Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Anura-Kumara-Dissanayake-1.png

 

யார் இந்த அநுர குமார திஸாநாயக்க? கடந்து வந்த பாதை!!

#முழு பெயர் – திஸாநாயக்க முதியன்சலாகே அநுரகுமார திஸாநாயக்க.

#பிறப்பு – 1968.11.24.

#பிறந்த ஊர் – கலேவெல – நான்கு வருடங்களுக்கு பிறகு கெக்கிராவையில் குடியேறினார்.

#ஆரம்ப கல்வி – தம்புத்தேகம காமினி வித்தியாலயம்.

#உயர் கல்வி – தம்புத்தேகம மத்திய கல்லூரி.

குறித்த பாடசாலையிலிருந்து உயர்தரத்தில் சித்தியடைந்து – பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவர் இவராவார்.

1992 இல் களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இவர் 1995 இல் பட்டதாரியானார்.

#அரசியல் வாழ்க்கை!

#1997 இல் சோஸலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

#1997 இல் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், 1998 இல் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

#1998 இல் மத்திய மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டார்.

#2000 இல் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

#2004 இல் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். கூட்டணி அரசாங்கத்தில் விவசாய அமைச்சர் பதவியையும் வகித்தார்.

#2008 இல் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

#2010 இல் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு….

#2014 ஜனவரி 2 ஆம் திகதி ஜே.வி.பியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவர் பதவியேற்ற பின்னர் மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி அதிகரித்தது.

#2015 நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் செயற்பட்டார்.

#2019 ஆகஸ்ட் 18 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டார்.

#ஜனாதிபதி தேர்தலும் ஜே.வி.பியும்

1982ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் அதன் நிறுவுநரான றோகண விஜேவீர போட்டியிட்டு, 273,428 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

#அதன் பின்னர்,1999 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் நந்தன குணதிலக போட்டியிட்டு, 344,173 வாக்குகளைப் பெற்றிருந்தார். ( தற்போது ஐக்கிய தேசியக்கட்சியில் அங்கம் வகிக்கின்றார்.

#2010 இல் பொது வேட்பாளராக களமிறங்கிய பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியது.

#2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்ககூடாது என பிரசாரம் முன்னெடுத்தது.

உண்மை உரைகல்

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த அநுர குமார திஸாநாயக்க? தமிழர் விவகாரங்களில் அவரது நிலைப்பாடு என்ன?

அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க
22 செப்டெம்பர் 2024, 13:20 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அநுர குமார திஸாநாயக்க 2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள்ளார்.

அவர் யார், அவரது பின்னணி என்ன?

அநுராதபுரம் மாவட்ட தம்புத்தேகம பகுதியில் 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி அநுர குமார திஸாநாயக்க பிறந்தார்.

தம்புத்தேகம கமினி மகா வித்யாலயாவிலும் தம்புத்தேகம மத்திய கல்லூரியிலும் படித்த அநுர குமார திஸாநாயக்க, அங்கிருந்து பேராதனை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

 

பாடசாலை காலத்தில் இருந்தே அரசியலில் அநுர குமாரவுக்கு அதிக ஆர்வம் இருந்தது. தனது 19வது வயதில் இலங்கையின் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் இடதுசாரிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவில் இணைந்தார்.

ஒரு கட்டத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து விலகி, களனி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

கடந்த 1995ஆம் ஆண்டு வாக்கில் அவரை சோஷலிச மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக ஜே.வி.பி. நியமித்தது. அக்கட்சியின் மத்திய பணிக் குழுவிலும் அவருக்கு இடமளிக்கப்பட்டது.

கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனவின் தேசிய பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்தில் நுழைந்தார் அநுர குமார. 2001ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.

 

கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 39 இடங்கள் அக்கட்சிக்குக் கிடைத்தன. குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க, 1,53,868 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜே.வி.பியும் இணைந்து ஆட்சி அமைத்தன. இந்த அரசாங்கத்தில் விவசாயம், கால்நடைகள், காணி, நீர்பாசனத் துறை அமைச்சராக அநுர குமார பதவியேற்றார்.

ஆனால், சுனாமிக்குப் பிறகு, வடக்கிலும் கிழக்கிலும் புலிகளுடன் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சந்திரிகா குமாரதுங்க அரசு முடிவு செய்தபோது, அதை எதிர்த்து ஜே.வி.பி. அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர். அநுரவும் பதவி விலகினார்.

