Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, nochchi said:

அநுரவும் தேர்தல் ஆணையாளரும் எடுக்கவேண்டிய முடிவென்றல்லவா நான் நினைத்தேன். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

அதனை எங்கள் சிறியரும்  விசுகரும் அல்வாயனும் கலந்து பேசி முடிவெடுப்பார்கள். 

 🤣

  • Replies 101
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, island said:

மாகாணசபை தேர்தலை நடத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துவது நல்லதே. 1987 ல் மாகாணசபையை உதைத்து தள்ளிவிட்டு வெற்றிப் பெருமிதத்துடன் மீசை முறுக்கிய நாம் இப்போது அதற்கு கூட  கெஞ்ச வேண்டிய  நிலை. ஆகவே இதுவும் இல்லாமல் போக முதல் அன்று உதைத்து தள்ளியதை பொறுக்கி எடுத்துக்கொண்டு   நடையை கட்டுவதே செயற்படு பொருள் 😂  முகத்தில் அசடு வழிவதை மறைக்கவும் 1987 ல் முறுக்கிய மீசையில் மண் ஒட்டியதை மறைக்கவும் வேண்டுமானால் சுமனை வைச்சு செய்யலாம். 😂

இதை இப்படியும் எழுதலாம் 👆👇🤣

1 hour ago, valavan said:

ஒருகாலம் மாகாணசபை முறையையே உப்பு சப்பில்லாதது என்று புறக்கணித்த எம் சமூகம், இன்று அதுவும் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சுவது காலத்தின் பரிணாம துயரம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, island said:

மாகாணசபை தேர்தலை நடத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துவது நல்லதே. 1987 ல் மாகாணசபையை உதைத்து தள்ளிவிட்டு வெற்றிப் பெருமிதத்துடன் மீசை முறுக்கிய நாம் இப்போது அதற்கு கூட  கெஞ்ச வேண்டிய  நிலை. ஆகவே இதுவும் இல்லாமல் போக முதல் அன்று உதைத்து தள்ளியதை பொறுக்கி எடுத்துக்கொண்டு   நடையை கட்டுவதே செயற்படு பொருள் 😂  முகத்தில் அசடு வழிவதை மறைக்கவும் 1987 ல் முறுக்கிய மீசையில் மண் ஒட்டியதை மறைக்கவும் வேண்டுமானால் சுமனை வைச்சு செய்யலாம். 😂

குண்டி காய்ந்தால் புலியும் புல்லுத் தின்னுமாம் என்று இதனை அழகாகச் சொல்லலாம்😂

குறிப்பு:

ஒறிஜினல் பழமொழி வருமாறு: கும்பி காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்!

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, goshan_che said:

இதை இப்படியும் எழுதலாம் 👆👇🤣

ஒரு தகப்பன் இருக்கும் போது எமக்கிருக்கும் பலத்தையும்  மரியாதையும் அவரை இழந்த பின்னர்.....? 😭

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, goshan_che said:

இதை இப்படியும் எழுதலாம் 👆👇🤣

சரி தான் கோஷான்

இருந்தாலும்….

நையாண்டி சர்வாதிகாரிகளின் சிம்ம சொப்பனம் மட்டுமல்ல வரட்டு தேசியர்களுக்கான மாமருந்தாகவும் அமையலாம்.

உறைக்க சொன்னால்  அதனால் என் மீது  கொண்ட பெருஞ்சினத்தில் ரோஷம் வந்து திடீரெண்டு திருந்தி விட்டால்..👌  நான்  இவர்களுடன் vacation போகப் போவதும் இல்லை. எலெக்சன் கேட்கப்போவதும் இல்லை. 😂   

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, nochchi said:

தமிழர்களது பலத்தை அணுஅணுவாகச் சிதைக்காது ஓயாரென்று சொல்கிறீர்கள் என்று எடுக்கலாமா?

ஆகாயத்திலை சும்மா போய்க்கொண்டிருந்ததை சம்பந்தன் புடிச்சு இழுத்துக்கொண்டு வந்து நடு வீட்டுக்கை இருத்திப்போட்டு அது போய் சேர்ந்துட்டுது.இப்ப கறையான் அரிக்கிற மாதிரி கடைசி வரைக்கும் இருந்து அரிச்சுப்போட்டுத்தான் மிச்ச வேலையை பாக்கும். 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, island said:

மாகாணசபை தேர்தலை நடத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துவது நல்லதே. 1987 ல் மாகாணசபையை உதைத்து தள்ளிவிட்டு வெற்றிப் பெருமிதத்துடன் மீசை முறுக்கிய நாம் இப்போது அதற்கு கூட  கெஞ்ச வேண்டிய  நிலை. ஆகவே இதுவும் இல்லாமல் போக முதல் அன்று உதைத்து தள்ளியதை பொறுக்கி எடுத்துக்கொண்டு   நடையை கட்டுவதே செயற்படு பொருள் 😂  முகத்தில் அசடு வழிவதை மறைக்கவும் 1987 ல் முறுக்கிய மீசையில் மண் ஒட்டியதை மறைக்கவும் வேண்டுமானால் சுமனை வைச்சு செய்யலாம். 😂

அரசியல்வழியில் சிங்களவனிடம் தீர்வுகளை எதிர்பார்த்து காலம் காலமாக ஏமாந்த எம் சமூகம் பின்னாளில் ஆயுதம் ஏந்தி பிரிந்து செல்ல முற்பட்டது.

