Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

May be an image of 6 people, temple and text  462620130_556602943706878_28929959342963

மேலே உள்ள  உள்ள படத்தில் சுமந்திரனுக்கு அருகில் கறுப்பு வட்டத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா?
இவர் யாழ் மாவட்ட தமிழரசுக்கட்சி வேட்பாளர்களில் ஒருவராகிய இளங்கோவன்.

இவர் தந்தை செல்வாவின் பேரன் என்பதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.
1977ல் தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் வாய்ப்பு கேட்டபோது வாரிசு அரசியலுக்கு இடமில்லை என மறுக்கப்பட்டது.

இப்போது அதே சந்திரகாசனின் மகனுக்கு தந்தை செல்வாவின் பேரன் என்று வழங்குவது “வாரிசு அரசியல்” இல்லையா?

தந்தை செல்வாவின் பேரன் என்பதைவிட வேறு என்ன தகுதி இவருக்கு இருக்கிறது?
இவர் தொண்டு நிறுவனம் மூலம் இந்தியாவில் அகதிகளுக்கு உதவி செய்து வருகிறாராம்.
சரி. அகதிகளுக்கு என்ன உதவி செய்துள்ளார் என்று கேட்டால் பதில் இல்லை.

அகதிகளுக்கு இதுவரை ஏன் இந்திய குடியுரிமை பெற்றுக்கொடுக்கவில்லை என்று கேட்டால் இலங்கையில் தமிழர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே அகதிகளை திருப்பி அழைத்து வர வேண்டும் என்கின்றனர்.

சரி அகதிகளை ஏன் இன்னும் திருப்பி அழைத்து வரவில்லை என்று கேட்டால் இலங்கையில் இன்னும் சுமூக நிலை ஏற்படவில்லை என்கின்றனர்.

அதாவது அகதிகள் தொடர்ந்தும் அகதிகளாகவே இருக்க வேண்டும். இவர்கள் அதை காரணம் காட்டி தொண்டு நிறுவனம் நடத்தி தங்கள் வயிற்றை நிரப்ப வேண்டும்.

தமிழ்நாட்டில் போராளிகளால் ஆபத்து என்று காரணம் காட்டி நீண்ட காலம் பொலிஸ் காவல் பெற்ற தலைவர் என்ற பெருமை பெற்றவர் இவரின் தந்தை சந்திரகாசன்.

சுமந்திரனுக்கு வேண்டப்பட்டவர், இந்திய தூதரின் சிபாரிசு பெற்றவர் என்பதற்காக ஒருவரை தமது பிரதிநிதியாக தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமா?
தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

தோழர் பாலன்

#############   ###############   ###############   ###########

@Kapithan@பகிடி  இந்தியாவின் சொல்படி ஆடாத ஆள் வேண்டும் என்று சுமந்திரன் எல்லோரையும்  நீக்குகின்றார் என்றீர்கள். இப்போ பார்த்தால்...  றோவின் ஆள் என பல ஆண்டுகளாக பலராலும்  சந்தேகிக்கப் படும் சந்திரகாசனின் மகனே தமிழரசு கட்சி சார்பில் சுமந்திரன் தயாரித்த தேர்தல் பட்டியலில் இடம் பிடித்து இருக்கின்றார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிலரின்  பின்னுட்டங்கள். 
இவரது அப்பா சந்திரகாசன் இரண்டாயிரத்தி பதின் ஒன்றா அல்லது பதின் மூன்றாம் ஆண்டா என்று சாியாகத் தொியவில்லை யூரோப் பாராளுமன்ற உறுப்பு நாடுகள் இலங்ககை்கு வந்து பொருளாதார தடை சம்பந்தமாக வந்திருந்த போது வவுனியா தம்பா விடுதியில் சந்தித்து எமது போராட்டத்துக்கு எதிராக சிங்கள அரசுக்கு ஆதரவாக பேசியிருந்தாா் நான் இன் னெருவரை எனது வாகனத்தில் வந்தவா் அவா்களை சந்திக்க சென்றிருந்த வேளையில் சந்திரகாசன் அவா்களை சந்தித்து விட்டு வெளியேறும் போது நானும் கூட்டிச் சென்றவரும் வெளியே எனது வாகனத்தில் ஏறும் போது எனக்கு கூறினாா் தந்தை செல்வாவின் மகன் என்றும் இந்தியாவில் இருந்து வந்து தமிழா்களுக்கு எதிராக கதைக்கின்றாா் என்று அவா் ஏசினாா் அன்றுதான் எனக்கு தொியும் தந்தை செல்வாவுக்கு மகன் உள்ளாா் என்று ...அவா் எமது இனத்துக்கு எதிரானவா்.
Loganathan Kokilan

