Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

7:30 நிமிடத்தில்

  • கருத்துக்கள உறவுகள்

கற்கோவளம் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு உத்தரவு!

12248207.jpg

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து பதின்நான்கு நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலமையகம் அறிவித்துள்ள நிலையில் இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடாத்தியிருந்ததுடன்  நில அளவை செய்வதற்கும் பல தடவைகள் முயற்சிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அனுர அரசாங்கம் பொறுப்பேற்று சில மணி நேரங்களில் இவ்வுத்தரவு இராணுவ தலமையகத்தால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)

https://newuthayan.com/article/கற்கோவளம்_இராணுவ_முகாமிலிருந்து_இராணுவத்தினரை_வெளியேறுமாறு_உத்தரவு!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் மிக  மகிழ்ச்சியான செய்தி. 👍🏽
நான் சொல்லித்தான் இராணுவம் வெளியேறியது என்று, 
பைத்தியக்கார… தமிழ் அரசியல் வியாதிகள் உரிமை கோராமல் இருக்க வேண்டும். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. 

இதை வரவேற்கும் அதே வேளை, அவர்களே அடாத்தாக தனியார் காணியை பிடித்து விட்டு இப்போ வெளியேறுகிறார்கள் என்பதையும் நாம் மறக்கக்கூடாது.

கள்ளன் களவெடுத்ததை மீட்க நாம் போராடியும் முடியவில்லை. இப்போ கள்ளனாக திருப்பி தருவதால் கள்ளன் காலில் விழுந்து நன்றி சொல்ல தேவையில்லை.

மீண்டும் இன்னொரு அரசாங்கம் வந்து எமது காணியை மீளப்பறிக்கலாம் - அப்படி பறிக்க முடியாத நிரந்தரத்தீர்வே எமது அபிலாசை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இத்தோடு நின்றுவிடாமல் காணி சொந்தக்காரருக்கு நஸ்டஈடும் வழங்க வேண்டும்.

யாராவது எந்த சிங்கள தமிழ் மகனாவது தமது வீட்டில் ஒரு அறையைக் கூட கொடுக்க மாட்டார்கள்.ஒரு இளநீர் பறித்தாலே கையை வெட்டப் போவார்கள்.

இலங்கையில் இன்று முகாம்களில் இருக்கம் மக்கள் அனைவருக்கும் எங்கோ ஓர் மூலையில் சொந்தமாக சிறு குடிசை என்றாலும் இருந்தது.

அவர்களையும் அவர்களது சொந்த இடத்தில் குடியேற ஆவன செய்ய வேண்டும்.
 
  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2024 at 02:03, தமிழ் சிறி said:

உண்மையில் மிக  மகிழ்ச்சியான செய்தி. 👍🏽
நான் சொல்லித்தான் இராணுவம் வெளியேறியது என்று, 
பைத்தியக்கார… தமிழ் அரசியல் வியாதிகள் உரிமை கோராமல் இருக்க வேண்டும். 😂 🤣

அந்த இடத்தில் பொங்கல் பொங்கவில்லை...பொங்கியிருந்தால் ..நம்ம ,காணிரோட்டு பொங்கல் சாப்பிடும் மன்னன்...வாழையிலை சுமந்திரன் ஆஜாராகி இருப்பாரே..

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, alvayan said:

அந்த இடத்தில் பொங்கல் பொங்கவில்லை...பொங்கியிருந்தால் ..நம்ம ,காணிரோட்டு பொங்கல் சாப்பிடும் மன்னன்...வாழையிலை சுமந்திரன் ஆஜாராகி இருப்பாரே..

பயத்தைப் பாருங்கள்,...🤣

எதை எடுத்தாலும் சுமந்திரன, சுமந்திரன்,! சுமந்திரன்,..  😁

சும் என்றாலே நடு நடுங்குதில்ல,....அப்படியே அந்தப் பயம் இருக்கட்டும்,....🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

பயத்தைப் பாருங்கள்,...🤣

எதை எடுத்தாலும் சுமந்திரன, சுமந்திரன்,! சுமந்திரன்,..  😁

சும் என்றாலே நடு நடுங்குதில்ல,....அப்படியே அந்தப் பயம் இருக்கட்டும்,....🤣

அந்த குப்பைக்கு யாரும் பயப்படவில்லை .....சனியன் தொலையவேண்டும் என்ற ஆவல் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழன்பன் said:

அந்த குப்பைக்கு யாரும் பயப்படவில்லை .....சனியன் தொலையவேண்டும் என்ற ஆவல் 

அல்வாயனின் எழுத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே,..😁

(ஆளாளுக்கு பக்க வாத்தியம்மா? 🤣)

  • கருத்துக்கள உறவுகள்
On 22/11/2024 at 15:48, Kapithan said:

அல்வாயனின் எழுத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே,..😁

(ஆளாளுக்கு பக்க வாத்தியம்மா? 🤣)

சனியன் சும்மா விலகாது அதுவும் சுமா கெட்ட சனியன் உங்களுக்கு அது சந்தோசமா ..... இப்ப தானே தூக்கி எறிந்துள்ளோம் ...தமிழ் அரசியலில் இருந்து அந்த விசமியை எறிய ரொம்ப நாளாகாது .

