Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mr-Wiraj-Mendis.jpg

யேர்மன் பிறேமனில் உள்ள அனைத்துலக மனித உரிமைகள் சங்கத்தின் தலைவரும் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துப் பல்வேறு தளங்களிலே உரைத்தவரும், மிக அரிதாகச் சிங்கள இனத்திலே இருந்து தமிழீழ விடுதலைக்காகக் குரல் கொடுத்தவருமான திரு.விறாஜ் மென்டிஸ் அவர்கள் இயற்கையெய்திவிட்டார். அவருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்.       

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி
 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் . ......!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்+

ஆழ்ந்த இரங்கல்கள். எம் இனத்தின் மீதான உங்கள் பற்றை என்றுள நெஞ்சில் நிறுத்துவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
456048800_516896267677546_77241952275719
 
கண்ணீர் அஞ்சலிகள்
பெயர் விராஜ் மெண்டிஸ்
சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்
அனைத்துலக மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சாட்சியங்கள் பலவற்றை வெளிக்கொணர்ந்தவர்
நடந்தது இனப்படுகொலை என தீர்ப்பு வழங்கிய பெர்லின் தீர்ப்பாயத்தின் முக்கிய செயற்பாட்டாளர்.
தமிழத்தேசிய ஆதரவாளரான இவரின் மறைவு பேரிழப்பாகும்.
தமிழ் மக்கள் சார்பாக கண்ணீர் அஞ்சலிகள்.
  • கருத்துக்கள உறவுகள்+

'சம தரப்பு அங்கீகாரத்துடன் பேச்சு மேசைக்கு வந்த தவிபு கள் மீது  மேற்குலகம் விதித்த  தடைதான் தமிழின அழிப்புக்கு வழி கோலியது. எனவே முதல் குற்றவாளிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் தான்'  என்பதைத் தொடர்ந்து பதிவு செய்தவர் விராஜ் மென்டிஸ்.

 அத்தோடு நிற்காமல் அதை ஒரு வழக்காகப் பதிவு செய்து தவிபு கள் மீதான தடையை நீக்குவதுதான் தமிழின அழிப்புக்கான நீதியின் முதற்படி என்பதில் எந்த சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடியவர் விராஜ்.

2009 இற்குப் பிறகு எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் பு லி நீக்க அரசியல் ஒரு பக்கம் முன்னெடுக்கப்பட பு லி களை ஆதரித்தவர்கள் கூட தோல்வி உளவியலின் பிரகாரம் பு லி க ள் இனி ஒரு முதன்மைச் சக்தி இல்லை என்ற நிலைப்பாட்டுடன் வேறு ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்க அதை மறுதலித்து என்றுமே தமிழீழ விடுதலையின் மைய அச்சு பு லி கள் தான் - குறிப்பாக தலைவர் தான் என்பதில் தெளிவாக இருந்தவர் விராஜ்.

நந்திக்கடல் கோட்பாடுகளை நாம் உருவாக்கும் போது விராஜ் எமது வட்டத்திற்குள் இருக்கவில்லை.  ஆனால் பின் நாட்களில் அவரது பார்வையும், கருத்துக்களும் எமது தத்துவத்துடன் வந்து ஒரு புள்ளியில் சந்தித்தது. 

ஒரு கட்டத்தில் எமது கோட்பாடுகளை சரி செய்யவும், விரிவாக்கவும் செய்யவும், அதை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லவும் எமக்கு ஒரு ஆசானாகவும் - பாலமாகவும் இருந்தார் விராஜ்.

தலைவர்  பிரபாகரன் இறுதிவரை சரணைடையாது, மண்டியிடாது நின்று போரிட்ட  நந்திக்கடலும் அது சொல்லிய அந்தச் செய்தியும்தான் தமிழர்களின் ஒட்டுமொத்த இறையாண்மையின் அடையாளமென்ற நந்திக்கடல் கோட்பாடுகளின் மையச் சரடை அவர் வாய்ப்புக் கிடைக்கும் இடமெங்கும் ஓயாது பதிவு செய்தார் .