 

கடந்த தேர்தலில் மூன்றாம் இடம்

அநுர குமார

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அநுரவுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் திரண்டனர்

கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த ஜே.வி.பியின் தேசிய மாநாட்டில், அக்கட்சியின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் அநுர குமார.

அதைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் 2019ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி 2019ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க முதல் தடவையாகப் போட்டியிட்டார். வெறும் சுமார் 3 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையே பிடித்தார் அவர்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ தேர்வான நிலையில், ஊழலுக்கு எதிராக அநுர குமார திஸாநாயக்க தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்தார். இதனால், அவருக்கான ஆதரவுத்தளம் வலுவடைய ஆரம்பித்தது. மேலும் பொருளாதார நெருக்கடியின்போது நடந்த போராட்டங்களிலும் அநுர குமார முன்னணியில் இருந்தார்.

இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அநுர குமார திஸாநாயக்க போட்டியிடுவதாக அறிவித்தார். அவருக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் திரண்டனர்.

 

வன்முறைகளுக்கு மன்னிப்பு

அநுர குமார

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க முதல் தடவையாகப் போட்டியிட்டார்

அநுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், கடந்த காலங்களோடு ஒப்பிட்டால் பெருமளவு கூட்டம் திரண்டது. கடந்த தேர்தலில் வெறும் 3 சதவீத வாக்குகளைப் பெற்ற ஒருவர், 2024 தேர்தலில் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.

தற்போது அவர் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் போட்டியிட்டிருந்தாலும் அவர் தலைமை வகிக்கும் ஜனதா விமுக்தி பெரமுனவின் கடந்த காலம் வன்முறைகளால் நிறைந்தது.

கடந்த 1971இல் பண்டாரநாயக அரசுக்கு எதிராக ஜே.வி.பி. நடத்திய கிளர்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். அதேபோல, 1987 - 89 காலப் பகுதியில் இந்தியா - இலங்கை அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக ஜே.வி.பி. நடத்திய கலகத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.

ஆனால், 2014இல் ஜே.வி.பியின் தலைவரான பிறகு பிபிசிக்கு அளித்த பேட்டியில், அக்கட்சியின் கடந்த கால வன்முறைகளுக்காக மன்னிப்பு கோரினார் அநுர. அக்கட்சி இலங்கையில் நிகழ்த்திய வன்முறைகளுக்கு மன்னிப்பு கோரியது அதுவே முதலும் கடைசியுமாக இருந்தது.

தமிழர் பிரச்னையில் நிலைப்பாடு என்ன?

இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை அளிப்பதற்காக 13வது சட்டத் திருத்தம் இலங்கையின் அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்டது.

நிலம், காவல் மற்றும் நிதி தொடர்பாகக் கூடுதல் அதிகாரத்தை இந்த சட்டத் திருத்தம் மாகாண சபைகளுக்கு அளிக்கிறது. ஆனால், இதுவரை மாகாண சபைகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வடக்கு - கிழக்கு பகுதிகளுக்குப் பயணம் செய்த அநுர குமார, யாழ்ப்பாணத்தில் பேசினார். அப்போது, "நான் 13வது சட்டத் திருத்தத்தைச் செயல்படுத்துகிறேன். பதிலுக்கு எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்க நான் வரவில்லை. கூட்டாட்சி முறையை அளிக்கிறேன், எனக்கு வாக்களியுங்கள் எனக் கேட்க வரவில்லை" என்றார். இது அந்தத் தருணத்தில் தமிழர் தரப்புக்கு ஏமாற்றத்தையே அளித்தது.

ஆனால், தேர்தலுக்கு நெருக்கமாக அநுர குமார தனது நிலைப்பாட்டை சற்று மாற்றிக்கொண்டார்.

ஜூன் மாதத்தில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்து தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார் அநுர. அந்த சந்திப்பிற்குப் பிறகு பேசிய அவர், மாகாண சபைகள் தொடர்ந்து செயல்படும் எனக் கூறினார்.

ஆனால், மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது பற்றி அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. மேலும், ஜனதா விமுக்தி பெரமுனவை பொறுத்தவரை, அது நீண்ட காலமாகவே அதிகாரப் பகிர்வை எதிர்த்து வருகிறது.

ஆனால், தற்போதைய புதிய சூழலில் அக்கட்சி என்ன செய்யும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

அதானி திட்டத்திற்கு எதிர்ப்பு

அநுர குமார திஸாநாயக்கவின் பிரசார கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்கவின் பிரசார கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள்

இரு நாட்டு உறவுகளைப் பொறுத்தவரை, இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளுமே இலங்கைக்கு மிக முக்கியமானவை.

