Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@குமாரசாமி

கோப்பாயில் ந‌ட‌ந்த‌ மாவீர‌ நாளில் சில‌ போராளிக‌ளின் ப‌ட‌ங்க‌ள் பார்க்க‌ கூடிய‌தாக‌ இருக்கு தாத்தா.....................

நெருப்பை குப்பையால் அனைக்க‌ முடியாது

புல‌ம்பெய‌ர் நாட்டில் ந‌ட‌ந்த‌ ப‌ல மாவீர‌ நாளில் போராளிக‌ளின் ப‌ட‌ங்க‌ள் வைக்க‌ப் ப‌ட்டு அதை முக நூலிலும் போட்டு இருக்கின‌ம்.................அது இணைய‌ வ‌ழி ஊடாக‌ ஈழ‌த்தில் வ‌சிக்கும் உற‌வுக‌ளும் பாப்பின‌ம்..........................

நாம் த‌மிழ‌ர் ந‌ட‌த்தின‌ மாவீர‌ நாளில் இர‌ண்டு ப‌க்க‌மும் போராளிக‌ளின் ப‌ட‌ங்க‌ள் த‌லைவ‌ரின் ப‌ட‌ம் அதோட‌ த‌லைவ‌ரின் பிற‌ந்த‌ நாளை ஒட்டி 70அடி உய‌ர‌த்தில் எம‌து புலிக் கொடி ஏற்ற‌ப் ப‌ட்ட‌து............................

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people, lighting, speaker, crowd and fog

May be an image of 3 people, fire, temple and crowd

May be an image of one or more people, lighting, crowd, temple and text

அடாது மழை பெய்தாலும்
விடாது அஞ்சலி செலுத்திய மக்கள்.

தமக்காக மரணித்த மாவீரர்களை
மறக்காது நெஞ்சில் ஏந்தும் அதிசயம்

இது எப்படி ஒவ்வொரு வருடமும் நிகழ்கிறது?

இது மாவீரர்கள் நிகழ்த்தும் அற்புதம் இன்றி
வேறு என்னவாக இருக்கும்?

தோழர் பாலன்

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள்  மனதில் ஆறாதவடுவாய் தேசியம் அலைபாய்கிறது....அதனை  அணைக்க முயன்ற அரசியல் வியாதிகளுக்கு

பாடம் புகட்டப்போய் ..சுயத்தை இழந்த தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்...

கொடியமழை புயலால் கூட தடுக்க முடியாத அந்த  உணர்வு ....தலைவன்...போராளிகள் .. மீதான அன்பையும் விசுவாசத்தையும் காட்டுகிறது..

  • கருத்துக்கள உறவுகள்

நடமாடுவதே பாதுகாப்பில்லை என்ற புயல் சூழலில் மக்கள் அலை என எழும்பி வந்தது ….எல்லாமும் முடிந்து போய்விடவில்லை என்ற நம்பிக்கையை தருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இரவு ஊரில் கதைத்த போது மழையும் காற்றும் வெளியில் செல்ல முடியாது என கூறினார்கள். இவ்வளவு மக்கள் வெள்ளத்தை பார்க்கும் போது மாவீரர்கள் தமிழர் மனதில் அதிவிசேடமானவர்கள் என்பதை சொல்லி நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாவீரர் நிகழ்வேந்தும் இடத்தில் எங்கள் யூடியூப் வியாபாரிகள் பண்ணும் அலட்டலை பாருங்கள்.

செல்பி என்ன ஜோக் என்ன கை குலுக்கல்கள் என்ன, மாவீரர்களுக்கு மலர் தூவும்போதும் காமெடிபண்ணுவதென்ன,

நிகழ்வேந்தும் இடத்தின் நடுவே நின்றுகொண்டு  யூடிடூப் காரனை கண்டதும் கல்யாணவீடுமாதிரி பரபரப்பாகி  குதூகலிக்கும் அந்த பெண்ணை பிடரியில அடிபோட்டு அந்த இடத்திலிருந்து துரத்தி விட்டிருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, valavan said:

இந்த‌ யூடுப்ப‌ர் பெய‌ர் கிருஷ்னா

நான் இவ‌ரின் காணொளிக‌ளை பார்ப்ப‌து கிடையாது

விள‌ம்ப‌ர‌ பிரிய‌ர் எங்கை எப்ப‌டி ந‌ட‌ந்து கொள்ள‌னும் என்ர‌ ப‌க்குவ‌மும் இவ‌ரிட‌ம் கிடையாது

இவ‌ர்க‌ளின் குள‌று ப‌டிக‌ள் நிறைய‌ இருக்கு அதை எழுத‌ விரும்ப‌ வில்லை...............................

