Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kandiah57 said:

இது மக்கள் பணம்   எங்கள் பணம்  எங்களுக்கு தாருகிறீர்கள். மக்களுக்கு தாருகிறீர்கள்.

இலங்கையில் கொடுப்பது மட்டும் என்ன அனுர, ரணில், மைத்திரி, மகிந்த  வீட்டு பணமா?

ஜேர்மனி பொருளாதாரத்தில் முன்னேறிய நாடு - அதன் கஜானாவை மக்களின், நிறுவனங்களின் வரிப்பணம் நிரப்புகிறது.

அதை எடுத்து மக்கள் நலதிட்டங்களுக்கு ஜேர்மனி செலவழிக்கிறது.

இலங்கை பொருளாதாரத்தில் பிந்தங்கிய நாடு - அதன் கஜானவை வெளிநாட்டு கடனும், அந்நிய செலாவணியும், உதவிகளும் நிரப்புகிறன.

அதை எடுத்து மக்கள் நலதிட்டங்களுக்கு இலங்கை செலவழிக்கிறது.

  • Replies 140
  • Views 8.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    யானை... தனக்கு தீங்கு செய்தவர்களை, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்...   நினைத்து வைத்து பழிவாங்குமாம். 😂 அதே குணம் கொண்டவர்தான்,  வைத்தியர் அர்ச்சுனா...  என்று சொல்கிறார்கள். 🤣 ஆக... சத்தியமூர்த்திக்

  • அர்ச்சுனாவை இன்னும் ஆதரிக்கும், அவர் மீது நம்பிக்கை வைக்கும் வாக்காளர்கள் இருந்தால் அவர்களுக்கு இது சமர்ப்பணம். சத்தியமூர்த்தி, எந்த ஒரு பா.உ வின் கீழும் இருக்கும் ஊழியர் அல்ல. பா.உ வுக்கு முறைப்

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

சோசல் காசு கொடுப்பதை நிறுத்துங்கள்.

சோசல் காசு என்று கொடுக்கலாம் அதை இலவசம் என்று சொல்லி கொடுக்க கூடாதாம்
அநுரகுமார திசாநாயக்க தனது சொந்த பணத்தில் தானே இலங்கையில் இலவச மருத்துவம் கல்வி வழங்குகின்றார்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

சோசல் காசு எடுத்த பிள்ளை பெறாதவரின் காசை பக்கத்து வீட்டு பிள்ளையா கட்டும்?

அது இலவசம் தானே

இப்படி பிரித்து பிரித்து பார்பதில்லை பார்க்க முடியாது  நாங்கள் ஒரு சமூகம்   ஒரு நாட்டு மக்கள்   என்று தான் பார்ப்பது   அதாவது அரசாங்கத்தின் பணம் மக்களுடையது  அரசாங்க கடனும்  மக்களுடையது    கடன் மக்களின் உழைப்பு மூலம் கிடைக்கும் வரி பணத்தில் தான் அடைகிறோம்    

அரசாங்கம் திட்டங்களை தீட்டி   செயல்படுகிறது நல்ல திட்டங்கள் வெற்றி அளிக்கிறது நடைமுறையில் உள்ள அரசாங்கத்தினால். நாடும் மக்களும் முன்னேற்றம் அடைகிறோம் 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

  வாழ்த்துக்கள்.

நீங்கள் மட்டும் அல்ல எல்லா நாடுகளும் இப்படித்தான் ஒரு கூட்டு மனோநிலையில் சிந்திக்கிறன.

ஜேர்மனியில் - அரசுக்கு வரும் வருவாயில் மக்களின், ஜேர்மன் நிறுவனங்களின் வரி அதிகம்.

இலங்கையில் - அரசுக்கு வரும் வருவாயில் அந்த நாட்டு மக்கள், நிறுவனங்கள் கட்டும் வரியும் உள்ளது, ஆனால் ஏழை நாடு என்பதால் இது போதியளவு இல்லை. ஆகவே கடனால் வரும் காசும், வெளிநாட்டு தொழிலாளர் அனுப்பும் காசு என்பனவும் சேர்கிறன.

