Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு ஓர் பகிரங்க மடல்!
எம்மைப்போல் இன்னொரு ஏழைமகன் யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் இனிமேலும் பாதிக்கப்படக் கூடாதென்பதாற்காகவே பல தடவை சிந்தித்து இம்மடலை வரைகிறோம்.
கடந்த 08.11.2024 பி.ப 6.45 மணியளவில் எமது தாயாரை யாழ் போதனா வைத்தியசாலையின் 24 ம் இலக்க விடுதியில் அனுமதித்திருந்தோம்.வீட்டில் விழுந்த அவரை அனுமதித்த வேளையில் அவ்விடுதியில் கடமையில் இருந்தவர் சத்திரசிகிச்சை நிபுணர் Dr.Umashankar .பி.ப 6.45 ற்கு அனுமதித்த போதிலும் Medical students புடை சூழ தன்னை ஒரு ராஜாவாகப் பாவித்து வலம் வந்த வைத்திய நிபுணர் நோயாளியின் அருகில் கூட வராமல் ஆ செலூலைற்றிஸ் என்றவாறு செல்ல குறுக்கிட்ட எனது கணவர் "Dr அம்மா விழுந்துவிட்டா அதுதான் Admit பண்ணினோம் "என்றார்.ஆ அப்ப Xray போடு என்றவாறு விரைந்து விட்டார்.கிட்டத்தட்ட இரவு 9 மணியளவிலே Xray unit க்கு கொண்டு சென்று மீண்டும் விடுதியில் விட்டுச்சென்றோம்.
மறுநாள் அவரை 16 A விடுதிக்கு மாற்றியிருந்தார்கள்.Xray இல் எந்த பிரச்சினையும் இல்லை செலூலைற்றிஸ் கே வைத்தியம் பார்ப்பதாகச் சொன்னார்கள்.இப்படியாக வைத்தியம் பார்த்தவர்கள் 11.11.2024 காலை முதல் அவாருக்கு Urine போகாத காரணத்தினால் இரத்தப்பரிசோதனைகளை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தனர். மதிய வேளையில் CRP 536 இல் இருப்பதாகக் கூறியிருந்தனர்.மருந்தாளரான மகனுக்கு தாயின் நோயின் தீவிர நிலைமை புரிந்திருந்தது.ஒரேயொரு மகனைப் பெற்ற கணவனையிழந்த அந்த 69 வயதான தாய் நன்றாகவே கதைத்தபடி மகனுடன் இருந்தவர் பி.ப 2 மணியளவில் அவரது அன்புப் பேர்த்தியை காண வேண்டும் என்ற அவாவில் "தம்பி Babyamma வை கூட்டிக்கொண்டு வந்து காட்டுறியோ "என்று கேட்க ஓம் அம்மா என்ற மகன் வீட்டிற்கு வந்து மனைவியையும் 3 பிள்ளைகளையும் அழைத்துச்சென்று பி.ப 3 மணியளவில் விடுதிக்குள் நுழைகின்றார்.தன்னோடு கதைத்திருந்த தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாது போகுமென்று அம்மகன் அறிந்திருக்கவில்லை.ஆசையாய் அப்பம்மாவைப் பார்க்கச் சென்ற பேரப்பிள்ளைகள் அடக்கத்தில் போய்க்கொண்டிருக்கும் அப்பம்மாவையே பார்க்க முடிந்தது.Ward ன் Emergency bed க்கு மாற்றியிருந்தார்கள்.Pulse rate high ஆகவும் BP very low ஆகவும் இருந்தது.இரவு 7 மணியளவில் Dialysis செய்வதற்காக அழைத்துச் சென்றார்கள்.அது வரை மகனும் மருமகளும் 3 குழந்தைகளும் விடுதியிலேயே வாடியிருந்தோம்.Dialysis இரவு 11 மணியளவிலேயே முடிவடையும் என்பதால் வீடு திரும்பியிருந்தோம்.இரவு 11.45 மணியளவில் விடுதியிலிருந்த உறவொன்று அழைத்து தாயின் நிலை கவலைக்கிடம் எனக்கூற வைத்தியசாலை விடுதியை 12.11.2024 அதிகாலை 12.10 மணியளவில் சென்றடைய 12.08 மணிக்கு தாயின் உயிர் பிரிந்ததாக கூறிய கடமையிலிருந்த வைத்தியர்கள் இரண்டு மணி நேரத்தின் பின்னர் mortuary இல் சடலத்தை ஒப்படைப்பதாகவும் Consultant inquest போட்டிருப்பதால் பிரேத பரிசோதனையின் பின்னரே சடலத்தை ஒப்படைக்க முடியுமெனக் கூறப்பட்டது.
