Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

நான் ஏற்கனவே கூறியபடி நீங்கள் இணைத்தது ஒரு இயக்கத்தின் பிரச்சார வீடியோ ஆகும்.  இப்படியான பிரச்சார வீடியோக்கள் ஒரு காலத்தில் உங்களை விட என்னை அதிகம் மயக்கியது.  

அவர்கள் பலமுடன். இருந்து இருந்தால் இன்றும்கூட. அது மயக்கிகொண்டு தான் இருக்கும்   

  • Replies 53
  • Views 3.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வாதவூரான்
    வாதவூரான்

    மிஸ்ரர் ஐலான்ட்,  இது எல்லாம் எப்பநடந்தது.நேரே பக்கத்திலைநின்றது போல் கதை விடுகிறீர்கள். இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. உங்களிட்டை என்ன தீர்வு கிடக்கோ சட்டுப்புட்டென்று அமுல் படுத்திவிட்டு ப

  • Sasi_varnam
    Sasi_varnam

    1987 ஒப்பந்தம் தொடர்பாக தேசியத் தலைவரின் உரையின் சாராம்சம் ... தமிழர்கள் இந்த தீர்வை குழம்பினார்கள் என்று நீங்கள் "நம்புவதற்கு" ஏதுவான காரணங்களை பற்றி பேசுங்களேன். ஏனென்றால் 1987 காலப்பகுதியில் ஈழத்தி

  • விழிப்புலன்ற்ற ஒருவருக்கு பிறந்த குழந்தை, பாலருந்தும் போது மூச்சு திணறி இறந்து விட்டது, அவருக்கு குழந்தை இறந்த விடயத்தினை உறவினர், உங்கள் குழந்தை பாலருந்தும் போது மூச்சு திணறி இறந்துவிட்டது என கூறின

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

ஆனால்,  அன்று தமிழ் தரப்பால் அது நிராகரிக்கப்பட்டது என்பதும் இன்று அதையாவது

எற்றுக்கொண்டு இருந்தாலும் அது தரப்பட்டு.  இருக்காது ......அதை வழங்கி இருப்பார்களா??    இல்லை ஒருபோதும் வழங்கப்பட்டு இருக்காது     நிராகரிக்கப்படவில்லையென்றால் 

வழங்கப்பட்டு இருக்கும் என்ற வாதம் 

சிறு புள்ளைத்தானமானது 

உப்பு சப்பு அற்றது   

அன்றும் இன்றும் என்றும் தமிழருக்கு தீர்வு  வழங்குவது இல்லை என்ற சிங்களவனின். உறுதிப்பாட்டை புரிந்து கொள்ளாதது 

இங்கே நாமல். விளக்கமாக. சொன்னதை விளங்கிக்கொள்ளவில்லை  எட்டு ஐனதிபதிகள் வந்தும்  அதில் இரண்டு பேர் இந்த பொலிஸ் காணி அதிகாரங்கள் தருவேன் என்றும்  தரவில்லை  தரமுடியவில்லை 

இன்றைய தமிழரின் பலவீனத்தை. பயன்படுத்தி விவாதம் செய்வது  கூடாது 

என்றுமே குறைந்த பட்ச தீர்வு சுயாட்சி தான்  

இன்று நிராகரித்ததை   அமுலபடுத்து என்று கோருவது  அது தான் தீர்வு   என்று கருதுவது நகைப்புகிடமானது   இன்றும் அது உறுதியான இறுதியான. தீர்வு இல்லை   இப்படி சொல்வதும். நிராகரிப்பு. தான் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

ஒருபோதும் முடியாது    

2015 இருந்து 2019 வரை  இணந்து தான் இருந்தார்கள் ஆனால் தீர்வை உருவாக்க முடியவில்லை 

டக்ளஸ் தேவானந்தா  அன்று தொடக்கம்  ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் இணந்து இருக்கிறார்   ஆனால் தீர்வை உருவாக்க முடியவில்லை    அவர் வாழும் வரை இணந்தே இருப்பார் ஆனால்  தீர்வை உருவாக்க போவதில்லை 

இலங்கை அரசாங்கம்கள்   எதுவானாலும் வடக்கு கிழக்கு இல்  தேர்தல் வைக்கமால். ஒரு பொம்மை சுயாட்சியை நியமிக்கலாம். அவர்களின் சொல்லைஎல்லாம் கேட்கும்   டக்ளஸ் கருணா. .    ... போன்றோருக்கு மாகாண அமைச்சர் பதவிகளை கொடுத்து நியமித்துவிட்டு பொம்மை சுயாட்சி நிறுவ முடியும் 

