Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எது புத்திசாலித்தனம் – எதுமுட்டாள்தனம்?

September 19, 2024
Eelanadu-Edito-Logo-1-696x221.jpg

தேர்தல் பரப்புரைகள் நிறைவுறுகின்றன. இன்னும் மூன்று தினங்களில் நாட்டின் புதிய ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும். தேர்தல் முடிவுகள் ஒன்றில் சாதாரணமான ஒன்றாக இருக்கலாம் அல்லது ஒரு வரலாற்று மாற்றமாக இருக்கலாம். எது நடப்பினும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பில் எந்தவோர் அதிசயமும் நடந்துவிடப் போவதில்லை. எப்போதும் போல, தமிழரின் வாழ்வு வழமைபோல் உப்புச்சப்பு இல்லாத நிலைமை என்று சொல்லக்கூடிய நிலையிலேயே தொடரப்போகின்றது. இந்த இடத்தில் எழும் கேள்வி – தமிழ் மக்கள் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கும் வாக்களித்தால் என்ன அதிசயம் நிகழ்ந்தவிடப் போகின்றது – அதேபோல், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதால் என்ன அதிசயம் நடந்துவிடப் போகின்றது?

தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் தென்னிலங்கை வேட்பாளர்களில் சிலர் வெற்றி பெற்றிருக்கின்றனர் – சிலர் தோல்வியடைந்திருக்கின்றனர். வெற்றி பெற்றவர்கள் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு மாறாக, அதனை கூர்மைப்படுத்தும் வேலைகளையே செய்திருக்கின்றனர். இது எதனை உணர்த்துகின்றது, நீங்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் அவர்கள் எதைச் செய்ய நினைக்கின்றார்களோ, அதனையே செய்வார்கள். அவ்வாறாயின் தமிழ் மக்கள் வழங்கும் வாக்கின் பெறுமதி என்ன? கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களின்போதும் இதனைத் தெளிவாக நோக்கலாம் – தமிழ் மக்களின்
வாக்குகளை பெற்றவர்களில் மைத்திரிபால ஒருவரே அதிகாரத்துக்கு வந்தார்

ஆனால், அவரும் எதனையும் தமிழ் மக்களுக்காகச் செய்யவில்லை. இந்த ஜனாதிபதித் தேர்தலை பொறுத்தவரையில் யார் வெற்றி பெறுவார்
என்பதைக் கணிப்பது மிகவும் கடினமாக இருக்கின்றது. அநுரகுமார சிங்கள
மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படுகிறாரென கணிப்புகள் கூறுகின்றன.
கோட்டபாயவின் ஆதரவுத் தளம் முழுவதும் அநுரவுக்கு மாறியிருப்பதாகவும்
கூறப்படுகின்றது. இந்த நிலையில் அநுரகுமார வெற்றிபெற்றால் தோல்வி
யடையப் போகும் ஒருவருக்கு அளிக்கப்படும் தமிழ் வாக்குகளின் பெறுமதி என்ன? கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, சஜித் பிரேமதாஸவுக்கே
தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர். ஆனால், அவர் வெற்றிபெறவில்லை.

அப்போதும் சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் அரசியல்வாதிகள்
கோரியிருந்தனர். இப்போதும் தமிழ் அரசு கட்சியின் ஓர்அணி, சஜித்
பிரேமதாஸவுக்கு வாக்களிக்குமாறு கூறுகின்றது. சுமந்திரன் தேர்தல்
பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றார். சஜித் வெற்றி பெறுவதற்கான
வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருப்பதாகவும் கணிப்புகள் உண்டு.
ஏனெனில், சஜித் வெற்றிபெற வேண்டுமாயின் அவருக்கு தமிழ், முஸ்லிம்,
மலையக மக்களின் முழுமையான வாக்குகள் கிடைக்க வேண்டும் அதற்கான வாய்ப்பு தற்போதில்லை. ஏனெனில், தமிழ்த் தேசிய உணர்வுள்ள
மக்களுக்கு முன்னால் தமிழ் பொது வேட்பாளர் ஒரு தெரிவாக இருக்கின்றார்.

இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் தமிழ் அரசியல்
வாதிகளும் இருக்கின்றனர். அவர்களும் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் மக்களின் வாக்குகள் மூன்றாக பிரிகின்றது? இது
தமிழ் மக்களின் ஜனநாயக பலத்தை காண்பிப்பதற்கு உகந்த ஒன்றல்ல.
ஆனால், இதனை இலகுவாக சரி செய்ய முடியும் – எப்படி?

