Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nochchi said:

அதுமட்டுமே இந்த யூருப் பிறதேர்ஸ் அனுர மாகாத்தையா விட்ட போனம். நினைக்கமுடியவில்லை. நிற்க முடியவில்லை..... என்று ஒரே அளப்பறையாமே. எனது நண்பர் பார்க்கச்சொன்னார். ஒரு இனத்தை கூட்டுச் சேர்ந்து அழக்கத் துணைபோனதோடு, படையினர்கான ஆளணி வலுவாக்கற் செய்பாடுகளுக்குப் பரப்புரை செய்த மாகாத்தையாவைத் தேர்தல் முடிய 113சீற் கிடைத்தபின் நன்றாகப் புரியவைப்பார்.

எதுக்கும் அடி வளவுக்கை இப்பவே பத்துப் பதினைஞ்சு மரவள்ளிக்கட்டையை ஊன்றிவிட்டால் உதவும். அதோடை பனங்கொட்டையளையும் ஒன்றையும் விரயமாக்காமல் பாத்தியைப்போட்டால் நல்லது. 
நட்பார்ந்த நன்றியுடன்  
நொச்சி

எப்ப மரவள்ளி கிழங்கு சாப்பிட வெளிக்கிடினமோ அன்று வெளிநாட்டுக்கு வருவதற்கு  வரிசையில் நிற்பினம் இந்த யூ டியூப்பினர்,பாணுக்கு சீனிக்கு வரிசையில் நிற்பதை விட பாஸ்போர்ட் எடுக்க நிற்க்கும் வரிசை பெரிதாக இருக்கும்....

  • Replies 67
  • Views 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    சிறிமா ஆட்சியில் முன்னேறியவர்கள் என்றால் வட கிழக்கு விவசாயிகள்  மட்டுமே.

  • இந்தியாவுக்கு முதுகை( back side)காட்டி கொண்டு இவர்களுடன் வேலை செய்யவேண்டும் வட மாகாணசபை ,கிழக்கு மாகாணசபை தேர்தல்களை வைத்து முதலமைச்சர்கள் நினைத்தவற்றை(சட்ட திட்டத்திற்கு அமைவாக) செய்து முடிக்க கூடியத

  • பதினைந்து வருடமாக மட்டும் அல்ல அதற்கு முன்பும் மக்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை.  வாக்கு அரசியலை தொடங்கி வைத்த தமிழரசுக்கட்சி இனப்பிரச்சனையை தீர்ககும் அரசியலை விட மக்களை உசுப்பேற்றி உணர்சிவசப்படுத்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

எப்ப மரவள்ளி கிழங்கு சாப்பிட வெளிக்கிடினமோ அன்று வெளிநாட்டுக்கு வருவதற்கு  வரிசையில் நிற்பினம் இந்த யூ டியூப்பினர்,பாணுக்கு சீனிக்கு வரிசையில் நிற்பதை விட பாஸ்போர்ட் எடுக்க நிற்க்கும் வரிசை பெரிதாக இருக்கும்....

தற்போதைய சனாதிபதி தீக்கோழிபோல தேர்தல் வரை அனைத்தையும் கடந்து, தேர்தலில் வென்றபின் முழுமையான அதிகாரம் கைக்குவந்ததும் தமிழரது உரிமை விடயத்தில் நவயுக ரோகணவாக  அவதாரம் எடுக்குமபோதுதான்  தெரியும். அதுவரை அவர்களது ஆசையை இப்படியே புலம்பித்திரிய வேண்டியதே. 
நட்பார்ந்த நன்றியுடன்  
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nochchi said:

தற்போதைய சனாதிபதி தீக்கோழிபோல தேர்தல் வரை அனைத்தையும் கடந்து, தேர்தலில் வென்றபின் முழுமையான அதிகாரம் கைக்குவந்ததும் தமிழரது உரிமை விடயத்தில் நவயுக ரோகணவாக  அவதாரம் எடுக்குமபோதுதான்  தெரியும். அதுவரை அவர்களது ஆசையை இப்படியே புலம்பித்திரிய வேண்டியதே. 
நட்பார்ந்த நன்றியுடன்  
நொச்சி

என்யோய் என்சாமி என விட வேண்டியதுதான் ...

