Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

நீங்கள் சொல்வது போலவே, கலிபோர்னியாவில் இருந்து போய் அதை சாப்பிட வேண்டுமா.......

நீங்க வெளியில் இருந்து எடுத்து சாப்பிடலாம் தானே?

  • Replies 68
  • Views 6.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • அட அனுரவே யாழ்பாணத்தான் பிறகு நமக்கென்ன கவலை. அனுர பிரிகேட் 🤣 மூணு சீட் கொடுத்த யாழ்பாண மானஸ்தனுக்கும் நாலு ரூபா சாப்பாடா…ஐயகோ🤣. இதுதான் ஜேவிபி. 2/3 எடுத்தவுடன் என் பி பி முகமூடி கொஞ்ச

  • ரசோதரன்
    ரசோதரன்

    சில விடயங்களில் இவர்கள் மாறவே மாட்டார்கள். இந்தியாவில் பிஜேபி அரசு ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளை கொண்டு இழுப்பது போல........... வலு அமைச்சர் ஆகியிருக்கும் குமார ஜெயக்கொடி எங்களுக்கு ஒரு வருடம் முந்தியவ

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இரண்டு தமிழ் அமைச்சர்கள்.  முஸ்லீம்கள் அமைச்சரவையில் உள்ளடக்கப் படவில்லைப் போலுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நீர்வேலியான் said:
4 hours ago, ரசோதரன் said:

எனக்கு இவர்களை, இவர்களின் கொள்கைகளை, இவர்களின் நடவடிக்கைகளை ஓரளவிற்கு தெரியும். முதலில் அந்த பாராளுமன்ற கண்டீனில் கைவப்பார்கள். எந்த விதமான விசேட சாப்பாடும் போட விடமாட்டார்கள்.

நான் முன்னர் ஒரு தடவை இங்கே எழுதியிருந்தேன், எங்களுக்கு பல்கலை விடுதியில் என்ன நடந்தது என்று. அப்பொழுது நாலு ரூபாய்கள் தான் மதியச் சாப்பாடு, ஆனால் அதை வாயில் வைப்பதே கஷ்டம். தமிழ் மாணவர்களில் சிலர், வெளிநாட்டுக் காசு அல்லது வீட்டிலிருந்து காசு வந்து கொண்டிருந்தவர்கள், கண்டீன் ஆட்களுடன் பேசி 10 ரூபாவிற்கு ஒரு ஸ்பெஷல் சாப்பாடு ஏற்பாடு செய்தனர்.

பின்னர் ஒருநாள், கண்டீன் ஆட்களுக்கு அடி விழுந்ததா அல்லது விழவில்லையா என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் நாலு ரூபாய் சாப்பாடு மட்டுமே என்று எழுதாத சட்டம் ஒன்று வந்தது.

நீங்கள் சொல்வது போலவே, கலிபோர்னியாவில் இருந்து போய் அதை சாப்பிட வேண்டுமா............

Expand  

நீங்கள் போனப்பிறகும் அந்த சாப்பாடு அதே 4 ரூபாவுக்கு 7, 8 வருடங்களுக்கு இருந்தது. நாங்கள் இருந்தபோதும் கொஞ்சம் நல்ல சாப்பாடு கொண்டுவர முயற்சி செய்தோம், தமிழர்கள் சார்பிலும்  சில நல்ல கறிகளை சிபாரிசு செய்தோம், ஜேவிபி மாணவர் அமைப்பு அப்பிடியே அடித்து அமத்திவிட்டார்கள். கான்டீன்காரனும் என்னதான் செய்வது, மலிவாக கிடைக்கும்  அழுகிய மரக்கறிகளை கொண்டு வந்து சமைத்து போடுவார்கள், வாயில் வைக்க முடியாது

 

உந்தக் கோதாரி கண்றாவிகளுக்காகத் தான்

நான் பல்கலைப் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்க வெளியில் இருந்து எடுத்து சாப்பிடலாம் தானே?

எப்படியும் உங்களின் தம்பியை பிரதமர் ஆக்கியே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறீர்கள்...........🤣.

