Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

image

ரஸ்யா உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

ரஸ்ய உக்ரைன் போரில் ரஸ்யா முதல்தடவையாக இந்த ஆயுதத்தை பயன்படுத்தியுள்ளது.

எனினும் இது குறித்து ரஸ்யா கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.

இன்று அதிகாலை தாக்குதலின் போது அஸ்ட்ராகன் பகுதியிலிருந்து ஐசிபிஎம் ஏவுகணையை ரஸ்யா செலுத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. நிப்ரோவை பல்வேறு ஏவுகணைகளால் ரஸ்யா இலக்குவைத்தது என உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

ரஸ்யாவின் ஆறு கேஎச்-101 ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஸ்யா மீது தனது ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கிய மறுநாள் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

https://www.virakesari.lk/article/199338

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உறுதிப்படுத்தப்படாத செய்தி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, Kapithan said:

உறுதிப்படுத்தப்படாத செய்தி. 

எந்த‌ உல‌கில் நீங்க‌ள் வாழுறீங்க‌ள் அண்ணா☹️.................

33 minutes ago, Kapithan said:

உறுதிப்படுத்தப்படாத செய்தி. 

 

 ர‌ஸ்சியா ஏவிய‌ கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல இந்த‌க் காணொளியின் ஆர‌ம்ப‌த்தில் இருக்கு................செல‌ன்ஸ்கி என்ன‌ செய்வ‌து ஏது செய்வ‌து தெரியாம‌ புல‌ம்புகிறார் ஹா ஹா😁.................

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வீரப் பையன்26 said:

எந்த‌ உல‌கில் நீங்க‌ள் வாழுறீங்க‌ள் அண்ணா☹️.................

 

 ர‌ஸ்சியா ஏவிய‌ கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல இந்த‌க் காணொளியின் ஆர‌ம்ப‌த்தில் இருக்கு................செல‌ன்ஸ்கி என்ன‌ செய்வ‌து ஏது செய்வ‌து தெரியாம‌ புல‌ம்புகிறார் ஹா ஹா😁.................

 

புலிக் குட்டி, 

தயவுசெய்து உந்த குப்பை கூழங்களைத் தவிர்த்து வேறு ஏதாவது ஓரளவாவது  நம்பகமான தகவல் மூலங்களை நாடுங்கள். 

உந்த ஈயடிச்சான் குஞ்சுளை உங்க இணைக்காதேயுங்கோ, உங்களுக்குப் புண்ணியமாப் போகும். 

கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை  பாவித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறதே  தவிர அந்தச் செய்தி தற்போதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. பாவிக்கப்பட்ட ஏவுகணையின் பாகங்களை ஆராய்ந்து பார்த்த பின்னரே உறுதிப்படுத்த முடியும்  என்று உக்ரேன்  தரப்பு கூறியுள்ளது. 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kapithan said:

புலிக் குட்டி, 

தயவுசெய்து உந்த குப்பை கூழங்களைத் தவிர்த்து வேறு ஏதாவது ஓரளவாவது  நம்பகமான தகவல் மூலங்களை நாடுங்கள். 

உந்த ஈயடிச்சான் குஞ்சுளை உங்க இணைக்காதேயுங்கோ, உங்களுக்குப் புண்ணியமாப் போகும். 

கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை  பாவித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறதே  தவிர அந்தச் செய்தி தற்போதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. பாவிக்கப்பட்ட ஏவுகணையின் பாகங்களை ஆராய்ந்து பார்த்த பின்னரே உறுதிப்படுத்த முடியும்  என்று உக்ரேன்  தரப்பு கூறியுள்ளது. 

உக்கிரேன் எப்ப‌ உண்மைய‌ சொல்லி இருக்கு
புழுகு மூட்டை செல‌ன்ஸ்கியிட‌ம் உண்மைய‌ எதிர் பார்ப்ப‌து முட்டாள் த‌ன‌ம்

விக்கி ர‌ஸ்சிய‌ ஊட‌க‌ங்க‌ளில் வ‌ரும் செய்திய‌ தான் மொழி பேர்த்து த‌மிழில் சொல்லுகிறார்.............................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வீரப் பையன்26 said:

உக்கிரேன் எப்ப‌ உண்மைய‌ சொல்லி இருக்கு
புழுகு மூட்டை செல‌ன்ஸ்கியிட‌ம் உண்மைய‌ எதிர் பார்ப்ப‌து முட்டாள் த‌ன‌ம்

விக்கி ர‌ஸ்சிய‌ ஊட‌க‌ங்க‌ளில் வ‌ரும் செய்திய‌ தான் மொழி பேர்த்து த‌மிழில் சொல்லுகிறார்.............................

புரின் சொன்னால் நம்புவீர்களா😂?

