடடாயமாக  மூன்று மாதத்துக்கு ஒருதடவை வைத்தியரின் பரிந்துரையுடன் laboratoir றில் ரத்தம் மற்றும் சிறுநீர் சோதனை உண்டு...... அது 7 / 8க்குள் இருக்கும்......!  😁

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

நல்ல விடயம் சுவியர். ஒரு வயதுக்கு மேல்... கட்டாயம் நீங்கள் செய்வது போல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வைத்தியரின் நேரடி பார்வைக்கு சென்று வருவது சிறப்பு.  👍 🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

நல்ல விடயம் சுவியர். ஒரு வயதுக்கு மேல்... கட்டாயம் நீங்கள் செய்வது போல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வைத்தியரின் நேரடி பார்வைக்கு சென்று வருவது சிறப்பு.  👍 🙂

ஒரு வயதுக்கு மேல் எல்லாம் எனக்கு சர்க்கரை வியாதி வரவில்லை ......அது 66 வயதுக்கு மேல்தான் வந்தது சிறியர்.......இப்ப அதுக்கு 7 வயது இருக்கும்.........!   (இது பகிடி, சிரிக்க வேண்டும்).....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

ஆயினும் கடடாயமாக  மூன்று மாதத்துக்கு ஒருதடவை வைத்தியரின் பரிந்துரையுடன் laboratoir றில் ரத்தம் மற்றும் சிறுநீர் சோதனை உண்டு...... அது 7 / 8க்குள் இருக்கும்......!  😁

எனக்கு ஏறத்தாள 15 வருடங்களாக 6-6.1-6.2 இப்படியே போகிறது.

குளிசை போடுவது நல்லது என்று டாக்ரர் சொல்லுவார்.ஏற்கனவே 1997 இல் இருந்து பல குளிசைகள் போடுறபடியால் இன்னொரு குளிசை தேவையா என்று யோசிக்கிறேன்.

ஆனாலும் 6.4 க்கு மேலே போனால் குளிசை எடுக்கத் தான் வேண்டும்.

97இல் இருந்து 3 மாதத்துக்கொரு தடவை முழு ரத்த சோதனை செய்கிறேன்.

6 minutes ago, suvy said:

ஒரு வயதுக்கு மேல் எல்லாம் எனக்கு சர்க்கரை வியாதி வரவில்லை ......அது 66 வயதுக்கு மேல்தான் வந்தது சிறியர்.......இப்ப அதுக்கு 7 வயது இருக்கும்.........!   (இது பகிடி, சிரிக்க வேண்டும்).....!  😂

எங்களுக்கும் கூட்டல் கழித்தல் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 minutes ago, suvy said:

ஒரு வயதுக்கு மேல் எல்லாம் எனக்கு சர்க்கரை வியாதி வரவில்லை ......அது 66 வயதுக்கு மேல்தான் வந்தது சிறியர்.......இப்ப அதுக்கு 7 வயது இருக்கும்.........!   (இது பகிடி, சிரிக்க வேண்டும்).....!  😂

எங்களது காலத்தில்... வேலையில் ஓய்வூதியம் பெறும் வரைக்கும் பலருக்கும் சர்க்கரை வியாதி வந்ததில்லை. அப்படி இருந்தாலும் வெகு அரிதாகவே இருக்கும். காரணம்... கடின உழைப்பு, உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என நினைக்கின்றேன்.
ஆனால்  இப்போதெல்லாம்.... பாடசாலை மாணவர்களுக்கே சர்க்கரை வியாதி உள்ளது எனும் போது அதிர்ச்சியாக உள்ளது. அவர்களின் Fast Food உணவுகள், கொக்கோ  கோலா போன்ற குளிர்பானங்கள், ஒரே இடத்தில் இருந்து கைத் தோலை பேசியை நோண்டுவதாக இருக்கலாம்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி ஈழப்பிரியன் அண்ணா.

எனக்கும் மிகவும் பிடித்த பிஸ்கட் மலிபன் பிஸ்கட்டுகள் தான். இங்கு குக்கீஸ் என்ற பெயரில் கனடியன் பிஸ்கட்டுகளை விற்பார்கள். அவற்றின் சுவைக்கு நாக்கு பழக்கப்படவில்லை என்பதால், பிடிப்பதில்லை. 

மலிபன் மாரி தான் இவற்றில் மிகவும் பிடித்தது. பால் தேத்தண்ணிக்குள் லாவகமாக நனைத்து, அப்படியே சொத சொத என்று வாயுக்குள் போடும் போது, அப்படி ஒரு சுவை. 