16 minutes ago, ஈழப்பிரியன் said:

 

உந்தக் கோதாரி கண்றாவிகளுக்காகத் தான்

நான் பல்கலைப் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை.

அங்கே போனால் என்ன, போகாவிட்டால் என்ன அண்ணை, இப்ப ஒன்றாக முழுநேரம் யாழ் களத்தில் நிற்பதில் தானே இரு வாழ்க்கைகளும் வந்து நிற்கின்றன.............😀.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இவர்களை யூனியில் ஜெப்பாஸ் என அழைப்பார்கள் எனக்கேள்வி.

ராகிங் என்ற பெயரில் சராசரிக்கு மேல் செல்வ பின்புலம் உள்ள மாணவர்களை கொடுமைப்படுத்துவார்களாம். உண்மையா?

 

 

நான் பார்த்த மட்டில் அமைச்சரவையில் அநேகம் பலவருட ஜேவிபி கொள்கையில் புடம் போட்டு வந்த ஆட்கள்தான் என நினைக்கிறேன்.

என் பி பி என்ற பெயரில் 5 வருடத்துள் உள்வாங்கப்பட்ட ஜேவிபி அல்லாத useful idiots - பெரிதாக இல்லை.

அந்த useful idiots - 2/3 எடுக்க பயன்பட்டார்கள். 

@தமிழ் சிறி சரோஜா பால்ராஜ் எந்த மொழியில் பதவி ஏற்றார்?

அவருக்கு தமிழ் நன்றாக வரும்.

மேல் மட்டத்து மாணவர்கள் நிறைய பேர் அநேகமாக கண்டியில் இருந்து வருவார்கள், anti ராகிங் குறூப்ஆக இருக்கும். இவர்களுக்கும் அவர்களுக்கும் ஒத்துவராது, ராக்கிங் பிரச்சனைகளில் அடிக்கடி முண்டுவார்கள். JVP யின் மாணவர் அமைப்பு பலமாக இருப்பதால், அவர்களது இடமாக இருந்தாலும், கண்டி மாணவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.  தமிழர்களில் பொருளாதாரரீதியில், ஒரு சிலரைத்தவிர பெரியளவு வித்தியாசம் இருந்ததில்லை, பேராதனைக்கு வரும் பெரும்பாலான சிங்கள மாணவர்கள் வறுமைமையானவர்கள், அதனால் 5 வீதம் வாக்குகொண்ட ஜேவிபி இங்கு பலமாக இருக்கும். இவர்களில் இனவாதிகள் இருந்தாலும், உண்மையாகவே அந்த நேரங்களில் ஜேவிபியினால் எங்களுக்கு ஒருவித பாதுகாப்பு இருந்தது. நான் பல்கலைக்கழக விடுதியில் இருந்த காலத்தில் ஒரேயொரு முறை மாத்திரமே ஏதோ ஒரு பிரச்சனைக்கு அங்கு police வந்தது. தமிழ் சிங்கள மாணவர் பிரச்சனைகளை ஜேவிபியின் மாணவர் அமைப்பு பஞ்சாயத்து பண்ணிவைக்கும். ஆணையிறவை புலிகள் பிடித்தநேரம், உடல்கள் தெற்குக்கு வந்துகொண்டிருந்த  நேரம், அங்கு ஒரு இறுக்கமான நிலை இருந்தது. மட்டக்களப்பை சேர்ந்த ஒருத்தன் யாரோ ஒருவனோடு உள்ள பிரச்சனையில் வெடியை கொளுத்தி போட்டுவிட்டான். மற்ற சிங்கள மாணவர்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு அடிக்க ரெடியாக இருந்தார்கள், ஜேவிபி இற்கு நிலைமை புரிந்து தலையிட்டு தடுத்து விட்டார்கள். ஜேவிபி உறுப்பினர்கள் தனிய எல்லாம் அடிக்கமாட்டார்கள், அமைப்புரீதியாக இயங்குபவர்கள், கட்சி அடி என்றால் எங்களை போட்டுத்தாக்கி விடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

 

உந்தக் கோதாரி கண்றாவிகளுக்காகத் தான்

நான் பல்கலைப் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை.

