Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலின் தாக்குதலில் இரண்டு ஈரான் இராணுவத்தினர் பலி

image

இஸ்ரேல் இன்று மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு ஈரான் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இன்று ஈரானின் இராணுவ இலக்குகளை இலக்குவைத்து வான் தாக்குதல்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பல மாதங்களாக ஈரான் மேற்கொண்ட தாக்குதலிற்கு பதிலடியாக இந்த தாக்குதல்களை மேற்கொள்வதாகஇஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்குவைக்கவில்லை என தெரிவித்துள்ள இஸ்ரேலிய அதிகாரிகள் அமெரிக்காவின் ஒத்துழைப்புடனேயே இந்த தாக்குதல் இடம்பெறுகின்றது வான் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உதவுகின்றது என தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/197165

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான்  அடிக்கிற மாதிரி அடிப்பன், நீ அழுகிற மாதிரி அழு. 

😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கட்டளை தளபதி @ரஞ்சித் 160 விமானங்கள் அணிவகுத்து சென்று ஈரான் மீது தாக்குதல் நடாத்திவிட்டு சென்றுள்ளதாக அறிவித்துள்ளார். 

நானும் எங்கே அந்த 160 விமானங்கள் என தேடித் தேடிப்பார்த்தேன். கடைசியில் @ஏராளன் இணைத்துள்ள ஒரு படத்தில் எட்டு விமானங்கள் அணிவகுத்து செல்வதை பார்த்தேன். மிகுதி 152 இஸ்ரேலிய விமானங்கள் படம் எடுக்க முன்னரே ஈரான் மீது தாக்குதல் நடாத்திவிட்டு வேகமாக சென்றுவிட்டன என நினைக்கின்றேன்.

  • Haha 1
  • nunavilan changed the title to ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
Posted

சவூதி அரேபியா, இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நியாயம் said:

கட்டளை தளபதி @ரஞ்சித் 160 விமானங்கள் அணிவகுத்து சென்று ஈரான் மீது தாக்குதல் நடாத்திவிட்டு சென்றுள்ளதாக அறிவித்துள்ளார். 

நானும் எங்கே அந்த 160 விமானங்கள் என தேடித் தேடிப்பார்த்தேன். கடைசியில் @ஏராளன் இணைத்துள்ள ஒரு படத்தில் எட்டு விமானங்கள் அணிவகுத்து செல்வதை பார்த்தேன். மிகுதி 152 இஸ்ரேலிய விமானங்கள் படம் எடுக்க முன்னரே ஈரான் மீது தாக்குதல் நடாத்திவிட்டு வேகமாக சென்றுவிட்டன என நினைக்கின்றேன்.

இதில் இருந்து தெரிவ‌தென்னெ இஸ்ரேல் ப‌ர‌ப்புவ‌து அவ‌தூறுக‌ள் அண்ணா...................ஒரு விமான‌த்தை கூட‌வா ஈரானால் சுட்டு வீழ்த்த‌ முடிய‌ வில்லை

இஸ்ரேல் ஏவிய‌ குண்டுக‌ளை வானில் வைச்சு த‌க‌ர்த்த‌ ஈரானுக்கு 160 விமான‌த்தை எப்ப‌டி உள்ள‌ அனும‌திச்சிருப்பின‌ம்..............


இந்த‌ செய்திய‌ ப‌ற்றி ஆசிய‌ ஊட‌க‌ங்க‌ள் சோச‌ல் மீடியாக்க‌ள் முக்கிய‌த்துவ‌ம் கொடுக்க‌ வில்லை.................... 

4 minutes ago, nunavilan said:

சவூதி அரேபியா, இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நியாயம் said:

கட்டளை தளபதி @ரஞ்சித் 160 விமானங்கள் அணிவகுத்து சென்று ஈரான் மீது தாக்குதல் நடாத்திவிட்டு சென்றுள்ளதாக அறிவித்துள்ளார். 

நானும் எங்கே அந்த 160 விமானங்கள் என தேடித் தேடிப்பார்த்தேன். கடைசியில் @ஏராளன் இணைத்துள்ள ஒரு படத்தில் எட்டு விமானங்கள் அணிவகுத்து செல்வதை பார்த்தேன். மிகுதி 152 இஸ்ரேலிய விமானங்கள் படம் எடுக்க முன்னரே ஈரான் மீது தாக்குதல் நடாத்திவிட்டு வேகமாக சென்றுவிட்டன என நினைக்கின்றேன்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சில‌ த‌ர‌ப்பு சொல்லுகின‌ம்

இஸ்ரேல் விமான‌ங்க‌ள் ஈரானுக்குள் போக‌ வில்லை ஈராக் எல்லை ஓர‌மாய் தாக்கி விட்டு வ‌ந்து விட்டார்க‌ள் என்று

 

ஈரான் இஸ்ரேல் மீது இர‌ண்டாவ‌து முறை மிசேல் தாக்குத‌ல் செய்த‌ போது அந்த‌ செய்தி பெரிசாக்க‌ ப‌ட்ட‌து கார‌ண‌ம் ஜ‌டோமை தாண்டி போய் ஈரானின் மிசேல்க‌ள் விழுந்து வெடித்த‌ன‌..........................இர‌வு ந‌ட‌ந்த‌ வான் தாக்குத‌ல் ஈராக் எல்லையில் இருந்து ப‌ட்டும் ப‌டாம‌லும் குண்டை போட்டு விட்டு உயிர் த‌ப்பினால் போதும் என்று அமெரிக்க‌ விமான‌ ப‌டையும் இஸ்ரேல் விமான‌ ப‌டையும் அவ‌ர்க‌ளின் சொந்த‌ இட‌த்துக்கு திரும்பி விட்டின‌ம்😁.............................

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நியாயம் said:

கட்டளை தளபதி @ரஞ்சித் 160 விமானங்கள் அணிவகுத்து சென்று ஈரான் மீது தாக்குதல் நடாத்திவிட்டு சென்றுள்ளதாக அறிவித்துள்ளார். 

https://www.foxnews.com/world/israel-begins-retaliatory-strikes-against-iran-following-missile-barrage-targeting-israelis

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

அங்கே இங்கே என்று நாலு சண்டியன்களை வளர்த்து விட்டு விட்டு எத்தனை நாளைக்கு??? சும்மா கிடந்தவனை தட்டி தட்டி ..? இப்ப அவன் முழிச்சிட்டான். முடிச்சு வைக்கப்போறான். 

என்னது இஸ்ரேல் இவ்வளவு நாளும் சும்மா இருந்ததா?
இஸ்ரேல் எனும் நாடு உருவாகிய நாள் தொடக்கம் சொறிதலும் சொட்டலும் தானே நடந்து கொண்டிருக்கின்றது விசுகர் 😎

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

என்னது இஸ்ரேல் இவ்வளவு நாளும் சும்மா இருந்ததா?
இஸ்ரேல் எனும் நாடு உருவாகிய நாள் தொடக்கம் சொறிதலும் சொட்டலும் தானே நடந்து கொண்டிருக்கின்றது விசுகர் 😎

ச‌ரியாக‌ சொன்னீங்க‌ள் தாத்தா👍.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, குமாரசாமி said:

என்னது இஸ்ரேல் இவ்வளவு நாளும் சும்மா இருந்ததா?
இஸ்ரேல் எனும் நாடு உருவாகிய நாள் தொடக்கம் சொறிதலும் சொட்டலும் தானே நடந்து கொண்டிருக்கின்றது விசுகர் 😎

ஒரு கோடி யூத‌ இன‌ ம‌க்க‌ளுக்காக‌ அமெரிக்கா ப‌ல‌ கோடி ம‌க்க‌ளின் வெறுப்புக்கு ஆள் ஆகின‌ம்

 

யூத‌ர்க‌ள் ஒன்றும் ம‌னித‌ புனித‌ர்க‌ள் கிடையாது..................யூத‌ர்க‌ள் க‌ட‌வுளின் பிள்ளைக‌ள் என்று ஒரு க‌தைய‌ அவுட்டு விடுகின‌ம்..................க‌ட‌வுளின் பிள்ளைக‌ள் இப்ப‌டி ப‌டு மோச‌மாய் ஒரு போதும் ந‌ட‌ந்து கொள்ள‌ மாட்டின‌ம்

ச‌க‌ ம‌னிதர்க‌ளை நேசிக்க‌ தெரியாத‌வ‌ர்க‌ள் எப்ப‌டி தாத்தா அவ‌ர்க‌ளை க‌ட‌வுளின் பிள்ளைக‌ள் என்று அழைக்க‌ முடியும்

 

நான் போரை விரும்புவ‌ன் கிடையாது....................இஸ்ரேல் என்ர‌ நாடு உருவான‌தில் இருந்து அமெரிக்கா இஸ்ரேலுக்கு துணையா நின்ற‌ ப‌டியால் தான் யூத‌ர்க‌ள் இந்த‌ ஆட்ட‌ம் போடுகினம்.....................ம‌னித‌ நேய‌த்தை நேசிக்கும் ப‌ல‌ நாடுக‌ளின் ம‌ன‌ங்க‌ளில் நெத்த‌னியாகு இன்னொரு ஹிட்ல‌ர் போல் தான் வாழ்கிறார்

 

குறுகிய‌ கால‌த்தில் 40ஆயிர‌ம் அப்பாவி ப‌லஸ்தீன‌ ம‌க்க‌ளை கொன்று இந்த‌ நூற்றாண்டின் மிக‌ப் பெரும் கொடுர‌ன் என்ற‌ பெய‌ர் எடுத்த‌து நெத்த‌னியாகு தான்😉.............................

  • Like 1
Posted

என்னது 160 விமானங்கள் தாக்கி 4 பேர் தான் இறந்துள்ளார்களா??

இனி மேல் இஸ்ரேல் ஈரான் மீதான  தாக்குதலை  நடத்தாது என நினைக்க தோன்றுகிறது.

தவிச்ச முயல் அடிக்க தான் இஸ்ரேல் லாயக்கானது.😁

 

 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலுக்கு பதிலடி தருவது பற்றி முடிவெடுக்க முடியாமல் திணறும் இரான் - என்ன காரணம்?

இரான் இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,EPA

  • எழுதியவர்,ஜெரேமி போவென்
  • பதவி,சர்வதேச ஆசிரியர்

மத்திய கிழக்கில் இரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அங்கு நிலவும் போர்ப் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இரானின் தலைமைத் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியும் அவரின் முதன்மை ஆலோசகர்களும் எடுத்த முக்கியமான முடிவுகளில் போர் மேலும் விரிவடைவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் என்பது முக்கியமாக அமைந்தது.

கடினமான முடிவுகளில் குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர். இது, இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்பதற்கு நேரெதிராக உள்ளது. இரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இரான் பதில் தாக்குதல் நடத்தாத பட்சத்தில் அது பலவீனமாக இருப்பது போல் தோன்றக் கூடும். அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் இஸ்ரேலின் ராணுவ பலம் மற்றும் அரசியல் உறுதிப்பாட்டால் மிரட்டப்பட்டு ஒடுக்கப்பட்டதாக தோற்றமளிக்கும்.

இஸ்ரேலுக்கு குறைவான அளவுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய முடிவை எடுக்க இரான் தலைவர்களும் அவர்களின் ஆலோசகர்களும் முடிவெடுக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்று மிரட்டல்கள்?

இஸ்ரேலின் தாக்குதலுக்கு முன்னும் பின்னும், இரானின் அதிகாரப்பூர்வ ஊடகம் வாயிலாக, இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தும் முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டதாக கூறியது. இஸ்ரேலைப் போன்றே, பாதுகாப்பிற்காக திருப்பித் தாக்கும் உரிமை இருப்பதாக இரான் அறிவித்தது. ஆனால் அதன் பின்விளைவுகள் மிகவும் அதிகமாக இருக்கக் கூடும் என்பதால் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியிருக்கலாம்.

இஸ்ரேல் தன்னுடைய பாதுகாப்பிற்காக தாக்கலாம் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்ட பிரிட்டனின் பிரதமர் ஸ்டாமரும் இந்த நிலைப்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

இரானின் தாக்குதலுக்கு எதிராக, தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்பதில் தெளிவாக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் "அந்த பிராந்தியத்தில் போர் சூழல் பெரிதாகக் கூடாது. அனைத்து தரப்பினரும் தாக்குதலை நிறுத்த வேண்டும். இந்த தாக்குதலுக்கு இரான் பதிலடி தரக்கூடாது" என்று ஸ்டாமர் கூறினார்.

அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று இஸ்ரேல் மீது இரான் தாக்குல் நடத்திய பிறகு தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. கடந்த வாரம் இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி துருக்கியின் என்.டி.வி. நெட்வொர்க்கில் பேசும் போது, "இரான் மீது நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலும் சிவப்புக் கோட்டை மீறும் செயலாகும். அதற்கு பதில் கிடைக்காமல் போகாது," என்று கூறினார்.

இஸ்ரேல் தாக்குதலுக்கு சில மணி நேரத்திற்கு முன்பு, இரானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய், "இரான் மீது இஸ்ரேல் நடத்தும் எத்தகைய தாக்குதலுக்கும் முழு அளவிலான எதிர் தாக்குதல் இருக்கும்," என்று அவர் கூறினார். இஸ்ரேலின் சிறிதளவிலான தாக்குதலுக்கு இரான் பதில் தாக்குதல் நடத்தாது என்று இது தவறாக பொருள்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கினார் அவர்.

 
இரான் இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, இஸ்ரேலின் அயர்ன் டோம் வான் பாதுகாப்புக் கவச அமைப்பானது இரானின் அனைத்து தாக்குதல்களையும் முறியடித்தது

இரானை தடுமாறச் செய்த இஸ்ரேலின் பதில் தாக்குதல்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி அன்று 70 வெளிநாட்டினர் உட்பட 1,200 பேரைக் கொன்ற ஹமாஸ் தாக்குதலை இரான் ஆதரித்து வருகிறது என்று இஸ்ரேல் நம்புகிறது.

இஸ்ரேல் ஒரு தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்று அஞ்சிய இரான், இஸ்ரேலுக்கு எதிராக ஒரு முழுமையான போரை நடத்த விரும்பவில்லை என்று தொடர்ச்சியாக கூறி வந்தது.

அதற்காக, இஸ்ரேலுக்கும் அதன் கூட்டாளிகளுக்கு தனது ஆதரவு ஆயுதக் குழுக்கள் வாயிலாக தொடர்ச்சியாகவும், சில நேரங்களில் கொடூர தாக்குதல்கள் மூலமாக அழுத்தம் தருவதை நிறுத்துவதற்கு இரான் தயாரானது என்று அர்த்தமாகிவிடாது.

நேரடியான தாக்குதலுக்கு பதிலாக எதிர்ப்பின் அச்சு என்று வரையறுக்கப்படும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மூலமாக இஸ்ரேல் மீது இரான் தாக்குதலை நடத்தியது. ஏமனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹௌத்தி அமைப்பு, செங்கடலில் கடல் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி அதனை சீர்குலைத்தது. லெபனானில் இருந்து ஹெஸ்பொலா அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது. இதனால் 60 ஆயிரம் இஸ்ரேலியர்கள் அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டது.