இவருடைய தந்தை சந்திரஹாசன் பேட்டி ஒன்று கேட்டேன். சில வருடங்களிற்கு முன்பு மிக கடுமையாக தேசிய விடுதலை போராட்டத்தை மிக கொச்சைபடுத்தி பேசி இருந்தார்.அத்தோடு இந்திய குள்ளநரிகளை வேறு நியபடுத்தி பேசி இருந்தார்.இது உண்மை ஆனால் அண்ணா எந்த ஊடகம் என ஞாபகம் வரவில்லை.புலி பயங்கரவாதம் இருக்கும் வரை இந்தியா எந்த ஆணியும் பிடுங்காது என வேற கூறி இருந்தார்.இப்ப 15 வருடமாக புலியும் இல்லை எலியும் இல்லை.எல்லாம் கழுதை விட்டை என்றால் மேல் விட்டையும் ஒன்று கிழ் விட்டையும் ஒன்று எல்லாம் கள்ள கூட்டம்.

Sivakumar Sunthararasa

ஒபர் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள் தமிழ்நாட்டிலுள்ள ஈழஅகதிகளுக்காக நடத்துபவர்களுக்கு நல்ல ஒபர் எஜமானர்கள் தொடர்ந்து இ௫க்க வேண்டும் என்றால் அடிமைகள் இ௫க்கவேண்டும் என்ற கோட் பாட்டுடன் செயல்பட்டு வருகிறது ஒபர் பல அகதிமுகாங்களை நேரில் பாத்தேன் இவர்களுடைய செயல்பாட்டையும் பாத்தேன் ஈழத்தில் தமிழ்தேசப்பற்றுக்குள் இல்லாத போராளிகள் குழுக்களின் பிள்ளைகள் உறவினர்களுக்கே ஒபரில் வேலைவாய்ப்பு ஒட்டுமொத்தத்தில் றோ வின் மிகப்பெரிய கைக்கூலி.

கந்தசாமி ஞானேந்திரன் ஞாணன்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழ் சிறியின் முழுநேரத் தொழிலே சேறடித்தல் என்றாகிவிட்டது கவலைக்குரியது. 

தேடித் தேடிச் சேறடிக்கிறார்,......

☹️

Edited by Kapithan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, Kapithan said:

தமிழ் சிறியின் முழுநேரத் தொழிலே சேறடித்தல் என்றாகிவிட்டது கவலைக்குரியது. 

தேடித் தேடிச் சேறடிக்கிறார்,......

☹️

உண்மையை எழுதும் போது  நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும் ?? 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kapithan said:

தமிழ் சிறியின் முழுநேரத் தொழிலே சேறடித்தல் என்றாகிவிட்டது கவலைக்குரியது. 

தேடித் தேடிச் சேறடிக்கிறார்,......

☹️

சந்திரகாசன் பற்றி யாருக்கும் நல்ல அபிப்பிராயம் இல்லை.

ஆனால் அவரது மகன்பற்றி இதுவரை வெளஜவந்ததாக தெரியவில்லை.

வரும்போது தெரிந்து கொள்வோம்.

சிறி தானாக எதுவும் எழுதலையே.

செய்திகளாக வருவதை இணைக்கிறார்.

  • Like 5
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

சந்திரகாசன் பற்றி யாருக்கும் நல்ல அபிப்பிராயம் இல்லை.

ஆனால் அவரது மகன்பற்றி இதுவரை வெளஜவந்ததாக தெரியவில்லை.

வரும்போது தெரிந்து கொள்வோம்.

சிறி தானாக எதுவும் எழுதலையே.

செய்திகளாக வருவதை இணைக்கிறார்.

உங்களுக்கு உண்மை நிலவரம் தெரியும்,  புரியும். ஆனாலும் சிறியருக்கு வலிக்கும் என்பதால் பட்டும் படாமலும் சொல்கிறீர்கள். 

புரிந்துகொள்கிறேன். 