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

என்யோய் என்சாமி என விட வேண்டியதுதான் ...

கடந்த பதினைந்து ஆண்டுகளாக மக்களை அரசியல் மயப்படுத்தும் எந்தவொரு வேலைத்திட்டத்தையும் செய்யாது வெறும் வாக்கரசியல் செய்ததன் விளைவே இந்தநிலை. எந்தக்கட்சியிடமாவது  தெளிந்த ஒரு அரசியற் திட்டம் உள்ளதா? ஒன்று தோற்றால் அடுத்து என்ன என்ற தெளிவு இருக்கிறதா? மக்களை வெறும் புள்ளடியிடும் ஒரு கருவியாகப் பார்த்தார்களேயன்றி வேறென்ன செய்தார்கள். தேர்தல்வரும்போது தொகுதிக்குப் போவது. மற்றும் வேளைகளில் வெளிநாட்டுப் பயணமும் நாடாளுமன்றத் தேனீர்க் கடையுமாய் இருந்தவர்களால் வந்தவினை. 
நட்பார்ந்த நன்றியுடன்  
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2024 at 21:43, nunavilan said:

மக்களுக்கு சேவை செய்ய நினைக்கும் இளையோர் சுயேச்சையாக நின்றாலும் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.திருட்டு கூட்டத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்.

பா.அரியனேந்திரனவர்களையே வறுத்தெடுத்தவர்கள் இளையோரை விடுவார்களா? இந்து முதலைகளை அமுக்கி முன்னோக்கிப் பாயும் பலம் உள்ளதா? தமிழரசியல்வாதிகள் மக்களை அரசியல் மயப்படுத்தாதுவைத்திருப்பதே தமக்கெதிராக யாரும் எழுந்தவிடக் கூடாது என்ற நன்னோக்கிலேயானபின்னர்  மக்களை அணிதிரட்டி .... அல்லது துணிவோடு தற்போது ஒரு இளையோர் அணி வட-கிழக்கெங்கும் களமிறங்கிப் போட்டியிட்டு அதைவைத்து அடுத்துவரும் ஐந்து ஆண்டுகள் மக்களுக்குத் தெளிவுபடுத்திச் சாதிக்க முயலவேண்டும்.  
நட்பார்ந்த நன்றியுடன்  
நொச்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, putthan said:

எப்ப மரவள்ளி கிழங்கு சாப்பிட வெளிக்கிடினமோ அன்று வெளிநாட்டுக்கு வருவதற்கு  வரிசையில் நிற்பினம் இந்த யூ டியூப்பினர்,பாணுக்கு சீனிக்கு வரிசையில் நிற்பதை விட பாஸ்போர்ட் எடுக்க நிற்க்கும் வரிசை பெரிதாக இருக்கும்....

கொஞ்சக்  காலத்துக்கு வெளிநாடுகளுக்கு போக அனுமதியில்லை எண்டு சொல்லிப்போட்டு தோட்டம்,துரவு,வயல் கொத்த விட வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

கொஞ்சக்  காலத்துக்கு வெளிநாடுகளுக்கு போக அனுமதியில்லை எண்டு சொல்லிப்போட்டு தோட்டம்,துரவு,வயல் கொத்த விட வேணும்.

சம்பளம் என்ன மாதிரி?? 

கிழமைக்கு கிழமை அல்லது 

இரண்டு கிழமைக்கு ஒருமுறை அல்லது 

மாதச் சம்பளம்      🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Kandiah57 said:

சம்பளம் என்ன மாதிரி?? 

கிழமைக்கு கிழமை அல்லது 

இரண்டு கிழமைக்கு ஒருமுறை அல்லது 

மாதச் சம்பளம்      🤣

 நாமெல்லாம் நம் விவசாயத்தை  சொந்த தொழிலாக செய்யும் போது சம்பளத்தை யாரிடம் எதிர்பார்த்தோம்? 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கொஞ்சக்  காலத்துக்கு வெளிநாடுகளுக்கு போக அனுமதியில்லை எண்டு சொல்லிப்போட்டு தோட்டம்,துரவு,வயல் கொத்த விட வேணும்.

நாமும் அங்கு போய் முன்னூதாரமாக தோழ் கொடுக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

நாமும் அங்கு போய் முன்னூதாரமாக தோழ் கொடுக்க வேணும்.

