Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவின் பல நகரங்களில் கலவரம்: பொலிஸார் மீது தாக்குதல், சொத்துகளுக்கு சேதம்

uk.jpg

வடமேற்கு இங்கிலாந்தில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பல நகரங்களில் கலவரம் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.

13 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் பதிவாகியுள்ள மோசமான குழப்ப நிலை இதுவாகும் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும், சொத்துகளை சேதப்படுத்தும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

லிவர்பூல் மற்றும் சவுத்போர்ட் பகுதிகளில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு கலவரங்களும் மோதல்களும் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.

17 வயதுடைய சந்தேக நபரான Axel Rudakubana, 17, பிரித்தானியாவில் பிறந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குடியேற்ற எதிர்ப்பு மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டங்கள் தொடர்ந்து வன்முறை, தீவைப்பு மற்றும் கொள்ளையில் இறங்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

லிவர்பூல், பிரிஸ்டல், ஹல் மற்றும் பெல்ஃபாஸ்ட் ஆகிய இடங்களில் வன்முறை வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வன்முறையை தடுக்க முற்பட்ட பொலிஸார் இதன் போது காயமடைந்துள்ளனர். லிவர்பூலில் குறைந்தது இரண்டு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன மற்றும் சூறையாடப்பட்டுள்ளன.

தென்மேற்கு நகரமான பிரிஸ்டலிலும் இதுபோன்ற சம்வபங்கள் பதிவாகியுள்ளன. பெல்ஃபாஸ்டில், சில வணிக நிலையங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.

செவ்வாய்கிழமை சவுத்போர்ட்டில் உள்ள மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

நகரங்கள் முழுவதும் கூடுதல் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் கடைசியாக 2011ஆம் ஆண்டு பாரிய கலவரம் ஏற்பட்டிருந்தது.

லண்டனில் ஒரு கறுப்பினத்தவரை பொலிசார் சுட்டுக் கொன்றதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கியதால், மிகப்பெரிய வன்முறை வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
https://akkinikkunchu.com/?p=286694

  • கருத்துக்கள உறவுகள்

சோமாலிய தாக்குதலில் 32 பேர் பலி

சோமாலியா தலைநகரில் அல்-கொய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அந்தவகையில்,  சோமாலியா தலைநகர் மொகடிசுவில்   உள்ள லிடோ கடற்கரை அருகே அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றிலேயே அந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த உணவகத்திற்குள் நுழைந்த அல் ஷபாப் அமைப்பினர் அங்கு இருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இதன்போது, சிலரை பணயக்கைதிகளாக சிறைபிடித்ததுடன், தங்கள் உடலில் மறைத்து கட்டிக்கொண்டு வந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 60 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என கூறப்படுகின்றது

https://www.tamilmirror.lk/செய்திகள்/சமலயவல-தவரவத-தககதல-32-பர-பல/175-341524

இந்த செய்தி யாரும் பகிர்ந்ததாய் காணவில்லை அதனால் இத்திரியில் இணைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

1500x900_5318950-dsfgg.webp?resize=750,3

பிாித்தானியாவில் அகதிகள் குடியேற்றத்திற்கு எதிராக உள்ளூர் மக்கள் போராட்டம்!

அகதிகள் குடியேற்றத்திற்கு எதிரான உள்ளூர் மக்களின் போராட்டம் சவுத்போர்ட், ரூதர்ஹம் உள்பட பல்வேறு நகரங்களிலும் பரவி வருகிறது.

குறித்த பிரதேசத்தில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த மோதலில் 10 போலீசார் காயமடைந்துள்ளனா்.

மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடன பள்ளியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்ததுடன்  7 பேர் படுகாயமடைந்த நிலையில், குறித்த தாக்குதலை நடத்திய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் சவுத்போர்ட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  தாக்குதல் நடத்தியது இங்கிலாந்தில் அகதியாக குடியேறிய குடும்பத்தை சேர்ந்த சிறுவன் என செய்திகள் பரவியிருந்தன.