ஜேர்மனியை போலவே இலங்கையும் இந்த பொது கைப்பையில் இருந்து பணத்தை எடுத்து தன் மக்களுக்கு கூட்டு மனோநிலையில் செலவழிக்கிறது.

பிகு

ஜேர்மனியை போல் இலங்கை ஆபிரிகாவில் காலனிகளை வைத்து கொள்ளை அடிக்கவில்லை. 

ஜேர்மன் பெருநிறுவனங்கள் போல் உலகயுத்தத்தை வைத்து இலங்கை நிறுவனங்கள் ஏதும் கொழுக்கவில்லை.

ஜேர்மனிக்கு அமேரிக்கா இட்ட மார்ஷல் பிளான் உதவி (கடன்? பிச்சை?) போல் மிகபெரிய உதவியை இலங்கைக்கு யாரும் செய்யவில்லை.

ஆகவே ஜேர்மனி போல் இலங்கை பொருளாதாரத்தில் வளரவில்லை (இது மட்டுமே காரணம் அல்ல). 

அதற்காக இலங்கை தன் மக்கள் மீது அக்கறை படாமல் இருக்க முடியாதுதானே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, goshan_che said:

ஜேர்மனியை போல் இலங்கை ஆபிரிகாவில் காலனிகளை வைத்து கொள்ளை அடிக்கவில்லை. 

உந்த வசனத்தை  பிரிட்டிஷ்காரன் வாசிப்பான் எண்டால் பொலிடோல் குடிச்சு செத்தே தீருவான்....🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பிகு

ஜேர்மனியை போல் இலங்கை ஆபிரிகாவில் காலனிகளை வைத்து கொள்ளை அடிக்கவில்லை. 

ஜேர்மன் பெருநிறுவனங்கள் போல் உலகயுத்தத்தை வைத்து இலங்கை நிறுவனங்கள் ஏதும் கொழுக்கவில்லை.

ஜேர்மனிக்கு அமேரிக்கா இட்ட மார்ஷல் பிளான் உதவி (கடன்? பிச்சை?) போல் மிகபெரிய உதவியை இலங்கைக்கு யாரும் செய்யவில்லை.

ஆகவே ஜேர்மனி போல் இலங்கை பொருளாதாரத்தில் வளரவில்லை (இது மட்டுமே காரணம் அல்ல). 

அதற்காக இலங்கை தன் மக்கள் மீது அக்கறை படாமல் இருக்க முடியாதுதானே.

இதை விவாதத்தில் எடுத்து கொள்ளவில்லை     இது எனது சக்திக்கு அப்பாற்பட்ட விடயம்   🙏 நன்றி வணக்கம்   

எனது வாதம் கடன் அல்லது வருமானம்   அது மக்களுடையது தான்   

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

@கிருபன் சார், மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சாரின் பேஸ்புக் கணக்கில் பணிப்பாளர் சத்தியமூர்த்தி சாருடனான முழுமையான உரையாடல் உள்ளது. 

சார் என கூப்பிட சொல்லிப்போட்டார் என்பதற்காக போலிசில் முறைப்பாடு கொடுத்து ஊடகவியலாளர் மாநாடு நடாத்தலாமா கிருபன் சார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

அருச்சுனா விதிகளை படித்து விட்டு போய் இருந்தால் - இலங்கை பாராளுமன்ற விதிகளின் படி அவர் சரியாக இருக்கவும் வாய்புள்ளது. 

டொக்டர் சத்தியமூர்த்தி விதிகளைப் படித்திருக்கமாட்டார் என்று தெரிந்து அருச்சுனா அவரை வெருட்ட முனைந்திருக்கின்றார். சேர் என்று  அழைக்கவேண்டும் எவரும் விதிகளைப் போடுவதில்லை. ஒரு பொறுப்பான பதவியில் உள்ளவரின் அலுவலகத்திற்கு அவரின் அனுமதி இல்லாமல் ஒரு பா.உ. போகமுடியாது. 

