Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

Edited by zuma

  • zuma changed the title to முன்னாள் அமைசசர்களினால் பாவிக்கப்பட்ட பல சொகுசு வாகனங்கள் காலி முகத்திடலில் கைவிடப்பட்டுள்ளன.
  • கருத்துக்கள உறவுகள்

Ministry-Vehicles-Handed-Over-carrr.jpg?

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களில் சில மாயம்!

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கமைய கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களில் சில மாயமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக பதவியேற்றதன் பின்னர் முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களை கையளிக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்நிலையில், குறித்த பணிப்புரைக்கமைய கையளிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாயமான முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி  நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2024/1401045

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் பயன்படுத்திய பல வாகனங்கள் மீள கையளிப்பு

Published By: DIGITAL DESK 3   25 SEP, 2024 | 02:36 PM

image
 

முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மீள கையளிக்கப்பட்டுள்ளன.

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி இழப்பு மற்றும் அமைச்சுகளில் செயலாளர்கள் மாற்றமடைந்துள்ள நிலையில் இவ்வாறு வாகனங்களை மீள கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தககது.

அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/194764

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மீள கையளிக்கப்பட்டுள்ளன.

கொஞ்ச வாகனங்களைக் காணலை என்றார்களே?

கழட்டி விற்றும் இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்பிமார் பெர்மிற் பெற்று வாங்கிய வாகனங்கள் எல்லாம் அவை பாவிக்கினமோ என்று ஒருக்கால் செக் பண்ணுனால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் ராஜபக்ச ஆட்சியின் இறுதியில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதிகளை (Bar licence) இரத்துச் செய்ய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, புலவர் said:

ரணில் ராஜபக்ச ஆட்சியின் இறுதியில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதிகளை (Bar licence) இரத்துச் செய்ய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு.

மதுபான அனுமதி கொடுக்கப் படவில்லை என்று @Kapithan போன்றோர் பொய்  சொல்லிக் கொண்டு திரிந்தார்கள்.

இப்போதைய புதிய ஜனாதிபதிக்கு சொல்லுங்கள்… சுமந்திரனுக்கோ, சாணக்கியனுக்கோ, ஶ்ரீதரனுக்கோ, அங்கஜனுக்கோ ஒரு Bar license ம் கிடைக்க வில்லை என்று.

சுத்துமாத்துகளுக்கு வெள்ளை அடிக்கப் போனால்.. இப்பிடித்தான் எக்கச்சக்கமாக   மாட்டுப் பட வேண்டி வரும். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, தமிழ் சிறி said:

மதுபான அனுமதி கொடுக்கப் படவில்லை என்று @Kapithan போன்றோர் பொய்  சொல்லிக் கொண்டு திரிந்தார்கள்.

பொய் சொல்வது தாங்கள்தான் சிறியர்.

சாணக்கியனுக்கும் சுமந்திரனுக்கும் Bar license கொடுக்கப்படவில்லியென்றோ அல்லது வேறு யாருக்கேனும் கொடுக்கப்பட்டதாக எந்த இடத்தும் நான் கூறியதாக நினைவில்லை. 

என்னால் இணைக்கப்பட்டது ஒரு Gazette Notification  என்று நினைக்கிறேன். நான்  பொய் சொன்னேன் என்று தாங்கள் கருதினால் அதை  ஆதாரத்துடன்  நிரூபிக்க வேண்டும். 

1 hour ago, ஈழப்பிரியன் said:

கொஞ்ச வாகனங்களைக் காணலை என்றார்களே?

கழட்டி விற்றும் இருப்பார்கள்.

இன்னும் 38 வாகனங்கள் வரவேண்டி உள்ளதாம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

இன்னும் 38 வாகனங்கள் வரவேண்டி உள்ளதாம். 

அமைச்சர்களுக்கே யார் யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறோம் என்று தெரியாது.

எப்படித் தான் கண்டுபிடிக்கப் போகிறார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

அமைச்சர்களுக்கே யார் யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறோம் என்று தெரியாது.

