Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, விசுகு said:

அண்ணா 

இந்த பைத்தியம் வென்றதில் ஒரே ஒரு நிம்மதியான விடயம் இரண்டு பைத்தியங்களும் நண்பர்கள் என்பதால் பட்டினை அமுக்குவேன் என்று இனி பயமுறுத்த மாட்டார்கள். 

ஊரும் உலகமும் அமைதியாக இருப்பது சிலருக்கு பிடிப்பதில்லை. 😎

  • Replies 174
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

ட்ரம்ப், புரின் லவ்வர்ஸ் மகிழ்ச்சிக் களிப்பில் இருக்கிறார்களெனத் தெரிகிறது😎. யாரோ இங்கே சுட்டியது போல போலந்து வீழந்தால், இவையள் அனேகமாக நான் முன்னரே ஒரு தடவை குறிப்பிட்டது போல Ramstein Airbase இற்கு ஷ

vasee

நிச்சயமாக இது நடக்காது, இந்த போரில் உக்கிரேன் வெறும் அம்பு மட்டுமே, அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் தொழில்முனைவர்கள், சமூக ஆர்வலர்களினை குறிவைத்து சமாதானம் எனும் தொணிபட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தால

குமாரசாமி

பொய்யான அரசியல் என்றுமே நிலைப்பதில்லை என்பதற்கு இந்த அமெரிக்க தேர்தல் நல்ல உதாரணம். இது போல் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் மாற்றங்கள் வரும் என நம்பலாம். கேடு கெட்ட உக்ரேன் ஊத்தை அரசியல் இனியும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ட்ரம்ப், புரின் லவ்வர்ஸ் மகிழ்ச்சிக் களிப்பில் இருக்கிறார்களெனத் தெரிகிறது😎. யாரோ இங்கே சுட்டியது போல போலந்து வீழந்தால், இவையள் அனேகமாக நான் முன்னரே ஒரு தடவை குறிப்பிட்டது போல Ramstein Airbase இற்கு ஷொப்பிங் பையோடு போனால் C-17 விமானத்தில் அத்திலாந்திக்கைத் தாண்டி வட அமெரிக்கா வந்து விடலாம். பிறகு இங்கால இருந்து "சீ..இதெல்லாம் ஒரு நாடோ?" என்று புதிதாக ஆரம்பிப்பினம் என நம்புகிறேன்😂.


சீரியசாகப் பார்த்தால்:

KFC க்கு வாக்குப் போட்ட கோழிகள் நிலை தான்.

ட்ரம்பும், வான்சும் அன்றாடம் போட்டுத் தாக்கிய இனக்குழுக்கள் பல்வேறு காரணங்கள் சொல்லி ஒன்று வாக்களிக்காமல் விட்டிருக்கிறார்கள், அல்லது டரம்புக்கே வாக்களித்திருக்கிறார்கள். உதாரணமாக, 20 வருடங்களாக முழு நீலமாக இருந்த என் மாநிலம் (கமலா வென்றாலும்) பெருவாரியாக ட்ரம்புக்கு வாக்களித்திருக்கிறது. வாக்களித்தது யார் என்று பார்த்தால் ஸ்பானிய அடி அமெரிக்கக் குடிகள். அனேகமாக, மெக்சிக்கரையும், ஏனைய ஸ்பானிய குடியேறிகளையும் ட்ரம்ப் அள்ளு கொள்ளையாக நாடுக் கடத்தும் போது இவையள் மகிழ்வினம் என நம்புகிறேன்.

அதே போல, கறுப்பின மக்களில் ஆண்கள் கமலாவுக்கு அவ்வளவு வாக்களிக்கவில்லை. ஏன்? "பெண் எங்களை ஆள்வதா?" என்ற மேலாதிக்க மனநிலை. அத்தோடு "சட்ட விரோதக் குடியேறிகள் உங்கள் தொழில்களைப் பறிக்கீனம்" என்று ட்ரம்ப் சொல்ல நம்பி விட்டார்கள். பகிடி என்னவென்றால் இதை நம்பிய பலர் வேலை வாய்ப்புகள் இருந்தும் வேலைக்குப் போய் உழைக்காமல் தெருமுனையில் நின்று ஈயோட்டிய "குடி மக்கள்"😎.