சேர்த்து வாழாதவனிடம் இருந்து பிரிந்து செல்ல எத்தனிப்பது ஒன்றும் வரலாற்று தவறல்ல.

பிரிந்து சென்று தனியரசு அமைப்பது என்ற இலட்சியத்துக்காகவே வடக்கு கிழக்கிலிருந்து பல ஆயிரம் இளைஞர்கள் நம்பிக்கையுடன் தமது உயிரை ஈந்தார்கள், அவர்கள் உயிரை மாகாணசபைக்கே தாரை வார்ப்பதற்கு பிரபாகரன் என்ற தனி மனிதனுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை,

அதைத்தான் அவரும் செய்தார், அவர் வாயாலேயே தமிழீழம் என்ற  கோட்பாட்டை கைவிட்டால் பிரபாகரனும் சுட்டுக்கொல்லப்பட வேண்டியவரே என்றும் சொன்னார்.

1987 மாகாண சபை முறையினை ஒட்டுமொத்தமாக புலிகளுட்பட எவரும் புறக்கணிக்கவில்லை, காலத்தின் தேவைகருதி ஏற்றே கொண்டார்கள்.

ஆனால் அந்த தீர்வு திட்டத்தில்கூட வடக்கு கிழக்கு நிரந்தர இணைப்பில்லை,  பிரபாகரன் முதலமைச்சர் இல்லை, இந்திய ஆயுதங்களுடன் களமிறக்கப்பட்ட பிற ஆயுத குழுக்கள் பிரசன்னம், இந்திய விசுவாச கூட்டணியை உள்ளுக்குள் திணித்தல்.

எந்த அரசியல் கைதிகளும் விடுதலை இல்லை, மாறாக ஆயுதமின்றி இருந்த தளபதிகள் போராளிகளையும் ஆயுத குழுக்கள் இலங்கை அரசு வேட்டையாட அனுமதித்தது, சிங்கள குடியேற்றங்களை கண்டும் காணாமல் விட்டது, புலிகளிடம் ஆயுதங்களை கையளிக்க சொல்லிவிட்டு தமிழர் தேசமெங்கும் எந்த பாரிய  சிங்கள ராணுவ முகாம்களையும் அகற்றாதது.

மாறாக சிங்கள இந்திய ராணுவங்களால் மட்டுமே தமிழர் பிரதேசத்தை நிரப்பியது, அவசரகால சட்டத்தை நீக்காதது என்று இத்தனையும், இதைவிடவும் அதிக கொடுமைகள் இருந்த மாகாண சபை திட்டத்தில் என்ன இருக்கிறது, இதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்று சொல்ல நமக்கு என்ன அருகதை இருக்கிறது?

இந்திய இலங்கை ஒப்பந்தமென்று வந்தது அப்பட்டமாக இந்திய பிராந்திய நலன் கருதிய திட்டம், இல்லையென்றால் இலங்கை தமிழர்களுக்கான தீர்வு திட்டமென்றால், சண்டைபோட்டவர்களுக்கு இடையில்தான் ஒப்பந்தம் நடந்திருக்கவேண்டும், அதெப்படி சம்பந்தப்படாத இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது என்று என்றாவது நாம் சிந்தித்ததுண்டா?

அன்றே அது உப்பு சப்பில்லாதது என்று உறுதியாகிவிட்டது. ஆயிரக்கணக்கான எம் மக்களும் போராளிகளும் தம்மை ஆகுதியாக்கியது இன்னொரு நாட்டின் பிராந்திய நலனுக்கா?

பிளேட் கையில் வெட்டினாலும், தலைவலி காய்ச்சல் வந்தாலும் ஒப்பாரி வைக்கும் பழக்கமுள்ள மனிதன், உயிரையும் உடல் அவயங்களையும் உரிமைக்காக போராட தந்து சிதைந்து போனபோது அவன் தியாகத்தை  உருப்படியற்ற தீர்வுகளுக்கு பயன்படுவது வரலாற்று துரோகம் அதையே இயக்கமும் செய்தது.

ஆயுதரீதியில் பலம் எம்மைவிட பலமடங்கு அதிகமானதால் சிங்களவனிடம் நாம் தோற்று போனோம், ஆனால் மண் ரீதியாக சிங்களவனிடம் நாம் தோற்றுவிட்டாலும், மண்ரீதியாக , சிங்கள தேசத்தில் அவர்கள் வேறு நாங்கள் வேறு என்ற சிந்தனை தமிழர்களிடம் இருந்துகொண்டே இருக்கும்.

அந்த அடிமனது துயரத்தை நீக்கும்வரை இலங்கை எனும் நாடு உருப்பட வாய்ப்பில்லை என்பது உலகுக்கும் தெரியும் மாறி மாறி ஆட்சி செய்பவர்களுக்கும் தெரியும் சிங்களவனுக்கும் தெரியும், எம்மில் சிலருக்குத்தான் எப்போதும் தெரிவதில்லை.

வார்த்தைகளில் கண்ணியம் அவசியம்.

எம்மீது பிறர் ஏறி மிதித்து போவதைகூட மன்னித்துவிடலாம், ஆனால் எம் எதிர்கால கெளரவமான இருப்பிற்காக மட்டுமே  போராடியதை தவிர வேறெந்த தவறும் செய்யாத எம் போராளிகள்,  தலைமையின் ஆன்மாவின் நெஞ்சு மீது ஏறி மிதித்து போகவோ மறைமுகமா ஏளனம் செய்யவோ எவருக்கும் அனுமதி இல்லை. 

