Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், அடுத்த நடவடிக்கை குறித்து கட்சி பரிசீலித்து வருகிறது.

அதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின் போது உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

இதனையடுத்து புதிய அமைச்சரவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய பிரதமர்

இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் பிரதமராக, தற்போதைய அமைச்சரான விஜித ஹேரத்தை நியமிக்க வேண்டும் என கட்சிக்குள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அநுர அரசின் புதிய பிரதமர் யார்....! | New Prime Minister Discussion In Anura Government

தற்போது வெளியான விருப்பு வாக்குகளின் அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் அதிகூடிய 716,715 வாக்குகளை விஜித் ஹேரத் பெற்றுள்ளார். இதனையடுத்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருப்பு வாக்கு

சமகால பிரதமரும், புதிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹரினி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளை கொழும்பு மாவட்டத்தில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/new-prime-minister-discussion-in-anura-government-1731684786

தேசிய மக்கள் சக்தி அமைக்கப் போகும் அடுத்த அரசில்

நீதி அமைச்சராக நீதிபதி இளஞ்செளியனை நியமித்தால் நன்று.

இல்லது அவருக்கு அற்ரோர்னி ஜெனரல் போன்ற உயர்மட்ட பதவிகள் ஏதாவது வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் அமைச்சு செயலாளர்களாக திறமை வாய்ந்த தமிழர்களையும் தெரிவு செய்ய வேண்டும்.

5 minutes ago, ஈழப்பிரியன் said:

ஹரினி அமரசூரிய

இந்த அம்மாவுக்கு பிரதமர் பதவி இல்லாவிட்டால் வெளிநாட்டமைச்சர் பதவி பொருத்தமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் பிரதமராக, தற்போதைய அமைச்சரான விஜித ஹேரத்தை நியமிக்க வேண்டும் என கட்சிக்குள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது ஆண் மேலாதிக்க சக்திகளின் கோரிக்கை ...தோழர் அனுரா இதை ஏற்று கொள்ள மாட்டார் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும்..என்ற கொள்கை உடையவர்...விஜித ஹேரத்துக்கு பிரதம்ர் பதவி கொடுத்தால் நாட்டில் பெண்கள் ஒர் அரகலய போராட்டம் நடத்த வேண்டும் அதற்கு புலம்பெயர்ஸ் பெண்கள் உதவ வேண்டும்😅

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, putthan said:

இது ஆண் மேலாதிக்க சக்திகளின் கோரிக்கை ...தோழர் அனுரா இதை ஏற்று கொள்ள மாட்டார் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும்..என்ற கொள்கை உடையவர்...விஜித ஹேரத்துக்கு பிரதம்ர் பதவி கொடுத்தால் நாட்டில் பெண்கள் ஒர் அரகலய போராட்டம் நடத்த வேண்டும் அதற்கு புலம்பெயர்ஸ் பெண்கள் உதவ வேண்டும்😅

என்ன புத்தா ஏதோ பெரிய திட்டத்துடன் தான் களமிறங்கியுள்ளீர்களோ?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, ஈழப்பிரியன் said:

அநுர அரசின் புதிய பிரதமர் யார்....! | New Prime Minister Discussion In Anura Government

இந்த அம்மாவுக்கு பிரதமர் பதவி இல்லாவிட்டால் வெளிநாட்டமைச்சர் பதவி பொருத்தமாக இருக்கும்.

இது பொருத்தமான பதவி என்று தீர்மானித்ததை நானும் ஆமோதிக்கின்றேன்

Edited by alvayan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெளிநாட்டில் அதுவும் அவுசில் படித்த பெண் வெளியுறவு அமைச்சராக இருப்பார் தானே?

2 minutes ago, alvayan said:

இது பொருத்தமான பதவி என்று தீர்மானித்ததை நானும் ஆமோதிக்கின்றேன்

எது ?பிரதமரா?வெளிநாட்டு அமைச்சரா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
42 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன புத்தா ஏதோ பெரிய திட்டத்துடன் தான் களமிறங்கியுள்ளீர்களோ?