இஸ்ரேலின் பதில் தாக்குதல் இரண்டு மடங்கு லெபனான் மக்களை வீட்டில் இருந்து வெளியேற்றியது. ஆனால் அதனையும் தாண்டி செயல்படும் முனைப்பில் இருந்தது இஸ்ரேல். இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவிட்டு எல்லைப் பகுதியை விட்டு ஹெஸ்பொலா பின்வாங்காவிட்டால் உரிய பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்தது.

அவ்வாறு நடக்காத போது, இரான் திட்டப்படி தன் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடி தர எல்லையை கடக்க இஸ்ரேல் தீர்மானித்தது. இஸ்ரேல் நடத்திய பலமான எதிர் தாக்குதல் இரானின் இஸ்லாமிய அரசை நிலைகுலைய வைத்து, அதன் வியூகங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கியது. இதனால் தான் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலுக்கு பிறகு இரானிய தலைவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

இரான் முழு போரில் ஈடுபட விரும்பவில்லை என்று காட்டிய தயக்கத்தை இஸ்ரேல் பலவீனமாக புரிந்து கொண்டது. இரான் மற்றும் அதன் ஆதரவு ஆயுதக்குழுக்கள் மீது அழுத்தத்தை அதிகரித்தது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலின் ராணுவத் தளபதிகள் துணிச்சலாக செயல்பட முடிந்தது.

 
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இரான் இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விமானப்படை தளத்தில் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது பைடனின் திட்டம் பயனளிப்பது தெரிகிறது

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு

கூடுதலாக ஜோ பைடனின் தெளிவான ஆதரவு இஸ்ரேலுக்கு உண்டு. தேவையான ஆயுதங்களை வழங்வதன் மூலம் மட்டும் ஒரு பாதுகாப்பான வளையத்தை இஸ்ரேலுக்காக அமெரிக்கா உருவாக்கவில்லை. இஸ்ரேலை பாதுகாக்க உறுதியேற்ற அமெரிக்கா, தேவையான அளவுக்கு அமெரிக்க துருப்புகள் விமானப்படை மற்றும் போர்க்கப்பல்கள் மூலமாக மத்திய கிழக்கிற்கு அனுப்பி வைத்துள்ளது.

ஏப்ரல் 1-ம் தேதி அன்று சிரிய தலைநகரான டமாஸ்கஸில் செயல்பட்டு வந்த இரான் தூதரக கட்டடத்தின் ஒரு பகுதியை வான்வழி தாக்குதல் மூலம் அழித்தது இஸ்ரேல். இரானிய பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெஜா ஜஹேதி மற்றும் இஸ்லாமிய புரட்சிகர படையினரின் மூத்த அதிகாரிகளும் அந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

தங்கள் படையினர் எச்சரிக்கையுடன் இருக்க தேவையான நேரத்தை வழங்கவில்லை என்றும் இது குறித்து அறிவிக்கவில்லை என்றும் அமெரிக்கர்கள் கோபம் அடைந்தனர். ஆனாலும், ஜோ பைடன் தன்னுடைய ஆதரவை விலக்காமல் தொடர்ந்தார்.

ஏப்ரல் 13-ஆம் தேதி இரான் ஆளில்லா விமானங்கள், குரூயிஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜோர்டன் ராணுவத்தினரின் உதவியுடன் அவற்றை சுட்டுவீழ்த்தியது இஸ்ரேல்.

தற்போது விரிவடைந்து வரும் மத்திய கிழக்குப் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஜோ பைடன் கூறியிருக்கிறார். இரானின் வான் பாதுகாப்பு அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் மூலம் பைடனின் திட்டம் பயனளிப்பது போல் தெரிகிறது.

 
இரான் இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, அக்டோபர் 7ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 1200 நபர்கள் கொல்லப்பட்டனர்

கோடை காலம் முதல் இஸ்ரேல் தொடர்ச்சியாக இரான் மற்றும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது தாக்குதலை நடத்தி போரை விரிவாக்கி வந்தது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்பொலா மீது அது நடத்திய தாக்குதல் மிகப்பெரிய தாக்குதலாக அமைந்தது. தன்னுடைய பாதுகாப்பு கவசமாக செயல்படுவதற்காக ஹெஸ்பொலாவுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி பல ஆண்டுகளாக இரான் அதனை கட்டமைத்து வந்தது.

இரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற இஸ்ரேலின் எண்ணமானது, இஸ்ரேல் எல்லையோரம் லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்பொலா பதில் தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தால் சிதறடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

2006-ஆம் ஆண்டு நடைபெற்ற போருக்கு பிறகு உருவாக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த துவங்கியது இஸ்ரேல். ஹெஸ்பொலா பயன்படுத்தி வந்த பேஜர்கள் வெடிக்க வைக்கப்பட்டன. லெபனானில் ஊடுருவிய இஸ்ரேல், அந்த நாட்டை பல ஆண்டுகளாக எதிர்த்து வந்த ஹெஸ்பொலாவின் தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றது.

இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதலில் 2500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பெய்ரூட்டில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றன. நிதி நெருக்கடியை சந்தித்து வரும் அந்த நாட்டில் இந்த தாக்குதல் 12 லட்சம் நபர்களின் இடம் பெயர்வுக்கு காரணமானது.

ஹெஸ்பொலா தற்போதும் லெபானானில் இருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது அதிக எண்ணிக்கையில் ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை நடத்துகிறது. ஆனாலும், தலைவர் கொல்லப்பட்டது மற்றும் ஆயுதங்கள் தீர்வதால் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் உணர்ந்துள்ளது ஹெஸ்பொலா.

அதன் அனைத்து வியூகங்களும் நொறுங்கத் துவங்கிய போது தான் இரான் பதில் தாக்குதலை நடத்தியது. பதிலடி தராமல் தன்னுடைய ஆதரவு ஆயுதக் குழுக்கள் போரிட்டு உயிரிழக்க அனுமதிப்பது இஸ்ரேலுக்கு எதிரான, மேற்கத்திய படைகளுக்கு எதிரான கூட்டமைப்புக்கு தலைமையேற்று செயல்படும் தனது பொறுப்பை இரான் தட்டிக் கழிப்பதாக அமைந்துவிடும். அதனால்தான், அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று இஸ்ரேல் மீது மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியது இரான்.

அக்டோபர் 25, வெள்ளிக்கிழமை அன்று இஸ்ரேல் அதற்கு பதில் தாக்குதல் நடத்தியது. பலரும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இந்த பதிலடியைத் தர இஸ்ரேல் அதிக காலம் எடுத்துக் கொண்டது. அவர்களின் ரகசிய திட்டங்கள் வெளியானதும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.

வடக்கு காஸாவில் இஸ்ரேல் பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. காஸா போரின் இருண்ட தருணம் இது என்று ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு காஸாவில் இருந்து சர்வதேச கவனத்தை திசை திருப்பவே இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதா என்று வெளிநபராக என்னால் உறுதியாக தெரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் இதுவும் ஒரு பகுதியாக இருக்கலாம்.

 
இரான் இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, அக்டோபர் 1ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டு அக்டோபர் 25ம் தேதி அன்று பதில் தாக்குதலை நடத்தியது இஸ்ரேல்

போர் விரிவாக்கத்தை குறைக்கும் நடவடிக்கை

பதில் தாக்குதல் நடத்தாவிட்டதால் நாம் பலவீனமாக இருப்பதாக தோன்றக் கூடும் என்று நினைத்து நாடுகள் பதில் தாக்குதல்களில் ஈடுபடுவதை நிறுத்துவது கடினம். அதுதான் நிலைமை கைமீறிப் போய் பெரும் போர்களில் கொண்டு போய் விடுகிறது.

இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு பதிலடி தர இரான் தயார் நிலையில் இருக்கிறதா என்பதுதான் தற்போது கேள்வியாக எழுகிறது. அக்டோபர் 1-ம் தேதி இரான் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என்ற இஸ்ரேலின் முடிவுக்கு அமெரிக்காவின் பைடன் அரசு ஆதரவு வழங்கியது.

ஆனால் மோசமாக போர் விரிவடைவதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இஸ்ரேல் இரானின் முக்கிய சொத்துகளான அணுமின் நிலையங்கள், எண்ணெய் கிடங்குகளில் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பொதுவெளியில் பைடன் கேட்டுக் கொண்டார்.

தாட் வான் பாதுகாப்புக் கவசத்தை பயன்படுத்தி தன்னை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று இஸ்ரேலுக்கு ஆலோசனை வழங்கினார் பைடன். அதனை ஒப்புக் கொண்டார் நெதன்யாகு.

அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அன்று நடக்கும் தேர்தல் மத்திய கிழக்கில் அடுத்து என்ன நடக்கலாம் என்பதை தீர்மானிக்கும் காரணியாக அமைந்துள்ளது. டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் இரானுக்குப் பதிலடியாக அதன் எண்ணெய், எரிவாயு மற்றும் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக குறைவான அக்கறையையே அவர் செலுத்துவார்.

இரானின் முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தாததால், பதில் தாக்குதல் நடத்துவதை டெஹ்ரான் தள்ளிப்போடலாம். இது இரு நாட்டு ராஜ்ஜிய அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கு தங்களை தயார் செய்ய கால அவகாசம் கிடைக்கும். கடந்த மாதம் ஐ.நா. பொது சபையில் பேசிய போது இரானியர்கள் அணு ஒப்பந்தம் தொடர்பாக புதிய பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருப்பதாக கூறினர்.

இவை மத்திய கிழக்கிற்கு வெளியிலும் முக்கியமான நகர்வுகள். அணுகுண்டு தங்களுக்கு வேண்டும் என்ற கருத்தை இரான் இதுநாள் வரை மறுத்தே வந்துள்ளது. ஆனால் அணு ஆயுதம் தொடர்பான அதன் நிபுணத்துவமும், யுரேனிய வளமும் அணு ஆயுதங்களை பெறுவதற்கு அருகில் அதனை கொண்டு வந்துள்ளது.

தங்களின் எதிராளிகளை அச்சுறுத்த இரானின் தலைவர்கள் புதிய வழிகளை தேடி வருகின்றனர். பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்துவதற்கான அணு ஆயுதங்களை உருவாக்குவது அதன் திட்டங்களில் ஒன்றாக இருக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் தாக்குதலில் இரானில் எத்தகைய சேதம் ஏற்பட்டது? பதிலடி பற்றி இரான் கூறுவது என்ன?

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி
  • எழுதியவர், ஈடோ வோக்
  • பதவி, பிபிசி செய்திகள்

இரான் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி இஸ்ரேலின் தாக்குதலுக்கு மிகவும் அளவான மறுமொழி கொடுத்துள்ளார். 'உடனடியாக பதிலடி கொடுக்கப்படும்' என்று சவால் விடுவதைத் தவிர்த்த அவர், அதே சமயம் இஸ்ரேலின் தாக்குதலைக் குறைத்து மதிப்பிடவோ, மிகைப்படுத்தவோ கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், இந்தத் தாக்குதலுக்கு இரான் 'தக்க பதிலடி கொடுக்கும்' என்று கூறினார். ஆனால் 'இரான் போரை விரும்பவில்லை' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் தாக்குதலில் குறைந்தது நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இரான் ஒப்புக் கொண்டுள்ளது.

இரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சனிக்கிழமை (அக்டோபர் 26) இரானின் பல இடங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்ததாக இஸ்ரேல் தரப்பு கூறியது. அக்டோபர் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேல் சுமார் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27), இரானிய வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தயாரிப்பு அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாகக் கூறினார். இந்தத் தாக்குதல் "இரானின் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை கட்டமைக்கும் அமைப்புகளுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.

‘இஸ்ரேலின் கொள்கை இதுதான்…’

இந்தத் தாக்குதல் குறித்துப் பேசிய இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, "இரான் ஒரு எளிய கொள்கையைப் புரிந்து கொள்ள வேண்டும். யார் எங்களைக் காயப்படுத்துகிறார்களோ, அவர்களை நாங்கள் காயப்படுத்துவோம்," என்று கூறினார்.

மறுபுறம், இரான் இந்தத் தாக்குதல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது என்னும் கூற்றை மறுத்துள்ளது. இஸ்ரேல் ஏவிய பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன என்று இரான் கூறியுள்ளது. சில ஏவுகணைகள் வான் பாதுகாப்பு அமைப்பிற்குக் குறைவான சேதத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இரானின் உச்ச தலைவர் அலி காமனெயி, இஸ்ரேல் அக்டோபர் 26-ஆம் தேதி இரான் மீது நடத்திய தாக்குதலைக் குறிப்பிட்டு, "இரானிய மக்களின் பலம் மற்றும் விருப்பத்தை இஸ்ரேலிய ஆட்சிக்கு காட்டும் நேரமிது. அதை எவ்வாறு தெரிவிப்பது என்பதை அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும். நமது நாட்டின் நலன்களுக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்று கேட்டு கொண்டார்.

இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனும் இதே போன்ற கருத்தை முன்வைத்தார். ஒரு அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அவர், "நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் எங்கள் தேசம் மற்றும் நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்," என்றார்.

 
இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இரான் தலைநகரைச் சுற்றியுள்ள இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபின், அக்டோபர் 26-ஆம் தேதி டெஹ்ரான் நகரம்

இஸ்ரேலின் தாக்குதல் என்ன பாதிப்பை ஏற்படுத்தியது?

இம்முறை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் எதிர்பார்த்ததை விட கட்டுப்படுத்தப்பட்டவையாக இருந்தன என்று சில வல்லுநர்கள் கூறிகின்றனர்.

எண்ணெய்க் கிடங்கு மற்றும் அணுசக்தி நிலையங்களைத் தாக்க வேண்டாம் என்று அமெரிக்கா இஸ்ரேலுக்கு பகிரங்கமாக அழுத்தம் கொடுத்தது. அமெரிக்காவின் ஆலோசனையை இஸ்ரேல் கருத்தில் கொண்டிருக்கிறது.

இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, ஞாயிற்றுக்கிழமை, “தாக்குதல் நடத்தப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு எங்களுக்குத் தகவல் கிடைத்தது," என்று கூறினார்.

"அன்றிரவு தாக்குதல் நடத்தப்படும் சாத்தியங்கள் இருப்பதாக எங்களுக்கு மாலையில் சில தகவல்கள் கிடைத்தன,” என்று அப்பாஸ் அராக்ச்சி செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால் அவர் மேற்கொண்டு அதை பற்றி விவரிக்கவில்லை.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டாம் என மேற்கத்திய நாடுகள் இரானிடம் கேட்டு கொண்டன. இரு மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களை அது பெரிதுப்படுத்தும், பெரியளவிலான பிராந்தியப் போருக்கு வழிவகுக்கும் என்று கவலைத் தெரிவித்தன.

“இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பெரியளவில் சேதத்தை ஏற்படுத்தவில்லை. இரானில் மக்கள் அன்றாட வாழ்க்கையை எப்போதும் போல இயல்பாக தொடர்கின்றனர்,” என குறிப்பிட்டு இரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இரானின் இயல்பான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படங்களையும் பதிவிட்டுள்ளனர். அதாவது இஸ்ரேலியத் தாக்குதல் பெரிய சேதம் ஏற்படுத்தவில்லை என்பதை வெற்றியாக சித்தரிக்க ஊடகங்கள் நினைப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 

தொடரும் மோதல்கள்

லெபனானில் இஸ்ரேலுக்கும் இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலாவுக்கும், காஸாவில் இஸ்ரேலுக்கும் பாலத்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸுக்கும் இடையே மோதல்கள் தொடர்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27), தெற்கு லெபனானில் உள்ள சிடோன் நகரத்தின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் கூறியது.

காஸாவில், அல்-ஷாதி அகதிகள் முகாமில் உள்ள பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பள்ளிக்கூடம் அகதிகள் தஞ்சம் புகும் இடமாக இருந்தது.

இறந்தவர்களில் மூன்று பேர் பாலத்தீன ஊடகவியலாளர்கள் என்று பாலத்தீனிய ஊடகங்களும், ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளன.

மேலும் இஸ்ரேலில், டெல் அவிவ் நகருக்கு வடக்கே இஸ்ரேலிய ராணுவத் தளம் அருகே பேருந்து நிறுத்தத்தில் டிரக் மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர். இது தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இஸ்ரேலில், டெல் அவிவ் நகருக்கு வடக்கே இஸ்ரேலிய ராணுவத் தளம் அருகே பேருந்து நிறுத்தத்தில் டிரக் மோதியது

நிரந்தரப் போர் நிறுத்தம் சாத்தியமா?

எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) காஸாவில் இரண்டு நாள் போர் நிறுத்தத்தை முன்மொழிந்தார். இந்த நடவடிக்கையில், சில பாலத்தீனிய கைதிகளுக்கு ஈடாக நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

இவ்வாறான ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தை அமல்படுத்திய 10 நாட்களுக்குள், நிரந்தரமான ஒரு போர் நிறுத்தத்தை அடையும் நோக்கில் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆனால் பிபிசி-யின் அரபு சேவையிடம் பேசிய மூத்த ஹமாஸ் அதிகாரி சமி அபு சுஹ்ரி, போர் நிறுத்தத்திற்கான அதன் நிபந்தனைகள், இஸ்ரேலால் பல மாதங்களாக நிராகரிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

சமி அபு சுஹ்ரி கூற்றுபடி, ஹமாஸ் அமைப்பு முழுமையான போர்நிறுத்தம், காஸாவில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறுதல் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஆகியவற்றை தொடர்ந்து கோரி வருகிறது என்றார்.

"இந்த நிபந்தனைகளுக்கு உத்தரவாதம் அளிக்காத எந்த ஒப்பந்தமும் எந்த மதிப்பையும் கொண்டிருக்காது," என்றும் அவர் கூறினார்.

2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸின் முன்னறிவிப்பில்லாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஹமாஸை அழிக்க இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

அன்றிலிருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42,924-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரானுக்கு இஸ்ரேல் நல்ல ஊமைக்குத்து குத்தியிருக்கிறது.  வெளியில சொல்லவும் முடியாது சொல்லாமல் இருக்கவும் முடியாது. மூன்று மணிநேரம் இரானின் வான்பரப்பில் ஆனந்தத் தாண்டவமாடியிருக்கின்றன இஸ்ரேலிய விமானங்கள். ஜோர்டான், சிரியா, இராக் வான்பரப்புக்களைக்கடந்து 100 விமானங்கள் சென்று தாக்குதல் நடாத்திவிட்டுப் பத்திரமாகத் திரும்பியிருக்கின்றன. இஸ்ரேலிய விமானங்கள் இரான் வான்பரப்பில் நின்று தீபாவளி காட்டிக்கொண்டிருந்தபோது இரானிய விமானப்படை கட்டிலுக்கு கீழே வெட்கமில்லாமல் ஒளிந்துகொண்டிருந்திருக்கின்றன.

இரானின் கமெனி இஸ்ரேல் தாக்கினால் சமகாலத்தில் பதிலடிகொடுக்கப்படும் என்று சொன்னதெல்லாம் சும்மா புஸ்வாணமாகிப் போய்விட்டது.  

செத்தகிளிதான் பாவம். அமெரிக்கா இஸ்ரேலுக்கு துணைநிற்பது போல இரானுக்கு செத்தகிளியால் துணைநிற்க முடியாது. இப்ப உக்ரேனுடன் சமாதானத்துக்கு போக இந்தியாவை உதவிசெய்யச்சொல்லி செத்தகிளி கெஞ்சுவதாகக் கேள்வி!

பயங்கரவாத இரானால் சொறியாமல் இருக்கமுடியாது, அடுத்து ஒர் 1000 ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவக்கூடும், அதன் பின்னர் இரானை உண்டு இல்லை என இஸ்ரேல் ஆக்கிவிடும்.

செத்தகிளியும், இரான் ஆதரவாளர்களும் தான் பாவங்கள். குண்டுச் சட்டிகுள் கோவேறு கழுதையை ஓட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

 

Posted

பயங்காவாதி நத்தனியாகு பங்கருக்குள்ளாலை வெளியில் வந்து விட்டாரோ இல்லை அங்கை தானோ?
 

மேற்கு ஊடகமே 5 பேர் இறந்ததாக கூறும் போது 100 விமானங்கள் எங்கை குண்டுகளை போட்டவைஎன தெரியவில்லை. இஸ்ரேல் காரர் பலஸ்தீன அகதி முகாம்களுக்கு மேல் குண்டுகளை போடத்தான் லாயக்கு போல .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலை அழிப்பதோ அல்லது இஸ்ரேலை தோற்கடிப்பதோ  எந்த காலமும் சாத்தியமில்லாத காரியம்.

ஏனெனில் இஸ்ரேல் தோற்கும் என்றொரு கட்டம் வந்தால் அமெரிக்காவும் ஐரோப்பாவும் நேரடியாகவே இஸ்ரேலுக்காக களம் இறங்கும்.

வசதிபடைத்த அரபுநாடுகள் புத்திசாலிதனமாக இந்த போரை தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்தபடி ஒதுங்கிகொண்டன அவர்களுக்கு தெரியும் மேற்குலகின் சக்திபற்றி, அதனால் இவ்வளவு காலமாக அவர்கள் பாலைவன பூமியில்  கட்டியெழுப்பிய தமது  சொர்க்க வாழ்வை இந்த பிரச்சனைக்குள் மூக்கை நீட்டி இழக்க தயாரில்லை.

ஈரான் என்ற கலவர பூமியின் பேச்சை கேட்டு இன்று காசாவிலும் லெபனானிலும் ஏமனிலும் சிரியாவிலும்   வளர்ச்சி பல ஆண்டுகள் வாழ்க்கை பின்னோக்கி போயும் பல தலைமுறைகள் அங்கவீனமாகியும் , கட்டியெழுப்பப்பட்ட பூமி சுடுகாடாகியும்  எந்த ஈரான் பேச்சைகேட்டு இஸ்ரேலுடன் போர் என்று முழங்கியதோ அத்தனை ஆயுத குழுக்களும் முக்கால் பங்கு அழிந்து எலும்பு கூடாகியும்  வெடிகுண்டாலும் ஏவுகணைகளாலும் இன்னொரு பாலைவனம் உருவாக்கப்பட்டுவிட்டது.

போராடி பார்த்தோம் முடியவில்லை, எம்மைவிட எம் எதிரி சக்தி வாய்ந்தவனாக இருக்கும்போது எமக்கு இழைக்கப்பட்டது அநியாயமாக இருந்தாலும் வேறு வழி இல்லை போராட்ட பாதையை மாற்றியே ஆகவேண்டும். இல்லையெனில் எஞ்சியிருக்கும் சந்ததியையும் முழுவதுமாக அங்கவீனர்களாகவும் குண்டுகளுக்கும் பலி கொடுத்து  அனைத்தையுமே பறிகொடுத்து அடையாளத்தையே இழக்கவேண்டும்.

நமது போராட்டமும் வாழ்வும் காசா போலவே அமைந்தது ஆனால் எம்மை மீறிய சக்தி எம்மை வென்றபோது எஞ்சியிருந்த போராளிகளும் மக்களூம் ஆயுதமோதல்தான் தீர்வென்று அணிவகுக்கவில்லை, எமது மக்களின் இருப்பை உறுதி செய்ய வேறு வழியின்றி வேறு பாதையை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டோம்.

எப்படி இந்தியாவை நம்பி எமது போராட்டம் அம்மணமானதோ அதேபோல ஈரானை நம்பி  காசா ,லெபனான், ஏமன் கதை முடிகிறது.

ஈரான்  பாலஸ்தீன லெபனான் மக்கள்மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தால், அவர்களை இஸ்ரேலிடமிருந்து பாதுகாக்க வேண்டுமென்ற புனித எண்ணம் கொண்டிருந்தால், இஸ்ரேல் காசாவின்மீது போர் பிரகடனம் தொடுத்த அடுத்தவாரமே பெய்ரூட் வழியாக தெற்கு லெபனானுக்கு தமது படைகளை நகர்த்தி இஸ்ரேலுக்குள் நுழைந்து போர் தொடுத்து  காசா மக்களின் பாதுகாப்பை உறுதி படுத்தியிருக்கவேண்டும்.

இன்றுவரை அப்பப்போ சிலநூறு ஏவுகணைகளை இஸ்ரேல்நோக்கி ஏவிவிட்டு தன்னை மறைத்துக்கொண்டது, இரண்டுமுறை இஸ்ரேல்மீது ஈரான் ஏவிய ஏவுகணைகளும் பாலஸ்தீன மக்களுக்கானதல்ல, 

முதல்தடவை சிரியாவின் தனது ராணூவ தளபதிகளை இஸ்ரேல் கொன்றதுக்காக , இரண்டாவதாக நசருல்லாவை இஸ்ரேல் கொன்றதுக்காக, தமது ஏவலாளிகள் இறந்த கோபத்தில் வந்த கோபம் அது, ஏதிலியான பாலஸ்தீன மக்கள்மீது கொண்ட அக்கறை அல்ல.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் தாக்குதலில் இரான் ராணுவ தளங்களில் ஏற்பட்ட சேதம் என்ன? செயற்கைக்கோள் படங்கள் காட்டும் உண்மை

இரான் இஸ்ரேல் மோதல்
  • எழுதியவர்,பெனடிக்ட் கார்மன் & ஷயான் சர்டரிசார்டெ
  • பதவி,பிபிசி வெரிஃபை

சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரானின் ராணுவ தளவாடங்கள் எந்த அளவுக்கு சேதமடைந்துள்ளன என்பதை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

இரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை உற்பத்தி நிலையங்களுடன், இரான் முன்பு அணுசக்தி திட்டத்திற்கு பயன்படுத்திய இடமும் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பார்ச்சின் ராணுவத்தளம்

இரான் இஸ்ரேல் மோதல்

பட மூலாதாரம்,PLANET LABS PBC

இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்களின் செயற்கைக்கோள் படங்களைப் பார்க்கும் போது, தலைநகர் டெஹ்ரானுக்கு கிழக்கில் சுமார் 30 கி.மீ (18.5 மைல்கள்) தூரத்தில் உள்ள பார்ச்சின் என்ற இடத்தில் அமைந்திருக்கும் முக்கிய ஆயுத தளவாட உற்பத்தித் தளம் என்று நிபுணர்கள் அடையாளம் கூறுகின்றனர்.

மூலோபாய படிப்புகளுக்கான சர்வதேச நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த இடம் ராக்கெட் உற்பத்தியுடன் தொடர்புடையது என்று தெரிவிக்கின்றனர்.

செப்டம்பர் 9-ஆம் தேதி மற்றும் அக்டோபர் 27-ஆம் தேதி எடுக்கப்பட்ட தரம் மிக்க செயற்கைக்கோள் படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, குறைந்தது நான்கு கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன என்பது தெரிய வருகிறது.

தெலகான்2 என்றழைக்கப்படும் அந்த கட்டடங்களில் ஒன்று, இரானின் அணுசக்தித் திட்டத்தோடு தொடர்புடையதாக சர்வதேச அணு சக்தி அமைப்பால் சுட்டிக்காட்டப்பட்டதாகும். அங்கு யுரேனியம் இருந்ததற்கான சாட்சிகளை 2016-ஆம் ஆண்டு அந்த அமைப்பு கண்டறிந்தது. தடை செய்யப்பட்ட அணு ஆய்வுகள் ஏதேனும் அங்கு நடைபெற்றனவா என்ற சந்தேகத்தை அது கிளப்பியது.

கொஜிர் ராணுவத்தளம்

இரான் இஸ்ரேல் மோதல்

பட மூலாதாரம்,PLANET LABS PBC

பார்ச்சினின் வடமேற்கில் சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ள கொஜிர், இஸ்ரேல் தாக்குதல்களில் சேதமடைந்த மற்றொரு இடமாகும்.

“இரானில் பாலிஸ்டிக் ஏவுகணை தொடர்பான கட்டமைப்புகள் அதிகம் கொண்டது கொஜிர்” என்று மூலோபாய படிப்புகளுக்கான சர்வதேச நிறுவனத்தைச் சேர்ந்த ஃபேபியன் ஹின்ஸ் கூறுகிறார். 2020-ஆம் ஆண்டில் பெரிய மர்மமான குண்டுவெடிப்பு நடந்த இடமாகவும் இது அறியப்படுகிறது. இந்த இடத்தில் குறைந்தது இரண்டு கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் காண்பிக்கின்றன.

 

ஷஹ்ரூத் ராணுவத்தளம்

இரான் இஸ்ரேல் மோதல்

பட மூலாதாரம்,SENTINEL -2

டெஹ்ரானின் கிழக்கில் சுமார் 350 கி.மீ தூரத்தில் ஷஹ்ரூத்தில் உள்ள ராணுவ தளம் தாக்கப்பட்டிருப்பதும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிகிறது. செம்னான் என்ற வடக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் இந்த இடத்தில் நீண்ட தூர ஏவுகணைகளின் பாகங்கள் தயாரிக்கப்படுவதால், இதுவும் தாக்குதலின் முக்கிய இலக்காக இருந்திருக்கலாம் என்று ஃபேபியன் ஹின்ஸ் கூறுகிறார்.

அதன் அருகில் ஷஹ்ருத் விண்வெளி மையம் அமைந்துள்ளது, அங்கிருந்து தான் 2020-ஆம் ஆண்டு இரான் தனது ராணுவ செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.

 

நக்ஜிர் ரேடார் தளம்

இரான் இஸ்ரேல் மோதல்

பட மூலாதாரம்,PLANET LABS PBC

இரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை பல இடங்களில் வெற்றிகரமாக தாக்கியுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் கிடைத்திருக்கும் செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு இதை உறுதி செய்வது கடினம்.