அடுத்த பகிடி: அரபு அமெரிக்கர்கள். "ட்ரம்ப் சமாதானம் தருவார்" என்று நம்பியதாக வெளியே சொல்லிக் கொண்டு தான் இவர்கள் ட்ரம்பை நோக்கிச் சாய்ந்தார்கள். ஆனால், இவர்களின் உண்மையான காரணம், பெண் வெறுப்பு வாதம், ஒரு பால் உறவு, இடைப்பாலினர் மீதான வெறுப்பு என்பதாக இருக்கிறது. மோடி வாலா இந்திய அமெரிக்கர்களும், பலஸ்தீன/அரபு அமெரிக்கர்களும் ட்ரம்போடு ஒரே கட்டிலில்: The strangest bedfellows!

தென்னிந்திய/சிறிலங்கா வழி அமெரிக்கர்களின் இலக்கோ பங்கு மார்க்கெட்டில் இப்போது வருவதை விட இன்னும் இலாபம் வர வேண்டும், அதை வைத்துக் கொண்டு ஊர் சுற்றுலா, ரெஸ்லா, மான்ஷன் வீடு என்று ஜாலியாக இருக்க வேண்டும் என்பதாக எனக்குப் புரிகிறது. வீட்டில் இருக்கும் பெண்  பிள்ளைகள், மனைவி, தங்களுடைய மண்ணிறத் தோல் கொண்ட வம்சாவழியினருக்கு, தாம் இறந்த பிறகும் நீடித்திருக்கும் ஆப்பை உருவாக்கியிருக்கிறோம் என்பது புரியாமலே ட்ரம்பை ஆதரித்திருக்கிறார்கள்.   

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, Kandiah57 said:

முடியாது இவர் ரம்ப்.  இங்கே இருந்து அனுப்பிய விதையில்.  முளைத்தவர். தான்   .....முன்பும் நாலு வருடங்களாக கத்தி கொண்டு திரிந்தவர். தான்  

அமெரிக்கா ரஷ்யா பிரான்ஸ் பிரித்தானியா   போன்ற நாடுகள் ஒற்றுமையாக  பல வருடங்களாக ஜேர்மனியை பங்கு போட்டு   இருந்தும்   ஜேர்மன் கம்பீராமாகத் தான் 28. நாடுகள் கொண்ட ஐரோப்பா கூட்டணிக்கு தலைமையும் ஆலோசனையும் வழங்கியுள்ளது வழங்கி வருகிறது 

ஜேர்மனியின் இன்றைய பொருளாதார வீழ்ச்சியை பற்றி தெரியாத ஒருவரின் கருத்து இது.

தற்போதைய கூட்டு அரசியலின் கருத்து வேறுபாடு கொள்கை வேறுபாடுகளால் அரசு தள்ளாடிக்கொண்டிருக்கின்றது எனும் விடயம் தெரியாமல் கருத்து எழுதிக்கொண்டிருக்கின்றார்.

அது மட்டுமில்லாமல் இன்றைய ஜேர்மனி அதள பாதாளத்திற்கு தள்ளப்பட்டு விட்டது.
அன்றிலிருந்து ஓடிய வேகத்தை வைத்து இன்றும் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆட்டம் முடிய...... கதை கந்தல். உலக பெரும் கார் உற்பத்தி நிறுவனங்கள் வங்குரோத்து நிலையை எட்டுகின்றன.கார் உற்பத்தி நிறுவனங்கள் சார்பான ஏனைய நிறுவனங்களும் பணியாளர் குறைப்பை தீவிரப்படுத்துகின்றன.


அதை விட பல நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றன. அல்லது திவாலாகி விட்டோம் என அறிக்கை விட்டு தப்பித்துக்கொள்கின்றன.

இதெல்லாம் தெரியாமல்.....?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கறுப்பினத்தவர்,வேறு இனத்தவர் அதிகமாக வாழும் மாகாணமான georgia வில் என்றுமில்லாதவாறு அங்குள்ள கறுப்பின மக்கள்,பொது சேவையினர்  யாருக்கென்று குறிப்பிடாமல் எல்லா மக்களையும் வீதியோரங்களில் பதாதைகளை தூக்கிக்கொண்டு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர்.ஆனால் கமலாவிற்கு வாக்களியுங்கள் என பிரச்சாரம் செய்யவில்லை.😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனியின் இன்றைய பொருளாதார வீழ்ச்சியை பற்றி தெரியாத ஒருவரின் கருத்து இது.

தற்போதைய கூட்டு அரசியலின் கருத்து வேறுபாடு கொள்கை வேறுபாடுகளால் அரசு தள்ளாடிக்கொண்டிருக்கின்றது எனும் விடயம் தெரியாமல் கருத்து எழுதிக்கொண்டிருக்கின்றார்.