இதையடுத்தே அகதிகளுக்கு எதிராக உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1394819

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா லண்டனில நம்மாளுங்க எல்லாரிம் சவுக்கியமா..? இதுக்குதான் ஊருக்குப்போகனும் எண்டுரது.. ஊரில அடிவாங்கினாலும் என்ர மண் எண்டு திமிரா கதைக்கலாம் ஆனால் வெளிநாட்டில் அடிவாங்கும்போது அடி வலியுடன் வந்தான் வரத்தான் என்று அவர்கள் ஏசும் வசவுச்சொற்கள் கூனிக்குறுக வைக்கும்.. நான் ஊருக்கு போகப்போறன் எண்டு சொல்ல எத்தினைபேர் நக்கல் அடிச்சவை.. அப்ப நினைக்கவில்லை இப்படி மாறும் காலநிலை என்று .. இது போல் இன்னும் ஒரு முப்பது வருசத்தில் இலங்கையில் நடந்ததுபோல் ஒரு இன அழிப்பு நடந்தால்கூட ஆச்சரியப்பட இடமில்லை.. எமது தலைமுறை பெட்டிபடுக்கையை தூக்கிகொண்டு வந்தாலும் ஆச்சரியப்பட ஒண்டுமில்லை.. காலம் விசித்திரமானது காலத்தின் கணக்குகளை யாரும் அறியமுடியாது.. இப்படி ஒரு அபிவிருத்தி அடைந்த நாட்டில் இந்தியாவில் சங்கிகள் செய்வதுபோல் கார்க்கண்ணாடியை இறக்கி வெள்ளையா கறுப்பா ஆசியனா என்று பாத்து ஊரே கூடி அடிப்பார்கள் என்று யாராவது கனவிலும் நினைத்திருப்பார்களா..? காலத்தின் முடிச்சுக்கள் விசித்திரமானது.. 

சொர்க்கமே என்றாலும் சொந்தநாடுதான் நரகமே என்றாலும் அதுதான் நல்லது..

Edited by பாலபத்ர ஓணாண்டி

30 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்படி ஒரு அபிவிருத்தி அடைந்த நாட்டில் இந்தியாவில் சங்கிகள் செய்வதுபோல் கார்க்கண்ணாடியை இறக்கி வெள்ளையா கறுப்பா ஆசியனா என்று பாத்து ஊரே கூடி அடிப்பார்கள் என்று யாராவது கனவிலும் நினைத்திருப்பார்களா..?

வெளிநாட்டவருக்கு எதிரான வலதுசாரி பிரிடிஷ் தமிழருக்கும் பிரெக்சிட் வேண்டும் என்று தலைகீழாக நின்ற தமிழருக்கும் விசேட சலுகை வழங்கப்படதா ? இந்த குறூப் இப்போது எந்தப் பக்கம் நிற்கிறது என்பதையும் அறிய ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்

சில ஆண்டுகள் முன்பு பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரத்தின் பாடசாலைகளில் பாலியல் தொடர்பான கல்வித்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று பெற்றோர்கள் ஆர்ப்பார்ட்டம் செய்தனர். Good touch-bad touch இல் இருந்து குழந்தை உருவாகும் முறை, ஒரு பாலுறவு (homosexuality) என்ன என்பது போன்ற விடயங்களை உள்ளடக்கிய அந்தப் பாடத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாதென போராட்டம் செய்த பெரும்பான்மையான பெற்றோர் குடியேறிகளாக வந்து செற்றிலான முஸ்லிம் குடும்பத்தினர்😂.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு சமூகத்தில் இருக்கும் எல்லோருக்கும் ஒட்டு மொத்த நன்மை தரக் கூடிய முன்னேற்றகரமான கொள்கைகளை மேற்கத்தைய நாடுகள் அமல்படுத்த, வந்து குடியேறிய பிற்போக்கு வாதிகள் அனுமதிக்காமல் போராடும் வினோத நிலை பல மேற்கு நாடுகளில் உருவாகி வருகிறது.

சில நடைமுறைகள் பிடிக்கவில்லையானால், தமக்குப் பிடித்தமான நடைமுறைகள் இருக்கும் நாடுகளுக்கு வெளியேறிச் செல்வதை விடுத்து, தாராளவாத நாடுகளின் நல்ல கொள்கைகளை தடுத்த படி அங்கேயே "டோரா போட்டு" அந்த நாடுகளையும் குட்டிச் சுவராக மாற்றி விடும் வேலைகள் நடக்கின்றன. இப்படியான குடியேறிகளுக்கு கொஞ்சம் அவர்களுடைய இன /மத வெறுப்பு மருந்தின் சுவை என்ன என்று இந்த பிரிட்டன் கலவரம் காட்டியிருக்கும்.