வீடு திரும்பிய மகன் காலை 7 மணியளவில் மீண்டும் வைத்தியசாலைக்குச் செல்ல விடுதிக்கும் பிணவறைக்குமாக மாறி மாறி அலைக்கழிக்கப்பட இறுதியாக பணிப்பாளரின் அலுவலகத்தை நாட அங்கிருந்தவரின் வழிப்படுத்தலி படிவமொன்றைப் பெற்றவர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் செல்கிறார்.பொலிஸாரின் அறிவுறுத்தலின் பேரில் மகன்,மருமகள், அயலவர் ஒருவர் மற்றும் இறந்தவரின் சகோதரர் ஒருவர் என நான்கு பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.காலை 10 மணி முதல் நால்வரும் மரண விசாரணை அதிகாரியின் அலுவலக வாசலில் காவலிருக்கின்றனர்.நண்பகல் 12.30 அளவில் வருகை தந்த அவரது விசாரணைகள் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணைகள் பூர்த்தியடைய பி.ப 1.08 அளவில் கீறிக்கிழித்த உடலத்தை காண்பிக்கிறார்கள்.பின்னர் மூட்டையாக பெற்சீற்றால் சுற்றியவாறு ஒப்படைக்கின்றனர்.அதற்குள் Gate pass ஐ பெற்றுக்கொள்வதற்காக Overseer அலுவலகத்தில் பல நிமிட காத்திருப்பின் பின்னர் அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்ட கீறிக்கிழிக்கப்பட்டு தைக்கப்படாத சடலம் அவர்களின் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு பி.ப 2.45 மணியளவிலேயே வீட்டை வந்தடைந்தது.
இவ்வளவு சம்பவத்தையும் குறிப்பிடக் காரணம்
1.நான்கு நாட்கள் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று மரணித்தவருக்கு Inquest போட வேண்டிய அவசியம் என்ன?
2.பதின்நான்கு வருடங்களாக Dr.Peranandharaja வின் மருத்துவ clinic செல்லும் நோயாளிக்கு அவரது Full history உள்ள clinic கொப்பிகளை ஆராய்ந்து அனுமதித்த நாள் முதலே சிகிச்சைகளை ஆரம்பித்திருக்க முடியாதா?
3.அனுமதித்த உடனேயே செலூலைற்றிஸ் எனக் கூறியவர்கள் உடனேயே CRP பார்த்திருந்தார்களா?
4.பார்த்திருப்பின் நான்காவது நாளில் CRP 536 ஆகும் வரை வைத்தியம் பார்க்கவில்லையா?
5.அறுபத்தொன்பது வயது தானே என்ற அலட்சியமா?
6.நான்கு நாட்கள் விடுதியில் இருந்து இறந்தவரின் உடலத்தை கீறிக்கிழிக்கலாமா?
7.கிழித்த உடலத்தை தைக்காமல் கையளிக்கலாமா?
(பெட்டி ,வாகனம் ,மேளம் என்பவற்றுக்காக ரூ.52000 பேசியிருந்த லக்கி ஹவுஸ் தைத்தமைக்காக மேலதிகமாக ரூ.13000 பெற்றிருந்தனர்.)
8.சமூகத்தில் நல்நிலையிலுள்ள எமக்கு இந்நிலையாயின் பாமர மகனொருவரின் நிலை எவ்வாறிருக்கும்?
எமது தாயின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.நாம் உங்கள் நிர்வாகத்தோடு எந்தப் பிரச்சினைக்கும் வரப்போவதில்லை.இருப்பினும் இம் மடலை வரையக் காரணம் நாளை எம்போல் எவரும் பாதிக்கப்படக் கூடாதென்பதற்காகவே!
எமது சுகாதார அமைச்சர் கண்டி போதனா வைத்தியசாலையின் கழிப்பறையையே சுத்தம் செய்து சென்றிருக்கிறார்.தாங்கள் அவ்வாறெல்லாம் இறங்கத் தேவையில்லை.உங்கள் கதிரையைக் காப்பாற்றுவதற்காய் உங்கள் நிர்வாகத்தின் கீழ் நடக்கும் முறைகேடுகளை கண்டும் காணாமல் விடாமல் இலவச மருத்துவத்தை ஏழைகளைக் காப்பதற்காய் பயன்படுத்துங்கள் என்பதே எமது வேண்டுகோள்.
இம்மடலால் ஏற்படவிருக்கும் விளைவுகள் ஏழைகளைப் பாதுகாப்பதற்காய் மாறட்டும்.இலங்கை அரசாங்கத்தின் இலவசக் கல்வியால் பட்டதாரியாய் அரசசேவையில் இருக்கும் ஓர் ஏழையின் குரல் ஏழைகளுக்காய் ஒலிக்கிறது!
நன்றி.
திருமதி.ஷர்மிலா சிவகணேசன் B.A,PGDE,PGD in TESL,M.A
ஆசிரியர்
யா/வட்டு இந்துக் கல்லூரி.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, புங்கையூரன் said:

