Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

“நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   22 SEP, 2024 | 07:55 PM

image
 

கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட ஊடக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை எனும் அன்புக்குரிய குழந்தையினை சவால்மிகு தொங்குபாலத்தின் ஊடாக தான் இதுவரை பாதுகாப்பாகக் கொண்டுவந்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி அந்தக் குழந்தையை இன்னும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் ஊடாகக் கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தமது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழு உரையும் வருமாறு,

வணக்கம்

அன்புள்ள பிரஜைகளே,

செப்டம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் தீர்மானமொன்றை வழங்கியுள்ளனர். நாம் அந்தத் தீர்மானத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை அரசின் நல்லிருப்பினை உறுதிப்படுத்த வேண்டும். 

இற்றைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வங்குரோத்து அடைந்து, பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாக வீழ்ச்சிடைந்திருந்த, மிகவும் கடினமானதொரு சூழ்நிலையில் நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றேன்.

அந்த சவாலுக்கு முகங்கொடுக்கின்ற அளவிலான ஆத்ம சக்தி பெரும்பாலானோருக்கு இல்லாதிருந்த சந்தர்ப்பத்திலேயே நான் அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன்.

வரலாறு எனக்கு வழங்கிய அந்தப் பொறுப்பினை நான் சிறப்பாக நிறைவேற்றினேன்.

இரண்டு வருட குறுகிய காலப்பகுதியினுள் என்னால் இந்த நாட்டினை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது.

எனது அரசியல் வாழ்வில் எனது நாட்டுக்காக செய்யக் கிடைத்த பெறுமதியான கடமைப் பொறுப்பு அதுவாகும் என நான் நம்புகிறேன்.

நான் நாட்டைப் பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் நூற்றுக்கு எழுபது வீதமாகக் காணப்பட்ட பணவீக்கத்தினை பூச்சியம் தசம் ஐந்து (0.5%) வரை என்னால் குறைக்க முடிந்தது. 

இருபது மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட இந்நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பினை ஐந்து தசம் ஏழு பில்லியன் அமெரிக்க டொலராக என்னால் அதிகரிக்க முடிந்தது. 

அத்துடன் டொலருடன் ஒப்பிடுகையில் முன்னூற்று எண்பதாகக் காணப்பட்ட ரூபாயின் பெறுமதியை முன்னூறு ரூபாய் வரை குறைத்து, பலமான நிலையான பெறுமதிக்கு என்னால் அதனைக் கொண்டு வர முடிந்தது.

அத்துடன் மறை ஏழு தசம் மூன்றாக (-7.3%) காணப்பட்ட பொருளாதார வளர்ச்சியை நேர் இரண்டு தசம் மூன்று (2.3%) வரை அதிகரிப்பதற்கு நான் நடவடிக்கை மேற்கொண்டேன். அதுபற்றியும், எனது அந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க அரசியல் கடமைப் பொறுப்பு பற்றியும் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினர் உரிய மதிப்பீடொன்றை வழங்குவார்கள் என நம்புகிறேன்.

இந்த நாட்டின் ஆட்சியாளர் என்ற வகையில் வரலாற்றில் எனக்கு உரித்தான இடம் இன்று அல்லாமல் எதிர்காலத்திலேயே தீர்மானிக்கப்படும் என்பதை நான் அறிவேன்.

நான் சரியான பாதையில் சென்று மக்களின் துயரங்களை முடிந்தளவு நீக்கினேன். புதிய ஜனாதிபதி அவர்களும் அவருக்குக் கிடைத்த மக்கள் ஆணையின் பிரகாரம் சரியான பாதையினைத் தெரிவு செய்து மக்களின் துயரங்களை நீக்குவார் என நான் எதிர்பார்க்கிறேன். 

மிகவும் சவால் மிகுந்த தொங்குபாலத்தில் இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை நான் முடிந்தளவு அதிகபட்ச தூரம் பாதுகாப்பாகக் கொண்டு வந்தேன்.

தொங்குபாலத்தின் முடிவிடம் கண்களுக்கு மிகவும் எட்டும் தூரத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அந்த பாசம் மிகுந்த குழந்தையினை அனுர குமார திஸாநாயக்க அவர்களிடம் ஒப்படைப்பதற்கு நாட்டு மக்கள் தீர்மானித்துள்ளனர்.