அவர் குறித்துப் பேச எழுத நிறையவே உள்ளது.  நிச்சயம் பேச வேண்டும் - எழுத வேண்டும். 2009 இற்குப் பிறகு தடம் புரண்டு போன தமிழர்கள் பலர் வெட்கித் தலை குனியும் வரலாறு அது. 

 ஆனால் அவரது இழப்பிலிருந்து மீள முடியாதுள்ள எம்மால் தொடர்ந்து எழுதமுடியவில்லை. 

வரும் காலத்தில் அதை  முழுமையாகப் பதிவு செய்து   வரலாற்றில் ஆவணப்படுத்துவோம்.

புகழ் வணக்கம் ஆசான். 🙏

❤️ நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்கச் சிந்தனைப் பள்ளி.

❤️ பிரபாகரன் சிந்தனைப்பள்ளி.

-பரணி கிருஷ்ண ரஜனி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமரர். திரு. விராஜ் மென்டிஸ் அவர்களுக்கு இதயவணக்கம் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- யேர்மனி

Logo-TCC-Germany.jpg

18.8.2024

அமரர். திரு. விராஜ் மென்டிஸ்
பிறப்பிடம்: சிறிலங்கா (Srilanka)
வதிவிடம்:பிறீமன், யேர்மனி (Bremen, Germany)

Bild1.jpgதமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் நியாயக் கோட்பாடுகளையும், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களது போரியல்ச் சித்தாந்தங்களையும், புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களது வாழ்வுரிமைகளையும், குறிப்பாக புலம்பெயர்ந்த மக்களது அறவழிப் போராட்டக் களங்களையும் மானசீகமாகப் புரிந்து, உணர்வுபூர்வமாக ஏற்று, மொழிவழியிலே ஓர் சிங்கள இனத்தவராகத் தனது பிறப்புரிமைக்கு மட்டும் முதன்மையளித்து, அவ்வினத்தின் அதிகார வர்க்கங்களால் நசுக்கப்பட்டு, நாடற்றவராக்கப்பட்டுத் துன்பியல் வாழ்விலே துவண்டு, தான் பெற்றுக்கொண்ட கசப்பான பட்டறிவிலிருந்து நோக்கிய தெளிந்த பார்வைக்கூடாக, தமிழ்த்தேசிய இனம்மீதும் சிறிலங்காப் பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளையும், முரண்பாட்டு எடுகோள்களையும் எதிர்த்து, தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற உயர்ந்த பண்புரிமைகளைத் தர்க்க ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும், ஆய்வு ரீதியாகவும் புரிந்து, அசைக்க முடியாத அந்த உண்மைகளின் பக்கம் நின்றபடி, தன்னாலியன்ற அனைத்து வழிமுறைகளிலும் இதயசுத்தியோடு குரல்கொடுத்து வாழ்ந்த ஓர் அற்புதமான உறவான மரியாதைக்குரிய திரு. விராஜ் மென்டிஸ் அவர்கள், இயற்கையின் அணைப்பிலே விழிமூடிய செய்தியறிந்து துயருற்றோம்.

தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் வரலாற்றுக் காலங்களில், தமிழினம் தமக்கான விடுதலையை யாரிடமிருந்து கோரியதோ அவ்வினத்திலிருந்தே எமது உரிமைகளை புரிந்து, மதித்துக் குரல்கொடுத்து வாழ்ந்த மிகச் சொற்ப சிங்களக் கல்வியாளர்களிலே விராஜ் மென்டிஸ் அவர்கள் முன்மாதிரியானவராக, தமிழர்களோடு ஒன்றித்தவராக, புலம்பெயர்ந்த தமிழர்களின் அறவழிப் போராட்டத் தளங்களிலே, ஐக்கிய நாடுகள் சபையிலே, மனித உரிமை அமைப்புக்களின் மையத்திலே எமக்கான மனிதராக முழுமையாகத் திகழ்ந்தமையைத் தமிழினம் என்றும் மறவாது, அவரைப் பண்பான மனித உச்சப் புகழிலே தாங்கிக் கொள்ளும்.