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கற்கோவளம் இராணுவ முகாமில் இருந்து; படையினர் வெளியேற வேண்டும்

army-camp.jpg

யாழ். வடமராட்சி, பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள.

இராணுவ முகாமிம் இருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு, இராணுவத் தலைமையகத்தால் உத்தரவிடப்பட்ட போதிலும், இன்னமும் இராணுவத்தினர் வெளியேறவில்லை.

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் 18ஆம் திகதி பொறுப்பேற்றிருந்தது.

அமைச்சரவை பொறுப்பேற்று சில மணிநேரங்களில், பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து 14 நாள்களுக்குள் படையினர் வெளியேற வேண்டும் என்ற உத்தரவு இராணுவத் தலைமையகத்தால் பிறப்பிக்கப்பட்டது.

எனினும், 14 நாள்களுக்கு மேலாகியும், இந்த முகாம் இராணுவத்தினரின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவில்லை.

தொடர்ந்தும் அந்தத் தனியார் காணியும், இராணுவ முகாமும் படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

எனவே, வாக்குறுதி வழங்கி மக்களை ஏமாற்றாது, அங்கிருந்து படையினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த இராணுவ முகாமை அகற்றுமாறும், இராணுவத்தை வெளியேறுமாறும் மக்களும், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் கடந்த காலங்களில் பல கவனவீர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

குறித்த காணியை ஆக்கிரமிக்கும் வகையில் நில அளவீடு செய்வதற்குப் பல தடவைகள் முயற்சிகள் செய்யப்பட்டிருந்த போதிலும் மக்களின் எதிர்ப்பால் அந்தப் பணிகள் தடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://akkinikkunchu.com/?p=302347

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் வெளியேறிய பின் களவு கூடிவிட்டது என்று கூறி மீண்டும் வருமாறு மக்கள் போராட்டம் செய்யாவிட்டால் சரி. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

வாக்குறுதி வழங்கி மக்களை ஏமாற்றாது, அங்கிருந்து படையினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதே மக்கள்தான் இராணுவம் வெளியேறக்கூடாது, அவர்கள் வெளியேறினால் தமக்கு பாதுகாப்பில்லை என்று கூறி போராட்டம் செய்தார்கள் முன்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

இராணுவ முகாமிம் இருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு, இராணுவத் தலைமையகத்தால் உத்தரவிடப்பட்ட போதிலும், இன்னமும் இராணுவத்தினர் வெளியேறவில்லை.

அனுர பிரிகேட் எந்தவகையில் இதற்கு முட்டு கொடுக்கும்?🤔

9 hours ago, satan said:

இதே மக்கள்தான் இராணுவம் வெளியேறக்கூடாது, அவர்கள் வெளியேறினால் தமக்கு பாதுகாப்பில்லை என்று கூறி போராட்டம் செய்தார்கள் முன்பு. 

இதோ…இப்படி

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் வெளியேறினால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கற்கோவளம் மக்கள் போராடினார்களா....................😶.

யாரிடம் இருந்து இவர்களுக்கு ஆபத்து வரும்................. இந்திய மீனவர்களிடம் இருந்தா, அவர்கள் கற்கோவளம் கடற்கரையில் வந்து இறங்கிவிடுவார்களா..................

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

இதே மக்கள்தான் இராணுவம் வெளியேறக்கூடாது, அவர்கள் வெளியேறினால் தமக்கு பாதுகாப்பில்லை என்று கூறி போராட்டம் செய்தார்கள் முன்பு. 

காணாமல் போனவர்களுக்காகவும் மக்கள் போராடுகிறார்கள். அதெல்லாம் கணக்கில் எடுக்க மாட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இராணுவம் வெளியேறினால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கற்கோவளம் மக்கள் போராடினார்களா....................😶.

யாரிடம் இருந்து இவர்களுக்கு ஆபத்து வரும்................. இந்திய மீனவர்களிடம் இருந்தா, அவர்கள் கற்கோவளம் கடற்கரையில் வந்து இறங்கிவிடுவார்களா..................

மக்கள் போராட இல்லை, பல வருடம் முன்னர் இராணுவ புலானாய்வு போராடியதாக சொன்னார்கள்.

ஆவா குழு ஆட்டம் போட்ட நேரம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

மக்கள் போராட இல்லை, பல வருடம் முன்னர் இராணுவ புலானாய்வு போராடியதாக சொன்னார்கள்.