இரு நாடுகளுமே இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் கடனுதவிகளைச் செய்திருக்கின்றன. ஜே.வி.பி ஒரு இடதுசாரி கட்சியாக இருப்பதால், இயல்பாகவே சீனாவுக்கு நெருக்கமாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. மேலும், மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை வலியுறுத்தும் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறது ஜே.வி.பி.

இந்த ஒப்பந்தம் இலங்கை மீது இந்தியாவால் திணிக்கப்பட்டதாகவும் கருதுகிறது.

செப்டம்பர் 16ஆம் தேதியன்று ஒரு அரசியல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற அநுர, அதானி குழும முதலீட்டில் உருவாகும் காற்றாலை மின் திட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறினார். அந்தத் திட்டம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் கூறினார்.

ஆனால், இந்தத் திட்டத்தில் கூடுதல் விலைக்கு மின்சாரம் இலங்கைக்கு விற்கப்படும் என்பதாலேயே அதற்கு எதிராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் பிராந்தியத்தில் உள்ள எந்த சக்திகளையும் பகைத்துக்கொள்ள மாட்டோம் என அக்கட்சியினர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அநுர குமாரவும் இந்தியாவுக்கு வந்து சென்றார். ஆகவே, வரும் நாட்களில் இந்தியா தொடர்பான, அவரது அணுகுமுறை என்னவாக இருக்கும் என்பது தெரிய வரும்.

அநுரவை பொறுத்தவரை, ஒரு கடினமான உழைப்பாளி என்பதில் சந்தேகமில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 3 இடங்களைப் பிடித்த கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் பிரச்னைகளையும் இதே தீவிரத்தோடு எதிர்கொள்வாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

அநுரா சனாதிபதி ஆனதும் கோத்தா சனாதிபதி ஆவதும் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்துக்கு ஒன்றுதான்.. பொருளாதாரத்தில் ஏதும் மாற்றம் வரலாம் ஆனால் அரசியலில் தமிழர்களுக்கு எந்த அநுகூலமான தீர்வும் கிடைக்காது.. இருக்கும் மாகாண சபைகளும் இல்லாமல் போகுதோ தெரியா..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, ஏராளன் said:

இரு நாட்டு உறவுகளைப் பொறுத்தவரை, இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளுமே இலங்கைக்கு மிக முக்கியமானவை.

இரு நாடுகளுமே இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் கடனுதவிகளைச் செய்திருக்கின்றன. ஜே.வி.பி ஒரு இடதுசாரி கட்சியாக இருப்பதால், இயல்பாகவே சீனாவுக்கு நெருக்கமாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. மேலும், மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை வலியுறுத்தும் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறது ஜே.வி.பி.

இந்த ஒப்பந்தம் இலங்கை மீது இந்தியாவால் திணிக்கப்பட்டதாகவும் கருதுகிறது.

அனுர ஆட்சி கிந்தியாவிற்கு பலத்த சவாலாக இருக்கும்   என நினைக்கின்றேன்.

Edited by குமாரசாமி
எழுத்துப்பிழை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அனுர ஆட்சி கிந்தியாவிற்கு பலத்த சவாலாக  என நினைக்கின்றேன்.

 

ஒரு காலத்தில் இந்தியாவிற்கு எதிராக பல தடைகளை ஜே வி பி விதித்தது. இந்திய பொருட்களை விற்பதற்கு கடைக்காரர் பயந்த ஒரு காலம் உள்ளது. ஆனால் அப்போதைய ஜே வி பி தலைமையின் கடும்போக்கு கால ஓட்டத்தில் நீர்ந்துபோய் மென்போக்காளர்களாக மாறி உள்ளார்கள் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

அனுர ஆட்சி கிந்தியாவிற்கு பலத்த சவாலாக  என நினைக்கின்றேன்.

அப்படி வந்தால்  ....வடக்கு கிழக்கு இல்  கொஞ்ச தமிழர்களை பிடித்து ஆயுதப் பயிற்சி கொடுத்தால் பிரச்சனை தீர்ந்தது. 🙏

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

அனுர ஆட்சி கிந்தியாவிற்கு பலத்த சவாலாக இருக்கும்   என நினைக்கின்றேன்.

