Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மீதான தனது பதில்த் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்

இம்மாத ஆரம்பத்தில் தன்மீது நடத்தப்பட்ட 180 இற்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கும், ஈரானின் கூலிகளான ஹமாஸ், ஹிஸ்புள்ளா, ஹூத்தீக்கள், ஈராக்கிலும் சிரியாவிலும் இயங்கும் இஸ்லாமியக் குழுக்கள் ஆகியவற்றின் ஊடாக தன்மீது ஈரான் நடத்திவரும் தாக்குதல்களுக்கும் பதிலடியாக இஸ்ரேல் சனி அதிகாலையிலிருந்து ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் முக்கிய இலக்குகள் என்று அடையாளம் காணப்பட்டவற்றின் பட்டியலொன்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளிடம் இஸ்ரேலினால் சில தினங்களுக்கு முன்னர் கையளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தப்பட்டியலை அமெரிக்க அதிகாரிகள் வேண்டுமென்றே வெளியே கசியவிட்டதால் இலக்குகள் குறித்த தகவல்களை ஈரானும் அதன் முகவர்களும் அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. அதனால் இப்பாட்டியலிற்குள் அடங்காத வேறு இலக்குகள் சிலவற்றை இஸ்ரேல் இனங்கண்டு தாக்குதலை நடத்தியிருக்கிறது. தாக்குதல் நடத்தப்படுவதற்குச் சற்று முன்னர்தான் அமெரிக்காவிற்கு இதுபற்றிய தகவல்களை இஸ்ரேல் வழங்கியிருக்கிறது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானின் முக்கிய இடங்களில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக மக்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் அச்சத்தங்கள் இஸ்ரேலிய ஏவுகணைகளை தமது ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறை வானில் வைத்து தாக்கியழிக்கும்போது ஏற்பட்ட வெடிப்புச் சத்தங்கள் என்று ஈரான் கூறியிருக்கிறது. மேலும் இஸ்ரேலின் தாக்குதலினால் தமக்கு அவ்வளவாகப் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்றும் ஈரான் கூறுகிறது.

https://edition.cnn.com/world/live-news/israel-iran-lebanon-gaza-war-10-25-24-intl-hnk/index.html

https://www.foxnews.com/world/israel-begins-retaliatory-strikes-against-iran-following-missile-barrage-targeting-israelis

https://www.bbc.com/news/live/cn4v67j88e0t

https://www.reuters.com/world/middle-east/explosions-heard-iran-syria-middle-east-braces-israeli-retaliation-2024-10-25/

GaxZmSaXYAAWHUQ.jpg?_gl=1*hysb7s*_ga*MjAxNTM1OTYzOC4xNzI5OTA0NDc5*_ga_RJR2XWQR34*MTcyOTkwNDQ3OS4xLjEuMTcyOTkwNDQ5Ny4wLjAuMA..

WhatsApp-Image-2024-10-26-at-02.57.02.jpeg

GaxWsSwXoAA5E56.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தான் தாக்குதல்களில் பங்குகொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது.

35 minutes ago, ரஞ்சித் said:

ஈரானின் முக்கிய இலக்குகள் என்று அடையாளம் காணப்பட்டவற்றின் பட்டியலொன்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளிடம் இஸ்ரேலினால் சில தினங்களுக்கு முன்னர் கையளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தப்பட்டியலை அமெரிக்க அதிகாரிகள் வேண்டுமென்றே வெளியே கசியவிட்டதால் இலக்குகள் குறித்த தகவல்களை ஈரானும் அதன் முகவர்களும் அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. 

 

 

நான் வாசித்த செய்திகளின் படி, தாக்கப்படக்கூடிய இலக்குகள் பற்றிய விபரங்கள் கசியவில்லை. எந்த வகையான ஆயுதங்கள்/ தூர இருந்தே தாக்க கூடிய Air-launched Ballistic Missile (ALBM) systems ஏவுகணைகள் பற்றிய high-level தகவல்கள் மாத்திரமே கசிய விடப்பட்டன.

