Jump to content

தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%

நான் மற்றவர்களைப் போல வாக்குறுதிகளை அளிப்பதில்லை-ஜனாதிபதி!

என்னைப் பொறுத்தவரை இந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு போர் அல்ல. நான் யாரிடமும் சண்டையிட வரவில்லை. நான் எனது கொள்கைகளுடன் வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களின் பிரதிநிதிகளை இன்று சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

உண்மையைச் சொல்லி நாட்டைக் காப்பாற்றத் தயாரா அல்லது பொய்யைக் கூறி நாட்டைக் குழப்பத் தயாரா என்பதைச் மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டை முன்னெடுத்துச் செல்வேன். நான் மற்றவர்களைப் போல வாக்குறுதிகளை அளிப்பதில்லை. செய்து காட்டியுள்ளேன். ஏனையோர் வாக்குறுதிகளை வழங்குவதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

 

மேலும் மற்ற வேட்பாளர்கள் எனக்கு சவாலாக இல்லை என்றும் நான் நாட்டின் எதிர்காலத்திற்காக வருகிறேன். ஏனைய வேட்பாளர்கள் தமது எதிர்காலத்திற்காக வரவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார் .

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனோ அல்லது கடன் வழங்குநர்களுடனோ செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது எனவும் அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை இழக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1394978

Link to comment
Share on other sites

  • Replies 140
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2024 at 18:41, Kandiah57 said:

நாங்கள் செம்மறி ஆட்டை.  சாப்பிட்டு தான் பழக்கம்   இது எங்கள் பரம்பரையாக. வந்த பழக்கம்

கூடுதலாய் யாழ்ப்பாணப்பக்கம் செம்மறி ஆட்டிறைச்சி சாப்பிடுவதில்லை. தனிய வெள்ளாட்டு இறைச்சி மட்டும் தான்... 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கூடுதலாய் யாழ்ப்பாணப்பக்கம் செம்மறி ஆட்டிறைச்சி சாப்பிடுவதில்லை. தனிய வெள்ளாட்டு இறைச்சி மட்டும் தான்... 😎

சாப்பிடுவதுண்டு அந்த காலத்தில் குறைவு   சின்னப்பா என்ற எனது ஊர்காரர்  செம்மறி ஆட்டு பட்டி. 1975 களில் வைத்து இருந்தவர்    கலீல்.  என்ற யாழ்ப்பாணம் நபர் நல்ல சினேகிதம்.  ஆட்டுபட்டிகாரருடன். .... இந்த கலீல்.  கைதடி சந்தியில் ஆட்டு இறைச்சி. கடை வைத்திருந்தவர். 

மேலும் இப்போது  700 செம்மறி ஆடுகளை. பளையில்.  வைத்திருப்பவர்.  நடராஜா எனது சித்தப்பா.   மட்டுமல்ல என்னுடன் படித்தவர்.      இன்று நன்றாக செம்மறி ஆடு சாப்பிடுவார்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்   

மாற்றம் ஒன்றே என்றும் மாறாது 

Link to comment
Share on other sites

23 hours ago, தமிழ் சிறி said:

அத்துடன் நாட்டை முன்னெடுத்துச் செல்வேன். நான் மற்றவர்களைப் போல வாக்குறுதிகளை அளிப்பதில்லை. செய்து காட்டியுள்ளேன். ஏனையோர் வாக்குறுதிகளை வழங்குவதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்

அப்போ தமிழ் மக்கள் உங்களை நரி என ஏன் அழைக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அப்போ தமிழ் மக்கள் உங்களை நரி என ஏன் அழைக்கிறார்கள்?

சிங்களக் கடசிகளுக்குள் பிரிவினையை இவர் செய்வதால்,
இப்போ... சிங்களவர்களும், அவரை நரி என அழைக்கத் தொடங்கியுள்ளனர். 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

சிங்களக் கடசிகளுக்குள் பிரிவினையை இவர் செய்வதால்,
இப்போ... சிங்களவர்களும், அவரை நரி என அழைக்கத் தொடங்கியுள்ளனர். 😂

ஒரு நாட்டை நரி ஆட்சி புரிகிறது என்றால்  ...அந்த நாட்டில் வாழ்கிறவர்கள். யார்??? 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

ஒரு நாட்டை நரி ஆட்சி புரிகிறது என்றால்  ...அந்த நாட்டில் வாழ்கிறவர்கள். யார்??? 