ஆனால், அப்பாவிகளும் பாதிக்கப் பட்டிருப்பது சோகம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

முஸ்லீம்களால் ஒரு போதும் முஸ்லீம் அல்லாத சமூகங்களுடன் integrate ஆகி கூடி வாழமுடியாது.. அதை அவர்களின் மதப்புத்தகமும் அனுமதிக்காது.. இவர்கள் எல்லாம் எதற்கு இன்னொரு நாட்டிற்கு வருகிறார்கள் என்று புரியவில்லை அந்த நாட்டுடன் ஒன்றினைந்து வாழமுடியாது என்று நினைப்பவர்கள்.. மதத்தை எல்லாவற்றிற்கும் மேலாக முன்னுக்கு வைப்பவர்களால் சொந்த நாட்டில்கூட நிம்மதியாக வாழமுடியாது..

இருந்து பாருங்கள் 1950 இற்குள் பல மேற்கு நாடுகளின் விசாவிண்ணப்ப படிவத்தில் எந்த மதம் என்று கேட்கும் ஒரு காலம் வரும்.. அதற்கு காரணம் முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்களால் தமது நாட்டில் சமூகாமைதிக்கு குந்தகம் விளைகிறது என்று பாராளுமன்றில் சட்டம் நிறைவேற்றுவார்கள்.. அந்த விளிப்புக்கு மேற்கு நாடுகளை தள்ளுபவர்கள் அந்த நாடுகளின் தீவிர வலதுசாரிகள் அல்ல சாட்சாத் இந்த முஸ்லீம்கள்தான்.. 

  • கருத்துக்கள உறவுகள்

தாங்களும் வெள்ளை தோல் என்று மமதையில் திரிந்த  கிழக்கு ஐரோப்பியரக்ளுக்கும் அடி விழுகுது .

BMW set upon and Eastern European men inside attacked - how violence surged in one city

d1ebfb80-534f-11ef-aebc-6de4d31bf5cd-jpg

https://www.bbc.co.uk/news/articles/cj622z0w7n0o

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

தாங்களும் வெள்ளை தோல் என்று மமதையில் திரிந்த  கிழக்கு ஐரோப்பியரக்ளுக்கும் அடி விழுகுது .

BMW set upon and Eastern European men inside attacked - how violence surged in one city

d1ebfb80-534f-11ef-aebc-6de4d31bf5cd-jpg

https://www.bbc.co.uk/news/articles/cj622z0w7n0o

ஆக மொத்தத்தில இமிக்கிரேசன் பாட்டி எண்டாலே அடிதான்.. இதில கொஞ்ச இந்திய குஞ்சுகள் அகதியாக வந்தவை மேலதான் வெள்ளயளுக்கு கோவமாம் அதாவது இலீகல் இமிக்கிரன்.. தங்களை மாதிரி லீகலா வந்தவை மேல கோவம் இல்லயாம்.. வெள்ளைக்காரனுக்கு நீ பூரவும் அடிமை நாய்தான்.. ஆனாலும் அவன்கிட்ட இவன் தாழ்ந்த சாதி நான் உயர்ந்த சாதி நாந்தான் உன் சூவை நக்குவன் எண்டு சொன்ன குணம் இப்பயும் இருக்கும்தான..

அது நிக்க ஊரில் நல்ல நிலபுலம் விட்டு வீதியா இருக்கு.. எப்பயும் வரலாம்..

தாய் நாடு உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறது.. ஏற்கனவே தமிழர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு போகுது.. இப்படியாவது நிரம்பட்டும்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

முஸ்லீம்களால் ஒரு போதும் முஸ்லீம் அல்லாத சமூகங்களுடன் integrate ஆகி கூடி வாழமுடியாது.. அதை அவர்களின் மதப்புத்தகமும் அனுமதிக்காது.. இவர்கள் எல்லாம் எதற்கு இன்னொரு நாட்டிற்கு வருகிறார்கள் என்று புரியவில்லை அந்த நாட்டுடன் ஒன்றினைந்து வாழமுடியாது என்று நினைப்பவர்கள்.. மதத்தை எல்லாவற்றிற்கும் மேலாக முன்னுக்கு வைப்பவர்களால் சொந்த நாட்டில்கூட நிம்மதியாக வாழமுடியாது..

இருந்து பாருங்கள் 1950 இற்குள் பல மேற்கு நாடுகளின் விசாவிண்ணப்ப படிவத்தில் எந்த மதம் என்று கேட்கும் ஒரு காலம் வரும்.. அதற்கு காரணம் முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்களால் தமது நாட்டில் சமூகாமைதிக்கு குந்தகம் விளைகிறது என்று பாராளுமன்றில் சட்டம் நிறைவேற்றுவார்கள்.. அந்த விளிப்புக்கு மேற்கு நாடுகளை தள்ளுபவர்கள் அந்த நாடுகளின் தீவிர வலதுசாரிகள் அல்ல சாட்சாத் இந்த முஸ்லீம்கள்தான்.. 