இத் தகவல்களும் இஸ்ரேலால் அமெரிக்காவுக்கு கொடுக்கப்பட்ட தகவல்கள் அல்ல. அமெரிக்க புலநாய்வு பிரிவுகளால் இஸ்ரேல் பற்றி கொடுக்கப்பட்ட தகவல்கள் என நினைக்கிறேன்.

எவ்வளவு தான் இஸ்ரேல் அமெரிக்காவின் நட்பு நாடாக இருப்பினும், இஸ்ரேலை கூட வேவு பார்க்கின்றது அமெரிக்கா.

 

https://www.bbc.com/news/articles/cz6w6p8x7p8o

 

Edited by நிழலி
விடுபட்டதை சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்

Iran closes its airspace

From CNN’s Paul P. Murphy and Avery Schmitz

Iran has closed its airspace, according to an official notice issued by its civil aviation authority.

The airspace will be closed until Saturday 9:00 a.m. local time (1:30 a.m. ET), according to the notice.

Earlier on Saturday morning, around the time of the strikes, CNN observed four civilian planes begin flying away from the Iranian capital of Tehran on the flight tracking website FlightRadar24.

https://www.cnn.com/world/live-news/israel-iran-lebanon-gaza-war-10-25-24-intl-hnk/index.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

நான் வாசித்த செய்திகளின் படி, தாக்கப்படக்கூடிய இலக்குகள் பற்றிய விபரங்கள் கசியவில்லை. எந்த வகையான ஆயுதங்கள்/ தூர இருந்தே தாக்க கூடிய Air-launched Ballistic Missile (ALBM) systems ஏவுகணைகள் பற்றிய high-level தகவல்கள் மாத்திரமே கசிய விடப்பட்டன.

இத் தகவல்களும் இஸ்ரேலால் அமெரிக்காவுக்கு கொடுக்கப்பட்ட தகவல்கள் அல்ல. அமெரிக்க புலநாய்வு பிரிவுகளால் இஸ்ரேல் பற்றி கொடுக்கப்பட்ட தகவல்கள் என நினைக்கிறேன்.

எவ்வளவு தான் இஸ்ரேல் அமெரிக்காவின் நட்பு நாடாக இருப்பினும், இஸ்ரேலை கூட வேவு பார்க்கின்றது அமெரிக்கா.

 

https://www.bbc.com/news/articles/cz6w6p8x7p8o

 

உண்மைதான்,

பி பி சி செய்திகளின்படி தாக்குதலுக்குப் பாவிக்கப்படக் கூடிய ஆயுதங்கள் பற்றிய விடயங்களே கசியவிடப்பட்டுள்ளன. இடங்கள் அல்ல. எனது தவறான புரிதல் என்றுதான் நினைக்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

14 minutes ago, நிழலி said:

இத் தகவல்களும் இஸ்ரேலால் அமெரிக்காவுக்கு கொடுக்கப்பட்ட தகவல்கள் அல்ல. அமெரிக்க புலநாய்வு பிரிவுகளால் இஸ்ரேல் பற்றி கொடுக்கப்பட்ட தகவல்கள் என நினைக்கிறேன்.

உண்மை,

இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் உளவுத்தகவல்களே கசிய விட‌ப்பட்டுள்ளன. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது , சேதங்கள் இல்லை என்று ஈரானின் அரசச் செய்திச்சேவை தொடர்ச்சியாகக் கூறிக்கொண்டு வந்தபோதிலும், டெஹ்ரானில் நடக்கும் பாரிய குண்டுவெடிப்புக்களால் மக்கள்  பீதியுடன் காணப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. ஜெருசலேம் போஸ்ட் எனும் இஸ்ரேலிய இணையப் பத்திரிக்கை டெஹ்ரான் மீதான தாக்குதலின்போது எடுக்கப்பட்ட குண்டுவெடிப்பொன்றினை வெளியிட்டிருக்கிறது.

https://www.jpost.com/breaking-news/article-826117

ஈரானின் விமான எதிர்ப்பு பொறிமுறையினைக் கடந்து சில குண்டுகள் இலக்குகள் மீது பாய்ந்திருக்கின்றன. எண்ணெய்க் கிணருகல் மீதான தாக்குதலைத் தவிர்த்து வெறுமனே இராணுவ இலக்குகள் மீது மட்டும்தான் இத்தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் படையின் தளங்களும் இலக்குவைக்கப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன.