அய்யா..மிகப்பெரிய கூட்ட எம்பீககள்.. அனுரவுக்கே பேர்  விபரம் தெரியாத ஆட்கள் இருப்பினம்...அப்ப அதிலை பெண் அரகலய  ஏற்படுவதை தடுக்க முடியாதுதானே...புத்தரின் புலம்பெயர் பெண்கள்..என்பதுதான் இடிக்குது

40 minutes ago, ஈழப்பிரியன் said:

எது ?பிரதமரா?வெளிநாட்டு அமைச்சரா?

வெளிநாட்டு அமைச்சர்...

Edited by alvayan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, alvayan said:

அரகலய 

14 minutes ago, putthan said:

அரகலய

அரகலய போராட்டம் எப்ப எங்கே நடாத்த வேண்டும் எனபதை அமெரிக்கா முடிவு பண்ணும்.

அந்தக் கவலை எவருக்கும் வேண்டாம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன புத்தா ஏதோ பெரிய திட்டத்துடன் தான் களமிறங்கியுள்ளீர்களோ?

நாங்களும் இடதுசாரிகள் அல்லோ 😅...பழைய இரண்டு சிவப்பு சேர்ட்டை தூசு தட்டி போட்டு  அணியலாம் என நினைக்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

தேசிய மக்கள் சக்தி அமைக்கப் போகும் அடுத்த அரசில்

நீதி அமைச்சராக நீதிபதி இளஞ்செளியனை நியமித்தால் நன்று.

இல்லது அவருக்கு அற்ரோர்னி ஜெனரல் போன்ற உயர்மட்ட பதவிகள் ஏதாவது வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் அமைச்சு செயலாளர்களாக திறமை வாய்ந்த தமிழர்களையும் தெரிவு செய்ய வேண்டும்.

இது எல்லாம் என்ன ஒரு ஆசை. தலைவர் அனுரகுமார திசநாயக்க அமெரிக்காவில் ஸ்ரீலங்கா துதுவராக ஈழப்பிரியன் அய்யாவை நியமிக்க வேண்டும் என்பது எனது ஆசை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, alvayan said:

அய்யா..மிகப்பெரிய கூட்ட எம்பீககள்.. அனுரவுக்கே பேர்  விபரம் தெரியாத ஆட்கள் இருப்பினம்...அப்ப அதிலை பெண் அரகலய  ஏற்படுவதை தடுக்க முடிய்யதுதானே...புத்தரின் புலம்பெயர் பெண்க்ள்..என்பதுதான் இடிக்குது

இதில தமிழ் எம்பிக்களின் பெயரை நினைவில் வைத்திருப்பது கடினமாக இருக்குமோ ...எதற்கும் தமிழ் எம்பி கள் விபூதி சந்தணம் பூசி கொண்டும்/சிலுவை  ,முஸ்லீம் எம்பிக்கள் தொப்பியை அணிந்து கொண்டு போனால் தோழர் இலகுவாக தெமிலு எம்பி என அடையாளம் கண்டு கொள்வார் 

அரகலய நடக்கும்பொழுது சிற்றூண்டிகள்,டென்ட்,மற்றும் ஏனைய செல்வுகளை வழங்க புலம்பெயர்ஸ் பெண்கள் தேவை தானெ

8 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இது எல்லாம் என்ன ஒரு ஆசை. தலைவர் அனுரகுமார திசநாயக்க அமெரிக்காவில் ஸ்ரீலங்கா துதுவராக ஈழப்பிரியன் அய்யாவை நியமிக்க வேண்டும் என்பது எனது ஆசை.

என்னை அவுஸ்ரேலியாவுக்கு நியமிக்கும்படி சிபார்சு செய்ய முடியுமா நான் ஒர் முன்னாள் இடது சாரி 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இது எல்லாம் என்ன ஒரு ஆசை. தலைவர் அனுரகுமார திசநாயக்க அமெரிக்காவில் ஸ்ரீலங்கா துதுவராக ஈழப்பிரியன் அய்யாவை நியமிக்க வேண்டும் என்பது எனது ஆசை.

அப்ப ரசோதரன்...

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, நந்தன் said:

அப்ப ரசோதரன்..

🙆‍♂️

ஓம் நான்  இனி ஆசைகளை வெளிட முதல் நிறைய யோசித்து தான் வெளியிட வேண்டும்😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, நந்தன் said:
32 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இது எல்லாம் என்ன ஒரு ஆசை. தலைவர் அனுரகுமார திசநாயக்க அமெரிக்காவில் ஸ்ரீலங்கா துதுவராக ஈழப்பிரியன் அய்யாவை நியமிக்க வேண்டும் என்பது எனது ஆசை.

