Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2088896857.jpg

புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!
 
புனித காசி தீர்த்தமானது இன்றையதினம் வட்டுக்கோட்டை உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது.

கலாநிதி சிதம்பரமோகனால் காசியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தம், சங்கானை பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமாரது தலைமையில், இந்து, பௌத்த மதகுருக்கள், சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் ஆகியோரின் பங்களிப்புடன் உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது.

இதன்போது வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர் மற்றும் இராணுவத்தினரால் குளத்தை சூழவுள்ள பகுதி சிரமதானமும் செய்யப்பட்டது.  (ப)

புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு! (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பிழம்பு said:

உப்பு வயலில், காசி தீர்த்தம் கலப்பதற்கு... இராணுவம், பௌத்த மதகுருக்கள் எல்லாருக்கும் ஏன் அழைப்பு கொடுத்தவர்கள்.  அப்துல் காதருக்கும், அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?

ஊரில் உள்ள சிறு கிராமங்களில் கூட வலிய இராணுவத்தையும், பௌத்த மதகுருமாரையும் அழைத்து விட்டு... அவன் விகாரை கட்டுகிறான் என்று புலம்பி என்ன பிரயோசனம். இவர்களே... அவர்களுக்கு வழி காட்டிக் கொடுக்கின்ற செயல் மாதிரி அல்லவா உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

இனி இந்த இடம் இந்தியாவுக்குச் சொந்தமானது...சேட்டை விடாதேங்கோ என்பதற்காகத்தான்...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, alvayan said:

இனி இந்தைடம் இந்தியாவுக்குச் சொந்தமானது...சேட்டை விடாதேங்கோ என்பதற்காகத்தான்...

அட... நம்ம ஆட்கள்  அவ்வளவு புத்திசாலிகளா. 😂
இவ்வளவு நாளும் எனக்கு தெரியாமல் போச்சே.  🤣

1 hour ago, தமிழ் சிறி said:

ஊரில் உள்ள சிறு கிராமங்களில் கூட வலிய இராணுவத்தையும், பௌத்த மதகுருமாரையும் அழைத்து விட்டு... அவன் விகாரை கட்டுகிறான் என்று புலம்பி என்ன பிரயோசனம். இவர்களே... அவர்களுக்கு வழி காட்டிக் கொடுக்கின்ற செயல் மாதிரி அல்லவா உள்ளது.

சிரமதானம் செய்ய ஊர் இளைஞர்/ இளைஞிகள் பஞ்சிப் பட்டால் இப்படித்தான் நடக்கும். அவர்கள் எல்லாரும் கனடா மற்றும் வெளி நாட்டுக் கனவில் மிதப்பதால், இப்படியானவற்றை பற்றி சிந்திப்பதில்லை என அங்குள்ளவர்கள் நொந்து கொள்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

சிரமதானம் செய்ய ஊர் இளைஞர்/ இளைஞிகள் பஞ்சிப் பட்டால் இப்படித்தான் நடக்கும். அவர்கள் எல்லாரும் கனடா மற்றும் வெளி நாட்டுக் கனவில் மிதப்பதால், இப்படியானவற்றை பற்றி சிந்திப்பதில்லை என அங்குள்ளவர்கள் நொந்து கொள்கின்றனர்.

உண்மைதான் நிழலி. முன்பு இருந்த சமூக அக்கறையும், உழைக்க வேண்டும் என்ற பிரயாசையும் பலரிடம் இல்லையாம். காரணம் வெளிநாட்டு பணமும், தாமும் எப்படியாவது வெளிநாட்டுக்கு போய்விட வேண்டும் என்ற ஆசையினால்... எதிலும் ஆர்வம் காட்டாமல் இருப்பதால்.. சிங்கள / முஸ்லீம்கள் தமிழ் பகுதியில் உள்ள  அந்த வெற்றிடத்தை பிடித்து வியாபாரம், சிறுதொழில் போன்றவற்றில்  முன்னேறிக் கொண்டு போகின்றார்களாம்.  இது நமது நிலத்தையும், அடையாளத்தையும்  நாமே... இழப்பதற்கு சமமானது.

  • கருத்துக்கள உறவுகள்

காசி சாக்கடை தண்ணீரை யாழ்பாணம் கொண்டு வந்ததே தவறு. அதை வேறு எமது மண்ணில் உள்ள தண்ணீருடன் கலந்தது அடுத்த தவறு. 

5 minutes ago, தமிழ் சிறி said:

வேலை இல்லா திண்டாட்ட காலம் போய், ஆனால் வேலையும், புதிய தொழில்களுக்கான தேவையும் நிறைய இருக்கும் நேரத்தில், அவற்றைச் செய்ய ஆள் இல்லை என்ற நிலையில் தாயகம் உள்ளது.