ஈரான் மீது இரண்டாவது வலிந்த தாக்குதலில் இஸ்ரேல் தற்போது ஈடுபட்டு வருகிறது. 

https://edition.cnn.com/world/live-news/israel-iran-lebanon-gaza-war-10-25-24-intl-hnk/index.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து 30 மைல்கள் தொலைவில் இருக்கும் கராஜ் நகரில் அமைக்கப்பட்டிருக்கும் அணுமின் நிலையத்திற்கு அருகிலும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. 

 

ஈரான் மீதான தாக்குதலை டெல் அவிவில் அமைந்திருக்கும் இராணுவத் தளம் ஒன்றிலிருந்து தளபதிகளுடன் மேற்பார்வையிடும் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு

Israeli Prime Minister Benjamin Netanyahu and Defense Minister Yoav Gallant monitor the attack on Iran from an undisclosed location. Parts of the image were obscured by the Israel Defense Forces.

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image

சரித்திரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் மிகப்பெரிய தாக்குதல் என்று வர்ணிக்கப்படும் தாக்குதலில் 140 யுத்த விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்திவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல்களில் இதுவரை இராணுவ மையங்கள், ஏவுகணை நிலைகள், ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் தயாரிக்கும் நிலையங்கள் மற்றும் விமான எதிர்ப்பு நிலைகள் என்பனவும் இலக்குவைக்கப்பட்டிருக்கின்றன. உள்ளூர் தகவல்களின்படி ஈரானின் முக்கிய படையணியான இஸ்லாமிய புரட்சிகர ராணுவத்தின் பிரதான தலைமையகமும் தாக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

முதலாவது தாக்குதல்கள் தலைநகர் டெஹ்ரான் மற்றும் கராஜ் ஆகிய பகுதிகளிலேயே ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

தன்மீது ஈரானும், அதன் முகவர்களும் கடந்த சில வருடங்களாக நடத்திவரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இதனை தான் நடத்துவதாக இஸ்ரேல் கூறுகிறது.

இத்தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் பைடனுக்கும், உப‌ அதிபர் கமலா ஹரிஸிற்கும் முறைப்படி அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தளத்தில் இருந்து தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டதாக  சொல்லப்படுகிறது . செய்தியின் உண்மை தன்மை பற்றி தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

அமெரிக்க தளத்தில் இருந்து தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டதாக  சொல்லப்படுகிறது . செய்தியின் உண்மை தன்மை பற்றி தெரியவில்லை.

தாக்குதல் எதிலும் தான் பங்குபற்றவில்லை என்று US கூறியுள்ளதாகத் தகவல். 

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

ஈரானில் உள்ள பல இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் இன்று காலை வான்வழித் தாக்குதலை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன

ஒக்டோபர் 1ஆம் திகதி ஈரானின் கிட்டத்தட்ட 200 ஏவுகணைத் தாக்குதல்கள் மீதான தாக்குதல் உட்பட, பல மாதங்களாக ஈரானிய ஆட்சியின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

அதன்படி ஈரான் தலைநகரின் மேற்கு மற்றும் தென்மேற்கில் அமைந்துள்ள ராணுவ தளங்களை குறிவைத்து இந்த வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், தாக்குதல்களின் குறிப்பிட்ட இலக்குகள் குறித்து இஸ்ரேல் இன்னும் தெளிவான அறிக்கையை வெளியிடவில்லை.

இதற்கிடையில், ஈரானைத் தவிர, சிரியாவின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் உள்ள சில இராணுவ நிலைகளை இஸ்ரேல் குறிவைத்துள்ளதாக சிரிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2024/1405893

  • கருத்துக்கள உறவுகள்

இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: தெஹ்ரானில் என்ன நடக்கிறது? இரான் பதிலடி கொடுக்குமா?

இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: தெஹ்ரானில் என்ன நடக்கிறது? இரான் பதிலடி கொடுக்குமா?
3 மணி நேரங்களுக்கு முன்னர்

இரான் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இரான் தலைநகரான தெஹ்ரானில் குண்டுவெடிப்புகளின் பலத்த சத்தம் கேட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

“இரானில் உள்ள ஆட்சி மற்றும் பிராந்தியத்தில் அதன் கூட்டாளி அமைப்புகள், 2023 அக்டோபர் 7ஆம் தேதி முதல் இடைவிடாமல் இஸ்ரேலை தாக்குவதால், உலகிலுள்ள மற்ற எந்த சுதந்திரமான, சுயாட்சியுள்ள நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் அதற்குப் பதிலடி கொடுக்கும் உரிமையும் கடமையும் இருப்பதாக” இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, “தங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாக்கத் தேவையான அனைத்தையும் செய்வோம்,” என்று தெரிவித்துள்ளார்.

இரானில் என்ன நடக்கிறது?

தலைநகர் தெஹ்ரானில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக இரான் அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இரானின் வான் பாதுகாப்பு அமைப்பைச் செயல்படுத்தியதன் காரணமாக இந்தச் சத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்று இரானிய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக இரான் அரசுத் தொலைக்காட்சியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது.

இருப்பினும், இரானில் எந்த வகையான ராணுவ தளங்களை இஸ்ரேல் குறிவைத்துள்ளது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இரான் தனது வான்வெளியை மூடியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக இரான் சிவில் ஏவியேஷன் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இரானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது தங்களுக்குத் தெரியும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

“அக்டோபர் 1ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது இரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, தற்காப்புக்காக இரானிலுள்ள ராணுவ இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருவதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,” என்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்காவில் பிபிசியின் செய்தி கூட்டாளரான சி.பி.எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: தெஹ்ரானில் என்ன நடக்கிறது? இரான் பதிலடி கொடுக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளார் டேனியல் ஹகாரி (கோப்புப் படம்)

இந்தத் தாக்குதலின் முடிவில் இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், இஸ்ரேல் ராணுவம் தனது இலக்கை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், "இரான் அரசு புதிய தாக்குதல்களை நடத்தி மோதல்களைப் பெரிதாக்க வேண்டுமென்று நினைத்தால் இஸ்ரேல் அதற்கு பதிலடி தர நேரிடும். இதில் எங்களின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.

இஸ்ரேல் நாட்டை அச்சுறுத்த நினைக்கும், இந்தப் பிராந்தியத்தில் பெரிய மோதல்களுக்குள் அதை இழுக்க நினைக்கும் அனைவரும் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்," என்றும் அவர் எச்சரித்தார்.

இஸ்ரேலிடம் திறனும் உள்ளது, தீர்வு காணும் திறமையும் உள்ளது என்பதை இன்று இந்தத் தாக்குதல் மூலம் தாங்கள் வெளிப்படுத்தி இருப்பதாகவும் டேனியல் ஹகாரி கூறினார்.

 

தெஹ்ரான் ராணுவ தளங்கள் மீது தாக்குதல்

இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: தெஹ்ரானில் என்ன நடக்கிறது? இரான் பதிலடி கொடுக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிபிசியின் மத்தியக் கிழக்கு பிராந்திய ஆசிரியர் செபாஸ்டியன் அஷரின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதல்கள் ஒரு மாதத்திற்கு முன்பு இஸ்ரேல் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடி என்று நம்பப்படுகிறது. அந்தத் தாக்குதலில் இஸ்ரேல் மீது இரான் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது.

இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இரானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பது இஸ்ரேலின் உரிமை மட்டுமின்றி கடமையும்கூட என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியுள்ளார்.

இந்நிலையில், இரானிய புரட்சிகர காவலர் படைக்கு நெருக்கமான ஒரு செய்தி நிறுவனம், மேற்கு மற்றும் தென்மேற்கு தெஹ்ரானில் உள்ள சில ராணுவ தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளது.

இருப்பினும், எந்தெந்த இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பது இன்னும் தெரியவில்லை.

சிரியாவின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள சில ராணுவ தளங்கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அந்தப் புகைப்பட, அவர் இந்தத் தாக்குதலின்போது ராணுவ தலைமையகத்தின் செயல்பாட்டு மையத்தில் இருப்பதாகக் காட்டுகிறது.