வாசிக்க மிகவும் கவலையாகப் போய் விட்டது, ஈழப்பிரியன்.

எனக்கும் தான் புங்கை.என்ன செய்வது?

வசதியான குடும்பத்திற்கே இந்த நிலை என்றால் சாதாரண கடும்பங்களின் நிலை தான் என்ன?

இந்த அநிஞாயங்களை யார் தட்டிக் கேட்பது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மருத்துவர் சத்திய மூர்த்தி பதிலளிக்க வேண்டிய சில கேஸ்கள் இருக்கின்றன. இந்த விடயம் அவற்றுள் ஒன்று அல்ல என்பது என் அபிப்பிராயம். காரணங்கள் இவை தான்:

1. மருத்துவ மனையில் சில நாட்கள் இருந்து இறந்த ஒருவருக்கு பிரேத பரிசோதனை அவசியமில்லை என்பது தவறான புரிதல். ஒருவர் மருத்துவமனையில் இறந்தால், உடலைப் பொறுப்பெடுக்க வரும் உறவுகளிடம் "உங்களுக்கு மரணத்தில் சந்தேகம் இருக்கிறதா?, மரணவிசாரணை தேவையா?" என்று கேட்பார்கள். "இல்லை" என்று பதில் சொன்னால் கையெழுத்து வாங்கிக் கொண்டு உடலைக் கையளிப்பர். இங்கே உறவினர்கள் காவல்துறையை நாடிய போது, அவர்கள் மரணவிசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள் - இது அவர்களின் கடமை. மரணவிசாரணையின் ஒரு அங்கமாக பிரேத பரிசோதனையைச் செய்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனை செய்த உடலை ஒழுங்காகச் சீரமைக்காமல் கையளித்தது மட்டுமே மருத்துவ மனையின் தவறு.

2. "மாணவர்கள் புடை சூழ மருத்துவர் வலம் வந்தார், கவனிக்கவில்லை" என்பது அவசியமற்ற விமர்சனம். யாழ் மருத்துவமனை ஒரு போதனா மருத்துவ மனை, அங்கே மாணவர்கள் புடை சூழ மருத்துவர்கள் நடமாடுவது ஆச்சரியமல்ல. நோயாளியின் உறவினர்களோடு உரையாடுவதில் வேறு பாடுகள் மருத்துவர்களிடையே இருக்கலாம். ஆனால், தோல் அழற்சியை (cellulitis) மருத்துவர் கண்டறிந்திருக்கிறார், பின்னர் எக்ஸ்றேயும் எடுத்திருக்கிறார்கள். என்பு முறிவுகள் இல்லாமையால் தோல் அழற்சிக்குத் தான் மருத்துவம் செய்திருக்கிறார்கள். இதில் என்ன குறை இருக்கிறதென விளங்கவில்லை.

3.  CRP (C-reactive Protein) இது உடலில் அழற்சி (inflammation) நிலை இருக்கும் போது இரத்தத்தில் அதிகரிக்கும் ஒரு குறிகாட்டி. இது தோல் அழற்சி இருக்கும் போது நிச்சயமாக அதிகரிக்கும். இதைப் பரிசோதிக்க முதலே, தோல் அழற்சி என்று நோய் நிர்ணயம் செய்து, அதற்கு மருத்துவம் செய்திருக்கிறார்கள். எனவே,  CRP இனை 4 நாட்கள் பிந்திச் செய்தமையால் நோயாளிக்கான மருத்துவம் பாதிக்கப் படவில்லை.

இங்கே ஒரு பிரச்சினை - மருத்துவர்களின் தவறினால் அல்லாமல்- இயற்கையாகவே ஏற்பட்டிருக்கலாம்.

தோல் அழற்சியின் குணங்குறிகள் போலவே தோன்றும் இன்னொரு நோய் நிலை நாளங்களில் ஏற்படும் குருதியுறைதல் நிலை (Deep Vein Thrombosis- DVT). இதை வேறு பிரித்தறிய சில இரத்தப் பரிசோதனைகள் இருக்கின்றன. நோயாளி நல்ல நிலையில் இருந்ததால் இதைச் செய்யாமல் விட்டிருப்பர். மறு பக்கம், நோயாளி கட்டிலில் ஓய்வில் இருந்த காலத்தில் கூட இந்த DVT குருதியுறைதல் ஏற்பட்டு, மரணத்திற்குக் காரணமாகியிருக்கலாம்.

இழப்பு சோகம் தான், ஆனால் மருத்துவர்களின் அலட்சியத்தினால் இது நிகழவில்லை.  

  • Thanks 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

இழப்பு சோகம் தான், ஆனால் மருத்துவர்களின் அலட்சியத்தினால் இது நிகழவில்லை.  