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, valavan said:

இவரு புதுப் பணக்காரருங்க..... ..அவரு புது அர்ச்சனாவாக உருவாகிறார்...அவரு ஒரு தங்கத்தை தேட...இந்த அம்மணீ..  நான்தான்..நீங்க தேடிட்டிருக்கிற  தங்கமென்று ..அலப்பறை செய்யிறா🙃

விவஸ்த்தை..கெட்டவர்கள்... எங்கு எப்படி..செயல்படவேண்டும் என்ற அடிப்படை  அறிவற்ற  கோமாளிகள்

6 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த‌ யூடுப்ப‌ர் பெய‌ர் கிருஷ்னா

நான் இவ‌ரின் காணொளிக‌ளை பார்ப்ப‌து கிடையாது

விள‌ம்ப‌ர‌ பிரிய‌ர் எங்கை எப்ப‌டி ந‌ட‌ந்து கொள்ள‌னும் என்ர‌ ப‌க்குவ‌மும் இவ‌ரிட‌ம் கிடையாது

இவ‌ர்க‌ளின் குள‌று ப‌டிக‌ள் நிறைய‌ இருக்கு அதை எழுத‌ விரும்ப‌ வில்லை...............................

ஏன் தயங்குகிறீர்கள்....எழுதுங்கள்... பாடமாக அமையட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, alvayan said:

இவரு புதுப் பணக்காரருங்க..... ..அவரு புது அர்ச்சனாவாக உருவாகிறார்...அவரு ஒரு தங்கத்தை தேட...இந்த அம்மணீ..  நான்தான்..நீங்க தேடிட்டிருக்கிற  தங்கமென்று ..அலப்பறை செய்யிறா🙃

விவஸ்த்தை..கெட்டவர்கள்... எங்கு எப்படி..செயல்படவேண்டும் என்ற அடிப்படை  அறிவற்ற  கோமாளிகள்

ஏன் தயங்குகிறீர்கள்....எழுதுங்கள்... பாடமாக அமையட்டும்

நிச்சயமாக அல்வாயன்

நீங்கள் சொல்வதுபோலவே இந்த ஜென்மங்களை பார்த்தபோது மனசு சுருக்கென்றது.

எந்த இடத்தில் என்ன செய்கிறார்கள் என்னமோ பார்ட்டியிலும் கிளப்பிலும் மீட் பண்ணீனமாதிரி பம்பல் பண்ணுறானுகளே இந்த யூடியூப் வியாபாரிகள், இதை பார்த்தபோது மனதில் ஒரேவரிதான் தோன்றியது

விதியே என்ன செய்யபோகிறாய் இந்த தமிழ் சாதியை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, alvayan said:

இது மாவீர‌ர்க‌ளின் புனித‌மான‌ திரி அண்ணா

அது தான் இந்த‌ திரியில் எழுத‌ விரும்ப‌ல‌ ம‌ற்ற‌ம் ப‌டி புது திரி திற‌ந்து இவ‌ர்க‌ள் செய்யும் குள‌று ப‌டிக‌ளில் இருந்து ப‌ல‌தை வெளிப்ப‌டையா ஆதார‌த்தோடு எழுத‌லாம்😉..........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, valavan said:

நிச்சயமாக அல்வாயன்

நீங்கள் சொல்வதுபோலவே இந்த ஜென்மங்களை பார்த்தபோது மனசு சுருக்கென்றது.

எந்த இடத்தில் என்ன செய்கிறார்கள் என்னமோ பார்ட்டியிலும் கிளப்பிலும் மீட் பண்ணீனமாதிரி பம்பல் பண்ணுறானுகளே இந்த யூடியூப் வியாபாரிகள், இதை பார்த்தபோது மனதில் ஒரேவரிதான் தோன்றியது

விதியே என்ன செய்யபோகிறாய் இந்த தமிழ் சாதியை?

அண்ணா நீங்க‌ள் இத‌ற்கே வ‌ருத்த‌ப் ப‌டுறீங்க‌ள் இதை விட‌ நிறைய‌ விள‌ம்ப‌ர‌ம் வ‌ரும் பார்க்க‌   வெறுப்புட‌ன் கூடிய‌ ச‌லிப்பு வ‌ரும் அது தான் இவ‌ர்ளின் கூத்துக‌ளை பார்க்காம‌ விட்டு ஒரு வ‌ருட‌த்துக்கு மேல் ஆகுது.............................