 

இரான் எதிர்த் தாக்குதல் நடத்துமா?

இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: தெஹ்ரானில் என்ன நடக்கிறது? இரான் பதிலடி கொடுக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த அக்டோபர் 1ஆம் தேதியன்று, இரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் எவ்வாறு பதிலடி கொடுக்கப் போகிறது என்பதை சர்வதேச சமூகம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது.

இரானின் அணு ஆராய்ச்சி நிலையங்களையோ அதன் எண்ணெய் நிலையங்களையோ இஸ்ரேல் குறிவைப்பதைத் தான் ஆதரிக்கப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களில் அமெரிக்காவிற்கு எந்தத் தொடர்பும் இல்லையென்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார். மேலும், இந்த நடவடிக்கை குறித்து வாஷிங்டனுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது இரானிய அரசு ஊடகம் வழக்கம் போல தாக்குதலின் வீரியத்தைக் குறைத்துக் காட்டுவதாக பிபிசி நியூஸ் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் அசாடே மோஷிரி கூறியுள்ளார்.

மேலும், இந்தக் கட்டத்தில் சில முக்கியக் கேள்விகள் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவை,

  • இந்தத் தாக்குதலில் இரானுக்கு உண்மையில் எவ்வளவு சேதம் ஏற்பட்டது?
  • ஹமாஸ் அரசியல் தலைவரான இஸ்மாயில் ஹனியே இரானிய மண்ணில் கொல்லப்பட்டது, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலை என இந்த ஆண்டில் தொடர்ச்சியான அவமானங்களைச் சந்தித்திருக்கும் சூழலில், தன்னை ஆதரிக்கும் ஆயுதக்குழுக்கள் வலுவிழந்துள்ள நிலையில், இரான் பதிலடி கொடுக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறதா?
  • மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் அதிகரிக்கவும் நிலைமை கட்டுப்பாட்டை மீறுவதற்கும் வித்திடக்கூடிய மற்றுமொரு தருணமாக இது இருக்குமா?
 

இரானிய அரசு ஊடகம் சொல்வது என்ன?

இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: தெஹ்ரானில் என்ன நடக்கிறது? இரான் பதிலடி கொடுக்குமா?

பட மூலாதாரம்,REUTERS

“இரானிய ஊடகங்களில் வெளியாகும் படங்களும் வீடியோக்களும் அமைதி நிலவுவது போன்ற செய்தியைச் சித்தரிக்க முயல்கின்றன. ஆனால், அந்நாட்டில் சமூக ஊடகங்களில் நிலை முற்றிலும் வேறாக உள்ளது” என்று ஜனநாயக பாதுகாப்பிற்கான அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர் பெஹ்னம் பென் தலேப்லு பிபியிடம் கூறுகிறார்.

பிபிசி பாரசீக சேவையைச் சேர்ந்த பஹ்மான் கல்பாசி, இரானில் தற்போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

இரானிய அரசு ஊடகங்கள் தற்போது இந்தத் தாக்குதல்கள் உண்மையான சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றும் அவை தோல்வியுற்றதாகவும் கூறுவதாக அவர் தெரிவித்தார். தாக்குதலுக்கு உள்ளாகும்போது இரான் வழங்கும் பொதுவானதொரு பதில் இது என்றும் கல்பாசி கூறினார்.

“இந்த அணுகுமுறை, பழி வாங்கும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு வழியாக இருக்கக்கூடும். ஆனால், சேதத்தின் அளவைக் காட்டக்கூடிய உறுதியான ஆதாரம் இருந்தால், உயிரிழப்புகள் ஏற்பட்டால், இந்த அணுகுமுறை சிதைந்துவிடும்,” என்கிறார் கல்பாசி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் ஈரான் மீது வான் தாக்குதல்

image

இஸ்ரேல் ஈரான் மீது வான் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஈரானில் உள்ள இலக்குகள் மீது துல்லியமான தாக்குதலை மேற்கொள்வதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

பல மாதங்களாக ஈரான் மேற்கொண்ட தாக்குதலிற்கு பதிலடியாக இந்த தாக்குதல்களை மேற்கொள்வதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்குவைக்கவில்லை என தெரிவித்துள்ள இஸ்ரேலிய அதிகாரிகள் அமெரிக்காவின் ஒத்துழைப்புடனேயே இந்த தாக்குதல் இடம்பெறுகின்றது வான் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உதவுகின்றது என தெரிவித்துள்ளனர்.