எப்படித் தான் கண்டுபிடிக்கப் போகிறார்களோ?

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைத்த  மதுபான அனுமதிப் பத்திரங்களை, சிலர் பல கோடி ரூபாய்களுக்கு விற்று பணமாக்கி விட்டார்களாம். 
அதே போல் அமைச்சர்மார் இந்த வாகனங்களை விற்று இருந்தால்.... காசு கொடுத்து வாங்கியவன் திருப்பி கொடுப்பானா...  

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அதே போல் அமைச்சர்மார் இந்த வாகனங்களை விற்று இருந்தால்.... காசு கொடுத்து வாங்கியவன் திருப்பி கொடுப்பானா...  

வாகனங்கள் அமைச்சுகளுக்காக கொடுக்கப்படும்     அமைச்சருக்கு அல்ல   அவர் அமைச்சர் பதவியை இழக்கும்போது   வாகனத்தை விட்டுட்டு செல்ல வேண்டும் 

அந்த வாகனங்கள் விற்க முடியாது   அதை ஒருவர் வாங்கவும் முடியாது    இவை சட்ட விரோதமான செயல்கள் 

ஆகவே  வேண்டியவரிடமிருந்து வாகனம் பறிமுதல் செய்யப்படலாம்   🙏🤣

1 hour ago, தமிழ் சிறி said:

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைத்த  மதுபான அனுமதிப் பத்திரங்களை,

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் மதுபான அனுமதிப்பத்திரங்கள். கொடுக்க வேண்டும்?? இவர்களுக்கு பல கோடி தண்டப்பணம். விதித்து அறவிடவேண்டும்.  

இனிமேல் பாராளுமன்றத்தில் கால். மிதிக்காதபடி அல்லது தேர்தலில் போட்டி இடுவது தடை செய்யப்படவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

வாகனங்கள் அமைச்சுகளுக்காக கொடுக்கப்படும்     அமைச்சருக்கு அல்ல   அவர் அமைச்சர் பதவியை இழக்கும்போது   வாகனத்தை விட்டுட்டு செல்ல வேண்டும் 

அந்த வாகனங்கள் விற்க முடியாது   அதை ஒருவர் வாங்கவும் முடியாது    இவை சட்ட விரோதமான செயல்கள் 

ஆகவே  வேண்டியவரிடமிருந்து வாகனம் பறிமுதல் செய்யப்படலாம்   🙏🤣

கோத்தபாய ஜனாதிபதியாக இருந்த  காலத்தில் பல விலை உயர்ந்த புத்தம் புதிய  வாகனங்கள் பிக்குகளிடம் இருந்தது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் இயங்கிக் கொண்டு தமிழர் வெறுப்புக்களை கக்கிக் கொண்டு இருந்த ஓட்டுக்குழு உறுப்பினருக்கும் ஒரு வாகனம் கொடுக்கப் பட்டு இருந்தது. அவர்தான்... நல்லூர் கோவிலை இடித்து மலசல கூடம் கட்டுவேன் என்று சொன்னவன். அவனின் பெயர் தற்போது நினைவிற்கு வரவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

461059436_836913075280647_61539557039793

  • கருத்துக்கள உறவுகள்

முறைகேடாக பயன்படுத்தப்பட்ட அரச வாகனங்கள் தொடர்பில் உடனடி விசாரணை

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 253 வாகனங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்திய நபர்களைின் பெயர்கள் நாட்டு மக்களுக்கு வெளியிடப்படும் எனவும்,  இவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்  வசந்த சமரசிங்க கூரியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தீர்க்கமான விசாரணை

“இந்த வாகனங்கள் தொடர்பாக நாம் தீர்க்கமான விசாரணைகளை நடத்தி, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முறைகேடாக பயன்படுத்தப்பட்ட அரச வாகனங்கள் தொடர்பில் உடனடி விசாரணை | Prompt Inquiry Into Illegally Used Govt Vehicles

இது தொடர்பாக நாம் உரிய நடவடிக்கை எடுப்போம். யார் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தது என்ற விபரங்களை நாம் நாட்டு மக்களுக்கும் வெளிப்படுத்துவோம்.

