Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: 

#AKD #NPP #JVP

'மறதி என்பது தமிழர்களின் தேசிய வியாதி' என்பதைத் தமிழர்கள் அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இப்போது அதன் மறதியில் இது  'ஜேவிபி மறதிக்' காலம்.

மறப்பது மக்களின் இயல்பு. நினைவு படுத்துவது நமது கடமை.

அவ்வப்போது வரிசைக் கிரமமாக அதை நினைவு படுத்துவோம்.

இப்போதைக்கு 83 யூலைப் படுகொலையில் ஜேவிபி இன் பங்கு குறித்து நினைவுபடுத்துவோம்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் ஜேவியினரும் தமிழ் அரசியல் கைதிகளும் ஒரே புளொக்கில்தான் அடைக்கப்பட்டிருந்தார்கள்.

கொழும்பில் தமிழர்கள் மீது தாக்குதல் ஆரம்பமாகியதும்  வெலிக்கடையில் ஜேவிபியினர்தான் தமிழ் அரசியல் கைதிகளைத் தாக்கத் தொடங்கினார்கள். பின்பு  வேறு  புளொக்கில் இருந்த சிங்களக் காடையர்களும், இன அழிப்பு அரசின் காவல்துறையும் சேர்ந்து கொன்று குவித்தன.

இது வரலாறு.

 அடுத்து தென்னிலங்கையில் அதே நாட்களில்  தமது மாக்சிச அடையாளத்துடன் 'முதலாளித்துவத்துக்கு எதிரான தாக்குதல்' என்ற  பெயரில் தமிழ் முதலாளிகள், தமிழ் வர்த்தக நிறுவனங்கள்  தாக்கப்பட்டு ஜேவிபியால் சூறையாடப்பட்டன.

உயிர் தப்பி தற்போது உயிரோடு இருக்கும் யாரிடமும் இதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

இன்னும் இருக்கு.. தொடர்ந்து நினைவூட்டுவோம்.

Copied

https://www.facebook.com/share/p/wgLWdnKmBPgpNP66/

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது தாயகத்தில் இருந்து வந்ததா என்பது சந்தேகம். தலையங்கம் ஊரில் வாழும் தமிழர்களை இழிவு படுத்துவதாக‌ உணர்கின்றேன். நாங்கள் தேசிய மறதி நோயாளிகளா? அப்ப இதற்கு மருந்தென்ன?

70 களில் இருந்து மாறி மாறி வந்த பிரதான இரண்டு கட்சிகளில் ஒன்றுமே எங்களுக்கு உருப்படியான ஒரு தீர்வையாவது தரவில்லை. இனிமேலும் தரப்போவதுமில்லை யார் இப்பொழுது இந்த ஜேவிபி எங்களுக்கு எல்லாம் தரப்போவது என்று கூறினோம்?. இவன் இன‌வாதியால்ல என்று கூறினோமா? மாதாம் 50,000 ஆயிரம், 60 ஆயிரம் ரூபா ச‌ம்பளம் வாங்கும் எங்களுக்கு ஏதாவது மாற்றம் தேவை என்றுதானே இவர்களுக்கு வாக்களித்தோம். 

ஏதும் நம்பிக்கை பொறி தெரியுமா?  பஸ் கட்டணம் கொஞ்சம் குறையாதா? ஊழல்கள் குறையாதா? எங்கள் வாழ்க்கைதான் இப்படி போரிலும் அழிவிலும் போய்விட்டது. பிள்ளைகளாவது பிரச்சினையின்ன்றி கெம்பஸ் முடிக்குமா? அரச ஆஸ்பத்திரிலாவது ஒரளவு நல்ல மருந்தாவது கிடைகாதாப்பா? விலைவாசி கொஞ்சமாவது குறையாதா என்ற ஒரு நப்பாசையில், வேறு எந்த தெரிவுகளுமின்றி, அட இந்த முறை இவனுக்கு வாக்களித்து பார்ப்போமே ஏதாவது மாற்றம் வந்தால் என்ற பிள்ளையாவது நல்லா இருந்து விட்டு போகட்டும் என்றல்லவா இவனுக்கு வாக்களிததோம்.

வெளி நாடுகளில் வாழும் நீங்கள் அப்பப்போ எங்களுக்கு பண உதவி செய்கின்றீர்கள், அதற்கு நன்றி. நீங்கள் வசதியாக இருக்கின்றீர்கள், உங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்கின்றார்கள், திருமணம் முடித்து வசதியாக வாழ்கின்றார்கள். ஏலாத பட்சத்தில் தானே உங்களிடம் இவ்வாறு கையேந்துகிறோம்.