😁😁😁😁😁😁😁

வாசித்தேன் சிரித்தேன்😁..................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இவர்களை யூனியில் ஜெப்பாஸ் என அழைப்பார்கள் எனக்கேள்வி.

ராகிங் என்ற பெயரில் சராசரிக்கு மேல் செல்வ பின்புலம் உள்ள மாணவர்களை கொடுமைப்படுத்துவார்களாம். உண்மையா?

நான் பார்த்த மட்டில் அமைச்சரவையில் அநேகம் பலவருட ஜேவிபி கொள்கையில் புடம் போட்டு வந்த ஆட்கள்தான் என நினைக்கிறேன்.

அமைச்சர்கள் ஆகியிருக்கும் தெரிந்த அல்லது கேள்விப்பட்ட சிலர் அவர்களின் நீண்டகால உறுப்பினர்களே. ஒரு தொழிற்சங்கம் போன்று முடிவுகள் எடுத்திருக்கின்றார்கள் என்றே தெரிகின்றது.

என்னுடைய காலத்தில் இவர்களை ஜெப்பாஸ் என்று அழைத்ததில்லை. பெரும் இழப்புகளைத் தாண்டி இவர்கள் மீண்டும் துளிர் விட்டுக் கொண்டிருந்த காலம் அது. பின்னர் அப்படி அழைத்திருக்கக்கூடும்.

இல்லை, இவர்கள் ராகிங்கில் ஈடுபடுவதில்லை. ஆனால் கண்களில் ஒரு அனல் பறந்து கொண்டே இருக்கும். பெரும் சந்தேக குணமும் உள்ளவர்கள். அந்த நாட்களில் பல்கலையில் இவர்களைப் போன்ற இனவாதிகளை பார்ப்பது மிகவும் அரிது. அது ஒரு ஆச்சரியமே.......... இது என்ன ஒரு புது வகையான மார்க்ஸிஸம் என்று தோன்றியது...............  

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

சரோசா -சிங்களத்திதான் எடுத்தார்....இந்த அமைச்சர்களின் முகமே அவர்களின் எதிர்கால நடவடிக்கையை புடம் போட்டுக் காட்டுகிறது

சரோ அக்கா குருபரனுக்கு அழகு தமிழில் கொடுத்த பேட்டி.

இப்போ விளங்குகிறதா @நிழலி மாத்தறையில் ஒரு சீட் வெல்ல எதை எல்லாம் இழக்க வேண்டும் என்பது?

இவர்கள்தான் மும்மொழி கொள்கையை நடைமுறை செய்ய போகிறார்கள்🤣.

அது சரி மைத்திரி ஆட்சியில் இருந்த மொழி அமலாக்கல் அமைச்சு இந்த முறையும் இல்லை என்பதை கவனித்தீர்களா?

 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

சரோ அக்கா குருபரனுக்கு அழகு தமிழில் கொடுத்த பேட்டி.

இப்போ விளங்குகிறதா @நிழலி மாத்தறையில் ஒரு சீட் வெல்ல எதை எல்லாம் இழக்க வேண்டும் என்பது?

இவர்கள்தான் மும்மொழி கொள்கையை நடைமுறை செய்ய போகிறார்கள்🤣.

அது சரி மைத்திரி ஆட்சியில் இருந்த மொழி அமலாக்கல் அமைச்சு இந்த முறையும் இல்லை என்பதை கவனித்தீர்களா?

 

இணைப்பக்கு நன்றி கோசான்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Sasi_varnam said:

தமிழ் முஸ்லீம்கள் என்று எழுதியதால் அப்படி ஒரு பொருள் தென்பட்டிருக்கும். தமிழர்கள் இருவர் இருக்கிறார்கள் என்பதை அறிவேன். திருத்தி உள்ளேன்

தமிழ் முஸ்லிம்கள் என்று எழுதினால் அவர்கள் முஸ்லிம்கள்  தான்  என்பது எனக்கே  😂 விளங்கும் அண்ணா  இலங்கை முஸ்லிம்கள் தமிழ் தான் பேசுகின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி @நீர்வேலியான் @ரசோதரன். நீங்கள் இருவரும் சில வருட இடை வெளியில் அக்பர் ஹால் வாசிகள் என்பது புரிகிறது.