அது மட்டுமில்லாமல் இன்றைய ஜேர்மனி அதள பாதாளத்திற்கு தள்ளப்பட்டு விட்டது.
அன்றிலிருந்து ஓடிய வேகத்தை வைத்து இன்றும் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆட்டம் முடிய...... கதை கந்தல். உலக பெரும் கார் உற்பத்தி நிறுவனங்கள் வங்குரோத்து நிலையை எட்டுகின்றன.கார் உற்பத்தி நிறுவனங்கள் சார்பான ஏனைய நிறுவனங்களும் பணியாளர் குறைப்பை தீவிரப்படுத்துகின்றன.


அதை விட பல நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றன. அல்லது திவாலாகி விட்டோம் என அறிக்கை விட்டு தப்பித்துக்கொள்கின்றன.

இதெல்லாம் தெரியாமல்.....?

தெரியும்    2005   இல்  நான் வேலை செய்த நிறுவனம் பூட்டப்பட்டது   வேலை செய்த எல்லோரும் பணம் கொடுக்கப்பட்டது   பிறகு என்னாட என்றால்   

2015. எனது இடத்தில்  அதேபோல நிறுவனத்தை வேண்டி விட்டார்கள்     என்ன காரணம்???  

9 நாடுகளில் கிளைகளுண்டு 

25. முதலாளிமார்.   

இப்படி பூட்டி    பிறகு திறப்பது  மூலம் சம்பாதிக்க முடியுமா????  பூட்டுவதற்க்கு காரணம் சம்பள உயர்வு   

அது சரி   இந்த விபரங்கள் எப்படி தெரியும்???  

அந்த பொய் ஊடகங்கள் மூலமாகவே !

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, goshan_che said:

1. அமெரிக்காவால் செலன்ஸ்கியும் உக்ரேனும் கை கழுவப்படுவார்கள்.

நிச்சயமாக இது நடக்காது, இந்த போரில் உக்கிரேன் வெறும் அம்பு மட்டுமே, அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் தொழில்முனைவர்கள், சமூக ஆர்வலர்களினை குறிவைத்து சமாதானம் எனும் தொணிபட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், இரண்டு அதிகாரங்களுக்கிடையான போரில் அமெரிக்கா தனது நிலையினை தக்க வைக்க செய்யும் பிரயத்தனமே இந்த போர், ஆனால் இனி வரும் காலங்களில் அமெரிக்காவினது போரிற்காக ஐரோப்பா அதன் செலவினை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் அவ்வளவுதான் வித்தியாசம் போர் தொடரும் நிலையே காணப்படும் (அந்த செலவினை அமெரிக்கா ஐரோப்பாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும்.).

உக்கிரேன், இரஸ்சியா போரினால் அழிவடையும் நிலை தொடரும், உலகம் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நிலையும் தொடரும்.

 

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kandiah57 said:

தெரியும்    2005   இல்  நான் வேலை செய்த நிறுவனம் பூட்டப்பட்டது   வேலை செய்த எல்லோரும் பணம் கொடுக்கப்பட்டது   பிறகு என்னாட என்றால்   

2015. எனது இடத்தில்  அதேபோல நிறுவனத்தை வேண்டி விட்டார்கள்     என்ன காரணம்???  

9 நாடுகளில் கிளைகளுண்டு 

25. முதலாளிமார்.   

இப்படி பூட்டி    பிறகு திறப்பது  மூலம் சம்பாதிக்க முடியுமா????  பூட்டுவதற்க்கு காரணம் சம்பள உயர்வு   

அது சரி   இந்த விபரங்கள் எப்படி தெரியும்???  

அந்த பொய் ஊடகங்கள் மூலமாகவே !

ஜேர்மனியில் இதே போல் பல கொம்பனிகள் மூடப்பட்டுக்கொண்டு வருகின்றது. ஆனால்  ஊடகங்கள் இதை சொல்லாமல் உக்ரேன் செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஏனையவற்றை இருட்டடிப்பு செய்கின்றார்கள். இதன் பலன் இன்றைய அரசு கவுழும் தறுவாயில் உள்ளது.
இது எல்லாவற்றுக்கும் காரணம் உக்ரேனுக்கு ஆதரவளிக்கின்றோம் என சொல்லிக்கொண்டு ரஷ்யாவின் வியாபார தொடர்புகளை துண்டித்தது.