  • Like 2
  • Thanks 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
24 minutes ago, valavan said:

வார்த்தைகளில் கண்ணியம் அவசியம்.

எம்மீது பிறர் ஏறி மிதித்து போவதைகூட மன்னித்துவிடலாம், ஆனால் எம் எதிர்கால கெளரவமான இருப்பிற்காக மட்டுமே  போராடியதை தவிர வேறெந்த தவறும் செய்யாத எம் போராளிகள்,  தலைமையின் ஆன்மாவின் நெஞ்சு மீது ஏறி மிதித்து போகவோ மறைமுகமா ஏளனம் செய்யவோ எவருக்கும் அனுமதி இல்லை. 

நன்றி சகோ. 

இங்கே தங்கள் நையாண்டி தேசத்தை நேசிப்பவர்களை கோபப்பட வைக்கும் என்று சிரித்து மகிழும் போது அவரும்  ஆயிரமாயிரம் போராளிகளும் இவ்வாறு எவ்வளவு அவமானங்களை நையாண்டிகளை சகித்துக் கொண்டிருக்க வேண்டி இருந்திருக்கும் என்று தான் நினைத்தேன். 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, விசுகு said:

நன்றி சகோ. 

இங்கே தங்கள் நையாண்டி தேசத்தை நேசிப்பவர்களை கோபப்பட வைக்கும் என்று சிரித்து மகிழும் போது அவரும்  ஆயிரமாயிரம் போராளிகளும் இவ்வாறு எவ்வளவு அவமானங்களை நையாண்டிகளை சகித்துக் கொண்டிருக்க வேண்டி இருந்திருக்கும் என்று தான் நினைத்தேன். 

41 minutes ago, valavan said:

எம்மீது பிறர் ஏறி மிதித்து போவதைகூட மன்னித்துவிடலாம், ஆனால் எம் எதிர்கால கெளரவமான இருப்பிற்காக மட்டுமே  போராடியதை தவிர வேறெந்த தவறும் செய்யாத எம் போராளிகள்,  தலைமையின் ஆன்மாவின் நெஞ்சு மீது ஏறி மிதித்து போகவோ மறைமுகமா ஏளனம் செய்யவோ எவருக்கும் அனுமதி இல்லை. 

ஐலண்ட் தனக்கான வக்காலத்தை வாங்குவார். வாங்காது விடுவார்.

அதை பற்றி எனக்கு கவலை இல்லை.

ஆனால் இங்கே மாவீரர்களோ, போராளிகளோ அவமானப்படுத்தபட்டதாக எனக்கு தெரியவில்லை.

87 இலும் அதன் பின்னும்….இந்திய வல்லாதிக்கத்தை நாம் கையாண்ட முறை நையாண்டிக்கு ஆளாகியது.

அது கூட கையாண்ட தலைவர் மீதான நையாண்டி அல்ல.

அணுகுமுறை மீதான நையாண்டியே.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, valavan said:

பிரிந்து சென்று தனியரசு அமைப்பது என்ற இலட்சியத்துக்காகவே வடக்கு கிழக்கிலிருந்து பல ஆயிரம் இளைஞர்கள் நம்பிக்கையுடன் தமது உயிரை ஈந்தார்கள், அவர்கள் உயிரை மாகாணசபைக்கே தாரை வார்ப்பதற்கு பிரபாகரன் என்ற தனி மனிதனுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை,

அதைத்தான் அவரும் செய்தார், அவர் வாயாலேயே தமிழீழம் என்ற  கோட்பாட்டை கைவிட்டால் பிரபாகரனும் சுட்டுக்கொல்லப்பட வேண்டியவரே என்றும் சொன்னார்.

1987 மாகாண சபை முறையினை ஒட்டுமொத்தமாக புலிகளுட்பட எவரும் புறக்கணிக்கவில்லை, காலத்தின் தேவைகருதி ஏற்றே கொண்டார்கள்.

ஆனால் அந்த தீர்வு திட்டத்தில்கூட வடக்கு கிழக்கு நிரந்தர இணைப்பில்லை,  பிரபாகரன் முதலமைச்சர் இல்லை, இந்திய ஆயுதங்களுடன் களமிறக்கப்பட்ட பிற ஆயுத குழுக்கள் பிரசன்னம், இந்திய விசுவாச கூட்டணியை உள்ளுக்குள் திணித்தல்.

எந்த அரசியல் கைதிகளும் விடுதலை இல்லை, மாறாக ஆயுதமின்றி இருந்த தளபதிகள் போராளிகளையும் ஆயுத குழுக்கள் இலங்கை அரசு வேட்டையாட அனுமதித்தது, சிங்கள குடியேற்றங்களை கண்டும் காணாமல் விட்டது, புலிகளிடம் ஆயுதங்களை கையளிக்க சொல்லிவிட்டு தமிழர் தேசமெங்கும் எந்த பாரிய  சிங்கள ராணுவ முகாம்களையும் அகற்றாதது.