7 minutes ago, island said:

காசி சாக்கடை தண்ணீரை யாழ்பாணம் கொண்டு வந்ததே தவறு. அதை வேறு எமது மண்ணில் உள்ள தண்ணீருடன் கலந்தது அடுத்த தவறு. 

சாக்கடை மட்டுமல்ல, மனிதர்களின் பிணங்கள் அழுகி அழியும் ஆறு அது.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, island said:

காசி சாக்கடை தண்ணீரை யாழ்பாணம் கொண்டு வந்ததே தவறு. அதை வேறு எமது மண்ணில் உள்ள தண்ணீருடன் கலந்தது அடுத்த தவறு. 

காசி தீர்த்தம் என்பது.... சிலரின் உணர்வு, மதத்துடன் சம்பந்தப் பட்டது.
அது ஒரு அடையாளம்.. அதில் உள்ள  சுகாதாரத்தைப்  பற்றி, நீங்கள் கதைப்பது விசித்திரமானது.
அதை சுகாதார திணைக்களம் பார்த்துக் கொள்ளும். உங்களுக்கு ஏன் வீண் கவலை. 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நிழலி said:

வேலை இல்லா திண்டாட்ட காலம் போய், ஆனால் வேலையும், புதிய தொழில்களுக்கான தேவையும் நிறைய இருக்கும் நேரத்தில், அவற்றைச் செய்ய ஆள் இல்லை என்ற நிலையில் தாயகம் உள்ளது.

சில தொழில்கள் எமது கையை விட்டு அந்நியரிடம் போய் விட்டது என்றால்...
அதன் தொழில் நுணுக்கங்களையும், நெளிவு சுழிவுகளையும், சந்தைப் படுத்தலையும் எமது சமுதாயம் மட்டுமல்ல அடுத்த தலைமுறை கூட மீண்டும் கைப்பற்றுவது முடியாத காரியமாக இருக்கும். இதனைப் பற்றிய விழிப்புணர்வை அந்த மக்களுக்கு யார் ஏற்படுத்துவது என்றுதான் தெரியவில்லை. 

கட்டிடத் தொழில், தச்சு வேலை போன்ற நுணுக்கமான வேலைகளை சிங்களவர் எடுக்கின்றார்கள். வியாபார ஆக்கிரமிப்பை முஸ்லீம்கள் செய்வதாக அறிய முடிகின்றது. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

காசி தீர்த்தம் என்பது.... சிலரின் உணர்வு, மதத்துடன் சம்பந்தப் பட்டது.
அது ஒரு அடையாளம்.. அதில் உள்ள  சுகாதாரத்தைப்  பற்றி, நீங்கள் கதைப்பது விசித்திரமானது.
அதை சுகாதார திணைக்களம் பார்த்துக் கொள்ளும். உங்களுக்கு ஏன் வீண் கவலை. 😂 🤣

சாக்கடையை சாக்கடை என்று தான் கூற முடியும். வேறு பெயர் கொண்டு அழைக்க முடியாது. சாக்கடையை புனிதமானது  என்று நாலு முட்டாள்கள் தூக்கி கொண்டாடுவது பற்றி எனக்கு அக்கறை இல்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

புனித காசி தீர்த்தமானது இன்றையதினம் வட்டுக்கோட்டை உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது.

லூசுத்தனத்தின் உச்சக்கட்டம். 😡

வருடாவருடம் குளம் குட்டைகளை தூர் வாருங்கடா......நீர்தேக்கங்களை பராமரியுங்கள். தண்ணிபஞ்சமும்....கடல் நீரும் உள்ளே வராது.

எனது சிறுவயது முதல் சிரமதான பணிகளில் ஈடுபட்டவன் நான். ஒவ்வொரு மனிதனுக்கும் சிரமதான சிந்தனை இருந்தாலே போதும் . எந்தவொரு அரசையும் தங்கியிருக்க தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

2088896857.jpg

புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!
 
புனித காசி தீர்த்தமானது இன்றையதினம் வட்டுக்கோட்டை உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது.

கலாநிதி சிதம்பரமோகனால் காசியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தம், சங்கானை பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமாரது தலைமையில், இந்து, பௌத்த மதகுருக்கள், சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் ஆகியோரின் பங்களிப்புடன் உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது.