ரேடார் பாதுகாப்பு அமைப்பு என நிபுணர்களால் கண்டறியப்படும் இடம் ஒன்று தாக்கப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் படங்கள் மூலம் காண முடிகிறது.

இலாம் எனும் மேற்கு நகரத்துக்கு அருகில் ஷாஹ் நக்ஜிர் மலைகளில் இந்த இடம் அமைந்துள்ளது. ஜேன்ஸ் எனும் உளவுத்துறை நிறுவனத்தின் மத்திய கிழக்கு விவகாரங்களின் நிபுணர் ஜெரமி பின்னி, இது புதிதாக அமைக்கப்பட்ட ரேடார் பாதுகாப்பு அமைப்பாக இருக்கலாம் என்று கூறுகிறார். பல தசாப்தங்களுக்கு முன்பு நிறுவப்பட்ட இடமாக இருந்தாலும் சமீபத்திய ஆண்டுகளில் இந்த இடத்தில் புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரிந்துக் கொள்ள முடிகிறது.

 

அபதான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

இரான் இஸ்ரேல் மோதல்

பட மூலாதாரம்,PLANET LABS PBC

தென்மேற்கு மாகாணம் குசெஸ்தானில் உள்ள அபதான் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கு சேதமடைந்திருப்பதாக செயற்கைக்கோள் படத்தை காணும் போது தெரிய வருகிறது. எனினும் இந்த சேதம் எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இரானின் சில பகுதிகளில் கழிவுகள் காரணமாகவோ, பாதுகாப்பு தளவாடங்களின் தவறுதலான தாக்குதல் காரணமாகவோ சேதமடைய வாய்ப்புண்டு.

சனிக்கிழமை காலை இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களில் அபதான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தங்கள் இலக்குகளில் ஒன்று என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இரானிய அதிகாரிகள் குசெஸ்தானை இஸ்ரேல் தாக்கியதை உறுதி செய்தனர்.

அபதான் இரானின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகும். அது, ஒரு நாளுக்கு 5 லட்சம் பாரல்கள் தயாரிக்கக் கூடிய திறன் கொண்டது என அதன் செயல் தலைவர் தெரிவித்தார்.

செயற்கைக்கோள் படங்களால் சேதமடைந்த கட்டடங்களை துல்லியமாக அடையாளம் காண முடியாது.

உதாரணமாக, ஹஸ்ரத் அமிர் பிரிகேட் வான் பாதுகாப்பு தளத்துக்கு அருகில் புகை எழும்புவதை புகைப்படங்கள் மூலம் உறுதி செய்த போது அந்த இடம் வெற்றிகரமாக தாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் செயற்கைக்கோள் படங்களை பார்த்த போது அதனை நிழல் சூழ்ந்து இருந்ததால் சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

இஸ்ரேல் மீது இரான் அக்டோபர் மாத தொடக்கத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு முன்பாக ஏப்ரல் மாதம் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, வாலி said:

இரானுக்கு இஸ்ரேல் நல்ல ஊமைக்குத்து குத்தியிருக்கிறது.  வெளியில சொல்லவும் முடியாது சொல்லாமல் இருக்கவும் முடியாது. மூன்று மணிநேரம் இரானின் வான்பரப்பில் ஆனந்தத் தாண்டவமாடியிருக்கின்றன இஸ்ரேலிய விமானங்கள். ஜோர்டான், சிரியா, இராக் வான்பரப்புக்களைக்கடந்து 100 விமானங்கள் சென்று தாக்குதல் நடாத்திவிட்டுப் பத்திரமாகத் திரும்பியிருக்கின்றன. இஸ்ரேலிய விமானங்கள் இரான் வான்பரப்பில் நின்று தீபாவளி காட்டிக்கொண்டிருந்தபோது இரானிய விமானப்படை கட்டிலுக்கு கீழே வெட்கமில்லாமல் ஒளிந்துகொண்டிருந்திருக்கின்றன.

இரானின் கமெனி இஸ்ரேல் தாக்கினால் சமகாலத்தில் பதிலடிகொடுக்கப்படும் என்று சொன்னதெல்லாம் சும்மா புஸ்வாணமாகிப் போய்விட்டது.  

செத்தகிளிதான் பாவம். அமெரிக்கா இஸ்ரேலுக்கு துணைநிற்பது போல இரானுக்கு செத்தகிளியால் துணைநிற்க முடியாது. இப்ப உக்ரேனுடன் சமாதானத்துக்கு போக இந்தியாவை உதவிசெய்யச்சொல்லி செத்தகிளி கெஞ்சுவதாகக் கேள்வி!

பயங்கரவாத இரானால் சொறியாமல் இருக்கமுடியாது, அடுத்து ஒர் 1000 ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவக்கூடும், அதன் பின்னர் இரானை உண்டு இல்லை என இஸ்ரேல் ஆக்கிவிடும்.

செத்தகிளியும், இரான் ஆதரவாளர்களும் தான் பாவங்கள். குண்டுச் சட்டிகுள் கோவேறு கழுதையை ஓட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

 

ஓம் அண்ணா

இஸ்ரேலும் அமெரிக்காவும் 160 விமான‌த்தில் போய் ஒட்டு மொத்த‌ ஈரானையும் த‌ர‌ ம‌ட்ட‌ம் ஆக்கி போட்டின‌ம் இனி ஈரானால் எழுந்து நிக்க‌வே முடியாது அண்ணோய்😁

 

ஈராக் எல்லைய‌ தாண்டி அமெரிக்கா விமான‌ங்க‌ளும் ச‌ரி இஸ்ரேல் விமான‌ங்க‌ளும் ச‌ரி ஈரானுக்குள் போக‌ வில்லை..................ஈராக் எல்லை ஓர‌ம் தாக்கி விட்டு பெரிய‌ வில்ட‌ப்

 

ஈரான் முன் கூட்டியே ர‌ஸ்சியாவிட‌ம் இருந்து வான் பாதுகாப்பு ஏவுக‌னைக‌ள் வாங்கி விட்டின‌ம்....................

 

ர‌ஸ்சிய‌ உள‌வுத்துறை முன் கூட்டியே ஈரானுக்கு அறிவித்து விட்ட‌து இவ‌ர்க‌ள் தாக்க‌ போகின‌ம் என்று

 

ஈரான் இஸ்ரேல் மீது இர‌ண்டாவ‌து முறை மிசேல் ஏவி விட்ட‌ போது இஸ்ரேலிய‌ போர் விமான‌ த‌ள‌ம் தொட்டு ப‌ல‌ இட‌ங்க‌ள் சிதைந்து போன‌து

த‌ங்க‌ட‌ நாட்டில் ந‌ட‌க்கும் காட்சிக‌ளை கைபேசியில் இருந்து வீடியோ ப‌திவு செய்வ‌தை இஸ்ரேல் அர‌சு த‌டை செய்து இருக்கு இதில் இருந்து தெரிவ‌தென்ன‌ தாங்க‌ள் அடி வேண்டினாலும் வெளி உல‌க‌த்துக்கு தெரிய‌ கூடாது........ஈரான் ஏவிய‌ மிசேல்க‌ள் சில‌ ஜ‌டோம்மால் சுட்டு வீழ்த்த‌ ப‌ட்டால் அதை இஸ்ரேல் காட்டும் த‌ங்க‌ட‌ நாட்டுக்கை ப‌ல‌ இட‌ங்க‌ளில் விழுந்து வெடிச்ச‌தை மூடி ம‌றைப்பின‌ம் 

 

நெத்த‌னியாகு ந‌ல்லா ந‌டிக்கிறார்😉👎...........................

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, valavan said:

இஸ்ரேலை அழிப்பதோ அல்லது இஸ்ரேலை தோற்கடிப்பதோ  எந்த காலமும் சாத்தியமில்லாத காரியம்.

ஏனெனில் இஸ்ரேல் தோற்கும் என்றொரு கட்டம் வந்தால் அமெரிக்காவும் ஐரோப்பாவும் நேரடியாகவே இஸ்ரேலுக்காக களம் இறங்கும்.

வசதிபடைத்த அரபுநாடுகள் புத்திசாலிதனமாக இந்த போரை தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்தபடி ஒதுங்கிகொண்டன அவர்களுக்கு தெரியும் மேற்குலகின் சக்திபற்றி, அதனால் இவ்வளவு காலமாக அவர்கள் பாலைவன பூமியில்  கட்டியெழுப்பிய தமது  சொர்க்க வாழ்வை இந்த பிரச்சனைக்குள் மூக்கை நீட்டி இழக்க தயாரில்லை.

ஈரான் என்ற கலவர பூமியின் பேச்சை கேட்டு இன்று காசாவிலும் லெபனானிலும் ஏமனிலும் சிரியாவிலும்   வளர்ச்சி பல ஆண்டுகள் வாழ்க்கை பின்னோக்கி போயும் பல தலைமுறைகள் அங்கவீனமாகியும் , கட்டியெழுப்பப்பட்ட பூமி சுடுகாடாகியும்  எந்த ஈரான் பேச்சைகேட்டு இஸ்ரேலுடன் போர் என்று முழங்கியதோ அத்தனை ஆயுத குழுக்களும் முக்கால் பங்கு அழிந்து எலும்பு கூடாகியும்  வெடிகுண்டாலும் ஏவுகணைகளாலும் இன்னொரு பாலைவனம் உருவாக்கப்பட்டுவிட்டது.

போராடி பார்த்தோம் முடியவில்லை, எம்மைவிட எம் எதிரி சக்தி வாய்ந்தவனாக இருக்கும்போது எமக்கு இழைக்கப்பட்டது அநியாயமாக இருந்தாலும் வேறு வழி இல்லை போராட்ட பாதையை மாற்றியே ஆகவேண்டும். இல்லையெனில் எஞ்சியிருக்கும் சந்ததியையும் முழுவதுமாக அங்கவீனர்களாகவும் குண்டுகளுக்கும் பலி கொடுத்து  அனைத்தையுமே பறிகொடுத்து அடையாளத்தையே இழக்கவேண்டும்.

நமது போராட்டமும் வாழ்வும் காசா போலவே அமைந்தது ஆனால் எம்மை மீறிய சக்தி எம்மை வென்றபோது எஞ்சியிருந்த போராளிகளும் மக்களூம் ஆயுதமோதல்தான் தீர்வென்று அணிவகுக்கவில்லை, எமது மக்களின் இருப்பை உறுதி செய்ய வேறு வழியின்றி வேறு பாதையை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டோம்.

எப்படி இந்தியாவை நம்பி எமது போராட்டம் அம்மணமானதோ அதேபோல ஈரானை நம்பி  காசா ,லெபனான், ஏமன் கதை முடிகிறது.

ஈரான்  பாலஸ்தீன லெபனான் மக்கள்மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தால், அவர்களை இஸ்ரேலிடமிருந்து பாதுகாக்க வேண்டுமென்ற புனித எண்ணம் கொண்டிருந்தால், இஸ்ரேல் காசாவின்மீது போர் பிரகடனம் தொடுத்த அடுத்தவாரமே பெய்ரூட் வழியாக தெற்கு லெபனானுக்கு தமது படைகளை நகர்த்தி இஸ்ரேலுக்குள் நுழைந்து போர் தொடுத்து  காசா மக்களின் பாதுகாப்பை உறுதி படுத்தியிருக்கவேண்டும்.

இன்றுவரை அப்பப்போ சிலநூறு ஏவுகணைகளை இஸ்ரேல்நோக்கி ஏவிவிட்டு தன்னை மறைத்துக்கொண்டது, இரண்டுமுறை இஸ்ரேல்மீது ஈரான் ஏவிய ஏவுகணைகளும் பாலஸ்தீன மக்களுக்கானதல்ல, 

முதல்தடவை சிரியாவின் தனது ராணூவ தளபதிகளை இஸ்ரேல் கொன்றதுக்காக , இரண்டாவதாக நசருல்லாவை இஸ்ரேல் கொன்றதுக்காக, தமது ஏவலாளிகள் இறந்த கோபத்தில் வந்த கோபம் அது, ஏதிலியான பாலஸ்தீன மக்கள்மீது கொண்ட அக்கறை அல்ல.

வ‌ல்ல‌வ‌ன் அண்ணா சிரிக்க‌ வைக்க‌ வேண்டாம்

ஒட்டு மொத்த‌ நேட்டோ ப‌டைக‌ளும் உக்கிரேனுக்குள் போய் அவ‌ர்க‌ளால் அங்கு சிறு ஆணிய‌ கூட‌ புடுங்க‌ முடிய‌ வில்லை . அமெரிக்கா தொட்டு ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ள் வ‌ரை ஆயுத‌ங்க‌ள் ப‌ண‌ம் விமான‌ங்க‌ள் என்று கொடுத்து இவ‌ர்க‌ள் சாதிச்ச‌து ஒன்றும் கிடையாது

 

உக்கிரேன் வீர‌ர்க‌ள் என்றால் அவ‌ர்க‌ளின் முக‌த்தை காணொளியில் காட்டின‌ம்

நேட்டோ ப‌டைக‌ள் உள்ள‌ போனால் அவ‌ர்க‌ளின் முக‌ங்க‌ள் காட்ட‌ ப‌டுவ‌தில்லை

இவ‌ள‌வு நாடும் சேர்ந்தும் கூட‌ ர‌ஸ்சியாவை தோக்க‌டிக்க‌ முடிய‌ வில்லை...............இதில‌ இஸ்ரேலுக்கு ஒன்று என்றால் ஒட்டு மொத்த‌ ஜ‌ரோப்பிய‌ர்க‌ளும் க‌ள‌த்தில் குதிப்பினம் என்று நீங்க‌ள் எழுதுவ‌தை வாசிக்க‌ சிரிப்பு வ‌ருது😁😁😁😁😁😁😁...........................

 

ஈரானுக்கு ஆத‌ர‌வாய்

 

ர‌ஸ்சியா

வ‌ட‌கொரியா

சீனா

ஹ‌வூதிஸ்

 

ம‌ற்றும் ப‌ல‌ ஆயுத‌ குழுக்க‌ள்

 

என்ன‌ தான் ஹ‌மாஸ் த‌லைவ‌ரை 

ஹிஸ்வுள்ளா த‌லைவ‌ர்க‌ளை இவ‌ர்க‌ள் போட்டு த‌ள்ளினாலும் அடுத்த‌ த‌லைவ‌ர்க‌ள் உட‌னுக்கு உட‌ன் உருவாகி கொண்டு தான் இருக்கின‌ம்......................

 

இஸ்ரேலின் வீர‌ம் அப்பாவி ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ள் மேல்

 

ம‌னித‌ நேய‌ம் இல்லாத‌ நெத்த‌னியாகு ம‌கிந்தாவை விட‌ இவ‌ன் பெரிய‌ போர் குற்ற‌வாளி

 

ப‌ல‌ நாடுக‌ள் சொல்லியும் இஸ்ரேல் செய்வ‌து இன‌ அழிப்பு...............அதை எல்லாம் பொருட் ப‌டுத்தாம‌ ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளை லிபனான் ம‌க்க‌ளை கொல்வ‌து தான் வீர‌மா

 

ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ளும் ச‌ரி அமெரிக்காவும் ச‌ரி ஜ‌ன‌நாய‌க‌ம் ப‌ற்றி க‌தைக்க இவ‌ர்களுக்கு அருக‌தை இல்லை.....................