4 hours ago, Kandiah57 said:

உண்மையை எழுதும் போது  நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும் ?? 

கந்ஸ், 

உங்கள் எழுத்துக்களை இங்கே ஒருவரும் ஒரு கருத்தாகவே கருதுவதில்லை. ஆதலால் இதனையும் கடந்து போகிறேன். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Kapithan said:

உங்களுக்கு உண்மை நிலவரம் தெரியும்,  புரியும். ஆனாலும் சிறியருக்கு வலிக்கும் என்பதால் பட்டும் படாமலும் சொல்கிறீர்கள். 

புரிந்துகொள்கிறேன். 

கபிதான் நானும் செய்திகளையும் முகப்புத்தகத்தில் இருந்தும் பிடித்ததை இணைக்கிறேன்.

நீங்களும் நல்லது கெட்டதை பிடித்ததை இணைக்கலாம்.

வாசித்து முடிவெடுப்பது வாசகர்களே.

செய்தி எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பதிந்தவர்களை ஒருபோதும் குறை கூறுவதில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தோழர்" பாலன் வழமை போல "பெட்டிக்கு வெளியே இருந்து" யோசித்திருக்கிறார்.

"ஒரு அமைப்பு இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்கு உதவுகிறது, எனவே அவர்கள் அகதிகளாக இருப்பதை ஊக்குவிக்கிறது" என்ற நவீன யோசனை "பெட்டிக்கு வெளியே" இருந்து யோசித்தால் மட்டும் தான் ஒருவருக்கு வரும்😂!

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Kapithan said:

உங்கள் எழுத்துக்களை இங்கே ஒருவரும் ஒரு கருத்தாகவே கருதுவதில்லை. ஆதலால் இதனையும் கடந்து போகிறேன். 

ஏன் பதில் எழுதினீர்கள்.  ??   கருத்துகளாக எடுத்தபடியால். தான் 

பதில் வந்தது     பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்   

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஈழப்பிரியன் said:

கபிதான் நானும் செய்திகளையும் முகப்புத்தகத்தில் இருந்தும் பிடித்ததை இணைக்கிறேன்.

நீங்களும் நல்லது கெட்டதை பிடித்ததை இணைக்கலாம்.

வாசித்து முடிவெடுப்பது வாசகர்களே.

செய்தி எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பதிந்தவர்களை ஒருபோதும் குறை கூறுவதில்லை.

தற்போது  புலம்பெயர்ஸ் டமில் தேசிய வியாபாரிகளின் ஒரே நோக்கம் சுமந்திரனை நாறடிப்பதுதான். அதனை அவர்கள் கன கச்சிதமாகச் செய்கிறார்கள். இதில் யாழ் களமும் பிரதிபலிக்கிறது. 

கடந்த சில வாரங்களாக யாழ் களத்தில் புலம்பெயர்ஸ் களால்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விடயங்களை நோக்கினாலே எல்லாம் தெளிவாகத் தெரியும். 

யாரும் எதனையும் இங்கே இணைக்கலாம் என்பது உண்மைதான். ஆனாலும் சேறடித்தல் ரூ,...மச் 

கைப்புள்ளைக்கு ......சாரி  ரங் ஸ்லிப்பாயிடிச்சு,...கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? 

🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kapithan said:

தற்போது  புலம்பெயர்ஸ் டமில் தேசிய வியாபாரிகளின் ஒரே நோக்கம் சுமந்திரனை நாறடிப்பதுதான். அதனை அவர்கள் கன கச்சிதமாகச் செய்கிறார்கள். இதில் யாழ் களமும் பிரதிபலிக்கிறது. 

சுமந்திரனை வீட்டுக்குள் இருந்து குரல் கொடுத்தர்களின் குரலையே இங்கே பேசுகிறோம்.

ஒரு சட்டத்தரணியாக அவரைப் போற்றுகிறேன்.

மற்றும்படி எல்லாவற்றுக்கும் அவரைப் போற்ற வேண்டுமெனபதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரனை வீட்டுக்குள் இருந்து குரல் கொடுத்தர்களின் குரலையே இங்கே பேசுகிறோம்.

ஒரு சட்டத்தரணியாக அவரைப் போற்றுகிறேன்.

மற்றும்படி எல்லாவற்றுக்கும் அவரைப் போற்ற வேண்டுமெனபதல்ல.

