Jump to content

தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

உலக வரலாற்றை வைத்து. பல மொழிகள் உருவானது ஒரு நாளில் அல்ல.  ஒன்று பலவாகியது தான் வரலாறு

கடந்த ஆயிரம் வருடத்தில் எத்தனை மொழி உருவாகி உள்ளது ?

Link to comment
Share on other sites

  • Replies 305
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

இதுவரை தமிழ்த்தேசியம் சிறு சிறு குழுக்கள் பேசி வந்தது.. பெரும்பான்மை தமிழ்மக்களுக்கு அதை மறைத்து திராவிட மாயைக்குள் இரண்டு பெரிய கட்சிகளும் மூடி தமிழர்களை விழிப்படைய விடாமல் வைத்திருந்தனர்.. அதன் பின்

island

பிரபா,  மபொசி  இந்திய அமைதிகாக்கும் படையை வரவேற்ற செய்தி  உண்மையேயெனினும் அது தொடர்காக நான் வாசித்த இணைய தளத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் தேசியவாதியான  மபொசி எப்போதுமே விடுதலைப்புலிக

பாலபத்ர ஓணாண்டி

கோசான் உங்களுக்கு சீமான் பிரச்சினையா இல்லை தமிழ் தேசியம் பிரச்சினையா இல்லை ரெண்டுமே பிரச்சினையா..? நான் தமிழ்தேசியத்தை பற்றித்தான் எழுதி இருந்தேன்.. அதை விஜை எடுத்து கையாள்வது குறித்து எழுதி இருந

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

விஜேய் பீஜேப்பியின் C ரீம் 

திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌ம் புல‌ம்ப‌ல்😁.....................

கோர்த்துவிடுகிறார்கள். 🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

உண்மைதான்.

ஆனால் என்ன தான் உபிஸ் 200 ரூபாய்க்கு ஓவர் டைம் பார்த்தாலும், மீம்ஸ் பேக்டரிகள் இயங்கினாலும்…எடப்பாடி, கமல், அண்ணாமலை, சீமான் …வஞ்சகம் இல்லாமல் மீம்ஸ்க்கு கண்டெண்ட் கொடுத்தார்கள் என்பதும் உண்மை.

விஜை இதை தன் பேச்சிலேயே, எம்மை பி டீம் என பச்சை குத்த முடியாது, மீம்ஸ் போட்டு கலாய்க்க முடியாது என கூறியது அவருக்கு விசயம் விளங்கவாவது செய்கிறது என நினைக்க வைக்கிறது.

நிச்சயம் விஜை வெல்ல இருப்பதை விட தோற்க இருக்கும் நிகழ்தகவே தற்போது அதிகம்.

ஆனால் எனக்கு அவரை எதிர்க்க ஒரு காரணமும் இன்னும் இல்லை, ஆதரிக்க பல காரணங்கள் உண்டு.

எப்படியோ திமுக பக்கம் எதிர்காலம் உதய்ணா என்பது கண்கூடு.

ஆகவே வரும் காலம்

விஜைண்ணா vs  உதய்ணா என அமைந்தால் நல்லது என நினைக்கிறேன்.

விஜையை பற்றி

மக்கா மிசி, பிரச்சனையை லெப்ட் ஹாண்டில டீலு பண்ணுற மைக்கல் ஹசி என நான் சொல்லவில்லை…/

மச்சி it’s a long way to go என்பதை நானும் ஏற்கிறேன்.

வாங்கோ, நல் மீள்வரவு! அப்ப நான் நீண்ட விடுமுறையில் போகலாம் இனி😂!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

கருத்து களம் என்றால் அரசியல் கருத்தை தான் எழுத முடியும். நீங்கள் வேண்டுமானால் பஜனை பாடுங்கள். என்னை பஜனை பாட சொல்ல உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.  உலகில் எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.  

அரசியல் கருத்துக்களுக்கு நேர்மையான பதில் கருத்து எழுத முடியாத நேர்மையற்றவர்கள் தான் மரணித்த மாவீரர் பின்னால் ஒழிந்து கொள்வர். எனக்கு அந்த தேவை இல்லை.  

கருத்துக்களத்தில் தாராளமாக அரசியலை பற்றி எழுதுங்கள். அதைப்பற்றி எனக்கு எந்தக்கவலையுமில்லை. ஆனால் காலாகாலமாக சிங்களவனின் காலைக்கழுவி நக்கிப்பிழைக்கும் கூட்டத்திற்கு போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுத எந்த அருகதையுமில்லை! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Eppothum Thamizhan said:

கருத்துக்களத்தில் தாராளமாக அரசியலை பற்றி எழுதுங்கள். அதைப்பற்றி எனக்கு எந்தக்கவலையுமில்லை. ஆனால் காலாகாலமாக சிங்களவனின் காலைக்கழுவி நக்கிப்பிழைக்கும் கூட்டத்திற்கு போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுத எந்த அருகதையுமில்லை! 

நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ சரி ந‌ண்பா👍.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

உண்மையில் நல்ல சினிமா என்பது என்னவென்று தெரிந்தவர்களுக்கு கதாநாயக சினிமாவே பாசிசத் தன்மையுள்ளது என்பது புரியும். அந்த சினிமா பிரபலத்தை வைத்துக்கொண்டு கட்சி துவங்குவது மட்டுமல்லாமல் “பாசிசம், பாயசம்” என்ற கிண்டல் வேறு. குறைந்தபட்சம் விஜய் அவர் சக நடிகர் பிரகாஷ் ராஜிடம் கேட்டுப் பார்க்கட்டும். கெளரி லங்கேஷ் உயிரைக் குடித்த பாசிசம் பற்றி சொல்லித் தருவார் அல்லது சத்யராஜிடம் கேட்டுப் பார்க்கட்டும். “மணியாட்டுபவர்கள்” உருவாக்கிய சமூகம் பற்றி சொல்லித் தருவார். பெரியார் என்பது கடவுள் மறுப்பு மட்டும் அல்லதான். ஆனால், பார்ப்பனீய சமூக அமைப்பை வாழ்நாள் முழுவதும் சாடியவர். அந்த ஒரு வார்த்தையை, பார்ப்பனீயம் என்ற வார்த்தையை, சொல்ல முடியாவிட்டால் அவர் பெயரை சொல்லும் அருகதை ஒருவருக்கு இருக்க முடியாது.

❤️...............

தனிமனித துதிகளாலும், குவிந்த அதிகார மையங்களாலும் உண்டாகும் நீண்டகால பாதக விளைவுகளை நன்றாகச் சொல்லியிருக்கின்றார் பேராசிரியர் ராஜன் குறை. 'மையங்களால் அழித்தல்' என்று சில மாதங்களின் முன் இன்னொரு கட்டுரை வேறு ஒருவரால் எழுதப்பட்டிருந்தது. அதை நான் இங்கு களத்தில் பகிர்ந்தும் இருந்தேன்.

சனி அன்று ஒரு வீட்டிற்கு போயிருந்தேன். முழுவதும் 'ஹெல்தி ஃபுட்'............... குடிக்கும் பானம் கூட எல்லாம் கலந்து உடனடியாக அடித்து எடுக்கப்பட்ட ஒன்று............ கொடுமையும், பசியும் தாங்காமல், திரும்பி வரும் வழியில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டேன்.

இது போலவே விஜய் கலந்து அடித்திருக்கின்றார். கொழும்பில் மனோ கணேசன் இதைப் போலவே பேசுவார். இந்தப் பேச்சுகளால் எதுவும் நடந்து விடப் போவதில்லை ஏனென்றால் இதில் எதுவும் புதிதே இல்லை. சமூக ஊடகங்கள், யூடியூப் போன்றன பொங்கும். ஆனால் சீமானுக்கு சமூக ஊடகங்களில் இதை விட அதிக வரவேற்பு நீண்ட காலமாக இருந்து வருகின்றதே.

மநீம இல் கமல் மட்டும் மேடையிலிருப்பார், இங்கு விஜய் மட்டும் இருப்பார். அடுத்த கட்டத்திற்கு இப்பொழுது கூடும் மக்கள் கூட்டத்தை நகர்த்தும் வல்லமை இவருக்கு இருக்கின்றதா என்பது பெரிய சந்தேகமே.