 

7 hours ago, நியாயம் said:

 

ஒரு காலத்தில் இந்தியாவிற்கு எதிராக பல தடைகளை ஜே வி பி விதித்தது. இந்திய பொருட்களை விற்பதற்கு கடைக்காரர் பயந்த ஒரு காலம் உள்ளது. ஆனால் அப்போதைய ஜே வி பி தலைமையின் கடும்போக்கு கால ஓட்டத்தில் நீர்ந்துபோய் மென்போக்காளர்களாக மாறி உள்ளார்கள் என நினைக்கின்றேன்.

அனுர JVP யில் இணைந்தது 1987களில்,...ஏன் என்று புரியுமென நினைக்கிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

AKD-Speech-At-Colombo-Muslims-Brotherhoo

"நாம் ஒரு நாள் இறந்தாலும், நாம் மகிழ்ச்சியாக இறக்கலாம், எங்கள் சொந்த மக்களுக்காக போராடினோம் என்ற நிம்மதியுடன்."
 என் அப்பா அரச ஊழியர்...
 அம்மாவால் இன்றும் எழுத முடியாது.
 தொலைதூர கிராமங்களில் வாழ்ந்த எங்களுக்கு உணவு கிடைக்காமல் தாய், தந்தை படும் துன்பத்தை நம் கண்களால் பார்த்தோம்...
எங்கள் கிராமப்புற பள்ளியில் பல ஆண்டுகளாக ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் இல்லை.விரைவாக, வந்த ஆசிரியர்கள் பலர் இடமாற்றம் பெற்று வேறு மாகாணங்களுக்கு சென்றனர்.
 மிகச்சில ஆசிரியர்களே எங்களைத் தங்கள் குழந்தைகளாகக் கருதி எங்களுக்காக அர்ப்பணித்துள்ளனர்.அவர்கள் இல்லாமல் நாம் இன்று இல்லை.
பெற்றோரின் சொற்ப வருமானம் கல்விச் செயல்பாடுகளுக்குப் போதாததால், பள்ளி விடுமுறை நாட்களில் புகையிரதத்தில் மாம்பழம், டொபி, சிகரெட் விற்று,
மகாவலி கிராமத்திற்கு வியாபார நிமித்தம் வந்த போது மகாவலிக்குட்பட்ட வீதிகளில் வடிகால் வெட்டி,அப்போது, இருபது ரூபாய்  ஒரு வடிகால் வெட்ட.
 நானும், ஊர் நண்பர்களும் இருபது ரூபாய்க்கு ரோட்டில் வடிகால் வெட்டுவது வழக்கம்.
 அந்த அளவுக்கு ஏழ்மை எங்கள் வாழ்வில் அழுத்தத்தை கொண்டு வந்தது.
 எனது நண்பர்கள் பலர் தங்கள் கல்வியை நாசப்படுத்தினர்.
 கற்றுக்கொள்ள முடியாததால் அல்ல
 குடும்பத்தில் படிக்க போதிய பணம் இல்லாததால்.
 வறுமையின் காரணமாக சிலர் குடிபோதையில் பழகி அகால மரணம் அடைந்தனர்.
 அவர்கள் இறக்கும் வயது வரவில்லை.
 சிலரது மனைவிகள் வெளிநாடு சென்று அவர்களது குடும்பங்கள் அழிந்தன.
இந்த வறுமை நமது சமூகத்தில் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
 வறுமையை ஃபேஷன் ஆக்கி, மாளிகைகளில் வாழ்ந்து கொண்டு, உலகம் பார்க்க ரப்பர் செருப்புகளை அணிந்து கொள்பவர்கள்  
அல்ல நாம்..
 நான் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன்..
தூரத்தில் உள்ள கிராமத்தில் பல ஏழைகள்
 தந்தை மற்றும் சகோதரர்கள் ஜனாதிபதியான,  சிறந்த பள்ளிகளில் படித்த. கொழும்பை மையமாகக் கொண்ட,  இச் சமூகத்தில் ஆடம்பரமான மாளிகைகளில் வளர்ந்த வேட்பாளர்கள் மத்தியில்,  தூரத்துக் கிராமத்தில் இருந்து வந்து இந்த நாட்டின் ஜனாதிபதி பதவிக்காக போராட வந்த ஒரு சிறிய மனிதனான நான், தோளோடு தோள் நிற்கிறேன். 
 என்னுடன் எனது சொந்த வகுப்பில் வாழ்ந்த இந்த நாட்டின் ஏழை மக்கள் எனக்கு பலம் தந்து உதவினர்.
 வறுமையில் வாடும் என் வர்க்கத்தில் உள்ள மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டிய மீள முடியாத பொறுப்பு எனக்கு இருக்கிறது.
 அதற்காக அரசியல் செய்கிறோம்.
ஒரு நாள் இறந்தாலும், நம் மக்களுக்காகப் போராடினோம் என்ற நிம்மதியுடன், மகிழ்ச்சியாக இறக்கலாம்...
 - அனுரகுமார திஸாநாயக்க -