அவர்கள் விரும்பவில்லை .. .  அவர்கள் செய்வது… எல்லாம் 

பேச்சுவார்த்தைக்கு முதலே பேச்சுவார்த்தையை குழப்பியடிப்பது 

சர்வதேசத்தை குழப்பியடிப்பது 

பேச்சுவார்த்தையில்  ஈடுபடும் தமிழ் தலைவர்களை குழப்பியடிப்பது 

தமிழ் மக்களை குழப்பியடிப்பது 

இலங்கை பாராளுமன்றத்தில் தங்களுக்கு வேண்டிய சட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை நிறுத்த முடிவதில்லை   முடியாது  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் தேவையற்றது  

ஏராளன்.  குறிப்பிட்டது போல் இது சிங்கள நாடு என்று நினைப்பவர்கள்  எப்படி தமிழருக்கு சுயாட்சி தருவார்கள்???  தமிழர்கள்,. ..   

தடுத்தார்கள்

எதிர்த்தார்கள் 

முழு பலத்துடன் அமுல் செய்ய விடவில்லை 

பிழை விட்டு விட்டார்கள் 

ஆதரவு வழங்கவில்லை 

சட்டத்தின் ஆட்சி இலங்கையில் இருக்குமாயின் தமிழர்கள் நாங்கள் இலங்கையர்கள்  என்று சொல்லி கொண்டு வாழ்வார்கள்.   

தீர்வு கிடைக்கமைக்கு  தமிழன் தான் காரணம் என்று சொல்லும் தமிழன் இருக்கும் வரை   தீர்வு கிடையாது 🙏

சி‌ங்களவர்களுடன் இணைந்து தீர்வை காணா முடியாதா? அப்படியானால் விட்டுவிடுங்கள். தம்முடன் இணைந்து தீர்வை காணுமாறு  அவர்களும் உங்களை வற்புறுத்த போவதில்லை.  அவர்களும் உள்ளூர அதை தான் விரும்புவார்கள்.  அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.  தமிழர்கள் வினை திறனான நடைமுறை சாத்தியமான அரசியலை செய்யாது  இவ்வாறு வெட்டி வீர அரசியல் செய்து பொழுது போக்க வேண்டும் அதுவே எமக்கு நல்லது என்றே இனவாதிகள் விரும்புவார்கள். 

டக்லஸும் கருணாவும் இனப்பிரச்சனைத்மீர்வுக்காக அரசுடன்்இணைந்து செயற்பட்டார்கள் என்று அப்பாவி தனமாக நம்மியதை பற்றி நான் என்ன சொல்ல. 😂

தமிழர் தரப்பு என்றுமே எல்லாமுமே  சரியாக தான் மிக திறமையாக  அரசியல் செய்தது என்று தெரிவித்திருத்தீர்கள். அதை நம்பிய  நான் எதேச்சையாக  இணையத்தளங்களில் பல்வேறு உலக பிரபல  ஊடகங்களை பார்கக நேர்ந்தது.  அதில் எல்லாம் நீங்கள் சொன்னதற்கு மாறான பல  தகவல்களை பார்தத உடனையே எனது கம்பியூட்டரை Off செய்துவிட்டேன். அதை உலக நாட்டு ராஜதந்திரிகளோ உலக தலைவர்களோ  மக்களோ அவற்றைப் பார்த்தால்  அது தமிழருக்கு பாதகம்  என்பதற்காக கம்பியூட்டரை நிறுத்தி எவரும் அந்த செய்திகளை பார்ககாமல் செய்துவிட்டேன்.   எப்படி எனது ராஜதந்திரம். இனி இந்த உலகில் தமிழனை அடிக்க எவராலும் முடியாது.  தமிழேன்டா. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அவர்கள் பலமுடன். இருந்து இருந்தால் இன்றும்கூட. அது மயக்கிகொண்டு தான் இருக்கும்   

 நீங்கள் கூறுவதும் சரி தான். மயக்கம் தெளிந்ததும் ஒருவகையில் நல்லதே. 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, island said:

சி‌ங்களவர்களுடன் இணைந்து தீர்வை காணா முடியாதா

நாமல் பதிலளித்தார் பார்க்கவில்லையா??  8 ஐனதிபதி காலப்பகுதியில்  பொலிஸ் காணி          அதிகாரங்களை வழங்க விரும்பவில்லையாம்.   ஏன்?? ஏன்??? 

ஏதாவது தெரியுமா??? 

32 minutes ago, island said:

அவர்களும் உள்ளூர அதை தான் விரும்புவார்கள்.

