Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, goshan_che said:

இன்னொருவர் சிறிதரனின் இலண்டன் வாகனச்சாரதி. அவரின் உறவினர் பெயரில் இவரே வன்னியில் ஒரு லைசன்சை வைத்துள்ளார் என வதந்தி.

ஓ..அது தான் "லிஸ்ற் வந்திற்றா, லிஸ்ற் வந்திற்றா" என்று  இலங்கையில் ஏ.எல் ரிசல்ட்டுக்காக ஏங்கும் மாணவன் போல அலைகிறார்களா?🤣😂

  • Replies 101
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Justin said:

ஓ..அது தான் "லிஸ்ற் வந்திற்றா, லிஸ்ற் வந்திற்றா" என்று  இலங்கையில் ஏ.எல் ரிசல்ட்டுக்காக ஏங்கும் மாணவன் போல அலைகிறார்களா?🤣😂

குறு குறுக்குமாமே🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, குமாரசாமி said:

இல்லை.

இதற்கு பதில் இல்லை ஏன்றாலும் கூட  அவர் தீர்வு தர மாட்டார் என்று சொல்ல முடியாது  

ஒற்றை ஆட்சியில் அனைத்து மக்களும் சட்டம் சமம் என்பதும் தீர்வு தான்     

தமிழருக்கு காணி  பொலிஸ் அதிகாரங்களை வழங்கிய உடனே  அனைத்து தமிழ் மக்களுக்கும் அவை சென்று அடையுமா ???   கண்டிப்பாக இல்லை   இல்லை   தமிழரசு  கட்சி   படும் பட்டைப். பார்க்கவில்லையா??  இலவச மருத்துவம் படும் துன்பத்தை பார்க்கவில்லையா??  நான் நேரில் அனுபவித்து உள்ளேன்     .....இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு   வேலைவாய்ப்பு வேலை வங்கி என்ற பெயரில் வழங்கப்பட்டபோது    செயல்ப்படட முறையை   குதிரை ஒடி. பத்தாம் வகுப்பு சித்தி அடைத்தவன். செல்வாக்கு  செல்வம் இருந்த காரணத்தால்  ஆசிரியர் பதவியை,.நியமனத்தை பெற்றான்       என்ன கொடுமை  ??  அவனிடம் படித்த மாணவர்கள் எதிர்காலம்   எப்படி இருக்கும்??   தமிழன்   தீர்வு கிடைத்தால்   நல்ல ஆட்சியை  அனைத்து தமிழருக்கும் வழங்குவன???? ஆம்   அல்லது இல்லை   என்று மட்டும் பதில் தரவும்.  🙏🙏🙏🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, goshan_che said:

இவருக்கு நான் ஏன் கால அவகாசம் கொடுக்க வேண்டும்? 4 வருடத்தை வீணடிக்கவா?

உங்களால் இலங்கை ஜனாதிபதி அனுரவை அடுத்த நான்கு வருடங்களுக்குள் என்ன செய்துவிட முடியும்?👈

அனுர எப்படியானவராக இருந்தாலும் ஏகோபித்த அளவில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை சர்வதேசம் பெரும் வெற்றியாக மட்டும் இல்லாமல் மக்கள் பலம் பொருந்திய நபராகவே பார்க்கும்.😎

இந்த நிலையில் அனுர மீதான தமிழர்களின் விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் எங்கும் எடுபடாது.🚫

இலங்கை தமிழர்கள் என்றால் அவர்கள் குழப்பவாதிகள் என்ற பெயரை நீடிக்கவே செய்யும்.🖤

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, குமாரசாமி said:

அனுர எப்படியானவராக இருந்தாலும் ஏகோபித்த அளவில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை சர்வதேசம் பெரும் வெற்றியாக மட்டும் இல்லாமல் மக்கள் பலம் பொருந்திய நபராகவே பார்க்கும்.😎