7 minutes ago, vasee said:

வரும் காலங்களில் அமெரிக்காவினது போரிற்காக ஐரோப்பா அதன் செலவினை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் அவ்வளவுதான் வித்தியாசம் போர் தொடரும் நிலையே காணப்படும் (அந்த செலவினை அமெரிக்கா ஐரோப்பாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும்.).

கடந்த ஒரு வருடமாக உக்ரேனுக்கான அமெரிக்காவின் போர் செலவினை ஐரோப்பிய ஒன்றியமும் ஜேர்மனியும்  தான் தாங்கிக்கொண்டு நிற்கின்றன என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, விசுகு said:

மரத்தில் இருந்தபடி மரத்தை தறிக்கும் வேலையை நான் ஒரு  போதும் செய்வதில்லை. இவருடைய வெற்றி விரைவில் வேகமாக நாம் வாழும் நாடுகளுக்கும் பரவும்.

இந்த வெற்றி தந்திரம் ஏற்கனவே சிறிலங்காவில் உண்டு.😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்கா ஜனாதிபதியாக ஒரு பெண்கை அமெரிக்க மக்கள் விரு;பவில்லை. என்பது ஹிலாரி கிளின்டன் >கமலா ஹாரிஸ் ஆகியோரின் தோல்வியில் இருந்து தெரிகிறது. அதிகமான பெண்களின் வாக்குகள் ட்ரம்புக்குத்தான் போடப்பட்டுள்ளன..பெண்hள் அதிகாரத்துக்கு வருவதை இலங்கை இந்தியா போனற நாடுகளில்பல முறை பார்த்தாகி விட்டது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

போலந்து வீழும் போதுதான் பல ஜேர்மன் அண்ணைமாருக்கு செலன்ஸ்கி, உக்ரேன், கோஷானின் அருமை புரியும் 🤣

ரஷ்யாவால் உக்ரேனை கைப்பற்ற முடியவில்லை என  ஒரு பக்கம் வீர வசனம் பேசிக்கொண்டு.....
மறு பக்கம் ஐரோப்பிய ஒன்றிய நேட்டோ நாடான போலந்து விழும் என எழுதுவது எனக்கு விளங்கிக்கொள்ள  கொஞ்சம் தர்ம சங்கடமாக இருக்கின்றது. :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டிரம்ப் என்ன செய்வார், செய்ய முடியும்  என்பதை விட,  பொருளாதாரத்தில் டிரம்ப் சொல்லுவதை  பொதுக செய்ய முடியாது.

வீடியோ கிட்டத்தட்ட சரி. பாதிக்கும் வீதங்கள் மாறுபடலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, vasee said:

நிச்சயமாக இது நடக்காது, இந்த போரில் உக்கிரேன் வெறும் அம்பு மட்டுமே, அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் தொழில்முனைவர்கள், சமூக ஆர்வலர்களினை குறிவைத்து சமாதானம் எனும் தொணிபட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், இரண்டு அதிகாரங்களுக்கிடையான போரில் அமெரிக்கா தனது நிலையினை தக்க வைக்க செய்யும் பிரயத்தனமே இந்த போர், ஆனால் இனி வரும் காலங்களில் அமெரிக்காவினது போரிற்காக ஐரோப்பா அதன் செலவினை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் அவ்வளவுதான் வித்தியாசம் போர் தொடரும் நிலையே காணப்படும் (அந்த செலவினை அமெரிக்கா ஐரோப்பாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும்.).

உக்கிரேன், இரஸ்சியா போரினால் அழிவடையும் நிலை தொடரும், உலகம் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நிலையும் தொடரும்.

 

இருக்கலாம்.

எனக்கு ஒரு பார்வை. உங்களுக்கு ஒரு பார்வை.

யாரினது பார்வை சரியாக வருகிறது அவர் அப்போது வந்து நான் சொன்னபடி நடந்து என சொல்லலாம்.

மற்றவர் பதுங்கி விடலாம். அல்லது…

நானா? அப்படியா சொன்னேன்? ஆதாரம் இருக்கா என கேட்கலாம்🤣.

எவரிடம் கால இயந்திரம் இல்லாத போது, அவரவர் தன் தரவுக்கு ஏற்ப சொல்லும் கருத்துத்தானே சகலதும்.

ஆனால் உக்ரேனில் - இப்போ இருக்கும் எல்லையோடு ஒரு போர் தவிர்ப்பை, கொரியாவில் இருப்பது போல, கொண்டு வர டிரம்ப் பிரயத்தனம் படுவார் என நினைக்கிறேன்.