ஈழப்பிரியன்… நீங்கள், கண்ணை மூடிக் கொண்டு சுமந்திரனின்  எல்லாச் செயலையும் போற்ற வேண்டும் என்றால், உங்கள் மூளையை கழட்டி ஓரமாக வைத்து விட்டு அவரின் செம்பாகவோ, அல்லக்கையாகவோ…. மாற வேண்டும். 😂
அப்பிடி ஒரு பிழைப்பு பிழைக்க வேண்டிய அவசியம்… மற்றவர்களுக்கு இருக்கலாம், ஆனால் உங்களுக்கு இல்லை என்று எனக்கு நன்கு தெரியும். 🤣

  • Like 1
  • Thanks 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரனை வீட்டுக்குள் இருந்து குரல் கொடுத்தர்களின் குரலையே இங்கே பேசுகிறோம்.

ஒரு சட்டத்தரணியாக அவரைப் போற்றுகிறேன்.

மற்றும்படி எல்லாவற்றுக்கும் அவரைப் போற்ற வேண்டுமெனபதல்ல.

மீண்டும் மீண்டும்   பாராளுமன்றம் போக விரும்பும் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராட்டப்பட முடியாது   

அவர்கள் ஓய்வெடுத்தாலே பாராட்டலாம்.  எதுவும் செய்யாமல் ஏன் மீண்டும் மீண்டும் பாராளுமன்றம்  போக வேண்டும்   ஒதுங்கி இருந்து புதியவர்களுக்கு இடம் கொடுத்தால்  திறமைசாலிகளை   இனம் காணலாம்   இன்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 

சுயநலவாதிகள்.  

சேவை மனப்பான்மை அற்றவர்கள். 

குறிப்பு,....இங்கே சமயத்தை   கிறித்தவ சமயத்தை   வலு கட்டாயமாக. செருகுவர்களின்  நோக்கம்   பிழைகளை.  இயேசு மன்னிப்பார்.   எனவே… நாங்கள் பிழை விடலாம் என்பது தான்  🙏🙏 ஆனால்  நாங்கள் இங்கு சமயம் பற்றி கதைக்கவில்லை   அரசியல்வாதிகள் பற்றி கதைக்கிறோம்.  அவர்களின் சமயம் எதுவாகவும் இருக்கலாம்   

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
24 minutes ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரனை வீட்டுக்குள் இருந்து குரல் கொடுத்தர்களின் குரலையே இங்கே பேசுகிறோம்.

ஒரு சட்டத்தரணியாக அவரைப் போற்றுகிறேன்.

மற்றும்படி எல்லாவற்றுக்கும் அவரைப் போற்ற வேண்டுமெனபதல்ல.

அவரைப் போற்றும் எண்ணம் எனக்கும் இல்லை, போற்றவும் போவதில்லை..

ஆனால் அவருக்குச் சேற்றை மட்யும் வாரி இறைப்பதன் பின்னணியில் இருக்கும்  நோக்கத்தை நான்  கேள்விக்குள்ளாக்குகிறேன். தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்குவேன். 

13 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்… நீங்கள், கண்ணை மூடிக் கொண்டு சுமந்திரனின்  எல்லாச் செயலையும் போற்ற வேண்டும் என்றால், உங்கள் மூளையை கழட்டி ஓரமாக வைத்து விட்டு அவரின் செம்பாகவோ, அல்லக்கையாகவோ…. மாற வேண்டும். 😂
அப்பிடி ஒரு பிழைப்பு பிழைக்க வேண்டிய அவசியம்… மற்றவர்களுக்கு இருக்கலாம், ஆனால் உங்களுக்கு இல்லை என்று எனக்கு நன்கு தெரியும். 🤣

துணைக்கு ஆள் சேர்க்கிறீங்களா சிறியர்,...... 😂😂

சுமந்திரனுக்கு சேறடிப்பதன் நோக்கம் என்ன? என்று கேட்டால் கேட்பவர் சுமந்திரனின் அல்லக்கை, செம்பு,. புலம்பெயர்ஸ் டமில் தேசிய வியாபாரிகளின் தேசிய வியாபாரத்தைக் கேள்விக்குள்ளாக்கினால் துரோகி,..