அனுர ஜனாதிபதி அவர்களே, நீங்களும் நானும் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையை நான் மிகவும் கருணையுடன் உங்களிடம் ஒப்படைக்கிறேன். இந்தக் குழந்தையை நான் கொண்டு வந்தததை விடவும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் முடிவிடத்திற்கு கொண்டு செல்லும் ஆற்றல் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். 

அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பதவிகளை வகித்தாலும் வகிக்காவிட்டாலும் இந்த நாட்டு மக்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளை ஏற்புடைய சந்தர்ப்பங்களில் எந்தவிதமான தயக்கமும் இன்றி நான் நிறைவேற்றுவேன். 

அத்துடன், எனது ஆட்சிக் காலத்தினுள் அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய, வழங்காத அனைவருக்கும், இந்த நாட்டின் சகல பிரஜைகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/194553

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் அவர்களே…. நீங்கள் மகிந்த கூட்டத்தை பாதுகாக்காமல், தண்டனை பெற்று கொடுத்து இருபீர்களாக இருந்தால்… இன்று மக்களால் தெரிவு செய்யப் பட்ட ஜனாதிபதியாக தொடர்ந்து இருந்திருப்பீர்கள். என்ன செய்வது…. உங்களது சேவை இரண்டு வருடம் போதும் என்று மட்டுப் படுத்தப் பட்டு விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

 

மிகவும் சவால் மிகுந்த தொங்குபாலத்தில் இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை நான் முடிந்தளவு அதிகபட்ச தூரம் பாதுகாப்பாகக் கொண்டு வந்தேன்.

தொங்குபாலத்தின் முடிவிடம் கண்களுக்கு மிகவும் எட்டும் தூரத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அந்த பாசம் மிகுந்த குழந்தையினை அனுர குமார திஸாநாயக்க அவர்களிடம் ஒப்படைப்பதற்கு நாட்டு மக்கள் தீர்மானித்துள்ளனர்.

 

இந்த மனுஷனுக்கு ஏதோ நடந்து விட்டது............ தேர்தலுக்கு முன் ஆஸ்பத்திரி - அவசர நோயாளி - மருத்துவர் என்று ஒரு கதையைச் சொன்னார். இப்ப குழந்தை - தொங்குபாலம் - தொங்கினேன் என்று இன்னொரு புதுக் கதையுடன் நிற்குது இந்த மனுஷன்.

இனி வீட்டில் இருந்து கொண்டு இதே டிசைன்ல  கதை கதையாக எழுதப் போகுது போல ஆள்............ செத்தார்கள் வாசிக்கும் சிங்கள மக்கள்..........🤣.

இன்னும் மூன்று வரிசத்தில் இந்த மனிசனை மீண்டும் தேடிப் பிடித்து ஆட்சி அமைக்க சொல்லும் நிலை வராவிடின் மகிழ்ச்சி.

பார்ப்பம் 69 இலட்சம் பேரின் தெரிவு பாணுக்கும் பருப்புக்குன் லைனில் நிற்க வைத்தது

இப்ப 56 இலட்சம் பேரின் தெரிவு என்னாகும் என்று.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

செத்தார்கள் வாசிக்கும் சிங்கள மக்கள்..........🤣.

முதலில் ஜேவிபியின்ஆட்சியில் சிங்கள மக்கள் செத்து போகாமல் இருக்க வேண்டும்😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிங்களவனாக இருந்து பார்க்கும் பொது சிங்கள மக்கள் ரணிலுக்கு துரோகம் இழைத்து விட்டார்கள்.😄 ஜேஆர் காலம் தொடக்கம் இன்று வரைக்கும் இனவாத நரிப்புத்தியுடன் சிங்கள தேசத்தை கட்டிக்காத்தவர்.கலவரத்தை தூண்டாமல் இனவாதம் பேசாமல் அமசடக்காக தமிழர்களை அழிக்க பாதை பாலங்கள் போட்டு திட்டம் தீட்டியவர். 😎

இவரின் நரிப்புத்திதான் விடுதலைப்புலிகளை சிதறடிக்க வைத்தது.
இவ்வளவு செய்தும் சிங்களவர்கள் இவரை மறந்தது ஏனோ? 😂
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இன்னும் மூன்று வரிசத்தில் இந்த மனிசனை மீண்டும் தேடிப் பிடித்து ஆட்சி அமைக்க சொல்லும் நிலை வராவிடின் மகிழ்ச்சி.