இப்படி ஒரு தீர்வு வேண்டும் என்பதே போர் ஆரம்பித்த நாளில் இருந்து என் தனிப்பட்ட ஆசையாக இருந்தது. உக்ரேன் போர் திரியில் அதை பலதடவை எழுதியும் உள்ளேன்.

அது அப்படி ஒன்றும் உக்ரேனுக்கு மோசமான தீர்வாகவும் இராது.

ஊரில் அடாத்தா காணியை பிடித்தவனுக்கு அதில் ஒரு பங்கை எழுதி கொடுத்து மீதியை மீட்பது போலத்தான் இதுவும். மற்றும் இவை ரஸ்ய மொழி பெரும்பான்மை இடங்கள் வேறு.

இதே போல் (கரலினா?) ஒரு பெரும் நிலப்பரப்பை முன்பு பின்லாந்தும் ரஸ்யா பூதத்தின் ஆக்கிரமிப்பு பசிக்கு விலையாக கொடுத்து, மீதி பின்லாந்தை காப்பாற்றியது.

ஆனால் உக்ரேனின் பாதுகாப்பு உத்தரவாதமாக எஞ்சிய உக்ரேன் நேட்டோவில் இணைந்தாலே இது நிரந்தர பாதுகாப்பாக அமையும்.

ஆனால் அதற்கு புட்டின் தயார் இல்லை என நான் நினைக்கிறேன். புட்டினை டிரம்பால் எதுவும் செய்ய முடியாது, அவர் பற்றிய compromart புட்டினிடம் உள்ளது. அது சிறுவர்கள் சம்பந்தபட்டது என நான் கேள்விப்பட்டுள்ளேன்.  டிரம்பின் புட்டின் மீதான அணுகுமுறை இதை உறுதி செய்கிறது.

பார்க்கலாம்.

1 hour ago, Kandiah57 said:

ரம்ப்.   ஜேர்மனியிலிருந்து   சென்ற மூன்றாவது தலைமுறை

அதே போல் தாய் வழியில் ஸ்கொட்லாந்து.

#வந்தேறி 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் இதே போல் பல கொம்பனிகள் மூடப்பட்டுக்கொண்டு வருகின்றது. ஆனால்  ஊடகங்கள் இதை சொல்லாமல் உக்ரேன் செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஏனையவற்றை இருட்டடிப்பு செய்கின்றார்கள். இதன் பலன் இன்றைய அரசு கவுழும் தறுவாயில் உள்ளது.
இது எல்லாவற்றுக்கும் காரணம் உக்ரேனுக்கு ஆதரவளிக்கின்றோம் என சொல்லிக்கொண்டு ரஷ்யாவின் வியாபார தொடர்புகளை துண்டித்தது.

கடந்த ஒரு வருடமாக உக்ரேனுக்கான அமெரிக்காவின் போர் செலவினை ஐரோப்பிய ஒன்றியமும் ஜேர்மனியும்  தான் தாங்கிக்கொண்டு நிற்கின்றன என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

புதிய நிறுவனங்கள் திறக்கபடுகின்றனவே.   !    இதை கவனியுங்கள்   பல மொத்த விற்பனை நிலையங்கள்  பெயர்கள் மாற்றி  தொடர்ந்து இயங்குகிறது    

ஏன்   மக்களை கவர.    

விலைவாசி    வேலையில்லாத். திண்டாட்டம்’ 

எவர் ஆட்சியிலும்.  எந்த நாட்டிலும் இருக்கும்   

இது ஒரு பொதுவான விடயம்    

ஜேர்மனியில் பொருளாதார பிரச்சனைகள் இருக்கிறது  ஆகவே  அது அமெரிக்காவின் எண்ணம் போல்  நடக்கும் என்கிறீர்களா  ??   

எதிர்கட்சிகள். உலகம் முழுவதும்  ஆளும் கட்சியை  குற்றம் சாட்டிக்கொண்டு தான்  இருக்கும் இருக்கிறது” 

ஒரு நாட்டின் எதிர்கட்சியின். கதையை பேச்சை கேட்டால்  அந்த நாடு பொருளாதார பிரச்சனை உள்ள நாடாக தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Kandiah57 said:

ரம்ப. நினைந்த. மாதிரி அமெரிக்காவை ஆட்சி செய்ய முடியாது    

அமெரிக்க ஜனாதிபதியாகும் ஒருவர்  தான் நினைத்ததை செய்ய முடியாது என்றால் .....