நன்றிகள் ஜஸ்டின் உங்களின் தெளிவுபடுத்தலுக்கு...........

இதே போன்ற தருணங்களில் வைத்தியர்களையும், மருத்துவமனையும் குற்றம் சாட்டுவது என்பது உலகெங்கும் உள்ள ஒரு உணர்வுபூர்வமான வழக்கமே. சம்பந்தப்பட்ட வைத்தியர்களும், மருத்துவமனை நிர்வாகமும் முயற்சி எடுத்து இதை பாதிக்கப்பட்டவர்கள் என்று நினைப்போருக்கு புரியவைக்கவேண்டும். 

ஒரு அநாமேதயக் கடிதமாக அல்லாமல், தன் பெயர் விபரங்களுடனேயே அவர் இந்தக் கடிதத்தை எழுதியிருப்பது நல்ல ஒரு விடயம்...........   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Justin said:

மருத்துவர் சத்திய மூர்த்தி பதிலளிக்க வேண்டிய சில கேஸ்கள் இருக்கின்றன. இந்த விடயம் அவற்றுள் ஒன்று அல்ல என்பது என் அபிப்பிராயம். காரணங்கள் இவை தான்:

1. மருத்துவ மனையில் சில நாட்கள் இருந்து இறந்த ஒருவருக்கு பிரேத பரிசோதனை அவசியமில்லை என்பது தவறான புரிதல். ஒருவர் மருத்துவமனையில் இறந்தால், உடலைப் பொறுப்பெடுக்க வரும் உறவுகளிடம் "உங்களுக்கு மரணத்தில் சந்தேகம் இருக்கிறதா?, மரணவிசாரணை தேவையா?" என்று கேட்பார்கள். "இல்லை" என்று பதில் சொன்னால் கையெழுத்து வாங்கிக் கொண்டு உடலைக் கையளிப்பர். இங்கே உறவினர்கள் காவல்துறையை நாடிய போது, அவர்கள் மரணவிசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள் - இது அவர்களின் கடமை. மரணவிசாரணையின் ஒரு அங்கமாக பிரேத பரிசோதனையைச் செய்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனை செய்த உடலை ஒழுங்காகச் சீரமைக்காமல் கையளித்தது மட்டுமே மருத்துவ மனையின் தவறு.

2. "மாணவர்கள் புடை சூழ மருத்துவர் வலம் வந்தார், கவனிக்கவில்லை" என்பது அவசியமற்ற விமர்சனம். யாழ் மருத்துவமனை ஒரு போதனா மருத்துவ மனை, அங்கே மாணவர்கள் புடை சூழ மருத்துவர்கள் நடமாடுவது ஆச்சரியமல்ல. நோயாளியின் உறவினர்களோடு உரையாடுவதில் வேறு பாடுகள் மருத்துவர்களிடையே இருக்கலாம். ஆனால், தோல் அழற்சியை (cellulitis) மருத்துவர் கண்டறிந்திருக்கிறார், பின்னர் எக்ஸ்றேயும் எடுத்திருக்கிறார்கள். என்பு முறிவுகள் இல்லாமையால் தோல் அழற்சிக்குத் தான் மருத்துவம் செய்திருக்கிறார்கள். இதில் என்ன குறை இருக்கிறதென விளங்கவில்லை.

3.  CRP (C-reactive Protein) இது உடலில் அழற்சி (inflammation) நிலை இருக்கும் போது இரத்தத்தில் அதிகரிக்கும் ஒரு குறிகாட்டி. இது தோல் அழற்சி இருக்கும் போது நிச்சயமாக அதிகரிக்கும். இதைப் பரிசோதிக்க முதலே, தோல் அழற்சி என்று நோய் நிர்ணயம் செய்து, அதற்கு மருத்துவம் செய்திருக்கிறார்கள். எனவே,  CRP இனை 4 நாட்கள் பிந்திச் செய்தமையால் நோயாளிக்கான மருத்துவம் பாதிக்கப் படவில்லை.

இங்கே ஒரு பிரச்சினை - மருத்துவர்களின் தவறினால் அல்லாமல்- இயற்கையாகவே ஏற்பட்டிருக்கலாம்.

தோல் அழற்சியின் குணங்குறிகள் போலவே தோன்றும் இன்னொரு நோய் நிலை நாளங்களில் ஏற்படும் குருதியுறைதல் நிலை (Deep Vein Thrombosis- DVT). இதை வேறு பிரித்தறிய சில இரத்தப் பரிசோதனைகள் இருக்கின்றன. நோயாளி நல்ல நிலையில் இருந்ததால் இதைச் செய்யாமல் விட்டிருப்பர். மறு பக்கம், நோயாளி கட்டிலில் ஓய்வில் இருந்த காலத்தில் கூட இந்த DVT குருதியுறைதல் ஏற்பட்டு, மரணத்திற்குக் காரணமாகியிருக்கலாம்.