கவனமாக உற்றுப்  பார்த்தால் இறுதியில்  இரு பகுதியினரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 😁

Edited by Kapithan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, Kapithan said:

தற்போது  புலம்பெயர்ஸ் டமில் தேசிய வியாபாரிகளின் ஒரே நோக்கம் சுமந்திரனை நாறடிப்பதுதான். அதனை அவர்கள் கன கச்சிதமாகச் செய்கிறார்கள்.

கீழே  தமிழ் சிறியின். பதிவு உண்டு”   அது அவரது சொந்த பதிவுகள் இல்லை    வெட்டி ஒட்டியது,.....அதாவது சுட்டது   இதில் எங்கே சுமத்திரனுக்கை சேறு அடிக்கப்பட்டுள்ளது   ??

7 hours ago, தமிழ் சிறி said:

சிலரின்  பின்னுட்டங்கள். 
இவரது அப்பா சந்திரகாசன் இரண்டாயிரத்தி பதின் ஒன்றா அல்லது பதின் மூன்றாம் ஆண்டா என்று சாியாகத் தொியவில்லை யூரோப் பாராளுமன்ற உறுப்பு நாடுகள் இலங்ககை்கு வந்து பொருளாதார தடை சம்பந்தமாக வந்திருந்த போது வவுனியா தம்பா விடுதியில் சந்தித்து எமது போராட்டத்துக்கு எதிராக சிங்கள அரசுக்கு ஆதரவாக பேசியிருந்தாா் நான் இன் னெருவரை எனது வாகனத்தில் வந்தவா் அவா்களை சந்திக்க சென்றிருந்த வேளையில் சந்திரகாசன் அவா்களை சந்தித்து விட்டு வெளியேறும் போது நானும் கூட்டிச் சென்றவரும் வெளியே எனது வாகனத்தில் ஏறும் போது எனக்கு கூறினாா் தந்தை செல்வாவின் மகன் என்றும் இந்தியாவில் இருந்து வந்து தமிழா்களுக்கு எதிராக கதைக்கின்றாா் என்று அவா் ஏசினாா் அன்றுதான் எனக்கு தொியும் தந்தை செல்வாவுக்கு மகன் உள்ளாா் என்று ...அவா் எமது இனத்துக்கு எதிரானவா்.
Loganathan Kokilan

இவருடைய தந்தை சந்திரஹாசன் பேட்டி ஒன்று கேட்டேன். சில வருடங்களிற்கு முன்பு மிக கடுமையாக தேசிய விடுதலை போராட்டத்தை மிக கொச்சைபடுத்தி பேசி இருந்தார்.அத்தோடு இந்திய குள்ளநரிகளை வேறு நியபடுத்தி பேசி இருந்தார்.இது உண்மை ஆனால் அண்ணா எந்த ஊடகம் என ஞாபகம் வரவில்லை.புலி பயங்கரவாதம் இருக்கும் வரை இந்தியா எந்த ஆணியும் பிடுங்காது என வேற கூறி இருந்தார்.இப்ப 15 வருடமாக புலியும் இல்லை எலியும் இல்லை.எல்லாம் கழுதை விட்டை என்றால் மேல் விட்டையும் ஒன்று கிழ் விட்டையும் ஒன்று எல்லாம் கள்ள கூட்டம்.

Sivakumar Sunthararasa

ஒபர் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள் தமிழ்நாட்டிலுள்ள ஈழஅகதிகளுக்காக நடத்துபவர்களுக்கு நல்ல ஒபர் எஜமானர்கள் தொடர்ந்து இ௫க்க வேண்டும் என்றால் அடிமைகள் இ௫க்கவேண்டும் என்ற கோட் பாட்டுடன் செயல்பட்டு வருகிறது ஒபர் பல அகதிமுகாங்களை நேரில் பாத்தேன் இவர்களுடைய செயல்பாட்டையும் பாத்தேன் ஈழத்தில் தமிழ்தேசப்பற்றுக்குள் இல்லாத போராளிகள் குழுக்களின் பிள்ளைகள் உறவினர்களுக்கே ஒபரில் வேலைவாய்ப்பு ஒட்டுமொத்தத்தில் றோ வின் மிகப்பெரிய கைக்கூலி.

கந்தசாமி ஞானேந்திரன் ஞாணன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Kapithan said:

துணைக்கு ஆள் சேர்க்கிறீங்களா சிறியர்,...... 