ஆமாம்  உண்மை  இதில் எக்காலத்திலும் மாற்றங்கள் இருக்காது 

நாங்கள் நிராகரித்தது,   .எற்றுக்கொள்வது    இரண்டுமே ஒன்று தான்   எந்தவொரு பிரயோஜனம் அற்றது 

35 minutes ago, island said:

டக்லஸும் கருணாவும் இனப்பிரச்சனைத்மீர்வுக்காக அரசுடன்்இணைந்து செயற்பட்டார்கள் என்று அப்பாவி தனமாக நம்மியதை பற்றி நான் என்ன சொல்ல. 😂

நான் நம்பவில்லை    அது கேள்விகளுக்காக அளித்த பதில் 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, island said:

தமிழர் தரப்பு என்றுமே எல்லாமுமே  சரியாக தான் மிக திறமையாக  அரசியல் செய்தது என்று தெரிவித்திருத்தீர்கள். அ

இவர்கள் எப்படி செயற்பட்டாலும்.   எந்தவொரு நன்மையுமில்லை காரணம் இது சிங்களவர் நாடு என்று சிங்களவர்கள். நம்புகிறார்கள் சொல்கிறார்கள்   இந்த நிலையில் எப்படி சரியாக செயல்படுகிறது   அதாவது சரியான செயல்பாடுகளை செல்லுங்கள் பார்பபோம. 

40 minutes ago, island said:

இனி இந்த உலகில் தமிழனை அடிக்க எவராலும் முடியாது.  தமிழேன்டா. 😂

தமிழன் உயர்ந்தவனுமில்லை  தாழ்ந்தவனுமில்லை    

அனைவருக்கும் சமன்   ஆனாவன்.  

  • கருத்துக்கள உறவுகள்

@Kandiah57

உங்கள் கருத்துக்கள் உறுதியானவை. உறுதியான, வெட்டி விழுத்தமுடியாத, உயர்ந்து நிற்கும்  ஆலமரமாக  உங்கள்  மண்டைக்குள்  உள்ள மூளைக்குள் வளர்ந்து நிற்கும்  அந்த விரூட்சத்தில் இருந்து புறப்படும் உங்கள் கருத்துக்கள், கேள்விகளுக்கு பதிலளிப்பது சாதாரண இயல்பான மனித அறிவுடன் இருப்பவர்களுக்கு மிகவும் கடினமானது. 

 சாதாரணமாக கருத்துகளில் தெரிவிக்கப்பட்ட  முழுமையான அர்த்தத்தை,  செய்தியை  விடுத்து வசனங்களை இரண்டாகப் பிரித்தும்,  சொல்லு சொல்லாக அதை வாசித்தும்  அதற்கு பதிலெழுதும் தங்கள் பாணியே ஒரு அழகுதான். இவை அனைத்தும் உங்களது உறுதியான ஆலமரமாக வளர்ந்து நிற்கும் அந்த விரூட்சத்தில் இருந்து பிறப்பெடுப்பவை.  தொடர்ந்தும் அப்படியே உறுதியாக இருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, island said:

நன்றி நண்பரே,.   . இலங்கை அரசிடம்  தீர்வு இல்லை   இதனை நாமல் அழகாக சொல்லி உள்ளார்   

தமிழர்கள் குப்பினார்கள்.  

தமிழர்கள் நிராகரித்தார்கள்.  

இல்லையென்றால் இலங்கை தீர்வை தந்து விட்டிருக்கும். என்பது 

மிகப்பெரும் பிழையான. கருத்துகள்,.....இது தான் நான் சொல்வது  

உங்களால்  இதை எதிர்த்து உறுதியாக கருத்துகள் வைக்க முடியவில்லை    கவலையளிக்கிறது    

என்னை பற்றி ஆராய்வு செய்ய வேண்டாம் வணக்கம்… 🤣🤣🤣😀😂🤪🙏

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே போலியான கருத்துக்கள் போதிக்கப்படுகின்றன. 

உதாரணமாக சிங்களவருடன் இணைந்து பழகி நட்பு பாராட்டி தீர்வை பெறலாம் என்பது. ஆனால் அப்படி தாயகத்தில் தற்பொழுது இயங்கும் பலர் உண்டு. அவர்களின் ஒருவரை தேர்வு செய்து சொல்லுங்கள் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, island said:

நான் ஏற்கனவே கூறியபடி நீங்கள் இணைத்தது ஒரு இயக்கத்தின் பிரச்சார வீடியோ ஆகும்.  இப்படியான பிரச்சார வீடியோக்கள் ஒரு காலத்தில் உங்களை விட என்னை அதிகம் மயக்கியது.  

