Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) வெளியிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் அறிக்கை போலியானது என தெரிவிக்கப்படுகிறது.

போரின் போது உயிர் நீர்த்தவர்களை நினைவு கூறுவது தொடர்பில் இந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் போரின் போது உயிர்நீர்த்தவர்களை நினைவு கூறுவதில் தமிழ் சமூகம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலி அறிக்கை

எனினும் இந்த ஆண்டு முதல் அவ்வாறு எவ்வித தொந்தரவுகளும் இன்றி நினைவு கூர சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் தமிழில் வெளியான அறிக்கையின் உண்மைத் தகவல் | Fake Report Regarding The Prez

இந்த அறிக்கை தொடர்பில் அரசாங்க தரப்பு எவ்வித அதிகாரபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை.

குறித்த அறிக்கை போலியானது என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் ஊடகத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

இந்த போலி அறிக்கை தொடர்பில் தேசிய ஊடகங்கள் எவையும் தகவல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/fake-report-regarding-the-prez-1731907660

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படியான லூசு வேலைகளால் இருக்கிறதையும் கெடுப்பது தான்…

இந்தியாவின் சதியாக இருக்குமோ???🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, MEERA said:

இப்படியான லூசு வேலைகளால் இருக்கிறதையும் கெடுப்பது தான்…

இந்தியாவின் சதியாக இருக்குமோ???🤔

இதை பார்த்தவுடன் புரிய வேணும் போலி என்று....ஆனால் எங்கன்ட படித்த லூசுகள் வட்சப்புக்களில்  வொவ்ர்ட் பண்ணி கொண்டிருக்குதுகள் ...அதில வேற அனுரா புராணம் பாடி கருத்து எழுதுங்கள்... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, MEERA said:

இப்படியான லூசு வேலைகளால் இருக்கிறதையும் கெடுப்பது தான்…

இந்தியாவின் சதியாக இருக்குமோ???🤔

வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், அவைதானிப்ப ஆப்பிழுத்த குரங்கின் நிலையில்...

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

31 minutes ago, putthan said:

இதை பார்த்தவுடன் புரிய வேணும் போலி என்று....ஆனால் எங்கன்ட படித்த லூசுகள் வட்சப்புக்களில்  வொவ்ர்ட் பண்ணி கொண்டிருக்குதுகள் ...அதில வேற அனுரா புராணம் பாடி கருத்து எழுதுங்கள்... 

எனக்கும் ஒரு****    அனுப்பி சுப்பரான சனாதிபதியாம்.

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, nochchi said:

வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், அவைதானிப்ப ஆப்பிழுத்த குரங்கின் நிலையில்...

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

எனக்கும் ஒரு****    அனுப்பி சுப்பரான சனாதிபதியாம்.

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி   

எமது தனித்துவத்தை இழந்து அவர்களுடன் இரண்டர கலந்தால் சூப்பர் சனதிபதியாக தன் தெரியும் 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போலித் தகவல் குறித்து தெளிவுபடுத்தல்!

image

தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் போலியானது ஆகும்.

போர்களில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு நவம்பர் மாதத்தில் பொது இடங்களில் நினைவேந்தல்களை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் போலியான  முறையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பம் இடப்பட்ட அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

இவ்வாறான அறிக்கை ஒன்று ஜனாதிபதி தரப்பிலிருந்து வெளியாகவில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே, சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலியான தகவல்கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

467479523_1223764788916407_4446039385849

https://www.virakesari.lk/article/199068

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கட மண்ணில எங்கட அடிப்படை உரிமயை கூட சிங்களவன் அனுமதித்தால் தான் அனுபவிக்கலாமாம். இது தான் எந்த சிங்களவன் ஆட்சிக்கு வந்தாலும் நிலை. 

அதுசரி.. யாழ்ப்பாணம் தெரிவு செய்த அனுர விசுவாசத் தமிழர்களின் நிலை நிலைப்பாடு என்னவோ..?! தேர்தலில் வென்றதும் கதையக் காணம்.