கபிதன்… உங்கள் கருத்து, (Kinder Garden) சின்னப் பிள்ளைத்தனமாக உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, தமிழ் சிறி said:

புலி பயங்கரவாதம் இருக்கும் வரை இந்தியா எந்த ஆணியும் பிடுங்காது என வேற கூறி இருந்தார்.இப்ப 15 வருடமாக புலியும் இல்லை எலியும் இல்லை.எல்லாம் கழுதை விட்டை என்றால் மேல் விட்டையும் ஒன்று கிழ் விட்டையும் ஒன்று எல்லாம் கள்ள கூட்டம்.

7 hours ago, தமிழ் சிறி said:

ஈழத்தில் தமிழ்தேசப்பற்றுக்குள் இல்லாத போராளிகள் குழுக்களின் பிள்ளைகள் உறவினர்களுக்கே ஒபரில் வேலைவாய்ப்பு ஒட்டுமொத்தத்தில் றோ வின் மிகப்பெரிய கைக்கூலி.

தமிழ்சிறியவர்களே இணைப்புக்கு நன்றி. தெரியாத புதுவிடயமாக இருக்கிறது.  ஒவ்வொரு கைக்கூலிகளின் பின்னால் எவளவு. என்னதான்  தாழம்பூவை வைத்தாலும் உள்ளேயுள்ளது வெளிப்படத்தானே செய்யும்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

Edited by nochchi
திருத்தம்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, Kandiah57 said:

அவர்கள் ஓய்வெடுத்தாலே பாராட்டலாம்.  எதுவும் செய்யாமல் ஏன் மீண்டும் மீண்டும் பாராளுமன்றம்  போக வேண்டும்

1. நல்ல வருமானம்(சம்பளம்)
2. தரமான, மலிவான உணவு
3. வாகன வசதி
4. எரிபொருளுக்கான இலவசக் கூப்பன்
5. பிரமுகராக வலம் வரும் வியாதி
6. பெறுமதியான கடவுச்சீட்டு
7. நாடாளுமன்ற வரப்பிரசாதங்கள்
8. விழாக்கள் பரிசுகள் இத்தியாதிகள்
9. உறவுகளுக்கு உதவுதல்  இப்டிப் பலதை இழக்க மனம் வருமா? 
                                     மேற்கு மாதிரித் தேர்தலிலை நின்று நாடாளுமன்றம் போனா தொகுதி வேலையைக் கட்டாயம் பார்க்க வேண்டியதில்லை. இப்படி சும்மா இருக்க வாற வரப்பிரசாதங்களைத் தரும் தொழிலாக உள்ளதை விடமுடியாதுதானே.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

"தோழர்" பாலன் வழமை போல "பெட்டிக்கு வெளியே இருந்து" யோசித்திருக்கிறார்.

"ஒரு அமைப்பு இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்கு உதவுகிறது, எனவே அவர்கள் அகதிகளாக இருப்பதை ஊக்குவிக்கிறது" என்ற நவீன யோசனை "பெட்டிக்கு வெளியே" இருந்து யோசித்தால் மட்டும் தான் ஒருவருக்கு வரும்😂!

🤣..........

இப்போதைக்கு பாலனிடம் மாட்டுப்பட்டிருப்பது இவர் என்று எடுத்துக் கொண்டு, பின்னர் பாலனின் எழுத்தை வாசித்து சிரிக்க வேண்டும்.......

நட்சத்திரன் செவ்விந்தியனும் இப்படியான அரசியல் ஆராய்ச்சிகளை, கருத்துகளை எழுதினால், அது இதைவிட இன்னும் சுவாரசியம் ஆகவும், சூடாகவும் இருக்கும்.

எவர் மீதும் எவரும் குற்றம் குறைகள் கண்டுபிடிக்கலாம், சொல்லலாம் என்ற ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விதிவிலக்கே இல்லை. ஆனாலும் மக்கள் திரள் இந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், கடுமையான மாற்றுத் தரப்புகள், அறிவுக்கூர்மையுள்ளவர்கள் போல தோன்றுபவர்கள் போன்ற இடங்களில்  இருந்து வரும் கருத்துகளை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே வாசிக்கின்றனர் போல. அவர்களின் முடிவு இவைகளால் மாற்றப்படுவதில்லை. சுஜாதாவின் கதைகளை வாசிப்பது போல, பட்டுக்கோட்டை பிரபாகரின் கதைகளை வாசிப்பது போல, இவைகளும் ஒரு ஜனரஞ்சக வாசிப்புகள் மட்டுமே.