🚫

ஏன் ...மகிந்த...மைத்திரி ...கோத்தாகூட ஏகோபித்த அளவில்தானே தெரிவு செய்யப்பாட்டவை...சர்வதேசமும் ஏற்றுக்கொண்டதுதானே ...இறுதியில்...கண்டபலன்...இதுவும் அவ்வாறே.. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, alvayan said:

ஏன் ...மகிந்த...மைத்திரி ...கோத்தாகூட ஏகோபித்த அளவில்தானே தெரிவு செய்யப்பாட்டவை...சர்வதேசமும் ஏற்றுக்கொண்டதுதானே ...இறுதியில்...கண்டபலன்...இதுவும் அவ்வாறே.. 

மகிந்தவிற்கும் மைத்திரிக்கும் தமிழ்தரப்பு கட்சி ஆதரவு வழங்கியது. கோத்தபாயவிற்கு சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவு.
அனுரவிற்கு அப்படியல்ல.தமிழ் கட்சிகள் அனுரவிற்கு ஆதரவு வழங்கவில்லை. தமிழ் மக்கள் தாமாகவே உணர்ந்து தமிழ்கட்சிகளுக்கான தண்டனையாக அனுரவிற்கு வாக்களித்தனர். அனுரவும் ஏனைய சிங்கள அரசியல்வாதிகளைப்போல் அல்லாமல் உணர்ச்சிபூர்வமாக நியாயமான சிந்தனைகளுடன் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

70 வருடமாக பொய்யர்களுக்கும் வெள்ளைவேட்டி கள்ளர்களுக்கும் வாக்களித்து தோல்வியடைந்த மக்கள் இந்த முறை தங்கள் வெறுப்பு அரசியலை செய்துள்ளார்கள். அதை நிவர்த்தி செய்ய வக்கில்லை.  அனுரவின் அரசியலை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றால் தீவட்டி கோவிந்தன்கள் குத்துது குடையுது என்கிறார்கள்.

  • Haha 1

காத்திருந்து ..காத்திருந்து ..கண்ட ஏமாற்றத்தின்...விரக்தி...இனியாவது சிங்களவனை நம்புவதை விடுவோம்...காலப்போக்கில் அறிவீர்கள்... விரைவில் அரசியல் மாற்றத்தை உணர்வீர்கள்...வெறும்கை முழம்போடமுடியாது...இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

உங்களால் இலங்கை ஜனாதிபதி அனுரவை அடுத்த நான்கு வருடங்களுக்குள் என்ன செய்துவிட முடியும்?👈

ஜே ஆர்- ரணில்லை எம்மால் என்ன செய்ய முடிந்தது? எதுவுமில்லை.

ஆனால் நாம் எம் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.

இப்போதும் அதையே செய்யலாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

அனுர எப்படியானவராக இருந்தாலும் ஏகோபித்த அளவில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை சர்வதேசம் பெரும் வெற்றியாக மட்டும் இல்லாமல் மக்கள் பலம் பொருந்திய நபராகவே பார்க்கும்.

இல்லை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழர் அனுரவை 3 இடத்தில்தான் வைத்தனர்.

பாராளுமன்ற தேர்தலில் கூட வடக்கு-கிழக்கில் தமிழர் வெல்ல கூடிய 15 சீட்டுகளில் 10 ஐ தமிழ் தேசிய கட்சிகள்தான் வென்றுள்ளன.

உங்களை போல சிலர்தான் ஏதோ அனுரவுக்கு தமிழ் மக்கள் பெருவாரியாக ஆதரவு அளித்தார்கள் என ஒரு மாய விம்பத்தை உருவாக்குகிறீர்கள்.

வெள்ளைகாரனுக்கு 10/15>5/10 எனும் கணக்கு விளங்கும். விளங்காவிடில் விளங்கபடுத்தலாம். 

1 hour ago, குமாரசாமி said:

அனுரவின் அரசியலை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றால் தீவட்டி கோவிந்தன்கள் குத்துது குடையுது என்கிறார்கள்.