மாறாக சிங்கள இந்திய ராணுவங்களால் மட்டுமே தமிழர் பிரதேசத்தை நிரப்பியது, அவசரகால சட்டத்தை நீக்காதது என்று இத்தனையும், இதைவிடவும் அதிக கொடுமைகள் இருந்த மாகாண சபை திட்டத்தில் என்ன இருக்கிறது, இதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்று சொல்ல நமக்கு என்ன அருகதை இருக்கிறது?

இந்திய இலங்கை ஒப்பந்தமென்று வந்தது அப்பட்டமாக இந்திய பிராந்திய நலன் கருதிய திட்டம், இல்லையென்றால் இலங்கை தமிழர்களுக்கான தீர்வு திட்டமென்றால், சண்டைபோட்டவர்களுக்கு இடையில்தான் ஒப்பந்தம் நடந்திருக்கவேண்டும், அதெப்படி சம்பந்தப்படாத இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது என்று என்றாவது நாம் சிந்தித்ததுண்டா?

அன்றே அது உப்பு சப்பில்லாதது என்று உறுதியாகிவிட்டது. ஆயிரக்கணக்கான எம் மக்களும் போராளிகளும் தம்மை ஆகுதியாக்கியது இன்னொரு நாட்டின் பிராந்திய நலனுக்கா?

பிளேட் கையில் வெட்டினாலும், தலைவலி காய்ச்சல் வந்தாலும் ஒப்பாரி வைக்கும் பழக்கமுள்ள மனிதன், உயிரையும் உடல் அவயங்களையும் உரிமைக்காக போராட தந்து சிதைந்து போனபோது அவன் தியாகத்தை  உருப்படியற்ற தீர்வுகளுக்கு பயன்படுவது வரலாற்று துரோகம் அதையே இயக்கமும் செய்தது.

இவை எல்லாம் யாழில் பல வருடங்கள் முன்பே எதிரும் புதிருமாக பலமுறை விவாதிக்கப்பட்ட விடயங்கள் வல்லவன்.

உங்களை விட யாழில் வீரியமாக எழுதிய பலர் - இப்போ அனுரவிற்கு கொஞ்ச காலம் கொடுப்போம், எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடாதிருப்போம், இனவாதத்தை கட்டுப்படுத்த பயங்கரவாத சட்டம் வேண்டும் என்ற அளவிற்கு இறங்கி வந்து விட்டார்கள்.

இதுதான் 87 இல் எடுத்த சாதுரியமற்ற முடிவுகள் இலங்கையில் தமிழ் தேசிய அரசியலை, திம்பு கோட்பாட்டை கொண்டு வந்து விட்டுள்ள இடம்.

2009 இன் பின் வந்த, வருகின்ற ஒவ்வொரு வருடமும், 87 இல் ஒரு இனமாக நாம் எந்தளவு பெரிய தவறை இழைத்தோம் என்பதை ஒவ்வொரு படி அதிகரித்தே காட்டி போகிறது.

மண்டியிடாத வீரமும், விட்டு கொடாத கொள்கை பற்றும், குடும்பத்தையும் காவு கொடுத்த வீரமும் இன்ன பிற செயற்கரிய பண்புகளும் எவ்வளவு உண்மையோ அதே போலத்தான், நண்பர்கள் யாருமற்ற ஒரு சின்னம் சிறிய இனத்தின் தலைவருக்கு அத்தியாவசியமான நெகிழ்வுபோக்கு இல்லாமல் இருந்தது என்ற உண்மையும்.

இதை சொல்லும் பாங்கில் முரண்படலாம். செய்தியில் அல்ல.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, goshan_che said:

இன்றைய சர்வதேச அரசியல் போக்கில் அனுர வந்தவுடன் எதிர் அரசியல் செய்து எதனை சாதிக்க முடியும்? சர்வதேசத்தில் ஒரு கட்சி ஆட்சியேற்ற பின் 90 நாட்களின் பின்னரே அதன் பிரதிபலன்களை ஆராய்வார்கள். அதற்கு முன் எதிர்வு கூறல்களை ஏற்க மாட்டார்கள்.

சரி. இப்போதே அனுர ஆட்சியை எதிர்ப்பதாலும் அவரின் பழைய அரசியல் கொள்கையை நினைவு கூர்வதாலும் தமிழினத்திற்கு வரப்போகும் பலாபலன்கள் என்ன?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 minutes ago, குமாரசாமி said:

இன்றைய சர்வதேச அரசியல் போக்கில் அனுர வந்தவுடன் எதிர் அரசியல் செய்து எதனை சாதிக்க முடியும்? சர்வதேசத்தில் ஒரு கட்சி ஆட்சியேற்ற பின் 90 நாட்களின் பின்னரே அதன் பிரதிபலன்களை ஆராய்வார்கள். அதற்கு முன் எதிர்வு கூறல்களை ஏற்க மாட்டார்கள்.

கடந்த 76 வருடத்தில் எப்போ அண்ணை சர்வதேச அரசியல் போக்கு எமக்கு சாதகமாக இருந்தது - ஆனாலும் நாம் கேட்பதை கேட்டோம் இல்லையா ?

நாம் அனுர ஆட்சியின் ரிப்போர்ட் கார்ட்டை ஆராயத்தேவையில்லை.

அது இலங்கை தேசியம் சம்பந்தபட்டது. 

நாம் இலங்கையின் அரசுகளை, தலைவர்களை எடைபோடும் ஒரே அளவிடை - இனப்பிரச்சனைக்கான தீர்வில் அவர்கள் நிலைப்பாடு.