இந்தப் பைத்தியரின் நோக்கம் தான்  விலாசம் காட்டுவதை மற்றவர்கள் சமூக ஊடகங்களில் கதைக்கவேண்டும் என்பதுதான். அதைத்தான் நாங்களும் செய்கின்றோம்!

3 hours ago, நியாயம் said:

@கிருபன் சார், மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சாரின் பேஸ்புக் கணக்கில் பணிப்பாளர் சத்தியமூர்த்தி சாருடனான முழுமையான உரையாடல் உள்ளது. 

சார் என கூப்பிட சொல்லிப்போட்டார் என்பதற்காக போலிசில் முறைப்பாடு கொடுத்து ஊடகவியலாளர் மாநாடு நடாத்தலாமா கிருபன் சார்.

சார் என்று கூப்பிட்டால் எனக்கு துண்டறப் பிடிக்காது நியாயம். அது ஒரு அடிமைப் புத்தி.

மேலும், நான் அருச்சுனாவின் விசிறி கிடையாது. அதனால் அவரின் கூத்துகளை ரசிக்க நேரம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

உந்த வசனத்தை  பிரிட்டிஷ்காரன் வாசிப்பான் எண்டால் பொலிடோல் குடிச்சு செத்தே தீருவான்....🤣

சிலர் ஊரறிந்த கள்ளர்.

சிலர் நசுக்கிடா கள்ளர்.

8 hours ago, Kandiah57 said:

இதை விவாதத்தில் எடுத்து கொள்ளவில்லை     இது எனது சக்திக்கு அப்பாற்பட்ட விடயம்   🙏 நன்றி வணக்கம்   

எனது வாதம் கடன் அல்லது வருமானம்   அது மக்களுடையது தான்   

ஆனால் சூழமைவு என்று ஒன்றும் உள்ளது. எதையும் தனியே வெற்றிடத்தில் வைத்து பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

சிலர் நசுக்கிடா கள்ளர்.

பார் சிறி மாதிரி..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இந்தப் பைத்தியரின் நோக்கம் தான்  விலாசம் காட்டுவதை மற்றவர்கள் சமூக ஊடகங்களில் கதைக்கவேண்டும் என்பதுதான். அதைத்தான் நாங்களும் செய்கின்றோம்!

அதே…

இனி இவர் தொடர்பான செய்திகளில் பின்னூட்டம் இடுவதை எல்லோரும் தவிர்க்க வேண்டும். 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா வைத்தியர்கள் / சுகாதாரத்துறை ஊழியர்களின் ஒப்பற்ற உயரிய செயற்பாடு.

IMG-2932.jpg

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

சிலர் ஊரறிந்த கள்ளர்.

சிலர் நசுக்கிடா கள்ளர்.

8 hours ago, Kandiah57 said:

இவர்களில் ஒருவர் கூட யாழ் களத்தில் இல்லை    

  • கருத்துக்கள உறவுகள்

 மக்களை உணர்சசி அரசியலை செய்து பிரச்சனைகளை தீர்க்காமலேயே நீண்ட காலம் தமிழ் தேசியக்கட்சிகள் பலன் பெறுவதைக்  கண்டு கொதித்து போன அர்ச்சனா அதற்கெதிராக கிளர்ந தெழுந்து,  இவர்களால் நீண்ட காலமாக பிரச்சனைகளைத் தீர்காமல் அதை பேசிப் பேசியே எவ்வாறு மக்களை ஏமாற்ற முடிகிறதென்று சிந்தித்து   தமிழரிடையே உள்ள லூசுத்தனங்களை ஏன் நான் பயன்படுத்த கூடாது என்று நினைத்தார். அவர் இதை realize செய்ததும் ஒரு தற்செயல் நகழ்வாகவே அமைந்தது. 