தமிழ்த்தேசிய மக்களது கலாச்சாரத்திலும், சமூக வாழ்விலும், பொருளாதார வழிமுறைகளிலும் தன்னிறைவும், தாராள நிலையும் பெற்றேக வேண்டுமெனும் பெருவிருப்பும், திறன்வாய்ந்த கட்டமைப்புக்களாகப் புலம்பெயர் அமைப்புக்கள் இயங்குநிலை பேணவேண்டும் என்பதிலே பேரவாவும், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் காலப்பகுதிகளில் தங்களுடைய தாய்நாட்டுக்காக தமிழர்கள் ஆற்ற வேண்டிய இணையற்ற பங்களிப்புக்கள் தொடர்பாகவும் தெளிந்த கருத்தாய்வுகளை முன்மொழிந்தார். அவ்வாறான நோக்கானது தமிழ்த்தேசிய இனத்திற்கான விடுதலையென்பதை தன் இதயப்பரப்பிலே ஆணித்தரமாக செதுக்கி நிறுத்தியிருந்ததை, அவரோடு இணைந்து பணியாற்றிய உணர்வுமிக்க தடங்களே சாட்சியாகின்றன.

பரந்து விரிந்த உலகப் போராட்டக் களங்களிலே நிலவிய மிதமிஞ்சிய மனித உரிமை அத்துமீறல்களைக் கோடிட்டு, அவற்றிலிருந்து நியாயம் தேடி விடுதலை கோரும் வழிமுறைகளைக் கொண்ட நாடுகளின் எடுத்துக்காட்டுகளுக்கு ஊடாக, தமிழ்த்தேசிய இனத்திற்கான நியாயத் தேடலுக்காக, அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனராகவும் தன்னை உருவகித்துக் கொண்டு பல்வேறுபட்ட துறைசார் கட்டமைப்புக்களுடன் தொடர்பினைப் பேணினார். ஆயினும் தமிழீழம் என்ற உயர்ந்த எண்ணம் தாங்கிய மையம் கரையாதவராகத் திகழ்ந்தார்.

சிரிலங்காப் பேரினவாதம் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டிருந்த அரசியல் அடக்குமுறைகள், சட்டவிரோதமான சிறைப்புடிப்புக்கள், சித்திரவதைகள் மற்றும், பூர்வீக நிலப்பறிப்புக்கள் போன்ற பாரிய அநீதியான விடயங்களை, அடக்குமுறைகளைப் பிரயோகிக்கின்ற அந்த இனத்திலே பிறந்துவிட்டேனே என்பதற்காக ஏற்காது, துணிந்து எதிர்த்து நின்ற நேர்மையும், நீதியின் வழிநின்று தமிழினத்தோடு தோழமை பூண்ட மாண்புமே, அடிப்படையான உரிமைகளை மதிக்கின்ற நியாபூர்வமான தோழமையாக உலகத்தமிழர்களின் இதயங்களிலே ஒன்றித்து, பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றுப் புகழ் கொண்ட தமிழின் நீட்சியில் உயிர் வாழ்வார்.

சிங்களத் தீவிரவாத சக்திகளும், தேசியவாதிகளும் இணைந்து, தமிழர் நிலவுரிமைகளை மறுத்து, முழு இலங்கைத் தீவையுமே தனிச் சிங்கள பௌத்த தேசிய நாடாக நிறுவி விடுவதற்காகப் பல்வேறுபட்ட பிரயத்தனங்களை புனைவுகளாக முன்னிறுத்தி, அரசியல் சமூக பண்பாட்டு மாற்றங்களைத் தமக்கேற்ற வகையிலே முன்மொழிந்துவரும் தருணங்களிலெல்லாம், அதற்கு எதிராக தமிழர்களின் தொன்மைகளை நிலைகொள்ள வைப்பதற்காக தகைசான்றுகளின் அடிப்படையில், தமிழர் பக்கமாக நின்று வாதப்பிரதிவாதங்களை முன்வைக்கின்ற அற்புதமான தோழமையாளராக விராஜ் மென்டிஸ் அவர்கள் வாழ்ந்தார் என்பதை காலம் மறவாது. அவ்வாறான உயர்ந்த எண்ணம் கொண்ட மனிதரது ஆன்மா அமைதிபெற இயற்கையை வேண்டுவதோடு, அவரது பிரிவுத் துயர் சுமந்து வாடும் அனைவரோடும் நாமும் துயரைப் பகிர்ந்து, அவராற்றிய சிறந்த பணிகளை அவர் நினைவோடு தொடர்ந்து முன்னெடுப்போமென, அவரது புகழுடல்மீது உறுதியெடுப்போமாக.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

Mendis.jpg-1_Seite_1.jpg
Mendis.jpg-1_Seite_2.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிக்களும், ஆழ்ந்த அனுதாபங்களும்.