பார்ப்பம் 69 இலட்சம் பேரின் தெரிவு பாணுக்கும் பருப்புக்குன் லைனில் நிற்க வைத்தது

இப்ப 56 இலட்சம் பேரின் தெரிவு என்னாகும் என்று.

 

@நிழலிஅதேதான் நடக்கபோவுது விழுந்தடித்து கொண்டு இந்திய தூதுவரும் us காரரும் வாழ்த்து சொன்ன விதம் இருக்கே mr பீன் கொமேடியை விட சிரிப்பானது .

ஆட்சிக்கு வரமுன் imf ஒப்பந்தங்களில் திருத்தம் இருக்கு என்று என்று உளறிக்கொண்டு இருப்பவர் ஏதோ imf அவர்களா வந்து கடன் வாங்குங்க என்று அழுவதி போல் அவங்கள் தான் இந்த நிலைமைக்கு காரணம் என்பதை அறியாத குஞ்சு பாப்பா இவர் என்று நம்பவா முடியும் ?

வாகன இறக்குமதி எனும் பொறியில் இருந்து எப்படி தப்பிப்பார் என்று பார்ப்போம் ?

நரியின் தெரிவு இவர் நரிக்கு தெரியும் சிங்கள மக்கள் தனக்கு வாக்கு போட மாட்டார்கள் என்று அதனால்த்தான் பணத்தை கொடுத்து சிங்கள சங்கூதி சுமத்துக்கு சஜித்துக்கு போட சொல்லி ஏவினார் .

@ரசோதரன் அனுரா உடன் அவர் படித்து இருக்கலாம் ஆனால் சிங்கள இனவாத பூதத்தில் இருந்து தப்பி வர முடியாது  அப்படி வந்தால் அவர் கொல்லபடுவார்  .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

ரணில் அவர்களே…. நீங்கள் மகிந்த கூட்டத்தை பாதுகாக்காமல், தண்டனை பெற்று கொடுத்து இருபீர்களாக இருந்தால்… இன்று மக்களால் தெரிவு செய்யப் பட்ட ஜனாதிபதியாக தொடர்ந்து இருந்திருப்பீர்கள். என்ன செய்வது…. உங்களது சேவை இரண்டு வருடம் போதும் என்று மட்டுப் படுத்தப் பட்டு விட்டது.

 சிறித்தம்பி! சிங்களவர்கள் இந்தமுறை நீதி நியாயமாக வாக்களித்திருக்கின்றார்கள் என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமா கடந்த எட்டு ஜனாதிபதிகள் அந்த தீவை ஆழ வந்த போது தமிழர் தரப்பு நம்பி  ஏமாந்தார்கள் தற்போது ஒன்பதாவது முறை இனியும் சிங்களவர்களிடம் இருந்து தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்ளும் தமிழனை என்னவென்று சொல்வது ?

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

முதலில் ஜேவிபியின்ஆட்சியில் சிங்கள மக்கள் செத்து போகாமல் இருக்க வேண்டும்😄

மனது என்ன நினைக்குதோ அதை கருத்தாய் எழுதுபவர்களில் நீங்களும் ஒருத்தர் யாழில் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

முதலில் ஜேவிபியின்ஆட்சியில் சிங்கள மக்கள் செத்து போகாமல் இருக்க வேண்டும்😄

அனுரா மிகவும் மலிவான அரசியல் செய்தே இந்த இடத்தை அடைந்து இருக்கிறார். அலரி மாளிகை உடைப்பு உட்பட பல காரியங்களை தூண்டி விட்டு செய்வித்தவர்கள் இவர்கள் தான். ரணிலின் இடைச்செருகல் கூட இவர்கள் எதிர்பாராத பின்னடைவு தான் 

இனி உண்மை முகத்தை காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

முதலில் ஜேவிபியின்ஆட்சியில் சிங்கள மக்கள் செத்து போகாமல் இருக்க வேண்டும்😄

🤣.........