இழப்பு சோகம் தான், ஆனால் மருத்துவர்களின் அலட்சியத்தினால் இது நிகழவில்லை.  

Septic shock நடந்திருகின்றது.

  • Thanks 1

நன்றி ஜஸ்ரின் விலாவரியான விளக்கத்திற்கு.  

கடிதத்தில் எனது மிக நெருங்கிய மருத்துவ நண்பனைப் பெயர் குறித்து வந்த அவசியமற்ற விமர்சனம் கவலையைத் தந்திருந்தது. உங்கள் விளக்கம் அக்கவலையைப் போக்கிவிட்டது.🙏🏽

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மடலும் அது எழுதப்பட்ட விதமும் அதற்கான விளக்கமும் நன்று. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ரசோதரன் said:

இதே போன்ற தருணங்களில் வைத்தியர்களையும், மருத்துவமனையும் குற்றம் சாட்டுவது என்பது உலகெங்கும் உள்ள ஒரு உணர்வுபூர்வமான வழக்கமே.

உண்மை. தமிழர்கள் வெளிநாட்டில் மருத்துவர்கள் மீது வைக்கின்ற குற்றசாட்டுக்கள் மிகவும் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Justin said:

மருத்துவர் சத்திய மூர்த்தி பதிலளிக்க வேண்டிய சில கேஸ்கள் இருக்கின்றன. இந்த விடயம் அவற்றுள் ஒன்று அல்ல என்பது என் அபிப்பிராயம். காரணங்கள் இவை தான்:

1. மருத்துவ மனையில் சில நாட்கள் இருந்து இறந்த ஒருவருக்கு பிரேத பரிசோதனை அவசியமில்லை என்பது தவறான புரிதல். ஒருவர் மருத்துவமனையில் இறந்தால், உடலைப் பொறுப்பெடுக்க வரும் உறவுகளிடம் "உங்களுக்கு மரணத்தில் சந்தேகம் இருக்கிறதா?, மரணவிசாரணை தேவையா?" என்று கேட்பார்கள். "இல்லை" என்று பதில் சொன்னால் கையெழுத்து வாங்கிக் கொண்டு உடலைக் கையளிப்பர். இங்கே உறவினர்கள் காவல்துறையை நாடிய போது, அவர்கள் மரணவிசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள் - இது அவர்களின் கடமை. மரணவிசாரணையின் ஒரு அங்கமாக பிரேத பரிசோதனையைச் செய்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனை செய்த உடலை ஒழுங்காகச் சீரமைக்காமல் கையளித்தது மட்டுமே மருத்துவ மனையின் தவறு.

2. "மாணவர்கள் புடை சூழ மருத்துவர் வலம் வந்தார், கவனிக்கவில்லை" என்பது அவசியமற்ற விமர்சனம். யாழ் மருத்துவமனை ஒரு போதனா மருத்துவ மனை, அங்கே மாணவர்கள் புடை சூழ மருத்துவர்கள் நடமாடுவது ஆச்சரியமல்ல. நோயாளியின் உறவினர்களோடு உரையாடுவதில் வேறு பாடுகள் மருத்துவர்களிடையே இருக்கலாம். ஆனால், தோல் அழற்சியை (cellulitis) மருத்துவர் கண்டறிந்திருக்கிறார், பின்னர் எக்ஸ்றேயும் எடுத்திருக்கிறார்கள். என்பு முறிவுகள் இல்லாமையால் தோல் அழற்சிக்குத் தான் மருத்துவம் செய்திருக்கிறார்கள். இதில் என்ன குறை இருக்கிறதென விளங்கவில்லை.

3.  CRP (C-reactive Protein) இது உடலில் அழற்சி (inflammation) நிலை இருக்கும் போது இரத்தத்தில் அதிகரிக்கும் ஒரு குறிகாட்டி. இது தோல் அழற்சி இருக்கும் போது நிச்சயமாக அதிகரிக்கும். இதைப் பரிசோதிக்க முதலே, தோல் அழற்சி என்று நோய் நிர்ணயம் செய்து, அதற்கு மருத்துவம் செய்திருக்கிறார்கள். எனவே,  CRP இனை 4 நாட்கள் பிந்திச் செய்தமையால் நோயாளிக்கான மருத்துவம் பாதிக்கப் படவில்லை.

இங்கே ஒரு பிரச்சினை - மருத்துவர்களின் தவறினால் அல்லாமல்- இயற்கையாகவே ஏற்பட்டிருக்கலாம்.