லெமன் பப் (Lemon puff) பில் இருக்கும் கிரீமில் உடலுக்கு ஒவ்வாத விடயங்கள் உள்ளன என ஒரு முறை எங்கோ கேள்விப் பட்டமையால் அதைச் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். 

On 25/7/2024 at 12:40, ஈழப்பிரியன் said:

அந்த சிந்தனையும் முயற்சியும் , அப்புஹாமி அவர்களை கொழும்பு கொட்டாஞ்சேனையில்  , ஒரு  பேக்கரி தொடங்கி , வியாபாரத்தை விரிவுபடுத்த வைக்கிறது . .

க.பொ.த உயர்தரம் படிக்கும் போது, இதனருகில் இருந்த ராஜேஸ்வரி institute எனும் ரியூட்டரியில் தான் ரியூசனுக்கு சென்றேன். மலிபன் கம்பெனியில் இருந்து வரும் வாசனை மூக்கை துளைத்து பசியை உருவாக்கும்.
 
மலிபன் கம்பெனியின் இன்றைய சரியான பெயர் Little lion  ஆகும். பெயரில் சிங்கம் உள்ளது 

22 hours ago, ரசோதரன் said:

👍......

அந்த தெருவில் போனாலே மலிபனின் வாசனை வீசும்.........

அவர்களின் கொட்டாஞ்சேனை கம்பெனி உள்ளது Hinniappuhamy Mawatha  எனும் வீதியில். கொட்டாஞ்சேனையின் முக்கிய, ஒடுகலான ஒரு வீதி இது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

அதை அவர் தனது உடல் நிலையைப் பொறுத்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும்......!

அது அவரது சீனி அளவைப் பொறுத்தது ....... என்வரையில் எனக்கும் சுகர் உண்டு......காலையில் ஒரு அளவான சீனி போட்ட பால்கோப்பி பின் தோட்டத்துக்குள் வேலைகள் செய்வேன்.......10 / 11 க்குள் ஒரு தேநீர் சீனியுடன் அல்லது பனங்கட்டி ஒரு துண்டு + இரண்டு பிஸ்கட் ........ மதியம் ரெண்டு மரக்கறி தயிர் அல்லது மோர், அப்பளம் +மிளகாய்யுடன்  சாப்பாடு சிறிது நேரத்தின்பின் ஒரு மணித்தியாலம் நித்திரை பின் கொஞ்சம் வீட்டு வேலைகள் 4 /5 ல் சீனி போட்ட தேநீர் +நொறுக்குத்தீனி (வாரத்துக்கு ரெண்டு விழாக்கள் நடப்பதால் பலகாரப்பைகள் எப்பவும் மேசையில் இருக்கும்).......இரவு தோசை 3, இடியப்பம் 5, இட்லி 3, நூடில்ஸ் + குஸ்குஸ் ஒரு கையளவு இவற்றுள் ஏதாவது ஒன்று ....... பின் மெட்ரோபோமின் 500 ஒன்று அல்லது இரண்டு குளிசை அதன்பின் உறக்கம்......... கண்டநேரமும் கண்டபடி சாப்பிடுவதில்லை ....... (என்னவோ தெரியாது தோசை + சாம்பல்  சாப்பிடும்போது மட்டும் பாதிகிளாஸ் கொக்கோகோலா குடிப்பேன் அது மிகவும் பிடிக்கும்...... குளிசையும் 2 போடுவேன்).........!

வீட்டில் நிக்கும் நாட்களில் இவை  தவறாமல் நடக்கும்......மற்றும்படி மகள், மகன், பெறாமக்கள் எங்க வீட்டில் நிக்க விடுகினம்.......பாதிநாட்கள் வாகனத்துடன் தெருவிலதான் சீவியம்.......அதனால் பிளாஸ்கில் கோப்பியும் பிஸ்கட்டும்தான் தெய்வம்......!   😂

ம்..தனிப்பட்ட விருப்பு வெறுப்பை யாரும் எதுவும் சொல்ல முடியாது, ஆனால் இது சர்க்கரை வியாதி இன்னும் இல்லாத நான் சாப்பிடும் சீனி, மாவை விட அதிகமாக இருக்கிறதே😂?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

ம்..தனிப்பட்ட விருப்பு வெறுப்பை யாரும் எதுவும் சொல்ல முடியாது, ஆனால் இது சர்க்கரை வியாதி இன்னும் இல்லாத நான் சாப்பிடும் சீனி, மாவை விட அதிகமாக இருக்கிறதே😂?