சமீபத்தில் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அங்கு இரண்டு பிரிவு மாணவர்களுக்கிடையே சண்டை என்றே பூட்டப்பட்டது. ஒரு பிரிவு ஜேவிபி, அடுத்த பிரிவு இன்னொரு சோஷலிஸ்ட் முன்னணி.........!

பழைய சோஷலிஸ்டுகள் இப்பொழுது ஆட்சிக்கு வர, புதிதாக இன்னொரு முன்னணி உருவாகி, தேவையென்றால் இன்னொரு 'அரகலிய' ஆரம்பித்து, சிங்கள மக்களை காப்பாற்ற ஏற்கனவே தயாராகிவிட்டார்கள் போல...........

சிங்கள மக்கள் வாழ்வோ, தாழ்வோ ஒரு அலையாக வாக்களித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் நாலு பக்கங்களாக பிரிந்து, நண்டுகள் போல போய்க் கொண்டிருக்கின்றது எங்களின் தெரிவுகள்.

ஜேவிபியினர் ஜாதிக ஹெல உருமய, பூமி புத்ர, பொதுஜன பெரமுன போன்ற இனவாதிகள். இதை நான் மீண்டும் மீண்டும் இங்கே எழுதிக் கொண்டிருக்கின்றேன். உதய கம்மன்பில கூட இவர்களில் ஒருவர் தான். அநுர, ரில்வின், உதய, விமல்,..... என்று இந்த வரிசை இப்பொழுது பல கட்சிகளாகப் பிரிந்து இருக்கின்றார்கள். அரசியல் ரீதியாக ஒரு துரும்பைக் கூட தமிழர்களுக்காக இவர்கள் அசைக்கப் போவதில்லை. உண்மையில் எந்த பெரும்பான்மை அரசியல்வாதியும் அசைக்கப் போவதில்லை, சஜித், ரணில் உட்பட. ஒன்பது அல்ல, இன்னும் 90 இலங்கை ஜனாதிபதிகள் வந்தாலும் இதுவே தான் நிலைமை.

சர்வதேசமும் எங்களுக்காக எதுவும் செய்யப் போவதில்லை. எங்களை விட பாலஸ்தீனர்கள் இன்று பெரும் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். கேட்போர் எவருமில்லை. இத்தனைக்கும் எங்களின் குரலை விட அவர்களின் குரல் கேட்க உலகில் நாடுகளும், மனிதர்களும் இருக்கின்றனர்.

ரணில் வெல்லாதது இல்லை, இவ்வளவு குறைவாக வாக்குகள் ஏன் எடுத்தார் என்பதே ஆச்சரியம். மகிந்த குடும்பத்தை காப்பாற்றினார் என்பது மட்டும் அதற்கான காரணம் இல்லை. இதற்கு முந்தைய பாராளுமன்ற தேர்தலிலும் அவருடைய கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. ரணிலே அந்தப் பாராளுமன்ற தேர்தலில் தோற்றார். அதுவும் ஒரு படுதோல்வி. வெளியில் என்னதான் வெற்றிகரமான அரசியல்வாதி போன்ற தோற்றம் இவருக்கு இருந்தாலும், இவர் ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி.

இவர் வந்தால் நாட்டுக்கு நல்லது என்பதே என் எண்ணமாகவும் இருந்தது. பெரும்பானமை மக்கள் அப்படித்தான் நினைக்கின்றார்கள் போல என்றும் நினைத்திருந்தேன். ஆனால் நாட்டு மக்கள் வேறு ஏதோ நினைத்து இருக்கின்றார்கள். இனிமேல் என்ன செய்ய.............. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..............🤣.   

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியல் யாப்பின்  ஒன்பதாவது உறுப்புரையை நீக்கினால் மட்டுமே அநுரவினால் சரியான ஆட்சியைத் தரமுடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அனுரா மிகவும் மலிவான அரசியல் செய்தே இந்த இடத்தை அடைந்து இருக்கிறார். அலரி மாளிகை உடைப்பு உட்பட பல காரியங்களை தூண்டி விட்டு செய்வித்தவர்கள் இவர்கள் தான். ரணிலின் இடைச்செருகல் கூட இவர்கள் எதிர்பாராத பின்னடைவு தான் 

இனி உண்மை முகத்தை காணலாம்.