எங்காவாது ஒரு பிடி கிடைக்கதா என்று வாழும் எங்களை ஏன் மறதி நோயாளி, அம்னிஷியாகாரன், டைமென்சியாகரன் என்று அழைக்கின்றீர்கள். அனுரவுக்கு வாக்களித்ததினாலா? 
இது என்னுடைய உரிமை/தெரிவுதானே? என்னுடைய சூழ்னிலை அப்படி அதைவைத்து தானே என்னால் முடிவெடுக்க முடியும்.

சரி ஐயா நங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? நீங்களே சொல்லுங்கோ? உங்களில் தங்கி வாழ்வதனால் நீங்கள் வெளி நாட்டில் இருந்து போடும் எல்லா கட்டளைகளையும் கை கட்டி, வாய்பொத்தி செய்ய வேண்டும் என எதிர் பார்க்கின்றீர்களா?  வாக்களிப்பது என்னுரிமையல்லவா? நாங்கள் என்ன செய்யவேண்டும் ஐயா?

  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த மறதி வியாதிக்கு இவர் தடுப்பூசி போட்டுகொண்டுவிட்டாராமா

அல்லது இவர் தமிழரில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, colomban said:

தேர்தல் கால மழைக்கு இப்படியான முகநூல் காளான்கள் முளைத்து, ஒலியெழுப்பி பின்னர் மறைந்து போவது வழமை. இவர்கள் சொல்வதையெல்லாம் சீரியசாக எடுத்து பதில் தேடாதீர்கள்!

  • Like 1

இந்த தேர்தலுடன் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் போலித் தமிழ் தேசியவாதிகளின் செல்வாக்கு தாயக அரசியலில் இருந்து பெருமளவு நீங்கிவிடும் என்பதை இவர்கள் உணர்ந்து இருப்பதால் எப்பாடுபட்டாவது அதை தடுக்க, இவர்கள் இப்படித்தான் நல்ல வசதியாக வாழ்ந்து கொண்டு விண்ணாளம் கதைப்பார்கள். 

ஆனால் இவர்களின் சொல்லுக்கு ஐஞ்சு சதமும் பெறுமதியில்லை. வெறும் வாய்சொல் வீரர்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்த முகநூல் பதிவு தாயகத்தில் இருந்து வந்ததல்ல. பிரான்ஸில் வதியும் அதி தீவிர தேசிய இனவாதி  ஒருவரின் முகநூல் பதிவு இது. 

 இதே நபர்  ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு அநுர வெற்றி பெறுவார் என்று கருத்து கணிப்புகள் கூறியதை தெரிவித்து அநுர வெற்றி பெறுவதே நல்லது. அவர் கடுமையான ஒடுக்குமுறைகளை தமிழர் மீது செய்வார். அதுவே எமக்கு நல்லது அநுர வென ற பின்னர் தமிழீழம் புதிய பாய்சலை தொடங்கும்   என்று எழுதியவர். தனது முகநூலில் இப்படியான விஷக்கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருபவர்.  

அவரின் பதிவை தாயகத்தில்  மாயையில் போதையில் வாழும் யாராவது மீள்பதிவு செய்திருக்கலாம். 

Edited by island
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, colomban said:

 வாக்களிப்பது என்னுரிமையல்லவா?

கட்டாயம் வாக்களிப்பது தனியுரிமை.
ஆனால் யார் மானத்தமிழன்  தமிழ்  பொது  வேட்பாளருக்கு தான் வாக்கு போட வேண்டும் சிங்கல வேட்பாளர்களுக்கு வாக்குகளை போடகூடது என்று சொல்லியது  உங்களுக்கு தெரியும்

9 hours ago, colomban said:

அட இந்த முறை இவனுக்கு வாக்களித்து பார்ப்போமே ஏதாவது மாற்றம் வந்தால் என்ற பிள்ளையாவது நல்லா இருந்து விட்டு போகட்டும் என்றல்லவா இவனுக்கு வாக்களிததோம்.

அநுரகுமார திசாநாயகவுக்கு எங்கே இவர்கள் வாக்களித்தார்கள்? சிங்கள மக்கள் அல்லவா அவருக்கு வாக்களித்து அவரை  தெரிவு செய்தார்கள். எனக்கு தெரிந்த குட்டி தமிழ்வட்டத்திலேயே சஜீத் அல்லது ரணில் என்று அங்கே  இருப்பதையே கண்டேன். அது தான் தேர்தலிலும் வெளிபட்டது.