இதையே தான் நானும் யோசித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மலிபன் பிஸ்கட்ட ஆசை தீர சாப்பிட்டதென்றால் மட்டக்களப்பில் தான்.  மலிபன் பிஸ்கட்டும் கோலாவும் ஒன்று சேர்ந்த சோடிகள். அதுவும் சிலோன் கோலா ஒரு தனி ரகம். அதனுடன் மலிபன் பிஸ்கட்டும் சேர........சொல்லி வேலையில்லை...

ஆத்தோரம் இருக்கும் அந்த தேனீக்கடை..... கடை முதலாளி என்னையும்.....அவ------ கண்டாலே பிஸ்கட் பக்கற்ரை கையில் எடுத்து விடுவார். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ம்..தனிப்பட்ட விருப்பு வெறுப்பை யாரும் எதுவும் சொல்ல முடியாது, ஆனால் இது சர்க்கரை வியாதி இன்னும் இல்லாத நான் சாப்பிடும் சீனி, மாவை விட அதிகமாக இருக்கிறதே😂?

1 hour ago, ஈழப்பிரியன் said:

இதையே தான் நானும் யோசித்தேன்.

நீங்கள் சொல்வது சரிதான் ........சுகர் அட்டவனைப்படி இது கொஞ்சம் அதிகம்.......பொதுவா  சாதாரணமாக 70 க்கு குறைந்தால் களைப்பு ஏற்படும் .....ஆனால் எனக்கு 90 க்கு குறைந்தால் களைப்பதுபோல் இருக்கும் 130 இருந்தால் சரியாக இருக்கும் ........எது எப்படியோ ஆயுள்வரை இது பூரணமாய் மாறப்போவது இல்லை என்று தெரியும் .......அதுவரை இப்படி இருந்தால்கூடப் போதும்......உடம்பில் வேறு வருத்தங்கள் இல்லை......கடவுளே என்று தலையிடி காச்சல் என்றும்  படுத்தது இல்லை......பார்க்கலாம்......!  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

சாப்பிட்டதை குளிசையால் கட்டுப்படுத்துகிறீர்கள் போல

நல்லது கவனமாக இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் ஐயா எனது பிறந்த இடம். மலிபனுக்கு முன்னால் இருக்கும் St. Paul's ஆஸ்பத்திரியிலேயே, நான் பிறந்த்தேன், 5 ‍-  19 வயது வரை இந்த வாசத்தை முகர்ந்து கொண்டல்லவா முன்னால் இருக்கும் பாடசாலயில் படித்து வந்தேன். எந்த திருவிழா என்றாலும் எங்கள் வீட்டில் மெலிமன் இருக்கும். 

தவழ்ந்து, ஒடி விளையாடிய தெருவல்லவ இது. 

மெலிபனும் அதன் சுற்றுவட்டமும் என் வாழ்வின் ஒரு அங்கம். 

போன மாதம் ஒரு நாள் இங்கு வந்து பனிசை சாப்பிட்டுகொண்டு, குளிர் பானத்தை குடித்தவாறு பழைய நினைவுகளை மீட்டினேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலிபன் இன், அதாவது தொடக்கியவரின் தரக்கட்டுப்பாடு ஒழுங்கை  உருவாக்கியது, பிரித்தானிய நிர்வாகத்தின் தரக்கட்டுப்பாடு, மற்றும் சுத்தம், சுகாதாரம் மீதான மிகுந்த இறுக்கமான கட்டுப்பாடு 
என்றே நம்ப வேண்டி இருக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

எந்த திருவிழா என்றாலும் எங்கள் வீட்டில் மெலிமன் இருக்கும். 

அனேகமாக எல்லோர் வீடுகளிலும் மாறியும் மலிபனும் தான்.

5 hours ago, Kadancha said:

மலிபன் இன், அதாவது தொடக்கியவரின் தரக்கட்டுப்பாடு ஒழுங்கை  உருவாக்கியது, பிரித்தானிய நிர்வாகத்தின் தரக்கட்டுப்பாடு, மற்றும் சுத்தம், சுகாதாரம் மீதான மிகுந்த இறுக்கமான கட்டுப்பாடு 
என்றே நம்ப வேண்டி இருக்கிறது.

அன்றிலிருந்து இன்றுவரை தரமாக உள்ளது.