காட்டுவாசிகள். 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

காட்டுவாசிகள். 😂 🤣

சிங்கம் கூட நரியின் ஆட்சியில் தானா?? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/8/2024 at 21:14, தமிழ் சிறி said:

நான் மற்றவர்களைப் போல வாக்குறுதிகளை அளிப்பதில்லை.

அப்போ; சுமந்திரன் புலம்பித்திரிவது அவரது புலம்பலா ? பிரச்சனைக்கான தீர்வு நல்லாட்சி காலத்தில் வரைந்தாயிற்று, நடைமுறைப்படுத்துவதுதான் பாக்கி என்றார். இப்போ; வேறொன்று கூறுகிறார். ஒருவேளை கனவு கண்டாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

அப்போ; சுமந்திரன் புலம்பித்திரிவது அவரது புலம்பலா ? பிரச்சனைக்கான தீர்வு நல்லாட்சி காலத்தில் வரைந்தாயிற்று, நடைமுறைப்படுத்துவதுதான் பாக்கி என்றார். இப்போ; வேறொன்று கூறுகிறார். ஒருவேளை கனவு கண்டாரோ?

சுமந்திரன்... ஒரு  பொய்யன்  என்று, ஊரில் பேசிக் கொள்கிறார்கள்.
அது, உண்மை என்றுதான் நானும் நினைக்கின்றேன். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kandiah57 said:

ஒரு நாட்டை நரி ஆட்சி புரிகிறது என்றால்  ...அந்த நாட்டில் வாழ்கிறவர்கள். யார்??? 

செம்மறிகள் 😄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:
19 hours ago, Kandiah57 said:

ஒரு நாட்டை நரி ஆட்சி புரிகிறது என்றால்  ...அந்த நாட்டில் வாழ்கிறவர்கள். யார்??? 

செம்மறிகள்

ஆகா ஆகா

2024 இல் அருமையான கேள்வியும் பதிலும்.

உங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை அழிக்க ஒரு நரியை தெரிந்தெடுத்து அதன் கையில் அதிகாரத்தை கொடுத்துவிட்டால் போதும், பல நரிகளுக்கு கொண்டாட்டந்தான் இனி தங்கள் காட்டில் தான் மழை என்று. அந்த நரியை அதிகாரத்திற்கு கொண்டுவர  பல நரிகள் முயற்சிக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

454752986_512477514786088_70640726617978  May be an image of 2 people, dais and text

 

ஒரு சிங்கம், நரியிடம் சொன்னது, “எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா. உனக்கு சில எலும்பு துண்டு தருகிறேன்”

நரி ஒரு செம்மறி ஆட்டிடம் சென்று சொன்னது “சிங்கம் உன் பிரச்னை எல்லாம் தீர்த்து உனக்கும் முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது” 

செம்மறி ஆடும் நரியை நம்பி சென்றது.

செம்மறி ஆட்டைக் கண்டதும் சிங்கம் அதனைத் தாக்கியது, அதனால் செம்மறி ஆட்டின் காதுகள் அறுபட்டாலும், அது தப்பித்து விட்டது. 

செம்மறி ஆடு நரியிடம் சொன்னது: “நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது”

அதற்கு நரி சொன்னது: “சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது. வா மீண்டும் செல்வோம். வேண்டும் கிரீடம்” 

செம்மறி ஆட்டுக்கு அது சரி எனப் பட்டது, அதனால் திரும்பிச் சென்றது.

மீண்டும் செம்மறி ஆட்டைத் தாக்கிய சிங்கம், இம்முறை அதன் வாலை அறுத்தது 

மீண்டும் தப்பித்து நரியிடம் சொன்னது: “நீ பொய் சொல்கிறாய்; இதோ பார், சிங்கம் என் வாலை அறுத்துவிட்டது”

நரி சொன்னது: “நீ அரியாசனத்தில் வசதியாக அமர வேண்டும் என்பதற்காகவே சிங்கம் உன் வாலை அகற்றியது. மீண்டும் செல்வோம். வேண்டும் அரியாசனம்” 

நரி செம்மறி ஆட்டை மீண்டும் அழைத்து சென்றது.
இந்த முறை, சிங்கம் செம்மறி ஆட்டை பிடித்து கொன்றது.