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்ப் பொது
வேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊhடாக தமிழ் மக்களின் ஒற்றுமையை
காண்பிக்க முடியும். இதன்மூலம் தென்னிலங்கை அதிகார போட்டியிலிருந்து நாங்கள் விலகி நிற்க முடியும். அதிகாரத்துக்கு வருபவருடன் தமிழ் மக்களின் தலைவர்கள் பேச முடியும். இது ஒன்றுதான் இன்றைய சூழலில் தமிழ் மக்கள் மேற்கொள்ளக்கூடிய புத்திசாலித்தனமானமுடிவாகும். ஏனைய முடிவுகள்
எவையுமே புத்திசாதுர்யமான முடிவுகளாக இருக்க முடியாது. அவைகளை முட்டாள்த்தனமான தீர்மானங்கள் என்று கூறுவதைத் தவிர, வேறு சொற்களை கண்டுபிடிப்பது கடினமானது.
 
https://eelanadu.lk/எது-புத்திசாலித்தனம்-எத/

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த தற்போதைய ஈழநாடு பத்திரிகை 87 இற்கு முன்பு இருந்த ஈழநாடு பத்திரிகையைப் போன்றதல்ல அதன் டபொறுப்பாளரும் ஆசிரியரும் தீவிர இந்திய விசுவாசிகள்.அவர்கள் ஏமோ ஒரு காரணத்திற்காக பொது வேட்பாளரை ஆதரிக்கிறார்கள்.அதே போல் பொது வேட்பாளரின் பின்னால் உள்ள அரசியல்தலைவர்களும் கட்சிகளும் உறுதியான தமிழ்த்தேசிய வாதிகள் அல்ல.22 ஆம் திகதிக்குப் பின் பல தமிழ்த்தேசியவாதிகள் காணாமல் போவரர்கள்.இந்த வேளையில் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ நிறுத்திய பொது வேட்பாளரை தமிழ்மக்கள் ஆதரிப்பது தமிழ்த்தேசியத்தை விட்டு விலகினால் எல்லோரும் செல்லாக்காசுகளே என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கும்.தமிழ்மக்களை தமிழ்த்தேசியத்தின் கீழ் ஒரணியில் திரள வைக்கும் முயற்சியில் பல அரசியல்வாதிகளிளின் சுயரூபங்கள் வெளிவந்து சந்தி சிரிக்கின்றது. அவர்களது முகத்திரையைக் கிழிக்க உதவியதற்காகவேனும் இந்தப் பொது வேட்பாளரை தமிழ்மக்கள் ஆதரித்து வாக்களிப்பது நாம் சர்வதேசத்துக்கு ஒரு செய்தியைச் சொல்லவிடினும் தமிழ்மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தமிழ்அரசியல்வாதிகளுக்கு ஒரு தெளிவான செய்தியைக் கொடுக்க முடியும்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத நிலையில் வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்படலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நியாயம் said:

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத நிலையில் வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்படலாம்?

தமிழீழம் 

சுயநிர்ணயம்

வடக்கு கிழக்கு இணைந்த தீர்வு 

சாதியம் 

பிரதேச வாதம் 

இவை அனைத்துமே கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத இனத்தவர்களால் தான் சொல்லப்படுகிறது. அப்படியானால் எல்லாவற்றையும் விட்டு விடலாம் என்கிறீர்களா???

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு கட்டுரை.

எனது எண்ணத்திலுள்ளதை எழுதியிருக்கிறார்கள்.

காலாகாலமாக வாக்குகளைப் போட்டுப் போட்டு அவர்களிடம் அடி வாங்கியது தான் மிச்சம்.

அவர்களுக்கு வாக்கைப் போடுவானேன்,கவலைப்படுவானேன்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, கிருபன் said:

எது புத்திசாலித்தனம் – எதுமுட்டாள்தனம்?

இப்படி ஒரு கட்டுரையை ஈழநாடு எழுதாமல் இருந்திருந்தால் அது புத்திசாலித்தனம்.

