Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kushboo.jpg?resize=750,375

பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு,  தான் வகித்து வந்த தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் குஷ்புவின் இராஜினாமாக்  கடிதத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு காலகட்டத்தில் குஷ்பு, தி.மு.கவில் இணைந்து பணியாற்றினார். இதனையடுத்து அக்கட்சியில் இருந்து விலகி 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இருப்பினும் குஷ்புவிற்கு பா.ஜ.கவின் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து குஷ்பு சிக்கி வந்தார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1395828

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!

🤣 😄 😝

4 hours ago, தமிழ் சிறி said:

கடந்த 2010ஆம் ஆண்டு காலகட்டத்தில் குஷ்பு, தி.மு.கவில் இணைந்து பணியாற்றினார்.

4 hours ago, தமிழ் சிறி said:

இதனையடுத்து அக்கட்சியில் இருந்து விலகி 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

4 hours ago, தமிழ் சிறி said:

அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

இவர் சினிமாவில் இருக்கும் போது எதை செய்தாரோ அதையே அரசியலிலும் சிறப்பாக செய்கின்றார். 😃 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

🤣 😄 😝

இவர் சினிமாவில் இருக்கும் போது எதை செய்தாரோ அதையே அரசியலிலும் சிறப்பாக செய்கின்றார். 😃 

"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்று சும்மாவா சொன்னார்கள். 🤣
இனி இவ போறதுக்கு... கடசிகளே இல்லை என நினைக்கின்றேன்.
எல்லா இடமும் ஒரு ரவுண்டு அடித்து விட்டு, வந்து விட்டார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்று சும்மாவா சொன்னார்கள். 🤣
இனி இவ போறதுக்கு... கடசிகளே இல்லை என நினைக்கின்றேன்.
எல்லா இடமும் ஒரு ரவுண்டு அடித்து விட்டு, வந்து விட்டார். 😂

நானும் ஆவலாக ஓடி வந்தேன். சுந்தர்ஜி உடனான பதவியை தான் துறந்து விட்டார் என்று 🤪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

நானும் ஆவலாக ஓடி வந்தேன். சுந்தர்ஜி உடனான பதவியை தான் துறந்து விட்டார் என்று 🤪

animiertes-liebe-bild-0012.gif நீங்கள், இன்னும்... குஷ்பூ பிரியரா.  animiertes-liebe-bild-0022.gif❤️😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

animiertes-liebe-bild-0012.gif நீங்கள், இன்னும்... குஷ்பூ பிரியரா.  animiertes-liebe-bild-0022.gif❤️😂

என்னைப் போன்று அவரும் நல்ல அனுபவசாலி. 😜

அது வேற லெவல் 🤩

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

என்னைப் போன்று அவரும் நல்ல அனுபவசாலி. 😜

அது வேற லெவல் 🤩

"அது... வேறை லெவல்" என்னும் போதே,
உங்கள் இருவரின் அனுபவமும்.. கணக்கில் அடங்காது என்பதை புரிந்து கொண்டேன். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

"அது... வேறை லெவல்" என்னும் போதே,
உங்கள் இருவரின் அனுபவமும்.. கணக்கில் அடங்காது என்பதை புரிந்து கொண்டேன். 😂 🤣

சிறு மாற்றம் சிறி (சபை நாகரிகம் சார்ந்து மட்டும்🤣 😷)

நான் ஒன்றில் அனுபவம் 

அவர்..... அதை நான் சொல்ல மாட்டேன் 🤪

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

kushboo.jpg?resize=750,375

பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு,  தான் வகித்து வந்த தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் குஷ்புவின் இராஜினாமாக்  கடிதத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு காலகட்டத்தில் குஷ்பு, தி.மு.கவில் இணைந்து பணியாற்றினார். இதனையடுத்து அக்கட்சியில் இருந்து விலகி 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இருப்பினும் குஷ்புவிற்கு பா.ஜ.கவின் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து குஷ்பு சிக்கி வந்தார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1395828

இவர் கடந்து வந்த பாதைகளைப் பார்க்கும்போது இனிவரும் காலங்களில் செந்தமிழன் சீமான் அண்ணாவின் கட்சியில் சேரும் வாய்ப்பு உள்ளதுபோல தெரிகின்றது!