அரச அதிகாரிகள் இதற்காக எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஏனெனில், இவர்களுக்குத்தான் இந்த வாகனங்களை யாருடையது, யார் பயன்படுத்தியது என்ற அனைத்து விடயங்களும் தெரியும். ஏன், இவர்கள் இந்த வாகனங்களை ஒப்படைத்துவிட்டு ஒழிய வேண்டும்?

அதாவது, உரிமையில்லாதவற்றை பயன்படுத்தினால்தான் பயப்பட்டு, ஒழிந்துச் செல்ல வேண்டும். ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 253 வாகனங்களை வெளியாட்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஜனாதிபதி செயலக அதிகாரி

இவைதான் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலக அதிகாரிகளிடம், வாகனங்களை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்களை கோரியுள்ளோம்.

முறைகேடாக பயன்படுத்தப்பட்ட அரச வாகனங்கள் தொடர்பில் உடனடி விசாரணை | Prompt Inquiry Into Illegally Used Govt Vehicles

இந்த அனைத்து நபர்களுக்கு எதிராகவும் எதிர்க்காலத்தில் சட்டநடவடிக்கை மேற்கொள்வோம்.

ஜனாதிபதி இது தொடர்பாக உறுதியாகவுள்ளார். இது மக்களுடைய வாகனங்கள். இவை மீளவும் மக்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

https://tamilwin.com/article/prompt-inquiry-into-illegally-used-govt-vehicles-1727270286?itm_source=parsely-detail#google_vignette

24 minutes ago, தமிழ் சிறி said:

நல்லூர் கோவிலை இடித்து மலசல கூடம் கட்டுவேன் என்று சொன்னவன். அவனின் பெயர் தற்போது நினைவிற்கு வரவில்லை. 

புளட் தலைவருடைய பெயரை ஒத்ததாக இருக்கும் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

புளட் தலைவருடைய பெயரை ஒத்ததாக இருக்கும் அண்ணை.

ஆவா கும்பல்” தலைவர் அருண் சித்தார்த்தனுக்கு விளக்கமறியல்! - ஜே.வி.பி நியூஸ்

images?q=tbn:ANd9GcRtsKYr5YemRwYbsXSq3UI

இப்போ... ஞாபகம் வந்து விட்டது ஏராளன். நன்றி.
அருண் சித்தார்த்தன். கோத்தபாயவை... பதவி விலத்த நடந்த போராட்டத்தின் போது, யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து ஹிருணிகாவின் ஆதரவாளர்களால் செருப்படி வாங்கியவர். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, தமிழ் சிறி said:

461059436_836913075280647_61539557039793

கண்டிப்பாக இல்லை  காரணம்  புல்லு   இருக்கிறது   எந்தவொரு செலவுமின்றி   சாப்பிடலாம்” 🤣🤣.   

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kandiah57 said:

கண்டிப்பாக இல்லை  காரணம்  புல்லு   இருக்கிறது   எந்தவொரு செலவுமின்றி   சாப்பிடலாம்” 🤣🤣.   

புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது என்பார்களே பொய்யா கோப்பாலு?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தமிழர் வெறுப்புக்களை கக்கிக் கொண்டு இருந்த ஓட்டுக்குழு உறுப்பினருக்கும் ஒரு வாகனம் கொடுக்கப் பட்டு இருந்தது. அவர்தான்... நல்லூர் கோவிலை இடித்து மலசல கூடம் கட்டுவேன் என்று சொன்னவன். அவனின் பெயர் தற்போது நினைவிற்கு வரவில்லை. 

அருண் சித்தார்த்தன் இப்ப இவருடன் நல்ல கூட்டு மறவன் புலவு சச்சியர் .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

அருண் சித்தார்த்தன் இப்ப இவருடன் நல்ல கூட்டு மறவன் புலவு சச்சியர் .

 sivasena.jpg

இரண்டும் ஒன்றை ஒன்று வென்றதுகள்.
கள  நிலைமை தெரியாமல்... ஏவல் பேய்களாக.. வேறு ஆட்களின் நிகழ்ச்சி நிரலுக்காக.  
இனத்தை விற்று காசு பார்க்கும் கோஸ்டிகள்.