நாம் கூறுவது எதிர்வு கூறலும் அல்ல, பண்டாடநாயக்க-ரணில் போல இன்னுமொரு இனவாதியே அனுரா. தென்னிலங்கையின் இன்னொரு இனவாத கட்சியே ஜேவிபி. 

மைத்திரி வந்த போது அவகாசம் கொடுத்தோமா?

கோட்ட வந்த போது?

அவர் ஓடி ரணில் வந்த போது?

அப்போ இவருக்கு மட்டும் ஏன் அவகாசம்?

அப்படி இவர் மீது நம்பிக்கை வர என்ன இருக்கிறது?

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

நான் சொல்ல வருவது நம்பிக்கை அல்ல.அவகாசமும் இல்லை. 

உலக அரசியல் நியதியை மட்டுமே சொல்கின்றேன்.

தற்சமயம் ரணில் ஆட்சிக்கு வந்திருந்தால் என்ன சொல்லியிருப்பீர்கள்? அல்லது சஜித் ஆட்சிக்கு வந்திருந்தால் என்ன சொல்லியிருப்பீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
47 minutes ago, குமாரசாமி said:

சரி. இப்போதே அனுர ஆட்சியை எதிர்ப்பதாலும் அவரின் பழைய அரசியல் கொள்கையை நினைவு கூர்வதாலும் தமிழினத்திற்கு வரப்போகும் பலாபலன்கள் என்ன?

மந்தைதனமாக அனுரவை நம்பி, தமிழ் தேசியத்தை கைவிடாமல் காப்பாற்றலாம்.

எமக்கான காணி உரிமையை தராதவரை இவரும் இனவாதிதான் என்பதை நினைவூட்டலாம்.

நாம் பிரிந்து நின்றதாலே இவர் எமது பகுதியில் வெல்ல முடிந்தது என்பதை விளங்கபடுத்தி - எதிர்கால ஒற்றுமையை வலியுறுத்தலாம்.

மிக முக்கியமாக - இந்த அனுர பேய்க்காட்டல் பண்டா-செல்வா, டட்லி-செல்வா, 87 ஒப்பந்தம், இடைக்கால நிர்வாக சபை போன்ற இன்னுமொரு பேரினவாத பேய்காட்டல் என்பதை புரிய வைத்து - தமிழ் தேசிய அரசியலே நிரந்ததர தீர்வை தரும் என்பதை உணர்த்தலாம்.

24 minutes ago, குமாரசாமி said:

தற்சமயம் ரணில் ஆட்சிக்கு வந்திருந்தால் என்ன சொல்லியிருப்பீர்கள்? அல்லது சஜித் ஆட்சிக்கு வந்திருந்தால் என்ன சொல்லியிருப்பீர்கள்?

இவர்கள் இருவரும் இனவாதிகள். இவர்கள் ஒரு போதும் எமக்கு காணி, பொலிஸ் அதிகாரம் தாமாக தரபோவதில்லை. இருக்கும் 13 ஐயும் உருவ கூடியவர்கள். எனவே மக்கள் விழிப்புடன் இருந்து இவற்றை பெற போராட வேண்டும்.

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, goshan_che said:

இங்கே மாவீரர்களோ, போராளிகளோ அவமானப்படுத்தபட்டதாக எனக்கு தெரியவில்லை.

87 இலும் அதன் பின்னும்….இந்திய வல்லாதிக்கத்தை நாம் கையாண்ட முறை நையாண்டிக்கு ஆளாகியது.

அது கூட கையாண்ட தலைவர் மீதான நையாண்டி அல்ல.

அப்படியா கோசான்,

சரி உங்களிடமே வருகிறேன், தெளிவாக ஒரேவரியில் சொல்லிவிடுங்கள் அறிந்துகொள்வதில் ஆர்வம் அதிகம் , கீழேயுள்ள ஐலண்ட் எழுதிய வரிகளில் அர்த்தப்படுத்தியது, யாரை யார் சார்ந்த சமூகத்தை?

4 hours ago, island said:

1987 ல் மாகாணசபையை உதைத்து தள்ளிவிட்டு வெற்றிப் பெருமிதத்துடன் மீசை முறுக்கிய நாம் இப்போது அதற்கு கூட  கெஞ்ச வேண்டிய  நிலை. ஆகவே இதுவும் இல்லாமல் போக முதல் அன்று உதைத்து தள்ளியதை பொறுக்கி எடுத்துக்கொண்டு   நடையை கட்டுவதே செயற்படு பொருள் 😂  முகத்தில் அசடு வழிவதை மறைக்கவும் 1987 ல் முறுக்கிய மீசையில் மண் ஒட்டியதை

மீசை முறுக்கியதும் உதைத்து தள்ளியதும் என்று அவர் அர்த்தப்படுத்தியது யார் தலைமை தாங்கிய ஒரு சமூகத்தை?

இது ஐலண்டிடம்தான் கேட்கவேண்உமென்று சாதுரியமாக விலகிவிடாதீர்கள், ஏனென்றால் ஐலண்ட் அர்த்தப்படுத்தியது மாவீரர்களையும் எம் தலைமையையும் இல்லையென்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்போது அவர் அர்த்தப்படுத்தியது வேறு யாரையென்பதும் உங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கும் அதனால கேட்கிறேன்.