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

இவர் கடந்து வந்த பாதைகளைப் பார்க்கும்போது இனிவரும் காலங்களில் செந்தமிழன் சீமான் அண்ணாவின் கட்சியில் சேரும் வாய்ப்பு உள்ளதுபோல தெரிகின்றது!

விடுதலை சிறுத்தைகளில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள்தான் அதிகம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, விசுகு said:

நானும் ஆவலாக ஓடி வந்தேன். சுந்தர்ஜி உடனான பதவியை தான் துறந்து விட்டார் என்று 🤪

விசுகர்!திருமண வாழ்க்கையிலும் ஒப்பந்தங்கள் செய்து பிள்ளைகள் பெற்று  வாழ்கின்றார்கள்.

ஒப்பந்தங்கள் பலவகைப்படும்.😎

அந்த வகையில் ஜியும் ஏதாவது ஒப்பந்தங்களுக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கலாம்.யாரறிவார்? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

🤣 😄 😝

இவர் சினிமாவில் இருக்கும் போது எதை செய்தாரோ அதையே அரசியலிலும் சிறப்பாக செய்கின்றார். 😃 

இவாக்கும் அர‌சிய‌லுக்கும் ச‌ரி ப‌ட்டு வ‌ராது😁.......................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாலி said:

இவர் கடந்து வந்த பாதைகளைப் பார்க்கும்போது இனிவரும் காலங்களில் செந்தமிழன் சீமான் அண்ணாவின் கட்சியில் சேரும் வாய்ப்பு உள்ளதுபோல தெரிகின்றது!

இவரை பற்றி எனக்கு இப்போ அதிகம் தெரியாது சீமான் கட்சியில் சேரும் போது யாழ்களம் வந்து வீரதமிழிச்சியை பற்றி படித்து அறிந்து கொள்வேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, வீரப் பையன்26 said:

இவாக்கும் அர‌சிய‌லுக்கும் ச‌ரி ப‌ட்டு வ‌ராது😁.......................

இவவுக்கு சரியான அரசியல் மேடை  என்றால் திமுக அரசியல் மேடைதான். ஆனால் அங்கை இவருக்கு போட்டியாக ஆக்கள் எக்கச்சக்கம். 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இவவுக்கு சரியான அரசியல் மேடை  என்றால் திமுக அரசியல் மேடைதான். ஆனால் அங்கை இவருக்கு போட்டியாக ஆக்கள் எக்கச்சக்கம். 😎

அர‌சிய‌ல் பிரித‌ல் காணாது இவாக்கு..............இவான்ட‌ அர‌சிய‌ல் உள‌ற‌ல்க‌ள் இந்த‌ பாராள‌ மன்ற‌ தேர்த‌லில் பார்க்க‌ முடிந்த‌து பீஜேப்பியில் இவாவை யாரும் பெரிசா க‌ண்டு கொள்வ‌து கிடையாது

காங்கிர‌ஸ்சில் சேர்ந்த‌ போது சுந்த‌ர் சீ சொன்னார் குஷ்புவுக்கு சிறு வ‌ய‌தில் இருந்து காங்கிர‌ஸ் பிடிக்கும் என்று அது தான் காங்கிர‌ஸ்சில் சேர்ந்து இருக்கிறா என்று........................காங்கிர‌ஸ் தொட‌ர் தோல்வி அடைய‌ துட்டு பார்க்க‌ முடியாது தானே அது தான் பீஜேப்பியில் சேர்ந்தா😁......................... 

  • கருத்துக்கள உறவுகள்

`இனி தீவிர `அரசியல்’ தான்..!’ - குஷ்பு-வின் திடீர் ராஜினாமா பின்னணி?!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியினை குஷ்பு ராஜினாமா செய்திருக்கிறார். இது தொடர்பான டாப்பிக் தான் தற்போது அரசியல் டாக் ஆக உள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், "திரைத்துறையில் பிரபல நடிகையாக இருப்பவர் குஷ்பு. இவர் கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க-வில் இணைந்தார். பின்னர் தலைமையுடன் ஏற்பட்ட உரசலின் காரணமாக தி.மு.க -விலிருந்து விலகினார். பிறகு 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சுமார் 6 ஆண்டுகள் அந்த கட்சியில் பயணித்தார். அதன் பின்னர் பாஜக-வில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