பின்ன…. நீங்களே அனுர எமக்கு காணி, பொலிஸ் அதிகாரம் தரமாட்டார் என்கிறீர்கள்.

இவரை பொறுத்து இருந்து பார்க்க என்ன இருக்கிறது.

எதுவும் தரமாட்டார்…ஆனால் அவர் எதுவும் தரமாட்டேன் என சொல்லும் வரை அமைதியாக மிக்சர் சாப்பிடுங்கள் எண்டு சொன்னால்🤣

எழுதுவதில் மருந்துக்காவது லொஜிக் இருந்தால் தீவட்டிகள் எரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, goshan_che said:

எதுவும் தரமாட்டார்…ஆனால் அவர் எதுவும் தரமாட்டேன் என சொல்லும் வரை அமைதியாக மிக்சர் சாப்பிடுங்கள் எண்டு சொன்னால்🤣

எழுதுவதில் மருந்துக்காவது லொஜிக் இருந்தால் தீவட்டிகள் எரியாது.

இனிமேல் என்னிடமிருந்து எதுவும் வராது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, குமாரசாமி said:

இனிமேல் என்னிடமிருந்து எதுவும் வராது.

சரி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னுடைய சந்தேகம் என்னவென்றால்,ஜேவிபி  இலங்கையர்கள் அனைவரும் சமம் ...அவைவரையும் சமமாய் நடத்துவோம் என்று சொல்கிறார்கள்....அப்படியாயின் தமிழர்களுக்கு மட்டும் ஏன் காணி ,நிலம் ,அதிகாரம்?...மற்ற பிரதேசங்களில் வாழ்பவர்கள் மனிதர்கள் இல்லையா?...புலிகள் இருக்கும் வரைக்கும் இந்த கோரிக்கையில் நியாயம் இருந்தது...தற்போதும் கேட்பது நியாயமானதா?
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரதி said:

அடாத்தான குடியேற்றங்களை சிங்கள அரசு தமிழர் பிரதேசங்களில் செய்கின்றது. அது ஏன் என்பது கேள்வி. சிங்களவர்கள் வளமில்லாத பகுதிகளிலா வாழ்கின்றார்கள்? அடாத்தாக தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் எதற்கு? தமிழர் இல்லாத பகுதிகளில் புத்தர் சிலைகள் எதற்கு?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, ரதி said:

என்னுடைய சந்தேகம் என்னவென்றால்,ஜேவிபி  இலங்கையர்கள் அனைவரும் சமம் ...அவைவரையும் சமமாய் நடத்துவோம் என்று சொல்கிறார்கள்....அப்படியாயின் தமிழர்களுக்கு மட்டும் ஏன் காணி ,நிலம் ,அதிகாரம்?...மற்ற பிரதேசங்களில் வாழ்பவர்கள் மனிதர்கள் இல்லையா?...புலிகள் இருக்கும் வரைக்கும் இந்த கோரிக்கையில் நியாயம் இருந்தது...தற்போதும் கேட்பது நியாயமானதா?
 
ஏது…

ஏதோ காணி நில அதிகாரம் புலிகளுக்கானது எண்ட மாதிரி போகுது கதை🤣.

காணி நில அதிகாரம் தமிழருக்கான தேவை, புலிகளுக்கான தேவை அல்ல.

இந்த அதிகாரத்துக்கான தேவை புலிகளுக்கும் முன்னும், அவர்கள் காலத்திலும், புலிகளுக்கு பின்னும் இருக்கிறது.

காணி, நில அதிகாரம் ஏன் தேவை?

வடக்கு கிழக்கில் தமிழர் பாரம்பரிய மண்ணை சிங்களமயமாக்கலை தவிர்க்க.

அதாவது இன்னொரு திரியில் விளங்கபடுத்தியபோல அம்பாறையில், திருகோணமலையில் ஆனது போல் இதர வடக்கு-கிழக்கு பகுதிகளிலும் ஆவதை தடுக்க.