எழுதியது முட்டாள்தனம்

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

தமிழீழம் 

சுயநிர்ணயம்

வடக்கு கிழக்கு இணைந்த தீர்வு 

சாதியம் 

பிரதேச வாதம் 

இவை அனைத்துமே கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத இனத்தவர்களால் தான் சொல்லப்படுகிறது. அப்படியானால் எல்லாவற்றையும் விட்டு விடலாம் என்கிறீர்களா???

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் போடும் முடிச்சு இது  👆

  • கருத்துக்கள உறவுகள்
Posted

""தென்னிலங்கை அதிகார போட்டியிலிருந்து நாங்கள் விலகி நிற்க முடியும். அதிகாரத்துக்கு வருபவருடன் தமிழ் மக்களின் தலைவர்கள் பேச முடியும். இது ஒன்றுதான் இன்றைய சூழலில் தமிழ் மக்கள் மேற்கொள்ளக்கூடியபுத்திசாலித்தனமானமுடிவாகும்""

அதெப்படி அதிகாரத்திற்கான போட்டியில் இருந்து விலகி நின்றுவிட்டு, பின்னர், எப்படி அதிகாரத்திற்காக பேரம் பேச முடியும்? 

பேட் பேசுவதற்கு எங்களிடம் இருக்கும் துருப்புச் சீட்டு என்ன? 

இந்தியாவின் சொல்லைக்கேட்டு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் தவற விடுவது வாடிக்கையாகிவிட்டது. 

""வெறும் கை முழம் போடாது""

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, புலவர் said:

இந்த தற்போதைய ஈழநாடு பத்திரிகை 87 இற்கு முன்பு இருந்த ஈழநாடு பத்திரிகையைப் போன்றதல்ல அதன் டபொறுப்பாளரும் ஆசிரியரும் தீவிர இந்திய விசுவாசிகள்.அவர்கள் ஏமோ ஒரு காரணத்திற்காக பொது வேட்பாளரை ஆதரிக்கிறார்கள்.அதே போல் பொது வேட்பாளரின் பின்னால் உள்ள அரசியல்தலைவர்களும் கட்சிகளும் உறுதியான தமிழ்த்தேசிய வாதிகள் அல்ல.22 ஆம் திகதிக்குப் பின் பல தமிழ்த்தேசியவாதிகள் காணாமல் போவரர்கள்.இந்த வேளையில் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ நிறுத்திய பொது வேட்பாளரை தமிழ்மக்கள் ஆதரிப்பது தமிழ்த்தேசியத்தை விட்டு விலகினால் எல்லோரும் செல்லாக்காசுகளே என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கும்.தமிழ்மக்களை தமிழ்த்தேசியத்தின் கீழ் ஒரணியில் திரள வைக்கும் முயற்சியில் பல அரசியல்வாதிகளிளின் சுயரூபங்கள் வெளிவந்து சந்தி சிரிக்கின்றது. அவர்களது முகத்திரையைக் கிழிக்க உதவியதற்காகவேனும் இந்தப் பொது வேட்பாளரை தமிழ்மக்கள் ஆதரித்து வாக்களிப்பது நாம் சர்வதேசத்துக்கு ஒரு செய்தியைச் சொல்லவிடினும் தமிழ்மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தமிழ்அரசியல்வாதிகளுக்கு ஒரு தெளிவான செய்தியைக் கொடுக்க முடியும்.

ஆரம்பம்: சர்வ தேசத்த்திற்கு ஒரு செய்தியைச் சொல்லப் போகிறோம்!

நடுக்கதை: சிங்களக் கட்சிகளுக்கு (முக்கியமாக ரணிலுக்கு, 2005 பாணியில்😎) ஒரு செய்தியைச் சொல்லப் போகிறோம்!

கடைசி மூலை: "எங்களுக்குப் பிடிக்காத" தமிழ் தலைவர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லப் போகிறோம்!

ஆரம்பத்திலேயே செல்வத்தார் வாய் தவறிப் போட்டுடைத்திருக்கிறார்: முன்னாள் ஆயுத தாரிகள் அல்லாத, "தீவிர தமிழ் தேசிய வண்டியில் மிதிபலகையில் தொத்திக் கொண்டு வயிறு வளர்க்கும்" நிலையில் இல்லாத தலைவர்களை எதிர்க்கத் தான் இந்த பொது வேட்பாளர் கூத்து! இதைத் தான் நீங்கள் இப்ப மீளவும் சொல்லியிருக்கிறீர்கள் எனக் கருதுகிறேன்!