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்ட நாள் முதலே அதை முற்றாக  நிராகரித்து  அதை அமுல்படுத்த விடாமல் தடுப்பற்கான தமது போராட்டத்தை விடுதலைப்புலிகள் ஆரம்பித்தது  வெள்ளிடை மலை. தனி தமிழீழத்துக்கான போராட்டத்தை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என  முழு வேட்கையுடனும் உத்வேகத்துடனும் புலிகள் அன்று இருந்ததும் இந்த ஒப்பந்தத்தை அதற்கு வந்த இடையூறாக புலிகள் கருதியதும்  எல்லோருமே அறிந்த விடயம் தான். 

புலிகள் இந்திய இராணுவத்துடன் யுத்தம் புரிந்தது ஒப்பந்தத்தை அமுல் படுத்த அல்ல. மாறாக இந்திய இராணுவத்தை வெளியேற்றி இலங்கை இராணுவத்திடன் தமிழீழத்துக்கான போரை தொடர்ந்து  நடத்துவதற்காகவே  என்பது அனைவரும் அறிந்த உண்மை.  அதையே பின்னர் செய்தனர். 

பிரேமதாசவுடன் பேச்சுவார்ததை ஆரம்பித்ததும் இந்திய இராணுவத்தை வேளியேற்றும் அரசியல் நகர்வுகளுக்காகவே. அது பற்றி அன்ரன் பாலசிங்கம் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

நான் அந்த நடவடிக்கையில் சரி, பிழை கூறவில்லை. அது தொடர்பாக சாதகமான பாதகமான வாத பிரதிவாதங்களுக்கு இடம் உள்ளது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதே.  ஏனெனில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் பல போதாமைகள் இருந்தன. அதற்காக அதில் பல நல்ல அம்சங்களும் இருந்தன. அதில் உள்ளதை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று  இன்று   தமிழர்கள் விரும்புவதில் இருந்தே அதை அறியலாம்.  

ஆனால்,  அன்று தமிழ் தரப்பால் அது நிராகரிக்கப்பட்டது என்பதும் இன்று அதையாவது நடைமுறைப்படுத்தமாட்டார்களா என்று  தமிழ் தரப்பு விரும்புவதும்  எவராலும் மறுக்க முடியாத உண்மை.  

ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்டு 37 வருடங்கள், அதன் பங்குதாரர்கள் இந்திய இலங்கை அரசு. அது இன்று நடைமுறை படுத்துங்கள் என்று கேட்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

அப்படியென்றால் 1987 இல் இரு நாட்டு தலைவர்களும் கைச்சார்த்திட்டது வெண்டிக்காய் முருக்கங்காய்  ஏற்றுமதி ஒப்பந்தமா?
அதுசரி இன்றும் கூட அதை தலையில் தூக்கி பிடித்துக்கொண்டு பாராளுமன்றில் அது சார்ந்தே தீர்வு என்று பேசும் நபர்கள் , அரசியல்வாதிகள் யார்?
மாகாண சபையாம்.. அதுக்கொரு சிங்கள பௌத்த பேரினவாத அரசால் நியமிக்கப்பட்ட ஆளுனராம் .. அவர் நினைத்தால் எதையும் எப்பொழுதும் முடக்கக் கூடிய அதிகாரமாம்... இதுதான் தீர்வாம்!!!

இந்திய ராணுவம் ஒப்பந்தத்தை  கைச்சாத்திட்டதன் பின்னர், எப்படி எல்லாம் தமிழர் பிரதேசங்களில் நடந்து கொண்டது என்பது மக்கள் நன்கு அறிவார்கள். 
ஒரு பக்கத்தில் புலிகளிடம் ஆயுதத்தை ஒப்படைக்க சொல்லிவிட்டு, மறு பக்கத்தில் ஒட்டுக்குழு, ஓணான் குழுவுக்கு ஆயுதம் வழங்கி அவர்களை இந்தியாவில் இருந்து அழைத்துவந்து அரவணைத்து, அவர்களை வைத்தே  புலிகளை இங்கொன்றும் அங்கொன்றுமாக வேட்டையாடியது, ஈழநாதம் பத்திரிகை காரியாலயத்தை குண்டு வைத்து தகர்த்தது, திலீபன் அண்ணா உண்ணாவிரத கோரிக்கைகள், அவரின் இழப்பு, குமரப்பா , புலேந்திரன் போன்ற தலைவர்களின் கைதில் இந்தியாவின் வகிபாகம் .. பட்டியல் இன்னும் நீளும்.
  
உங்கள் வசதிக்கு கருத்தெழுத்தாமல் முடிந்தால் உண்மையை பிரதிபலித்து எழுதுங்கள். கேட்பவர்கள் ஈழத்தில் வாழ்ந்த மக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

தமிழ் தரப்பின் வங்குரோத்து அரசியலின் விளைவு இது.