"...President Vladimir Putin says this morning's attack in the central Ukrainian city of Dnipro was carried out with a "new conventional intermediate range" missile. It was code-named Oreshnik, he adds."

நடுத்தர வீச்சுடைய, ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் (Mach 10) செல்லும் hyper-sonic missile ஏவினோம் என்று புரின் சொல்லியிருக்கிறார். இது, இது வரை ஏவப் படாத வகையாக இருந்தாலும், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ICBM ஏவுகணை அல்ல. இதை அமெரிக்காவும், ஏனைய மேற்கு நாடுகளும் சொன்ன பிறகு புரின் சொல்லியிருக்கிறார்.

இந்த யூ ரியூபர்களின் குப்பைகளை இணைத்து யாழின் சேர்வர் இடத்தை வீணாக்குகிறீர்கள். மோகனின் பாங்க் பலன்சுக்கு வந்த சோதனையாக இருக்கப் போகிறது😂!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரம் வந்து போரை நிற்பாட்டினால் அவரவர் பிடித்த இடங்களில் நிரந்தரமாக நிற்பார்கள்.

எனவே இடைப்பட்ட காலத்திற்கு இருபகுதியும் மும்முரமாக அடிபடலாம்.

7 hours ago, ஏராளன் said:

ரஸ்யா உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இதுகளை வெளியே வரவைக்கவே அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணைகளைக் கொடுத்து அடிக்க வைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

புரின் சொன்னால் நம்புவீர்களா😂?

நீங்கள் பைடன் சொல்வதையும்,சிஎன்என்,பிபிசி சொல்வதை நம்பும் போது மற்றவர்கள் புட்டின் சொல்வதையும் ரஷ்ய ஊடகங்கள் சொல்வதையும் ஏன் நம்பக்கூடாது? :cool:

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வீரபையன் உறவுக்கு புலி குட்டி என்று ஒரு பெயரும் இருக்கின்றதோ😆

இல்லை உற‌வே அது அவ‌ராக‌ என‌க்கு சூட்டிய‌ பெய‌ர் ஹா ஹா😁....................

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வீரபையன் உறவுக்கு புலி குட்டி என்று ஒரு பெயரும் இருக்கின்றதோ😆

😁 குறியிட்டது அதற்காக என்பதை புரிந்துகொண்டேன். 

19 minutes ago, வீரப் பையன்26 said:

இல்லை உற‌வே அது அவ‌ராக‌ என‌க்கு சூட்டிய‌ பெய‌ர் ஹா ஹா😁....................

 

 

எந்த நேரமும் உறுமியபடி இருப்பதால்,.😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பயன்படுத்தியே தாக்கினோம் - புட்டின்

image

ரஸ்யா புதிய கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பயன்படுத்தியே உக்ரைனின் நிப்ரோ நகரின் மீது தாக்குதலை மேற்கொண்டதுஎன என  ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பிரிட்டனின் நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலிற்கு பதிலடியே இந்த தாக்குதல் என அவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகளின் ஆயுததளபாட தொழிற்சாலைகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும் என புட்டின் எச்சரித்துள்ளார்.

அஸ்ட்ராகன் பகுதியிலிருந்து ஐசிபிஎம் ஏவுகணையை ரஸ்யா செலுத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. நிப்ரோவை பல்வேறு ஏவுகணைகளால் ரஸ்யா இலக்குவைத்தது என உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

ரஸ்யாவின் ஆறு கேஎச்-101 ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஸ்யா மீது தனது ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கிய மறுநாள் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

https://www.virakesari.lk/article/199399

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில் ஒரு புதினமும் இல்லை. அதாவது ஏவுகணையை ருசியா பாவித்ததில், அதுவும் பரீரட்சார்த்த மத்திம தூர வீச்சு ஏவுகணையை.

ஏனெனில், us, நேட்டோ எல்லா ஏவுகணை தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலத்தி விட்டது 


அனால், இது சொல்லும் செய்தி, ஐரோப்பாவிக்கும், ருசியாவுக்கும் இடையில் ஏவுகணை தாக்குதலில் சுதாகரிக்கும் நேரம் இல்லை.

அதேபோல, ருஷ்ய அமெரிக்காய் பொறுத்தவரையிலும், அந்த நேரத்தை கொடுக்காது (ஆர்டிக்  இல் ரசிய நமது வரும் இராணுவத்தளங்கள், ஏவுகணை தளங்கள் முழு வடஇருபவையம் அமெரிக்கா கனடாவை குறிவைக்கும் )

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

ழே சொல்லப்பட்டு இருக்கும் ஆய்வில் இருக்கும் ஏவுணை அச்சுறுத்தலுக்கும், உக்கிரைன் இல் ரஷ்யா செய்யும் விசேட ராணுவ நடவடிக்கைக்கும் தொடர்பு இருக்கிறது 

https://carnegieendowment.org/posts/2021/12/the-us-exit-from-the-anti-ballistic-missile-treaty-has-fueled-a-new-arms-race?lang=en

The U.S. Exit From the Anti-Ballistic Missile Treaty Has Fueled a New Arms Race

Bush claimed the United States needed to leave the treaty to protect itself. Now it’s clear that was a mistake.

by James M. Acton

Published on December 13, 2021

The Nuclear Policy Program aims to reduce the risk of nuclear war. Our experts diagnose acute risks stemming from technical and geopolitical developments, generate pragmatic solutions, and use our global network to advance risk-reduction policies. Our work covers deterrence, disarmament, arms control, nonproliferation, and nuclear energy.