உண்மை உரைகல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kandiah57 said:

அப்படி வந்தால்  ....வடக்கு கிழக்கு இல்  கொஞ்ச தமிழர்களை பிடித்து ஆயுதப் பயிற்சி கொடுத்தால் பிரச்சனை தீர்ந்தது. 🙏

ஆயுதத்தை இனி யாருமே விரும்பமாட்டார்கள். இனி வரும் காலங்கள் ஆயுதம் சரியான தெரிவாக இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

ஆயுதத்தை இனி யாருமே விரும்பமாட்டார்கள். இனி வரும் காலங்கள் ஆயுதம் சரியான தெரிவாக இருக்காது.

ஆமாம் உண்மை தான்   ஆனாலும் இந்தியாவின் சொல்லு கேட்கும் ஒரு சிறு கூட்டம் எம் மத்தியில் உண்டு”    

5 hours ago, தமிழ் சிறி said:

ஒரு நாள் இறந்தாலும், நம் மக்களுக்காகப் போராடினோம் என்ற நிம்மதியுடன், மகிழ்ச்சியாக இறக்கலாம்..

இப்படி தான் புலிகள் இறந்தார்கள். 

அவர்கள் உங்கள் தோழர்களா.   ?????🙏🙏🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Kandiah57 said:

ஆமாம் உண்மை தான்   ஆனாலும் இந்தியாவின் சொல்லு கேட்கும் ஒரு சிறு கூட்டம் எம் மத்தியில் உண்டு”    

அரசியல் ரீதியாக மூல முளைகளை  களையெடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அரசியல் ரீதியாக மூல முளைகளை  களையெடுக்க வேண்டும்.

 

இந்திய சொல் கேட்கும் கூட்டத்தை.. யார்? நீங்கள்? களையெடுக்கிறது? 😁

  • கருத்துக்கள உறவுகள்
On 22/9/2024 at 16:40, தமிழ் சிறி said:

1968.11.24.

ஜெ.வி பி யின் ஆயுத புரட்சி நடக்கும் பொழுது தம்பிக்கு 3 வயசு ....60 ஆயிரம் சிங்கள இளைஞர்கள்,ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களின் மரணத்தின் பின்பு இவர் பதவிக்கு வந்துள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் திருமணமானவரா என்று தெரியவில்லை? இவர் பொது நிகழ்வுகளில் குடும்ப அங்கத்தவர்களை தவிர்த்து வருகின்றார் என நினக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

இவர் திருமணமானவரா என்று தெரியவில்லை? இவர் பொது நிகழ்வுகளில் குடும்ப அங்கத்தவர்களை தவிர்த்து வருகின்றார் என நினக்கின்றேன்.

பொதுவாக ஜேவிபி தமது குடும்ப உறுப்பினர்களை முதன்மை படுத்துவதில்லை. ஜேவிபியில் இருந்து 1998/1999 இல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சின்னம்மாவின் மகனின் மனைவியை மறுமணம் முடித்து இருக்கின்றார், கேணல். சங்கரண்ணா மாதிரி. அவருடைய பெயர் மல்லிகா ரத்னாயக்க, அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

May be an image of 5 people and wedding

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

அரசியல் ரீதியாக மூல முளைகளை  களையெடுக்க வேண்டும்.

உண்மைதான், ஆனால் இந்தியக் கைக்கூலிகள் உட்படச் சிங்களத்துக்குச் செம்பு தூக்கும் இவர்களைக் களைவது இலகுவல்ல. இவர்களது படிப்பே எப்படி ஏழை மக்களை ஏமாற்றித் தம்மைத் தக்க வைப்பதென்பதே. இல்லையென்றால் சும் சிங்களக் காவல்துறைப் பாதுகாப்போடு வடமராட்சியில் சுற்றித்திரிந்தவிட்டுச் சஜித்துக்கும் வாக்குக் கேட்க முடிந்திருக்கிறதே. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.