Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2024 at 09:38, விசுகு said:

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இரண்டாம் கோட்டாபய ஆக்குவதற்கான ஏகாதிபத்திய சதியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும், 

அவர் தான் மீண்டும் கம்பீரமாக வலம் வர ஒரு புளியம் கொம்பை வைத்திருக்கிறார். சிங்களம் மீண்டும் தனது உண்மையான முகத்தை காட்ட விரும்பும் போது அடுத்த ஜனாதிபதி இவராகக்கூட இருக்கலாம்.

இவரது கனவு கோத்தாவின் பின் ஒருகாலத்தில் தான் வரவேண்டுமென்றே இனவாதத்தைக் கையிலெடுத்து ஆடியவர். ஆனால், அறகலய கோத்தாவின் ஆட்சியை வீழ்தியதால் விதிமாறித் தடுமாறி நிற்கின்றார்.
நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2024 at 14:56, Kavi arunasalam said:

கண்ணாடி முன் நின்று கேட்டுப்பாருங்கள்.

தமிழரை  இன்னும் இன்னும் அழிவுக்கு கொண்டு செல்லும் உங்கள் சிந்தனைக்கு ஒற்றுமை ஒன்றும் தேவையில்லை. சிந்தித்து முன்னேற வழி சொல்லுங்கள்.

“உப்புக் கல்லை வைரம் என்று சொன்னால் - அதை

ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால்

நாம் கதறி என்ன குழறி என்ன

 ஒன்றுமே  நடக்கவில்லை தோழா

ரொம்ப நாளா…”

தவறான புரிதல். நான் சிங்களத்தின் ஆற்றலாளர்களையே குறிப்பிட்டேன். தமிழர் தரப்பையல்ல. முதலில் மற்றவனை நோக்கி ஒற்றைவிரலைச் சுட்டும்போது, எம்மை நோக்கி நான்குவிரல் என்று யோசித்தால் முதலில் தாங்கள் கண்ணாடியின் முன்னின்று யோசித்திருக்க வேண்டும். 
நன்றியுடன் 
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nochchi said:

மற்றவனை நோக்கி ஒற்றைவிரலைச் சுட்டும்போது, எம்மை நோக்கி நான்குவிரல்

மூன்று

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2024 at 20:12, விளங்க நினைப்பவன் said:

மக்கள் விடுதலை முன்னணியின் வரலாற்றுப் பாரம்பரியத்தை மதிக்கும் மற்றும் உரிமையுள்ள ஒரு இயக்கம் என்ற வகையில்இ ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின்  ஆணையைப் பாதுகாப்பதற்கும் அந்த ஆணையை வழங்கிய மக்களின்இ எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவாக நிற்பதற்கும் தாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என  வீரவன்ச  விடுத்துள்ள  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.]

சரியாக சொல்லியுள்ளார் அவருக்கு பதிலாக அனுரகுமார திஸாநாயக்க வந்துள்ளார்

மேற்கினதும்,இந்தியாவினதும் தேவைகளுக்காக இவர் ஒதுங்கியிருக்கிறாரோ தெரியவில்லை...அடுத்த "அரகலய 2 "க்கு  இவர் தலைமை தாங்க கூடும்...இவருக்கும் ஜனாதிபதி கனவு இருக்குமல்ல‌😅

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

மேற்கினதும்,இந்தியாவினதும் தேவைகளுக்காக இவர் ஒதுங்கியிருக்கிறாரோ தெரியவில்லை...அடுத்த "அரகலய 2 "க்கு  இவர் தலைமை தாங்க கூடும்...இவருக்கும் ஜனாதிபதி கனவு இருக்குமல்ல‌😅

ஆள் கம்பி எண்ணவும் சந்தர்ப்பம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆள் கம்பி எண்ணவும் சந்தர்ப்பம் உள்ளது.

ஊழலிசத்தின் காவலர்கள் .....தனக்கு போட்டியாக ஒர் சக்தி வருவதை விரும்பாத சக்தி 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kavi arunasalam said:

மூன்று

நாலாவது விரல் 

thumbs-up-emoji-emoji-1828x2048-3iipr9gp

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, தவறு! ஜனாதிபதி தேர்தல் முடிவு வந்தபோது அனுராவுக்கு எதிராகவே கருத்து தெரிவித்தவர் இந்த விமல் வீரவன்ச. அது அவரது வயிற்றெரிச்சல். இந்த கட்சியின் முன்னாள் அங்கத்தவர், பெரும் பொறுப்பிலிருந்தவர் இவர். விமல் வீரவன்சவின் அனுரா எதிர்ப்பு அறிக்கை வந்த கையோடு, சஷி விமல் வீரவன்சவின், (இவரது மனைவியின்) பாஸ்போட் பிரச்சனையும், விசாரணையும் என்கிற செய்தியும் வந்தவுடன், விமல் செய்தியை மாற்றிப்போட்டு விட்டார், தப்பி விடலாம் என நினைக்கிறார். கோத்தா வெல்ல இவரும் தானே உழைத்தார்? இப்போ பெரும்பாலான கட்சிகள், மொத்தக்கட்சிகளும் அனுராவோடு கூட்டிணைவதற்கு ஏங்கிக்கொண்டிருக்கின்றன. எல்லோரும் ஊழலோடு சம்பந்தப்பட்டவர்கள், அவர்களை  வழிக்கு கொண்டுவந்து அடக்குவதற்கே அவர் முன்னெச்சரிக்கையாக சில அதிரடிகளை ஆரம்பித்தார். சில சவாலான  இடங்களில் தனது சிறந்த வேட்ப்பாளர்களை களமிறக்கினார்.  மகிந்த குடும்பத்தின் ஊழல் விசாரணை என்கிற செய்தி. அதனால் சிலர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கினர். ஒவ்வொரு கட்சியின் நகர்வையும் கூர்ந்து கவனித்து களத்தில்இருந்து  தடுத்து நிறுத்த துல்லியமாக நிதானமாக காய் நகர்த்தி அவர்களாகவே வாயடைக்கவும் விலகவும் செய்கிறார்.அது சரியாகவே வேலை செய்கிறது. அப்படி இவர்களை அனுரா அணைத்தால்; இப்பவே பெட்டியை கட்டி வைப்பது நல்லது. தப்பவே முடியாது, உடனே கைது செய்யப்படுவார்.   

  

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2024 at 03:37, தமிழ் சிறி said:

சிங்களவனிடம் மன மாற்றத்தை எதிர்பார்ப்பது கடினம். ஏனென்றால் அவர்கள் சிறு வயதில் இருந்தே.. கல்வி, மதம் மூலம்... மூளைச் சலவை செய்து வைக்கப் பட்டுள்ளளார்கள். மயிலே... மயிலே.... இறகு போடு என்றால் போடாது.

நேர்மையாக கதைத்தால் நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் மூளைச் சலவை செய்யப்பட்டு உள்ளோம். நீங்களோ நானோ ஒரு பேச்சுக்கு சிங்களப் பெற்றோருக்கு பிறந்து இருந்தால் நீங்களும் நானும் அப்படித்தான்.

தமிழர்களும் மூளைச் சலவை செய்யப்பட்டு உள்ளோம். மொழி வெறி, கலாச்சார வெறி என்று. 

இரண்டு பக்கமும் மிதவாதம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் மட்டும் இலங்கையில் இருந்தால் அது சொர்க்கபுரியாக இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2024 at 20:37, தமிழ் சிறி said:

தலைவர் பிரபாகரன் காலத்தில் இவர்களிடம் இருந்து எமது உரிமைகளை அடித்து பறித்திருக்க வேண்டும். அந்தப் போராட்டம்   கூட 75% வெற்றியளித்து சரியாக போய்க் கொண்டிருந்த நிலையில்... ஒட்டுக்கு ழுக்களும், எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு கை கொடுக்காமல் இருந்ததன் விளைவு எல்லாம் கை நழுவி போய் இந்த அவலத்தில் வந்து நிற்கின்றது.

அண்ணை, வன்னிக்குள் மாட்டுப்பட்ட சில ஆயிரம் மக்களை போராட விட்டு விட்டு வெளியால ஒடி வேற யாரை குறை சொல்ல முடியும்? 

புலம்பெயர் மக்கள் தங்கட மகனயோ/மகளயொ முன் லைனில ஆயுதத்தொட விட ஆயத்தமா? 

  • கருத்துக்கள உறவுகள்

[இப்போ பெரும்பாலான கட்சிகள்  மொத்தக்கட்சிகளும் அனுராவோடு கூட்டிணைவதற்கு ஏங்கிக்கொண்டிருக்கின்றன. எல்லோரும் ஊழலோடு சம்பந்தப்பட்டவர்கள் அவர்களை  வழிக்கு கொண்டுவந்து அடக்குவதற்கே அவர் முன்னெச்சரிக்கையாக சில அதிரடிகளை ஆரம்பித்தார். சில சவாலான  இடங்களில் தனது சிறந்த வேட்ப்பாளர்களை களமிறக்கினார்.  மகிந்த குடும்பத்தின் ஊழல் விசாரணை என்கிற செய்தி. அதனால் சிலர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கினர். ஒவ்வொரு கட்சியின் நகர்வையும் கூர்ந்து கவனித்து களத்தில்இருந்து  தடுத்து நிறுத்த துல்லியமாக நிதானமாக காய் நகர்த்தி அவர்களாகவே வாயடைக்கவும் விலகவும் செய்கிறார்.]

அநுரகுமார திசநாயக்கவுக்கு அதிகரிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவு  என்று  தமிழ் யுரியுப்பர்கள்  சொல்வது உண்மை போல தான் இருக்கின்றது. இலங்கை புதிய ஜனாதிபதிக்கு பிரசாரமே  நடத்தபடுகின்றது இங்கே  🤣
 

On 13/10/2024 at 07:59, பகிடி said:

இரண்டு பக்கமும் மிதவாதம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் மட்டும் இலங்கையில் இருந்தால் அது சொர்க்கபுரியாக இருக்கும் 

உண்மை 👍

Edited by விளங்க நினைப்பவன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.