நீர்வேலியானை போலவே, சென்ரல்பாங் குண்டு வெடிப்பு நேரம் நான் பள்ளியில் இருந்தேன். சத்தம் கேட்டு, விபரம் அறிந்தத்தும் எமது வகுப்பில் உள்ள பிரளிக்காரன் ஒருவன் டீச்சரின் மேசை மேல் ஏறி சென்ரல் பாங்க் கவிண்டிட்டாம் எண்டு பாட, இன்னும் கொஞ்ச பேர் அவனோடு சேர்ந்து கைதட்ட…சிங்கள மாணவர்கள் டென்சன் ஆகி விட்டார்கள். 

முழு வகுப்புக்கும் அடிப்போட பிளான் பண்ணுவதை அறிந்த பிரதி அதிபர் உடனடியாக வந்து எங்களை அரை நாளில் வீட்டுக்கு அனுப்பினார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்க வெளியில் இருந்து எடுத்து சாப்பிடலாம் தானே?

ஆமா..கொழும்பு கோட்டை மயூரா கபேயில் இருந்து எடுத்து சாப்பிடலாம்தானே..க கமக்கும் மணங்களுடன் மிகச் சுவையாக இருக்கும்.ரசோ பிரதமருக்கு மட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

 

முதல் பெண்மணி இல்லாத ஜனாதிபதி,அனுரவின் மனைவி எங்கே? முஸ்லிம் அமைச்சர்கள் இல்லையா?

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of golf and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரவை பேச்சாளராக நளிந்த ஜயதிஸ்ஸ நியமனம்

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டார்.

https://thinakkural.lk/article/312391

Edited by ஏராளன்
ளி

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:

அமைச்சரவை பேச்சாளராக நலிந்த ஜயதிஸ்ஸ நியமனம்

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டார்.

https://thinakkural.lk/article/312391

தினக்குரலே,

அவ்வளவு நலிந்து போயா இருக்கிறார் ஜயதிஸ்ஸ🤣.

#நளிந்த.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

தினக்குரலே,

அவ்வளவு நலிந்து போயா இருக்கிறார் ஜயதிஸ்ஸ🤣.

#நளிந்த.

செய்தியை இணைக்கும் ஆர்வத்தில் நலிந்தவை கவனிக்கவில்லை அண்ணை, திருத்தி விடுவம்!

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2024 at 00:48, nunavilan said:

முதல் பெண்மணி இல்லாத ஜனாதிபதி,அனுரவின் மனைவி எங்கே?

வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருக்கிறார் என கேள்விப்பட்டேன்.

1 minute ago, ஏராளன் said:

செய்தியை இணைக்கும் ஆர்வத்தில் நலிந்தவை கவனிக்கவில்லை அண்ணை, திருத்தி விடுவம்!

உங்கள் மேல் பிழை இல்லை - அவர்கள் போட்டபடியேதான் போடவேண்டும் என்பது விதியாயிற்றே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருக்கிறார் என கேள்விப்பட்டேன்.

இடதுசாரிகள் பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் காரணமாக தமது குடும்பங்களை வெளிப்படுத்த/முன்னுரிமை அளிப்பதில்லையாம் அண்ணை.

அவரின் மனைவி ஒன்றுவிட்ட சகோதரரின்(ஜேவிபியில் இருந்து கொல்லப்பட்ட) மனைவி என வாசித்த ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

இடதுசாரிகள் பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் காரணமாக தமது குடும்பங்களை வெளிப்படுத்த/முன்னுரிமை அளிப்பதில்லையாம் அண்ணை.

கதை கதையாம்…காரணமாம்🤣.

உண்மையான காரணம் வேறு. 

க்ளூ - ராதிகா நடித்து பேமஸ் ஆன சீரியல்🤣

பிரதமரும் தன் சிநேகிதி ஒருவருக்கு என விசேட புதிய பதவி ஒன்றை உருவாக்கியுள்ளார் என்கிறனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.