எனக்கும் தந்தை செல்வாவின் பேரன் என்று இப்படி ஒருவர் இருக்கின்றார் என்றே தெரியாது. அவர் ஒரு வேட்பாளர் என்றவுடன் எரிச்சல் தான் வருகின்றது. 

தமிழ்நாட்டில் உள்ள சில அகதி முகாம்களுடன் எனக்கு ஓரளவு பரிச்சயம் இருக்கின்றது. சிலவற்றுக்கு போய் இருக்கின்றேன், அங்கே தங்கியும் இருக்கின்றேன். இப்படி ஒரு அமைப்பு அங்கே எதுவும் செய்வதாக கேள்விப்பட்டதில்லை. இங்கு வாழும் எமது மக்கள் வேறு ஒரு நிஜத்திற்கு போய்விட்டார்கள். பாலன் போன்றவர்கள் முந்தைய தலைமுறையில் இருந்து கொண்டு 'இங்கு வா, அங்கு போ.......' என்று பழைய கதையையே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, nochchi said:

தமிழ்சிறியவர்களே இணைப்புக்கு நன்றி. தெரியாத புதுவிடயமாக இருக்கிறது.  ஒவ்வொரு கைக்கூலிகளின் பின்னால் எவளவு. என்னதான்  தாழம்பூவை வைத்தாலும் உள்ளேயுள்ளது வெளிப்படத்தானே செய்யும்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

நன்றி நொச்சி. சில  விடயங்களை வாசிக்க தந்தை செல்வாவிற்கு இப்படி வாரிசுகளா… என்ற ஆச்சரியமும், கவலையும் ஏற்படத்தான் செய்தது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

எனக்கும் தந்தை செல்வாவின் பேரன் என்று இப்படி ஒருவர் இருக்கின்றார் என்றே தெரியாது. அவர் ஒரு வேட்பாளர் என்றவுடன் எரிச்சல் தான் வருகின்றது. 

தமிழ்நாட்டில் உள்ள சில அகதி முகாம்களுடன் எனக்கு ஓரளவு பரிச்சயம் இருக்கின்றது. சிலவற்றுக்கு போய் இருக்கின்றேன், அங்கே தங்கியும் இருக்கின்றேன். இப்படி ஒரு அமைப்பு அங்கே எதுவும் செய்வதாக கேள்விப்பட்டதில்லை.

நன்றி  உண்மையை தெளிவாக எடுத்து சொன்னமைக்கு   🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

கபிதன்… உங்கள் கருத்து, (Kinder Garden) சின்னப் பிள்ளைத்தனமாக உள்ளது. 

இருக்கலாம். ஆனால் குழந்தை பொய் சொல்லாதே,..🤣 குழந்தையும் கடவுளும் ஒன்று அல்லவா,..🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

இருக்கலாம். ஆனால் குழந்தை பொய் சொல்லாதே,..🤣 குழந்தையும் கடவுளும் ஒன்று அல்லவா,..🤣

உங்களது கருத்துகள் தான்  குழந்தைப்பிள்ளைத்தானமாக இருக்கிறது   ஆனால் 

நீங்கள் குழந்தை இல்லை    

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, தமிழ் சிறி said:

462620130_556602943706878_28929959342963

தந்தை செல்வா அவர்களின் ஆத்மா இந்தப் புகைப்படத்தையும், இப்ப உள்ள டமிழரசுக் கட்சியையும் பார்க்க நேர்ந்தால், அவரது ஆத்மாவும் தற்கொலை செய்துகொள்ளும். பெற்றோரது பெயரைக் கெடுக்கவென்றே.. 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

யாழிலே ''டமிழ்,டமிழ்'' என்று வாசித்து அப்படியே கை தட்டிவிட்டுட்டுது. அது 'டமிழரசு, இல்லை தமிழரசு என்று வாசியுங்கள் உறவுகளே. 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Kapithan said:

உங்கள் எழுத்துக்களை இங்கே ஒருவரும் ஒரு கருத்தாகவே கருதுவதில்லை.

நீங்கள் என்று எழுதுங்கள் ஒருவரும் என்று எழுதுவது தவறு.

  • Like 2
  • Thanks 2

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.