Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றையதினம் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்றையதினம் நெல்லியடி பகுதியில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தற்போது அவர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

https://www.virakesari.lk/article/197009

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு சில நாட்களில் விடுதலை செய்யப்பட்டு, “ சிறை மீண்ட செம்மலாக” வாக்கு கேட்டு வருவார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கஜேந்திரகுமார் பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் வியாழக்கிழமை (24) மாலை கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர் பொலிஸ் பிணையில் பொலிஸார் விடுவித்துள்ளனர்.

அதேவேளை பருத்தித்துறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளரான வரதராஜன் பார்த்திபனை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கஜேந்திரகுமார் பிணையில் விடுவிப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted


சிறை மீண்ட செம்மல் ஈழ தமிழர்களிடையே   ஒரு கவர்ச்சியான  பட்டம் தான் 😃
சிறை மீண்ட செம்மலாக உரிமை பெறுவதற்கு குறைந்தது எத்தனை மணித்தியாலங்கள்    பொலிஸால்  தடுத்து வைக்கபட்டிருக்க வேண்டும்?
அர்ச்சுனா ஏற்கெனவே அப்படி  வலம் வருகின்றார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். செய்யவும் போவதில்லை. ஆனால் எவனாவது களத்தில் இறங்கி செயற்பட்டால் அல்லது சிறை சென்றால் நக்கல் நையாண்டி??

  • Like 8
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, விசுகு said:

நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். செய்யவும் போவதில்லை. ஆனால் எவனாவது களத்தில் இறங்கி செயற்பட்டால் அல்லது சிறை சென்றால் நக்கல் நையாண்டி??

தமிழ்த் தேசியப் பரப்பில் கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் சிங்களப்படைகளின்  அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் இடையூறுகளைக் கடந்து ஒரேகொள்கையோடு உறுதியாக நிற்பதென்பது சிங்களத்துக்கு மட்டுமல்ல இன்னும் பலருக்கும் இடையூறாக உள்ளது. அதன்விளைவேயாகும்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கஜே - குதிரை கஜே கும்பல்  தாங்கள் தினமும் தமிழர் மத்தியில் பிதற்றும் இரு தேசம் கோரிக்கைக்காக போராடி கைது செய்யப்படவில்லை.  ஶ்ரீலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பின் மீது தாங்கள் விசுவாசமாக இருப்பதாக சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான தமது  தேர்தல்  போட்டியில் தேர்தல் விதிமுறை மீறல் என்றே கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் இலங்கை அரசில் கஜேக்கு இருக்கும் உள்மட்ட செல்வாக்கை பயன்படுத்தி முடிந்து விடும். எனவே உசுப்பேத்து புலம் பெயர் கோஷடிகளே கவலை வேண்டாம் உங்கள் தலைவர் அடுத்த பாராளுமன்றம் கூடும் போதும் இலங்கை ஒற்றையாட்சிக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன் என்று  சத்தியம் செய்யத்தான் போகிறார். அவரசு இரு தேசத்தில் ஒரு தேசமான  ஶ்ரீலங்கா தேசத்தில் தான் செய்துள்ள பாரிய முதலீடுகளை கண்காணிக்கவும் மேலதிக முதலீடுகளை மேற்கொள்ள தொடர்பாடல்களை வளர்ககவும் அனுகூலங்களை பெற்றுக் கொள்ளவும் அவர் பாராளுமன்றம் செல்வது அவசியம் தானே! 

  • Like 1
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, island said:

தேர்தல்  போட்டியில் தேர்தல் விதிமுறை மீறல் என்றே கைது செய்யப்பட்டிருக்கிறார்

துண்டுப் பிரசுரம் விநியாகிப்பது குற்றம் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்தபின் அதை ஒரு சட்டத்தரணியான கஜே செய்திருக்கின்றார் என்றால் இது ஒருவிதமான தேர்தல் பிரச்சார உத்திதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, island said:

கஜே - குதிரை கஜே கும்பல்  தாங்கள் தினமும் தமிழர் மத்தியில் பிதற்றும் இரு தேசம் கோரிக்கைக்காக போராடி கைது செய்யப்படவில்லை.  ஶ்ரீலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பின் மீது தாங்கள் விசுவாசமாக இருப்பதாக சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான தமது  தேர்தல்  போட்டியில் தேர்தல் விதிமுறை மீறல் என்றே கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் இலங்கை அரசில் கஜேக்கு இருக்கும் உள்மட்ட செல்வாக்கை பயன்படுத்தி முடிந்து விடும். எனவே உசுப்பேத்து புலம் பெயர் கோஷடிகளே கவலை வேண்டாம் உங்கள் தலைவர் அடுத்த பாராளுமன்றம் கூடும் போதும் இலங்கை ஒற்றையாட்சிக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன் என்று  சத்தியம் செய்யத்தான் போகிறார். அவரசு இரு தேசத்தில் ஒரு தேசமான  ஶ்ரீலங்கா தேசத்தில் தான் செய்துள்ள பாரிய முதலீடுகளை கண்காணிக்கவும் மேலதிக முதலீடுகளை மேற்கொள்ள தொடர்பாடல்களை வளர்ககவும் அனுகூலங்களை பெற்றுக் கொள்ளவும் அவர் பாராளுமன்றம் செல்வது அவசியம் தானே! 

எதையும் எவரையும் கள்ளராகவும்  சுயநலவாதிகளாகவும் பேசும், பார்க்கும் ஒருவர் நிச்சயமாக உடல் முழுவதும் வஞ்சகம் கொண்டவராகவே இருக்கமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன உருட்டப்பா! சிங்க கொடி இருக்கிற இடத்துக்கு போகமாட்டாராம். சிங்க கொடி பறக்கும் ஶ்ரீலங்கா நாடாளுமன்றம் செல்ல பேராசையாம்.   இப்படி ஒரு பம்மாத்து கும்பலும் இந்த தேர்தலில் வேட்பாளராம். 😂

5 minutes ago, விசுகு said:

எதையும் எவரையும் கள்ளராகவும்  சுயநலவாதிகளாகவும் பேசும், பார்க்கும் ஒருவர் நிச்சயமாக உடல் முழுவதும் வஞ்சகம் கொண்டவராகவே இருக்கமுடியும்.

 

ரொம்ப தான் சுட்டுப்போட்டுதோ. 😂

என்ன செய்வது கள்ளர்களை தூக்கி சுமக்கும் உங்கள் மனநிலை எனக்குல்லையே? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, island said:

. 😂

ரொம்ப தான் சுட்டுப்போட்டுதோ. 😂

என்ன செய்வது கள்ளர்களை தூக்கி சுமக்கும் உங்கள் மனநிலை எனக்குல்லையே? 

அந்த மண்ணில் மட்டுமல்ல எங்குமே இவ்வாறு அல்லல்படவேண்டிய அவசியம் அற்ற பிறப்பால் கோடீஸ்வரப்பிள்ளை.  உலகின் எந்த மூலையிலும் போய் ராசாவாக வாழ்ந்திருந்திருக்கலாம். வாழலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, island said:

என்ன உருட்டப்பா! சிங்க கொடி இருக்கிற இடத்துக்கு போகமாட்டாராம். சிங்க கொடி பறக்கும் ஶ்ரீலங்கா நாடாளுமன்றம் செல்ல பேராசையாம்.   இப்படி ஒரு பம்மாத்து கும்பலும் இந்த தேர்தலில் வேட்பாளராம். 😂

2009ம் ஆண்டு சிங்கள தேச கொடியை தூக்கி ஆட்டியதன் பலனை தமிழ்மக்கள் சந்தோசமாக அனுபவிக்கின்றனர் :cool:

Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கொடியும்  பிடியும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
35 minutes ago, குமாரசாமி said:

2009ம் ஆண்டு சிங்கள தேச கொடியை தூக்கி ஆட்டியதன் பலனை தமிழ்மக்கள் சந்தோசமாக அனுபவிக்கின்றனர் :cool:

Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கொடியும்  பிடியும்!