பொதுவாக ஈழத்தமிழர்களுக்கு திமுகவை பிடிக்காது. ஆதலால் இவர் திமுகவை விழுத்துவார் என்று விரும்பி, ஈழத்தமிழர்கள் அதை நோக்கி கருத்துகளை உண்டாக்குகின்றனர்.

தமிழ்நாட்டில் அதிமுக கொஞ்சம் அந்தரத்தில் இருக்கின்றது. அங்கிருந்து வரும் கருத்துகள் விஜய் அதிமுகவிற்கு மாற்றீடாக வருவதே நடக்கக் கூடும் என்கின்றன. 

உதயசூரியனுக்கும், இரட்டை இலைக்கும் வாக்குப் போட்டவர்கள் அப்படியே திரும்பி இரண்டு யானகளுக்கு வாக்குப் போடும் அளவிற்கு அங்கொன்றும் அதிருப்தி இருப்பது போலத் தெரியவில்லை. விஜய்யும் அப்படியான ஒரு மாற்று போலவும் இல்லை. ஊழலும், இலஞ்சமும் அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்கைகளுடனும் பின்னிப் பிணைந்தது, சினிமா நடிகர்கள் உட்பட. ஊழல் நீக்கம் என்பது அங்கு ஒரு பொருட்படுத்தக் கூடிய விசயமே இல்லை (இலங்கையில் அது ஒரு பெரிய விசயம்......).

**********************************

பெரியாரை பின்பற்றுபவர்கள் பிராமண ஆதிக்கம் பற்றி பேச வேண்டும் என்பது கட்டாயமே. ஆனால் அதை 'பார்ப்பனீயம் அல்லது பார்ப்பனர்கள் ஆதிக்கம்' என்று கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று ராஜன் குறை அவர்கள் சொல்லியிருப்பது சரி என்று தோன்றவில்லை. இந்தச் சொல் கிட்டத்தட்ட ஒரு 'இழி சொல்' ஆக இன்று மாறிவிட்டது. எங்களின் கருத்துகளை இழி சொற்களின் மூலம் தான் எடுத்து வைக்க வேண்டும் என்றில்லை.

** பார்ப்பனன் என்ற சொல்லின் அர்த்தம் இரு முறை உயிர் கொண்டவர்கள் என்பது. பறவைகள் போல. முட்டைக்குள் ஒரு உயிர், பின்னர் முட்டையை உடைத்து குஞ்சுகளாகும் போது இன்னொரு உயிர். பிராமணர்கள் தங்களுக்கு பூணூல் அணிய ஆரம்பிக்கும் முன்னர் ஒரு உயிர், அதன் பின்னர் இன்னொரு உயிர் என்று கருதுகின்றனர். ஆனாலும் இன்று இந்த அர்த்தம் மறைந்து, இது ஒரு இழி வழக்காக போய்விட்டது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

கருத்துக்களத்தில் தாராளமாக அரசியலை பற்றி எழுதுங்கள். அதைப்பற்றி எனக்கு எந்தக்கவலையுமில்லை. ஆனால் காலாகாலமாக சிங்களவனின் காலைக்கழுவி நக்கிப்பிழைக்கும் கூட்டத்திற்கு போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுத எந்த அருகதையுமில்லை! 

நான் யாரையும் கொச்சைப்படுத்தவில்லை. உண்மையையே எழுதினேன். நான் என்ன எழுத வேண்டுமென எனக்கு கட்டளையிட  உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. அரசியலில் எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களும் அல்ல. பொது மக்களை பாதித்த அரசியலை செய்யும் எவரது தவறுகளும் பொது வெளியில் விமர்சிக்கப்படலாம்.  சுட்டிக்காட்டப்படலாம் . எவரும் இதற்கு விதி விலக்கு இல்லை. இதுவே உலக வழமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜேய் நேற்று ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ பேசின‌ சிறு காணொளி......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

கருத்துக்களத்தில் தாராளமாக அரசியலை பற்றி எழுதுங்கள். அதைப்பற்றி எனக்கு எந்தக்கவலையுமில்லை. ஆனால் காலாகாலமாக சிங்களவனின் காலைக்கழுவி நக்கிப்பிழைக்கும் கூட்டத்திற்கு போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுத எந்த அருகதையுமில்லை! 

இது கொஞ்சம் விதிமீறலாக தெரிகிறதே தமிழன்? இதை நிர்வாகத்திடம் முறையிடுவதெல்லாம் பயனற்ற வேலை, ஆனால் "நக்கி, கால் கழுவி" என்பதெல்லாம் அப்படி இல்லாத ஒருவர நோக்கிச் சொல்லும் போது தனி மனித தாக்குதலாகும் அல்லவா?

இப்ப உதாரணமாக ஒருவர் உங்களை நோக்கி "இறுதிப் போருக்கு சேர்த்த காசை ஆட்டையப் போட்ட கூட்டம்"😎 என்று சுட்டினால் நீங்கள் அப்படியான ஒருவரில்லையானால் உங்களைத் தாக்குமல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

❤️...............

தனிமனித துதிகளாலும், குவிந்த அதிகார மையங்களாலும் உண்டாகும் நீண்டகால பாதக விளைவுகளை நன்றாகச் சொல்லியிருக்கின்றார் பேராசிரியர் ராஜன் குறை. 'மையங்களால் அழித்தல்' என்று சில மாதங்களின் முன் இன்னொரு கட்டுரை வேறு ஒருவரால் எழுதப்பட்டிருந்தது. அதை நான் இங்கு களத்தில் பகிர்ந்தும் இருந்தேன்.

சனி அன்று ஒரு வீட்டிற்கு போயிருந்தேன். முழுவதும் 'ஹெல்தி ஃபுட்'............... குடிக்கும் பானம் கூட எல்லாம் கலந்து உடனடியாக அடித்து எடுக்கப்பட்ட ஒன்று............ கொடுமையும், பசியும் தாங்காமல், திரும்பி வரும் வழியில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டேன்.

இது போலவே விஜய் கலந்து அடித்திருக்கின்றார். கொழும்பில் மனோ கணேசன் இதைப் போலவே பேசுவார். இந்தப் பேச்சுகளால் எதுவும் நடந்து விடப் போவதில்லை ஏனென்றால் இதில் எதுவும் புதிதே இல்லை. சமூக ஊடகங்கள், யூடியூப் போன்றன பொங்கும். ஆனால் சீமானுக்கு சமூக ஊடகங்களில் இதை விட அதிக வரவேற்பு நீண்ட காலமாக இருந்து வருகின்றதே.

மநீம இல் கமல் மட்டும் மேடையிலிருப்பார், இங்கு விஜய் மட்டும் இருப்பார். அடுத்த கட்டத்திற்கு இப்பொழுது கூடும் மக்கள் கூட்டத்தை நகர்த்தும் வல்லமை இவருக்கு இருக்கின்றதா என்பது பெரிய சந்தேகமே.

பொதுவாக ஈழத்தமிழர்களுக்கு திமுகவை பிடிக்காது. ஆதலால் இவர் திமுகவை விழுத்துவார் என்று விரும்பி, ஈழத்தமிழர்கள் அதை நோக்கி கருத்துகளை உண்டாக்குகின்றனர்.

தமிழ்நாட்டில் அதிமுக கொஞ்சம் அந்தரத்தில் இருக்கின்றது. அங்கிருந்து வரும் கருத்துகள் விஜய் அதிமுகவிற்கு மாற்றீடாக வருவதே நடக்கக் கூடும் என்கின்றன. 

உதயசூரியனுக்கும், இரட்டை இலைக்கும் வாக்குப் போட்டவர்கள் அப்படியே திரும்பி இரண்டு யானகளுக்கு வாக்குப் போடும் அளவிற்கு அங்கொன்றும் அதிருப்தி இருப்பது போலத் தெரியவில்லை. விஜய்யும் அப்படியான ஒரு மாற்று போலவும் இல்லை. ஊழலும், இலஞ்சமும் அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்கைகளுடனும் பின்னிப் பிணைந்தது, சினிமா நடிகர்கள் உட்பட. ஊழல் நீக்கம் என்பது அங்கு ஒரு பொருட்படுத்தக் கூடிய விசயமே இல்லை (இலங்கையில் அது ஒரு பெரிய விசயம்......).