39 minutes ago, goshan_che said:

இவை எல்லாம் யாழில் பல வருடங்கள் முன்பே எதிரும் புதிருமாக பலமுறை விவாதிக்கப்பட்ட விடயங்கள் வல்லவன்.

உங்களை விட யாழில் வீரியமாக எழுதிய பலர்

இது வீரியமாக எழுதவேண்டும் என்பதற்கான பதிவு இல்லை கோசான், காலம் காலமாக மறக்காமல் அடுத்தடுத்த சந்ததிக்கும் நினைவில் வைத்துக்கொள்ள மீண்டும் மீண்டும் கடத்தப்பட வேண்டியதொன்று என்பதால் எழுதினேன்.

இன உணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு புதுமையும் இல்லை பழமையும் இல்லை. அது எக்காலமும் எம்முடன் எடுத்து செல்லப்பட்டுக்கொண்டிருக்கவும் வேண்டும் எடுத்து சொல்லப்பட்டுக்கொண்டிருக்கவும் வேண்டும்.,

44 minutes ago, goshan_che said:

நண்பர்கள் யாருமற்ற ஒரு சின்னம் சிறிய இனத்தின் தலைவருக்கு அத்தியாவசியமான நெகிழ்வுபோக்கு இல்லாமல் இருந்தது என்ற உண்மையும்.

பல தசாப்தங்களாக எம் இனத்தின்போது எந்த நெகிழ்ச்சியும் எவரும் காட்டாததினால்தான் ஆயுதங்கள் தமிழர்கள் கைக்கு ஏறின, எமக்கு எதிரே ஆயுதத்துடனும் அதிகார பலத்துடனும் நின்றவனுக்கு எந்த நெகிழ்ச்சி போக்கை காட்டியிருக்கவேண்டுமென்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள்?

அதிகாரம், ஆட்சி, ஆயுதம் என்று எம்மைவிட பல மடங்கு பலம் வாய்ந்த ஒரு பெரும்பான்மை இனம், தன்னுடன் வாழும் சிறுபான்மையினருடன் நெகிழ்வு காட்டியிருக்க வேண்டுமா, இல்லை ஒரு பெரும்பான்மை இனத்தின் ஆயுத மிரட்டல், அரசியல் சூழ்ச்சி, நில விழுங்கல்களுக்கு சிறு இன மக்கள் கூட்டம் நெகிழ்வு தன்மை காட்டவேண்டுமா?

ஒருவனை பத்துப்பேர் சுற்றிவர நின்று அடிக்கும்போது அடிப்பவர்களிடம் நெகிழ்வு தன்மை இருக்கணுமா, அடிவாங்கி அலறுகிறவனிடம் நெகிழ்வு இருக்கணுமா?

உங்களிடம் பொட்டில் அடித்ததுபோல் பதில் இருக்கும், அதை தந்து பலர் அறிய உதவுவீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு கோசான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

@குமாரசாமி

இப்போ உங்களிடம் ஒரு கேள்வி.

நீங்கள் அனுர 1 அல்லது 4 வருடத்தில், இணைந்தோ அல்லது தனி தனியாகவோ வடக்கு, கிழக்குக்கு மாகாண மட்டத்தில் காணி, பொலிஸ் அதிகாரம் உள்ள தீர்வை தருவார் என நீங்கள் நம்புகிறீர்களா?

ஆம் அல்லது இல்லை என மட்டும் பதில் தரவும்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

மந்தைதனமாக அனுரவை நம்பி, தமிழ் தேசியத்தை கைவிடாமல் காப்பாற்றலாம்.

எமக்கான காணி உரிமையை தராதவரை இவரும் இனவாதிதான் என்பதை நினைவூட்டலாம்.

நாம் பிரிந்து நின்றதாலே இவர் எமது பகுதியில் வெல்ல முடிந்தது என்பதை விளங்கபடுத்தி - எதிர்கால ஒற்றுமையை வலியுறுத்தலாம்.

மிக முக்கியமாக - இந்த அனுர பேய்க்காட்டல் பண்டா-செல்வா, டட்லி-செல்வா, 87 ஒப்பந்தம், இடைக்கால நிர்வாக சபை போன்ற இன்னுமொரு பேரினவாத பேய்காட்டல் என்பதை புரிய வைத்து - தமிழ் தேசிய அரசியலே நிரந்ததர தீர்வை தரும் என்பதை உணர்த்தலாம்.

இவையெல்லாம் நிரூபிப்பதற்கு அனுர ஆட்சிக்கு கால அவகாசம்  கொடுக்க வேண்டும். அதன்  பின்னர்தான் இலங்கை தமிழர்களுக்கும் ஆதாரம் காட்ட முடியும். சர்வதேசத்திற்கும் சுட்டிக்காட்ட முடியும்.

அனுர கட்சி இன்னும் ஒழுங்காக ஆட்சி செய்ய தொடங்கவேயில்லை...அதற்கிடையில் விமர்சனங்கள்?????

வெள்ளைக்காரங்கள் பின் பக்கத்தால் சிரிக்க மாட்டார்களா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, valavan said:

சரி உங்களிடமே வருகிறேன், தெளிவாக ஒரேவரியில் சொல்லிவிடுங்கள் அறிந்துகொள்வதில் ஆர்வம் அதிகம் , கீழேயுள்ள ஐலண்ட் எழுதிய வரிகளில் அர்த்தப்படுத்தியது, யாரை யார் சார்ந்த சமூகத்தை?