வாக்குப் போட்டவைக்கு உறைச்சால் சரி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, putthan said:
2 hours ago, nochchi said:

எமது தனித்துவத்தை இழந்து அவர்களுடன் இரண்டர கலந்தால் சூப்பர் சனதிபதியாக தன் தெரியும்

சூப்பர் ஜனதிபதி பற்றிய நெருப்பு பிரசாரங்களை வட்சப்பில் அனுப்பிவிட்டு நண்பர்களுக்கும் பகிர்ந்து அளியுங்கோ என்றும் கேட்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆமாமா அது உண்மையா இருக்க வாய்ப்பிருக்கு ஏனென்றால் அமெரிக்க அதிபர்கூட இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்காரே ....

hjj.jpg

இது யாரோ அநுர சொம்புகள் செய்த வேலை,

மாவீரர்நாளை சுதந்திரமாக நினைவுகூர மைத்திரி, ரணில் ஆட்சியிலேயே அனுமதித்துவிட்டார்கள்.

அநுர வந்து புதிதாக செய்ய என்ன இருக்கு? அநுர உங்களுக்கு பிடித்திருந்தால் அவர் புகழ் பாடுங்கள் தப்பில்லை, எதுக்கு விடாத அறிக்கையை விட்டதென்று சொல்லி  அண்டா கணக்குல உருட்டி விடுறீங்க?.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, valavan said:

சபாஷ்... பலே... அனுரவுக்கும், டிரம்புக்கும் சரியான போட்டி.  😂
ஹ்ம்ம்... நடக்கட்டும்.
 🤣 animiertes-gefuehl-smilies-bild-0091.gif

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

சூப்பர் ஜனதிபதி பற்றிய நெருப்பு பிரசாரங்களை வட்சப்பில் அனுப்பிவிட்டு நண்பர்களுக்கும் பகிர்ந்து அளியுங்கோ என்றும் கேட்கிறார்கள்

அதே நண்பர்கள் தான் தமிழ் தேசிய எம்.பிக்கள் ,மற்றும் முன்னாள் ஆயுதமெந்தி பின் ஜனநாயக நீரோட்டத்தில் நீந்திய எம்.பிக்கள் மீதும் அவதூறுகளை அந்த மாதிரி பரப்பினவையள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, valavan said:

ஆமாமா அது உண்மையா இருக்க வாய்ப்பிருக்கு ஏனென்றால் அமெரிக்க அதிபர்கூட இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்காரே ....

இது யாரோ அநுர சொம்புகள் செய்த வேலை,

.

"அமைதியான் சூழலை இயற்கை தான் உருவாக்கி தந்துள்ளது "என எழுதியுள்ளார்களே அங்க தான் வெளிப்படையாக தெரிகின்றது இடதுசாரி செம்பு,அனுரா சொம்பு என்பது ....வலதுசாரி எழுதியிருந்தால் இறைவன் ,கடவுள் என ......

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/11/2024 at 12:38, விளங்க நினைப்பவன் said:

சூப்பர் ஜனதிபதி பற்றிய நெருப்பு பிரசாரங்களை வட்சப்பில் அனுப்பிவிட்டு நண்பர்களுக்கும் பகிர்ந்து அளியுங்கோ என்றும் கேட்கிறார்கள்

இதனை யார் செய்திருந்தாலும், எமக்காகத்  தமிழ்த் தேசியம் என்ற தமிழினத்தின் இருப்புக்காகத் தம்மை ஈந்தளித்தோரை வணங்க்கும் மாதத்தில் தேவையற்ற குழம்பங்களுக்கு வழிசமைக்கலாம். அதேவேளை விமல், ரில்வின் போன்ற சானாதிபதியின் நிழற்குடைப் பரப்புரைகள் சும்மாவே ஆடுவார்கள்...... அப்படியிருக்கும்போது தமிழினம் ஏனிப்படி மறைகழண்டவர்கள்போல் யோசிக்கிறார்களோ தெரியவில்லை.

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது இந்தியாவின் அல்ல - பார் சிறியின் சதி.

மைத்திரி அரசு காலம் போல மட்டுபட்ட நினைவு கூறலை அனுமதிக்கும் முடிவு எப்போதோ எட்டப்பட்டு விட்டது.

ஆனால்

1. முதலில் அனுர அனுஸ்டிக்க விடுவாரா? விட்டால் அவர் நல்லவர் என்ற கருத்தியலை வலிந்து உருவாக்குவது.