இனப்பிரச்சனை என்பது தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையான நில, தன்னாட்சி அதிகாரம் பற்றியது.

இதற்கு தீர்வு, தமிழரையும், சிங்களவரையும் சமமாக ஒரே அமைப்பின் கீழ் நடத்துவதல்ல (அப்படி நடக்காது என்பது வேறு விடயம்).

தமிழருக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் அவர்கள் காணியை, அவர்கள் காவல்துறையை நிர்வகிக்கும் அதிகாரத்தை கொடுப்பதே இதற்கான தீர்வு.

பிரித்தானியாவில் எல்லாரும் சமமாக நடத்தபடுவதால், ஸ்கொட்லாந்துக்கும், வேல்சுக்கும் தனி அரசாங்கம் தேவை இல்லை என்பதல்லவே? அதுபோலவே இதுவும்.

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/12/2024 at 21:28, Kandiah57 said:

தமிழன்   தீர்வு கிடைத்தால்   நல்ல ஆட்சியை  அனைத்து தமிழருக்கும் வழங்குவன???? ஆம்   அல்லது இல்லை   என்று மட்டும் பதில் தரவும்.

இல்லை.

ஆனால் இதே லொஜிக்கின் படி பார்த்தால் பிரித்தானியர் இலங்கைக்கு சுதந்திரமே கொடுத்திருக்க கூடாது.

ஏன் எண்டால் இலங்கை ஆட்சியாளர்கள் 76 வருடமாக மோசமான ஆட்சியைத்தான் வழங்குகிறனர்.

தமிழ் அரசியல்வாதிகள் சரியில்லை ஆகவே தமிழருக்கு சுயாட்சி தேவையில்லை என்றால் - இலங்கை ஆட்சியாளர்கள் சரியில்லை ஆகவே ஆட்சியை மீள பிரித்தானியாவிடம் கொடுக்க வேண்டும் எனவும் வாதிடலாம்.

தமிழர்களுக்கு உரிய அதிகாரம் அவர்களின் சுய உரிமை. அதை அவர்கள் போட்டடிக்கலாம் அல்லது சிறப்பாக பாவிக்கலாம். அது அவர்களின் பிரச்சனை.

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

ஆனால் இதே லொஜிக்கின் படி பார்த்தால் பிரித்தானியர் இலங்கைக்கு சுதந்திரமே கொடுத்திருக்க கூடாது.

சிரிப்பினை வர வைத்தாலும் இது ஒரு துரதிர்ஸ்டமான உணமை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, goshan_che said:

தமிழர்களுக்கு உரிய அதிகாரம் அவர்களின் சுய உரிமை. அதை அவர்கள் போட்டடிக்கலாம் அல்லது சிறப்பாக பாவிக்கலாம். அது அவர்களின் பிரச்சனை.

சரி தான்   நானும் இதை முன்பு விரும்பினேன். 

இப்போது இல்லை  காரணம்  

கிழக்கில் காணி பொலிஸ் அதிகாரம் முஸ்லிம்களுக்கு போகும்   

இங்கே தமிழர் காணிகள் பறிக்கப்படும்   தமிழர் காணிகளில். தமிழர் அல்லாதோர்.  குடியேற்றமும் நடக்கும்   எனவே… தமிழரை பொறுத்தவரை கிழக்கில் காணி பொலிஸ் அதிகாரம் கிடைத்தாலும் நடைமுறையில் மாற்றங்களில்லை.     

வடக்கில். காணி  பொலிஸ் அதிகாரம் கிடைத்தால்  நீங்கள் குறிப்பிட்டபடி நடக்க வாய்ப்புகள் உண்டு”   ஆனால் தமிழர்கள் முஸ்லிம்களை பழி வாங்க மாட்டார்களா.  ??  