இதன்போது வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர் மற்றும் இராணுவத்தினரால் குளத்தை சூழவுள்ள பகுதி சிரமதானமும் செய்யப்பட்டது.  (ப)

புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு! (newuthayan.com)

மிக விரைவில் வடக்கில் பெளத்தம் தனது கால்களை ஆள ஊன்றுவதற்கான முன்னேற்பாட்டுப்  பயிற்சியாக இருக்குமோ,....? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!

இல்லாத பொல்லாத வியாதி கள் இனி உப்பு குளத்தில் இருந்து யாழ் மக்களுக்கு பரவ போகின்றது எவன் பார்த்த வேலையாக இருக்கும் ?

6 hours ago, பிழம்பு said:

கலாநிதி சிதம்பரமோகனால்

இதைத்தான் சொல்றது என்கடயல் சோதனை க்கு மட்டுமே படித்து பாஸ் பண்ணியவர்கள் மற்றபடி உலகத்தை பற்றிய அறிவு சுத்தம் .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

காசி தீர்த்தம் என்பது.... சிலரின் உணர்வு, மதத்துடன் சம்பந்தப் பட்டது.
அது ஒரு அடையாளம்.. அதில் உள்ள  சுகாதாரத்தைப்  பற்றி, நீங்கள் கதைப்பது விசித்திரமானது.
அதை சுகாதார திணைக்களம் பார்த்துக் கொள்ளும். உங்களுக்கு ஏன் வீண் கவலை. 😂 🤣

ஆனால் சமூக நலன் என்று பார்க்கும் போது இவ்வாறான மூட நம்பிக்கைகளை களைவதுதான் சிறப்பு, பெருந்தொற்று காலத்தில் சில நல்லடக்கங்கள் மத கோட்பாட்டிற்கெதிரானது என ஒரு தரப்பு மக்களை உசுப்பி விடுவது போல செயற்படுவது சரியாக இருக்காது, அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க இறுக்கமான சட்ட ஒழுங்கு நடவடிக்கையினை அரசு மேற்கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

🤣..........

பாரதியார் சில வருடங்கள் காசியில் தங்கி இருந்தார், உறவினர் வீடொன்றில். அங்குதான் அவர் முதன் முதலாக குடுமியை அறுத்தெறிந்து விட்டு படு ஸ்டைலான தலை வெட்டிற்கும், மீசைக்கும் மாறினார். அதனால் அவரை அவர் வீட்டார்கள் பந்தியில் இருக்க அனுமதிக்கவில்லை.

வெட்டிய குடுமியை கங்கைக்குள் தான் போட்டாரா என்று சரியாகத் தெரியவில்லை.

இந்த கலாநிதி சிதம்பரமோகன் அவர்களை இன்று தான் கேள்விப்படுகின்றேன். தேடியதில், இவர் தலைமையில் சமீபத்தில் வட்டுக்கோட்டையில் பாரதியார் பிறந்ததின விழா கொண்டாடி, இவர் அங்கே ஒரு உரையும் ஆற்றியதாக இருக்கின்றது.

இன்று காலையில் இருந்து எங்கே போனாலும் பாரதியாரே பாதையில் குறுக்காக நிற்கின்றார். இன்று வாசித்த வேறு ஒரு கட்டுரையில் இது இருந்தது:

"பாரதி முதன் முதலில் தமிழை நவீனப்படுத்தினாலும்  அவர் அதைப் புனிதப்படுத்தவில்லை. ஆனால் அந்த புரட்சிக்கவி பாரதியையே நம்முடைய ஹிப்போக்ரட் சமூகம் புனிதப்படுத்தி வைத்திருக்கிறது. அவர் பாடலை கர்நாடக சங்கீதத்தில் பாடுவது, அவரைப்போல தங்கள் குழந்தைகளுக்கு வேடம் அணிவிப்பது என இதெல்லாம்தான் புனிதப்படுத்தும் வேலை. அவர் கவிதைகளில் நான்கு வரியை மனப்பாடம் பண்ணி வைத்துக்கொள்வது உட்பட…

பாரதி மது அருந்துவார், கஞ்சா புகைப்பார், சைட் அடிப்பார் என்றெல்லாம் சொன்னால் இந்தச் சமூகம் முகம் சுளிக்கும். அதைக் கேட்க விரும்பாது. அவரைப் பட்டினியில் போட்டு சாகடித்த சமூகம் எனச் சொன்னால், அது ஏதோ அண்டார்டிக்கா சமூகம் என நினைத்து உச்சு கொட்டும்.

கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பலவேடிக்கை மனிதரைப் போலே – என இந்தச் சமூகத்தின் மனிதர்களைத்தான் திட்டி இருக்கிறார் என்பது கூடத் தெரியாமல் மனப்பாடம் செய்து கொண்டாடும்."

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.