2. இதன் ஒரு அங்கம்தான் இப்படியான பித்தலாட்ட வேலைகள். இவற்றை பரப்புவர்கள் யார் என பார்த்தால் - சுமந்திரன் - பார் சிறி உள் மோதலில், இவர்கள் சுமந்திரனை போட்டு வாங்கிய ஆட்கள் (அப்போதும் தாம் சிறியின் அடிப்பொடிகள் என்பதை வெளிக்காட்டவில்லை).

3. அனுஸ்டிக்க விட்டதும் - அனுர நல்லவர் என்ற பிம்பத்தை உருவாக்குவது.

4. இதை பயன்படுத்தி பார் பெர்மிட், சிறியின் இதர ஊழல்கள், அதிகார துஸ்பிரயோகங்களை அனுர கண்டுகொள்ளாமல் விட முயற்சிப்பது.

5. இதன் ஒரு அங்கம்தான் பார் சிறியின் இன்றைய அறிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, goshan_che said:

இது இந்தியாவின் அல்ல - பார் சிறியின் சதி.

இதற்கு உங்களிடம் ஆதாரம் உள்ளதா?

வாக்களித்த 30 ஆயிரம் மக்களை முட்டாள் ஆக்க முயற்சி செய்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, MEERA said:

இதற்கு உங்களிடம் ஆதாரம் உள்ளதா?

சதிக்கு ஆதாரம் கேட்கிறீர்களே ப்ரோ.

போலிக்காவை இந்திய சதி என நாம் அனைவரும் எழுதினோம். அப்போ மீராவிடம் யாரும் ஆதாரம் கேட்கவில்லைத்தானே?

சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் அந்த முடிவுக்கு வந்தேன்.

மேலே சந்தர்ப்ப சாட்சியத்தை நிரல்படுத்த்தி உள்ளேன்.

பிகு

பார் சிறி இலண்டன் வந்த போது, பவ்வியை சுற்றும் ஈ போல அவரை சுற்றிய சிலரை தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

நான் கேள்விக் குறியிட்டே எழுதினேன். ஆனால் நீங்கள் நேரடியாகவே குற்றம் சாட்டி தொடர்ந்து காரணங்களையும் எழுதியுள்ளீர்கள்.

பிகு: பவ்வியமற்றும் ஈ கூட்டம் நிச்சம் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் எனக்கு தெரியாது.

உங்களது சந்தர்ப்ப சாட்சியங்கள் யாழ் தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற ஒருவரை குற்றம் சாட்டும் தகுதியை உங்களுக்கு ஒருபோதும் வழங்காது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, MEERA said:

நான் கேள்விக் குறியிட்டே எழுதினேன். ஆனால் நீங்கள் நேரடியாகவே குற்றம் சாட்டி தொடர்ந்து காரணங்களையும் எழுதியுள்ளீர்கள்.

பிகு: பவ்வியமற்றும் ஈ கூட்டம் நிச்சம் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் எனக்கு தெரியாது.

ஓம்…நீங்கள் இந்தியா வை சந்தேகப்பட்டீர்கள். ஆகவே கேள்வி குறி போட்டீர்கள்.

நான் பார் சிறியையும், அவரின் புலம்பெயர் ஈக்களையும் குற்றம் சாட்டுகிறேன் (நீங்களும் நானும் போலிக்கா விடயத்தில் இந்தியாவை குற்றம் சாட்டியது போல).

பிகு

ஓம் நான் ஈக்களை எப்போதும் அவதானிப்பேன். கொடிய நோய் கிருமிகளை காவும் என்பதால்.

உங்களுக்கு ஈக்களை தெரியுமா இல்லையா என்பது இட்டு நான் எதுவும் கேட்கவில்லை.

17 minutes ago, MEERA said:

வாக்களித்த 30 ஆயிரம் மக்களை முட்டாள் ஆக்க முயற்சி செய்கிறீர்கள்.

எப்படி?

சுத்துமாத்து சுமனுக்கு போன தேர்தலில் 25,000 சொச்சம் வாக்களிதார்கள். அடுத்த 4 வருடத்தில் சுமனின் சுத்துமாத்தை எழுதிய எல்லோரும் அந்த வாக்காளரை முட்டாளாக்கினார்களா?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.