Twenty years ago today, then­-president George W. Bush announced that the United States would withdraw from the Anti-Ballistic Missile (ABM) Treaty. This cornerstone of the Cold War arms control regime, signed in 1972, sought to cap the arms race by limiting homeland missile defenses, thus reducing pressures on the superpowers to build more nuclear weapons. Bush, however, claimed that the treaty had outlived its purpose, since “the hostility that once led both our countries to keep thousands of nuclear weapons on hair-trigger alert” had died alongside the Soviet Union. Instead, three months after September 11, 2001, he argued that the treaty was hindering the United States from protecting itself against “terrorists” and “rogue states.”

It’s clear now that withdrawing was an epic mistake. The United States’ homeland missile defenses are porous; why else would Washington worry that North Korea is deploying intercontinental ballistic missiles (ICBMs)? Yet those defenses have succeeded in fueling arms races with Russia, whose hostility toward the United States is alive and well, and now with China too. This experience should prompt Washington to try to negotiate new limits on missile defenses, and it provides a cautionary tale about the very real costs of withdrawing from international agreements.

Bush’s central contention was that the treaty “prevents us from developing effective defenses.” He was wrong on two counts.

First, the treaty wasn’t the problem. Physics was. And engineering. And program management. And budgets

Homeland missile defense is fiendishly difficult, and there are good reasons to doubt the efficacy of the United States’ system. The system’s test record is 11 for 19: great for baseball, not so much for intercepting nuclear-armed ICBMs. In the real world, the system’s performance would likely be much worse—partly because in the tests the hitter knew which pitch was coming and partly because testing conditions have not been realistic.

No U.S. test has ever involved a target missile traveling at the speed necessary to reach the lower 48 states from North Korea. No test ever has involved a salvo of two or more incoming ICBMs or has appeared to have included realistic countermeasures, such as decoys shaped like real warheads. Only one test was conducted at night, when the incoming missile was not illuminated by the sun, and it was a failure.

So if North Korea fires a single, simple ICBM at Alaska during the daytime, then we should be fine—if the we spot the launch preparations and get lucky.

The second problem with Bush’s argument was that the United States did not need to leave the ABM Treaty to legally deploy defenses against North Korea, the system’s current focus. The agreement permitted the United States to field up to one hundred interceptors around ICBM silos in North Dakota—an arrangement that would have been roughly about as effective as (or no more ineffective than) the forty-four interceptors that the United States has deployed in Alaska and California since 2001. Yet, even though the United States’ homeland missile defenses do not provide effective protection against North Korea, they have stirred deep concerns in China and Russia.

As a matter of policy, the United States does not aim to defend the homeland against a Chinese or Russian nuclear attack; rather, it seeks to deter such attacks through the threat of retaliation. However, both Beijing and Moscow worry that, in the future, the United States may be able to deploy missile defenses capable of negating their nuclear forces and leaving them vulnerable to coercion. They have responded accordingly.

In 2018, Russian President Vladimir Putin gleefully unveiled a range of new developmental nuclear delivery systems—an intercontinental hypersonic glider, a nuclear-powered cruise missile, and a nuclear-powered torpedo—that he stated were a response to the demise of the ABM Treaty. History appears to back him up. The glider, which has now been deployed, was first tested in about 2004—just two years after the U.S. withdrawal took effect.

China is following suit. It has armed some ICBMs with multiple warheads. This summer, it conducted two tests of an orbital weapon capable of delivering a hypersonic glider (an unpowered reentry vehicle that glides in the atmosphere faster than five times the speed of sound). U.S. officials have stated that China is “looking at” nuclear-powered delivery systems. In 2020, the U.S. general who was then responsible for defending North America argued that China’s aim is to ensure that, after absorbing a preemptive U.S. attack, its surviving nuclear weapons can penetrate U.S. defenses.

The tens of billions of dollars that the United States has poured into homeland missile defense since 2001 have proved ineffective, and they have fueled arms races with China and Russia that have undermined U.S. security. President Joe Biden’s administration has sensibly identified arms control as a way to manage these growing dangers. A willingness to negotiate new limits on homeland missile defenses—in return for significant concessions from China and Russia—should be part of its approach.