இப்பவும் வீதி அடையாள  விளக்குகளின்சிவப்பு பச்சை பற்றி ஒன்றுமே தெரியாத முஸ்லிம் பெண்கள் இங்கிலாந்தில் நிறைய. நடைபாதைபச்சையில் இருந்து சிவப்புக்கு மாறினாலும் எந்த கவலையும் இன்றி வீதியை குறொஸ்பன்னும்கள் கூட்டமாக மொட்டாக்கு போட்டபடி .

இரண்டாவது தங்கள் ஆட்களின் கடையில் தான் சொப்பிங் பன்னும்கள் .

மிக முக்கியமானது லைப் கக் hack ஒவ்வொரு கவுன்சில்களிலும் உள்ள ஓட்டைகளை கண்டு பிடித்து தங்கள் பள்ளி வாசலுக்குள் மட்டுமே பகிர்ந்து கொண்டு அனுபவிப்பது.

இப்படியானதுகளை பார்த்த வெள்ளைகளுக்கு வெறி வருமா வாராதா ?

அவங்களில் பாய்வதை விட்டு எல்லா வெளிநாட்டு குடியேறிகள் மீதும் பாய்கிறார்கள் .

அதை விட கலையில் உள்ள பிரெஞ்சு போலிஸ் இங்கிலாந்துக்கு போகும் குடி ஏறிகளுக்கு செய்யும் அப்பட்டமான உதவி பற்றிய டிக் டாக் பதிவுகள் .

மேலும்  பிரான்சு கலையில் காட்டு பகுதிகளில் சிறிய கொட்டில்களில் ஒரு மழைக்கு தாங்காத நாலு தடியில் உள்ள கொட்டில்களில் தங்கி இருந்தவர்கள் இங்கிலாந்து வந்தவுடன் ஐந்து நட்ச்சத்திர கோட்டல்களில் தங்க வைக்கப்டுவதை எந்த பூர்வீக வெள்ளையாவது பார்த்து ரசிப்பானா?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு வகுப்பெடுக்கும் வெள்ளையர்கள், பிரிட்டனின் நிலவரம் பற்றியும் பேச வேண்டும்

Wimal-Weerawansa-300x202-1.png

இலங்கையில் நடக்கும் சிறு விடயங்களையும் பெரிதுப்படுத்தி  எமக்கு வகுப்பெடுக்கும்  வெள்ளையர்கள் பிரிட்டனின் நிறவெறி குறித்து கவனம் செலுத்த வேண்டும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் சுயாதீன எதிரணி எம்.பி.யுமான  விமல் வீரவன்ச  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்தே  இவ்வாறு தெரிவித்த   அவர் மேலும் பேசுகையில்,

கடந்த மாதம் 29 ஆம் திகதி பிரித்தானியாவில்  வடக்கு பிரதேசத்தில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.இதனால் இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளதுடன்,பலர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் ஒரு முஸ்லிம் இளைஞர். இதில் பலியான சிறுமிகள் ருவாண்டா நாட்டில் இருந்து வருகை தந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் என்று ஒருசில ஊடகங்கள் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தின் பின்னர் பிரிட்டனின்  புறநகர் பகுதிகளில் திட்டமிட்ட வகையில் நிறவெறி தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.தெற்கு பகுதியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைக்க முயற்சித்துள்ளார்கள்.பாதுகாப்பு தரப்பினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

பிரிட்டன் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைவாகவே எமது பாராளுமன்றம் செயற்படுகிறது.இலங்கையின் விவகாரங்கள் பற்றி பிரிட்டன்  பாராளுமன்றத்தில் அதிகளவில் பேசப்படும்,தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்.எனவே இலங்கைக்கு ஜனநாயகம் பற்றி பேசும் பிரிட்டனில்  2011 ஆம் ஆண்டும் நிறவெறி செயற்பாடுகள் மற்றும் போராட்டங்கள் இடம்பெற்றன.இலங்கையில் நடக்கும்  சிறு விடயங்களையும் பெரிதுப்படுத்தி  எமக்கு வகுப்பெடுக்கும்  வெள்ளையர்கள் பிரிட்டனின்  நிலைவரம் குறித்தும்  கவனம்  செலுத்த வேண்டும் என்றார். 