**********************************

பெரியாரை பின்பற்றுபவர்கள் பிராமண ஆதிக்கம் பற்றி பேச வேண்டும் என்பது கட்டாயமே. ஆனால் அதை 'பார்ப்பனீயம் அல்லது பார்ப்பனர்கள் ஆதிக்கம்' என்று கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று ராஜன் குறை அவர்கள் சொல்லியிருப்பது சரி என்று தோன்றவில்லை. இந்தச் சொல் கிட்டத்தட்ட ஒரு 'இழி சொல்' ஆக இன்று மாறிவிட்டது. எங்களின் கருத்துகளை இழி சொற்களின் மூலம் தான் எடுத்து வைக்க வேண்டும் என்றில்லை.

** பார்ப்பனன் என்ற சொல்லின் அர்த்தம் இரு முறை உயிர் கொண்டவர்கள் என்பது. பறவைகள் போல. முட்டைக்குள் ஒரு உயிர், பின்னர் முட்டையை உடைத்து குஞ்சுகளாகும் போது இன்னொரு உயிர். பிராமணர்கள் தங்களுக்கு பூணூல் அணிய ஆரம்பிக்கும் முன்னர் ஒரு உயிர், அதன் பின்னர் இன்னொரு உயிர் என்று கருதுகின்றனர். ஆனாலும் இன்று இந்த அர்த்தம் மறைந்து, இது ஒரு இழி வழக்காக போய்விட்டது. 

குருநாதா

நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி தான்

இப்போது சோச‌ல் மீடியாக்க‌ளில் சீமானுக்கு இருந்த‌ ஆத‌ர‌வை போல் விஜேய்க்கும் இருக்கு

க‌ள‌ அர‌சிய‌லில் சீமானை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு விஜேய்க்கு இருக்குது

விஜேய் த‌னிய‌ நின்றால் வெற்றிய‌  அடைய‌ முடியாது

சீமான் . திருமாள‌வ‌ன் . வேல்முருக‌ன் இவ‌ர்க‌ள் விஜேய் கூட‌ 2026 கூட்ட‌னி வைச்சா திமுக்காவை வீட்டுக்கு அனுப்ப‌லாம்..........................

ஆம் நீங்க‌ள் சொல்வ‌து போல் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு திமுக்காவை பிடிக்காது......................அவ‌ங்க‌ள் குள்ள‌ ந‌ரிக் கூட்ட‌ம்..........................ஆட்சிக்கு வ‌ந்த‌தும் அராஜ‌க‌ம் அட்டூழிய‌ம் த‌ங்க‌ளுக்கு எதிரா சின்ன‌ மிம்ஸ் இணைய‌த்தில் போட்டால் கூட‌ கைது ப‌ண்ணி சிறையில் அடைப்ப‌து.....................த‌ங்க‌ளுக்கு வேண்ட‌ ப‌ட்ட‌வை ம‌ற்ற‌ க‌ட்சி த‌லைவ‌ர்க‌ளை எப்ப‌டியும் கேலியும் கிண்ட‌லும் செய்ய‌லாம்

திருட்டு ர‌யில் கூட்ட‌த்தை விம‌ர்சித்தால் சிறை.....................10ரூபாய் பாலாஜிய‌ சிறைக்குள் த‌ள்ளின‌தும் இவ‌ர்க‌ள் தான் அதே பாலாஜிக்கு தியாகி ப‌ட்ட‌ம் கொடுத்த‌தும் க‌ழிவிட‌ மாட‌ல் தான்........................பீஜேப்பி ம‌ற்றும் திமுக்கா இந்த‌ இர‌ண்டு க‌ட்சியையும் த‌மிழ் நாட்டில் இருந்து அக‌ற்ற வேண்டும் அல்ல‌து இவ‌ர்க‌ளை தேர்த‌லில் ப‌டு தோல்வி அடைய‌ செய்ய‌னும்

நாங்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்தால் நீட்ட‌ ர‌த்து செய்வோம் அதுக்கான‌ ர‌க‌சிய‌ம் எங்க‌ளிட‌ம் இருக்கு என்று உதவா நிதி சொன்னாரே செஞ்சாரா....................இப்ப‌டி தான் திமுக்கா ம‌க்க‌ளை ஏமாற்றி பிழைக்குது....................திமுக்கா ஓட்டுக்கு ப‌ண‌ம் கொடுத்து ம‌க்க‌ளின் ஓட்டை விலைக்கு வாங்குது....................காசு கொடுக்காம‌ க‌ழிவிட‌ மாட‌ல் அர‌சால் தேர்த‌ல‌ ச‌ந்திக்க‌ துணிவு இருக்கா😁.............................. 

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக வெற்றி கழக மாநாடு - வெற்றிக் கொள்கை திருவிழா

image

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் - தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஒன்றி தொடங்கினார். அக்கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி எனும் பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி. சாலை எனும் கிராமத்தில் வெற்றி கொள்கை திருவிழா எனும் பெயரில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.

மாநாடு மாலை நான்கு மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்  தொண்டர்கள் காலை 7:00 மணியில் இருந்து மாநாட்டு திடலில் திரண்ட ஆரம்பித்தனர். மதியம் ஒரு மணிக்குள் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் அவர்களின் பாதுகாப்பு கருதி, மாநாடு  மூன்று மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தமிழர்களின் பாரம்பரிய கலைகளான - கலை வடிவங்களான பறை இசை, ஒயிலாட்டம் ,மயிலாட்டம் ஆகியவற்றுடன் மாநாடு தொடங்கியது.

poli_281024_2.jpg

ஐந்து லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள் என எதிர்பார்த்து இருந்த நிலையில் எட்டு இலட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் திரண்டனர்.‌ மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டி வி.சாலையிலிருந்து விழுப்புரம் வரை ஏறத்தாழ ஆறு கி. மீ. அளவிற்கு நெடுஞ்சாலை முழுவதும் தொண்டர்கள் ஆக்கிரமித்திருந்தனர்.‌

மக்களுக்கான அரசியல் முன்னிலைப்படுத்துவோம் என கூறி தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில்  மாநாட்டு திடலில்  இந்திய சுதந்திரத்திற்காக போராடிய தமிழகத்தை சார்ந்த தியாகிகள்-   அவர்களின் கட் அட்டுகள் இடம் பிடித்திருந்தன.

அத்துடன் அண்ணல் அம்பேத்கர் - தந்தை பெரியார் - பெருந்தலைவர் காமராஜர் - வீரமங்கை வேலு நாச்சியார்- சமூக நீதி வீராங்கனை அஞ்சலை அம்மாள் ஆகிய ஐந்து தலைவர்களின் கட் அவுட்களும் இடம் பிடித்திருந்தன. இந்த ஐவரும் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைக்கான தலைவர்கள் என அக்கட்சியின் தலைவரான விஜய் அறிவித்தார்.

திட்டமிட்டபடி மாநாட்டு திடலுக்கு நடிகர் விஜய் நான்கு மணி அளவில் வருகை தந்தார். மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்ட அளவிலான நிர்வாகிகளுக்கும் வணக்கம் தெரிவித்த அவர் தொடர்ந்து மாநாட்டு திடலில் தொண்டர்களை பார்ப்பதற்காக விசேடமாக அமைக்கப்பட்டிருந்த உயர்மட்ட பாதையில் பயணித்து தொண்டர்களை நோக்கி கையசைத்து நன்றி தெரிவித்தார்.