There’s a more general lesson here, one that the United States’ withdrawal from the Iran nuclear deal also demonstrates: No international agreement is perfect, but before withdrawing, the United States needs to do more than simply assess the benefits of leaving. It also needs to take a long, hard, and unsentimental look at the costs.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, குமாரசாமி said:

நீங்கள் பைடன் சொல்வதையும்,சிஎன்என்,பிபிசி சொல்வதை நம்பும் போது மற்றவர்கள் புட்டின் சொல்வதையும் ரஷ்ய ஊடகங்கள் சொல்வதையும் ஏன் நம்பக்கூடாது? :cool:

"புரின் சொல்வதை நம்புங்கள்" என்று தான் எழுதியிருக்கிறேன். ஆனால், "புரின் புரியன்மாருக்கே" உரிய மிகையுணர்திறன் காரணமாக, உடனே என் சட்டைக் கொலரைப் பிடித்து விட்டீர்கள்😎.

(👇உங்களுக்கான பதில் அல்ல)

புரின் சொன்னாலும், பைடன் சொன்னாலும், "பேராண்டி" சொன்னாலும், றொக்கற் பௌதீகவியல்  ஒன்று தான்: ஏவுகணைகளின் பறப்புப் பாதையைப் பொறுத்து இரண்டு வகை: ஒன்று நேராகப் பறக்கும் cruise missile, மற்றது வளைவுப் பாதையில் மேலெழுந்து பின் கீழ் நோக்கி வரும் ballistic missile. நவீன கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ICBM ஏவுகணைகள் எல்லாமே ballistic தான். ஆனால், ballistic missile எல்லாம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ICBM ஏவுகணைகள் அல்ல. ஏன்? ஏவுகணை செல்லும் தூரத்தை (range) வைத்துத் தான் அது கண்டம் விட்டுக் கண்டம் பாயுமா என்று வகைப் படுத்துவர். இந்த தூரத்தைப் பொறுத்த வரையில், இது கண்டம் பாயும் ஏவுகணை அல்ல.

https://armscontrolcenter.org/wp-content/uploads/2017/04/Ballistic-vs.-Cruise-Missiles-Fact-Sheet.pdf

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  வீடியோ இல் சுருக்கமாக விபரங்கள் இருக்கிறது 

ஆயினும், ருசியா அணுஆயுத தாக்குதல் அபாய குறைப்பு தொடர்பாடல்கள் வசதியின் வழியே US க்கு அறிவித்து விட்டே செய்து இருக்கிறது (US பேச்சாளர் சொல்வது).  

Rand ஆய்வாளர் சொல்லுவது, ரஷ்யாவால் சொல்லப்படும் செய்தி 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இன்றைய பிரெஞ்சு செய்திகளின் படி:

ரசியா நீண்ட தூரம் போகக்கூடிய ஏவுகணைகளை பக்கத்தில் உள்ள உக்ரைன் மீது ஏவியிருக்கிறது. (அப்படி புட்டின் அறிக்கை விடுகிறார்)

இதில் அச்சம் என்னவென்றால் இதன் வேகம் அதிகம் என்பதால் அதனை தடுப்பது கடினம். அந்த நிலையில் இதில் அணுவை வைத்து அனுப்பினால்???

இன்னொன்றையும் சொன்னார்கள் இந்த ஏவுகணையின் இருப்பு  ரசியாவிடம் மிக மிக குறைவு. 

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்யா முதல் முறையாக யுக்ரேன் மீது ஏவிய 'ஒராஷ்னிக்' ஏவுகணை - இதன் ரகசியம் என்ன?

ரஷ்யா யுக்ரேன் போர், Oreshnik ஏவுகணை

பட மூலாதாரம்,REUTERS, TASS, BBC

25 நவம்பர் 2024

நவம்பர் 21-ஆம் தேதி அன்று அதிகாலை யுக்ரேன் நகரமான டினிப்ரோவை ரஷ்யா தாக்கியது. ஆரம்பத்தில், இந்த தாக்குதலில் ரஷ்யா பயன்படுத்திய ஆயுதம் பற்றி அதிகம் அறியப்படவில்லை. அது எந்த வகையான ஏவுகணை என்பது கூட தெரியவில்லை.

பிபிசி ரஷ்ய சேவையின் ராணுவ விவகாரங்கள் தொடர்பான செய்தியாளர் பாவெல் அக்செனோவ் இந்த ஏவுகணையை பற்றிய ஆதாரங்களையும், இதனை பயன்படுத்த முடிவு செய்ததன் மூலம் யுக்ரேன் மற்றும் மேற்கு நாடுகளுக்கு புதின் என்ன சமிக்ஞையை அனுப்ப முயற்சிக்கிறார் என்பதையும் பற்றி ஆய்வு செய்தார்.