சிங்கம் நரியிடம் சொன்னது: “பலே பலே, எப்படி சிக்கி சீரழிந்தாலும், திரும்ப செம்மறி ஆட்டை அழைத்து வந்துவிட்டாயே. போய் செம்மறி ஆட்டின்  தோலை உரித்து, அதன் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தைக் கொண்டு வா”

நரி செம்மறி ஆட்டின் தோலை உரித்து, அதன் மூளையை சாப்பிட்டது. நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தை சிங்கத்திற்கு கொண்டு வந்தது. 

சிங்கம் கோபமடைந்து கேட்டது: “மூளை எங்கே?” 

நரி பதிலளித்தது: “அந்த செம்மறி ஆட்டுக்கு மூளை இல்லை, மூளை இருந்திருந்தால், காதையும், வாலையும் இழந்த பின்னர் உங்களை நம்பி வந்திருக்குமா?”

குறிப்பு - இந்த பஞ்ச தந்திரக் கதையை படித்ததும் ரணில் தீர்வு தருவார் என தமிழ் மக்களை அழைக்கும் சுமந்திரன் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.😂

தோழர் பாலன்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடடா இந்த சுமாவின் கதையை அவரின் பெண்சாதியே நம்புறதில்லயாம் .....இது வேறயா 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13 இல் வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் - ரணிலிடம் சுமந்திரன் வலியுறுத்தல்

Published By: VISHNU   14 AUG, 2024 | 09:32 PM

image

(நா.தனுஜா)

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திருப்பித்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருக்கும் நிலையில், அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய உத்தரவாதத்தை வழங்கவேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (14) காலை 11.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள விடயங்களை உள்ளடக்கி அண்மையில் சுமந்திரனிடம் கையளித்த ஆவணத்தை ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வழங்கியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதேவேளை அந்த ஆவணத்தில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உருவாக்கப்படவேண்டிய சட்டங்கள், நீக்கப்படவேண்டிய சட்டங்கள் குறித்து இருவரும் விரிவாகக் கலந்துரையாடினர்.

அதேபோன்று அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திருப்பித்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருக்கும் நிலையில், அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய உத்தரவாதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கவேண்டும் எனவும் இதன்போது சுமந்திரன் வலியுறுத்தினார்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, அதனை செனெட் சபை மூலமாகச் செய்வதாக அல்லவா ஏற்கனவே கலந்துரையாடினோம் என வினவினார். அதனை ஆமோதித்த சுமந்திரன், புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்னர் கலந்துரையாடிய வேளையில், மேற்குறிப்பிட்டவாறு வழங்கிய அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாமல் பாதுகாப்பதற்கு செனெட் சபையை நிறுவுவது குறித்துத் தாம் பேசியதாகவும், இருப்பினும் அதுகுறித்து பகிரங்கமாகத் தெரியக்கூடியவகையில் ஜனாதிபதி உத்தரவாதத்தை வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் தேசிய கொள்கைகள் முழு நாட்டுக்கும் பொதுவானவையாக இருப்பினும், அதன்கீழ் உரிய கட்டமைப்புக்களை நிர்வகிப்பதற்கான அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவேண்டும் எனவும், விசேட சட்டங்களுக்கான தேவைப்பாடுகள் உள்ளபோதிலும், அவை தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படாதவண்ணம் அவற்றை மாற்றியமைக்கவேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் சுமந்திரன் வலியுறுத்தினார். அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இதுபற்றியும் சுமந்திரனுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.

https://www.virakesari.lk/article/191115

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
30 minutes ago, ஏராளன் said:

13 இல் வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் - ரணிலிடம் சுமந்திரன் வலியுறுத்தல்

அரசியலமைப்பில் திருத்தம் செய்வது என்றால்... 
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ரணில் வெற்றி பெற வேண்டும் என்பது,
சுமந்திரனுக்கு தெரியாமல் இருப்பது, ஆச்சரியமாக உள்ளது. 😂
இல்லாவிடில்... தெரிந்து செய்யும் சுத்துமாத்தில் இதுவும் ஒன்றா...  🤣