அப்ப ஆட்டாதேங்கோ. அங்க போகாதேங்கோ. சிங்க கொடி பறக்கும் பாராளுமன்றம் போக பேராசை படுபவர் இதை கூறியது தான் நகைச்சுவை. 😂

சிங்க கொடி பறக்கும் நாடாளுமன்றம் செல்ல நாக்கை தொங்க விட்டு அலைபவர் இதை கூறலாமா? 

Edited by island
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, island said:

அப்ப ஆட்டாதேங்கோ. அங்க போகாதேங்கோ. சிங்க கொடி பறக்கும் பாராளுமன்றம் போக பேராசை படுபவர் இதை கூறியது தான் நகைச்சுவை. 😂

சிங்க கொடி பறக்கும் நாடாளுமன்றம் செல்ல நாக்கை தொங்க விட்டு அலைபவர் இதை கூறலாமா? 

ஒரு தமிழன் பாராளுமன்றம் போகவேண்டும் என்றால்   நாட்டுக்கொடியை அரவணைக்க வேண்டும் என்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கஜே-கயே குழுவுக்கு இம்முறை ரஜபக்‌ஷ குடும்பம் ஓரங்கட்டப்பட்டது பேரிழப்பு!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, குமாரசாமி said:

ஒரு தமிழன் பாராளுமன்றம் போகவேண்டும் என்றால்   நாட்டுக்கொடியை அரவணைக்க வேண்டும் என்கிறீர்கள்.

நீங்கள் topic ஐ மாற்ற முனைகின்றீர்கள்

சொல்ல வந்தது, சிங்க கொடி இருக்குமிடத்துக்கு செல்ல மாட்டேன் என்று  பீலா விடும்  ஒருவர் சிங்க கொடி பறக்கும் பாராளுமன்றம் செல்ல பேராவல் கொண்டிருப்பது உங்களுக்கு முரண்பாடாக தெரியவில்லையா?  

இது சம்பந்தர் சிங்ககொடி பிடித்ததை விட மோசமானதல்லவா?

சம்பந்தர் கொடிபிடித்தது நீங்கள் கூறியது போல் 2009 அல்ல 2016 ல்.  மக்கள் அழிவுக்கு  காரணம் சம்பந்தர் கொடி பிடித்தல்ல. 2009  முன்பு சிங்க கொடி  பிடிக்காத போதே  பேரழிவு வந்துவிட்டது.

 40000 சவப்பெட்டிகளை சடலங்களுடன் யாழ்ப்பாணத்தில்  இருந்து அனுப்புவோம் என்று பாராளுமன்றத்தில்  உரையாற்றி யுத்த இறுதிக் காலத்தில்     மக்களை பேரழிவுக்குள் தள்ளியதில் கஜே கட்சி உறுப்பினர் குதிரை கஜேக்கும்  பங்குண்டு என்று அண்மையில்  விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் பசீர் காக்காவே கஜே மீது பகீரங்கமாக தொலைக்காட்சி உரையாடலில் குற்றம் சாட்டியதை தாங்கள் அறியவில்லையா?  