யுக்ரேனில் கிழக்கு பகுதியில் உள்ள நகரமான டினிப்ரோவின் மீது ஒரு புதிய நடுத்தர வகை ஏவுகணையான ஒராஷ்னிக்கை பயன்படுத்தியதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார்.

யுக்ரேன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது கேடர் ஏவுகணை என்று அந்நாடு கூறி வருகிறது. இந்த ஆயுதம் என்னவாக இருக்கும் என்பதை அறிய சாத்தியகூறுகள் குறைவாகவே உள்ளன.

 
 

குறிப்பாக, பல புலனாய்வு அமைப்புகளால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும் ஒரு பிராந்தியத்தில், இவ்வளவு தூரத்தில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதை கவனிக்காமல் இருந்திருக்க முடியாது.

ஏவுகணைகள் வானில் பறந்து வரும்போது தெளிவாகத் தெரியும், குறிப்பாக அதன் ராக்கெட்டின் எஞ்ஜினிலிருந்து வெளியேறும் நெருப்பினை செயற்கைக்கோள்கள் மற்றும் உளவு விமானங்களால் கூட பார்க்க இயலும்.

சோதனை முயற்சிகளின்போதோ அல்லது பயிற்சியின் போதோ ஏவுகணைகள் வெளியிடும் நெருப்பின் விதத்தை வைத்தே அதை பற்றி பல விஷயங்கள் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு புதிய ஏவுகணை ஏவப்பட்டது குறித்த தரவுகளை ஆய்வு செய்வதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் அதை பற்றி நிறைய கண்டுபிடிக்கலாம்.

மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் இந்த ஏவுகணையின் வகையை பற்றி மிகவும் துல்லியமான கண்டுபிடிப்புகளை வைத்திருந்தாலும், அந்த தரவுகளை அவர்கள் இன்னும் வெளியிடவில்லை.

பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களில் உள்ள வர்ணனையாளர்களும், நிபுணர்களும் இந்த ஏவுகணை பற்றி தங்களது சொந்த கணிப்புகளை தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை ஏவுகணையான ரூபேஸை (Rubezh) நடுத்தர வகை தாக்குதலுக்கு பயன்படுத்தியது என்பதே பலரும் தெரிவித்த கருத்தாகும்.

 
ரஷ்யா யுக்ரேன் போர், Oreshnik ஏவுகணை

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, ஏவுகணை தாக்குதல் பற்றி ரஷ்ய தொலைக்காட்சியில் அதிபர் புதின் அறிவித்தார்

ஒராஷ்னிக் பற்றி நமக்கு தெரிந்தது என்ன?

இந்த ஏவுகணையில் அணு ஆயுதம் அல்லாத வெடிபொருட்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அது மாக் 10 வேகத்தில் அதாவது விநாடிக்கு சுமார் 2.5 முதல் 3 கிலோமீட்டர் வேகத்தில் சென்று இலக்குகளைத் தாக்கக்கூடும் என்று அதிபர் புதின் கூறினார்.

இந்த ஏவுகணையில் தனியாக பிரிந்து சென்று வெடிக்கும் குண்டு பகுதி பொருத்தப்பட்டிருந்தன. இதுவே வர்ணனையாளர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

டினிப்ரோவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ, ஆறு கூட்டு பொருட்கள் தரையில் விழுவதை காட்டுகிறது. அதில் ஒவ்வொன்றிலும் சுமார் ஆறு ஒளிரும் தன்மை கொண்ட பொருட்களும் இருந்தன.

இதுபோன்ற ஏவுகணைக்கு இது மிகப் பெரிய எண்ணிக்கை. எனினும், தரையில் வெடிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்த ஒளிரும் தன்மை கொண்ட பொருட்கள் கைனடிக் (kinetic) குண்டுகளாக இருக்கலாம் என்பதை குறிக்கிறது.

இவை அளவில் மாறுபடலாம். தாக்குதலின் சமயத்தில் ஏவப்படும்போது உருவாகும் கைனடிக் ஆற்றலை பயன்படுத்தி அவை இலக்கை அழிக்க முயற்சி செய்கின்றன. அதிக வேகத்தை பொறுத்து இதன் ஆற்றல் அதிகமாக இருக்கும்.

ரஷ்யாவின் அஸ்ட்ராகான் பகுதியில் உள்ள கபுஸ்டின் யார் சோதனை தளத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக பல்வேறு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்படியானால், இந்த ஏவுகணை சுமார் 800 முதல் 850 கிமீ தூரத்தில் இருந்துதான் எவப்பட்டுள்ளது.

விளாடிமிர் புதின் ஒராஷ்னிக்கை நடுத்தர வகை ஏவுகணை என குறிப்பிட்டார். அத்தகைய ஏவுகணைகள் சுமார் 1,000 முதல் 5,500 கிமீ வரை சென்று தாக்கும். இது வெறும் அதிகாரப்பூர்வ தரவுகளே. இதனை குறைந்த தூர இலக்குகளை குறிவைத்து கூட ஏவலாம்.

