Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் 50 வீத வாக்குகளும்,

கிளிநொச்சியில் 46 வீத வாக்குகளும்

முல்லைத்தீவில் 50 வீத வாக்குகளும்

பதிவாகி உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, யாயினி said:
🔥💉❌
May be an image of text

அப்போ அகில இங்கையில்திருமலையும்  மன்னாரும் யாழ்ப்பாணமுமென தமிழர் பகுதிகளில்தான் அதிக சதவீத  வாக்களிப்பு நடந்திருக்கிறது போலும்.

முன்னைய காலங்களில் சிங்கள தேச தேர்தல்களீல் அதிக ஆர்வம் காட்டாத தமிழர் பகுதி இம்முறை ஏதோ முடிவோடு ஆவேசமாக வாக்களித்திருக்கிறார்கள் போலும், பார்க்கலாம் என்ன முடிவெடுத்திருக்கிறார்களென்று

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் 59%மா69%மா?

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people and text that says 'පන්දය දෙන සථානයට னாக்ிக்டுப்பு நிலையத்து க்கு TOTHEP TO THE POLLING STATION வீட்ட சும்மா இருந்த என்ன, Free ஆட்டோவுல ஏத்தி வோட்டு போட கூட்டி வந்தான் தம்பி පන්දය දෙන සථානයට வாக்ிகடுப்பு நிலைய ΜΕΜΕ TO THE POLLING STATION JSTAYOME USINA வோட்டு போட்டுட்டு, ஆட்டோ காரனுக்கு Call பண்ணிணா, வோட்டு போட்டு முடிஞ்சு தானே நடந்து போங்கோன்னு சொல்றான் தம்பி'

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, புலவர் said:

யாழ்ப்பாணம் 59%மா69%மா?

யாழ் மாவட்டத்தில்  பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் தபால் மூல வாக்களிப்பு உள்ளடக்கிய வகையில் 59.65 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1408514

##############   ###########   ############# 

ஆதவனின் செய்திப்படி... 59.65 வீதமாம்.
ஆதவன் சும்மாவே... தடுமாறும். தேர்தல் நேரம் சொல்லத் தேவையில்லை.  😂

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவட்ட ரீதியில் பதிவான வாக்குகள் சதவீதம் !

kugenNovember 14, 2024

2024 பாராளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 

கொழும்பு 65%
நுவரெலியா 68%
குருநாகல் 64%
மட்டக்களப்பு 61%
மாத்தறை 64%
புத்தளம் 56%
அனுராதபுரம் 65%
பதுளை 66%
மன்னார் - 70%
திருகோணமலை - 67%
முல்லைத்தீவு - 63
பொலனறுவை - 65%
இரத்தினபுரி - 65
காலி - 64%
யாழ்ப்பாணம் - 69%
ஹம்பாந்தோட்டை - 60%
மாத்தளை - 67%
கேகாலை - 65%
மொனராகலை - 63%
வவுனியா -65
கிளிநொச்சி - 62%
கண்டி - 62%
களுத்துறை - 64%
அம்பாறை - 62 %
கம்பஹா - 66%

இதேவேளை, வாக்காளர் பட்டியலின்படி, ஒரு கோடியே எழுபத்தி ஒரு லட்சத்து நாற்பதாயிரத்து முந்நூற்று ஐம்பத்து நான்கு வாக்காளர்கள் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர்.

22 தேர்தல் மாவட்டங்களில், கம்பஹா மாவட்டம் அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக காணப்படுவதுடன் அந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 81,129 பேர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்து 65,351 ஆகும்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் குறைந்தளவான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த எண்ணிக்கை மூன்று இலட்சத்து 6,081 ஆகும்.

அதேநேரம், 2034 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

நள்ளிரவுக்குள் முதல் தபால் வாக்கு முடிவுகளை வௌியிட எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 

https://www.battinews.com/2024/11/blog-post_203.html

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people and text

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்மாவட்டம் 69 வீதம் என்றால் சம்பவம் இருக்கு.ஆனால் அசல் ஊடகங்கள் 59 வீதம் என்கிறார்கள் எது சரி?