லூசுத்தனங்களை செய்ய செய்ய மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதை கண்ட அவர், அட  இது தான்டா நமக்கான தளம் என்று புல்லரித்து  “ தமிழேண்டா” என்று புளகாங்கிதம் அடைந்தார். இந்த வார்ததை புலம் பெயர் தேசங்களில் மேலும் பல  லூசுகளை உற்பத்தி செய்யும் என அவருக்கு நன்கு தெரியும். அது தனக்கு எதிர்காலத்தில் பலனளிப்பதற்கான முதலீடு தான் அவரது பாராளுமன்ற முதல் நாள் அமர்வில் அவரால் காட்டப்பட்ட குறளிவித்தை.  

இதை பார்தது மேலும  பல அர்சனாக்கள் சிலவேளை வரலாம். 

யாழ்பாணத்தில் மக்கள் தொகை அதகரிப்பு வீதத்தை விட லூசுத்தனங்களை உற்பத்தி செய்வதில் தமிழ் ஊடகங்களுக்கும்  யூருப்பர்களுக்கும் உள்ள போட்டி பிரமிப்பை ஊட்டுகிறது.

ஊழல் ஒழிப்பு என்பது ஊழல் செய்பவர்களுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி  முறையான சட்டவாளர்களை கொண்டு அதை முறைப்படி வாதாடினாலே சாத்தியம்.  (இது அவரது தங்கத்திற்கும் சட்ட புலமை பெற உதவியாக இருக்கலாம்)

 இப்படியான குரங்கு சேட்டைகள்  அதற்கு உதவப் போவதில்லை. 

அர்ச்சனா ஆதாரங்களுடன் இதை முறைப்படி அணுகி டு வாதாடி  ஊழல்வாதிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கி கொடுத்தால் எனது கருத்தை வாபஸ் வாங்கி கொள்ளுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

ஆனால் சூழமைவு என்று ஒன்றும் உள்ளது. எதையும் தனியே வெற்றிடத்தில் வைத்து பார்க்க முடியாது.

ஜேர்மனி இரண்டாவது உலக மாக யுத்தத்தின். பின்   இலங்கையை விட கேவலமாக இருந்த நாடு   அந்த நேரம் இலங்கை சிறந்த நிலையில் இருந்தது   ஜேர்மனிக்கு வாருங்கள் இனத்தை. பெருக்க.  உதவுங்கள் என்று கேட்ட போது இலங்கை மறுத்து விட்டது  துருக்கி இத்தாலியை   தவிர எல்லா நாடுகளும் மறுத்து விட்டன   ஜேர்மன் தலைவர்களின் திட்டமிடப்பட்ட திட்டங்கள் தான்   ஜேர்மனியை இன்றைய நிலைக்கு கொண்டுவந்தது.  ......நல்ல நிலையில் இருந்த இலங்கையால்   ஏன் மேலும் வளர முடியவில்லை???   இதுவரை இலங்கையிலுள்ள இருந்த தலைவர்கள் இலங்கை மக்களின் வாழ்க்கை தரம் உயர வகுத்த திட்டங்கள் என்ன??  

நடைமுறைப்படுத்தப்படுத்திய திட்டங்கள் என்ன??? நான் அறிய எதுவும் இல்லை   ஆனால் ஜேர்மன் தலைவர்கள் கடந்த காலத்தில் நிறைய செய்துள்ளனர் ஆகையால் தான் ஜேர்மனி வசதியான நாடு   இலங்கையாலும். முடியும்   ஆனால் செய்யமாட்டார்கள்.  சாதாரண மக்களுக்கு தொழில் அற்றவர்களுக்கு   தொழில் வாய்ப்புகள் எற்படுத்தி கொடுக்கும்போது   இலங்கை வளர முடியும்     

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இந்தப் பைத்தியரின் நோக்கம் தான்  விலாசம் காட்டுவதை மற்றவர்கள் சமூக ஊடகங்களில் கதைக்கவேண்டும் என்பதுதான். அதைத்தான் நாங்களும் செய்கின்றோம்!