கலைஞர் கருணாநிதி
 
கலைஞர் கருணாநிதி
 
ஆனால் தேர்தல் முடிவில் தோல்வியைச் சந்தித்தார். பின்னாளில் அவருக்குத் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்த சூழலில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என குஷ்பு எதிர்பார்த்திருந்தார் என சொல்லப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு தமிழிசை உள்ளிட்ட வேட்பாளர்களுக்குப் பிரசாரம் செய்தார். முன்னதாக உடல்நலக்குறைவின் காரணமாகப் பாதியிலேயே பிரசார களத்திலிருந்து ஒதுக்கினார். இந்தச்சூழலில்தான் தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மேலும் தான் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக குஷ்பு அறிவித்துள்ளார்" என்றனர்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள குஷ்பு, "அரசியலில் 14 ஆண்டுக்கால சேவைக்குப் பிறகு, இன்று ஒரு இதயப்பூர்வமான மாற்றத்தை உணர்கிறேன். உயர்ந்த கட்சியாக விளங்கும் பா.ஜ.க-வில் முழுமையாகச் செயல்படுவதற்காகத் தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து என் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றிகள். என்னுடைய விசுவாசமும், நம்பிக்கையும் எப்போதும் பா.ஜ.க உடன்தான் இருக்கும். தீவிர அரசியலில் ஈடுபட முடியாதபடி தேசிய மகளிர் ஆணையத்தில் அதற்கென சில கட்டுப்பாடுகள் இருந்தன. அதனால்தான் முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்துடன், நான் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டேன்.

குஷ்பு
 
குஷ்பு
 
இப்போது நான் சுதந்திரமாக, முழுமனதுடன் சேவையாற்ற முடியும். சென்னை கமலாலயத்தில் நடக்க உள்ள கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். தீவிர அரசியலிலிருந்து என்னுடைய இந்த இடைவெளி, பிரதமரின் தொலைநோக்கு திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான எனது தீர்மானத்தை வலுப்படுத்தியுள்ளது. வதந்தி பரப்புபவர்கள் அமைதியாக இருக்கலாம். என்னுடைய இந்த மறுவருகை நேர்மையானது. கட்சி மீதும் மக்கள் மீதும் நான் கொண்ட அசைக்க முடியாத அன்பின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு" என்றார்.

அரசு தரப்பில் இதுகுறித்து வெளியிடப்பட்டு இருக்கும் தகவலில், 'கடந்த ஜூன் 28-ம் தேதியே குஷ்பு தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதனை ஜூலை 30ம் தேதி துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்' எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

தீவிர அரசியலில் ஈடுபடுவதற்குத்தான் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக குஷ்பு சொன்னாலும், வேறு சில காரணங்களும் இருக்கின்றன என்கிறார்கள் கமலாலய சீனியர்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் நிர்வாகிகள் சிலர், "தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பிறகு அதிக முக்கியத்துவம் கிடைக்காத நிர்வாகிகளில், குஷ்புவும் ஒருவர். குறிப்பாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். அதற்கு டெல்லியிலும் முயற்சி செய்து வந்தார். ஆனால் கிடைக்கவில்லை. இந்த அதிருப்தியிலிருந்தவரை கட்சித் தலைமை தீவிர பிரசாரத்தில் ஈடுபடும்படி அறிவுறுத்தியது.

குஷ்பூ
 
குஷ்பூ
 
அதன்படி ஒருசில பிரசாரங்களில் மட்டும் கலந்து கொண்டார். பிறகு உடல்நிலையைக் காரணம் காட்டி பிரச்சாரக் களத்திலிருந்து வெளியேறினார். அப்போது உடல்நலன் பாதிக்கப்பட்டு இருந்தது உண்மைதான். எனினும் சீட் கிடைக்காத அதிருப்திதான் அவரை மிகவும் சோர்வடையச் செய்திருந்தது. மேலும் முன்னதாக வழங்கப்பட்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலும் அவருக்குப் பெரிதாக விருப்பம் இல்லை. இதற்குத் தன்னை தீவிர அரசியலில் ஈடுபடாமல் தடுப்பதற்காக எதிர் தரப்பினர் செய்த வேலை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். மேலும் இதனால் தீவிர அரசியலிலும் ஈடுபட முடியவில்லை என குஷ்பு அப்செட்டில் இருந்தார். மறுபக்கம் கட்சி நிகழ்ச்சிகளுக்கும் அண்ணாமலை தரப்பு அழைப்பதில்லை என்ற வருத்தமும் அவருக்கு இருந்தது.