எதை நிராகரித்து, நிராகரித்ததை உறுதி செய்ய ஆயிரக்கணக்கான உயிர்களை தியாகம் செய்து, ஈற்றில் எம்மால் நிராகரிக்கப்பட்ட ஒன்றை எமக்கு தாருங்கள் என 37 வருடங்களின் கேட்கும் வங்குரோத்து நிலையில் நாம் இன்று.

முற்றிலும் பிழையான கருத்து!!! அப்படி 13 சார்ந்த தீர்வை திரும்ப தாருங்கள் என்று பேசுபவர்கள் ஒரு சில புலம்பெயர் அரசியல் வியாபாரிகளும், உள்நாட்டு சுமந்திரன் வகையாறாக்களுமே. மற்றும்படி தமிழ் மக்கள் தொடர் இனஅழிப்பு, அது சார்ந்த நீதி, ஒற்றையாட்சி தவிர்ந்த (சுயநிர்ணய உரிமை சார்ந்த) தீர்வு நோக்கியே  அரசியலை பார்க்கிறார்கள்.
அவர்களை சரியாக வழிநடத்தக்கூடிய தமிழ் அரசியல்வாதிகள் இன்று இல்லை. பெரும்பாலும் இந்தியா எதை சொல்கிறதோ அதை செய்துமுடிக்கும் விண்ணர்களாகவே இருக்கிறார்கள். அது எங்கள் துரதிஷ்டம்!!!

1 hour ago, Sasi_varnam said:

தமிழரசுக் கட்சி / சுமந்திரன் ஆகியோர் மட்டுமல்ல, கூட்டமைப்பில் இருக்கும் எல்லா கட்சிகளும், ஒவ்வொரு முறையும் இந்திய தூதரை மட்டுமல்ல, வேறு நாட்டு தூதுவர்களை சந்திக்கும் போதும் 13 இல் கொடுக்கப்பட்ட அதிகாரங்களையாவது இலங்கை அரசு தமக்கு வழங்க்கச் சொல்லி தொடர்ந்து கேட்டு வருகின்றனர். 13 பிளஸ் பற்றியும் உரையாடுகின்றனர். கஜேந்திரனும் அவரது கட்சியும் மாத்திரமே அதற்கு அப்பால் சென்று தீர்வை கேட்கின்றனர் (ஆனால் அடுத்த மாகாணசபைத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவார்கள்).

மக்களுக்கு முன் மேடைப் பேச்சிலும், ஊடக சந்திப்புகள் மற்றும் அறிக்கைகளிலும் வீராவேசமாக கதைத்து விட்டு, ராஜதந்திர மட்டத்தில் கதைக்கும் போது நடைமுறைக்கு ஓரளவேனும் சாத்தியப்படக் கூடிய விடயங்களையே கோருகின்றனர். 

இந்த பொலிஸ், காணி அதிகாரங்கள் கூட வழங்க மறுக்கும் இலங்கை பெளத்த பேரினவாதம், ஒற்றையாட்சியை நீக்கி, தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமையுடன் கூடிய வடக்கு கிழக்கு இணைந்த நிர்வாக அலகை, எந்தவிதமான அழுத்தங்களும் இல்லாத இன்றைய நிலையில் வாரி வழங்கும் என நினைப்பது கண்கள் இரண்டையும் திறந்து வைத்து இருந்து காணும் பகல் கனவு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்டு 37 வருடங்கள், அதன் பங்குதாரர்கள் இந்திய இலங்கை அரசு. அது இன்று நடைமுறை படுத்துங்கள் என்று கேட்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

அப்படியென்றால் 1987 இல் இரு நாட்டு தலைவர்களும் கைச்சார்த்திட்டது வெண்டிக்காய் முருக்கங்காய்  ஏற்றுமதி ஒப்பந்தமா?
அதுசரி இன்றும் கூட அதை தலையில் தூக்கி பிடித்துக்கொண்டு பாராளுமன்றில் அது சார்ந்தே தீர்வு என்று பேசும் நபர்கள் , அரசியல்வாதிகள் யார்?
மாகாண சபையாம்.. அதுக்கொரு சிங்கள பௌத்த பேரினவாத அரசால் நியமிக்கப்பட்ட ஆளுனராம் .. அவர் நினைத்தால் எதையும் எப்பொழுதும் முடக்கக் கூடிய அதிகாரமாம்... இதுதான் தீர்வாம்!!!