யாழ்பாணத்தில் ஜேவிபி 7.29 வீதம்
வன்னியில் 9.86 வீதம்
மட்டகிளப்பில் 12.19 வீதம்
அநுரகுமார திசாநாயக வெற்றி பெற்றதும் தமிழர்களை காப்பாற்ற கடவுளினால் அனுப்பபட்டவர் உழலை ஒழிக்க  தமிழ்பட காதாநாயகனாக வந்தவர் அதிரடி தலைவன் என்று கண்மூடிதனமாக போற்றுகின்றனர்.

Edited by விளங்க நினைப்பவன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒருவிதத்தில் மறதியும் நல்லதுதான். சில விடயங்களை மறந்தால்தான் மனிதன் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும்.

நதி போல் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேங்கிய குட்டைதான். ஹிட்லர் செய்த கொடுமைகள் உலகம் அறிந்த விடயம். அதற்காக யேர்மனியை ஒதுக்கி வைத்தார்களா? ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு ஒரு யேர்மனிய மாது தலைமைதான் தாங்க முடியுமா?

பரீட்சையில் தோல்வி, காதலில் தோல்வி, நண்பர்கள் என்று கருதியவர்களால் வந்த ஏமாற்றங்கள்,  பெற்றவர்கள்,உறவினர்கள் உடன் பிறப்புகள், நண்பர்கள் ஆகியோரின் இழப்புகள், வாழ்க்கையில் பட்ட துன்பங்கள், அவலங்கள், அவமானங்கள் என்று எல்லாவற்றையும் தலையில் தூக்கி வைத்தால் எப்படி நகர முடியும்?

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 hours ago, colomban said:

இது தாயகத்தில் இருந்து வந்ததா என்பது சந்தேகம். தலையங்கம் ஊரில் வாழும் தமிழர்களை இழிவு படுத்துவதாக‌ உணர்கின்றேன். நாங்கள் தேசிய மறதி நோயாளிகளா? அப்ப இதற்கு மருந்தென்ன?

70 களில் இருந்து மாறி மாறி வந்த பிரதான இரண்டு கட்சிகளில் ஒன்றுமே எங்களுக்கு உருப்படியான ஒரு தீர்வையாவது தரவில்லை. இனிமேலும் தரப்போவதுமில்லை யார் இப்பொழுது இந்த ஜேவிபி எங்களுக்கு எல்லாம் தரப்போவது என்று கூறினோம்?. இவன் இன‌வாதியால்ல என்று கூறினோமா? மாதாம் 50,000 ஆயிரம், 60 ஆயிரம் ரூபா ச‌ம்பளம் வாங்கும் எங்களுக்கு ஏதாவது மாற்றம் தேவை என்றுதானே இவர்களுக்கு வாக்களித்தோம். 

ஏதும் நம்பிக்கை பொறி தெரியுமா?  பஸ் கட்டணம் கொஞ்சம் குறையாதா? ஊழல்கள் குறையாதா? எங்கள் வாழ்க்கைதான் இப்படி போரிலும் அழிவிலும் போய்விட்டது. பிள்ளைகளாவது பிரச்சினையின்ன்றி கெம்பஸ் முடிக்குமா? அரச ஆஸ்பத்திரிலாவது ஒரளவு நல்ல மருந்தாவது கிடைகாதாப்பா? விலைவாசி கொஞ்சமாவது குறையாதா என்ற ஒரு நப்பாசையில், வேறு எந்த தெரிவுகளுமின்றி, அட இந்த முறை இவனுக்கு வாக்களித்து பார்ப்போமே ஏதாவது மாற்றம் வந்தால் என்ற பிள்ளையாவது நல்லா இருந்து விட்டு போகட்டும் என்றல்லவா இவனுக்கு வாக்களிததோம்.

வெளி நாடுகளில் வாழும் நீங்கள் அப்பப்போ எங்களுக்கு பண உதவி செய்கின்றீர்கள், அதற்கு நன்றி. நீங்கள் வசதியாக இருக்கின்றீர்கள், உங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்கின்றார்கள், திருமணம் முடித்து வசதியாக வாழ்கின்றார்கள். ஏலாத பட்சத்தில் தானே உங்களிடம் இவ்வாறு கையேந்துகிறோம்.

எங்காவாது ஒரு பிடி கிடைக்கதா என்று வாழும் எங்களை ஏன் மறதி நோயாளி, அம்னிஷியாகாரன், டைமென்சியாகரன் என்று அழைக்கின்றீர்கள். அனுரவுக்கு வாக்களித்ததினாலா? 
இது என்னுடைய உரிமை/தெரிவுதானே? என்னுடைய சூழ்னிலை அப்படி அதைவைத்து தானே என்னால் முடிவெடுக்க முடியும்.