 
ரஷ்யா யுக்ரேன் போர், Oreshnik ஏவுகணை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஏவுகணை எங்கு தயாரிக்கப்பட்டது?

அதிபர் புதின் குறிப்பிட்டது போல ஓராஷ்னிக் ஏவுகணை மாஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் தெர்மல் டெக்னாலஜியில் (MIT) தயாரிக்கப்படுகிறது.

ரஷ்யாவில் இந்த வகை பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இரண்டு நிறுவனங்களே இருக்கின்றன: மேக்யேவ் ராக்கெட் மையம் மற்றும் மாஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் தெர்மல் டெக்னாலஜி.

இதில் மேக்யேவ் ராக்கெட் மையம் திரவ எரிபொருட்களின் உதவிகொண்டு இயங்கும் ஏவுகணைகளை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. மேலும் இவை கனமானவை மற்றும் மிக நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடியவை.

உதாரணமாக சர்மட் ஏவுகணை 18,000 கிமீ தூரம் வரை செல்லும் என்று அதிகாரப்பூர்வமாக தரவுகள் உள்ளன.

மாஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆப் தெர்மல் டெக்னாலஜி, நகரும் ஏவுதளங்களில் இருந்து ஏவப்படும் திட-எரிபொருள் கொண்டு இயங்கும் இயந்திரங்களைக் கொண்ட சிறிய ஏவுகணைகளை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றது.

இந்த ஏவுகணைகள் இலகுவானவை, சிறிய குண்டுகளை கொண்டு செல்லக்கூடியவை. இவை குறைந்த தூரம் மட்டுமே செல்லும். உதாரணமாக யார்ஸ் ஏவுகணை 12,000 கி.மீ. தூரம் வரை பறக்கும் .

டினிப்ரோவை தாக்கிய ஏவுகணை பெரும்பாலும் மாஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆப் தெர்மல் டெக்னாலஜியால் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

ஏற்கனவே RSD-10 Pioneer ஏவுகணை போன்ற ஏவுகணைகள் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே ஏற்படுத்தப்பட்ட நடுத்தர தூர அணு ஆயுத ஏவுகணைகளை தடை செய்யும் ஒப்பந்தம் (INF) 1988-ஆம் ஆண்டு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு வரை இந்த RSD-10 Pioneer ஏவுகணை பயன்பாட்டில் இருந்தது.

அந்த நேரத்தில், சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவில் உள்ள அனைத்து நடுத்தர தூர ஏவுகணைகள் மற்றும் ஏவுதளங்கள் அழிக்கப்பட்டன. மேலும் வருங்காலத்தில் அத்தகைய ஏவுகணைகளை தயாரிக்கவோ, சோதிக்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

 

இந்த ஏவுகணை எப்போது உருவாக்கப்பட்டது?

INF ஒப்பந்தம் 2019-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. எனவே அத்தகைய ஏவுகணைகளின் வளர்ச்சி இதற்கு பிறகு மட்டும்தான் தொடங்கியிருக்க முடியும்.

அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் செர்கே ஷாய்கு, 2020-ஆம் ஆண்டிற்குள் நடுத்தர வகை ஏவுகணை அமைப்பை உருவாக்க ரஷ்யா உத்தேசித்துள்ளதாக அறிவித்தார். இது நடைபெறவில்லை, ஆனால் அத்தகைய ஏவுகணைகளை உருவாக்க வேலை நடைபெற்று வந்தது.

மாஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் தெர்மல் டெக்னாலஜியின் சமீபத்திய கண்டுபிடிப்புகளுள் ஒன்று RS-26 ரூபேஸ் எனும் கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணை ஆகும்.

இது 2,000 முதல் 6,000 கிமீ வரை சென்று தாக்கக்கூடியது என்று அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது. இது INF ஒப்பந்தத்தின் தூர வரம்புகளை சற்று மீறும் வகையில் இருந்தது.

இந்த ஏவுகணையை INF ஒப்பந்தம் முடிவிற்கு வரும் முன்பே MIT உருவாக்கியது.

ரஷ்ய ராணுவத்தின் ஏவுகணைப் படைகளின் தளபதியான கர்னல் ஜெனரல் செர்கே கரகாயேவ், 2013-ஆம் ஆண்டே இந்த ஏவுகணையின் சில அம்சங்களை பற்றி குறிப்பிட்டதாக அரசு செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.

''RS-26 ரூபேஸ் ஏவுகணை 120 டன்களுக்கு மேல் எடையுள்ளதாக இருக்கும். ஆனால் இதன் மேம்படுத்தப்பட்ட ஏவுகணையை நாம் 80 டன்களாக குறைத்து இலகுவாக்க முடியும்'' என்றார் அவர்.