உது மலிவான அரசியல் என்றால் எது விலை உயர்ந்த அரசியல்?  முட்டையெறிந்து கலைப்பதா,. ? 

ஜனநாயக முறையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரது தெரிவை எப்படி தாங்கள் கொச்சைப்படுத்தலாம்? 

😏

2 hours ago, பெருமாள் said:

வழக்கமா கடந்த எட்டு ஜனாதிபதிகள் அந்த தீவை ஆழ வந்த போது தமிழர் தரப்பு நம்பி  ஏமாந்தார்கள் தற்போது ஒன்பதாவது முறை இனியும் சிங்களவர்களிடம் இருந்து தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்ளும் தமிழனை என்னவென்று சொல்வது ?

அரியநேந்திரன் சனாதிபதியாக வந்திருக்க வேண்டும் என்பதை நாசூக்காகச் சொல்கிறார்,..🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

 

அரியநேந்திரன் சனாதிபதியாக வந்திருக்க வேண்டும் என்பதை நாசூக்காகச் சொல்கிறார்,..🤣

ஓசி விசுகோத்துக்கு படிக்க  போனவர்களுக்கு நான் என்ன சொன்னாலும் புரியாது என்றால் உங்களுக்குமா புரியவில்லை நான் எந்த இடத்தில் அரியம் நின்றது சரி என்றேன்? 

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம்போல அனுரா பதவி ஏற்றபின்  தலதா மாளிகை போவார் அங்கு போய் வந்த பின் அவரின் அறிக்கைக்களை பாருங்க எல்லா சிங்கள ஜனாதிபதிகளும் கக்கும் தமிழர் எதிர்ப்பு இனவாதம் கக்குவார் இல்லையென்றால் சந்திரிகா போல் நடித்து கொண்டு நவாலியில் குண்டு போடுவது போல் தமிழர் எதிர்ப்பு வாதம் செய்வார் .

ஆனால் நீங்க என்ன பண்ணிவீர்கள் என்று தெரிந்தே மவுனித்தார்கள் அவர்கள் வைத்த பொறியில் இருந்து ஒன்றில் சமாதானம் இல்லை கடைசி சிங்களவனும் ஜெயவாவோ என்று பாணும் அரிசியும் இல்லாமல் சாகனும் ?

தமிழனுடன் சமாதானம் என்றால் அந்த தீவு சுபிட்சமாகும் எது வேணும் ?

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பெருமாள் said:

ஓசி விசுகோத்துக்கு படிக்க  போனவர்களுக்கு நான் என்ன சொன்னாலும் புரியாது என்றால் உங்களுக்குமா புரியவில்லை நான் எந்த இடத்தில் அரியம் நின்றது சரி என்றேன்? 

கபிதன் நானும் கப்பலில் சிறிய  காலம் வேலை செய்தேன் நான் ஒரு கருத்தை மறுக்கிறேன் என்றால் அதை விட்டு கெக்கே பிக்கே என்று  சிரிப்பு அடையாளம் தேவையற்றது .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

இதற்கு முந்தைய பாராளுமன்ற தேர்தலிலும் அவருடைய கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை

நம்ப  வைத்து கழுத்தறுத்த நரியின் கருமவினை அவரை தொடர்ந்து போட்டறுக்குது. மகிந்த பட்டாளத்துக்கு ஒரு கோஷம், "நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்ட கதாநாயகர் நாங்கள்." இவருக்கு ஒரு கோஷம், நாட்டை வரிசை யுகத்திலிருந்து மீட்டேன்." இவரை பொம்மைபோல வைத்து காரியம் சாதிக்க நினைத்த மகிந்த பட்டாளத்துக்கு பெரிய ஏமாற்றம். அவர்களுக்கு ஆபத்தில் கைகொடுக்க இனி யாருமில்லை, கூடியிருந்தவர்களும் ஓட தொடங்கி விட்டனர். போர் வெற்றி பேசிய சரத்தும் மண் கவ்வினார். மக்கள் எதிர்பார்த்தது வேறு. அதை தேடி அனுராவை அண்டியிருக்கின்றனர். பாப்போம் அனுரா எப்படி வெட்டியாளப்போகிறாரென.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

 சிறித்தம்பி! சிங்களவர்கள் இந்தமுறை நீதி நியாயமாக வாக்களித்திருக்கின்றார்கள் என்கிறீர்களா?