அதுவே பெரிய வெற்றி தான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,TVK படக்குறிப்பு, தவெக மாநாட்டில் விஜய் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ், சென்னை நாம் தமிழர் கட்சியைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாகவும் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேரடியாகவும் விமர்சித்துள்ளனர். ஆனால், அ.தி.மு.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் த.வெ.க-வை இதுவரையிலும் விமர்சிக்கவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி ஆகியவை த.வெ.க மீது கடும் விமர்சனத்தை முன்வைப்பது ஏன்? இதன் பின்னணி என்ன? த.வெ.க மாநாடும் விமர்சனமும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், "சாதி, மதம், இனம் என மக்களைப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்ப்பேன்" என்றார். தொடர்ந்து பேசிய விஜய், "மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியார், அண்ணா பெயரை வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டைச் சுரண்டும் குடும்ப சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி" என்றார். 'திராவிடமும் தமிழ்த் தேசியமும்' எனது இரு கண்கள் என்று விஜய் குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சு, நாம் தமிழர் கட்சியின் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. "திராவிடமும் தமிழ்த் தேசியமும் வேறுவேறு. இரண்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? இது நடுநிலை அல்ல. கொடுநிலை" என்றார் சீமான். மறைமுகமாக விமர்சித்த ஸ்டாலின் திங்கள்கிழமையன்று சென்னை கொளத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், த.வெ.க-வை மறைமுகமாகச் சாடினார். நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், "புதிது புதிதாக கட்சி தொடங்குகிறவர்கள் எல்லாம் தி.மு.க ஒழிய வேண்டும், அழிய வேண்டும் எனப் பேசி வருகிறார்கள். நான்கு ஆண்டுகளைத் தொடப் போகும் இந்த ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பாருங்கள். உங்களின் வசைச் சொற்களுக்கெல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம்" என்றார்.   "தி.மு.க.வில் சேரலாம்" -ஹெச்.ராஜா பட மூலாதாரம்,MK STALIN/FACEBOOK படக்குறிப்பு, புதிது புதிதாக கட்சி துவங்கியவர்கள் அனைவரும் திமுக அழிய வேண்டும் என்றுதான் பேசி வருகிறார்கள் என ஸ்டாலின் பேச்சு தமிழக பா.ஜ.க-வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க ஒருங்கிணைப்புக் குழு தலைவரான ஹெச்.ராஜா, "புதிதாக விஜய் தொடங்கிய கட்சியின் தீர்மானங்களைப் பார்க்கும் போது அவர் தி.மு.க.வில் சேரலாம்" என்றார். "மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறும் விஜய் எப்படி பா.ஜ.க.,வின் பி டீமாக இருப்பார்?" எனக் கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா, "இத்தனை பி டீம்களை எங்கள் கட்சி தாங்காது" என்றார். தே.மு.தி.க கூறுவது என்ன? "இப்போதுதான் மாநாடு நடத்திக் கொடியேற்றியிருக்கிறார். அவரின் செயல்பாடுகளைப் பொறுத்துதான் எல்லாம் இருக்கிறது" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். தேசியம், திராவிடம் குறித்துப் பேசிய பிரேமலதா, "தேசியத்தில்தான் திராவிடம் இருக்கிறது. திராவிடத்தில்தான் தமிழ்நாடு இருக்கிறது" என்றார். அதிமுக கருத்து அ.தி.மு.க-வை நடிகர் விஜய் விமர்சிக்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இதற்குப் பதில் அளித்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "இதில் மற்றவர்களுக்கு என்ன கஷ்டம்?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும், "அ.தி.மு.க ஆட்சியில் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தோம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கும். மற்ற கட்சிகளை ஏன் விமர்சிக்கவில்லை என ஆதங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.   தமிழ்நாட்டு அரசியலில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,SEEMAN/ X தமிழக வெற்றிக் கழகம் குறித்த தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துகள் பற்றி மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணியிடம் பிபிசி தமிழ் பேசியது. "வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில், 'தி.மு.க-வை எதிர்த்து வெற்றி பெறுவதற்கு விஜய் வந்திருக்கிறார்' என நினைப்பவர்கள் த.வெ.க-வை ஆதரிக்கின்றனர். இது அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க ஆகிய கட்சிகளின் கணக்காக உள்ளது. இதன் பாதிப்புகளை உணர்ந்ததால்தான் விஜயை முதலைமைச்சர் விமர்சித்துப் பேசுகிறார். பா.ஜ.க.வை பொருத்தவரை ஹெச்.