Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழரசுக் கட்சியின்(TNA) தேசியப் பட்டியல் தொடர்பிலான சர்ச்சை நிலைகள் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் தற்போது வலுப்பெற்று வருகிறது.

எனினும் தமது கட்சிக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அந்த நியமனங்களில் ஒருவராக கருதப்படும் பா. சத்தியலிங்கத்தினது உள்வருகையானது முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் திட்டமிடலின் ஒரு அங்கம் என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.

அந்த வகையில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மா. இளம்பிறையன் தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெறும் பல்வேறு முரணான கருத்துக்களை எடுத்துரைத்திருந்தார்.

மேலும், சுமந்திரனின் கருத்திற்கு அமையவே செயலாளரின் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், எதிர்வரும் காலங்களில் சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம் மீண்டும் மீண்டும் தமிழரசுக்கட்சியை நீதிமன்றுக்கு அழைத்து செல்லும் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பில்

மேலும் கருத்து தெரிவித்த அவர்...

https://tamilwin.com/article/controversy-over-the-national-list-of-tna-1731866604

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, பெருமாள் said:

தேசிய பட்டியலில் கிடைத்தது ஒன்று
எதற்கு இரண்டிற்கு  அடிபிடி
 
இவருக்கு நாட்டு நடப்புத் தெரியாதா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, வாத்தியார் said:

தேசிய பட்டியலில் கிடைத்தது ஒன்று
எதற்கு இரண்டிற்கு  அடிபிடி
 
இவருக்கு நாட்டு நடப்புத் தெரியாதா

எனக்கும் ஒரு சந்தேகம் முதலில் தமிழ் வின் பொய் சொல்கிறது என்று நினைக்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பெருமாள் said:

தமிழரசுக் கட்சியின்(TNA) தேசியப் பட்டியல் தொடர்பிலான சர்ச்சை நிலைகள் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் தற்போது வலுப்பெற்று வருகிறது.

எனினும் தமது கட்சிக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அந்த நியமனங்களில் ஒருவராக கருதப்படும் பா. சத்தியலிங்கத்தினது உள்வருகையானது முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் திட்டமிடலின் ஒரு அங்கம் என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.

அந்த வகையில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மா. இளம்பிறையன் தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெறும் பல்வேறு முரணான கருத்துக்களை எடுத்துரைத்திருந்தார்.

மேலும், சுமந்திரனின் கருத்திற்கு அமையவே செயலாளரின் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், எதிர்வரும் காலங்களில் சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம் மீண்டும் மீண்டும் தமிழரசுக்கட்சியை நீதிமன்றுக்கு அழைத்து செல்லும் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பில்

மேலும் கருத்து தெரிவித்த அவர்...

https://tamilwin.com/article/controversy-over-the-national-list-of-tna-1731866604

இளம்பிறை ஏற்கனவே தன்னை ஒரு சமய சாதியவாதி என்று நிரூபித்தவர். அவரது கருத்தை அவரைச் சூழவுள்ளவர்களே பொருட்படுத்துவது  கிடையாது. 

பரட்டைக் காட்டுக்கு கரட்டை ஓணான்தான் ராஜா என்று சும்மாவா கூறினார்கள்? 

படித்தவன்,  பண்புள்ளவன், எல்லோரையும் அடித்துக் கலைத்ததன் விளைவு  இந்தக் கரட்டை ஓணான்கள் ராஜாவாக வலம் வருகின்றன. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

படித்தவன்,  பண்புள்ளவன், எல்லோரையும் அடித்துக் கலைத்ததன் விளைவு  இந்தக் கரட்டை ஓணான்கள் ராஜாவாக வலம் வருகின்றன. 

ஆஆ பரட்டை களை ஓனான் வேடம்  இட்ட உங்கள் ஆள் இனி இல்லை அதனால் தற்கொலை செய்ய மாட்டிர்கள் பேராண்டி .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, பெருமாள் said:

ஆஆ பரட்டை களை ஓனான் வேடம்  இட்ட உங்கள் ஆள் இனி இல்லை அதனால் தற்கொலை செய்ய மாட்டிர்கள் பேராண்டி .

ஏன்  நான்  தற்கொலை செய்ய வேண்டும்?