ஆகவே  காணி பொலிஸ் அதிகாரம் கிடைத்தாலும் பிடுங்குப்பாடுகள். தொடரும் 1970 இல்   சுமார் 54. ஆண்டுகளுக்கு முன் கேட்டது சரி தான்     இன்றும் குடிசனப்பரம்பல். மாற்றப்பட்ட பின்னும்  அதே கோரிக்கை   வலுவுடன். உள்ளாதா  ??   அன்று தர மாறுத்தவர்கள்  இன்று தருவார்களா??.   அல்லது அன்று பெற்றுக் கொள்ள முடியாதவர்கள்.  இன்று பெற்றுக் கொள்வார்களா. ?? 🙏  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Kandiah57 said:

கிழக்கில் காணி பொலிஸ் அதிகாரம் முஸ்லிம்களுக்கு போகும்   

ஒட்டு மொத்தமாக அங்கே எந்த இனத்துக்கும் போகாது.

முஸ்லிம்கள் ஒண்டும் வானத்தில் இருந்து நேற்று விழுந்தவர்கள் அல்ல.

அவர்களுக்கும் அவர்கள் வாழிடம் மீது எம்மை போலவே உரிமை உண்டு.

அதனால்தான் அவர்களுக்கு அவர்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசசபைகள் அடிப்படையில் ஒரு நிலத்தொடர்பற்ற எமக்கு நிகரான அலகை கொடுக்க நாம் உடன்பட வேண்டும் என்கிறேன். எஞ்சும் சிங்கள பகுதிகளை மொனராகல, பொலநறுவ, அனுராதபுரத்துடன் இணைத்து விட்டு, தமிழ் பகுதிகளை வடக்குடன் இணைக்கலாம்.

இல்லை என்றால் இப்போ இருக்கும் கிழக்கு மாகாண எல்லையோடே விடலாம். மூவரும் சரிக்கு சரி என்பதால் எந்த ஒரு குழுவும் தனியே ஆட முடியாது.

6 minutes ago, Kandiah57 said:

ஆனால் தமிழர்கள் முஸ்லிம்களை பழி வாங்க மாட்டார்களா.  ??

இல்லை…கீழே விளக்கம்.

7 minutes ago, Kandiah57 said:

ஆகவே  காணி பொலிஸ் அதிகாரம் கிடைத்தாலும் பிடுங்குப்பாடுகள். தொடரும்

இல்லை மூவினங்களும் தமது தனித்துவம் பாதுகாக்கபடுவதாக உணரும் போது, இப்போ அனுர சொல்லும் போலி இலங்கை தேசிய ஒற்றுமை போல அன்றி, உண்மையிலேயே அனைவரும் சமபங்காளிகள் எனும் உணர்வின் அடிப்படையிலான கெளரவமான ஒற்றுமை உருவாகும்.

தமிழர் அலகில் ஏனைய இருவரும் சிறுபான்மை, முஸ்லிம்கள் அலகில் மற்றைய இருவரும் சிறுபான்மை, மீதம்முள்ள அலகுகளில், ஒட்டு மொத்த இலங்கையில் தமிழரும், முஸ்லிம்களும் சிறுபான்மை -ஆளை ஆள் அனுசரித்து நடக்க வேண்டும். அதை சட்டம் மூலம் உறுதியும் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Kandiah57 said:

சுமார் 54. ஆண்டுகளுக்கு முன் கேட்டது சரி தான்     இன்றும் குடிசனப்பரம்பல். மாற்றப்பட்ட பின்னும்  அதே கோரிக்கை   வலுவுடன். உள்ளாதா  ??   அன்று தர மாறுத்தவர்கள்  இன்று தருவார்களா??.   அல்லது அன்று பெற்றுக் கொள்ள முடியாதவர்கள்.  இன்று பெற்றுக் கொள்வார்களா. ?? 🙏  

மக்கள் இந்த கோரிக்கையை உடைய கட்சிகளை தேர்தலில் ஆதரிக்கும் வரை கோரிக்கை வலுவாகவே இருப்பதாகவே கொள்ள முடியும்.

தர மறுப்பதால் கேட்காமல் இருக்க முடியாது.