ராஜாவின் பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. லண்டனில் இருந்து அண்ணாமலை வந்த பின்னர்தான் நிலவரம் தெரியும்" என்கிறார். "தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை தவிர அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான கொள்கைகள்தான் உள்ளன. விஜய் கட்சியின் செயல் திட்டங்களைப் பார்த்தால் பிற கட்சிகளுக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். 2026 சட்டமன்ற தேர்தலில் புதிய கூட்டணி உருவாகுமா? "தற்போதைய அரசியல் நகர்வுகளைப் பார்த்தால், 2026 தேர்தலில் தி.மு.க-வுக்கு எதிராக அ.தி.மு.க, த.வெ.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் ஒரு புள்ளியில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்கிறார் ஷ்யாம். தொடர்ந்து பேசிய அவர், "தி.மு.க எதிர்ப்பு, ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது, குடும்ப ஆட்சி முறை ஆகியவற்றை இந்த மூன்று கட்சிகளும் எதிர்க்கின்றன. இவர்களின் இலக்கு என்பது, தி.மு.க எதிர்ப்பு வாக்குகளைத் திரட்டுவது; பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளைப் பெறுவது; தமிழ், தமிழ்நாடு, நீட் எதிர்ப்பு, இலங்கைத் தமிழர் ஆதரவு வாக்குகளைக் கவர்வது போன்றவை" என்கிறார் அவர். வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறும் ஷ்யாம், "த.வெ.க பக்கம் அணி சேரும் கட்சிகளால் 35 சதவீத வாக்குகளைப் பெற முடியும் என்றால் அந்தப் பக்கம் மேலும் சில கட்சிகள் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன" என்கிறார்.   திமுக அழிய வேண்டும் என்று தவெக கூறவில்லை பட மூலாதாரம்,EDAPPADI PALANISAMY/FACEBOOK படக்குறிப்பு, விமர்சிக்கவில்லை என்பதால் மற்றவர்களுக்கு இதில் என்ன கஷ்டம் என்று அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். த.வெ.க முன்வைக்கும் சமத்துவக் கோட்பாடுகளால் தங்களுக்கு பாதிப்பு வரும் என்பதாலேயே சில கட்சிகள் விமர்சிப்பதாகக் கூறுகிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி. "பிற கட்சிகளின் வாக்குகளைப் பிரிப்பதற்காக த.வெ.க வரவில்லை. மற்ற கட்சிகளை அழிப்பதும் நோக்கமல்ல. எங்கள் கொள்கையைப் பிடிக்காதவர்கள்தான் வன்மத்துடன் பேசுகிறார்கள்" என்கிறார் லயோலா மணி. முதலமைச்சரின் விமர்சனம் குறித்துப் பேசிய அவர், "த.வெ.க தலைவரை ஒருமையில் விமர்சித்துப் பேசியது சரியல்ல. தி.மு.க அழிய வேண்டும் என எந்த இடத்திலும் த.வெ.க தலைவர் கூறவில்லை. விஜய் சொல்லாத ஒரு விஷயத்தை சொன்னதாகக் கூறுவது வருத்தம் அளிக்கிறது" என்கிறார்.   தி.மு.க-வுக்கும் விஜய்க்கும் பிரச்னையா? பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, தங்களுக்கு பாதிப்பு வரும் என்பதாலேயே சில கட்சிகள் விமர்சிப்பதாக கூறுகிறார் லயோலா மணி இந்தக் கருத்தில் முரண்படும் தி.மு.க செய்தித் தொடர்பு செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன், "த.வெ.க தலைவரை முதலமைச்சர் ஒருமையில் விமர்சிக்கவில்லை. 'புதிதாக வருகிறவர்கள் எல்லாம் தி.மு.க-வை விமர்சிக்கிறார்கள்' என்றுதான் பேசினார்" என்கிறார். "தி.மு.க ஆட்சிக்கு எதிரான வாக்குகளை அ.தி.மு.க பிரிக்கலாம் அல்லது நாம் தமிழர் கட்சியின் பக்கம் செல்லலாம். இதில் த.வெ.க-வுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை" என்று கூறுகிறார் கான்ஸ்டன்டைன். மேலும், "நடிகர் விஜய்க்கும் தி.மு.க-வுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. தற்போது அவர் பேசி வரும் இதே கருத்தைப் பேசிய பலரும், எங்களுடன் கூட்டணி வைத்துள்ளனர்" என்றும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clydvkw11v7o
    • உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனம் என்ற ஆப்பிளின் சாதனையை என்விடியா நிறுவனம் முறியடித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு நுட்ப கணினி சிப் தயாரிப்பு நிறுவனம் என்விடியா. ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.38 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததே உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை செவ்வாய்க்கிழமை என்விடியா நிறுவனம் முறியடித்துள்ளது. என்விடியா நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.43 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. 2022ஆம் ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி என்ற புதிய வசதி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் அங்கம் வகித்த என்விடியா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அன்று முதல் தற்போது வரை 850 விழுக்காடு உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அமெரிக்க பங்குச்சந்தையில் என்விடியா நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 139 புள்ளி 93 டொலர்களாக இருந்தது. https://thinakkural.lk/article/311843
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.