https://www.jaffnamuslim.com/2024/08/blog-post_921.html

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆக மொத்தத்தில இமிக்கிரேசன் பாட்டி எண்டாலே அடிதான்.. இதில கொஞ்ச இந்திய குஞ்சுகள் அகதியாக வந்தவை மேலதான் வெள்ளயளுக்கு கோவமாம் அதாவது இலீகல் இமிக்கிரன்.. தங்களை மாதிரி லீகலா வந்தவை மேல கோவம் இல்லயாம்.. வெள்ளைக்காரனுக்கு நீ பூரவும் அடிமை நாய்தான்.. ஆனாலும் அவன்கிட்ட இவன் தாழ்ந்த சாதி நான் உயர்ந்த சாதி நாந்தான் உன் சூவை நக்குவன் எண்டு சொன்ன குணம் இப்பயும் இருக்கும்தான..

அது நிக்க ஊரில் நல்ல நிலபுலம் விட்டு வீதியா இருக்கு.. எப்பயும் வரலாம்..

தாய் நாடு உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறது.. ஏற்கனவே தமிழர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு போகுது.. இப்படியாவது நிரம்பட்டும்..

முதலில் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் வசதி வாய்ப்புகளுக்காக இங்கே ஓடி வரவில்லை. 

அடித்து துரத்தப்பட்டோம். இந்த மக்கள் எங்களுக்கு ஆதரவு தந்து அரவணைத்து உயிர் தந்தார்கள்.

இப்பொழுதும் இங்கே சட்டம் மற்றும் நீதி எங்களுக்கும் அவர்களுக்கும் ஒன்று தான்.

இதே சட்டம் நீதி அரசு என்னை அங்கே பாதுகாப்பதற்கு பதிலாக ஓடு இல்லையென்றால் கொல்லப்படுவாய் என்று கொலைகாரர்களுக்கு ஆதரவும் உற்சாகமும் கொடுத்தது. கட்டிய சறத்துடன் நிர்க்கதியாக நின்ற எனக்கான நீதி மற்றும் இன்சூரன்ஸ் கூட இதுவரை ஒரு சதமேனும் தரப்படவில்லை.

இப்பொழுது இவை எனக்கு தரப்படும் என்று உங்களால் எனக்கு சொல்லவாவது முடியுமா???

ஆனால் எனக்கு இங்கே கிடைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

வலது சாரிகள் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்று உங்களால் உறுதியாக சொல்லமுடியுமா..?போனவாட்டி உங்கட பிரான்சில மயிரிழையில வலதுசாரிகள் ஆட்சிக்கு வராமல் தப்பினது மறந்து போச்சோ..? அதுவும் சூழ்ச்சியால்தான் அவர்கள் வராமல் போயிருக்கிறார்கள்.. போட்டியிட்ட அத்தனை கட்சிகளையும் விட அதிகூடிய வாக்குப்பெற்றவர்கள் அவர்கள்.. 2040 இல் அவர்கள் வரமாட்டார்கள் என்று எப்படி உங்களால் சொல்லமுடியும்..? அவர்களின் கொள்கைகள் என்ன..?

தனிநபர் ரேசிசத்தை டீல் பண்ணலாம் ஆனால் அரசாக மாறும்போது அதை டீல் பண்ணமுடியாது.. இலங்கையிலும் அதுதான்.. தனி சிங்களவர்களை டீல் பண்ணலாம் ஆனால் இனவெறுப்பு அரசுமட்டத்தில் வரும்போது அதை தனிநபர்களாக டீல் பண்ணமுடியாது..

வலதுசாரிகள் வந்தால் அதுதான் நடக்கும்.. சட்டம் நீதி எல்லாம் புதிதாக எழுதப்படும்.. இப்பொழுது அனைவருக்கும் என்று இருப்பது அவர்களுக்கு என்று மாறும்.. அதுதான் அவர்கள் தேர்தல் கொள்கையே..

ஏன் இவ்வளவு அட்டூழியம் வெளிநாட்டவர்களுக்கு எதிராக நடந்தும் யூகேயில் கன்சர்வேட்டியினர் வாயே திறக்கவில்லை..? ஏனெனில் இப்பொழுது இனவெறுப்பு பெரும்பான்மை மக்கள் இடம் வரும்பொழுது நாளை ஆட்சியை தீர்மானிக்கபோவது அந்த பெரும்பான்மை மக்கள்தான் அதனால் அவர்கள் ஓட்டு வேனும் எனில் கட்சிகள் தம் சுருதியை மாற்றத்தொடங்கிவிடுவார்கள்..