 

ஆர‌ம்ப‌த்தில் சில‌ மிக குறைவான‌ உக்கிரேன் ம‌க்க‌ள் கொல்ல‌ ப‌ட‌............உட‌ன‌ புட்டின் போர் குற்ற‌வாளி புட்டின‌ கைது செய்ய‌னும் என்று கொக்க‌ரித்த‌ கோழி குஞ்சுக‌ள் தானே இவைகள் .....................

ஒட்டு மொத்த‌ ப‌லஸ்தின‌ ம‌க்க‌ள் அழிந்தாலும் கூட‌ நெத்த‌னியாகு செய்வ‌து ச‌ரி என்று சொல்ல‌க் கூடிய‌ கோமாளிக‌ள் தான் இவ‌ர்க‌ள்👎😡....................................

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, வீரப் பையன்26 said:

வ‌ல்ல‌வ‌ன் அண்ணா சிரிக்க‌ வைக்க‌ வேண்டாம்

ஒட்டு மொத்த‌ நேட்டோ ப‌டைக‌ளும் உக்கிரேனுக்குள் போய் அவ‌ர்க‌ளால் அங்கு சிறு ஆணிய‌ கூட‌ புடுங்க‌ முடிய‌ வில்லை . அமெரிக்கா தொட்டு ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ள் வ‌ரை ஆயுத‌ங்க‌ள் ப‌ண‌ம் விமான‌ங்க‌ள் என்று கொடுத்து இவ‌ர்க‌ள் சாதிச்ச‌து ஒன்றும் கிடையாது

 

உக்கிரேன் வீர‌ர்க‌ள் என்றால் அவ‌ர்க‌ளின் முக‌த்தை காணொளியில் காட்டின‌ம்

நேட்டோ ப‌டைக‌ள் உள்ள‌ போனால் அவ‌ர்க‌ளின் முக‌ங்க‌ள் காட்ட‌ ப‌டுவ‌தில்லை

இவ‌ள‌வு நாடும் சேர்ந்தும் கூட‌ ர‌ஸ்சியாவை தோக்க‌டிக்க‌ முடிய‌ வில்லை...............இதில‌ இஸ்ரேலுக்கு ஒன்று என்றால் ஒட்டு மொத்த‌ ஜ‌ரோப்பிய‌ர்க‌ளும் க‌ள‌த்தில் குதிப்பினம் என்று நீங்க‌ள் எழுதுவ‌தை வாசிக்க‌ சிரிப்பு வ‌ருது😁😁😁😁😁😁😁...........................

 

ஈரானுக்கு ஆத‌ர‌வாய்

 

ர‌ஸ்சியா

வ‌ட‌கொரியா

சீனா

ஹ‌வூதிஸ்

 

ம‌ற்றும் ப‌ல‌ ஆயுத‌ குழுக்க‌ள்

 

என்ன‌ தான் ஹ‌மாஸ் த‌லைவ‌ரை 

ஹிஸ்வுள்ளா த‌லைவ‌ர்க‌ளை இவ‌ர்க‌ள் போட்டு த‌ள்ளினாலும் அடுத்த‌ த‌லைவ‌ர்க‌ள் உட‌னுக்கு உட‌ன் உருவாகி கொண்டு தான் இருக்கின‌ம்......................

 

இஸ்ரேலின் வீர‌ம் அப்பாவி ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ள் மேல்

 

ம‌னித‌ நேய‌ம் இல்லாத‌ நெத்த‌னியாகு ம‌கிந்தாவை விட‌ இவ‌ன் பெரிய‌ போர் குற்ற‌வாளி

 

ப‌ல‌ நாடுக‌ள் சொல்லியும் இஸ்ரேல் செய்வ‌து இன‌ அழிப்பு...............அதை எல்லாம் பொருட் ப‌டுத்தாம‌ ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளை லிபனான் ம‌க்க‌ளை கொல்வ‌து தான் வீர‌மா

 

ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ளும் ச‌ரி அமெரிக்காவும் ச‌ரி ஜ‌ன‌நாய‌க‌ம் ப‌ற்றி க‌தைக்க இவ‌ர்களுக்கு அருக‌தை இல்லை.....................

 

ஆர‌ம்ப‌த்தில் சில‌ மிக குறைவான‌ உக்கிரேன் ம‌க்க‌ள் கொல்ல‌ ப‌ட‌............உட‌ன‌ புட்டின் போர் குற்ற‌வாளி புட்டின‌ கைது செய்ய‌னும் என்று கொக்க‌ரித்த‌ கோழி குஞ்சுக‌ள் தானே இவைகள் .....................

ஒட்டு மொத்த‌ ப‌லஸ்தின‌ ம‌க்க‌ள் அழிந்தாலும் கூட‌ நெத்த‌னியாகு செய்வ‌து ச‌ரி என்று சொல்ல‌க் கூடிய‌ கோமாளிக‌ள் தான் இவ‌ர்க‌ள்👎😡....................................

 

பையனின் வயசு கொந்தளிக்க வைக்குது , கொந்தளிக்கணும் அப்போதானே பையன், ஆனா பையா யதார்த்தம்னு ஒண்ணு இருக்கு அது நாம் விரும்பாவிட்டாலும் எம்மை ஏற்றுக்கொள்ள வைக்கும்.

இது பையனுக்கு அறிவுரை சொல்ல இல்லை பொதுவாக மனசில் பட்டதை சொல்கிறேன்,

உக்ரேனுக்கான உதவிகள் என்று நேட்டோ இதுவரை செய்தது யானை பசிக்கு சோளம் பொரிதான், ஐரோப்பாவின் ஆயுத தொழிற்சாலைகள் உக்ரேனுக்காக இரவுபகல் வேலை செய்தால் உக்ரேனுக்கு ஆயிரக்கணக்கில் செய்மதியால் வழிநடத்தப்படும் ஏவுகணைகள், மல்டி பரல்கள் ஆட்லறிகள், டாங்கிகள், வெடிபொருட்கள் என்று கொடுத்திருக்கலாம்,

நூற்றுக்கணக்கில் F-16,F-35 கொடுத்திருக்கலாம், கொடுத்திருந்தால் உக்ரேன் படைகள் மொஸ்கோ வரை சென்றிருக்கும், ஆக குறைந்தது ரஷ்யாவின் எல்லைவரை உக்ரேனிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கும்,  .ஆனா அவர்கள் கொடுப்பதோ நூற்றுக்கணக்கில்தான் அதுவும் உக்ரேன் கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சிய பின்புதான், 

உலகின் பெரும் வலிமையான விமானபடைகளில் ஒன்றான ரஷ்ய விமானபடையை எதிர்க்க நேட்டோ கொடுத்தது ஆக 16 விமானங்கள், அதுவும் பூரண பயிற்சி பெறாத உக்ரேன் விமானிகளுடன், அதனால்தான் ஆரம்பத்திலேயே ஓரிரு F 16 விமானங்கள் உக்ரேன் விமானபடையின் தவறான இயக்கத்தால் அழிந்தது.

ஆனாலும் நேட்டோவின் சிறு உதவியை கொண்டு போரிடும் உக்ரேனையே ரஷ்யாவால் இரண்டு வருடங்களாக முழுமையாக கைப்பற்ற முடியவில்லை .

 

இறந்தவர்கள் காயப்பட்டவர்கள் புலம்பெயர்ந்தவர்களென உக்ரேனின் மக்கள் தொகை இரு வருடத்தில் ஒருகோடியால் வீழ்ச்சியடைந்துள்ளது என்று ஐநா அறிவித்துள்ளது,

காசா போரில் ஆயிரம் தலைவர்கள் மீண்டும் மீண்டும் வரலாம், ஆனால் பலமடங்கு வலிமைமிக்க எதிரியால் அவர்களும் அழிக்கப்படுவார்கள் அதுதான் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் அழிவுநிலைக்கு வருகிறதென்றால் அமெரிக்கா நேரடியாக களத்தில் குதிக்கும் என்பதற்கு இப்போதே அவர்கள் இஸ்ரேல் அருகே நிறுத்தி வைத்துள்ள விமானம்தாங்கி கப்பல்கள் சாட்சி,

அமெரிக்கா நேரடியாக குதித்த எந்த போரிலும் ஐரோப்பியநாடுகள் அவுஸ்திரேலியா கண்ணை மூடிக்கொண்டு குதிக்கும் என்பதற்கு வியட்நாம் போரிலிருந்து,ஈராக், ஆப்கான் போர்கள் சாட்சி.

அவர்களை பொறுத்தவரை தமது மேலாதிக்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எவரும் சவாலாயிருக்க கூடாது, இருந்தால் அழித்தொழிக்கப்படவேண்டுமென்ற கொள்கையிலிருப்பவர்கள். 

இப்போது காசா நிலவரம் ஏறக்குறைய முடிவுக்கு வருகிறது, வடக்கு காசாவில் கதவு போட்டு பூட்டியமாதிரி சில லட்சம் மக்களை முற்றுகைக்குள்ளாக்கி அந்த கதவினூடாக மக்கள் அனைவரையும்  பத்துநாட்களுக்குள் வெளியே வர சொல்லி ஒவ்வொருவராக பரிசோதித்து வெளியே எடுக்கபோறான்,

அதற்குள் வெளியேறாதவர்கள் கமாஸ் இயக்கத்தினர் என்று முடிவு செய்து அந்தபகுதி முழுவதும் பெரும் அழித்தொழிப்பு போரை ஆரம்பிக்கபோறான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன, இது அச்சுஅசல் முள்ளிவாய்க்கால் முடிவுதான்.

எனக்கு தினமலரின் பிற செய்திகளுடன் உடன்பாடு இல்லையென்றாலும், இந்த செய்தியில் எந்த பொய்களும் இல்லையென்பதால் இணைக்கிறேன்.

இந்த ஒரு வருடத்தில் இறந்தவர்கள் காணாமல் போனவர்கள் காயப்பட்டவர்களென  ஏறக்குறைய இரண்டரை லட்சம் காசா மக்கள் கதை முடிந்தது ,இறுதி முற்றுகையுடன் அது இரட்டிப்பாகலாம் அப்போது இழந்த மக்கள் தொகை மொத்த காசா மக்கள் தொகையில் கால் பங்கு ஆகலாம்.

வெறும் பூச்சாண்டி காண்பிக்கும் ஈரானை நம்பி அழிந்துபோகும் கமாஸ் தனது நிலத்தையும் மக்களையும் சேர்த்தே அழித்துவிட்டு செல்கிறது.

தனது இனத்திற்காக போர் புரிவது மட்டும் போராட்டமல்ல புறநிலைகள், எதிரியின் பலம் அனைத்தும் கணக்கிட்டு புத்திசாலிதனமா செயற்படுவதும் இனத்துக்கான போராட்டம்தான்.

ஒருவருடமாக எகிப்து கத்தாரில் ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டாமல் வீம்பு பிடித்து இப்போ அழிவின் நிலைக்கு சென்றுள்ள கமாஸ் தனது மக்களுக்காக எதை விட்டு செல்ல போகிறது என்பதற்கு கீழே சில காணொலிகள். 

இங்கு சிறியவர்களின் படங்களை மட்டும் ஏன் இணைக்கிறேன் என்றால் பெரியவர்களில் ஏறக்குறைய அனைவருமே ஈரானின் உசுப்பேத்தலை நம்பி கமாசின் பின்னால் நின்று அவர்கள் செய்யும் அனைத்தையும்ஆதரித்து அல்லாஹு அக்பர் என்று  கொடி பிடித்தவர்களே.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, valavan said:

பையனின் வயசு கொந்தளிக்க வைக்குது , கொந்தளிக்கணும் அப்போதானே பையன், ஆனா பையா யதார்த்தம்னு ஒண்ணு இருக்கு அது நாம் விரும்பாவிட்டாலும் எம்மை ஏற்றுக்கொள்ள வைக்கும்.

இது பையனுக்கு அறிவுரை சொல்ல இல்லை பொதுவாக மனசில் பட்டதை சொல்கிறேன்,

உக்ரேனுக்கான உதவிகள் என்று நேட்டோ இதுவரை செய்தது யானை பசிக்கு சோளம் பொரிதான், ஐரோப்பாவின் ஆயுத தொழிற்சாலைகள் உக்ரேனுக்காக இரவுபகல் வேலை செய்தால் உக்ரேனுக்கு ஆயிரக்கணக்கில் செய்மதியால் வழிநடத்தப்படும் ஏவுகணைகள், மல்டி பரல்கள் ஆட்லறிகள், டாங்கிகள், வெடிபொருட்கள் என்று கொடுத்திருக்கலாம்,

நூற்றுக்கணக்கில் F-16,F-35 கொடுத்திருக்கலாம், கொடுத்திருந்தால் உக்ரேன் படைகள் மொஸ்கோ வரை சென்றிருக்கும், ஆக குறைந்தது ரஷ்யாவின் எல்லைவரை உக்ரேனிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கும்,  .ஆனா அவர்கள் கொடுப்பதோ நூற்றுக்கணக்கில்தான் அதுவும் உக்ரேன் கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சிய பின்புதான், 

உலகின் பெரும் வலிமையான விமானபடைகளில் ஒன்றான ரஷ்ய விமானபடையை எதிர்க்க நேட்டோ கொடுத்தது ஆக 16 விமானங்கள், அதுவும் பூரண பயிற்சி பெறாத உக்ரேன் விமானிகளுடன், அதனால்தான் ஆரம்பத்திலேயே ஓரிரு F 16 விமானங்கள் உக்ரேன் விமானபடையின் தவறான இயக்கத்தால் அழிந்தது.

ஆனாலும் நேட்டோவின் சிறு உதவியை கொண்டு போரிடும் உக்ரேனையே ரஷ்யாவால் இரண்டு வருடங்களாக முழுமையாக கைப்பற்ற முடியவில்லை .

 

இறந்தவர்கள் காயப்பட்டவர்கள் புலம்பெயர்ந்தவர்களென உக்ரேனின் மக்கள் தொகை இரு வருடத்தில் ஒருகோடியால் வீழ்ச்சியடைந்துள்ளது என்று ஐநா அறிவித்துள்ளது,

காசா போரில் ஆயிரம் தலைவர்கள் மீண்டும் மீண்டும் வரலாம், ஆனால் பலமடங்கு வலிமைமிக்க எதிரியால் அவர்களும் அழிக்கப்படுவார்கள் அதுதான் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் அழிவுநிலைக்கு வருகிறதென்றால் அமெரிக்கா நேரடியாக களத்தில் குதிக்கும் என்பதற்கு இப்போதே அவர்கள் இஸ்ரேல் அருகே நிறுத்தி வைத்துள்ள விமானம்தாங்கி கப்பல்கள் சாட்சி,

அமெரிக்கா நேரடியாக குதித்த எந்த போரிலும் ஐரோப்பியநாடுகள் அவுஸ்திரேலியா கண்ணை மூடிக்கொண்டு குதிக்கும் என்பதற்கு வியட்நாம் போரிலிருந்து,ஈராக், ஆப்கான் போர்கள் சாட்சி.