எல்லோரும் ஒன்றுபட வேண்டும்  என்று கூற வேண்டிய தேர்தல்  நேரத்தில் சும்மை மட்டும் குறிவைத்து சன்னதம் ஆடிய ஆட்கள் தேர்தல் முடிவின் பின்னர் தற்கொலை செய்யவில்லை. அவர்கள் எல்லோரும் வேட்டியைத் தூக்கி முகத்தை மறைத்துக்கொண்டு  உலாவரும்போது,  சரியான விடயத்திற்காக எப்போதும் துணிந்து நிற்கும்  நான் ஏன் தற்கொலை செய்ய வேண்டும் பெருசு,..? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலில் இளம்பிறையனை "யாழ் பல்கலை விரிவுரயாளர்" என்று அழைப்பதை தமிழ்வின் கைவிட வேணும். அவர் ஒரு "உடற்பயிற்சிப் போதனாசிரியர்" (demonstrator). "உடற்பயிற்சிப் போதனாசிரியருக்கும்" அரசியலுக்கும் என்ன தொடர்பு😂?

சும்மா, பல்கலையில் காவல் கடமையில் இருக்கும் Marshal ஐ எல்லாம் கொண்டு வந்து ஒரு அரசியல் நிகழ்ச்சி செய்யும் ரொய்லெற் ஊடகங்கள் எங்கள் சாபக் கேடு!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழினத்தின் இன்றைய நிலைக்கு ரொய்லற் ஊடகங்களுக்கும் சம பங்கிருக்கிறது. 

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு-கிழக்கிலிருந்து 4 வைத்தியர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு 2024 பாராளுமன்ற தேர்தலில் முதற்தடவையாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து 4 தமிழ் வைத்தியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, இவ்வாண்டு 19 வைத்தியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இதனடிப்படையில் தமிழரசுக்கட்சியின் சார்பில் மட்டக்களப்பைச் சேர்ந்த டாக்டர் இளையதம்பி சிறிநாத், வவுனியாவைச் சேர்ந்த டாக்டர் ப.சத்தியலிங்கம், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்.சிறி பவானந்தராஜா, சுயேட்சைக்குழு சார்பில் போட்டியிட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராமநாதன் அர்ச்சுனா போன்றோர் தெரிவாகியுள்ளார்கள். அதேபோல், அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மொத்தமாக 19 வைத்தியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். https://thinakkural.lk/article/312246
    • வணக்கம் தமிழ்சிறி அண்ணா.. வேலைப்பழு காரணமாக வரமுடியவில்லை. நான் இம்முறை அனுரவின் கட்சிக்கு வாக்களித்தேன். திருக்கோணமலை மாவட்டம். இளம் தமிழ் பிரதிநிதி. திறமையானவர். இம்முறை எம்மவர்களுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டும் என்கிற நோக்கம்தான். திருகோணமலையில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்கிற அதீத நம்பிக்கைதான். (ஊடறுத்த குடியேற்றங்கள். அதிகரிக்கும் விகாரைகள் பேன்றவை) 'மகிந்த யதார்த்தவாதி' என்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டதோ அதே தலைவரின் வழிகாட்டல்தான். போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் இலட்சியம் ஒன்றுதான்!
    • நன்றி ஈழப்பிரியன்...குடும்ப தேவை காரணமானது...இங்கு வந்ததும் ..போனதேவை ..சோகத்தில் முடிந்துவிட்டது... அங்கு நான் நடை யாகத்தான் திரிந்தேன்..உறவுகள்   வீடு வீடாகச் சென்றேன்..இதனால் .. இரண்டு தேர்தல்கள்  என்னால் உன்னிப்பாகக் கவனிக்கக் கூடியதாக இருந்தது...ஒன்று மட்டும் உண்மை ..யாரிடமும் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டவில்லை
    • நானும் தான் ஊருக்கு போனேன். எங்க வெள்ளி பார்த்துக் கொண்டிருந்தனோ? @goshan_che னும் போயிருந்தார்.ஆனாலும் ஆள் காரை விட்டு இறங்கல்ல.
    • அல்வாயானின் ஊர் விசிட்டு...கந்தப்புவின் தேர்தலுக்கு நல்லா உதவி சேய்யுது...மீண்டும் தேர்தல் ஆணையாளருக்கு நன்றி
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.