இந்தத் தருணத்தில் தொண்டர்கள் அவரைக் கண்ட உற்சாகத்தில் தோளில் கிடந்த கட்சியின் துண்டை அவர் மீது வீச அதனை அவர் லாவகமாக கையால் பிடித்து தனது தோளில் அணிந்து கொண்டார். உடனே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இதனை பின்பற்ற அவற்றில் பல துண்டுகளை தன் கைகளால் எடுத்து தோளில் அணிந்து கொண்டார்.  அவரது இந்த செயல் தொண்டர்களிடையே உற்சாக வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து மாநாட்டு மேடையில் அலங்கரிக்கப்பட்டிருந்த தமிழகத்தை ஆண்ட மாமன்னர்கள் - சுதந்திரப் போராட்ட தியாகிகள் - தமிழ் மொழிக்காக உயிர்த்திறந்த வீரர்கள்  ஆகியோர்களின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் ராகுகாலம் நாலரை மணிக்கு தொடங்கி விடும் என்பதாலும் அவசரம் அவசரமாக ராகு காலத்திற்கு முன் அக்கட்சியின் கொடியை தலைவரான விஜய் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஏற்றினார்.

மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த 101 அடி உயர கட்சியின் கொடியை தலைவர் விஜய் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஏற்ற மெல்ல மெல்ல உயர்ந்து பறந்தது.

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பாடல் மாநாட்டில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சியின் கொள்கைகளும், செயல் திட்ட வரைவு அறிக்கையும் வாசிக்கப்பட்டது.

இதில் பல விடயங்கள் அனைவரது கவனத்தையும் கவர்ந்தன. அதிலும் குறிப்பாக

தமிழ் ஆட்சி மொழி - வழக்காடு மொழி - வழிபாட்டு மொழி

மதுரையில் தலைமை செயலகத்தின் கிளை அமைக்கப்படும்.

ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தல்.

பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு

வைகை நதி நாகரீகம் வெளிக்கொணர முன்னுரிமை

ஆவின் பால் நிறுவனம் கருப்பட்டி பால் விற்பனை

துப்புரவு தொழிலாளிகளுக்கு கைத்தறி ஆடை- அரசு ஊழியர்கள் மாதம் இருமுறை கைத்தறி ஆடை- அணிய பரிந்துரை

மாவட்டம் தோறும் காமராஜர் முன்மாதிரி பள்ளி

தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தனி பல்கலைக்கழகம்

ஆகியவற்றிற்கு தொண்டர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி. என். ஆனந்த், தலைவர் விஜய்க்கு வீரவாள் ஒன்றை பரிசாக அளித்தார்.

இதனைத் தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் தலைவர் விஜய்க்கு இந்திய அரசியல் சாசன புத்தகம் - ஸ்ரீ மத் பகவத் கீதை - திருக்குர்ஆன்- பைபிள் - ஆகியவற்றை பரிசாக வழங்கினர்.

பின்னர் விஜய் பேசத் தொடங்கினார்.

அவரது உரையில், '' நம் கொள்கைகளின் அடையாளமாக மாறியவர் பெரியார். ஆனால் அவர் சொன்ன கடவுள் மறுப்புக் கொள்கையை நாங்கள் கையில் எடுக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக பேரறிஞர் அண்ணா சொன்ன 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதுதான் நம் கொள்கை. நேர்மையான நிர்வாகத்தை தந்த காமராஜர் - அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கர் - வீராங்கனைகள் வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகிய ஐவர்கள் தான் நம் கொள்கை தலைவர்கள்.

பிளவுவாத சித்தாந்த அரசியலையும், எளிதில் கண்டறியாத புரையோடி போன ஊழல் மலிந்த கலாச்சாரத்தையும் ஒழிக்க வேண்டும். கரப்ஷன் கபடதாரிகள்- மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று கூறி மக்களை ஏமாற்றி தற்போது ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்க போவது பெண்கள் தான். மேலும் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே என் அரசியல் குறிக்கோள்.

பெண்கள் -குழந்தைகள் பாதுகாப்பு - கல்வி -மருத்துவம் - பாதுகாப்பான குடிநீர் - ஆகியவற்றில் கவனம் செலுத்துவது தான் நம் செயல்திட்டங்களில் முக்கியமானது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

2026 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நம்மை தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற வைப்பார்கள். மக்கள் தங்களுடைய ஒற்றை விரலால் அழுத்தம் வாக்குகள் நம் எதிரிகள் மீது ஜனநாயக ரீதியாக அணுகுண்டாக விழும். அதே தருணத்தில் நம் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு நம்முடன் வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு வழங்கப்படும். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்'' என்றார்.

மாநாட்டின் சிறப்பம்சங்கள்:

மாநாட்டு திடலில் மேடையில் கட்சியின் தலைவர் பொதுச்செயலாளர் - பொருளாளர் - தலைமை நிலைய செயலாளர்- கட்சி கொள்கை பரப்பு துணைச் செயலாளர் - என ஐந்து இருக்கைகள் மட்டுமே போடப்பட்டிருந்தன.

மாநாட்டிற்கு விஜயின் பெற்றோர்களான எஸ். ஏ.  சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் ஆகியோருடன் திரை உலகத்தைச் சார்ந்த நடிகர் ஸ்ரீமன் மற்றும் நடிகர் சௌந்தரராஜா ஆகிய இருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அவருடைய பேச்சு ஆக்ரோஷமாகவும், ஆவேசமாகவும்,  உணர்ச்சி பெருக்குடனும் இருந்ததாக ரசிகர்கள்- தொண்டர்கள் ஆரவாரத்துடன் தெரிவித்தனர். எம்ஜிஆர் - என்டிஆர் - ஆகியோரையும் மறவாமல் தன் பேச்சில் குறிப்பிட்டார் விஜய்.

https://www.virakesari.lk/article/197343

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

சேரும் கூட்டம் அத்தனையும் வாக்காகாது என்பது சிவாஜி, ரஜனி, கமல் என பலர் தமிழ் நாட்டில் காட்டிச் சென்றுள்ள அனுபவப்பாடம்.

ஆனால் எம் ஜி ஆர், விஜயகாந்த் என இதற்கு விதிவிலக்குகளும் உள்ளனர்.

விஜையும் ஒரு விதி விலக்காக அமைய வேண்டும் என்பது என் மனதார்ந்த அவா.

முன்பு யாழில் சீமானை நான் கடுமையாக விமர்சித்த போது - அவர் எப்படி பட்ட அரசியலை செய்தால் நீங்கள் வரவேற்பீர்கள் என பலர் அடிக்கடி கேட்டு, நான் பலதடவை எழுதிய பதில்….

மொழிவாரி பிரிப்புக்கு பின்,

திராவிட/பெரியாரிய கொள்கையின் தொடர்ச்சி = தமிழ் தேசியம் என சீமான் கூற வேண்டும்,

அனைவரையும் தமிழர்களாக ஏற்க்கும் வட்டத்தை பெருப்பிக்கும் அரசியல் செய்ய வேண்டும்…

குறிப்பிட்ட சில ஆதிக்க சாதியினரின் (தெலுங்கு வம்சாவழியினர் உட்பட்ட) அதிகாரத்தை மட்டுப்படுத்த, சாதிக் கணக்கெடுப்பை நடத்தில் அதன்படி ஒதுக்கீடு வழங்க கோரல் வேண்டும்.

உணர்ச்சி வயப்படுதல், அவதூறு பேசல் போன்ற அடாவடி அரசியலை கைவிட வேண்டும்…

இவ்வாறு நான் பட்டியல் இட்ட பலதை விஜை செயலில் கொண்டு வந்துள்ளார், கொள்கை விளக்கம் என்ற அடிப்படையிலாவது.

விஜை வெல்வாரா இல்லையா என்பதை விட, அவரின் கருத்துகள், கொள்கை பிரகடனம், அரசியல் செய்யப்போவதாக சொல்லும் முறை - மிக சரியாக இருக்கிறது.

கூட்டணியில் மட்டும் அல்ல, தனிப்பெரும்பான்மை கிடைத்தாலும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது எல்லாம் அரசியல் நகர்வின் அடுத்த கட்டம். நிச்சயம் திமுக கூட்டணியில் இருந்து திருமாவை கிளப்ப விஜை முயல்கிறார். முயற்சி வெற்றி பெற வேண்டும்.

அதே போல் பாரி வேந்தர், கம்யூனிஸ்ட், இன்னும் சிலரை இணைக்க முயலவேண்டும்.