பலாலி இராணுவ  படைத்தளத்தில்... நடந்த விருது வழங்கும் நிகழ்வின் போது,  
பிக்குகள் அமரும் கதிரைக்கு வெள்ளைத்துணி போர்க்கப்படவில்லை என்பதற்காக...
மறவன்புலவு சச்சி, தனது வேட்டியை அவிட்டு போர்க்கக் கொடுத்துவிட்டு, 
உள்ளாடையுடன் பல்லைக் காட்டிக் கொண்டிருக்குது, வெட்கம் கெட்டது.  

  • கருத்துக்கள உறவுகள்

461323178_933332735498366_79730197968116

  • கருத்துக்கள உறவுகள்

461400547_8644675262221408_2264444860137

அரச வாகனங்களின் மொத்த எண்ணிக்கை:
அவுஸ்திரேலியா - 8,000
கனடா - 23,000
இலங்கை -
82,194 ( ரணில் ஆட்சியில் )

Kunalan Karunagaran

  • கருத்துக்கள உறவுகள்

காலி முகத்திடலில் வாகன கண்காட்சி நடத்தி மக்களை ஏமாற்றும் அரசாங்கம் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர

Published By: DIGITAL DESK 2    26 SEP, 2024 | 05:12 PM

image

(எம்.மனோசித்ரா)

அரச அதிகாரிகள் பயன்படுத்தி மீண்டும் ஒப்படைத்துள்ள வாகனங்களை காலி முகத்திடலில் நிறுத்தி கண்காட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இவை அமைச்சர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் அல்ல.

இந்த வாகனங்கள் தேவையில்லை எனில் அவற்றை குத்தகைக்கு வழங்கி அல்லது விற்பனை செய்து திறைசேரிக்கு வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சு.க.வின் ஸ்தாபகத்தலைவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் நினைவு தினம் வியாழக்கிழமமை காலி முகத்திடலில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய மக்கள் கூட்டணியிலேயே பொதுத் தேர்தலிலும் போட்டியிடுவோம். ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த அனைவரும் எவ்வித பிளவுகளும் இன்றி ஒன்றிணைந்து பொதுத் தேர்தலையும் எதிர்கொள்வோம்.

 தற்போதைய அரசாங்கம் வாகனங்களை காலி முகத்திடலில் நிறுத்தி கண்காட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.

2015இல் ஜோன் அமரதுங்க இதே போன்றதொரு நாடகத்தை அரங்கேற்றினார்.

தற்போது இந்த வாகனங்களைப் பார்த்து மக்கள் அரசியல்வாதிகளையே விமர்சிக்கின்றனர். 

கடந்த அரசாங்கத்திலுள்ள அதிகாரிகள் பயன்படுத்திய வாகனங்களே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

இவற்றையே அநுர திஸாநாயக்கவின் அரசாங்க அதிகாரிகளும் பயன்படுத்த நேரிடுடம்.

எனவே மக்களை ஏமாற்றுவதற்காக இவ்வாறு கண்காட்சிகளை நடத்திக் கொண்டிருக்காமல், அவற்றை குத்தகைக்கு வழங்கி வருமானத்தை பெறுமாறும், அரச சேவைகளுக்குச் செல்லும் போது முச்சக்கரவண்டிகளில் செல்லுமாறும் தற்போதைய அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குகின்றோம். இவை தற்காலிகமாக அரங்கேற்றப்படும் நாடகங்கள் ஆகும் என்றார்.

https://www.virakesari.lk/article/194858

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஏராளன் said:

தற்போது இந்த வாகனங்களைப் பார்த்து மக்கள் அரசியல்வாதிகளையே விமர்சிக்கின்றனர். 

அதுதானே மக்களுக்குத் தொண்டாற்றிய அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் இப்படி அவமானப்படுத்தலாமோ?