இவரே, பல சிங்கள , மேற்கு அழுத்தங்கள், மறைமுக அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்து. மேற்கு குழுவாக இனவழிப்பை கட்டியம் கூறி அரங்கேற்றியது, அதன் பின் மறைக்க முற்றப்பட்டது ... போன்றவற்றை வெளியில் கொண்டுவந்து, தமிழர்களின் நியாயத்துக்கு போராடியவர்.  


தமிழர்கள் இவருக்கு இனமாக, தேசமாக அஞ்சலி செலுத்துவது அவசியம். ஏனெனில், வீழ்ந்தவருக்கு அப்படி ஒரு தமிழரே அந்த நேரத்தில்  அநேகமாக தவிர்க்கப்பட்டு இருக்கும்  

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்+

https://www.tamilnet.com/art.html?catid=25&artid=39987

 

விராஜ் மெண்டிஸ் விட்டுச் செல்லும் நிரப்பவியலா இடைவெளி

 

[TamilNet, Saturday, 17 August 2024, 12:15 GMT]
ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தின் உற்ற நண்பனாக மிக நீண்டகாலமாக, தனது சாவுப்படுக்கை வரையும், ஜேர்மனி நாட்டின் பிரேமன் நகரிலிருந்து தொடர்ச்சியாக இயங்கிவந்த விராஜ் மெண்டிஸ் ஈழத்தமிழர்களிடமிருந்து வெள்ளிக்கிழமை மாலை தனது 68 ஆவது வயதில் நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார். அவரது வலிய நெஞ்சுரத்தோடு இளகிய குழந்தை மனது எப்போதும் போட்டியிட்டுக்கொண்டிருக்கும். அதனாலோ என்னவோ மாரடைப்போடும் சாவோடும் பலமுறை போராடியவாறு தனது செயற்பாட்டை முன்னெடுத்துக்கொண்டிருந்தார் அவர். அவரின் இடையறா முயற்சியால் மக்கள் தீர்ப்பாயத்தின் மூன்று அமர்வுகள் உலகத் தளத்தில் நடந்துள்ளன. அவற்றில் இன அழிப்புக் குறித்த மிகத் தெளிவான தீர்ப்பு வெளியானதோடு, அமெரிக்க-பிரித்தானிய மேலாதிக்கம் எவ்வாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்குக் காரணமானது என்பதைத் துணிகரமாக வெளிக்கொணரும் தீர்ப்பும் வெளியாகியது. அவரது அடுத்த கட்ட இலக்கு அர்த்தமுள்ள எதிர்ப்பியக்கத்தைக் கட்டுவதில் குறியாக இருந்தது.
 

Viraj Mendis
Viraj Mendis (01 April 1956 - 16 August 2024)
 

ஆண் பெண் சமத்துவத்தில் அருஞ்சாதனைகளைப் படைத்த தமிழீழ விடுதலைப் போராட்ட மரபில் வந்து எஞ்சியிருக்கும் முன்னாட் பெண்போராளிகளிடமும் பெண்தலைமைத்துவத்திடமும் இருந்து அர்த்தமுள்ளதாக ஈழத்தமிழர் போராட்டத்தின் அடுத்தகட்ட எதிர்ப்பாற்றல் (Resistance) எழவேண்டும் என்று சிந்தித்து அதற்கான செயற்பாடுகளைக் கட்டுவதில் அவர் கவனஞ் செலுத்திக்கொண்டிருந்த வேளையில் அவரது மரணம் சம்பவித்துள்ளது.