மிக முக்கியமாக பிசிறு என சீமானால் கேவலப்படுத்த பட்டு உள்ளே குமைந்து கொண்டிருக்கும் காளி அம்மாள் போன்ற உத்வேகம் மிக்க தமிழ் தேசிய அரசியல்வாதிகளை சீமான் போன்ற போலிகளிடம் இருந்து விஜை தன்பக்கம் ஈர்க்க வேண்டும்.

விஜை செய்ய விழைவது தமிழ் தேசியத்தை தமிழ்நாட்டில் re branding செய்யும் முயற்சி.

திராவிட கொள்கை கருணாநிதி குடும்பத்திடமும், தமிழ் தேசியம் சின்ன கருணாநிதி சீமானிடம் சிக்கி கொண்டுள்ளன, இவை இரண்டையும் மீட்டு, காலத்துகேற்ப்ப புதுப்பித்து, நீக்க வேண்டியவை (கடவுள் மறுப்பு) நீக்கி, ஏலவே பல ஒற்றுமைகளை உடைய இரு தத்துவார்த்த வழிகளையும்  ஒன்றாக்கி பயணிக்க வேண்டியது தமிழ் நாட்டின் மீட்சிக்கு அத்தியாவசியமானது.

இந்த பெரும்பணியை விஜை என்ற தனிமனிதனால் செய்ய முடியாமல் போகலாம்….

அப்படி ஆககூடாது….

விஜை தன் முயற்சியில் வெல்ல வேண்டும் என்பது இயற்கையிடம் என் மன்றாட்டம்.

@goshan_che

என்ன கன காலம் காணவில்லை?

மேலே நீங்கள் எழுதிய ஒவ்வொரு சொல்லும் அர்த்தபுஷ்டி உள்ளது. நான் விஜய் வருகை குறித்து வைக்கப்படும் பல அரசியல் கருத்துக்களைப் பார்க்கிறேன். அதில் நீங்கள் சொன்னதுதான் 100 புள்ளிகள் பெறும். சிறப்பு!❤️

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வீரப் பையன்26 said:

க‌ப்ட‌னையும்

விஜேயையும் ஒன்றாக‌ பார்ப்ப‌து த‌வ‌று

க‌ப்ட‌ன் தானாக‌வே பொல்லை கொடுத்து அடி வாங்கினார்

அதை விஜேய் செய்ய‌ மாட்டார்

ம‌க்க‌ள் ப‌ணியில் க‌வ‌ண‌த்தை காட்டி ஊட‌க‌ ச‌ந்திப்பை குறைத்து.....................ம‌க்க‌ளுக்கு சொல்ல‌ வேண்டிய‌தை ஊட‌க‌ம் மூல‌ம் சொல்லி விட்டு அந்த‌ இட‌த்தை விட்டு ந‌க‌ர்ந்தால் போதும்

க‌ப்ட‌னை வீழ்த்தின‌ மாதிரி விஜேயை திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌த்தால் வீழ்த்த‌ முடியாது......................விஜேய் எல்லாத்தையும் ந‌ங்கு பார்த்து விட்டு தான் அர‌சிய‌லில் குதித்து இருக்கிறார்......................... திமுக்காவின் 200ரூபாய் இணைய‌ கைகூலிக‌ளுக்கு விஜேயின் ர‌சிக‌ர்க‌ளே ச‌ரியான‌ ம‌ருந்து கொடுப்பின‌ம்........................60வ‌ருட‌ ப‌ழைமை வாய்ந்த‌ க‌ட்சி த‌ங்க‌ளின் புக‌ழ் பாட‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள் மீது க‌ல் எறிய‌ 200ரூபாய் கொடுத்து செய்ய‌ வைக்கின‌ம் என்றால் இதை விட‌ அசிங்க‌ம் வேறு என்ன‌ இருக்கு.......................ப‌ண‌ ப‌ல‌ம் எப்போதும் எல்லாத்தையும் தீர்மானிக்காது என்ப‌தை இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் க‌ருணாநிதி குடும்ப‌ம் உன‌ருவின‌ம்.............................

நல்ல கருத்து. 

பொதுவெளியில் ஏற்க வரட்டு கெளரவம் விடாது என நினைக்கிறேன், ஆனால் கடந்த ஆறுமாத கால நிகழ்வுகள் நான் சொன்னது சிலதை உண்மை என உங்கள் உள்மனம் ஏற்க வைத்திருக்கும் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்துக்கு கொள்கைத் தெளிவு இருந்தாலும்?  அதை வெளியில் சொல்லிக்கொள்ளவில்லை. 

மக்களுக்கு நன்மை செய்வம் என்று தான் சொன்னார். 

தவிர சோ பேச்சைக் கேட்டு ஜெயலலிதா வுடன் போய் சேர்ந்ததால் தான் வீழ்ந்தார். 

 விஜய் அதில் மாறுப்பட்டு நிற்கிறார்.

கொள்கைத் தெளிவு  இங்கே உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பகிடி said:

க‌ப்ட‌னின் ஆலோச‌க‌ர் அவ‌ரை ச‌ரியாக‌ வ‌ழி ந‌ட‌த்த‌ வில்லை என்று தான் சொல்லுவேன்

தொட‌ர்ந்து க‌ப்ட‌னை ஊட‌க‌ம் முன்னாள் கோவ‌ப் ப‌டுத்தி பார்க்க‌ வைப்ப‌தே அப்ப‌ இருந்த‌ ஊட‌க‌ங்க‌ளுக்கு திமுக்கா கொடுத்த‌ அசைம‌ன்ட்

க‌ப்ட‌ன் சில‌ ஊட‌க‌ ச‌ந்திப்பை த‌விர்த்து இருக்க‌னும் அதோட‌ ஜெய‌ல‌லிதா கூட‌ ச‌ட்ட‌ ம‌ன்ற‌த்தில் நேருக்கு நேர் மோதி கொண்ட‌த‌ த‌விர்த்து இருக்க‌னும்.....................

ஆர‌ம்ப‌த்தில் ம‌க்க‌ளுட‌ன் தான் கூட்ட‌னி என்று சொன்ன‌ சொல்லை க‌ப்ட‌ன் த‌வ‌ற‌ விட்டு விட்டார்

அதோட‌ 2014 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பீஜேப்பி கூட‌ கூட்ட‌னி வைச்சு எல்லாத்தையும் இழ‌ந்தார்

2016 ம‌க்க‌ள் ந‌ல‌க் கூட்ட‌னியோடு க‌ப்ட‌னின் அர‌சிய‌ல் முடிந்து விட்ட‌து

க‌ட்சி தொட‌ங்கும் போது வெற்றிய‌ க‌ண்ட‌ க‌ப்ட‌ன் க‌ட‌சி கால‌த்தில் தோல்விக்கு மேல் தோல்வி

ஆனால் ந‌ல்ல‌ ம‌னித‌ர்🙏.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

க‌ள‌ அர‌சிய‌லில் சீமானை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு விஜேய்க்கு இருக்குது

விஜேய் த‌னிய‌ நின்றால் வெற்றிய‌  அடைய‌ முடியாது

சீமான் . திருமாள‌வ‌ன் . வேல்முருக‌ன் இவ‌ர்க‌ள் விஜேய் கூட‌ 2026 கூட்ட‌னி வைச்சா திமுக்காவை வீட்டுக்கு அனுப்ப‌லாம்..........................

👍............

பையன் சார், இந்தக் கணக்கு வெறும் உதிரிகளின் கணக்காகவே தெரிகின்றது. சீமான் எப்படியும் விஜய்யுடன் சேரமுடியாது, ஏனென்றால் விஜய் எல்லா 'இஸங்களையும்' ஒன்றாகக் கலந்து வைத்திருக்கின்றார் - அண்ணாயிஸம், அம்பேத்காரிஸம், பெரியாரிஸம், தமிழ் தேசியம், திராவிடம்........... சீமானோ தமிழ் தேசியம் மட்டுமே; அம்பேத்காரும் அண்ணாவும் பெரியாரும் அங்கே எதிரிகள், எடுபடாது.