தோல் அழற்சியின் குணங்குறிகள் போலவே தோன்றும் இன்னொரு நோய் நிலை நாளங்களில் ஏற்படும் குருதியுறைதல் நிலை (Deep Vein Thrombosis- DVT). இதை வேறு பிரித்தறிய சில இரத்தப் பரிசோதனைகள் இருக்கின்றன. நோயாளி நல்ல நிலையில் இருந்ததால் இதைச் செய்யாமல் விட்டிருப்பர். மறு பக்கம், நோயாளி கட்டிலில் ஓய்வில் இருந்த காலத்தில் கூட இந்த DVT குருதியுறைதல் ஏற்பட்டு, மரணத்திற்குக் காரணமாகியிருக்கலாம்.

இழப்பு சோகம் தான், ஆனால் மருத்துவர்களின் அலட்சியத்தினால் இது நிகழவில்லை.  

உங்களைப் போன்றவர்கள் போதிய விளக்கம் கொடுக்கவில்லை என்றால் டாக்ரர்களே முழுபழியையும் சுமக்க வேண்டும்.

இங்கே 53 ஆயிரத்துக்கு பெட்டி வாகனம் ஒழுங்கு பண்ணியது கொஞ்சம் குடைச்சலாகவே உள்ளது.

இதுபற்றி யாரும் விளக்கமளிக்க முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, பகிடி said:

Septic shock நடந்திருகின்றது.

ஆம், சிறு நீரக செயலிழப்பு, இரத்த அழுத்த மாற்றம் என்பன இதைத் தான் காட்டுகின்றன. இந்த இடத்தில் கட்டுப் பாடற்ற வகையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (antibiotics) தாயகத்தில் பாவிக்கப் படுவதையும் சுட்டிக் காட்ட வேண்டும். இதனால், சாதாரணமாக இது போன்ற நோய்களில் பயன்படுத்தப் படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிர்ப்புச் சக்தி (antibiotic resistance) உருவாகி, அந்த மருந்துகள் வேலை செய்யாமல் போகும் நிலை இருக்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, ஈழப்பிரியன் said:

இங்கே 53 ஆயிரத்துக்கு பெட்டி வாகனம் ஒழுங்கு பண்ணியது கொஞ்சம் குடைச்சலாகவே உள்ளது.

இதுபற்றி யாரும் விளக்கமளிக்க முடியாதா?

இந்த தொகை குடும்பத்தினர் தெரிவு செய்த பெட்டி வகை, மலர்கள், உடை, வாகன வகை என்பவற்றைப் பொறுத்தது என நினைக்கிறேன்.

8 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பாவின் அந்திம கால ஏற்பாடுகளை வவுனியாவில் என் மருமகனின் உதவியோடு நான் செய்த போது கிடைத்த அனுபவத்தின் படி, இந்தத் தொகை பெரிதாகத் தெரியவில்லை. இந்த ஏற்பாடுகளைச் செய்யும் அந்திம சேவையினர், கறக்க வேண்டிய சகல வழிகளிலும் குடும்பத்தினரிடம் பணம் கறந்து விட்டே விடுவர். ஒரு பக்கம் நேரடியாக சேவைகளுக்குரிய பணத்தை வாங்கிக் கொள்வர். மறுபக்கத்தில் அமரர் ஊர்தி ஓட்டுபவர், உடலை தயார் செய்தவர், மலர் விநியோகம் செய்பவர், என எல்லோரும் தலையைச் சொறிந்து கொண்டு, அருகில் வந்து நின்று மேலதிக tips பணம் வாங்கிப் போவர். வாழ்க்கை வெறுத்து விடும்😂!   

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, Justin said:

இதை குடும்பத்தினர் தெரிவு செய்தமாதிரி தெரியவில்லை.

அதனாலேயே எமக்கு பரவாயில்லை ஆனால் ஏழைகள் இதைத் தாங்குவார்களா?

என்று கேள்வியுடன் முடித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

இந்த தொகை குடும்பத்தினர் தெரிவு செய்த பெட்டி வகை, மலர்கள், உடை, வாகன வகை என்பவற்றைப் பொறுத்தது என நினைக்கிறேன்.

8 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பாவின் அந்திம கால ஏற்பாடுகளை வவுனியாவில் என் மருமகனின் உதவியோடு நான் செய்த போது கிடைத்த அனுபவத்தின் படி, இந்தத் தொகை பெரிதாகத் தெரியவில்லை. இந்த ஏற்பாடுகளைச் செய்யும் அந்திம சேவையினர், கறக்க வேண்டிய சகல வழிகளிலும் குடும்பத்தினரிடம் பணம் கறந்து விட்டே விடுவர். ஒரு பக்கம் நேரடியாக சேவைகளுக்குரிய பணத்தை வாங்கிக் கொள்வர். மறுபக்கத்தில் அமரர் ஊர்தி ஓட்டுபவர், உடலை தயார் செய்தவர், மலர் விநியோகம் செய்பவர், என எல்லோரும் தலையைச் சொறிந்து கொண்டு, அருகில் வந்து நின்று மேலதிக tips பணம் வாங்கிப் போவர். வாழ்க்கை வெறுத்து விடும்😂!   