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

குமாரசாமி அண்ணையின் பலம் பலம் பொ....பலம்!

இரவு ஒரு காணொளி பார்த்தேன்.கஜேந்திரகுமார் வரும்போது பலம் பலம் பொன்னம்பலம் என்று வானளாவக் கத்தினார்கள்.

பார்க்க புல்லரித்தது.தோற்றாலும் பரவாயில்லை அந்த ஒரு தருணம் போதும் என்றிருந்தது.

4 hours ago, ஏராளன் said:

மற்றவை எங்க இருக்கென்று பாக்கவே இல்லை அண்ணை!
வாக்குச் சீட்டு பெரிதாக இருந்தது. என்னுடைய முச்சக்கர வாகனம் உட்செல்லக் கூடியவாறு வாக்குச் சாவடி அமைந்துள்ளது, அத்தோடு சிரேஸ்ட வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர் சகல வசதிகளையும் ஏற்புடுத்தித் தந்தார். புள்ளடி இட்டவுடன் சீட்டை மடித்து அவரிடம் கொடுத்து வாக்கு சேகரிக்கும் பெட்டியில் போட வைத்தேன்.

 

தம்பியும் கீழே உள்ளவையை தேடிப்பார்க்கலைப் போல.

நல்லது வாழ்த்துக்கள்.

எனது உறவினர் ஒருவரும் யாருக்கு வாக்கைப் போடுவது தலையை சுற்றுது என்றார்.

இதில் உங்குள்ளவர்களுக்கு எதுவும் சொல்ல விருப்பமில்லை.

இருந்தாலும் உள்ளதற்குள் சைக்கிள் பரவாயில்லை என்றேன்.

அவரும் அதையே எண்ணுவதாக சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இரவு ஒரு காணொளி பார்த்தேன்.கஜேந்திரகுமார் வரும்போது பலம் பலம் பொன்னம்பலம் என்று வானளாவக் கத்தினார்கள்.

பார்க்க புல்லரித்தது.தோற்றாலும் பரவாயில்லை அந்த ஒரு தருணம் போதும் என்றிருந்தது.

முந்தநாள் இரவு நான் ஒரு காணொளி பார்த்தேன்.
அதில், சுமந்திரன் வரும் போது... "கள்ளா...  கள்ளா..."  என  கோசம் போட்டார்கள். 😂
அப்பவே... சுமந்திரனுக்கு, கட்டுக்காசும் கிடைக்காது என தெரிந்து விட்டது.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text

 

May be an image of 2 people and text

 

466781561_1045689264235483_7910484927522

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

முந்தநாள் இரவு நான் ஒரு காணொளி பார்த்தேன்.
அதில், சுமந்திரன் வரும் போது... "கள்ளா...  கள்ளா..."  என  கோசம் போட்டார்கள். 😂
அப்பவே... சுமந்திரனுக்கு, கட்டுக்காசும் கிடைக்காது என தெரிந்து விட்டது.  🤣

உண்மையா.ஐயோ தவற விட்டுட்டேனே.

என்ன சிறி இப்படி முக்கியமான காணொளிகளை இணைத்திருக்கலாமே?

நீங்க சரியான சுயஇன்பம் காணுற ஆளாயிருக்கிறீர்களே?

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் அவர்களுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்.

ஊழல் இவர்களிடம் இல்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால், "எங்கள் கொள்கையோடு ஒரே லைனில் வருவோரோடு மட்டுமே பேசுவோம்!" என்று தேர்தலில் பதவிகள் வென்று கொண்டிருந்தால், பா.உ பதவி மட்டும் தான் கிடைக்கும். சிங்களவரோடு, வெளிநாடுகளோடு, ஏனைய தமிழ் கட்சிகளோடு பேசாமல், ஒலிவாங்கியோடு மட்டுமே பேசிக் கொண்டிருக்க வேண்டிய நிலை வரும்.