“உண்மையான விடுதலையை நேசித்தவர்கள் எல்லோரும் தமது உயிரைக் கொடுத்துவிட்டனர் அவர்களுக்காகவே நான் செயற்படுகிறேன்,” என்று எமக்கு அடிக்கடி நினைவுபடுத்திய அவர் இப்போதிருக்கும் நிலைகெட்ட புலம்பெயர்ச் செயற்பாட்டுத் தளத்துக்கு அப்பால் ஈழத்தமிழர் விடுதலை அரசியலை 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் நகர்த்துவதில் மிகுந்த முயற்சியெடுத்துச் செயற்பட்டுக்கொண்டிருந்தார்.

ஈழத்தமிழர் செயற்பாட்டாளர்களிற் பலருக்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றி இருக்கும் அறிவையும் துடிப்பையும் விஞ்சியதாக சிங்களவரான அவருக்கு நேசிப்பும் ஈடுபாடும் அறிவும் துடிப்பும் இருந்தன.

ஈழத் தமிழர் மீதான சிங்களப் பேரினவாத அரசின் பௌதிக இன அழிப்பு ஆரம்பிக்கப்பட்ட 1956 ஆண்டில் இருந்தான 68 ஆண்டு வரலாற்றுக்காலம் அவரது வயது.

அந்த இன அழிப்பைத் தனது வாழ்நாளில் மாற்றுலகத் தளத்தில் அவர் நிறுவிச் செனறுள்ளார்.

எந்த இக்கட்டான நெருக்கடியிலும் சுயாதீனமாக இயங்கும் வல்லமைக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு.

மாமனிதர் சிவராமின் நெருங்கிய நண்பரான விராஜ் தமிழ்நெற்றின் நண்பரானார். அவ்வாறான எமது நண்பர் விராஜுக்கு வீரவணக்கம் செலுத்துவது என்பது தீக்குளிப்பதற்கு ஒப்பானது; நெஞ்சை உருக்குவது; சிவராமை நாம் இழந்தபோது ஏற்பட்ட வலிக்கு ஒப்பான வலியைத் தருவது.

முள்ளிவாய்க்காலைத் தரிசித்த ஆழமான வலி அதை எதிர்கொள்ளும் மன வலுவை எமக்குள் விட்டுச்சென்றுள்ளதா என்பதற்கு இது ஒரு சோதனையாகிறது.

பிரித்தானியாவில் இருந்து ஒரு காலத்தில் அவர் விரட்டப்பட்டதன் பின்னரும், அவரது பிரித்தானியத் துணைவியாரான காரன் அம்மையார், தனது நாட்டைத் துறந்து அவரோடு ஜேர்மனியில் தானும் சேர்ந்து வாழ்ந்து, தோழர் விராஜின் செயற்பாட்டை ஈழத்தமிழர் விடுதலைக்காகத் தொடர்ந்தும் குவியப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்தமை நெஞ்சை நெகிழவைப்பது.

விரல்விட்டு எண்ணக்கூடியவர்களாயிருப்பினும் மலைநிகர்த்த செயலாற்றலோடு அவரோடு நெருக்கமான நண்பர்களாகச் செயற்படும் புலம்பெயர் சிங்கள நண்பர்கள் அவரின் பிரிவால் ஆழ்ந்த துயருக்குள்ளாகியுள்ளனர்.

கோட்பாட்டு ரீதியாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் ஈழத்தமிழர் தேசக்கட்டலையும் விடுதலை அரசியலையும் அசைக்கவியலாது தாங்கியிருந்த தூண்களில் ஒன்று விராஜ்.

விராஜ் மரணிக்கலாம், அவர் நாட்டிய அந்தத் தூண் ஒருபோதும் சரியாது.

விராஜ் விட்டுச் சென்றிருக்கும் நிரப்பவியலா இடைவெளியை ஈடுசெய்வது அவரது வாழ்வுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமான ஈழத்தமிழர் விடுதலைக்கும் அர்த்தம் தருவதாகும்.

அவரது நேர்காணற் பதிவுகளும் மக்கள் தீர்ப்பாயம் பற்றிய செய்திகளும் அனைவரின் பார்வைக்காகவும் கீழே இணைக்கப்படுகின்றன.

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.