GaxamcqW0AEifYI.jpg

பல மாதங்களாக தொடர்ச்சியாக ஆராய்ந்த பின்னரே ஈரான் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு முடிவு செய்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சரவை பல மாதங்களாக இது குறித்து ஆராய்ந்தது தாக்குதல் எவ்வாறானதாக காணப்படவேண்டும் என ஆராய்ந்தது என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறுதியில் இராணுவ இலக்குகளை தாக்க தீர்மானித்தோம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஆபத்தான அல்லது ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இலக்குகளை தாக்க தீர்மானித்தோம்  என அந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/197131

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மீதான வான் தாக்குதல்கள் நிறைவு; இஸ்ரேலிய இராணுவம்

image

ஈரான் இராணுவ தளங்கள் மீதான கடும் தாக்குதல் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள  அறிக்கையில், 

சற்று முன்னர்  ஈரான் இராணுவ தளங்கள் மீது  இலக்கு வைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படைகளால் நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதல் நிறைவடைந்துள்ளது. எங்கள் விமானங்கள் பத்திரமாக  திரும்பியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

462571084_340883242421798_69420810161232

https://www.virakesari.lk/article/197135

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்கா தான் தாக்குதல்களில் பங்குகொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்கா எப்ப‌வும் இதை தானே சொல்லுகிற‌து

அமெரிக்கா போட்ட‌ பிச்சையில் தான் இந்த‌ தாக்குத‌ல் ந‌ட‌ந்து இருக்கு...............................

5 hours ago, ரஞ்சித் said:

ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து 30 மைல்கள் தொலைவில் இருக்கும் கராஜ் நகரில் அமைக்கப்பட்டிருக்கும் அணுமின் நிலையத்திற்கு அருகிலும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. 

 

ஈரான் மீதான தாக்குதலை டெல் அவிவில் அமைந்திருக்கும் இராணுவத் தளம் ஒன்றிலிருந்து தளபதிகளுடன் மேற்பார்வையிடும் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு

Israeli Prime Minister Benjamin Netanyahu and Defense Minister Yoav Gallant monitor the attack on Iran from an undisclosed location. Parts of the image were obscured by the Israel Defense Forces.

ஓம் ஓம் ந‌ம்பிட்டோம் நெத்த‌னியாகு மிக‌  துணிந்த‌வ‌ர் என்று😁

 

இது எத்த‌னை அடி வ‌ங்க‌ருக்குள் இருந்து எடுத்த‌ ப‌ட‌மோ யாருக்கு தெரியும்😁....................

 

ஜ‌டோம் ச‌ரி வ‌ராது அமெரிக்காவில் இருந்து கொண்டு வ‌ர‌ ப‌ட்ட‌ புதிய‌ வான் காப்பு க‌ருவி த‌ங்க‌ளின் நாட்டுக்குள் வ‌ந்து ஒரு சில‌ நாட்க‌ளில் இந்த‌ தாக்குல் ந‌ட‌த்த‌ ப‌ட்டு இருக்கு...........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்கா தான் தாக்குதல்களில் பங்குகொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்கா அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு....சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறேதுமில்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா கிடந்த இஸ்ரேலை ..?

ஈரான் இத்துடன் காலி....