அண்ணாவின் இறப்புக்கு பெட்டி மட்டுமே 50000 ரூபா

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் 13 DEC, 2024 | 07:08 PM வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தாங்கள் பட்டப் படிப்பினை நிறைவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்ற போதிலும் அரச வேலைவாய்ப்பு தமக்கு இதுவரை வழங்கப்படவில்லை. எனவே புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் அரசாங்கம் தமக்கான அரச நியமனத்தை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/201217
    • சபாநாயகர் இராஜினாமா 13 DEC, 2024 | 07:05 PM (இராஜதுரை ஹஷான்) கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்த கடும் சர்ச்சைக்கு மத்தியில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதை தொடர்ந்து சபாநாயகர் அசோக்க ரன்வல சபாநாயகர் பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இருப்பினும் கல்வி தகைமை தொடர்பில் தான் பொய்யான விடயங்களை குறிப்பிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் சுயமாக பதவி விலகியமை இதுவே முதல் தடவையாக கருதப்படுகிறது. அத்துடன் கல்வி தகைமை விவகாரத்தில் குறுகிய காலத்தில் சபாநாயகர் ஒருவர் பதவி விலகியமை இதுவே முதல் தடவையாகும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது 10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற அசோக்க சபுமல் ரன்வலவின் பெயரை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்மொழிந்தார். இதனை வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வழிமொழிந்தார். சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் பிறிதொருவரின் பெயர் முன்மொழியப்படாத நிலையில் பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக அசோக்க சபுமல் ரன்வல வாக்கெடுப்பின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தன்று சபாநாயகர் உத்தியோகபூர்வ தலைகவசத்தை தவறான முறையில் அணிந்திருந்தமை தொடர்பில் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.  சபாநாயகராக அசோக்க ரன்வல தெரிவு செய்யப்பட்ட அதே வாரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது உத்தியோகபூர்வ முகப்பு புத்தகத்தில் ' சபாநாயகர் அவரது கலாநிதி பட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்' என்று பதிவேற்றம் செய்திருந்தார். இந்த பதிவு சமூக கட்டமைப்பில் பிரதான பேசுப்பொருளாக காணப்பட்ட நிலையில் பொது நிகழ்வில் கலந்துக் கொண்ட சபாநாயகர் அசோக்க ரன்வலவிடம் இவ்விடயம் குறித்து ஊடகங்கள் கேள்வியெழுப்பிய போது 'தன்னிடம் இரண்டு பட்டங்கள் இருப்பதாகவும், கலாந்தி பட்டம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கேள்விக்கு தற்போது பதிலளிப்பது அவசியமற்றது' என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான பின்னணியில் சபாநாயகரின் கல்வி தகைமை குறித்து அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கடந்த செவ்வாய்க்கிழமை ஊடகங்கள் கேள்வியெழுப்பிய போது கல்வி தகைமை குறித்து சபாநாயகர் பதிலளிப்பார் என்று குறிப்பிட்டார். அத்துடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது இவ்விடயம் குறித்து சபாநாயகர் சபைக்கு விசேட அறிவிப்பை விடுப்பதாகவும் குறிப்பிடப்பட்டது. சபாநாயகரின் கல்வி தகைமை குறித்து மொறட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் வஷிடோ பல்கலைக்கழகம் மாறுப்பட்ட கருத்தினை குறிப்பிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டன. சபாநாயகர் தனது கல்வி தகைமையை பகிரங்கப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக வலியுறுத்தின. நாட்டின் மூன்றாம் பிரஜையான சபாநாயகர் கல்வி தகைமை விவகாரத்தில் மோசடி செய்வாராயின் எவ்வாறு பாராளுமன்றத்தின் சுயாதீனம் பாதுகாக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. இவ்வாறான பின்னணியில் சபாநாயகர் அசோக்க ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்தது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, சர்வஜன கட்சி ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டிருந்தது. சபாநாயகரின் கல்வி தகைமை தொடர்பில் கடும் சர்ச்சை எழுந்த நிலையில், தமது அரசாங்கத்தில் எவர் தவறு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று குறிப்பிட்டிருந்த நிலையில், சபாநாயகர் அசோக்க ரன்வல விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எனது கல்வி தகைமை குறித்து சமூகத்தின் மத்தியில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. கல்வி தகைமை குறித்து எவ்விதமான பொய்யான தகவல்களையும் நான் வழங்கவில்லை. கல்வி தகைமையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஒருசில ஆவணங்கள் தற்சமயம் என்னிடம் இல்லை. அந்த ஆவணங்களை உரிய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை விரைவாக பெற்றுக் கொள்வது கடினமாக உள்ளது. எனக்கு கலாநிதி பட்டத்தை வழங்கிய ஜப்பானின் வஷிடா பல்கலைக்கழகத்துக்கு இணையான ஆராய்ச்சி நிறுவனம் கலாநிதி பட்டத்துக்குரிய ஆவணங்களை வெகுவிரைவில் வழங்குவதாக குறிப்பிட்டுள்ள நிலையில் அவற்றை வெகுவிரைவில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளேன். எவ்வாறாயினும் தோற்றம் பெற்றுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு அரசாங்கத்தையும், எம்மீது நம்பிக்கை கொண்ட மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்குவதை தவிர்க்கும் வகையில் சபாநாயகர் பதவியை இராஜிநாமா செய்கிறேன். https://www.virakesari.lk/article/201201