இந்திய ராணுவம் ஒப்பந்தத்தை  கைச்சாத்திட்டதன் பின்னர், எப்படி எல்லாம் தமிழர் பிரதேசங்களில் நடந்து கொண்டது என்பது மக்கள் நன்கு அறிவார்கள். 
ஒரு பக்கத்தில் புலிகளிடம் ஆயுதத்தை ஒப்படைக்க சொல்லிவிட்டு, மறு பக்கத்தில் ஒட்டுக்குழு, ஓணான் குழுவுக்கு ஆயுதம் வழங்கி அவர்களை இந்தியாவில் இருந்து அழைத்துவந்து அரவணைத்து, அவர்களை வைத்தே  புலிகளை இங்கொன்றும் அங்கொன்றுமாக வேட்டையாடியது, ஈழநாதம் பத்திரிகை காரியாலயத்தை குண்டு வைத்து தகர்த்தது, திலீபன் அண்ணா உண்ணாவிரத கோரிக்கைகள், அவரின் இழப்பு, குமரப்பா , புலேந்திரன் போன்ற தலைவர்களின் கைதில் இந்தியாவின் வகிபாகம் .. பட்டியல் இன்னும் நீளும்.
  
உங்கள் வசதிக்கு கருத்தெழுத்தாமல் முடிந்தால் உண்மையை பிரதிபலித்து எழுதுங்கள். கேட்பவர்கள் ஈழத்தில் வாழ்ந்த மக்கள்.

சசிவர்ணம்,  நாங்கள் எதை பற்றி பேச தொடங்கினோமோ அதை விட்டு வேறு விடயங்களுக்கு  திசை திருப்ப பார்கின்றீர்ர்கள்.  

இத்திரியில் எனது கருத்துக்கு நீங்கள் மறுப்பு தெரிவித்த விடயம் இலங்கை இந்திய ஒப்பந்த அமுலாக்கத்தை  புலிகள் குழப்பினார்களா இல்லையா என்பதை பற்றி மட்டுமே.  ஆகவே வேறு விடயங்களுக்கு தாவாமல் அதை பற்றி மட்டும் பேசுவோம்

  யுத்தம்  தொடங்கிய பின்னர் நடந்த  இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களை பற்றி நாம் பேசவும் இல்லை அதை நான் மறுக்கவும் இல்லை. 

இந்திய இராணுவம் இலங்கையில் இருக்கும் வரை இந்தியா ஒப்பந்தத்தை அமுலாக்கவிழைந்ததும் அதை அமுல் செய்ய விடாமல் புலிகள் போராடி ஒப்பந்தத்தை கிடப்பில் போடவைத்ததும் நடந்த உண்மைகள். 

இலங்கை அரசியலில் ஆர்வம் உள்ள நாளாந்தம் பத்திரிகை வாசிக்கும் ஒருவரல் கூட அறிந்து  கொள்ளக் கூடிய வெளிப்படையான உண்மை அது. 

அன்ரன் பாலசிங்கத்தின் ராஜதந்திரத்தின் மூலம் இந்திய, இலங்கை  ஆடசி மாற்றதின் சாதக  விளைவுகளை பயன்படுத்தி  இந்திய இராணுவம் வெளியேற நிர்பந்திக்கப்பட்ட பின்னர்,  இந்தியா தமிழர் பிரச்சனையில் பாராமுகமாகவே இன்னும்  கூறப்போனால் முழுமையாக தமிழருக்கு எதிர்ப்பு நிலையையே கடைப்பிடித்தது என்பது யாவரும் அறிந்த உண்மை. அதனால் ஒப்பந்தத்தில் தமிழர் சார்பான சரத்துகளை அமுலாக்கும்மாறு  இலங்கையை நிர்பந்திக்கவில்லை.  ஆனால், ஒப்பந்தத்தில் தனது நாட்டின் நலன்கள் சார்பான சரத்துக்களை   அமுல்படுத்தும் விடயத்தில் கறாறக நடந்திருக்கும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2024 at 15:54, island said:

இந்த காணி , பொலிஸ்  அதிகாரம்  வேண்டாம் என்று தானே 1987 ல் அதை தமிழர்கள் குழப்பினார்கள்.

 உங்களுடைய முதலாவது கருத்தில் எழுதப்பட்ட முதலாவது வரி... இது பற்றித்தான் இந்த தொடர் உரையாடல்கள். 4 பக்கத்துக்கு கருத்துகளை நீட்டி எழுதிய நீங்கள், ஒரு இடத்தில் கூட சரியான தரவுகளை வைத்து கதைக்கவில்லை.
புரிந்துகொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சறம் கட்டிய நாலு பொடியள் என்ற மிதப்பில் இருந்த நேருவின் பேரன் கிழட்டு நரியிடம் மூடிய அறைக்களுக்குள்  எதைப் பற்றி பேசினார்கள் என்ன ஒப்பந்தம் போட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள சாதாரண இயல்பான மனித அறிவுடன் இருப்பவர்களுக்கு மிகவும் கடினமானது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