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி 

  • கருத்துக்கள உறவுகள்

காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் : ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

அரசாங்கத்தின் வசம் உள்ள சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

காலிமுகத்திடல் வளாகம் உட்பட பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கும் வகையில் அந்த இடத்தில் இன்று (26) ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த விஜேபால மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் செல்வங்கள்

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஆட்சிக் காலத்தில் பொதுமக்களின் பணம் வீண் விரயம் செய்யப்பட்ட விதத்தை இந்த இடத்தில் கண்டுகொள்ளக் கூடியதாக உள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் உள்ள வாகன தரிப்பிடத்தில் அந்த வாகனங்களை நிறுத்த இடவசதி போதுமானதாக இல்லை.

காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் : ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு | President Provide Luxury Vehicle Essential Service

காலிமுகத்திடல் வளாகம் உட்பட பல இடங்களில் 107 வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன இவை கடந்த அரசாங்கத்தினால் பல்வேறு பதவிகளில் இருந்த தமது நண்பர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நாட்டு மக்கள் அன்றாடம் வாழ முடியாத நிலையில் கடந்த 76 வருடங்களாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாக பொதுமக்களின் செல்வங்களை வீணடித்து வருவது மிகவும் வேதனையான நிலையாகும்.

பொதுமக்களின் சொத்து

சுகாதாரத்துறையில் போதிய நோயாளர் காவு வண்டி இல்லாத நிலையிலும், அரச உத்தியோகத்தர்களின் கடமைகளை நிறைவேற்ற போதிய வாகனங்கள் இல்லாத போதும் பலகோடி ரூபா பெறுமதியான வாகனங்களை தருவித்து முன்னைய ஆட்சியாளர்கள் தமது நண்பர்களுக்கு வழங்கியுள்ளனர்.

பொதுமக்களின் சொத்துக்களைப் பாதுகாக்கவேண்டும் முறை கேடாக பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்து முழுமையான ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் : ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு | President Provide Luxury Vehicle Essential Service

இந்த வாகனங்களை செயற்திறனாக மற்றும் அத்தியாவசியமான சேவைகளுக்கு வழங்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 59 வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடாக முன்னைய ஆட்சியாளர்களின் நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வாகன இறக்குமதி

அதிலும் வாகன இறக்குமதி தடை செய்யப்பட்ட காலப்பகுதியில் மாத்திரம் 16 வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் உள்ள 833 வாகனங்களில் 29 வாகனங்கள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் : ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு | President Provide Luxury Vehicle Essential Service

இவ்வாறு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது வருத்தமளிக்கின்றது இது தொடர்பில் முழுமையான மீளாய்வு நடத்தி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றுடன் தொடர்புடையோருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/president-provide-luxury-vehicle-essential-service-1727369857

  • கருத்துக்கள உறவுகள்

பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு பெறப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் அந்த நிறுவனங்களிடம் கையளிப்பு

Published By: VISHNU   02 OCT, 2024 | 04:34 AM

image

கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த வளாகத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (01) பிற்பகல் அந்தந்த நிறுவனங்களுக்கே மீண்டும் கையளிக்கப்பட்டன.

WhatsApp_Image_2024-10-01_at_18.25.23_bb

இதன்போது 19 வாகனங்களை மீள கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு, அவற்றில் 15 வாகனங்கள், முன் அறிவித்தலுக்கமைய வருகை தந்திருந்த குறித்த நிறுவனங்களின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன. 

அதன்படி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 8 வாகனங்ளும், நிதி அமைச்சின் 03 வாகனங்களும் தென் மாகாண சபை, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு, வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தலா ஒவ்வொரு வாகனங்கள்  உள்ளடங்களாக மொத்தமாக 15 வாகனங்கள் மீளக் கையளிக்கப்பட்டன. 

ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே, மேலதிக செயலாளர் மகேஷ் ஹேவாவிதாரண உள்ளிட்ட பலர் வாகனங்கள் கையளிக்கும் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/195278

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.