இதையடுத்துதான் தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்தார். இனி அவர் சொன்னது போலவே தீவிர அரசியலில் ஈடுபடுவார். இந்தச்சூழலில்தான் மேல் படிப்புக்காக அண்ணாமலை வெளிநாடு செல்ல இருக்கிறார். இந்த காலகட்டத்தில் செயல் தலைவரை நியமிக்க டெல்லி ஆலோசித்து வருவதாகப் பேச்சு அடிபடுகிறது. அதற்குப் பலரும் காய் நகர்த்தி வருகிறார்கள். தற்போது அந்த ரேஸில் குஷ்புவும் இணைந்திருக்கிறார் என்கிறார்கள். ஆனால் செயல் தலைவர் நியமிப்பது என்பது வெறும் ஆலோசனை மட்டத்தில் தான் இருக்கிறது.

அண்ணாமலை
 
அண்ணாமலை
 
இன்னும் உறுதியாகவில்லை. வெளிநாடு சென்றாலும் அண்ணாமலையே தான் தலைவராக நீடிப்பார் என்ற தகவலும் சொல்லப்ப்படுகிறது. இணையதளம் வாயிலாக அவர் கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அதேநேரத்தில் அண்ணாமலைக்கு எதிராக குஷ்பு அதிரடி அரசியல் செய்வதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஏற்கெனெவே அதிருப்தியில் இருக்கும் தலைவர்கள் அவருடன் கைகோர்க்கவும் வாய்ப்பு உள்ளது. தமிழிசை போன்று குஷ்புவும் நேரடி அரசியலை விரும்புவதும் மகளிர் ஆணைய பதவி ராஜினாமாவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது" என்கின்றனர்.

https://www.vikatan.com/government-and-politics/is-khushboo-aiming-for-an-important-post-in-bjp?pfrom=home-main-row

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குஸ்பு,  செய்த சேவைக்கு... அவரை ஒரு மாநிலத்தின் ஆளுநராகவோ,
அல்லது... வெளி நாட்டு தூதுவராகவோ, பா.ஜ. க. அரசு நியமிக்க வேண்டும்.
அண்ணாமலை சார்...  இந்த விஷயத்தை, மோடி ஜீ  காதில் போட்டு விட வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

குஸ்பு,  செய்த சேவைக்கு... அவரை ஒரு மாநிலத்தின் ஆளுநராகவோ,
அல்லது... வெளி நாட்டு தூதுவராகவோ, பா.ஜ. க. அரசு நியமிக்க வேண்டும்.
அண்ணாமலை சார்...  இந்த விஷயத்தை, மோடி ஜீ  காதில் போட்டு விட வேண்டும்.

இந்திய தூதுவராக இலங்கைக்கு அனுப்ப வேண்டும்.

இதற்கு புலனாய்வுப் பிரிவில் பணியாற்றியிருக்க வேண்டும்.

3 hours ago, தமிழ் சிறி said:

குஸ்பு,  செய்த சேவைக்கு... அவரை ஒரு மாநிலத்தின் ஆளுநராகவோ,
அல்லது... வெளி நாட்டு தூதுவராகவோ, பா.ஜ. க. அரசு நியமிக்க வேண்டும்.
அண்ணாமலை சார்...  இந்த விஷயத்தை, மோடி ஜீ  காதில் போட்டு விட வேண்டும்.

கனடாவுக்கு தூதுவராக போட்டால் கொஞ்சம் பிரயோசனமாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்திய தூதுவராக இலங்கைக்கு அனுப்ப வேண்டும்.

இதற்கு புலனாய்வுப் பிரிவில் பணியாற்றியிருக்க வேண்டும்.

சும்மா சொல்லாதீங்க, பாஸ்.  😂
குஸ்பு... பார்க்காத புலனாய்வு பிரிவா.... 🤣

47 minutes ago, நிழலி said:

கனடாவுக்கு தூதுவராக போட்டால் கொஞ்சம் பிரயோசனமாக இருக்கும்.