சரி ஐயா நங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? நீங்களே சொல்லுங்கோ? உங்களில் தங்கி வாழ்வதனால் நீங்கள் வெளி நாட்டில் இருந்து போடும் எல்லா கட்டளைகளையும் கை கட்டி, வாய்பொத்தி செய்ய வேண்டும் என எதிர் பார்க்கின்றீர்களா?  வாக்களிப்பது என்னுரிமையல்லவா? நாங்கள் என்ன செய்யவேண்டும் ஐயா?

வணக்கம் சகோ

எதற்காக இவற்றை உங்கள் தலையில் போடுகிறீர்கள்???

நீங்கள் ஜேவிபியின் இனவாத அரசியலை புரிந்து வைத்திருக்கிறீர்கள். எனவே அது உங்களுக்கானது அல்ல.

1983 இனக் கலவரத்தில் ஜேவிபிக்கு பங்கே இல்லை என்பவர்களுக்கானது. நானே பாதிப்பட்டவன். நானே சாட்சி. 

நான் இன்று இங்கே வாழும் வாழ்வைவிட நீங்கள் இன்று வாழும் இதே வாழ்வைவிட  பலமடங்கு கூடுதலான வசதிகளோடு அன்றே இதே கொழும்பில் வாழ்ந்தவன் நான். வெளிநாட்டுக்கு வரவேண்டிய எந்த தேவையும் இல்லை (இப்போ சுற்றுலா வெள்ளைத் தோலை கண்டால் நிறுத்தும் ரக்சி மற்றும் ஆட்டோக்கள் அந்த நேரத்தில் என் அண்ணரைக் வீதியில் கண்டால் நிற்காமல் போகாது) 

83 இல் அடித்து கலைத்து உடுத்த உடுப்புடன் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி இதே ஜேவிபி தான் எனக்கு கற்றுக் கொடுத்தது உன் இடம் இது அல்ல என்று .

எனவே எனக்கு நடந்த கொடுமைக்காக நான் பேசுகிறேன் பேசுவேன். நீதி நியாயம் தீர்வு கிடைக்கும் வரை பேசுவேன். ஜேவிபியை ஆதரிக்க உங்களுக்கு உள்ள அதே உரிமை கடமை அதை மறுக்க எனக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். நன்றி. 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
  • Thanks 2
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1983 கலவரத்தை நடத்தியவர்கள் அன்றைய ஜே. ஆர் அரசே என்றே தமிழர்கள் அனைவருமே குற்றம் சாட்டினர்.    இன்று ஜேவிபி பதவிக்கு வந்திருப்பதால் புதிதாய் உருட்ட தொடங்கியுள்ளார்கள்.  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kavi arunasalam said:

ஒருவிதத்தில் மறதியும் நல்லதுதான். சில விடயங்களை மறந்தால்தான் மனிதன் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும்.

நதி போல் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேங்கிய குட்டைதான். ஹிட்லர் செய்த கொடுமைகள் உலகம் அறிந்த விடயம். அதற்காக யேர்மனியை ஒதுக்கி வைத்தார்களா? ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு ஒரு யேர்மனிய மாது தலைமைதான் தாங்க முடியுமா?

பரீட்சையில் தோல்வி, காதலில் தோல்வி, நண்பர்கள் என்று கருதியவர்களால் வந்த ஏமாற்றங்கள்,  பெற்றவர்கள்,உறவினர்கள் உடன் பிறப்புகள், நண்பர்கள் ஆகியோரின் இழப்புகள், வாழ்க்கையில் பட்ட துன்பங்கள், அவலங்கள், அவமானங்கள் என்று எல்லாவற்றையும் தலையில் தூக்கி வைத்தால் எப்படி நகர முடியும்?

உண்மைதான்.
இனியும்,இன்றும் கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்த குடி தமிழ் குடி என கர்ச்சித்துக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. அடுத்து நடக்க வேண்டியதை கவனிக்க வேண்டும். 

கூகிளில் உலகின் மூத்த மொழி தமிழ் என்றுதான் இருக்கின்றது. அதற்காக இந்த உலகம் தமிழை கட்டிக்கொண்டு அழத் தயாரில்லை.

Posted
2 hours ago, விசுகு said:

வணக்கம் சகோ

எதற்காக இவற்றை உங்கள் தலையில் போடுகிறீர்கள்???

நீங்கள் ஜேவிபியின் இனவாத அரசியலை புரிந்து வைத்திருக்கிறீர்கள். எனவே அது உங்களுக்கானது அல்ல.

1983 இனக் கலவரத்தில் ஜேவிபிக்கு பங்கே இல்லை என்பவர்களுக்கானது. நானே பாதிப்பட்டவன். நானே சாட்சி. 