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வீரப் பையன்26 said:

இது மாவீர‌ர்க‌ளின் புனித‌மான‌ திரி அண்ணா

அது தான் இந்த‌ திரியில் எழுத‌ விரும்ப‌ல‌ ம‌ற்ற‌ம் ப‌டி புது திரி திற‌ந்து இவ‌ர்க‌ள் செய்யும் குள‌று ப‌டிக‌ளில் இருந்து ப‌ல‌தை வெளிப்ப‌டையா ஆதார‌த்தோடு எழுத‌லாம்😉..........................

பையன் சொல்வது சரிதான், 

மனித தன்மையற்ற இவர்களின் செயலினால் உழைச்சலாகி அந்த வீடியோவை இந்த திரியில் சொருகிவிட்டேன், அதை அப்படியே வேறு தனி  திரிக்கு யாரும் நகர்த்தினால் நன்றே.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வீரப் பையன்26 said:

இது மாவீர‌ர்க‌ளின் புனித‌மான‌ திரி அண்ணா

அது தான் இந்த‌ திரியில் எழுத‌ விரும்ப‌ல‌ ம‌ற்ற‌ம் ப‌டி புது திரி திற‌ந்து இவ‌ர்க‌ள் செய்யும் குள‌று ப‌டிக‌ளில் இருந்து ப‌ல‌தை வெளிப்ப‌டையா ஆதார‌த்தோடு எழுத‌லாம்😉..........................

நிச்சயமாக...புனிததை பேணவேண்டும்...  இதில்நான்  தேவையற்றதை எழுதீருந்தால் மன்னிக்கவும்

புதிய திரியை திறவுங்கள்..பல திருகுதாளங்கள் வெளிவரும்...இந்த காணொளீ  தமிழ் முகவர்கள் சிலர் நம்மினத்துக்கே பிடித்த கான்சர் வியாதிகள்

6 minutes ago, valavan said:

பையன் சொல்வது சரிதான், 

மனித தன்மையற்ற இவர்களின் செயலினால் உழைச்சலாகி அந்த வீடியோவை இந்த திரியில் சொருகிவிட்டேன், அதை அப்படியே வேறு தனி  திரிக்கு யாரும் நகர்த்தினால் நன்றே.

இல்லை நீங்கள் இணைத்தது சரியென்றே எனக்குத் தோன்றுகிறது...சிலருடைய பித்தலாட்டம் வெளிப்படக்கூடிய இடத்தி ல் வெளிப்பட வேண்டுமே

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியம் செத்துவிட்டது, சிங்கள இனவாதிகளை தமிழ் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்கிற செய்திகளும், இலங்கையராக இணைவோம் என்கிற கூச்சல்களும் இப்போது எங்கே போய்விட்டன? தமிழினம் தலைவரையும் மாவீரர்களையும் எப்போதும் மறக்காது என்பதற்கு இன்றைய மாவீரர் தின நிகழ்வுகள் சாட்சி. வீரவணக்கம் !!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

சிங்கள இனவாதிகளை தமிழ் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்கிற செய்திகளும், இலங்கையராக இணைவோம் என்கிற கூச்சல்களும் இப்போது எங்கே போய்விட்டன?

சிங்கள ஜேவிபிக்குக்கு வாக்களித்த தமிழர்களைவிட மொத்தமாக தமிழ் கட்சிகளுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் அதிகம் தானே

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people, body of water and text

எம். கே. சிவாஜிலிங்கம்,
அரச புலனாய்வாளர்களின் அடாவடித்தனமற்ற இப்படியான சுதந்திர நிகழ்வுகளில் மட்டும் முன்னிற்பவர் அல்ல.

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இறுக்கமான தடை இருந்த கடந்த காலங்களில் எல்லாம் புயலாய் ஒற்றை மனிதனாய் நின்று நினைவேந்தல்களை செய்திருக்கிறார்.

ஆயுத முனையில் இராணுவத்தின் முன் ஒற்றை வாழைக்குற்றியுடன் நின்றிருக்கிறார்.

இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மாவீரச் செல்வங்களை நினைவேந்தி காட்டியிருக்கிறார். மேதகுவின் தாயார் இந்தியாவில் இறந்த போது கூட அவரின் உடலை ஏற்க இன்று தமிழ் தேசியத்தில் தாம் ஊறி திழைத்தவர்களாக காட்டும் அத்தனை அரசியல்வாதிகளும் பின்னின்ற போதும் தானாக முன்னின்று வீரப்புதல்வனை சுமந்த அந்த தாயின் உடலை ஈழமண்ணிற்கு கொண்டுவந்து அவரின் சொந்த இடமான வல்வெட்டிதுறையில் கடும்  கெடுபிடிகளுக்கு மத்தியில் மரணச்சடங்கை நிகழ்த்தினார். அவரின் ஆஸ்தியை இந்தியக் கடலில் கூட கரைப்பித்தார். ஒவொரு முறையிம் தலைவனின் பிறந்தநாளுக்கு பாக்கெட்டில் இனிப்புடன் தான் திருவார் மற்றவர்களுக்கு வழங்கவென! இப்புறை அவரின் வீட்டிலேயே மக்களை ஒன்றுதிரட்டி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

சமீப காலங்களில் கடும் நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் இருந்தாலும் தன் உடல் நிலை கருதாது இன்றும் கடும் மழையில் நனைந்து மாவீரங்களை நினைவேந்துகிறார்.
இதுதான் அவரது அடையாளம். 

ஆனால் மக்கள் தான் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை!!!
சிவாஜி அரசியலுக்கு அப்பால் ஓர் தமிழ் தேசிய செயற்பாட்டாளன்!

Mathusuthan Kumarasamy

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமாகவே சிவாஜிலிங்கம் ஒரு மாமனிதர்தான் . ......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

நிஜமாகவே சிவாஜிலிங்கம் ஒரு மாமனிதர்தான் . ......!

உங்க‌ளின் க‌ருத்தில் உட‌ன் ப‌டுகிறேன் த‌லைவ‌ரே👍...................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 7 people, body of water and text

எம். கே. சிவாஜிலிங்கம்,
அரச புலனாய்வாளர்களின் அடாவடித்தனமற்ற இப்படியான சுதந்திர நிகழ்வுகளில் மட்டும் முன்னிற்பவர் அல்ல.

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இறுக்கமான தடை இருந்த கடந்த காலங்களில் எல்லாம் புயலாய் ஒற்றை மனிதனாய் நின்று நினைவேந்தல்களை செய்திருக்கிறார்.

ஆயுத முனையில் இராணுவத்தின் முன் ஒற்றை வாழைக்குற்றியுடன் நின்றிருக்கிறார்.

இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மாவீரச் செல்வங்களை நினைவேந்தி காட்டியிருக்கிறார். மேதகுவின் தாயார் இந்தியாவில் இறந்த போது கூட அவரின் உடலை ஏற்க இன்று தமிழ் தேசியத்தில் தாம் ஊறி திழைத்தவர்களாக காட்டும் அத்தனை அரசியல்வாதிகளும் பின்னின்ற போதும் தானாக முன்னின்று வீரப்புதல்வனை சுமந்த அந்த தாயின் உடலை ஈழமண்ணிற்கு கொண்டுவந்து அவரின் சொந்த இடமான வல்வெட்டிதுறையில் கடும்  கெடுபிடிகளுக்கு மத்தியில் மரணச்சடங்கை நிகழ்த்தினார். அவரின் ஆஸ்தியை இந்தியக் கடலில் கூட கரைப்பித்தார். ஒவொரு முறையிம் தலைவனின் பிறந்தநாளுக்கு பாக்கெட்டில் இனிப்புடன் தான் திருவார் மற்றவர்களுக்கு வழங்கவென! இப்புறை அவரின் வீட்டிலேயே மக்களை ஒன்றுதிரட்டி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

சமீப காலங்களில் கடும் நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் இருந்தாலும் தன் உடல் நிலை கருதாது இன்றும் கடும் மழையில் நனைந்து மாவீரங்களை நினைவேந்துகிறார்.
இதுதான் அவரது அடையாளம். 

ஆனால் மக்கள் தான் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை!!!
சிவாஜி அரசியலுக்கு அப்பால் ஓர் தமிழ் தேசிய செயற்பாட்டாளன்!

Mathusuthan Kumarasamy

எமது இனத்தின் குறைபாடு இது தான். 

ஒவ்வொரு மனிதனிலுமுள்ள குறைகளை கண்டு பிடிப்பதே முழுநேர வியாதியாகும். ஆனால் அவர்கள் செய்யும் செய்த செயல் சார்ந்து சிந்தித்தால் கை விரல் நீட்டுபவர்கள் வெறும் பூச்சியமே. 😭

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி லிங்கம் இந்த விடயத்தில், பார்வதி அம்மா விடயத்தில் (மட்டும்) போற்றுதலுகுரியவரே.