தொல். திருமா விஜய்யுடன் சேர்ந்தால், மருத்துவர் ஐயா அதற்கு எதிர்ப் பக்கத்தில் சேர்வார். விசிகவும், பாமகவும் ஒன்றாக ஒரே இடத்தில் இருப்பது மிக அரிது. ஒருவருக்கு ஒருவர் குழி பறிப்பது அவர்களின் இருவரின் நோக்கங்களும். இந்த இருவரும் தங்களின் இனமக்கள் 20 வீதங்கள் இருக்கின்றார்கள் என்று கூறுகின்றனர், ஆனாலும் இவர்கள் இருவரும் எட்டு வீதங்கள் அளவிலேயே  வாக்குகளைப் பெறமுடியும்.

விஜய் அதிமுகவுடன் சேர்வது தான் அதிக வாக்குகளை கவர இப்போதிருக்கும் ஒரே வழி. ஆனாலும் எடப்பாடியார் கூட்டணித் தலைமையை விட்டுக் கொடுக்கமாட்டார். தலைமைப் பதவி இல்லாமால் விஜய் கூட்டணி ஒன்றில் சேர்ந்தால், வெறும் பதவிக்காக மட்டுமே அரசியலுக்கு வந்ததாக ஆகிவிடும் அல்லவா........... அதனால் முதலில் தனியே நின்று கள நிலவரத்தை கண்ட பின், கட்சியையும், தன்னையும் விஜய் மாற்றிக் கொள்வதே, வளர்ப்பதே சரியாக இருக்கும்.   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

நல்ல கருத்து. 

பொதுவெளியில் ஏற்க வரட்டு கெளரவம் விடாது என நினைக்கிறேன், ஆனால் கடந்த ஆறுமாத கால நிகழ்வுகள் நான் சொன்னது சிலதை உண்மை என உங்கள் உள்மனம் ஏற்க வைத்திருக்கும் என நம்புகிறேன்.

விஜேய் க‌டின‌மாய் வேர்வை சிந்தினால் முத‌ல்வ‌ர் ஆவ‌து உறுதி

ஏசி வீட்டுக்குள் இருந்து கொண்டு தேர்த‌ல் நேர‌ம் கொடிய‌ எடுத்து கொண்டு வ‌ந்தால் க‌ம‌ல‌ போல‌ விஜேயும் அர‌சிய‌லில் இருந்து காணாம‌ல் போவார்

என‌க்கு ந‌ம்பிக்கை இருக்கு விஜேய் ச‌ரியான‌ பாதையில் ப‌ய‌ணித்து அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தை பிடிப்பார் என்று

ம‌க்க‌ள் பிர‌ச்ச‌னைக்கு நேரில் போய் குர‌ல் கொடுக்க‌னும் த‌ன‌து தொண்ட‌ர்க‌ளை திர‌ட்டி பெரும் ஆர்பாட்ட‌ம் செய்ய‌னும்

அர‌சிய‌ல் இற‌ங்கினால் அவ‌தூறுக‌ள் ப‌ல‌ அசிங்க‌ங்க‌ளை தாங்கி கொள்ள‌னும் விஜேய் அத‌ற்க்கு த‌ன்னை த‌யார் ப‌டுத்துவார் என்று நினைக்கிறேன்..........................

வெளிப்ப‌டையா அறிவிக்க‌னும் திமுக்கா ஆதிமுக்கா க‌ட்சிக‌ள் போல் ஓட்டுக்கு ப‌ண‌ம் த‌ர‌ மாட்டேன் உங்க‌ளுக்கு ந‌ல் ஆட்சி த‌ருவேன் த‌ர‌மான‌ க‌ல்வி த‌ர‌மான‌ ம‌ருத்துவ‌ன்...................இப்ப‌டி ப‌ல‌ ந‌ல்ல‌துக‌ளை எடுத்து சொன்னால் விஜேய்யின் நேர்மைய‌ பார்த்து இன்னும் ப‌ல‌ ல‌ச்ச‌ ம‌க்க‌ள் ஓட்டு போடுவின‌ம்..........................ஊழ‌ல் க‌ர‌ம் ப‌டியாத‌ த‌மிழ‌ன் த‌மிழ் நாட்டை ஆண்டால் ம‌த்திய‌ அர‌சை பார்த்து ஒரு போதும் ப‌ய‌ப்பிட‌ தேவை இல்லை......................
நான் சீமானை ஆத‌ரித்தாலும் அதே நேர‌ம் விஜேயையும் ஆத‌ரிப்பேன்..........................ஈழ‌ த‌மிழ‌ருக்கு உண்மையும் நேர்மையுமா குர‌ல் கொடுக்கும் த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிய‌ முத‌ல‌மைச்ச‌ர் ஆக்க‌னும்................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரசோதரன் said:

👍............

பையன் சார், இந்தக் கணக்கு வெறும் உதிரிகளின் கணக்காகவே தெரிகின்றது. சீமான் எப்படியும் விஜய்யுடன் சேரமுடியாது, ஏனென்றால் விஜய் எல்லா 'இஸங்களையும்' ஒன்றாகக் கலந்து வைத்திருக்கின்றார் - அண்ணாயிஸம், அம்பேத்காரிஸம், பெரியாரிஸம், தமிழ் தேசியம், திராவிடம்........... சீமானோ தமிழ் தேசியம் மட்டுமே; அம்பேத்காரும் அண்ணாவும் பெரியாரும் அங்கே எதிரிகள், எடுபடாது.

தொல். திருமா விஜய்யுடன் சேர்ந்தால், மருத்துவர் ஐயா அதற்கு எதிர்ப் பக்கத்தில் சேர்வார். விசிகவும், பாமகவும் ஒன்றாக ஒரே இடத்தில் இருப்பது மிக அரிது. ஒருவருக்கு ஒருவர் குழி பறிப்பது அவர்களின் இருவரின் நோக்கங்களும். இந்த இருவரும் தங்களின் இனமக்கள் 20 வீதங்கள் இருக்கின்றார்கள் என்று கூறுகின்றனர், ஆனாலும் இவர்கள் இருவரும் எட்டு வீதங்கள் அளவிலேயே  வாக்குகளைப் பெறமுடியும்.

விஜய் அதிமுகவுடன் சேர்வது தான் அதிக வாக்குகளை கவர இப்போதிருக்கும் ஒரே வழி. ஆனாலும் எடப்பாடியார் கூட்டணித் தலைமையை விட்டுக் கொடுக்கமாட்டார். தலைமைப் பதவி இல்லாமால் விஜய் கூட்டணி ஒன்றில் சேர்ந்தால், வெறும் பதவிக்காக மட்டுமே அரசியலுக்கு வந்ததாக ஆகிவிடும் அல்லவா........... அதனால் முதலில் தனியே நின்று கள நிலவரத்தை கண்ட பின், கட்சியையும், தன்னையும் விஜய் மாற்றிக் கொள்வதே, வளர்ப்பதே சரியாக இருக்கும்.   

நாம் த‌மிழ‌ர் மேடைக‌ளில் பெரியாரின் ப‌ட‌ங்க‌ளை வைக்கின‌ம்

பெரியாரை வ‌ழிகாட்டியாக‌ ஏற்க்கிறோம் திராவிட‌ கொள்கை கிடையாது இது தான் அவ‌ர்க‌ளின் முடிவு................

2026 தேர்த‌லுக்கு இன்னும் ப‌ல‌ மாத‌ங்க‌ள் இருக்கு தானே பாப்போம் என்ன‌ ந‌ட‌க்குது என்று...................

நீங்க‌ள் சொல்வ‌தும் ச‌ரி தான்

திருமாள‌வ‌ன் இங்கை வ‌ந்தால் ம‌ருத்துவ‌ர் ஜ‌யா திமுக்கா ப‌க்க‌ம் போக‌ கூடும் அல்ல‌து தொட‌ர்ந்து பீஜேப்பி கூட்ட‌னியில் இருக்க‌ கூடும்

ஆதிமுக்கா என்ர‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் இருப்ப‌து போல் ம‌க்க‌ளுக்கு தெரிய‌ வில்லை

திமுக்கா எவ‌ள‌வோ குள‌றுப‌டிக‌ள் செய்யின‌ம் எதிர் க‌ட்சியா இருந்து கொண்டு ஜ‌யா ப‌ழ‌னிச்சாமி மெள‌வுன‌மாய் இருக்கிறார்

2026 தேர்த‌லுக்கு இவ‌ர் த‌யார் ஆன மாதிரி தெரிய‌ வில்லை குருநாதா...........................