குமாரசாமி அண்ணை சிங்களவர்கள் நீதி, நியாயத்துக்கு அப்பால்...
தம்மை பெற்றோலுக்கும், உணவுக்கும் வீதியில் அலைய வைத்த, மகிந்த கோஷ்டியை காப்பாற்றிய  கோபத்தை ரணிலிலும்,
அரகலய போராட்டத்தின் பின்.. சஜித்   ஜனாதிபதி பொறுப்பு எடுக்க தயங்கியதையும் சிங்கள மக்கள் விரும்பாமல் ஒரு அலையாக திரண்டு அனுரவை ஆதரித்து இருக்கின்றார்கள் என நினைக்கின்றேன். புதிய தலைமுறையினரில்...   பழைய  கட்சிகளை விரட்டி விட்டு, புதிய முயற்சியாக அனுரவை தெரிவு செய்திருக்கலாம் என்றே ஊகிக்கின்றேன்.

இது "சட்டியில்... இருந்து, அடுப்புக்குள் விழுந்த கதை" மாதிரி போய் விடுமோ என்ற ஐயமும் உண்டு. 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

புதிய தலைமுறையினரில்...   பழைய  கட்சிகளை விரட்டி விட்டு, புதிய முயற்சியாக அனுரவை தெரிவு செய்திருக்கலாம் என்றே ஊகிக்கின்றேன்.

தமிழ்நாட்டு  புதிய/இளம் தலைமுறையினரும்  இந்த முறையை பின்பற்றுவார்கள் என நம்புவோமாக...🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டு  புதிய/இளம் தலைமுறையினரும்  இந்த முறையை பின்பற்றுவார்கள் என நம்புவோமாக...🙂

ஆசை, தோசை, அப்பளம் வடை.... 😂
உதய நிதிக்கு பிறகு  இன்பநிதிக்கு முடிசூட்டினாலும்... 
தமிழக மக்கள்... டோன்ற்  ஓறி, (B) பீ ஹாப்பி.   🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

ஆசை, தோசை, அப்பளம் வடை.... 😂
உதய நிதிக்கு பிறகு  இன்பநிதிக்கு முடிசூட்டினாலும்... 
தமிழக மக்கள்... டோன்ற்  ஓறி, (B) பீ ஹாப்பி.   🤣

எம்ஜிஆருக்கும் ஒரு வாரிசு இருந்திருந்தால் சரியான போட்டியாக இருந்திருக்கும் 😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

எம்ஜிஆருக்கும் ஒரு வாரிசு இருந்திருந்தால் சரியான போட்டியாக இருந்திருக்கும் 😁

கஷ்ட காலம்… ஜெயலலிதாவுக்கும் வாரிசு இல்லாமல் போயிட்டுது.
இருந்திருந்தால்… கட்டுமரம் கோஷ்டி நிறைய போராட வேண்டி வந்திருக்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, தமிழ் சிறி said:

கஷ்ட காலம்… ஜெயலலிதாவுக்கும் வாரிசு இல்லாமல் போயிட்டுது.
இருந்திருந்தால்… கட்டுமரம் கோஷ்டி நிறைய போராட வேண்டி வந்திருக்கும். 

எல்லா விசயத்திலையும் கட்டுமரம் பேய்க்காய்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 22/9/2024 at 23:07, விசுகு said:

அலரி மாளிகை உடைப்பு உட்பட பல காரியங்களை தூண்டி விட்டு செய்வித்தவர்கள் இவர்கள் தான்.

இதை பலவருடங்களுக்கு முன் எழுதியபோது @Justin @கோசான் போன்ற அறிவாளிகள் என்னை முட்டாள் ஆக்கினார்கள் இன்று இரண்டு பேருமே ஓடி ஒளித்து உள்ளார்கள் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.