எடுப்பது கடினம் என்பதால் முயலாமலும் இருக்க முடியாது.

மக்கள் சுயாட்ச்சி கோரிக்கையை கைவிடும் வரை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, goshan_che said:

முஸ்லிம்கள் ஒண்டும் வானத்தில் இருந்து நேற்று விழுந்தவர்கள் அல்ல.

சரி,...1970 ஆண்டளவில்   [கிட்டத்தட்ட ] மன்னார் முல்லைத்தீவு   

கிழக்கு மாகாணத்தில்  தமிழரசு கட்சி சார்பில்  4 அல்லது 5 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் போவார்கள்  அவர்களால் தனியாக கேட்டு பாராளுமன்றம் போக முடியாது,....படிப்படியாக வளர்ந்தார்கள்   அதாவது அவர்களின் வாக்காளர் எண்ணிக்கை பல மடங்குகள் அதிகரித்தது ...நீங்கள் சொன்னது போல் வானத்திலிருந்து விழுந்து இல்லை  .....வயிற்றில் இருந்து விழுந்து  😂🤣🤣 ஆம் பலம் பெற்று தனியாக தேர்தலில் நின்று   இன்று 5 அல்லது 6 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்கிறார்கள்    

இவர்கள் மீண்டும் ஒற்றுமையாக வாய்ப்புகள் உண்டா??    இல்லை  

எந்தவொரு தீர்மானங்களிலும். ஒற்றுமையாக மாட்டார்கள்   

இது எனது தனிப்பட்ட உறுதியான கருத்துகள்   இப்படி இருக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை   ஆனால் இப்படி தான் இருக்கும்  நடக்கும் என்று நம்புகிறேன்    🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Kandiah57 said:

எப்படி எம்மை சிங்களவரோடு ஒற்றுமையாக்க முடியாதோ, அதே போலத்தான் முஸ்லிம்களையும் எம்மோடு ஒற்றுமையாக்க முடியாது.

நான் வாங்கோ ஒண்ணுக்கு இருப்பம் என சொல்லவில்லை.

தற்போதைய குடிசன பரம்பல் அடிப்படையில் சுயாட்சி அலகுகளை பிரித்து கொள்வோம் என்கிறேன்.

அவர்கள் வயிற்றில் இருந்து அதிகமாக விழுவது அவர்கள் கெட்டித்தனம்.  
 
தேவைப்படும் உடல் உறுப்புகள் அவர்களுக்கு ஆளுக்கு ரெண்டு, ரெண்டு இல்லைத்தானே?

மிகுதி உங்கள் கெட்டித்தனம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, goshan_che said:

மிகுதி உங்கள் கெட்டித்தனம்🤣

இதில் நான் ஒரு சிறு துரும்பு கூட எடுத்து போடுவதில்லை 

நீங்கள் இப்படி சொல்லலாமா ??  🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, Kandiah57 said:

இதில் நான் ஒரு சிறு துரும்பு கூட எடுத்து போடுவதில்லை 

நீங்கள் இப்படி சொல்லலாமா ??  🤣

இந்த இனத்துக்காக நான் படுற துன்ப துயரங்கள் இருக்கே….🤣

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, goshan_che said:

இந்த இனத்துக்காக நான் படுற துன்ப துயரங்கள் இருக்கே….🤣

இதை பல தடவைகள் பாராளுமன்றம் போன சுமத்திரன். சொல்லலாம் 

உலக நாடுகளின் அனைத்து தலைவர்களுடனும். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் கதைத்த ஒரே நபர் சுமத்திரன்  சொல்லலாம் 

இலங்கையிலுள்ள அனைத்து தூதுவர்களுடனும். அடிக்கடி கண்டு பேச்சுவார்த்தை நடத்தும் சுமத்திரன் சொல்லலாம் 

பாராளுமன்றத்தின்  வாசல்படிகளையே கால். பதிக்காதா. நீங்கள் எப்படி சொல்லலாம்????🤣🤪

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.