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை யாழ்களத்தில் காண்பது மகிழ்ச்சி.

49 minutes ago, goshan_che said:

நல்ல கருத்து. 

17 மணித்தியாலங்களுக்கு முன்பு விஜேயால் கூட்ட‌னி இல்லாம‌ வெல்ல‌ முடியாது
விஜேய் அவ‌ர‌து ஓட்டு ச‌த‌வீத‌த்தை இன்னும் நிருபிக்க‌வில்லை சீமானுக்கு ஒவ்வொரு தேர்த‌லிலும் ஏறு முக‌ம். த‌லைவ‌ரை ஏற்ற‌வ‌ர்க‌ள் எப்ப‌வும் சீமான் பின்னால் தான் அவை விஜேய் பின்னால் போக‌ வாய்ப்பில்லை என்று சொன்ன உறவு வீரபையன்26   எட்டு மணித்தியாலங்களுக்கு  பின்பு மாறி க‌ப்ட‌னையும்  க‌ப்ட‌ன் தானாக‌வே பொல்லை கொடுத்து அடி வாங்கினார்  விஜேயையும் ஒன்றாக‌ பார்ப்ப‌து த‌வ‌று  க‌ப்ட‌னை வீழ்த்தின‌ மாதிரி விஜேயை திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌த்தால் வீழ்த்த‌ முடியாது .விஜேய் எல்லாத்தையும் ந‌ங்கு பார்த்து விட்டு தான் அர‌சிய‌லில் குதித்து இருக்கிறார் என்று கருத்து தெரிவிப்பது நல்ல ஒரு மாற்றம்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய்க்கு கூடிய கூட்டதை பற்றிய உள்ளவுத்துறை அறிக்கையில் இருக்கும் சில விடயங்கள் வெளியில் கசிய விடப்பட்டிருக்கின்றது. பாமகவும், விசிகவும் பதற்றப்பட வேண்டிய தகவல்கள் அவை.

கூடிய மூன்று இலட்சம் மக்களில் பெரும்பான்மையினர் வன்னிய மக்கள் அல்லது பட்டியலின மக்கள் என்பதே அந்தத் தகவல். மிகவும் அடித்தட்டு மக்கள் அவர்களின் சொந்தப் பணத்தை செலவழித்து பெரிய வாகனங்களை வாடகைக்கு எடுத்து கூட்டத்திற்கு வந்துள்ளார்கள் என்ற தகவலும் உள்ளது. மேலும் அதிமுகவின் கோட்டையாக இருக்கும் கொங்கு நாட்டில் இருந்து (சேலம், ஈரோடு,.........) ஏராளமானோர் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள்.

இதனால் தான் மருத்துவர் ஐயா நடிகர்களையும், சில நடிகர்களின் சினிமாக்களையும் என்றும் எதிர்க்கின்றார். விஜய்காந்திற்கு அதிகமாக வாக்குப் போட்டதும் அவரின் இனசனங்களே. ஏற்கனவே பாமக தேய்ந்து கட்டெறும்பு ஆகிக் கொண்டிருக்க, இப்பொழுது விஜய் அந்தக் கட்டெறும்பை காலால் நசுக்கி விடுவார் போல............ தொல். திருமாவும் பதறத் தான் வேண்டும். 

வந்திருந்தவர்களில் 90 வீதமானவர்கள் 35 வயதுக்கு கீழே உள்ளவர்கள் என்ற தகவல் எதிர்பார்த்தது தான். இந்த வயதுக்கு கீழே உள்ளவர்களை அப்படியே வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்வது மிகப் பெரிய, மிகக் கஷ்டமான ஒரு வேலை...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

பசியும் தாங்காமல், திரும்பி வரும் வழியில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டேன்.

இது போலவே விஜய் கலந்து அடித்திருக்கின்றார்.

🤣

3 hours ago, ரசோதரன் said:

கொழும்பில் மனோ கணேசன் இதைப் போலவே பேசுவார். இந்தப் பேச்சுகளால் எதுவும் நடந்து விடப் போவதில்லை ஏனென்றால் இதில் எதுவும் புதிதே இல்லை.

மனோ கணேசன் பேசும் வீடியோ ஒன்று அனுப்பி இருந்தார்கள் பார்த்தேன் விளங்கவே இல்லை ஆனால் அவர் பேசும் முறை   நகைசுவை படம் பார்ப்பது போன்று இரசிக்கதக்கதாக இருந்தது.-

3 hours ago, ரசோதரன் said:

பொதுவாக ஈழத்தமிழர்களுக்கு திமுகவை பிடிக்காது. ஆதலால் இவர் திமுகவை விழுத்துவார் என்று விரும்பி, ஈழத்தமிழர்கள் அதை நோக்கி கருத்துகளை உண்டாக்குகின்றனர்.

இப்போ ஈழத்தமிழர்களுக்கு சிறிலங்கா ஒற்றை ஆட்சி தலைவர் அனுரகுமார திசநாயக்கவை பிடிக்கும் என்பது புதிய மாற்றம் 😄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உங்களை யாழ்களத்தில் காண்பது மகிழ்ச்சி.

17 மணித்தியாலங்களுக்கு முன்பு விஜேயால் கூட்ட‌னி இல்லாம‌ வெல்ல‌ முடியாது
விஜேய் அவ‌ர‌து ஓட்டு ச‌த‌வீத‌த்தை இன்னும் நிருபிக்க‌வில்லை சீமானுக்கு ஒவ்வொரு தேர்த‌லிலும் ஏறு முக‌ம். த‌லைவ‌ரை ஏற்ற‌வ‌ர்க‌ள் எப்ப‌வும் சீமான் பின்னால் தான் அவை விஜேய் பின்னால் போக‌ வாய்ப்பில்லை என்று சொன்ன உறவு வீரபையன்26   எட்டு மணித்தியாலங்களுக்கு  பின்பு மாறி க‌ப்ட‌னையும்  க‌ப்ட‌ன் தானாக‌வே பொல்லை கொடுத்து அடி வாங்கினார்  விஜேயையும் ஒன்றாக‌ பார்ப்ப‌து த‌வ‌று  க‌ப்ட‌னை வீழ்த்தின‌ மாதிரி விஜேயை திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌த்தால் வீழ்த்த‌ முடியாது .விஜேய் எல்லாத்தையும் ந‌ங்கு பார்த்து விட்டு தான் அர‌சிய‌லில் குதித்து இருக்கிறார் என்று கருத்து தெரிவிப்பது நல்ல ஒரு மாற்றம்

உற‌வே சில‌ உண்மைக‌ளை சொல்லித் தான் ஆக‌னும்

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் ஓட்டு ச‌த‌ வீத‌ம் ஒவ்வொரு தேர்த‌லிலும் கூடி கொண்டு தான் போகுது

விஜேய் த‌ன‌து ஓட்டு ச‌த‌வீத‌த்தை இன்னும் நிரூபிக்க‌ வில்லை . ஆனால் சீமானை விட‌ விஜேய்க்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு கூட‌ என்ப‌து உங்க‌ளுக்கும் தெரியும்

நான் முன்னுக்கு பின் முர‌னாக‌ எழுத‌ வில்லை.....................

உண்மையை தான் எழுதினேன்

2026க‌ளில் சீமானுக்கு ஓட்டு கூட‌லாம் சில‌து குறைய‌லாம் தேர்த‌ல் முடிவுக‌ள் மூல‌ம் தெரியும்......................

விஜேன்ட‌ அப்பா ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌லே சொன்னவ‌ர் த‌ன‌து ம‌க‌ன் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் ம‌ரும‌க‌ன் என்று.............................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உங்களை யாழ்களத்தில் காண்பது மகிழ்ச்சி.