Posted

போரும் அதன் பின் மகிந்த / கோத்தா வின் சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலையுடனான ஆட்சியும், அடக்குமுறைகளும் தமிழ் மக்களை ஓரளவுக்கேனும் ஓரணியில் நின்று குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு அதிகமானோர் வாக்களிக்கும் போக்கை உருவாக்கி இருந்தது. மகிந்தவை எப்பாடு பட்டாவது ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காகவே மக்கள் சரத் போன்சேக்காவுக்கு, மைத்திரிக்கு, சஜித்துக்கு வாக்களித்தனர்.

மகிந்தவை தோற்கடித்து மைத்திரியை கொண்டு வந்தது தமிழ் / முஸ்லிம் வாக்குகள் தான். இதனால் தான் மகிந்த தன்னை தமிழர்கள் தோற்கடித்து விட்டனர் என சிங்கள மக்களுக்கு சொல்லிக் கொண்டு இருந்தார்,

ஆனால் இன்று வெளித்தெரியக் கூடிய, அன்றாட வாழ்வில் உணரக் கூடிய இராணுவ மற்றும் அடக்குமுறைகள் வடக்கு கிழக்கில் இல்லை. இனவாதம் பேசி தேர்தலில் வெல்ல முடியாத என்ற சூழ்நிலையில் முன்னனி சிங்கள வேட்பாளர்கள். 

ஆகவே வடக்கு கிழக்கு தமிழ் (பேசும்) மக்கள் ஓரணியில் திரளக் கூடிய சூழ்நிலை இன்று இல்லை. இவர்களின் வாக்குகள் 3 ஆக பிரியும் இந்த தடவை.

இந்த யாதார்த்தைப் புரிந்து கொள்ளாத தமிழ் தலைமைகள் தான் இன்று அவர்களுக்காக அரசியல் செய்கின்றனர். நாளை மறுதினம் இதனைப் புரிந்து கொள்வர்.
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, நிழலி said:

ஆகவே வடக்கு கிழக்கு தமிழ் (பேசும்) மக்கள் ஓரணியில் திரளக் கூடிய சூழ்நிலை இன்று இல்லை. இவர்களின் வாக்குகள் 3 ஆக பிரியும் இந்த தடவை.

இப்படி மூன்றாகப் பிரியும் போது, ஒப்பீட்டளவில் இப்போது இருக்கும் சுமூக நிலையை குலைத்துப் போடக் கூடிய ஒரு நிர்வாகம் தெற்கில் உருவானால் தாயக மக்கள் என்ன செய்வது?

பொது வேட்பாளரை எதிர்ப்போரை பந்தி பந்தியாக திட்டும் ஆய்வாளர்கள் கூட இந்த எளிமையான கேள்வியை காணாதது போல கடந்து போயிருக்கின்றனர்😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் போடும் முடிச்சு இது  👆

சிலருக்கு கூரையில கோழி 

சிலருக்கு மொட்டந்தலை

சிலருக்கு துரும்பு 

எனக்கு உரோமம் …....

தமிழன் வழி எப்போழுதுமே நாலு தானே .....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லாத்துக்கும் அரசியல் சாணக்கியர் நிலாந்தன் மாஸ்டர் பதில் கொடுப்பார் இருபத்திரெண்டாந்தேதி!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Justin said:

ஆரம்பம்: சர்வ தேசத்த்திற்கு ஒரு செய்தியைச் சொல்லப் போகிறோம்!

நடுக்கதை: சிங்களக் கட்சிகளுக்கு (முக்கியமாக ரணிலுக்கு, 2005 பாணியில்😎) ஒரு செய்தியைச் சொல்லப் போகிறோம்!

கடைசி மூலை: "எங்களுக்குப் பிடிக்காத" தமிழ் தலைவர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லப் போகிறோம்!

அனால் தற்போது வட்சப்பில் வந்த பேட்டியில் ஜனாதிபதி தமிழ் வேட்பாளர் சொல்கிறார் சிங்கள தலைவர்களுக்கு ஒரு செய்தியை கொடுப்பதற்காக என்று சொல்கிறார்  காணொளியில் 2:30

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று இது பலிக்கடா! நாளை இது வளர்த்தகடா!

இப்ப அரியத்தை ஆதரிக்கிற வாய்களெல்லாம் வெகு சீக்கிரத்தில் தூற்றுகின்ற காலம் வரும்!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.