அவர்களை பொறுத்தவரை தமது மேலாதிக்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எவரும் சவாலாயிருக்க கூடாது, இருந்தால் அழித்தொழிக்கப்படவேண்டுமென்ற கொள்கையிலிருப்பவர்கள். 

இப்போது காசா நிலவரம் ஏறக்குறைய முடிவுக்கு வருகிறது, வடக்கு காசாவில் கதவு போட்டு பூட்டியமாதிரி சில லட்சம் மக்களை முற்றுகைக்குள்ளாக்கி அந்த கதவினூடாக மக்கள் அனைவரையும்  பத்துநாட்களுக்குள் வெளியே வர சொல்லி ஒவ்வொருவராக பரிசோதித்து வெளியே எடுக்கபோறான்,

அதற்குள் வெளியேறாதவர்கள் கமாஸ் இயக்கத்தினர் என்று முடிவு செய்து அந்தபகுதி முழுவதும் பெரும் அழித்தொழிப்பு போரை ஆரம்பிக்கபோறான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன, இது அச்சுஅசல் முள்ளிவாய்க்கால் முடிவுதான்.

எனக்கு தினமலரின் பிற செய்திகளுடன் உடன்பாடு இல்லையென்றாலும், இந்த செய்தியில் எந்த பொய்களும் இல்லையென்பதால் இணைக்கிறேன்.

இந்த ஒரு வருடத்தில் இறந்தவர்கள் காணாமல் போனவர்கள் காயப்பட்டவர்களென  ஏறக்குறைய இரண்டரை லட்சம் காசா மக்கள் கதை முடிந்தது ,இறுதி முற்றுகையுடன் அது இரட்டிப்பாகலாம் அப்போது இழந்த மக்கள் தொகை மொத்த காசா மக்கள் தொகையில் கால் பங்கு ஆகலாம்.

வெறும் பூச்சாண்டி காண்பிக்கும் ஈரானை நம்பி அழிந்துபோகும் கமாஸ் தனது நிலத்தையும் மக்களையும் சேர்த்தே அழித்துவிட்டு செல்கிறது.

தனது இனத்திற்காக போர் புரிவது மட்டும் போராட்டமல்ல புறநிலைகள், எதிரியின் பலம் அனைத்தும் கணக்கிட்டு புத்திசாலிதனமா செயற்படுவதும் இனத்துக்கான போராட்டம்தான்.

ஒருவருடமாக எகிப்து கத்தாரில் ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டாமல் வீம்பு பிடித்து இப்போ அழிவின் நிலைக்கு சென்றுள்ள கமாஸ் தனது மக்களுக்காக எதை விட்டு செல்ல போகிறது என்பதற்கு கீழே சில காணொலிகள். 

இங்கு சிறியவர்களின் படங்களை மட்டும் ஏன் இணைக்கிறேன் என்றால் பெரியவர்களில் ஏறக்குறைய அனைவருமே ஈரானின் உசுப்பேத்தலை நம்பி கமாசின் பின்னால் நின்று அவர்கள் செய்யும் அனைத்தையும்ஆதரித்து அல்லாஹு அக்பர் என்று  கொடி பிடித்தவர்களே.

க‌ருத்துக்கு ந‌‌ன்றி அண்ணா

தெரியாத‌தை தெரிந்து கொள்ள‌ தானே யாழ் க‌ள‌த்துக்கு வ‌ருகிறோம்👍..........................