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எக்னெலிகொடவின் கடத்தல் குறித்து விசாரணைகளை நடத்துமாறு எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வலியுறுத்தல் ! Posted on December 14, 2024 by தென்னவள்  8 0 ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பின்றியும், வெளிப்படைத்தன்மை வாய்ந்த விதத்திலும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கிவரும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு (ரிப்போட்டர்ஸ் வித்தௌட் போர்டர்ஸ்) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. ‘லங்கா ஈ-நியூஸ்’ என்ற இணைய செய்தித்தளத்தில் கேலிச்சித்திர ஓவியராகவும், (கார்ட்டூனிஸ்ட்) அரசியல் பத்தி எழுத்தாளராகவும் பணியாற்றிய பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி ஹோமாகம நகரில் கடத்திச்செல்லப்பட்டார். அவரது கடத்தலுடன் தொடர்புபட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்ட இராணுவ புலனாய்வு சேவை அதிகாரிகள் 9 பேர் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணைகள் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் தடைப்பட்டிருந்த நிலையில், அவ்விசாரணைகள் கடந்த 6 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் இதுபற்றிக் கருத்து வெளியிட்டிருக்கும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு, கடந்த செப்டெம்பர் மாதம் ஜனாதிபதியாகத் தெரிவான அநுரகுமார திஸாநாயக்க, அரசியல் நோக்கங்களுக்காகப் படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளை உரியவாறு நிறைவுசெய்யப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படும் என வாக்குறுதியளித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. ‘பிரகீத் எக்னெலிகொடவின் வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பில் உண்மையை அறிந்துகொள்வதற்காக அவரது குடும்பத்தினர் 14 ஆண்டுகளாகத் தவிப்புடன் காத்திருக்கிறார்கள். எனவே இச்சம்பவம் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பின்றியும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் முன்னெடுக்கப்படவேண்டும் என உரிய அதிகாரிகளிடம் வலியுறுத்துகின்றோம். இச்சம்பவத்துக்குப் பொறுப்பானவர்கள் எவரெனினும், அவர்கள் கொண்டிருக்கக்கூடிய அரசியல் மற்றும் இராணுவத்தொடர்புகளுக்கு அப்பால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதுமாத்திரமன்றி சாட்சியாளர்கள் மற்றும் விசாரணையாளர்களைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும்’ என்றும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
    • நான் அர்ச்சனா ஆதரவாள்ன் ..இல்லை...செய்வது தவறாக இருக்கலாம்...நான் ஊரில் நின்றநேரம் சில அலுவல்களுக்காக் அலுவலகங்கள்    சென்றபோது..கண்டவை ...அலுவலர் திமிர்த்தனம்.. அலட்சியம்..ஊழல்...பொதுநலநோக்கு கிடையவே கிடையாது..சுயநலம் ...எத்தனையோ திட்டங்கள்  இவர்களின் அசமந்தப் போக்கால் ..அரைகுறையாக கிடக்கின்றன...போட்டிமனப்பான்மை கிடைக்கின்ற காசுகளும் திரும்பிவிடுகின்றன.. இப்படி பலவற்றை கண்டேன்...என்னைப் பொறுத்தவரை அர்ச்சனாவின் ..இந்த நேரடிக் கேள்விகள் ..வடகிழக்கில் உண்மையான  அபிவிருத்தி நடைபெற  உதவலாம்..ஆனால்  அர்ச்சனா சபை நாகரீகம் பேணவேண்டும் என்பதே எனது விருப்பம்
    • புகைப்படத்துடன் விடைபெற்ற மஹிந்தவின் 116 பாதுகாப்பு அதிகாரிகள் ! Shana     முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த 116 மேலதிக பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று தமது கடமைகளை நிறைவுறுத்திக் கொண்டு வெளியேறியுள்ளனர். அதற்கமைய, நேற்றைய தினம் குறித்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியுடன் இறுதி புகைப்படத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தது. இதன் ஒரு கட்டமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காகப் பிரதான பாதுகாப்பு அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் சாரதிகள் உள்ளிட்ட 60 பேர் மாத்திரமே பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். கவலையான மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுப்பதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்த முக்கிய அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். பல வருடங்களாக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். உணவு பரிசோதகர்கள் கூட பாதுகாப்பு கடமைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதுவரை 116 பாதுகாப்பு அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு கடமைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதற்கான உரிய தெளிவுபடுத்தல்களை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் பதவி விலக்கப்பட்டமையின் பின்னணியில் ஏதேனும் சூழ்ச்சி இருக்கின்றதா? என்பது சந்தேகம் எழுவதாக சட்டத்தரணி மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.   https://www.battinews.com/2024/12/116_14.html  