நாங்கள் எப்பவும் Bro, machi இந்த கட்சி தான் ...கடைசிமட்டும் தோழர் குறூப்புக்கு தோழ் கொடுக்க மாட்டோம்..😅

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nochchi said:

கடந்த பதினைந்து ஆண்டுகளாக மக்களை அரசியல் மயப்படுத்தும் எந்தவொரு வேலைத்திட்டத்தையும் செய்யாது வெறும் வாக்கரசியல் செய்ததன் விளைவே இந்தநிலை. எந்தக்கட்சியிடமாவது  தெளிந்த ஒரு அரசியற் திட்டம் உள்ளதா? ஒன்று தோற்றால் அடுத்து என்ன என்ற தெளிவு இருக்கிறதா? மக்களை வெறும் புள்ளடியிடும் ஒரு கருவியாகப் பார்த்தார்களேயன்றி வேறென்ன செய்தார்கள். தேர்தல்வரும்போது தொகுதிக்குப் போவது. மற்றும் வேளைகளில் வெளிநாட்டுப் பயணமும் நாடாளுமன்றத் தேனீர்க் கடையுமாய் இருந்தவர்களால் வந்தவினை. 
நட்பார்ந்த நன்றியுடன்  
நொச்சி

இந்தியாவை இன்றும் பலமாக நம்புகிறார்கள் ...அப்படி அவர்களிடம் என்னதான் இருக்கின்றதோ தெரியவில்லை....தங்கள் மக்களை விட இந்தியாவை அதிகம் நேசிக்கின்றனர்....இந்தியா இவர்களிடம் ஒற்ருமையாக இருங்கள் என பாடம் எடுத்து அனுப்புவார்கள் ...இவர்கள் திரும்பி இர்ண்டு கட்சியாக பிரிவார்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nochchi said:

பதினைந்து வருடமாக மட்டும் அல்ல அதற்கு முன்பும் மக்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை.  வாக்கு அரசியலை தொடங்கி வைத்த தமிழரசுக்கட்சி இனப்பிரச்சனையை தீர்ககும் அரசியலை விட மக்களை உசுப்பேற்றி உணர்சிவசப்படுத்தி பதவிகளை பெறுவதை மட்டுமே செய்தது. அதன் விளைவான ஆயிதப்போரட்டம்.  ஆயுதப்போரளிகளும் மக்களை அரசியல் மயப்படுத்தவில்லை . உணர்சிவசப்படுத்தி தாயகத்தில் ஆட்சேர்ப்பதும் புலம் பெயர் நாடுகளில் நிதி சேர்ப்பதுமே  அரசியல் என்றே தமது ஆயுதப் போரை தொடர்ந்தனர்.

 முன்னைய இரண்டு பகுதியினரின் அரசியல் அறிவற்ற  தவறுகளின் விளைவே  தற்போதைய சுயநல அரசியல்.  தற்போதும் பழைய தவறான அரசியலின் தொடர்ச்சியே நடக்கிறது. அதை மாற்றாதவரை இப்படி ஆளையாள்  திட்டும் அரசியலே தொடரும்.  

 75 வருட  அரசியல் சூனியநிலைமை தொடர்கிறது. 

11 hours ago, putthan said:

இந்தியாவை இன்றும் பலமாக நம்புகிறார்கள் ...அப்படி அவர்களிடம் என்னதான் இருக்கின்றதோ தெரியவில்லை....தங்கள் மக்களை விட இந்தியாவை அதிகம் நேசிக்கின்றனர்....இந்தியா இவர்களிடம் ஒற்ருமையாக இருங்கள் என பாடம் எடுத்து அனுப்புவார்கள் ...இவர்கள் திரும்பி இர்ண்டு கட்சியாக பிரிவார்கள் ...

உண்மையில் இந்தியாவை எமது மக்களோ அரசியல்வாதிகளோ நம்பவில்லை. இந்தியாவைக் கையாள தெரியாமல் தடுமாறுகிறார்கள் என்பதே உண்மை. ஶ்ரீலங்கா அரசு மிகச் சிறப்பாக கையாளுகிறது என்பதை மறுக்க முடியாது. 