மேற்கு நாடுகள் பற்றி அதீத கற்பனையில் வாழ்ந்த காலம்கள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன.. நீங்கள் இன்னமும் அதற்குள் இருந்தால் நீங்கள் உலக ஓட்டத்திற்கு ஏற்ப உங்களை அப்டேற்பண்ணவில்லை என்று பொருள்..

நீங்கள் வந்த போது இருந்த மேற்கத்தைய மக்களின் தராளவாதமும் ஜனநாயக மனித நேயப்பண்புகளும் வெளிநாட்டவர்கள் என்று வரும்போது மைனசாகிவிடுகிறது இப்போ..

அதை மாற்றிய பெருமை வந்தேறுகுடிகளான நம்மையே சாரும்.. அதிலும் முஸ்லீம்களையே பெரும்பகுதி சாரும்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதை மாற்றிய பெருமை வந்தேறுகுடிகளான நம்மையே சாரும்.. அதிலும் முஸ்லீம்களையே பெரும்பகுதி சாரும்..

அப்படியானால் அப்டேட்ஸ் செய்து வாழும் நீங்கள் சொல்லுங்கள். அவர்கள் இல்லாத நாடு ஒன்றை சொல்லுங்கள் 

(உங்கள் கருத்துப்படியே பிரச்சினை இந்த நாட்டுக்காரர்கள் அல்ல.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, பெருமாள் said:

இப்பவும் வீதி அடையாள  விளக்குகளின்சிவப்பு பச்சை பற்றி ஒன்றுமே தெரியாத முஸ்லிம் பெண்கள் இங்கிலாந்தில் நிறைய. நடைபாதைபச்சையில் இருந்து சிவப்புக்கு மாறினாலும் எந்த கவலையும் இன்றி வீதியை குறொஸ்பன்னும்கள் கூட்டமாக மொட்டாக்கு போட்டபடி .

இரண்டாவது தங்கள் ஆட்களின் கடையில் தான் சொப்பிங் பன்னும்கள் .

மிக முக்கியமானது லைப் கக் hack ஒவ்வொரு கவுன்சில்களிலும் உள்ள ஓட்டைகளை கண்டு பிடித்து தங்கள் பள்ளி வாசலுக்குள் மட்டுமே பகிர்ந்து கொண்டு அனுபவிப்பது.

இப்படியானதுகளை பார்த்த வெள்ளைகளுக்கு வெறி வருமா வாராதா ?

அவங்களில் பாய்வதை விட்டு எல்லா வெளிநாட்டு குடியேறிகள் மீதும் பாய்கிறார்கள் .

அதை விட கலையில் உள்ள பிரெஞ்சு போலிஸ் இங்கிலாந்துக்கு போகும் குடி ஏறிகளுக்கு செய்யும் அப்பட்டமான உதவி பற்றிய டிக் டாக் பதிவுகள் .

மேலும்  பிரான்சு கலையில் காட்டு பகுதிகளில் சிறிய கொட்டில்களில் ஒரு மழைக்கு தாங்காத நாலு தடியில் உள்ள கொட்டில்களில் தங்கி இருந்தவர்கள் இங்கிலாந்து வந்தவுடன் ஐந்து நட்ச்சத்திர கோட்டல்களில் தங்க வைக்கப்டுவதை எந்த பூர்வீக வெள்ளையாவது பார்த்து ரசிப்பானா?

தாங்கள் புகுந்த நாடுகளில் இல்லாத பொல்லாத நாச வேலைகளை செய்துகொண்டிருப்பார்கள். ஆனால் கதைக்க வெளிக்கிட்டால் தங்களை ஏதோ புனிதர்கள் போல் காட்டிக்கொள்வார்கள்.

Bild

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அது நிக்க ஊரில் நல்ல நிலபுலம் விட்டு வீதியா இருக்கு.. எப்பயும் வரலாம்..

தாய் நாடு உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறது.. ஏற்கனவே தமிழர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு போகுது.. இப்படியாவது நிரம்பட்டும்..

உங்கையிருக்கிற பெடி பெட்டையள் இப்பவும் கனடா,அவுஸ்ரேலியா,லண்டன் எண்டு ஏஜன்சிக்கு காசு கட்டி போய்க்கொண்டிருக்கினமெல்லோ?
அதைப்பற்றியும் நச்செண்டு நாலு வசனம் சொல்லுங்கோ ஓணாண்டியார்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.