Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

1362983381.jpg

மருத்துவர் அர்ச்சுனா கடந்த ஐனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் மாறி மாறி ஆதரவு தெரிவித்ததுடன் இறுதி நேரத்தில் அனுரகுமார திசாநாயக்கவிற்கு ஆதரவை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்து இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்! (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அங்கொடை மருத்துவமனையில் அவருக்கு ஒரு கட்டில் ஆயத்தம் செய்யப்படும். 🥺

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kapithan said:

அங்கொடை மருத்துவமனையில் அவருக்கு ஒரு கட்டில் ஆயத்தம் செய்யப்படும். 🥺

நோ..அப்படி சொல்லக் கூடாது.பாவம்..அவர் நடந்து கொள்ளும் விதம் சரியில்லை என்பதற்காக ஒரு மனிதரை நாங்கள் ஓரேயடியாக மட்டம் தட்டி ஒதுக்க கூடாது.முடிந்தால் மக்கள் ஒரு சந்தர்ப்பம் குடுத்துத் தான் பார்க்கட்டுமே.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம்… வாருங்கள்  போட்டி இடுங்கள்.  வெல்லுங்கள்   வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, Kapithan said:

அங்கொடை மருத்துவமனையில் அவருக்கு ஒரு கட்டில் ஆயத்தம் செய்யப்படும். 🥺

ஊழல் அற்ற ஆட்சி என்று NPP வரும் முன்பே இலங்கையில் யாழ்ப்பாணத்தில்  வைத்திய சாலைகளில் நடக்கும் , நடந்த ஊழல்களை வெளியே கொண்டு வந்தவர் .
சில விடயங்களில் வழிகாட்டிகளினால் தவறாக சென்றிருந்தாலும்  
தமிழ் பார் ஆளுமன்ற உறுப்பினர்களை விட  இவர் பரவாயில்லை என்றுதான் நினைக்கின்றேன்.

ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கலாம்

2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வாழ்த்துக்கள்... வந்து மக்களுக்கு நல்லது செய்தால் மகிழ்ச்சியே..

2 hours ago, பிழம்பு said:

இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்து இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, யாயினி said:

நோ..அப்படி சொல்லக் கூடாது.பாவம்..அவர் நடந்து கொள்ளும் விதம் சரியில்லை என்பதற்காக ஒரு மனிதரை நாங்கள் ஓரேயடியாக மட்டம் தட்டி ஒதுக்க கூடாது.முடிந்தால் மக்கள் ஒரு சந்தர்ப்பம் குடுத்துத் தான் பார்க்கட்டுமே.

ஒருவரை இழிவுபடுத்தும் நோக்கம் எனக்கில்லை. 

ஆனால்  இறுதியில் அவரது நிலை அப்படித்தான் முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kapithan said:

ஒருவரை இழிவுபடுத்தும் நோக்கம் எனக்கில்லை. 

ஆனால்  இறுதியில் அவரது நிலை அப்படித்தான் முடியும். 

குறைந்தது வடக்கு கிழக்கில் ஊழல் அற்ற சுகாதார சேவைகள் ஆவது  இடம்பெற இப்படியான ஒரு சில ஆளுமை உள்ளவர்கள் தேவை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Kapithan said:

ஒருவரை இழிவுபடுத்தும் நோக்கம் எனக்கில்லை. 

ஆனால்  இறுதியில் அவரது நிலை அப்படித்தான் முடியும். 

ஒத்த பண்புடையோர் தம்மை இலகுவில் அடையாளம் கண்டு கொள்வர் எண்பது இதைத் தானோ   ?  :) 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, சாமானியன் said:

ஒத்த பண்புடையோர் தம்மை இலகுவில் அடையாளம் கண்டு கொள்வர் எண்பது இதைத் தானோ   ?  :) 

உங்களை அறியாமலேயே உங்களுக்குள்  இருக்கும்  காழ்ப்புணர்வை வெளிக்காட்டியதற்கு   காட்டியதற்கு நன்றி.  🙏

16 hours ago, வாத்தியார் said:

குறைந்தது வடக்கு கிழக்கில் ஊழல் அற்ற சுகாதார சேவைகள் ஆவது  இடம்பெற இப்படியான ஒரு சில ஆளுமை உள்ளவர்கள் தேவை.

அவரது நோக்கம் சரியானதாக இருக்கலாம். ஆனால் கடந்த சில மாதங்களில் வெளிப்பட்ட  அவரது முதிர்ச்சியற்ற செயல்கள் அவர் மீதான மதிப்பைக் கூட்டுவதற்குப் பதிலாக, நீண்டகால நோக்கில்  அவர் ஒரு அபாயகரமான ஆளாகக் காட்டி நிற்கிறது.  அதுதான் எனது அனுமானம். 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kapithan said:

👍👍

உண்மை👍

ஏற்று கொள்கிறேன் .

  • Thanks 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.