    • சாத்தானுக்கு இன்னும் சும்மின் பேதி நிற்கவில்லை. 
    • பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை! வடக்கு ஆளுநர் December 14, 2024 “பதவிகள் சேவை செய்வதற்காக வழங்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு சரியான சேவைகளை வழங்க வேண்டும். இல்லாவிடின் அந்தப் பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை”- இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் நிறுவுநர் நாளும் பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலையின் ஏழூர் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை பாடசாலை அதிபர் இ. கணேசானந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர், சாதனை படைத்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசில்களை வழங்கினார். ஆளுநர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நாங்கள் கல்வி கற்ற காலத்துக்கும் தற்போதைய காலத்துக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அன்று எங்களின் பாடசாலை அதிபர்தான் மேலதிக நேர வகுப்புகளை எடுத்தார். அவர்களைப்போன்ற ஆசிரியர்கள்தான் இன்றும் எங்களுக்கு முன்னுதாரணமான ‘கதாநாயகர்களாக’ இருக்கின்றார்கள். அன்றைய காலத்தில் நாம் தனியார் கல்வி நிலையங்களுக்கு கூட செல்வதில்லை. அதற்கான தேவைப்பாடு ஏற்படவில்லை. கல்வியால்தான் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். கிராமத்தின் அபிவிருத்தியோ, எதுவாகினும் கல்வியால் அந்த மாற்றங்களை உருவாக்க முடியும். அதேநேரம், கல்வியில் எவ்வளவு உயர்ந்து விளங்கினாலும் நாங்கள் பண்புள்ளவர்களாக இல்லாவிட்டால் எம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். உயர் பதவியிலிருந்தாலும் பண்பு இல்லாவிட்டால் யாரும் எம்மை மதிக்க மாட்டார்கள். பதவி வரும் போது பணிவு வரவேண்டும். இன்றைய மாணவ சமுதாயத்துக்கு பணிவு, இரக்கம், அன்பு என்பவற்றை ஆசிரியர்கள் கூடுதலாக போதித்து அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றவேண்டும். ஆசிரியர்கள் அன்றைய காலத்தில் எமக்கு அடித்தால் நாம் வீட்டில் சென்று சொல்வதற்குப் பயப்படுவோம். ஏனென்றால் வீட்டிலும் மீண்டும் அடி விழும். ஆனால், இன்று அது தலைகீழாகிவிட்டது. ஆசிரியர்கள், மாணவர்களை தண்டிப்பது என்பது அவர்களை எதிரியாகக் கருதி அல்ல. அவர்களின் வளர்ச்சிக்காகவே தண்டிக்கின்றனர். இன்று தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பதற்கே எல்லோரும் தயங்குகின்றனர். அந்தளவு தூரத்துக்கு பயம். நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கிப்போகின்றனர். அதேபோல, வீதிகளில் குப்பை போடுகின்றனர். 1970 ஆம் 1980 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம்தான் மிகத் தூய நகரம். இன்று மிக குப்பையான நகரமாக மாறியிருக்கின்றது. மோட்டார் சைக்கிள்களில், கார்களில் வந்து குப்பைகளை கொட்டிவிட்டு செல்கின்றனர். வீதியிலும், வாய்க்காலிலும் குப்பை போடுவது நாங்கள்தான். வீதிகளையும், வாய்க்கால்களையும் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவதும் நாங்கள்தான். பின்னர் வெள்ளம் வந்துவிட்டது என்று கத்துவதும் நாங்கள்தான். எங்களின் மனநிலை மாறவேண்டும். இளமையில் – இந்த மாணவர்களிடத்தில் சரியான பழக்க வழக்கங்களை – விழுமியங்களை ஆசிரியர்கள் விதைக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் சிறந்த சமூகத்தை கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும். நாம் மற்றவருக்கு உதவவேண்டும். அப்படிச் செய்தால் எமக்கு பல மடங்கு திருப்பிக்கிடைக்கும். இந்தப் பழக்கங்களை மாணவர்களிடத்தில் வளர்த்தெடுக்க வேண்டும். எதிர்காலச் சிற்பிகளான மாணவர்கள் சமூகத்தில் கல்வியறிவுடன் சிறந்த ஒழுக்கத்துடன் வளரவேண்டும். ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்”- என்றார்.   https://eelanadu.lk/பதவியில்-இருப்பதில்-அர்த/  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.