நீங்கள்... வர இருக்கும்  இந்தியாவின், கனடா  தூதுவருக்கே... கோயில் கட்டி, 
கும்பாபிசேகம் செய்யிற பிளான் போலை இருக்கு.   😂

குஸ்பு.. அங்கை வரக் கூடிய சாத்தியக் கூறுகள், அதிகமாக இருக்கின்ற படியால்...
இப்பவே... கோவில் கட்ட, காணி வாங்கிறதுக்கு... காசை  சேர்க்க ஆரம்பியுங்கோ... 🤣

குஸ்பு... கனடாவுக்கு வந்தால், பழக்க தோசத்திலை... 
"இடுப்பை கிள்ளுற" வேலை எல்லாம் செய்யக் கூடாது. animiertes-gefuehl-smilies-bild-0029.gif
பிறகு.. தூதுவரின் இடுப்பை கிள்ளினது என்று, கொட்டை எழுத்தில் செய்தி வந்திடும். animiertes-gefuehl-smilies-bild-0048.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, நிழலி said:

கனடாவுக்கு தூதுவராக போட்டால் கொஞ்சம் பிரயோசனமாக இருக்கும்.

குஸ்பு உங்களுக்கு அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

இன்னும் உறுதியாகவில்லை. வெளிநாடு சென்றாலும் அண்ணாமலையே தான் தலைவராக நீடிப்பார் என்ற தகவலும் சொல்லப்ப்படுகிறது. இணையதளம் வாயிலாக அவர் கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அதேநேரத்தில் அண்ணாமலைக்கு எதிராக குஷ்பு அதிரடி அரசியல் செய்வதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஏற்கெனெவே அதிருப்தியில் இருக்கும் தலைவர்கள் அவருடன் கைகோர்க்கவும் வாய்ப்பு உள்ளது. தமிழிசை போன்று குஷ்புவும் நேரடி அரசியலை விரும்புவதும் மகளிர் ஆணைய பதவி ராஜினாமாவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது" என்கின்றனர்.

https://www.vikatan.com/government-and-politics/is-khushboo-aiming-for-an-important-post-in-bjp?pfrom=home-main-row

👍...........

நேற்று கட்சிக்குள் வந்த ராதிகா & சரத்குமார் கடகடவென்று முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள். தன்னை எல்லோரும் மறந்தே போய் விட்டனர் என்று தான் குஷ்பு மீண்டும் கமலாயம் வந்திருக்கின்றாராம்.

தேசிய மகளிர் ஆணையம் வேற தினமும் அடி வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு அரச அமைப்பு. கடைசியாக இந்த வாரம் மேற்கு வங்க பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் ஆணையம் அடி வாங்கிக் கொண்டிருக்கின்றது. மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் குஷ்பு வாயையே திறக்கவில்லை, ஏனென்றால் அந்தக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக கட்சியின் பிரமுகர். இது ஏன் இந்த தொல்லை என்று தான், இந்தப் பதவியால் வசதி, வாய்ப்பு, பெயர், புகழ் என்று எதுவும் அவருக்கு கிடைக்கவும் இல்லை, தமிழக மக்களுக்கு சேவை செய்ய என்று மீண்டும் மாநிலம் நோக்கி வந்து விட்டார் குஷ்பு.

தமிழிசை, வானதி, ராதிகா, குஷ்பு............. அத்துடன் சரத்குமார் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இந்த வாரத்திலிருந்து ஆரம்பித்துவிட்டது.................   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

கனடாவுக்கு தூதுவராக போட்டால் கொஞ்சம் பிரயோசனமாக இருக்கும்.

இவர் வரமுதல் நான் எழுதியது இதற்காகத் தான் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரசோதரன் said:

நேற்று கட்சிக்குள் வந்த ராதிகா & சரத்குமார் கடகடவென்று முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள். தன்னை எல்லோரும் மறந்தே போய் விட்டனர் என்று தான் குஷ்பு மீண்டும் கமலாயம் வந்திருக்கின்றாராம்.

பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு என்ற செய்தியை வைத்து பாஜகவை விட்டு வெளியேறி இன்ன இன்ன கட்சிகளில் சேரபோகின்றார் என்று செய்தி வெளியிட்டார்களே யாழ்கள கருத்தாளர்கள்🙆‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு என்ற செய்தியை வைத்து பாஜகவை விட்டு வெளியேறி இன்ன இன்ன கட்சிகளில் சேரபோகின்றார் என்று செய்தி வெளியிட்டார்களே யாழ்கள கருத்தாளர்கள்🙆‍♂️

அவர் இன்னமும் 'மார்க்கெட்' உள்ளவராகவே இருக்கின்றார் என்பதே அதன் காரணம்...........🤣

பெயரைக் கண்டவுடனேயே அதிர்ந்து போய் விட்டார்கள்.........😜.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.