வேறு விதமாக கூற வேண்டும் என்றால், ரஷ்யா தொடக்கத்தில் யார்ஸ் ஏவுகணையை அடிப்படையாக கொண்டு ஒரு இலகுவான ஏவுகணையை உருவாக்கியது. இந்த ஏவுகணை INF ஒப்பந்தத்தின் தூர வரம்புகளை 500 கிலோமீட்டர் மீறுவதாக இருந்தது

இதன் விளைவாக, புதின் குறிப்பிட்டுள்ள ஒராஷ்னிக் ஏவுகணை, பெரும்பாலும் 800 கிலோமீட்டர் வரை செல்லும் ஒரு ஏவுகணை அமைப்பாகவோ அல்லது இன்னும் குறுகிய தூரம் சென்று தாக்க அந்த அமைப்பில் ஒரு மேம்பாடாகவோ இருக்கலாம் என்று வர்ணனையாளர்கள் கருதுகின்றனர்.

 
ரஷ்யா யுக்ரேன் போர், Oreshnik ஏவுகணை

பட மூலாதாரம்,STATE EMERGENCY SERVICE OF UKRAINE

INF ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் என்ன?

INF ஒப்பந்தம் ஐரோப்பாவில் பதற்றங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஏவப்பட்டால் எச்சரிக்கை அமைப்புகளால் கண்டறிய முடியும், மேலும் இது எதிர் தாக்குதல் நடத்த போதுமான நேரத்தை வழங்குகிறது.

ஆனால் ஒரு ஏவுகணை நிமிடங்களில் பறந்து வந்து இலக்கை தாக்கினால் அப்போது தடுப்பு அமைப்புகள் பலன் அளிக்காது.

அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதை தடுக்கும் உத்திக்கு எதிரான விஷயங்களில், குறுகிய மற்றும் நடுத்தர தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளும் அடங்கும்.

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகளை இடைமறிக்கவோ அழிக்கவோ சாத்தியமற்றது. எனவே எதிர் தாக்குதல் நடத்த போதுமான நேரமில்லாததால், அதற்கும் வாய்ப்பில்லை.

கூடுதலாக இந்த ஏவுகணையின் நகரும் ஏவுதளங்களை கண்டறிந்து முதல் தாக்குதலிலே அழிப்பது மிகவும் கடினமாக இருந்தன.

எல்லைகளுக்கு அருகே குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள் இருப்பது ராணுவ மோதலை தூண்டலாம்.

ஏன் என்றால் எந்நேரம் வேண்டுமானாலும் தாக்குதல் நடைபெறலாம் என்ற ஒரு அச்சுறுத்தலாக அவை இருந்தன. அதிலிருந்து தற்காத்துகொள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்தது.

 

ஏவுகணை பயன்படுத்துவதற்கான எச்சரிக்கைகள்

டினிப்ரோ நகரின் மீது நடந்த தாக்குதலே, இந்த வகை ஏவுகணைகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட முதல் தாக்குதலாகும்

இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்கான எச்சரிக்கைகளை ரஷ்யா வழங்கும் என்று புதின் தெரிவித்துள்ளார்.

ஒராஷ்னிக் ஏவப்படுவதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்பு, அணு ஆயுத ஆபத்து குறைப்பு மையம் வழியாக ரஷ்யா அமெரிக்காவிற்கு ஒரு தானியங்கி அறிவிப்பை அனுப்பியது என்று அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.

இந்த ஏவுகணை ஏவப்படுவதற்கு முந்தைய நாள், 'ஒரு குறிப்பிடத்தக்க வான்வழித் தாக்குதல் பற்றிய தகவல்' காரணமாக, யுக்ரேனில் உள்ள தனது தூதரகத்தை அமெரிக்கா மூடியது.

மேலும் ஸ்பெயின், இத்தாலி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளின் தூதரகங்களும் மூடப்பட்டன, ஆனால் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் தூதரகங்கள் திறந்திருந்தன. தங்கள் குடிமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தின.

இந்த ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன்பே யுக்ரேனுக்கு எதிராக ரூபேஸ் ஏவுகணையை ரஷ்யா பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி யுக்ரேனின் டெலிகிராம் செயலி சேனல்களில் செய்திகள் வெளியாகின.