மூர்ககமாக எதிர்ப்பது அல்லது அப்படியே அவர்கள் சொன்னதை கேட்பது  தான் எம்மவரின் தற்கொலை அரசியல்.  இரண்டுமே எம்மை அழித்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, putthan said:

இந்தியாவை இன்றும் பலமாக நம்புகிறார்கள் ...அப்படி அவர்களிடம் என்னதான் இருக்கின்றதோ தெரியவில்லை....தங்கள் மக்களை விட இந்தியாவை அதிகம் நேசிக்கின்றனர்....இந்தியா இவர்களிடம் ஒற்ருமையாக இருங்கள் என பாடம் எடுத்து அனுப்புவார்கள் ...

இந்தியாவினுடைய முகவர்கள் இந்தியாவை அனுசரிக்காது எப்படி இலங்கையில் அரசியல் செய்வது. சுகபோகமாக வாழ்வது.முள்ளிவாய்க்காலில் தமிழினத்தின் குருதி வழிந்தோடியவேளை இந்தியாவில் இருந்து மௌனம்காத்தவர்களை  இன்னுமா நம்புகிறீங்கள். 

நட்பார்ந்த நன்றியுடன்  
நொச்சி

13 hours ago, putthan said:

இவர்கள் திரும்பி இர்ண்டு கட்சியாக பிரிவார்கள் ...

இவர்கள் எங்கே ஒன்றாக, ஒரே கட்சியாக நின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிப் பின்னர் காயந்த இலைகளாக உதிர்ந்து துகள்காளகப் போயுள்ளனவே. த.தே.கூட்டமைப்பின் பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எனத் தொடங்கி தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பாகி நிற்கிறது. தனித் தனி மனிதர்களே கட்சிகளாக நிற்கின்ற நிலை . எல்லோரும் ஒன்றிணைந்து நிற்கவேண்டும் என்ற ஒரு மாற்றத்திற்கான வாய்ப்புகள் அருகியே வருகிறது.

நட்பார்ந்த நன்றியுடன்  
நொச்சி

திருத்தம்

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

14 hours ago, putthan said:

இந்தியாவை இன்றும் பலமாக நம்புகிறார்கள் ...அப்படி அவர்களிடம் என்னதான் இருக்கின்றதோ தெரியவில்லை....தங்கள் மக்களை விட இந்தியாவை அதிகம் நேசிக்கின்றனர்....இந்தியா இவர்களிடம் ஒற்ருமையாக இருங்கள் என பாடம் எடுத்து அனுப்புவார்கள் ...இவர்கள் திரும்பி இர்ண்டு கட்சியாக பிரிவார்கள் ...

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியாவில் நிறைய சொத்துப்பத்தென்று இருக்கு.

அதையும் பாதுகாக்கணுமே?

தமிழர்களா சொத்தா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவது யார்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவது யார்?

வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் போட்டியிடுவது பற்றி சொல்லியிருக்கின்றீர்கள்...
நீங்கள் கொழும்பில் போட்டியிடுவது சிறப்பாக  இருக்கும் சிறிலங்கா தேசியத்தை கட்டியெழுப்ப அது தான் சிறந்த வழி ...தமிழரசுக்கட்சியில் போட்டியிடுங்கள்....ஏனைய தமிழ்தேசிய கட்சிகளுடன் கூட்டு சேர வேண்டாம் ...காரணம் அவர்களின் கட்சி பெயரில் "தமிழ் தேசியம்"  உண்டு...தமிழ் தேசியம் சோசலிஸ்ட் தோழர்களுக்கு பிடிக்காது

  • கருத்துக்கள உறவுகள்
 
திரியோடு தொடர்புடைய காணொளியென்பதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப்
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 
அரசியல் திருடர்களின் கூட்டு எப்போதும் தொடரும் என்பதற்குப் பிந்திய எடுத்துக்காட்டு சும்-சிம் கூட்டு. இவங்கள் திருந்துவாங்களா?

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/10/2024 at 03:37, சுவைப்பிரியன் said:

நாமும் அங்கு போய் முன்னூதாரமாக தோழ் கொடுக்க வேணும்.

அங்கையிருக்கிறவன்கள் தோட்டம் துரவுகளுக்கு போக மாட்டாங்கள். இதுக்கும் புலம்பெயர் தமிழன்கள் தான் தோழ் குடுக்கவேணும்......? 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.