இரண்டாம் ஈராக் போர் எப்படி சாத்தியமாகியது? லிபிய கடாபி ஆட்சி எப்படி அழிக்கப்பட்டது? இதையெல்லாம் மக்களிடம் கேட்டா செய்தார்கள்?
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, குமாரசாமி said:

கடந்த ஒரு வருடமாக உக்ரேனுக்கான அமெரிக்காவின் போர் செலவினை ஐரோப்பிய ஒன்றியமும் ஜேர்மனியும்  தான் தாங்கிக்கொண்டு நிற்கின்றன என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

https://www.statista.com/chart/amp/27278/military-aid-to-ukraine-by-country/
 

அக்டோபர் 2023 வரையான தகவலின் படி இராணுவ உதவியில்

யூ எஸ் - 43.9 பில்லி

ஜேர்மனி- 17.1

யூகே-6.6

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kandiah57 said:

புதிய நிறுவனங்கள் திறக்கபடுகின்றனவே.   !    இதை கவனியுங்கள்   பல மொத்த விற்பனை நிலையங்கள்  பெயர்கள் மாற்றி  தொடர்ந்து இயங்குகிறது    

கந்தையர்! பெயர் மாற்றம் எல்லாம் வரி ஏய்ப்பு செய்யவே தவிர வேறொன்றுமில்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, புலவர் said:

அமெரிக்கா ஜனாதிபதியாக ஒரு பெண்கை அமெரிக்க மக்கள் விரு;பவில்லை. என்பது ஹிலாரி கிளின்டன் >கமலா ஹாரிஸ் ஆகியோரின் தோல்வியில் இருந்து தெரிகிறது. அதிகமான பெண்களின் வாக்குகள் ட்ரம்புக்குத்தான் போடப்பட்டுள்ளன..பெண்hள் அதிகாரத்துக்கு வருவதை இலங்கை இந்தியா போனற நாடுகளில்பல முறை பார்த்தாகி விட்டது 

இதுவும் ஒரு காரணமே.

ஒரு காலத்தில் ஐரோப்பாவில் இருந்து சமூக மத சுதந்திரம் வேண்டி அமெரிக்கா போனார்கள்.

போனவர்கள் தாம் போனபோது கடைபிடித்த அன்றைய நிலையிலேயே தங்கி விட, ஐரோப்பா முற்போக்காகி எங்கோ போய்விட்டது.

கமலா பெண் என்பதும் கணிசமான பத்தாம்பசலிகள் டிரம்புக்கு போட காரணம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்க ஜனாதிபதியாகும் ஒருவர்  தான் நினைத்ததை செய்ய முடியாது என்றால் .....

இரண்டாம் ஈராக் போர் எப்படி சாத்தியமாகியது? லிபிய கடாபி ஆட்சி எப்படி அழிக்கப்பட்டது? இதையெல்லாம் மக்களிடம் கேட்டா செய்தார்கள்?
 

நான் போரை சொல்லவில்லை    

சமாதனத்தை சொன்னேன்   🤣

5 minutes ago, குமாரசாமி said:

கந்தையர்! பெயர் மாற்றம் எல்லாம் வரி ஏய்ப்பு செய்யவே தவிர வேறொன்றுமில்லை. 😂

ஆமாம் இருக்கட்டும்  ஆனால்  இயங்குகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Kandiah57 said:

ஜேர்மனியில் பொருளாதார பிரச்சனைகள் இருக்கிறது  ஆகவே  அது அமெரிக்காவின் எண்ணம் போல்  நடக்கும் என்கிறீர்களா  ??  

இந்த உக்ரேன்  போரில் ஜேர்மனியின் முக்கியத்துவத்திற்கு காரணம் அமெரிக்காதான். அமெரிக்கா ஜேர்மனியை வைச்சு  உக்ரேன் போரில் ஜேர்மனி மீதான தன் கோபத்தை தீர்க்கின்றது. ஈரோ நாணய தொடக்க வரலாறுகள் ஈரோப்பிய ஒன்றிய வரலாறுகள் முக்கியம் கந்தையர்!