அப்ப ரசோதரன்

ஈழப்பிரியன் நியூயோர்க்

ரசோதரன் கலிபோர்ணியா

இருவரும் இருகரைகளையும் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஈழப்பிரியன் said:

ஈழப்பிரியன் நியூயோர்க்

ரசோதரன் கலிபோர்ணியா

இப்படியும் ஒரு வழி இருக்கிறதே 😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஈழப்பிரியன் நியூயோர்க்

ரசோதரன் கலிபோர்ணியா

இருவரும் இருகரைகளையும் பார்க்கலாம்.

சிறிலங்கா தூதுவர்கள் குடும்பமாக வெளிநாட்டில் வாழ முடியாது. வசதி எப்படி? 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

இது எல்லாம் என்ன ஒரு ஆசை. தலைவர் அனுரகுமார திசநாயக்க அமெரிக்காவில் ஸ்ரீலங்கா துதுவராக ஈழப்பிரியன் அய்யாவை நியமிக்க வேண்டும் என்பது எனது ஆசை.

கனடாவுக்கு சாத்ஸ் @satan எண்டு கேள்வி🤣

7 hours ago, ஈழப்பிரியன் said:

இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் பிரதமராக, தற்போதைய அமைச்சரான விஜித ஹேரத்தை நியமிக்க வேண்டும் என கட்சிக்குள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்ப சுமன் அங்கிள் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@goshan_che

அது கனடாவுக்கு அவர்களின் கொள்கை விளக்கும் உயர் அதிகாரியாக நியமிக்க இருக்கின்றார்கள் என்று அறிய முடிகின்றது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

கனடாவுக்கு சாத்ஸ் @satan எண்டு கேள்வி

அது கோஷனின் விருப்பமென்றால், அதை சிரந்தாழ்த்தி ஏற்கத்தயாராக இருக்கிறேன் என்பதை சபையோர் முன்னிலையில் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பதவிப்பிரமாணம் எப்போது வைப்பதென  உத்தேசித்துள்ளீர்கள்? கபிதனையும்  கட்டாயம் கூட்டி வாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, satan said:

அது கோஷனின் விருப்பமென்றால், அதை சிரந்தாழ்த்தி ஏற்கத்தயாராக இருக்கிறேன் என்பதை சபையோர் முன்னிலையில் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பதவிப்பிரமாணம் எப்போது வைப்பதென  உத்தேசித்துள்ளீர்கள்? கபிதனையும்  கட்டாயம் கூட்டி வாருங்கள்.

ரணிலுக்கு சுமன்…

அனுரவுக்கு சாத்ஸ் என்பது தெரிந்த விடயம்தானே.

புஞ்சி அம்மே நவே, தங் புஞ்சி அங்கிள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அநுர அரசின் புதிய பிரதமர்: வெளியான அறிவிப்பு!

அநுர (Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் (NPP) புதிய அரசாங்கத்தில் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் (Sri Lanka) 10வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு புதிய சாதனையை படைத்தது.

புதிய சாதனை

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அமைச்சரவையின் அமைச்சர்கள் நாளையதினம் (1811.2024) பதவியேற்கவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அநுர அரசின் புதிய பிரதமர்: வெளியான அறிவிப்பு! | New Ministers Will Be Sworn In Tomorrow

இதன்படி குறித்த நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த பதவியேற்பு நிகழ்வில் தற்போது பிரதமராக இருக்கும் ஹரிணி அமரசூரிய தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தில் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

பலம் வாய்ந்த அமைச்சுப் பதவி 

மேலும் விஜித ஹேரத்துக்கு (Vijitha Herath) பலம் வாய்ந்த அமைச்சுப் பதவி ஒன்று கிடைக்கப் போவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அநுர அரசின் புதிய பிரதமர்: வெளியான அறிவிப்பு! | New Ministers Will Be Sworn In Tomorrow

பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களை ஜனாதிபதியின் கீழ் வைத்திருக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சரவை இருபத்தைந்து பேருக்கு மட்டுப்படுத்தப்படும் எனவும் சில அமைச்சுக்களுக்கு பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளதாக அசியல் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://ibctamil.com/article/new-ministers-will-be-sworn-in-tomorrow-1731820500#google_vignette

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.