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும்  வழக்கமாகியது. இதனால் போராளிகளை மருத்துவம் கற்பித்து மருத்துவப் போராளிகளாக்குவது ஆரம்ப நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. போராட்டம் வளரும்போது எழும் தேவைகளுக்கேற்ப மேலதிக கற்கைகள், பயிற்சிகள் படிப்படியாக சேர்க்கப்பட்டதோடு மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் போராளிகளாக இணைந்துகொண்டு போராடிக்கோண்டே கற்கையை முடித்தனர். பத்மலோஜினி அன்ரி, தேவா அன்ரி போன்றவர்கள் வைத்தியர்களாகவே போரளிகளாகினர். இப்படி புலிகளின் மருத்துவப்பிரிவு தோற்றம் கண்டது. போராட்டம் பெரும் வளர்சியடையத் தொடங்கிய போது, மிகவும் பலம் கொண்டதாக கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் மருத்துவத் துறையில் போராளிகளில் இருந்து மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்குவதற்காக தமிழீழ மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டது. உலகத்தின் அப்போதைய ஒழுங்கில் தமிழின விடுதலையின் இறுதி அத்தியாயம் எப்படி அமையும் என்பதை கணக்கிட்டிருந்த தேசியத் தலைவர் அவர்கள் 1992 மார்கழி நாளொன்றில் மருத்துவக் கல்லூரி ஆரம்ப வைபவத்தில் போராளி மாணவ ஆளணியிடம் பின்வருமாறு பேசினார். “நாம் சுமார் 450 வருடங்களாக அடிமைத்தனத்தில் தப்பிப் பிழைத்து வாழ்ந்துவரும் இனம். எமது மூளை வளம் எமது இனத்துக்கு பயன்படாதபடி கல்வியை ஊட்டிய சமூகத்தை கைவிவிட்டு வெளியேறி காலம் காலமாக இடம் பெயர்ந்து வாழ்கின்ற நிலையே இன்று உள்ளது. ஏனைய தேசங்களில் எல்லாம் தமது நாட்டின்மீது போர் என்று வரும்போது அந்த நாட்டின் நிபுணர்கள் கூட்டம் தனது நாட்டுக்கு படையெடுக்கும். நமது மக்களின் நிபுணர்கள் கூட்டம் தனது மக்கள்மீது போர் ஏற்பட்டுவிட்டால் தனது மக்களை விட்டுவிட்டு தப்பி வெளியேறிவிடுவார்கள். இது நாம் நீண்டகாலமாக அடிமைப்பட்டுப் போனதன் விளைவு. எமது தேசத்தின் மீது யுத்த நெருக்கடி சூழும்போது எமது மக்களையும் போராளிகளையும் காப்பதற்கு போராளிகளிலிருந்தே ஒரு மருத்துவர் குழாமை உருவாக்கவேண்டும் என்ற தேவை உள்ளது. இது மிகவும் தாமதமாகவே தொடங்குகிறது. இருந்தாலும் இப்போதாவது தொடங்கப்படுகிறதே என்ற நிறைவு ஏற்படுகிறது”. இந்த மருத்துவக் கல்லூரியின் மாணவப் போராளிகளை மருத்துவத் துறையின் பட்டதாரி மருத்துவர்களும், வெளியிலிருந்து முன்வந்த பற்றுக்கொண்ட மருத்துவர்களும், விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் மனப்பூர்வமான விருப்போடு உருவாக்கலாகினர். குறைந்தது ஐந்து வருடங்களுக்குக் குறையாத மருத்துவப் பட்டதாரிக் கற்கையை உலக வரலாற்றில் நடாத்திய விடுதலை இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே இருக்கும்.  புலிகள் இயக்கம் ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வடிவம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமையும். போர்களிலும் இடம்பெயர்வுகளிலும் தமது மருத்துவ சேவைகளை ஏனைய மருத்துவர்களோடு இணைந்தவாறும் தேவைக்கேற்ப மருத்துவப் போராளி அணிகளைக் கற்பித்து விரிவடைவித்தவாறும் தமிழீழ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவர்களாக உருவெடுத்தனர். போதனா வைத்தியசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் அப்பப்போது தேவைக்கேற்ற பயிற்சிகளைப் பெற்ற இந்த மருத்துவ அணி இறுதியில் போதனா வைத்தியசாலை நிபுணர்குழுவின் தேர்வுகளின் ஊடாக தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தது. மூடப்படும் நிலையில் இருந்த மக்களுக்கான அரச மருத்துவ கட்டமைப்பின் வெளிவாரி மருத்துவ மையம் முதல் மாவட்ட வைத்தியசாலைவரை ஏற்பட்டிருந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு புலிகளின் மருத்துவ ஆளணிகளே பெரும் பங்காற்றின. புலிகளின் பெரும் போர்ப் படை நடவடிக்கைளின்போது பங்காற்றுவதற்கான இராணுவ மருத்துவ மனைகளில் நிபுணர்களின் இடத்தை நிரப்புவதற்கான அனைத்து ஆற்றல்களையும் இந்த மருத்துவத்துறை உருவாக்கிக்கொண்டது. ஒரு தேசத்தின் மருத்துவத்துறையின் கட்டமைப்பில் இருக்கக்கூடிய முக்கிய பிரிவுகள் அனைத்தும் தமிழீழ மருத்துவப்பிரிவில் உருவாக்கப்பட்டன. வருமுன் காத்தல், நோய், காயம் பராமரித்தல், சட்ட வைத்திய நிபுணத்துவம் என அனைத்து முக்கிய சேவைகளையும் இந்த ஆளணிகளிடமிருந்தே தமிழீழ நடைமுறை அரசு பெற்றுக்கொண்டது.  அரச மருத்துவக் கட்டுமானத்தின் வெளி வைத்தியர் குழாம், புலிகளின் படை நடவடிக்கை, இடம்பெயர்வு மருத்துவத் தேவைகளின்போதும் அனத்ர்த்தங்களின்போதும் ஒரே கட்டமைப்பாகவே ஒத்தியங்கி வரலானது. போராளி மருத்துவர்களும் அரச மருத்துவர்களும் வேறுபிரிக்க முடியாதபடி தமிழின விடுதலைப் பரப்பில் இறுக்கமாக இணைந்து பணியாற்றினர். பொது வெளிகளில் பகிரப்படாத பக்கங்களாக இவை அமைந்துகிடக்கிறது. மலேரியா தடுப்பு நடவடிக்கைகள்,கொலரா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்,டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்,சிக்குன்குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகள்,சுனாமி அனர்த்தம் என பல நடவடிக்கைகள் தமிழீழ அரச கட்டுமானங்களின் பங்களிப்போடு பல பிரிவுகள் உள்ளடங்கலான கூட்டு நடவடிக்கையாக இருந்தது. அரசியல் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை என்பன சேர்ந்தே வேலைகளை முன்னெடுத்தன. இலங்கை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளைவிட பொருளாதாரத் தடைகளின் பிடிக்குள் சிக்கிய புலிகளின் பகுதிகள் தொற்று நோய்களை தடுத்தாழ்வதில் மிகவும் திறன்வாய்ந்து விளங்கின. இதனை சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தடுப்பு முகாமில் குடற்புழு தொற்று தடுப்பு பற்றி பேசப் போன தடுப்புக்காவலில் இருந்த மருத்துவர்களிடம் பேசியபோது, “நீங்கள் எதிர்பார்க்கும் உடனடியான சுகாதார தடுப்பு செயல் முறைகள் இலங்கையின் நிர்வாகத்தில் கிடையாது. அது புலிகளின் வன்னிப் பகுதிக்குள் மட்டுமே எதிர்பார்க்க முடியும்” என்று குறிப்பிட்டதோடு மருத்துவர்கள் கேட்டுக்கொண்ட சுகாதார நடைமுறைகளை உடனடியாக அமுல்படுத்தினார். மருத்துவ மனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில், மருத்துவமனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில் சுகாதார கல்வியூட்டல் பிரிவு, தாய் சேய் நலன் பிரிவு, பற்சுகாதாரப் பிரிவு, சுதேச மருத்துவப் பிரிவு, நடமாடும் மருத்துவ சேவை, தியாகி திலீபன் மருத்துவ சேவை, லெப் கேணல் கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம், தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு, பூச்சியியல் ஆய்வுப் பிரிவு, விசேட நடவடிக்கைப் பிரிவு என்பன நிறுவனமயப்பட்டு இயங்கிவந்தன. இதனால் இலங்கையின் அரச மருத்துவத் துறையின் செயலிடைவெளிகள் நிரப்பப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டன.  இவற்றைப்பற்றியதான விரிவான பார்வையை இக்கட்டுரையின் நோக்கத்தினுள் அடக்கிவிட முடியாது. செவிப்புலன் பாதிப்புற்றோர், விழிப்புலன் பாதிப்புற்றோர், போசாக்கு நோய்களுக்குட்பட்ட குழந்தைகள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு இல்லம், சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் என பல கட்மைப்புக்கள் இயங்கின. தூரப்பிரதேசங்களில் மருத்துவ சேவைகள் கிடைக்காத நிலைமைகளை மாற்றுவதற்காக தியாகி திலீபன் மருத்துவமனை, நோயாளர் காவு வண்டிகள் என்பன மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டன. பெரும் மருத்துவ ஆளணி வளங்கள் புலிகளின் இராணுவ மருத்துவ கட்டமைப்பிற்குள் பணியாற்றின. இதன் வடிவமைப்பே போரினால் காயமடையும் போராளிகளையும் மக்களையும் காக்கும் பணியில் பெரும் பங்காற்றின. போராளிக் களமருத்துவ அணிகள் படையணிகளில் முன்னணி போர்முனை உயிர்காத்தல் முதலுதவிப் பணிகளை செய்தனர். அங்கிருந்து காயமடைந்தோர் , உப, பிரதான களமருத்துவ நிலைகளினூடாக  தளமருத்துவ நிலைகளுக்கு மாற்றப்படுவார்கள். இராணுவ தள மருத்துவ மனைகளிலேயே உயிர்காத்தல் சத்திரசிகிச்சைகள் மற்றும் உயிர்காத்தல் பராமரிப்புக்கள் இடம்பெறும். இங்கிருந்து படையணிப்பிரிவு மருத்துவ மனைகளில் பின்னான பராமரிப்புக்கள் நடைபெறும். இந்த கட்டமைக்கப்பட்ட செயற்பாடுகளில் ஏற்படக்கூடிய சிக்கல்களளை சமராய்வு நடவடிக்கைகளின் அறிக்கைகளின் ஊடாக தலைவரும் தளபதிகளும் கவனித்து வந்தனர். பன்னாடுகளின் துணையோடு இறுதிப்போர் வியூகங்களளை எதிரி மேற்கொண்ட போது வன்னிப் பெருநிலப் பரப்பெங்கும் போர்முனைகள் திறக்கப்பட்டன. இப்பகுதிகளில் இருந்துவரும் போர்க்காயங்களைப் பராமரிக்க இராணுவ தளமருத்துவ முனைகள் பிரித்துப் பொறுப்பளிக்கப்பட்டன. மக்கள் இலக்குகள்மீது எதிரி தாக்குவான் என்பதையும் ராணுவ மற்றும் இடம்பெயர் மருத்துவ மனைகளையும் எதிரி இலக்கு வைப்பான் என்பதையும் மருத்துவ ஆளணித் தட்டுப்பாடுகள் ஏற்படும் என்பதையும் மருத்துவப் பிரிவின் உயர்பீடமும் தலைமையும் அறிந்து தயாராகவிருந்தது.  சமாதான காலத்தின் பின்பகுதியில் தலைவர் அவர்கள் திட்டமிட்டபடி ‘விஞ்ஞான அறிவியல் கல்லூரி’ உருவாக்கப்பட்டு அங்கு டிப்ளோமா மருத்துவக் கற்கை, தாதியக் கற்கை, மருந்தாளர்கள் கற்கை, போசாக்கியல் கற்கை போன்றவற்றினூடாக மருத்துவ ஆளணி வளங்கள் பெருக்கப்பட்டன. பொதுமக்களில் இருந்து  தேர்வு செய்யப்பட்ட  ஆண்களும், பெண்களும் இந்த கற்கைநெறிகளைத் தொடர்ந்தனர். இவர்களின் கற்றலை இலகுபடுத்த விடுதிவசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. இறுதிப் போரரங்கில் மக்களின் மருத்துவப் பராமரிப்புத் தேவைகளை நிறைவுசெய்வதில் இந்த ஆளணிகளே பெரிதளவு உதவின. இந்த மருத்துவர்களும் தாதியர்களும் போராளிகளாக மாறி இக்கட்டான நிலைமைகளில் கைகொடுத்தனர். ஓரிருவரைத் தவிர பெரும்பாலான அரச மருத்துவர்கள் யுத்தத்தின் நெருக்கடிகளின் போது வன்னியை விட்டு வெளியேறிவிட்டார்கள். இடம்பெயர்வுகள் நடைபெற்றதாலும், ஆழ ஊடுருவும் படைகளினால் நோயாளர் காவு வண்டிகள் இலக்குவைக்கப்பட்டதாலும், வைத்தியர்கள், தாதிகள், சாரதிகள் நிர்வாகிகள் என அனைத்து நிலைகளிலும் பணியாளர்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகளின் மீது மீண்டும் மீண்டும் விமானத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இந்த நிலைமைகள் அரச மருத்துவ ஆளணிகளின் பங்கை முற்றாக அப்புறப்படுத்தியது. மக்களையும் போராளிகளையும் உயிர்காக்கும் பணி முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளின் மருத்துவக் குழாமின் கைகளில் தங்கியது. குறைவான ஆளணியுடன் மிகையான காயத்தையும், நோயாளர்களையும் எதிர்கெண்டு அவர்கள் சேவையாற்றினர். இந்த நிலைமைகளில்  மக்களிலிருந்து உணர்வுபூர்வமான உதவிக்கரங்கள் நீண்டதை இங்கு பதிவு செய்யவேண்டும். அரச மருத்துவ அதிகாரிகள் இருவர் தமது மக்களுடன் நின்று இறுதிவரை சேவை செய்து உயிரை விடுவது உயர்வானது என வன்னியிலேயே நின்றுவிட்டார்கள். போரின் முன்னரங்குகள் நகர்ந்து முள்ளிவாய்க்கால்வரை வந்தபோது மருத்துவ மனைகளும் இடம்பெயர்ந்துகொண்டே வந்தன. சிக்கலான காயங்கள் உள்ளோர் சிகிச்சைகளின் பின் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக கப்பலில் ஏற்றப்பட்டு திருகேணமலைக்கு பராமரிப்புக்காக கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவ மனைகளின்மீது தாக்குதல் தொடுக்கப்படாமல் இருப்பதற்காக செஞ்சிலுவைச் சங்கத்தால் இராணுவ தலைமைப்பீடங்களுக்கு அனுப்பப்பட்ட வரைபட ஆள்கூறுகள் சில மணி நேரங்களுக்குள் துல்லியமாக மருத்துவமனைகள் தாக்கப்படுவதற்கு உதவின. சூனியப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு மக்கள் செறிவாக குவிக்கப்பட்ட இடங்களைத் தேர்வுசெய்து செறிவான தாக்குதல்களை தொடுத்தது இராணுவம். இதனால் மருத்துவ மனைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டன.  இடம்பெயர் அரச மருத்துவ மனைகளின் கூரைகளில் காட்டப்பட்ட செஞ்சிலுவை அடையாளங்கள் போர் வேவு விமானங்களுக்கு மருத்துவமனைகளை துல்லியமாக காட்ட, எறிகணைகள் இலக்குத் தப்பாமல் தாக்கின. வன்னியில் நடைபெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் போர்க்கால மருத்துவப் பட்டறையில் துல்லியமாக அறியப்பட்ட விடயம் யாதெனில், அரச தரப்பே மருத்துவ மனைகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதாகும். உடையார்கட்டு பாடசாலையில் அமைக்கப்பட்ட இடம் பெயர் கிளிநொச்சி மருத்துவ மனைக்கு, சுதந்திரபுரம் யுத்தமற்ற பிரதேச மக்கள் செறிவான தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் அள்ளிவரப்பட்டனர். இதே வேளை வள்ளிபுனத்தில் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு இடம்பெயர் மருத்துவமனையிலும் குவிக்கப்பட்டனர். வள்ளிபுனம் மருத்துவமனை மிகத்துல்லியமாக தாக்கப்பட்டு சத்திர சிகிச்சைக் கூடத்தினுள் காயமுற்ற குழந்தைகள் உட்பட மக்கள் சத்திரசிகிச்சை மேசைகளிலேயே கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு முதல் நாளில்தான் செஞ்சிலுவையினர் வரைபட ஆள்கூறுகளை பாதுகாப்பதற்காக எனக்கூறி எடுத்துச்சென்றனர். அப்போது இந்த ஆள்கூறு மருத்துவமனையை இலக்கு வைப்பதற்கே பாவிக்கப்படும் என கூறி வேண்டாமென மருத்துவ அதிகாரி ஒருவர் தடுக்க முயன்றார். திறன்மிக்க போரளி மயக்கமருந்து நிபுணர் செல்வி. அல்லி அவர்கள் வள்ளிபுனத்தில் காயமடைந்து உடையார்கட்டு மருத்துவமனையில் வீரச்சாவடைந்தார். இது உயிர்காக்கும் இயந்திரத்தை பலமிழக்கவைத்தது. உடையார்கட்டு மருத்துவமனைமீது நடாத்தப்பட்ட செறிவாக்கப்பட்ட ஆட்லறி தாக்குதல்களில் அதனைச்சுற்றி பாதுகாப்புக்காக கூடிய மக்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவ மனைக்குள் எறிகணைகள் வீழ்கிறது என்ற செய்தியை சுகாதார உயர்பீடத்துக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்துவதால் நிறுத்திவிட முடியும் என கிளிநோச்சி சுகாதார அதிகாரி ஒருவர் மீண்டும் மீண்டும் முயன்றார். தொலைபேசியினூடாக எறிகணைகளை துல்லியமாக மருத்துவ மனைமீது திருப்பியிருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டபின் அந்த முயற்சிகளை கைவிட்டார் அந்த அதிகாரி. அவர்களது தாக்குதல்கள் அதன்மூலம் செறிவாக்கப்பட்டபோது ஒரு தாதியும் கடமையின்போது காயமடைந்து அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். கடமையில் இருந்த தமிழீழ மருத்துவக்கல்லூரி போராளி மருத்துவர் திருமதி. கமலினி அவர்கள் முள்ளிவாய்க்கால் சத்திரசிகிச்சைக் கூடத்தில் வைத்து எறிகணை வீச்சில் வீரச்சாவடைந்தார். மக்களுக்கான மருத்துவ சேவையில் இருந்த வைத்தியர் சிவமனோகரன் அவர்கள் கொத்துக்குண்டுகளுக்குப் பலியாகிப்போனார். மூத்த மருத்துவப்போராளிகள் இறையொளி, செவ்வானம் கடமையில் இருந்தபடி வீரச்சாவடைந்து போனார்கள். இவ்வாறு வீரச்சாவடைந்த மருத்துவ போராளிகள் அநேகர். பொஸ்பரஸ் எரிகுண்டுகள், கொத்துக்குண்டுகள், ஆர்.பீ.ஜீ எறிகணைகள், ஆட்லறிவீச்சுக்கள், விமானத் தாக்குதல்கள் கண்ணுக்குத் தெரிந்த கடற்படைக் கப்பல்கள் ஏவிய குண்டுகள் வீழ்கின்ற நிலமைகளில் காப்புக்கள் அற்ற சூழலில் மருத்துவ மனைகள் இயங்கிக்கொண்டுஇருந்தன. அங்கு வெடிக்காமல் காலில் செருகிய நிலையில் இருந்த கொத்துக் குண்டு, ஆர்.பீ.ஜீ குண்டுகளை பெரும் ஆபத்துக்கு நடுவில் புதுமாத்தளனில் வெட்டியகற்றி உயிர்காக்கும் பணிகளை நிறைவேற்றினார்கள்.  ( ஆர்.பீ.ஜீ தாக்குதலுக்கு உள்ளான பெண் தற்பொழுதும் உயிர் வாழ்கிறார்) இரவு பகலாக பல்லாயிரக்கணக்கான காயங்களுக்கு மருத்துவச் சிகிச்சைகள் நடந்துகொண்டே இருந்தன. பகலில் பெண் மருத்துவர்களும் இரவில் ஆண் மருத்துவர்களும் பணியில் இருந்தார்கள். ஏனெனில் இந்த மருத்துவர்கள் தமது குழந்தைகளை இரவில் பராமரிக்க செல்லவேண்டும். இடம்பெயர்வுகளில் மருத்துவர்களின் குடும்பங்கள் தங்களைத் தாங்களே உதவிகளின்றி நகர்த்தவேண்டி ஏற்பட்டது. மருத்துவமனைக்குள் மருத்துவ ஆளணியினர் காயமடைந்து நோயாளர்களாக பராமரிக்கப்படத் தொடங்கினர். பலர் பின்னர் வீரச்சாவடைந்து போனார்கள். அதுவரை கடினமாக உழைத்த, தனது மூன்று குழந்தைகளையும் குண்டுவிச்சில் பலிகொடுத்த, மருத்துவர் இசைவாணன் தனது தொடை என்பு முறிவுடன் மற்றவர்களின் சுமைகளை நினைத்து சயனைட் குப்பியைக் கடித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். காயமடைந்த நிலையிலும் மருத்துவர்கள் மற்றவர்களின் உயிர்காப்பதற்காக கட்டுக்களோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சகமருத்துவ ஆளணிகள் வீழ்ந்துகொண்டிருக்க ஆண் பெண் மருத்துவ ஆளணி தங்களது உயிர்கள்மீது எந்த கவனமுமற்றோராய் இயந்திரங்களாக வேலைகளைக் கவனித்துக்கொண்டது. உடலங்களை அகற்றுகதில் ஈடுபட்ட தமிழீழக் காவல்துறை செயலிழந்துபோக மருத்துவமனைகள் உடல்களால் நிரம்பத்தொடங்கியது. இப்படியாக மே மாதம் 15ம் திகதியுடன் மருத்துவ ஆளணிகளின் செயற்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகிறது. “எனது கடமைகளை நான் இறுதிவரை நிறைவேற்றுவேன்; உங்களது கடமைகளை நீங்கள் உங்களது மக்களுக்காக நிறைவேற்றுவீர்கள் என முழுமையாக நம்புகிறேன்” என்று இறுதிச் சந்திப்பில் கேட்டுக்கொண்ட தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நம்பிக்கையை இறுதிக்கணம்வரை காப்பாற்றியது தமிழீழ மருத்துவக் குழாம். https://www.ilakku.org/இறுதிவரை-உறுதியுடன்-பணி/