17 மணித்தியாலங்களுக்கு முன்பு விஜேயால் கூட்ட‌னி இல்லாம‌ வெல்ல‌ முடியாது
விஜேய் அவ‌ர‌து ஓட்டு ச‌த‌வீத‌த்தை இன்னும் நிருபிக்க‌வில்லை சீமானுக்கு ஒவ்வொரு தேர்த‌லிலும் ஏறு முக‌ம். த‌லைவ‌ரை ஏற்ற‌வ‌ர்க‌ள் எப்ப‌வும் சீமான் பின்னால் தான் அவை விஜேய் பின்னால் போக‌ வாய்ப்பில்லை என்று சொன்ன உறவு வீரபையன்26   எட்டு மணித்தியாலங்களுக்கு  பின்பு மாறி க‌ப்ட‌னையும்  க‌ப்ட‌ன் தானாக‌வே பொல்லை கொடுத்து அடி வாங்கினார்  விஜேயையும் ஒன்றாக‌ பார்ப்ப‌து த‌வ‌று  க‌ப்ட‌னை வீழ்த்தின‌ மாதிரி விஜேயை திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌த்தால் வீழ்த்த‌ முடியாது .விஜேய் எல்லாத்தையும் ந‌ங்கு பார்த்து விட்டு தான் அர‌சிய‌லில் குதித்து இருக்கிறார் என்று கருத்து தெரிவிப்பது நல்ல ஒரு மாற்றம்

பிராபாக‌ர‌னை த‌லைவ‌ராய் ஏற்ற‌ இளைஞ‌ர்க‌ள் விஜேய் பின்னால் போக‌ மாட்டின‌ம்

த‌மிழ‌க‌ அர‌சிய‌லை வ‌டிவாய் உத்து க‌வ‌ணியுங்கோ அப்ப‌ புரியும் நான் சொல்லுற‌து.....................

சீமானை விட‌ அர‌சிய‌லில் விஜேய் வ‌ள‌ந்தாலும் நான் பொறாமை ப‌ட‌ போவ‌து கிடையாது ந‌ல் ம‌ன‌தோடு வாழ்த்துவேன்........................ நான் கீழ‌ எழுதின‌ சில‌ க‌ருத்துக்க‌ளை நீங்க‌ள் வாசிக்க‌ வில்லை போல் தெரிகிற‌து..................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, island said:

இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து திரும்பியபோது  மபொசி வலிந்து  சென்னைத்துறைமுகம் சென்று அவர்களை வாஞ்சையுடன் வரவேற்றார். 

ஆதாரம்?

Copilot  இடம் கேள்வி : Did Ma.Po.Si. welcome Indian peace keeping force when it returned?

விடை: I couldn't find any specific information about M. P. Sivagnanam (Ma.Po.Si.) welcoming the Indian Peace Keeping Force (IPKF) upon its return.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரசோதரன் said:

விஜய்க்கு கூடிய கூட்டதை பற்றிய உள்ளவுத்துறை அறிக்கையில் இருக்கும் சில விடயங்கள் வெளியில் கசிய விடப்பட்டிருக்கின்றது. பாமகவும், விசிகவும் பதற்றப்பட வேண்டிய தகவல்கள் அவை.

கூடிய மூன்று இலட்சம் மக்களில் பெரும்பான்மையினர் வன்னிய மக்கள் அல்லது பட்டியலின மக்கள் என்பதே அந்தத் தகவல். மிகவும் அடித்தட்டு மக்கள் அவர்களின் சொந்தப் பணத்தை செலவழித்து பெரிய வாகனங்களை வாடகைக்கு எடுத்து கூட்டத்திற்கு வந்துள்ளார்கள் என்ற தகவலும் உள்ளது. மேலும் அதிமுகவின் கோட்டையாக இருக்கும் கொங்கு நாட்டில் இருந்து (சேலம், ஈரோடு,.........) ஏராளமானோர் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள்.

இதனால் தான் மருத்துவர் ஐயா நடிகர்களையும், சில நடிகர்களின் சினிமாக்களையும் என்றும் எதிர்க்கின்றார். விஜய்காந்திற்கு அதிகமாக வாக்குப் போட்டதும் அவரின் இனசனங்களே. ஏற்கனவே பாமக தேய்ந்து கட்டெறும்பு ஆகிக் கொண்டிருக்க, இப்பொழுது விஜய் அந்தக் கட்டெறும்பை காலால் நசுக்கி விடுவார் போல............ தொல். திருமாவும் பதறத் தான் வேண்டும். 

வந்திருந்தவர்களில் 90 வீதமானவர்கள் 35 வயதுக்கு கீழே உள்ளவர்கள் என்ற தகவல் எதிர்பார்த்தது தான். இந்த வயதுக்கு கீழே உள்ளவர்களை அப்படியே வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்வது மிகப் பெரிய, மிகக் கஷ்டமான ஒரு வேலை...............

உந்த‌ உள‌வுத்துறை ரிப்போட் எல்லாம் க‌ட‌ந்த‌ கால‌த்தில் பொய்த்து குருநாதா😒.......................

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம்…டிரம்ப் வெல்ல உதவும் குணங்களில் இதுவும் ஒன்று. தனக்கு தேவை என்றால் பழசை மறந்து விடுவார். தற்போதைய பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் 2018 இல் டிரம்பை தூக்கி போட்டு மிதித்துள்ளார். ஆனால் அவர் பதவிக்கு வந்ததுமே, டிரம்ப் வெல்ல கூடும் என ஊகித்து, அமெரிக்கா போய், வான்சை சந்தித்து, அவர் மூலம் டிரம்பை ஷேப் பண்ணி விட்டார். ——— @குமாரசாமி @Kandiah57 @தமிழ் சிறி ஜேர்மன் நிதியமைச்சரை தூக்கி அடித்து கூட்டணியை உடைத்துள்ளார் சான்சிலர். தேர்தல் மேகம்கள் சூழுதோ? நேற்றுதான் குசா அண்ணை தேர்தல் வரும் எண்ட மாரி எழுதினவர்.
    • தடித்த குடியரசு பெண்மணி ஒருவர் கமலா ஜனாதிபதியானால் வெள்ளைமாளிகை முழுவதும் கறி மணமாகவே இருக்கும் என்றார். உஷாவின் மாளிகையில் எப்படி மணக்கும். இது சாதாரண வார்த்தைகள் இல்லை.   இதற்கு முன்னர் ரம்பை கிழிகிழி என்று கிழித்தார்.
    • சொத்து யாரது எண்டு சொல்லுங்கோ… கள்ள உறுதி முடிக்கிறம்… விக்கிறம்…🤣 இதென்ன என்ர உன்ர எண்டு பிரிச்சு பேசிகொண்டு. அப்படியா நாம் பழகிறோம்🤣
    • வேன்ஸ் இன் பின்புலம் மிக சுவாரசியமானது.  சிற்ரூரில் வாழ்க்கை, உழைக்கும் வர்க்க பின்புலம், இராணுவ உத்தியோகம், வெள்ளையினமல்லாத மனைவி என பல விடயங்களில் டிரம்புக்கு எதிரான வாழ்க்கை. மேலே பகிடி சொன்ன உழைக்கும், நடுத்தர மக்கள் ஏன், எப்படி வலது சிந்தனையால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆனால் டிரம்ப்பை போலவே ஆளும் உளறுவாயன். டிரம்பை விட லூசுதனமாக மேடைகளில் பேசுவார். மைக் பென்ஸ் போல காலம்தாழ்த்தியாவது டிரம்பை எதிர்க்க கூட மாட்டார் என நினைக்கிறேன். டிரம்ப்பின் நாலு வருடத்தின் பின் டிரம்ப்பின் அரசியல் பிராண்டுக்கு வாரிசு இவரா இல்லை டிரம்பின் மகளா என்பதில் லடாய் ஆரம்பிக்கலாம்.
    • விற்கும் காசுகள் உங்களுக்கு வாராது   அவர் தனது வங்கி கணக்கில் வைப்பிலிடுவார்.  .....சம்மதமா  ??? 🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.