அந்த முயற்சியை “காணாது” என புறம்தள்ளிய தலைமைகளை.  அதை வரவேற்ற commentariat ஐ. 

இதில் என்ன சமூகத்தை குறிக்க இருக்கிறது? தமிழர்கள் எம்மிடம் யாராவது நேரடியாக கேட்டார்களா என்ன? உங்களுக்கு 87 ஒப்பந்தம் ஓகேயா, இல்லையா என்று. இல்லைத்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

@குமாரசாமி

இப்போ உங்களிடம் ஒரு கேள்வி.

நீங்கள் அனுர 1 அல்லது 4 வருடத்தில், இணைந்தோ அல்லது தனி தனியாகவோ வடக்கு, கிழக்குக்கு மாகாண மட்டத்தில் காணி, பொலிஸ் அதிகாரம் உள்ள தீர்வை தருவார் என நீங்கள் நம்புகிறீர்களா?

ஆம் அல்லது இல்லை என மட்டும் பதில் தரவும்.

மறியாடொண்டு வேண்டப்போறன், அது குட்டிபோட்டு (அதுவும் கிடாய்க்குட்டியாய்ப் போடுமெண்டு நினைக்கிறன்), அது வளந்து அறுக்கிற நேரம் வரேக்கை, அவசரப்படாமல் ஆட்டை முழுக்க அறுத்துப் போட்டு ஆறுதலாய் "அதை" அறுக்கலாம் எண்டு நினைக்கிறன், இதில என்ன பிழை? 76 வருசம் காத்திருக்கையில்லையே, இன்னொரு 5 வருஷம் காக்கிறதில குடி மூழ்கிப் போகாது எண்டுறன்.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, valavan said:

பல தசாப்தங்களாக எம் இனத்தின்போது எந்த நெகிழ்ச்சியும் எவரும் காட்டாததினால்தான் ஆயுதங்கள் தமிழர்கள் கைக்கு ஏறின, எமக்கு எதிரே ஆயுதத்துடனும் அதிகார பலத்துடனும் நின்றவனுக்கு எந்த நெகிழ்ச்சி போக்கை காட்டியிருக்கவேண்டுமென்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள்?

அதிகாரம், ஆட்சி, ஆயுதம் என்று எம்மைவிட பல மடங்கு பலம் வாய்ந்த ஒரு பெரும்பான்மை இனம், தன்னுடன் வாழும் சிறுபான்மையினருடன் நெகிழ்வு காட்டியிருக்க வேண்டுமா, இல்லை ஒரு பெரும்பான்மை இனத்தின் ஆயுத மிரட்டல், அரசியல் சூழ்ச்சி, நில விழுங்கல்களுக்கு சிறு இன மக்கள் கூட்டம் நெகிழ்வு தன்மை காட்டவேண்டுமா?

ஒருவனை பத்துப்பேர் சுற்றிவர நின்று அடிக்கும்போது அடிப்பவர்களிடம் நெகிழ்வு தன்மை இருக்கணுமா, அடிவாங்கி அலறுகிறவனிடம் நெகிழ்வு இருக்கணுமா?

உங்களிடம் பொட்டில் அடித்ததுபோல் பதில் இருக்கும், அதை தந்து பலர் அறிய உதவுவீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு கோசான்.

நான் நெகிழ்வு போக்கு காட்டவில்லை என கூறியது அருகே இருக்கும் பிராந்திய வல்லூறுடன். எமது எதிரியுடன் அல்ல.

7 minutes ago, valavan said:

இன உணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு புதுமையும் இல்லை பழமையும் இல்லை. அது எக்காலமும் எம்முடன் எடுத்து செல்லப்பட்டுக்கொண்டிருக்கவும் வேண்டும் எடுத்து சொல்லப்பட்டுக்கொண்டிருக்கவும் வேண்டும்.,

மாற்று கருத்தில்லை. ஆனால் புலிகளின் தலைமையின் கொள்கை முடிவை விமர்சிப்பது, ஏன் நையாண்டி செய்வது கூட - மாவீரரை நையாண்டி செய்வதாகாது.

சர்சிலை விமர்சித்தால், பிரித்தானிய படைகளை விமர்சிப்பதாக அர்த்தம் இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

அந்த முயற்சியை “காணாது” என புறம்தள்ளிய தலைமைகளை.  அதை வரவேற்ற commentariat ஐ. 

இதில் என்ன சமூகத்தை குறிக்க இருக்கிறது? தமிழர்கள் எம்மிடம் யாராவது நேரடியாக கேட்டார்களா என்ன? உங்களுக்கு 87 ஒப்பந்தம் ஓகேயா, இல்லையா என்று. இல்லைத்தானே.

அதைத்தான் நானும் கேட்டேன் கோசான்,

அந்த புறம் தள்ளிய தலைமை யார்? ஐலண்ட் புலிகளையோ தலைவரையோ அர்த்தப்படுத்தவில்லையென்று சொன்னீர்கள், அவர் அர்த்தபடுத்திய அந்த புறம் தள்ளீய தலைமை யாரென்பதை நீங்களும் சொல்ல தயங்குகிறீர்களா?

உலகின் எங்கும்  மக்களிடம் ஒவ்வொருவராக சென்று  ஒருநாட்டின் அல்லது சமூகத்தின் அரசியல்விவகாரங்களை உங்களுக்கு ஒப்பந்தம் ஓகேயா இல்லையா என்று யாரும் பேசிக்கொண்டிருப்பதில்லை, அவர்களுக்கு தலைமை தாங்குகிறவர்களையே அணுகுவார்கள் என்பது கோசானுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான்.