    • கவனமா போய் வா மச்சான் !     புரியல்ல அண்ண வாறன் வெளில போய் கதைக்கிறன். தொலைபேசி அழைப்பில் இரைச்சல் வரவே நான் என் தங்ககத்தை விட்டு வெளி வருகிறேன். “சொல்லுங்க அண்ண இப்ப சரியாகீட்டுது. விளங்குது”… அவர் தொடர்கிறார். மட்டக்களப்புக்கு மருத்துவ அணி ஒன்றை அனுப்ப வேண்டிய சூழல். அங்கே போராளி மருத்துவர் அடம்ஸ் தலைமையிலான மருத்துவ அணி நிலை கொண்டு பணியில் இருந்தாலும், மேலதிக மருத்துவ அணியின் தேவை எழுந்தது. அதனால் அண்ண உடனடியாக படகில் மட்டக்களப்புக்கான மருத்துவ அணியை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை சூசை அண்ணையிடம் கொடுக்கிறார். அதற்கான நடவடிக்கை பொறுப்பாளனாக மணலாறு மாவட்ட படையணியில் ( மணலாறு கட்டளைப்பணியகம் ஆரம்ப காலங்களில் மாவட்டப்படையணியாகவே இருந்தது.) நின்ற போது என் நண்பனாகி, பின்நாட்களில் கடற்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு, கட்டளை அதிகாரி தரத்தில் இருந்த மருதுவை நியமிக்கிறார் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி. அதற்கான ஆயுத்தங்கள் நிறைவு பெற்றிருந்தன. படகு தயாராக செம்மலைக் கடற்கரையில் நிற்கிறது. படகுக்கட்டளை அதிகாரி மருது மற்றும் படகு இயந்திரவியலாளன், ஓட்டுனர் என பல நிலைகளைக் கொண்ட பாலையா ஆகியோர் அதன் அருகில் எம் அணிக்காக காத்து நிற்கிறார்கள். நாம் சென்ற போது மச்சான்… நீயும் வாறியா? என்கிறான் மருது. நீண்ட நாட்களின் பின்னான அவனுடனான சந்திப்பு மகிழ்ச்சியை தந்த போது புன்னகைத்துக் கொண்டு, இல்ல மருது வாமன் அண்ணை டீம் தான் வருகுது. நான் கூறிய உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய மருத்துவ அணியில் இருந்த போராளி மருத்துவர் வாமன் மற்றும் அவரது துணைவியாரான போராளி மருத்துவர் வான்மதி ஆகியோருடன் வேறு சில மருத்துவ போராளிகளை மருது பார்க்கிறான். வணக்கம் வாமன் அண்ண… மருது அவர்களை வரவேற்றுக் கொள்கிறான். டொக்டர் எல்லாம் ரெடியா? அவரோடு சில விடயங்களைக் கதைத்தான். அவன் செல்வதற்கான இறுதித் தயார்ப்படுத்தல்கள் செய்தான். அவனிடம் பல இரகசிய செய்திகளும் கொடுக்கப்பட்டிருந்தன. அவை எதிரியிடம் பிடிபடவோ அல்லது கொண்டு செல்லப்படும் மருத்துவ அணிக்கு இழப்புக்கள் ஏற்படவோ கூடாது என்பது இறுக்கமான கட்டளை. அத்தனையும் எதுவும் நடந்துவிடாது இலக்கில் சேர்ப்பிக்க வேண்டும் என்ற பெரும் பொறுப்பு இருந்தது. அவனின் படகிற்கு முன்னாலும் பின்னாலும் பாதுகாப்புக்காக இரு படகுகள் கனரக ஆயுதங்கள் கொண்ட போராளிகளுடன் செல்லத் தயாராக உள்ளது. அவர்களையும் இறுதியாக அழைத்து, அனைத்து ஒழுங்குகளும் சரியா என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி கொள்கிறான் மருது. சாக்குகள் தயாரா என்று கேட்டான். எல்லாம் சரி என்றவுடன் புறப்படத் தயாராகினான். கடற்பயணம் பல சிக்கல்களை உருவாக்கும். பழக்கமற்றவர்களுக்கு வாந்தி, தலைச்சுத்து, மயக்கம் போன்றவை வரும். போகும் பாதையில் சிங்கள கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகலாம். அத்தனையையும் தாண்டி இலக்கிற்கு சென்றடைய வேண்டும். ( சென்ற மருத்துவ அணி பற்றி பின்பொரு பதிவில் சொல்கிறேன்) அவர்கள் செல்லும் பாதை குறிப்பிட்ட தூரம் கடந்தவுடன் பல சிக்கல்கள் நிறைந்தது. திருகோணமலைத் துறைமுகத்தை கூட அவர்கள் கடந்தே செல்ல வேண்டி இருந்தது. இயந்திரத்தின் சத்தம், படகின் வேகத்தால் எழும் இரைச்சல்கள் அவர்களை எதிரிக்கு இனங்காட்டக் கூடியவை. இதற்கெல்லாம் அவர்களிடம் துணிவு மட்டுமே பாதுகாப்பாக இருந்தது. இயந்திரத்தின் சத்தத்தை குறைப்பதற்காக ஈரச்சாக்குகளை அதற்கு மேல் போட்டு சத்தத்தை குறைக்கும் நடவடிக்கையை செய்தார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு யாழ்ப்பாணம் இராணுவத்தின் கையில் விடுபட்ட போது, யாழ் நகரில் இருந்து காயங்களை ( காயப்பட்ட போராளிகளை) அல்லைப்பிட்டி கடலால் வெளியேற்ற கடற்புலிகள் பயன்படுத்திய வழிமுறையும் இதுவே என்று நினைவு வந்தது( இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் தந்திருந்தேன் ” குருதிக்குள் ஒரு பயணம் 5 ) செல்ல வேண்டிய அணியை ஏற்றிவிட்டு என்னிடம் இருந்து விடைபெற தயாராகிறான் மருது. “மருது கவனம் கடல்ல அவன் கண்டபடி முட்டுப்படுவான் பார்த்து போ சரியா? ” மருத்துவரே கவலைப்படாத நாங்கள் பிரச்சனை ஒன்றும் இல்லாமல் போய் சேருவம். அப்பிடி எதாவது ஆச்சுதென்றாலும் பயப்பிடாத சாமான் இருக்கு. அவன் கை காட்டிய திசையில் பாக்கிறேன். படகின் அணியத்தை அவன் சுட்டிக் காட்டுகிறான். அதற்குள் முழுவதுமாக சக்கை அடைக்கப்பட்டிருந்தது. அவன் வேறு எதையும் கூற வில்லை. படகு புறப்பட்டு விட்டது. இவன் எதற்காக அணியத்தை காட்டுகிறான்? அதுவும் எப்போதும் வெடிக்க வைக்கப்படும் நிலையிலே அந்த அணியத்துக்குள் தூங்கும் சக்கை இருந்தது. நான் பாதுகாப்பாக மட்டக்களப்பிற்கு போய் சேர் என்று தானே கூறினேன். சென்ற படகையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். படகு அந்த இருட்டுக்குள் மறைந்துவிட்டது. மருதுவிடம் நான் கவனமாக போ என்று சொன்னதன் அர்த்தத்தையும் அவனின் பதிலின் அர்த்தத்தையும் எடை போடுகிறேன். ஒவ்வொரு போராளியும் எப்பவும் சாவதற்கு தயாராகவே இருப்பார்கள் இதை அவர்கள் கழுத்தில் தூங்கும் நஞ்சுக்குப்பி சொல்லும். ஆனாலும் ஒரு பயணத்தின் போது “கவனமா போ ” என்று கூறப்படும் வார்த்தைகள் எம் உள்ளக்கிடக்கைகளில் அவர்கள் பாதுகாப்பாக உயிருடன் போக வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு. அதற்கு கூட அவன் “சரிடா “என்று ஒரு வார்த்தையை பதிலாக கூறி இருந்தால் மனம் நிம்மதியாக இருந்திருக்கும். ஆனால் அவன் தன் செய்கைக்குறியியீட்டால் எது நடந்தாலும் உயிருடன் பிடிபட மாட்டோம் அவ்வாறு எதாவது நடந்தால் எதிரியை அழித்து நாமும் அழிந்து விடுவோம் என குறிப்பிட்டு செல்வது என்பது அவனது தேசத்தின் மீதான பற்றுதலையும் தன் உயிரை விட தான் தாங்கி செல்லும் செய்திகளின் பெறுமதியையும் எனக்கு உணர்த்திச் சென்றது. தரைச்சண்டைகளுக்கும் கடற்சண்டைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் அறிவர். அவ்வாறான நிலையில் படகின் வேகத்தையும் துப்பாக்கிகளின் சூட்டு வீச்சையும், கட்டளை அதிகாரிகள் அல்லது படகு ஓட்டுனர்களின் கடல் ஆளுமையையும் மட்டும் காப்பாக கொண்டு சண்டையிடும் கடலணிக்கு எப்பவும் எதுவும் நடக்கலாம் என்பது நான் சொல்ல வேண்டிய செய்தியல்ல. ஆனாலும் இந்த நடவடிக்கைப் பொறுப்பாளன் மருது அன்று செம்மலையில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற அந்த நடவடிக்கையில் தான் ஒரு கரும்புலியாகவே சென்றிருந்தான் என்பதே நியம்… கரும்புலிகள் என்பவர்கள் போராளிகளில் இருந்து வேறுபட்டவர்கள் ஆனால் போராளிகளில் இருந்து தான் அவர்களும் உருவானவர்கள். மருதுவும் தன்னையும் தன் அணியையும் கரும்புலி அணியாகவே நினைத்துக் கொண்டான். சரி அண்ண வேறு ஒரு போராளி பற்றிய குறிப்போடு சந்திப்போம் அண்ண… நான் எமக்காக பல ஆண்டுகள் போராளி மருத்துவராக வாழ்ந்து தமிழீழ தேசம் எங்கும் தன் மருத்துவ அறிவைப் பதித்து மக்களையும் போராளிகளையும் உயிர்ப்பித்த போராளி மருத்துவர் அறத்தலைவனிடம் இருந்து விடைபெறுகிறேன். நன்றி அண்ண… கவிமகன்.இ 17.11.2017
    • ன்பானவர்களே! “பகிரப்படாதபக்கங்கள்” என்ற நூல் தமிழீழ மண்ணின் பல லட்சம் தியாகங்களின் உச்சங்களில் ஒரு சில உச்சங்களை தன் உள்ளத்தில் சுமந்து வெளி வருகிறது. இது மாவீரங்களின் அதி உச்ச தியாகம் என்பதில் எக்கருத்து வேறுபாடுகளும் இருக்க முடியாது. கண்ணீர்களை வர வைக்கும் வரலாற்று வலிகளை சுமந்து கார்த்திகை வேங்கைகளுக்காக அவர்களுக்குச் சொந்தமான கார்த்திகை மாதத்திலையே காந்தள் பூவாக பூக்க இருக்கிறது. வரும் கார்த்திகை மாதம் இப்புத்தக வெளியீட்டு நிகழ்வை நடாத்த மாவீரர் நினைவுகளைச் சுமந்து பயணிக்கும் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள். விரைவில் இது தொடர்பான மேலதிக செய்திகளை உங்களுடன் பகிர்வேன். என்றும் எம் தியாகச் செம்மல்களின் பாதம் பணிந்து அவர்களின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கும் அனைவரும் எம்முடன் இணைந்து எம்முடைய இம் முயற்சிக்கு கரம் தருவீர்கள் என்று நம்புகிறேன். நட்புடன் இ.இ. கவிமகன் இயக்குனர் முருகு வெளியீட்டகம் முள்ளிவாய்க்கால் மண் முன்னால் வெளியிடப்பட்ட பகிரப்படாதபக்கங்கள். *********************************************** “பகிரப்படாதபக்கங்கள்” என்ற நீண்ட கனவு தனது அடைவை பெற்றுக் கொண்டது. எதிர்பார்த்தளவு வருகையாளர்களுடன் மண்டபம் நிறைந்து இருந்தது. காலை 9.30 க்கு தொடங்க வேண்டிய நிகழ்வு 30 நிமிடம் தாமதமாக ஆரம்பித்தது. போராளி மருத்துவர் திரு. தணிகை அவர்களின் தலமையில் நிகழ்வுகள் ஆரம்பித்த போது, ஆனந்தத்தில் விழிகள் கலங்கியதை தவிர்க்க முடியவில்லை. மாவீரங்களின் உன்னத தியாகங்களை, இது மாவீரர்களான போராளிகள் மட்டுமல்லாது, வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய போராளிகள் மற்றும் மக்கள் நாட்டுப்பற்றாளர்கள் என பல நிலைகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்தப் “பகிரப்படாதபக்கங்கள்” மிக நீண்ட கால உழைப்பின் பெறுபேறாக வெளியில் வந்தது மனம் மகிழ்வுக்குரியது. திருமதி. தீபாவின் நிகழ்வு ஒருங்கிணைப்பில் நிகழ்வு ஆரம்பமாகிய போது ஜேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு.,சிறீரவீந்திரநாதன் பொதுச்சுடரை ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மகளிர் பிரிவப் பொறுப்பாளர் திருமதி. வசந்தி ஏற்றி வைக்க இப் புத்தகத்தில் இடம்பெற்ற 16 மாவீரர்களின் திருவுருவப்படத்துக்கும் வருகையாளர்கள் ஈகைச்சுடரை ஏற்றி வைத்தார்கள். தொடர்ந்து மலர் வணக்கத்தை ஜேர்மனியின் தமிழ் கல்விக்கழகப் பொறுப்பாளர் திரு. லோகன் அவர்கள் ஆரம்பித்துவைக்க வருகையாளர்கள் மாவீரர்களுக்கான மலர்வணக்கத்தை செய்தார்கள். அதன் நிறைவு வந்த போது அகவணக்கம் செய்யப்பட்டு நிகழ்வின் தலமையுரை ஆரம்பித்தது. தலமையுரையினை நிகழ்வின் தலைவர், போராளி மருத்துவர் தணிகை நிகழ்த்தினார். தொடர்ந்து புத்தகத்துக்கான அறிமுகவுரையினை கடற்புலிப் போராளி மருது அவர்கள் நிகழ்த்தி முடித்த போது, மிக முக்கிய நிகழ்வான புத்தக வெளியீடு நடைபெற்றது. பகிரப்படாதபக்கங்கள் என்ற நூலினை வெளியிட்டு வைக்குமாறு நூலாசிரியர் கவிமகனின் தாயாரான, திருமதி. இந்திரப்பிரபா அவர்கள் அழைக்கப்பட்டார். அப்போது அவர் கூட போராளி மருத்துவர் தணிகை மற்றும் நூலாசிரியர் கவிமகன் ஆகியோர் கூட இருந்தனர். மாவீரன் லெப். கேணல் மேனனின் துணைவியாரான யசோ அவர்களிடம் முதல் பிரதியை கையளித்து. நூலினை வெளியிட்டு வைத்தார் கவிமகனின் தாயார். வெளியீட்டு நிகழ்வு நிறைவுபெற்றதும் சிறப்புப் பிரதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்ற போது சிறப்புப் பிரதியினை நூலாசிரியர் கவிமகன் வழங்க, சிறப்புப் பிரதியின் முதல் பிரதியை உறவுகளுக்குக் கரங்கொடுப்போம் அமைப்பை சேர்ந்த அமுதன் அவர்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ஏனையவர்களுக்கான சிறப்புப் பிரதிகள் கவிமகனால் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவையோருக்கான பிரதிகள் வழங்கப்பட்டு சிற்றுண்டி இடைவேளை விடப்பட்டது. தொடர்ந்து உறவுகளை ஒன்றிணைப்போம் அமைப்பை சேர்ந்த திரு. வேணுவின் தேசியத்தலைவர் பற்றிய கவிதை ஒன்று வாசிக்கப்பட்டு நிகழ்வுகள் தொடர்ந்தன. நிகழ்வின் முக்கிய பேச்சுக்களான நூல் பற்றிய ஆய்வுரை மற்றும் மதிப்பீட்டுரை ஆகியவை தொடர்ந்த போது, அவற்றை முறையே லண்டன் மாநகரில் இருந்து வந்திருந்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான கோபிரட்னம் அவர்களும், பெண் எழுத்தாளர் மாலினி மாலாவும் வழங்கினர். பல விடயங்கள் அவர்களால் நிறை குறை என்ற இரு பெரும் வகைக்குள் சுட்டிக் காட்டி, இப் புத்தகம் பற்றிய அலசல் ஒன்றை செய்திருந்தார்கள். அதன் நிறைவில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் சிறீரவீந்திரநாதன் அவர்களின் வாழ்த்துரை நடைபெற்றது. அதில் இன்னும் பல படைப்புக்கள் இவ்வாறு வெளிவருவதற்கு தாம் உதவி புரிவதாக உறுதி வழங்கினார். தொடர்ந்து நூலாசிரியர் கவிமகன் ஏற்புரை வழங்கினார். அதில் ஆய்வுரை மற்றும் மதிப்பீட்டுரையில் சந்தேகிக்கப்பட்ட அல்லது குறைகளை களைவதற்காக கூறப்பட்ட விடயங்களுக்கான விளக்கங்களையும், காரணங்களையும் விளக்கினார். பின் புத்தகத்தில் இருந்த சில விடயங்களைச் சுட்டிக் காட்டி அவற்றை எழுதத் தூண்டிய காரணிகளையும் விளக்கினார். தொடர்ந்து தான் இப் புத்தகத்தை எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து இந்நிகழ்வு நடைபெறும் வரை தன் தோளோடு கூட நின்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டு தன் ஏற்புரையினை நிறைவு செய்தார் கவிமகன். இந்த இடத்தில் மிக முக்கிய விடயம் ஒன்று நடைபெற்றதை சுட்டிக் காட்ட வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உச்ச தியாகங்களாக பதிவாகியிருக்கும் இத் தொகுப்பின் வெளியீடு, எமது விடுதலைப் போராட்டம் மௌனித்துப் போன முள்ளிவாய்க்கால் நிலத்தில் இருந்து எடுக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட மண் வைக்கப்பட்டு அதன் முன் நிலையிலே வெளியீடு செய்யப்பட்டது.     https://eelamaravar.wordpress.com/2019/06/14/ltte-history-book/
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.