மக்கள் இதைக் கண்டு விலகிப் போக முன்னர், சைக்கிள் காரர் கொஞ்சம் இறங்கி வர வேணும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு கட்சியைத் தவிர ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்கள் வாக்களிப்பில் ஆர்வம் செலுத்தவில்லை - மஹிந்த தேசப்பிரிய

image

(எம்.மனோசித்ரா)

பொதுத் தேர்தல் வாக்களிப்பில் ஒரேயொரு கட்சியைத் தவிர ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆர்வம் செலுத்தவில்லை என்பது எமது நடமாடும் கண்காணிப்பின்போது அவதானிக்கப்பட்டது. ஆனால், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும் என்று வீவ் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ராஜகிரியவில் உள்ள வீவ் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் தலைமையகத்தில் வியாழக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தலில் மக்கள் ஆர்வம் காண்பித்துள்ள வீதம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. எம்மால் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் கண்காணிப்பின்போது ஒரேயொரு கட்சியின் ஆதரவாளர்கள் மாத்திரமே ஆர்வத்துடன் வாக்களிப்பதை அவதானிக்க முடிந்தது.

ஏனைய கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் அதனை அவதானிக்க முடியவில்லை. எவ்வாறிருப்பினும் இது துரதிர்ஷ்டவசமான விடயமாகும். சிலரிடம் நாம் இது குறித்து வினவியபோது, எவருக்கும் இதில் ஆர்வமில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் குறித்த கட்சிகளும் கவலையடைந்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டமீறல்கள் இடம்பெற்றுள்ள போதிலும், பாரியளவிலான வன்முறைகள் எவையும் பதிவாகவில்லை. ஆனால் சில பிரதேசங்களில் கட்சி அலுவலகங்கள் நீக்கப்படாமலிருப்பதையும் அவதானிக்க முடிந்தது. எவ்வாறிருப்பினும் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் அமைதியானதும் சுதந்திரமானதுமான முறையில் இம்முறை தேர்தல் இடம்பெற்றுள்ளது.

225 பேரும் வேண்டாம் என்ற கோஷத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த முறையும் நான் அதனை எதிர்த்திருந்தேன். ஆனால் எமக்கு தவறானவர் எனத் தோன்றுபவர்களை மீண்டும் தெரிவு செய்யாமல் இருப்பதற்கான அதிகாரம் எமக்கிருக்கிறது. எனவே வாக்களிப்பின் போது வாக்காளர்கள் அது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றார். 

https://www.virakesari.lk/article/198734

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்காத 232,233 பேர்!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று (14) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி நிறைவடைந்துள்ளன. 

யாழ்ப்பாணம்

இந்நிலையில், 2 இலட்சத்து 32 ஆயிரத்து 233 பேர் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தவர்களில் 36087 பேர் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஐனாதிபதி தேர்தலில் 3,97,041 பேர் வாக்களித்திருந்தனர்.

இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 593187 பேர் தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 360,954 பேர் வாக்களித்துள்ளனர். 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் தபால் மூல வாக்களிப்பு உள்ளடக்கிய வகையில் 59.65 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களை உள்ளடக்கிய வகையில் பி.ப 03.00 மணி நிலவரப்படி 47% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது. 

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்று வருகின்றது.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் மு. ப 10.00 மணி நிலவரப்படி 16% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.

செய்தி-கஜிந்தன்

கிளிநொச்சி

அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்திலும் வாக்காளர்கள் காலை 7.00 மணி தொடக்கம் தமது ஜனநாயக கடமையினை மக்கள் ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை 100,907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வாக்களிப்பு சுமூகமான முறையில் இடம்பெற்றுவருவதுடன், தேர்தல் கடமைகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகிறது.

செய்தி- காண்டீபன்

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் 64.09 வீதம் வாக்கு பதிவு வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையமான முல்லைத்தீவு மகா வித்தியாலயத்துக்கு கொண்டுவரப்படுகிறது.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று  காலை பத்து மணிவரை 23.23% வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேர்தல் நிலமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கு பதிவுகள் இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் மக்கள் உற்சாகமாக புதிய தலைவர்களை தெரிவு செய்ய அமைதியான முறையில் முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்து வருகின்றனர்.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்களிக்க தகுதிபெற்ற 86869 பேர் இன்றையதினம் வாக்களிக்க இருக்கின்றனர்.