ஏனென்றால் மக்களால் நேசிக்கப்பட்டதும் உருவானதும் / உருவாக்கப்பட்டதும்தான் தலைமை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 minutes ago, குமாரசாமி said:

இவையெல்லாம் நிரூபிப்பதற்கு அனுர ஆட்சிக்கு கால அவகாசம்  கொடுக்க வேண்டும். அதன்  பின்னர்தான் இலங்கை தமிழர்களுக்கும் ஆதாரம் காட்ட முடியும். சர்வதேசத்திற்கும் சுட்டிக்காட்ட முடியும்.

அனுர கட்சி இன்னும் ஒழுங்காக ஆட்சி செய்ய தொடங்கவேயில்லை...அதற்கிடையில் விமர்சனங்கள்?????

வெள்ளைக்காரங்கள் பின் பக்கத்தால் சிரிக்க மாட்டார்களா? 🤣

நாம் மைத்திரியை, சந்திரிகாவை, ரணிலை, கோட்டவை நிராகரித்த போது அப்படி யாரும் சிரிக்கவில்லையே?

உங்களுக்குத்தான் மறந்து விட்டது, உலகத்துக்கு தெரியும் அனுரவும் ஜேவிபியிம் எப்படி பட்ட இனவாதிகள் என. 

ஆகவே செயல் இல்லாமல் அவர்களை தமிழர்கள் நம்ப தயாரில்லை என்பதை யாரும் வித்தியாசமாக பார்க்க மாட்டார்கள்.

6 minutes ago, valavan said:

அந்த புறம் தள்ளிய தலைமை யார்? ஐலண்ட் புலிகளையோ தலைவரையோ அர்த்தப்படுத்தவில்லையென்று சொன்னீர்கள், அவர் அர்த்தபடுத்திய அந்த புறம் தள்ளீய தலைமை யாரென்பதை நீங்களும் சொல்ல தயங்குகிறீர்களா?

அவர் மாவீரர்களை அர்த்தபடுத்தியதாக எனக்கு படவில்லை என்றே கூறினேன்.

அவர் நிச்சயம் புலிகள் அமைப்பின் தலைமையைத்தான் கூறினார்.

நான் மிக நேரடியாகவே தலைவர் என கூறினேனே?

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, valavan said:

அதைத்தான் நானும் கேட்டேன் கோசான்,

அந்த புறம் தள்ளிய தலைமை யார்? ஐலண்ட் புலிகளையோ தலைவரையோ அர்த்தப்படுத்தவில்லையென்று சொன்னீர்கள், அவர் அர்த்தபடுத்திய அந்த புறம் தள்ளீய தலைமை யாரென்பதை நீங்களும் சொல்ல தயங்குகிறீர்களா?

உலகின் எங்கும்  மக்களிடம் ஒவ்வொருவராக சென்று  ஒருநாட்டின் அல்லது சமூகத்தின் அரசியல்விவகாரங்களை உங்களுக்கு ஒப்பந்தம் ஓகேயா இல்லையா என்று யாரும் பேசிக்கொண்டிருப்பதில்லை, அவர்களுக்கு தலைமை தாங்குகிறவர்களையே அணுகுவார்கள் என்பது கோசானுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான்.

ஏனென்றால் மக்களால் நேசிக்கப்பட்டதும் உருவானதும் / உருவாக்கப்பட்டதும்தான் தலைமை.

தமிழ்த்தேசியத்தை வேரறுக்க, இலங்கையராக வாழ்வோம், அடையாளம் துறப்போம் என்று இங்கு தொடர்ச்சியாக கூப்பாடு போட்டுவரும் ஒருவர் குறித்து நீங்கள் இவ்வளவு தூரத்திற்கு வருந்துவது ஏனோ? அவரின் நோக்கம் இங்கு எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்ததுதானே? விட்டுத் தள்ளுங்கள். நீங்கள் சரியென்று நினைப்பதைத் தொடர்ந்து எழுதுங்கள், எவரினதும் அனுமதியும், அனுசரணையும் உங்களுக்குத் தேவையில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, valavan said:

உலகின் எங்கும்  மக்களிடம் ஒவ்வொருவராக சென்று  ஒருநாட்டின் அல்லது சமூகத்தின் அரசியல்விவகாரங்களை உங்களுக்கு ஒப்பந்தம் ஓகேயா இல்லையா என்று யாரும் பேசிக்கொண்டிருப்பதில்லை, அவர்களுக்கு தலைமை தாங்குகிறவர்களையே அணுகுவார்கள் என்பது கோசானுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான்.

உங்களுக்கு பிரெக்சிற், கியூபெக்,  ஈன்ச் தீமோர், ஸ்கொட்லாந்து இன்ன பல சர்வஜன வாக்கெடுப்புகள் கட்டாயம் தெரிந்து இருக்கும்.

ஆனால் இது புலிகளின்  பிழை அல்ல.

இந்த தீர்வை இப்படி திணித்தது இந்தியாதான்.

ஆனால் எமது தலைமையாக இந்த திணிப்பை புலிகள் எதிர்கொண்ட விதம் பிழை என்பதே என் நிலைப்பாடு.

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.