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்கா அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு....சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறேதுமில்லை. 😂

அமெரிக்காவுக்கு சொந்த‌மான‌ 16 போர் விமான‌ங்க‌ள் இத் தாக்குத‌லுக்கு ப‌ய‌ன் ப‌டுத்தி இருக்கின‌ம்

 

ஒரு வ‌ரியில் சொல்ல‌ப் போனால் இந்த‌ விமான‌ தாக்குத‌ல் இஸ்ரேல் அமெரிக்கா சேர்ந்து ந‌ட‌த்தின‌ தாக்குத‌ல்

 

இவ‌ர்க‌ளின் குண்டுக‌ளை வானில் வைத்தே ஈரான் த‌க‌ர்த்து விட்ட‌து

 

ஈரானுக்கு பெரிய‌ இழ‌ப்பு என்றால் ச‌ட்லையிட் மூல‌ம் எடுத்த‌ ப‌ட‌ங்க‌ளை வெளியிட‌லாமே...................

 

ப‌கையாளிய‌ கூட‌ ந‌ம்ப‌லாம் அமெரிக்காவை ந‌ம்ப‌ முடியாது 

நெத்தனியாகு போர் குற்ற‌வாளி என்று தெரிந்தும் நெத்த‌னியாகுவை அமெரிக்கா தொட‌ர்ந்து காப்பாற்றுது

 

நெத்த‌னியாகு க‌ழிவ‌றைக்கு போனால் பின்னால் போய் க‌ழுவி விடுவ‌தே அமெரிக்கா தான் தாத்தா😁.......................................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

அமெரிக்கா எப்ப‌வும் இதை தானே சொல்லுகிற‌து

அமெரிக்கா போட்ட‌ பிச்சையில் தான் இந்த‌ தாக்குத‌ல் ந‌ட‌ந்து இருக்கு................

 

2 hours ago, குமாரசாமி said:

அமெரிக்கா அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு....சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறேதுமில்லை. 😂

தேர்தல் வருதில்ல.

தீக்கோழி தலையை மறைக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

சும்மா கிடந்த இஸ்ரேலை ..?

ஈரான் இத்துடன் காலி....

ஆயுத உதவி தொடக்கம் சகல விதமான உதவியையும் செய்ய ஆட்கள் இருந்தால் குப்பனும் சுப்பனும் அதி தீர  வீரர்கள் தான்....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

ஆயுத உதவி தொடக்கம் சகல விதமான உதவியையும் செய்ய ஆட்கள் இருந்தால் குப்பனும் சுப்பனும் அதி தீர  வீரர்கள் தான்....:cool:

அங்கே இங்கே என்று நாலு சண்டியன்களை வளர்த்து விட்டு விட்டு எத்தனை நாளைக்கு??? சும்மா கிடந்தவனை தட்டி தட்டி ..? இப்ப அவன் முழிச்சிட்டான். முடிச்சு வைக்கப்போறான். 

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபடக்கூடாது; அமெரிக்கா - பிரிட்டன்

image

இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து ஈரான் பதில் தாக்குதலை மேற்கொள்ளக்கூடாது என அமெரிக்காவும் பிரிட்டனும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஈரான் மீண்டும் பதில்தாக்குதலை மேற்கொண்டால் நாங்கள் அதற்கு தயாராகவுள்ளோம் ஈரான் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஜோ பைடன் நிர்வாகத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர்  தெரிவித்துள்ளார்.

இது இடம்பெறுவதை அமெரிக்கா விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிற்கும் ஈரானிற்கும் இடையிலான நேரடி மோதல் இத்துடன் முடிவடையவேண்டும், என தெரிவித்துள்ள அவர் லெபனானிலும் காசாவிலும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளிற்கு அமெரிக்கா தலைமை தாங்குகின்றது என  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஈரான் பதில் தாக்குதலை மேற்கொள்ளக்கூடாது என பிரிட்டிஸ் பிரதமரும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரானின் வன்முறைக்கு எதிராக பதில் நடவடிக்கை எடுப்பதற்கு இஸ்ரேலிற்கு உரிமையுள்ளது என தெரிவித்துள்ள அவர் பிராந்தியத்தில் மேலும் நிலைமை தீவிரமடைவதை தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/197159

  • கருத்துக்கள உறவுகள்

@வாலி, நான் உங்களின் கருத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றேன்...............🤣.

முக்கியமாக ஈரானின் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கவே கூடாது என்று புடின் எச்சரித்திருப்பதைப் பற்றி........

 

Edited by ரசோதரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.