இருப்பினும், ஒரு புதிய ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக ஏற்கனவே ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழவையின் சபாநாயகர் வியாசெஸ்லாவ் வோலோடின் அறிவித்திருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அர்ச்சுனாவின் செயற்பாடுகள் பற்றி Island, கிருபன் நன்றாகவே விளங்கபடுத்தி உள்ளார்கள் தமிழர்கள் பிரச்சனைகளை தீர்காமல் கையில் எடுத்து அதை பேசிப் பேசியே கோமாளி தனங்கள் செய்து தமிழர்களை ஏமாற்றுவது . தமிழரிடையே உள்ள லூசுத்தனங்களை நன்றாக பயன்படுத்தி கொள்வது. [அர்ச்சுனாவின் இந்த வக்கிர போக்கும் ஒரு அதிகார துஷ்பிரயோகம் தான். நீதியை நிலைநாட்ட புறப்பட்டவர் எக்காலக்கட்டத்திலும் பண்பு தவறி நடக்கவோ அராஜகத்தை கையில் எடுக்கவோ கூடாது] வணங்காமுடியின் நல்ல கருத்து ஆனால் முகபுத்தகம் சமூகவலைதளங்களில் அதிகம் படிப்பவர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் சொன்னபடி அர்ச்சுனாவின் கோமாளிதனங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவருக்கான உறுதியான ஆதரவும் அத்தகைய தமிழர்களிடையே மிகவும் அதிகரித்தே வருகின்றதாம -------------------- கொலஸ்ரோலினால் பக்கவாதம் மாரடைப்பு வரும்போது வாய்க்குள் குழாயை விட்டு கொலஸ்ரோல் கொழுப்பை அகற்றும் மருத்துவ முறை ஒன்று வெளிநாடுகளில் உண்டா🙄
    • தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு:  அவசர செய்தி! உயிர்காக்க விரைவாகப் பகிருங்கள்   நிலமை கடும் தீவிரமாகச் செல்கிறது. எலிக்காய்ச்சல் யாழ்ப்பாணத்தில் வெகு வேகமாகப் பரவுகின்றது.   பருத்தித்துறை வைத்தியசாலை மருத்துவ நிபுணர் வெளியிட்டுள்ள செய்தியில் ,    இதுவரை பருத்தித்துறை வைத்தியசாலையில் மட்டுமே 5 பேர் உயிரிழந்துள்ளனர். பத்து நோயாளிகள் நோய் தீவிரமாகி யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.   உங்களுக்கு காய்சல் , உடம்பு வலி , மூட்டு வலி , கண் சிவப்பாதல், சிறுநீர் கழிப்பது குறைதல், கண் சிவப்பாகுதல், வயிற்று வலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.   சேற்று நிலங்களில் வேலை செய்தவர்கள், விவசாயிகள், மீனவர்கள் , அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெள்ள நீரில் நடந்து திரிந்தவர்கள் பருத்தித்துறை சுகாதார பணிமனையை தொடர்புகொண்டு (MOH office) , நோய் வருவதற்கு முன்பான மாத்திரைகளை பயன்படுத்தி உங்களை உயிராபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவை தடுப்பூசிகள் அல்ல , அன்டிபயட்டிக் மாத்திரைகள். தடுப்பூசிக்கு பயப்படுவார்கள் கூட அச்சப்படாமல் இதைப் பயன்படுத்தலாம்.   அவசரமாக பகிருங்கள். உங்களுக்குத் தெரிந்து மேலே சொன்னதுபோல தேங்கி நிற்கும் நீர் நிலைகளோடு தொடர்பு பட்டு ஆபத்தில் உள்ளவர்களை உடனடியாக சுகாதார பணிமனைக்கு ( MOH office) யிற்கு அழைத்துப் போங்கள்.   உங்களுக்குத் தெரிந்த எல்லோருக்கும் இந்த செய்தியை அனுப்புங்கள். நீங்களும் யாரோ ஒருவரை மரணத்தில் இருந்து காப்பாற்றலாம். இதை புறக்கணிக்காமல் பகிருங்கள்.   தகவல் மூலம் : செல்லத்துரை பிரசாந், பொது மருத்துவ நிபுணர் பருத்தி துறை ஆதார வைத்தியசாலை . பிரதி - சி.சிவச்சந்திரன் https://www.facebook.com/share/p/18UmzZibeV/
    • நெளிவு சுளிவு தெரிந்தவர்களிடம் கழுத்தைக் குடுக்க வேண்டும் ...... கண்டபடி யாரிடமும் குடுக்கக் கூடாது . ........ அதுக்கென்றே பிறந்த சிலர் இருக்கின்றார்கள் .....அவர்களை நாடவேண்டும் . ......!    
    • நேரம் கிடைத்தால்…. இஸ்லாமியர்களின்    தலைமயிர் வெட்டும் காணொளிகளை பாருங்கள். படு பயங்கரமாக தலையில் அடிப்பார்கள், திடீரென்று கழுத்தை  எதிர்பாராத கோணத்தில் திருப்புவார்கள், நெருப்பு கொழுத்துவது என்று ஒரே… பயங்கரமாக இருக்கும். “யூ ரியூப்பில்” பார்வையாளர்களை கவர்வதற்காக செய்கிறார்கள் போலுள்ளது. ஆனாலும்…. தலையை கொடுத்தவன், உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.