நான் இன்று இங்கே வாழும் வாழ்வைவிட நீங்கள் இன்று வாழும் இதே வாழ்வைவிட  பலமடங்கு கூடுதலான வசதிகளோடு அன்றே இதே கொழும்பில் வாழ்ந்தவன் நான். வெளிநாட்டுக்கு வரவேண்டிய எந்த தேவையும் இல்லை (இப்போ சுற்றுலா வெள்ளைத் தோலை கண்டால் நிறுத்தும் ரக்சி மற்றும் ஆட்டோக்கள் அந்த நேரத்தில் என் அண்ணரைக் வீதியில் கண்டால் நிற்காமல் போகாது) 

83 இல் அடித்து கலைத்து உடுத்த உடுப்புடன் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி இதே ஜேவிபி தான் எனக்கு கற்றுக் கொடுத்தது உன் இடம் இது அல்ல என்று .

எனவே எனக்கு நடந்த கொடுமைக்காக நான் பேசுகிறேன் பேசுவேன். நீதி நியாயம் தீர்வு கிடைக்கும் வரை பேசுவேன். ஜேவிபியை ஆதரிக்க உங்களுக்கு உள்ள அதே உரிமை கடமை அதை மறுக்க எனக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். நன்றி. 

தொடர்ச்சியாக தவறான தகவலை உங்கள் சொந்த அனுபவம் என்ற முலாம் போட்டு எழுதிக் கொண்டு இருக்கின்றீர்கள் விசுகு.

இலங்கையில் இருந்த 33 ஆண்டுகளில் நான் 27 ஆண்டுகள் சிங்களப் பகுதியில் தான் வாழ்ந்தனான். முக்கியமாக இனக்கலவரம் ஆரம்பித்த நாட்களில் என் பெற்றோருடன் நான் அங்குதான் இருந்தேன். 83 இனக்கலவரத்தில் இதில் ஜேவிபி பங்குகொள்ளவில்லை.

அது முழுக்க முழுக்க ஜே.ஆர் அரசினதும் அவரது படையினரும் சிங்கள காடையர்களுடன் இணைந்து நடாத்திய படுகொலைகள். அந்தப் பழியை ஜே.ஆர் ஜேவிபி மீது சுமத்தியது அவர்களை தடை செய்யும் நோக்குடனே.

இது வரைக்கும் 83 ஜூலை கலவரம் பற்றி வந்த எந்த காத்திரமான நூலிலும். அனுபவக் கட்டுரைகளிலும் ஜேவிபி பற்றி குறிப்பிடப்படவில்லை.

ஜேவிபியின் இனவாத முகத்தை, அதன் முந்தைய இனவாத செயற்பாடுகளை எடுத்துரைக்க உண்மையான பல விடயங்கள் இருக்கையில், தேவையற்று 83 இனக்கலவரத்தில் அவர்களை குற்றம் சாட்டுவது கண்டிப்பாக உள் நோக்கம் கொண்டதாக, குறுகிய அரசியல் லாபத்திற்காகவோ என்று சந்தேகப்படுகின்றேன். அத்துடன் இது ஜே.ஆர் இன் இனவாத செயல்களை வெள்ளையடிக்கும் முயற்சியாகவும் உள்ளது.

அல்லது, ஜேவிபி யின் பின் தமிழ் மக்கள் அணிதிரண்டால், தாயக மக்கள் மீதான புலம்பெயர் அமைப்புகளின் செல்வாக்கு முற்றாக இழந்து விடுமோ என்ற அச்சத்தில் உண்மைக்கு புறம்பான விடயத்தை உங்கள் சொந்த அனுபவம் என்ற முலாம் பூசி எழுதுகின்றீர்கள் எனவும் சந்தேகமாக உள்ளது.
 
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, நிழலி said:

இந்த திரியில் உள்ள விடயம் சார்ந்த என்றபடியால் 83 கலவரத்தில் வெலிக்கடை உட்பட நானறிந்த விடயங்களை எழுதுகிறேன். உங்கள் அனுபவத்தையும் வாசிக்கிறேன். இது ஏன் தற்போது அதிகமாக பேசப்படுகிறது அல்லது வெளிவருகிறது என்றால் ஜேவிபி ஆட்சி அதிகாரத்தில் வந்துள்ளதால் தமிழர்களுக்கு எதிராக எந்த வேளையிலும் ஜேவிபி எவ்வாறு நடந்து கொண்டது என்பதும் இனி பேசுபொருளாக மாறும் என்பதால் இருக்கலாம். நன்றி.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.