அத்தோடு இந்த தேர்தல் பணிக்காக சுமார் 1500 மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள், 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஈடுபட்டிருக்கின்றதுடன் தேர்தல் கடமையில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றமை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

செய்தி- சதீசன்

மன்னார் 

மன்னார் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் 4 மணியுடன் தபால் மூல வாக்களிப்பு உள்ளடங்களாக 74 வீத வாக்கு பதிவு இடம் பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

 மன்னார் மாவட்டத்தில் சுமூகமாக இடம் பெற்று வரும் நிலையில் காலை 7 மணி தொடக்கம் மதியம் 2 மணிவரை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 55.5 வீதமான வாக்குகள் பதிவாகி உள்ளதாக க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் காலை 7 மணி தொடக்கம் 10 மணி வரையான நிலவர படி 98 வாக்களிப்பு நிலையங்களில் 21,784 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது மொத்த வாக்களிப்பில் 24 வீதமாகும்.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

அதே நேரம் இதுவரை தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை மன்னார் மாவட்டத்தில் 26 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் அதில் இன்றைய தினம் 6 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவை சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம் பெற்று வருகின்றது.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

காலையில் சற்று மந்த கதியில் வாக்களிப்புகள் இடம் பெற்றாலும் பின்னர் மக்கள் வருகை தந்து வாக்களிப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலை பார்கிலும் காலை நிலவரபடி அதிகமான மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

செய்தி-ஆசிக்

வவுனியா

வவுனியாவில் சுமுகமான முறையில் வாக்களிப்பு இடம்பெறுவதுடன், இன்று காலை 10 மணி வரை 25 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

அவர் மேலும் தெரிவிக்கையில்,  முல்லைத்தீவில் 22.74 வீதமும், மன்னாரில் 18.5 வீதமும் வாக்குகளும் பதிவாகியுள்ளது.

அந்தவகையில் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் காலை 10 மணிவரை 22 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி-திலீபன்

வன்னி தேர்தல்மாவட்டத்தில் 65.5சதவீத வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பி,ஏ. சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

அந்தவகையில் வன்னிமாவட்டத்தில் 65.5 வீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வவுனியாவில் 63.75 வாக்குகளும், முல்லைத்தீவில் 62.45 வாக்குகளும், மன்னாரில்70 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளது.

இதேவேளை வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் வாக்கெண்ணும் பணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. மாலை 4.30மணியளவில் தபால் மூலமான தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மாலை 7மணியளவில் ஏனைய வாக்குகள் எண்ணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

செய்தி-திலீபன்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

https://tamilwin.com/article/voting-begins-in-northern-province-1731559325#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில் 5,992,348 பேர் வாக்களிக்கவில்லை

image

(இராஜதுரை ஹஷான்)

2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்புக்கமைய பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்த நிலையில், 11,148,006 பேர் வாக்களித்துள்ளதுடன், 5,992,348 பேர் வாக்களிக்கவில்லை. இம்முறை நாடளாவிய ரீதியில் 65 சதவீதமான வாக்குகளே பதிவாகியுள்ளன.

பத்தாவது பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் வியாழக்கிழமை (14) நாடளாவிய 13,421 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்றது. 

2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்புக்கமைய பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில்  நாடளாவிய ரீதியில் 11,148,006 பேர் வாக்களித்திருந்தனர். அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 667,640 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 11,815,246 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில் 5,992,348 பேர் வாக்களிக்கவில்லை. 

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 3,820,738 பேர் வாக்களிக்கவில்லை. 2024 ஆம் ஆண்டு தேருநர் இடாப்புக்கமைய  வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்த நிலையில், 13,319,616 பேர் வாக்களித்திருந்தனர். அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 300,300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டு, 13,619,916 செல்லுபடியான வாக்குகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

https://www.virakesari.lk/article/198888

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.