ஈராக் இரண்டாம் கட்ட போரில் அன்றைய ஜேர்மனிய அரசு எதிர்த்து நின்று அமெரிக்க கோபத்திற்கு ஆளாகிய விடயங்கள் தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

ஊரும் உலகமும் அமைதியாக இருப்பது சிலருக்கு பிடிப்பதில்லை. 😎

அப்படி இல்லை   அடிமையாக   இருக்கிறது பிடிக்கவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kandiah57 said:

அப்படி இல்லை   அடிமையாக   இருக்கிறது பிடிக்கவில்லை 

யாருக்கு அடிமையாக இருக்க பிடிகவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

இந்த உக்ரேன்  போரில் ஜேர்மனியின் முக்கியத்துவத்திற்கு காரணம் அமெரிக்காதான். அமெரிக்கா ஜேர்மனியை வைச்சு  உக்ரேன் போரில் ஜேர்மனி மீதான தன் கோபத்தை தீர்க்கின்றது. ஈரோ நாணய தொடக்க வரலாறுகள் ஈரோப்பிய ஒன்றிய வரலாறுகள் முக்கியம் கந்தையர்!

ஈராக் இரண்டாம் கட்ட போரில் அன்றைய ஜேர்மனிய அரசு எதிர்த்து நின்று அமெரிக்க கோபத்திற்கு ஆளாகிய விடயங்கள் தெரியுமா?

ஒம்.  SPD. ஆட்சி     SCHÖRDER.  கன்சலர்.   நான் முதல் வாக்கு போட்டது அப்போ தான்  1998 இல்.    ஆனால்   

இந்த போர் 2003   இல் நடந்தது    சரியா?? 

2 minutes ago, குமாரசாமி said:

யாருக்கு அடிமையாக இருக்க பிடிகவில்லை?

புட்டினுக்கு    உக்கிரேனியர்.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 minutes ago, Kandiah57 said:

ஒம்.  SPD. ஆட்சி     SCHÖRDER.  கன்சலர்.   நான் முதல் வாக்கு போட்டது அப்போ தான்  1998 இல்.    ஆனால்   

இந்த போர் 2003   இல் நடந்தது    சரியா?? 

ஜேர்மனியின் முன்னேற்றம் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருந்தது. அந்த அச்சுறுத்தலை கச்சிதமாக அழிக்கின்றார்கள்.
உலக முன்னணியில் நின்ற  VW வாகன உற்பத்தி நிறுவனத்தையே இன்று தள்ளாடும் நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றார்கள்.

எந்த குதிரையின் கடிவாளத்தை பிடித்தால் ஜேர்மனியை வீழ்த்தமுடியும் என  யோசித்து நிதானித்து அதை பக்காவாக பக்குவமாக செய்து முடித்திருக்கின்றார்கள்.

அந்த குதிரை வேறு யாருமல்ல ....அது ரஷ்யா.

Edited by குமாரசாமி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, goshan_che said:

இருக்கலாம்.

எனக்கு ஒரு பார்வை. உங்களுக்கு ஒரு பார்வை.

யாரினது பார்வை சரியாக வருகிறது அவர் அப்போது வந்து நான் சொன்னபடி நடந்து என சொல்லலாம்.

மற்றவர் பதுங்கி விடலாம். அல்லது…

நானா? அப்படியா சொன்னேன்? ஆதாரம் இருக்கா என கேட்கலாம்🤣.

எவரிடம் கால இயந்திரம் இல்லாத போது, அவரவர் தன் தரவுக்கு ஏற்ப சொல்லும் கருத்துத்தானே சகலதும்.

 

நான் கூறியதுதான் நடந்தது நடக்கவில்லை என்பதனை பற்றி கவலைப்படுகின்ற ஆள் கிடையாது ( பாடசாலை முறைமைகளினூடாக எப்போதும் சரியாக இருத்தல்), தவறாக சொல்வதால் எந்த இழப்பும் தனிப்பட ஏற்படுவதில்லை, ஆனால் தவறை நியாயப்படுத்த முனைவதால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என புரிந்ததனால் தவறாக இருந்தால் அதற்காக இலகுவாக ஒரு மன்னிப்புடன் முன்னேற முடியும் அந்த தவறுகளை நியாயப்படுத்தி அதே இடத்தில் தேங்கி விட விருப்பம் இல்லை, அதனால் தவறை நியாயப்படுத்தும் ஆளும் கிடையாது.

😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

ஊரும் உலகமும் அமைதியாக இருப்பது சிலருக்கு பிடிப்பதில்லை. 😎

யாரு? எனக்கு சண்டை பயிற்சியாளராகத்தான் டிரம்ப் அறிமுகமானார்.. ஐந்தில் வளையாதது ? தொட்டில் பழக்கம் ???