Edited by தமிழ் சிறி
  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அரசியலமைப்பில் திருத்தம் செய்வது என்றால்... 
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ரணில் வெற்றி பெற வேண்டும் என்பது,
சுமந்திரனுக்கு தெரியாமல் இருப்பது, ஆச்சரியமாக உள்ளது. 😂
இல்லாவிடில்... தெரிந்து செய்யும் சுத்துமாத்தில் இதுவும் ஒன்றா...  🤣

இந்த திரி இன்னும் அனையவில்லையாக்கும் ?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

இந்த திரி இன்னும் அனையவில்லையாக்கும் ?🤔

சுமந்திரன் விட்ட “றீல்” அப்பிடி. 😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/8/2024 at 04:14, தமிழ் சிறி said:

நான் மற்றவர்களைப் போல வாக்குறுதிகளை அளிப்பதில்லை-ஜனாதிபதி!

ஏற்கனவே சட்மாக்கி உள்ளதை சகல வல்லமை படைத்த ஜனாதிபதி ஒரே நாளில் அமுல்படுத்தலாம்.

இதற்கேன் அடுத்த தேர்தல்வரை பொறுத்திருக்கணும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன் விட்ட “றீல்” அப்பிடி. 😂

உதப் பார்த்தவுடன சிறியரைத்  தேடிப்பிடித்து  மொங்கு மொங்கென்று மொத்த வேணும் போல கை பரபரக்கிது,.....🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

உதப் பார்த்தவுடன சிறியரைத்  தேடிப்பிடித்து  மொங்கு மொங்கென்று மொத்த வேணும் போல கை பரபரக்கிது,.....🤣

சொல்லிப்போட்டு நிற்காமல் செயலில் இறங்குகுங்க.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2024 at 19:22, தமிழ் சிறி said:

குறிப்பு - இந்த பஞ்ச தந்திரக் கதையை படித்ததும் ரணில் தீர்வு தருவார் என தமிழ் மக்களை அழைக்கும் சுமந்திரன் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.😂

 

கண்டிப்பாக நீங்கள் தான் பொறுப்பு,      இதிலிருந்து தப்பிக்கவே முடியாது 😂🤣🤣. சுமத்திரனை மறந்து இருந்தேன்   இப்போது மறக்க வழி தெரியமால்.  இருக்கிறேன்    

நல்ல கதை   முன்பு வாசித்து உள்ளேன் மறந்து போனேன்   இப்போது மறக்க முடியவில்லை   

ஏன் இப்படி சுமத்திரனுக்குகாக பிரச்சாரம் செய்கிறீர்கள்?? 🤣🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

உதப் பார்த்தவுடன சிறியரைத்  தேடிப்பிடித்து  மொங்கு மொங்கென்று மொத்த வேணும் போல கை பரபரக்கிது,.....🤣

நல்ல கொதிக்கும் தண்ணீரில் கையை ஐந்து நிமிடங்கள் மட்டும் வைத்து இருந்து விட்டு எடுங்கள்  கை அமைதியாகும்  🤣😂

1 hour ago, ஈழப்பிரியன் said:

சொல்லிப்போட்டு நிற்காமல் செயலில் இறங்குகுங்க.

ஜேர்மனியில் கால்.  வைத்தால்   கையால் தான் நடத்து. கனடா போக வேண்டும் 😂🤣😂🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே சட்மாக்கி உள்ளதை சகல வல்லமை படைத்த ஜனாதிபதி ஒரே நாளில் அமுல்படுத்தலாம்.

இதற்கேன் அடுத்த தேர்தல்வரை பொறுத்திருக்கணும்?

சகல வல்லமையுள்ள ஐனதிபதி  பதவி என்பது உண்மையா  ?? 

அப்படியென்றால் கோத்தா ஏன். பதவியை விட்டுட்டு ஒடினார்??   

இவர்கள் தமிழர்கள் பிரச்சனைகள் தீர்ப்பதற்கு சிங்களவர்கள்  எதிர்ப்பு என்று ஒரு போலியான விம்பத்தை  செயற்கையாக உருவாக்கி வைத்து உள்ளார்கள் அவ்வளவு தான் மற்றும் படி   இலங்கை பிரச்சனை தீர்க்க கூடியது தான் 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.