    • 13 DEC, 2024 | 07:06 PM   முல்லைத்தீவு - செம்மலை, நாயாறு உள்ளிட்ட இடங்களில் மிட்வெஸ்ட் ஹெவி சாண்ட்ஸ் பிறைவேட் லிமிடட் எனும் நிறுவனம் இல்மனைட் அகழ்விற்கு எடுத்த முயற்சி, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பால் இன்று வெள்ளிக்கிழமை (13) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை மக்களுடைய அனுமதியின்றி, அத்துமீறி எமது இடங்களில் கனியமணல் அகழ்வு மேற்கொள்ள முடியாதெனவும் உடனடியாக இந்த அகழ்வு முயற்சிகளைக் கைவிட்டு இங்கிருந்து வெளியேறுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் பொதுமக்கள் தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். ஏற்கனவே கொக்கிளாய் பகுதியில் அப்பகுதி மக்கள் இடப்பெயர்வைச் சந்தித்திருந்தபோது, மக்களுக்குரிய சுமார் 44 ஏக்கர் வயல் காணிகளை அத்துமீறி அபகரித்து அங்கு கனிய மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டிருப்பதை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டியதுடன், அந்த இடங்கள் மீள் நிரப்பப்படாமல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு கடலரிப்பு அபாயம் ஏற்பட்டிருப்பதாக மக்கள் தம்மிடம் முறையீடு செய்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். இந்நிலையில் தற்போது செம்மலை, நாயாறு உள்ளிட்ட இடங்களில் கனியமணல் அகழ்வதாலும், செம்மலையில் அமைக்கப்பட்டுள்ள உவர்நீர் தடுப்பணை பாதிக்கப்பட்டு பாரிய அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதையும், மக்களின் வயல் நிலங்கள், குடியிருப்புக்கள் இதனால் பாதிக்கப்படும் என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்தார். எனவே மக்களுக்கு பாதகமான இந்த கனியமணல் அகழ்வை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். மேலும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியில்லாமல், இப்பகுதி மக்களின் அனுமதியில்லாமல் எவ்வாறு இங்கு கனியமணல் அகழ்வதற்கு வருகை தரமுடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது கேள்வி எழுப்பியதுடன், உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பினைத் தொடர்ந்து கனியமணல் அகழ்வுக்குரிய முதற்கட்ட செயற்பாடுகளுக்கு வருகைதந்த மிட்வெஸ்ட் ஹெவி சாண்ட்ஸ் பிறைவேட் லிமிடட் நிறுவனத்தினர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிங்கராசா பிரதஸ், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத் தலைவர் இளையதம்பி தணிகாசலம், நாயாறு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள், அப்பகுதி பொதுமக்கள் என பலரும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201197
    • 13 DEC, 2024 | 06:37 PM உண்மையான வடக்கின் வசந்தம் 2025ஆம் ஆண்டு முதலே வீசும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது,  கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட நிதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கூட்டத்தில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.  அத்துடன் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும், அது தொடர்பான முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.  இதில் முக்கியமாக வெள்ள அனர்த்தம் தொடர்பில் பேசப்பட்டது. வெள்ளங்களுக்கு தீர்வு காணும் முகமாக முன்மொழிவு வைக்கப்பட்டு, அதற்காக சுமார் 250 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளது. அந்த நிதி கிடைக்கப்பெற்றால் வேலைகள் முன்னெடுக்கப்படும்.  வட மாகாண ஆளுநரால் பல்வேறு திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் அமைச்சரவையில் முடிவெடுத்து அனுமதிகள் கிடைக்கப்பெற்றதும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். கிராமங்களை நோக்கியே திட்டங்கள் முன்வைக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படும். கிராம மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதே எமது நோக்கமாகும். விசேடமாக கடற்தொழிலாளர்கள் பிரச்சினைகளை தீர்த்து அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த உள்ளோம்.  கடந்த கால குறைகளை நிவர்த்தி செய்து ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவோம் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201193
    • பிபிசி தமிழில் போட்டிருக்கு அண்ணை. பிறந்து வளர்ந்தது சென்னையாம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.