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதேபோல் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டத்தையும் கொண்டுவந்தால், நாய்க்கடி, விசர் நாய்க்கடிகளால் சிறுவர்கள், வயோதிபர்கள் பாதிக்கப்படுதல் , கும்பல் கும்பலாய் அலையும் நாய்களால் தொரத்தப்பட்டு மோட்டார் சைக்கிள் சைக்கிள்களில் திரிவோர் குப்புற விழுந்து முழங்கால் பெயர்தல்,  உணவின்றி வத்தலும் தொத்தலுமாய் அலையும் நாய்களையும், ஒழுங்கைகள் தெருக்களில் கூட்டமாய் அலையும் நாய்களால் போக்குவரத்து பாதிக்கப்படலையும் தவிர்க்கலாம். நாய்களை முற்றாக அழிக்க தேவையில்லை இனப்பெருக்கலை மட்டுப்படுத்தினால் நாய்களினதும்  நமதும் எதிர்காலத்துக்கு சிறப்பு.
    • PadaKu TV     சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, முனைவர் பட்டம் பெற தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் அறிவித்தது. சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல முனைவர் பட்டம் பெற ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சபாநாயகர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளதுடன், அவ்வாறானவொருவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பத்தாவது பாராளுமன்றத்தின் 22வது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அவர் உடனடியாக சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து்ள்ளார். “கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் விடுதலை முன்னணியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதற்கு மக்களிடம் ஆணையைக் கேட்டன. பாராளுமன்றத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு தலைமை தாங்கிய அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய கையேட்டில், கம்பஹா வேட்பாளர் அசோக சபுமல் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் சின்ஜுகு வசேதா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. பாராளுமன்றம் இந்த நாட்டின் மிக உயர்ந்த ஸ்தாபனம். இந்த நாட்டின் நிலைப்பாடுகளின் படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் பதவி வகிக்கின்றார். பாராளுமன்றத்தில் உயர் அதிகாரிகள் குழு உள்ளது. இந்தக் குழுவில் இருந்துதான் அமைச்சுக்களின் செயலாளர்கள், தூதர்கள் நியமிக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். சபாநாயகரே இந்த குழுவின் தலைவராகவும் உள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் அடுத்த வாரத்திற்குள் அறிக்கை வெளியிடுவார் என ஊடகப் பேச்சாளர் கூறியதை நாம் பார்த்தோம். ஆனால், பாராளுமன்றத் தேர்தலின்போது, எங்கள் கட்சியில் இருந்துதான் அறிஞர்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர் என ஊடகப் பேச்சாளர் கூறினார்,” சபாநாயகர் தெரிவின் பின்னர், பாராளுமன்ற இணையத்தளத்தில் கௌரவ கலாநிதி அசோக சபுமல் ரன்வல என அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், நேற்று (09) குறித்த மருத்துவர் பகுதி நீக்கப்பட்டு கௌரவ அசோக சபுமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை, இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில், சபாநாயகர் இதுவரை எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரது முனைவர் பட்டம், மற்றும் அவருக்கு முனைவர் பட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும். இது தொடர்பில் இன்னும் சில தினங்களில் சபாநாயகர் தெளிவான அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இங்கு தெரிவித்தார். “அவ்வப்போது, ஒவ்வொரு குழுவும் அந்தப் பிரச்சினையை எழுப்பி வருகின்றன. அந்த விடயங்களைச் சொல்ல அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். சபாநாயகர் தரப்பில் பொறுப்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சபாநாயகர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேட்டதற்கு, சபாநாயகர் தனது தகுதிகளை முன்வைத்த பின்னர் பார்ப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.          
    • நான் அவனை நேரில் பார்த்தேன்    கழுத்து பகுதியிலும்  பெக்கிலுக்கு கீழேயும். வெட்டி தைத்த. அடையாளம் உண்டு   அவன் தான் சொன்னார் மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுத்தாதகா.  நீங்கள் நம்புவதும் விடுவதும். உங்கள் இஸ்டம்.    சுரண்டவில்லை 
    • சிறிய நாட்டுக்கு… 25 - 30 லட்சம் குரங்குகள் மிக அதிகம். சீனாக்காரனும் தனக்கு கொஞ்ச குரங்குகளை தரும் படி கேட்டுக் கொண்டு இருக்கின்றான். அவனுக்கும் கொடுத்து அன்நிய செலவாணியை டொலரில் சேமிக்கலாம்.
    • டக்ளஸ்…. காசு சம்பாதிக்க, கால் வைக்காத இடமே இல்லை. அதுகும் சொந்தக் கட்சிக்காரனையே கொலை செய்து, காசு சேர்த்திருக்கின்றார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.