ஆவா குழு ஆட்டம் போட்ட நேரம்.

👍.............

தானாகச் சேர்ந்த கூட்டமோ என்று ஒரு கணம் ஆடிப் போய்விட்டேன்............

எத்தனை எத்தனை இராணுவ முகாம்கள் அந்தப் பகுதியில்.............. எல்லாவற்றையும் மூடிப் போட்டு, எல்லா இராணுவத்தினரையும் கொண்டு போய் பலாலியில் இறக்கிவிடலாம்............

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

மக்கள் போராட இல்லை, பல வருடம் முன்னர் இராணுவ புலானாய்வு போராடியதாக சொன்னார்கள்.

ஆவா குழு ஆட்டம் போட்ட நேரம்.

ஏன் ஏராளன், இதே முகாமுக்கு முன் மக்கள் கூடி நின்று இராணுவத்தை அகற்றவேண்டாமென போராட்டம் செய்யும் போது படத்துடன் பத்திரிகைகளில் வெளி வந்ததே? அதை ஒருக்கா முடிந்தால் தயவு செய்து தேடியெடுத்து இணைத்து விடவும். அன்றைய படமும் இன்றைய படமும் ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால் போராட்டத்தின் காரணம்  மட்டும் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. போதைப்பொருள் கடத்தல், அடாவடி நடக்கிறது. போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை, ஆகவே இராணுவ பாதுகாப்பு தங்களுக்கு வேண்டுமென்று போராடினார்களே? அது வேறை பிரதேச மக்களா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

அந்த திரிக்கு வந்த பின்னூட்டத்தின் அடிப்படையில்தான் என் மேலய கருத்து இருந்தது.

——-

இதோ அந்த திரி…

அந்த திரியில் நம்ம @satan எழுதியது👇

சரத் வீரசேகர சொன்னது, தான் காரைநகரில் கடமையாற்றியபோது தனக்கு இடமாற்றம் வந்தபோது அங்குள்ள மக்கள் அவரின் இடமாற்றத்தை எதிர்த்து மனு அளித்தனராம். இதே போன்று வடமாகாணத்தில் இருந்த படைத்தளபதி பெயரை மறந்துவிட்டேன், அவரை இடமாற்ற வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்தனர்.  தன்மானம் இல்லாத எடுப்பார் கைப்பிள்ளைகள் எப்போதும் எல்லோர் பின்னாலும் திரிவார்கள் அவர்களை சிங்களம் பயன்படுத்துவது ஒன்றும் புதிதில்லை. வடக்கில் பணிபுரியும் சிங்கள போலீஸ், இராணுவ படைகள் தாங்கள் இடமாற்றம் செய்யப்படுவதை விரும்புவதில்லை, தங்களுக்கு தெரிந்த மக்களை அதற்கு எதிராக மனு அளிக்கும்படி கேட்பதுண்டு. கைலஞ்சம், சொகுசான வாழ்க்கை, போராட்ட காலத்தில் கூடுதல் சம்பளம்.

இதுதான் சிங்களத்தின் மாபெரும் வெற்றி. போரின் போது பெற்றது வெறும் இடம் சம்பந்தமானது. இது மனம் சம்பந்தமானது. அடிமைகளுக்கு யார் வந்தாலும் பின்னால் போகத்தயார். தமிழ் மக்கள் பிரிவினை கோரவில்லை, அவர்கள் எங்கள் அடிமைகளாக இருக்க பூரண சம்மதம்! சிங்களத்துக்கு பிரச்சாரம் செய்ய நல்லதொரு செய்தி. ஒரு முசுறு கடிக்க, கூட்டோடு நசுக்கப்படுகிற கதை.

ஒரே விடயத்தை எப்படி மாத்தி, மாத்தி எழுதியுள்ளார் என்பதை - வாசகர் பார்வைக்கே விடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோசான் இணைப்பிற்கு! நமது மக்களின் மனோநிலை இவ்வளவு சீக்கிரம் மாறுகிறது என்பதற்கு இது உதாரணம். அதேபோல் நாமளும் செய்திகளை மாற்றுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தன்மானம் இல்லாத எடுப்பார் கைப்பிள்ளைகள் எப்போதும் எல்லோர் பின்னாலும் திரிவார்கள்

அவர்களை சிங்களம் பயன்படுத்துவது ஒன்றும் புதிதில்லை.

இதுதான் சிங்களத்தின் மாபெரும் வெற்றி.
இது மனம் சம்பந்தமானது.
அடிமைகளுக்கு யார் வந்தாலும் பின்னால் போகத்தயார்.  

சிங்களத்துக்கு பிரச்சாரம் செய்ய நல்லதொரு செய்தி.
ஒரு முசுறு கடிக்க, கூட்டோடு நசுக்கப்படுகிற கதை.]

@goshan_che

படித்தேன் புல்லு அரிக்குது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.