13 இல் கொடுக்கப்பட்ட அதிகாரங்களையாவது இலங்கை அரசு தமக்கு வழங்க்கச் சொல்லி தொடர்ந்து கேட்டு வருகின்றனர்

கொடுக்கப்பட்டதை திரும்பவும் கொடுக்கச்சொல்லி ஏனாம் காலில் விழவேனும் புரியலையே சகோ... 
இருக்கு ஆனால் இல்லை , தருவம் ஆனால் தரமாட்டோம், ஒப்பந்தம் போடுவோம் ஆனால் நிறைவேற்ற மாட்டோம், வாக்குறுதி கொடுப்போம் ஆனால் காற்றில் பறக்கவிடுவோம் இந்த பௌத்த பேரினவாத அரசியலையும் அதற்கு முட்டு கொடுக்கும் இந்தியாவையும், இதற்கெல்லாம் அன்னக்காவடி தூக்கும் நமது அரசியல் கட்சி மற்றும் அது சார்ந்த விசுவாசிகளை என்ன செய்யலாம்.

இதையெல்லாம் தாண்டி தமிழர்கள் தான் குழப்பினார்கள் என்று சிங்களம் சொல்லும் ஒரு செய்தியை பரப்பும் நம்மவர் மனநிலையை எப்படி பார்ப்பது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

தமிழரசுக் கட்சி / சுமந்திரன் ஆகியோர் மட்டுமல்ல, கூட்டமைப்பில் இருக்கும் எல்லா கட்சிகளும், ஒவ்வொரு முறையும் இந்திய தூதரை மட்டுமல்ல, வேறு நாட்டு தூதுவர்களை சந்திக்கும் போதும் 13 இல் கொடுக்கப்பட்ட அதிகாரங்களையாவது இலங்கை அரசு தமக்கு வழங்க்கச் சொல்லி தொடர்ந்து கேட்டு வருகின்றனர். 13 பிளஸ் பற்றியும் உரையாடுகின்றனர். கஜேந்திரனும் அவரது கட்சியும் மாத்திரமே அதற்கு அப்பால் சென்று தீர்வை கேட்கின்றனர் (ஆனால் அடுத்த மாகாணசபைத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவார்கள்).

சகல தமிழ் கட்சிகளாலும் வேண்டாம் என்றிருந்த 13 அண்மையில் இந்தியாவின் கெடுபிடிகலாலேயே மீண்டும் தூசிதட்டி எடுக்கப்பட்டது.

19 minutes ago, ஈழப்பிரியன் said:

சகல தமிழ் கட்சிகளாலும் வேண்டாம் என்றிருந்த 13 அண்மையில் இந்தியாவின் கெடுபிடிகலாலேயே மீண்டும் தூசிதட்டி எடுக்கப்பட்டது.

ஒரு பேச்சுக்கு 13 இற்கு அப்பால் சென்று மேலும் பல அதிகாரங்களையும் உரிமைகளையும் இலங்கை அரசு கொடுக்க முன்வந்தாலும், முன்னுக்கு நின்று மறிச்சு அதை கொடுக்க இந்தியா விடாது. பா.ஜ.க விற்கும் காங்கிரசுக்கும் இதில் வித்தியாசம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா சனாதிபதி தேர்தல்.. நாடாளுமன்றத் தேர்தல்களால்.. தமிழர்களுக்கு ஒரு விமோசனமும் வரப் போவதில்லை. எல்லாரும் சந்தியில் சிந்து பாட வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sasi_varnam said:

 உங்களுடைய முதலாவது கருத்தில் எழுதப்பட்ட முதலாவது வரி... இது பற்றித்தான் இந்த தொடர் உரையாடல்கள். 4 பக்கத்துக்கு கருத்துகளை நீட்டி எழுதிய நீங்கள், ஒரு இடத்தில் கூட சரியான தரவுகளை வைத்து கதைக்கவில்லை.
புரிந்துகொள்ளுங்கள்.

இதுக்கு என்ன தரவு வேண்டிகிடக்கு. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்த விடாமல் தடுப்பதற்காக இந்திய இராணுவத்துடன் இரண்டரை ஆண்டுகளாக யுத்தம் புரிந்தத்து  உலகறிந்த உண்மை. இந்த பூசணிக்காயை சோற்றில் மறைக்க நீங்கள் எவ்வளவு  முயன்றாலும் அது முடியாது.   

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிழலி said:

மக்களுக்கு முன் மேடைப் பேச்சிலும், ஊடக சந்திப்புகள் மற்றும் அறிக்கைகளிலும் வீராவேசமாக கதைத்து விட்டு, ராஜதந்திர மட்டத்தில் கதைக்கும் போது நடைமுறைக்கு ஓரளவேனும் சாத்தியப்படக் கூடிய விடயங்களையே கோருகின்றனர். 