5 hours ago, விசுகு said:

ஒவ்வொரு மனிதனிலுமுள்ள குறைகளை கண்டு பிடிப்பதே முழுநேர வியாதியாகும்

ஓரிரு நிறைகளை வைத்து பல குறைகளை காணாமல் விடுவதும் தப்பே.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

சிவாஜி லிங்கம் இந்த விடயத்தில், பார்வதி அம்மா விடயத்தில் (மட்டும்) போற்றுதலுகுரியவரே.

ஓரிரு நிறைகளை வைத்து பல குறைகளை காணாமல் விடுவதும் தப்பே.

சில விடயங்களை செய்ய சிலரால் மட்டுமே முடியும். அதை அவர் செய்தால் போதும். போற்றுதலுக்குரியவரே. 💯 வீத தூய்மை என்பது எங்கும் இல்லை. இல்லாத ஒன்றை எதற்காக தேடி இருக்கும் நண்பரையும் இழப்பான்????

நமக்கு ஒத்துவராத அவரது செயல்களுக்கு நாம் ஆதரவளிக்காதிருந்தாலே போதும் அது அவரே பாதை மாற்ற உதவக்கூடும்?

  • கருத்துக்கள உறவுகள்
On 28/11/2024 at 05:56, goshan_che said:

நடமாடுவதே பாதுகாப்பில்லை என்ற புயல் சூழலில் மக்கள் அலை என எழும்பி வந்தது ….எல்லாமும் முடிந்து போய்விடவில்லை என்ற நம்பிக்கையை தருகிறது.

உங்களுக்கு  ஞாபகம் இருக்கும் என் அநினைக்கிறேன் 
1977 தேர்தல் முடிந்து 1980 களில் 
எமது மக்கள்(இளைஞர்கள்) தமிழர் விடுதலை கூட்டணியினரிடம் கேட்ட கேள்வி "கேட்டது தமிழ் ஈழம் கிடைத்தது உங்களுக்கு பஜீரோ வண்டி" 

அது போல இந்த தடவை மக்கள் தமிழ்தேசிய கட்சிகளிடம் கேட்டது "பேசியது தமிழ் தேசியம் கிடைத்தது பார் லைசண்ஸ்"

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

உங்களுக்கு  ஞாபகம் இருக்கும் என் அநினைக்கிறேன் 
1977 தேர்தல் முடிந்து 1980 களில் 
எமது மக்கள்(இளைஞர்கள்) தமிழர் விடுதலை கூட்டணியினரிடம் கேட்ட கேள்வி "கேட்டது தமிழ் ஈழம் கிடைத்தது உங்களுக்கு பஜீரோ வண்டி" 

77 இல் கோஷான் மகான் இன்னும் இப்பூவுலகில் அவதரித்திருக்கவில்லை🤣.

ஆகவே நியாபகம் எல்லாம் இல்லை🤣,

ஆனால் “கேட்டது தமிழ் ஈழம் கிடைத்தது ஜப்பான் ஜீப்” என விமர்சிக்கப்பட்டதாக வாசித்துள்ளேன்.

அது பஜரோ வகை ஜீப்பா? 

9 minutes ago, putthan said:

"பேசியது தமிழ் தேசியம் கிடைத்தது பார் லைசண்ஸ்"

ஆங்கிலத்தில் epitaph என்பார்கள்.

ஒருவரின் கல்லறையில் அவர் வாழ்வை அல்லது பேர்சலல்னாலிட்டியை ஓரிரு வார்த்தையில் எழுதுவது.

சிறி சேர் கல்லறையில் இதை எழுதலாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

77 இல் கோஷான் மகான் இன்னும் இப்பூவுலகில் அவதரித்திருக்கவில்லை🤣.

ஆகவே நியாபகம் எல்லாம் இல்லை🤣,

ஆனால் “கேட்டது தமிழ் ஈழம் கிடைத்தது ஜப்பான் ஜீப்” என விமர்சிக்கப்பட்டதாக வாசித்துள்ளேன்.

அது பஜரோ வகை ஜீப்பா? 

முதல் முதல்  வந்த வண்டி அமிர் எதிர்கட்சி தலைவராக இருந்தவர் ....அவருக்கு அரசாங்கம் கொடுத்த வண்டி என நினைக்கிறேன்...
 
Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.