ராஜதந்திரிகளுடன் கதைக்கும் போது அவர்கள் நடைமுறை சாத்திய விடயங்களை வைத்தே வேண்டுவதற்கு அவர்களை பாராட்டலாம்👍 புலம் பெயர்ந்த  ஈழதமிழர்களை   போன்று வீராவேசமாக கதைத்து கொண்டு திரியாமல்

15 hours ago, island said:

அன்ரன் பாலசிங்கத்தின் ராஜதந்திரத்தின் மூலம் இந்திய, இலங்கை  ஆடசி மாற்றதின் சாதக  விளைவுகளை பயன்படுத்தி  இந்திய இராணுவம் வெளியேற நிர்பந்திக்கப்பட்ட பின்னர்,

இலங்கையில் சஜீத்தின் அப்பா ஜனாதிபதியாக இருந்து  இந்திய இராணுவத்தை எதிர்த்தார் புலிகளுக்கும் ஆயுதம் கொடுத்தார். இந்தியாவில் இந்திய இராணுவம் இலங்கையில் ஆக்கிரமிப்பதை விரும்பாத திமுக, அதனுடைய  நட்பு கட்சி  காங்கிரஸ் அல்லாத கட்சி ஆட்சிக்கு வந்தவையே காரணங்கள் என்று அறிந்திருந்தேன்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

இதுக்கு என்ன தரவு வேண்டிகிடக்கு. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்த விடாமல் தடுப்பதற்காக இந்திய இராணுவத்துடன் இரண்டரை ஆண்டுகளாக யுத்தம் புரிந்தத்து  உலகறிந்த உண்மை. இந்த பூசணிக்காயை சோற்றில் மறைக்க நீங்கள் எவ்வளவு  முயன்றாலும் அது முடியாது.   

இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை புலிகள் ஆதரிக்கவில்லை என்பது உண்மைதான் ஆனால் இந்திய இராணுவத்துடன் புலிகள் மோதுவதற்கு காரணம் அவர்களை அவ்வாறு இந்தியா நிர்ப்பந்தித்தது (அதன் தலைவரை கொல்ல முயற்சித்தல், பிற ஆயுத குழுக்களுக்கு ஆயுதம் வழங்கி நிராயுதபாணிகளான (ஆயுத ஒப்படைப்பின் பின்னர்) புலிகளை கொலை செய்தமையால்).

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, vasee said:

உங்கள் காமடிக்கு அளவே இல்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, island said:

உங்கள் காமடிக்கு அளவே இல்லையா? 

நிங்கள் கூற முற்படுவது எனக்கு விளங்கவில்லை.

உங்களுக்கு நகைசுவையாக தெரிந்த விடயத்தினை குறிப்பிட்டால் அதனை நானும் இரசிபேன் (உங்களது நகைச்சுவை உணர்ச்சியினை நினைத்து😁).

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, island said:

உங்கள் காமடிக்கு அளவே இல்லையா? 

35 minutes ago, vasee said:

நிங்கள் கூற முற்படுவது எனக்கு விளங்கவில்லை.

உங்களுக்கு நகைசுவையாக தெரிந்த விடயத்தினை குறிப்பிட்டால் அதனை நானும் இரசிபேன் (உங்களது நகைச்சுவை உணர்ச்சியினை நினைத்து😁).

தயவு செய்து எனது உண்மையான ஆர்வத்தினை நீங்கள் தவறாக புரிந்து கொள்ளவேண்டாம்.

நான் வேலை செய்யும் இடத்தில் ஒரு ஐரிஸ் பின்புலம் கொண்ட அவுஸ்ரேலியர் வேலை செய்தார், அவரது வேலை இயந்திரங்களை சரி செய்வது, அவரை இயந்திர கோளாறினை சரி செய்வதற்காக அழைத்திருந்தேன் பின்னர் எனது ஓய்விற்காக ஓய்வறைக்கு சென்றபோது அவர் ஓய்வறையில் என்னிடம் எதோ சொன்னார், அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை, அதனை காட்டிக்கொள்ளாமல் ஒரு புன்னகையினை  பதிலாகக்கொடுத்தேன்.

அவர் திடீரென சாமியாடத்தொடங்கினார் உனக்கு என்னைப்பார்க்க கோமாளி மாதிரியா தெரிகிறது என?????

ஏன் இவர் இப்படி உணர்ச்சி வசப்படுகிறார் என புரியாமல் சிந்தித்த போதுதான் புரிந்தது, அவர் தனது இயந்திர பழுதுபார்த்தலின் பின் இயந்திரம் சரியாக இயங்குகிறதா என விசாரிக்கிறார் என😁.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.