33 minutes ago, MEERA said:

அதே…

21 minutes ago, island said:

லூசுத்தனங்களை செய்ய செய்ய மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதை கண்ட அவர், அட  இது தான்டா நமக்கான தளம் என்று புல்லரித்து  “ தமிழேண்டா” என்று புளகாங்கிதம் அடைந்தார். இந்த வார்ததை புலம் பெயர் தேசங்களில் மேலும் பல  லூசுகளை உற்பத்தி செய்யும் என அவருக்கு நன்கு தெரியும். அது தனக்கு எதிர்காலத்தில் பலனளிப்பதற்கான முதலீடு தான் அவரது பாராளுமன்ற முதல் நாள் அமர்வில் அவரால் காட்டப்பட்ட குறளிவித்தை.  

நீங்கள் மூவரும் சிறப்பாக அர்ச்சுனாவை விளங்கி கொண்டிருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

ஜேர்மனி இரண்டாவது உலக மாக யுத்தத்தின். பின்   இலங்கையை விட கேவலமாக இருந்த நாடு   அந்த நேரம் இலங்கை சிறந்த நிலையில் இருந்தது   ஜேர்மனிக்கு வாருங்கள் இனத்தை. பெருக்க.  உதவுங்கள் என்று கேட்ட போது இலங்கை மறுத்து விட்டது  துருக்கி இத்தாலியை   தவிர எல்லா நாடுகளும் மறுத்து விட்டன   ஜேர்மன் தலைவர்களின் திட்டமிடப்பட்ட திட்டங்கள் தான்   ஜேர்மனியை இன்றைய நிலைக்கு கொண்டுவந்தது.  ......நல்ல நிலையில் இருந்த இலங்கையால்   ஏன் மேலும் வளர முடியவில்லை???   இதுவரை இலங்கையிலுள்ள இருந்த தலைவர்கள் இலங்கை மக்களின் வாழ்க்கை தரம் உயர வகுத்த திட்டங்கள் என்ன??  

நடைமுறைப்படுத்தப்படுத்திய திட்டங்கள் என்ன??? நான் அறிய எதுவும் இல்லை   ஆனால் ஜேர்மன் தலைவர்கள் கடந்த காலத்தில் நிறைய செய்துள்ளனர் ஆகையால் தான் ஜேர்மனி வசதியான நாடு   இலங்கையாலும். முடியும்   ஆனால் செய்யமாட்டார்கள்.  சாதாரண மக்களுக்கு தொழில் அற்றவர்களுக்கு   தொழில் வாய்ப்புகள் எற்படுத்தி கொடுக்கும்போது   இலங்கை வளர முடியும்     

நீங்கள் இங்கே சொல்வதும் நான் அதற்கு மேலே சொன்னதும் இரெண்டுமே ஜேர்மனி முன்னேறியதன் பின்னால் உள்ள சூழமைவுதான்.

அதே போல் இலங்கை பின்னடைந்தமைக்கு அரசியல்வாதிகள் பெரும் காரணம். ஆனால் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையை சின்னாபின்ன படுத்தியமை போல அமெரிக்கா ஜேர்மனியை சின்னாபின்ன படுத்தவில்லை.

2ம் உலக யுத்தத்தின் பின் மேற்கு ஜேர்மனியை நல்வழி படுத்துவதில், தூக்கி விட்டதில் அமெரிக்காவின் பங்கு கணிசமானது.

துரதிஸ்டவசமாக அப்படி ஒரு உதவி இலங்கைக்கு கிடைக்கவில்லை.

இலங்கை சீரழிந்தமைக்கு இதுவும் ஒரு காரணம்.

உங்கள் முன்னைய கருத்துக்கு திரும்பி வந்தால் - “இலவசங்கள்” அல்லது “நலத்திட்டங்கள்” வளர்ந்த, வளர்முக நாடுகள் அனைவரும் செய்வதுதான். இதை செய்யும் பணம் எங்கே இருந்து வருகிறது என்பதை வைத்து இந்த திட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என கூறமுடியாது🙏.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

டொக்டர் சத்தியமூர்த்தி விதிகளைப் படித்திருக்கமாட்டார் என்று தெரிந்து அருச்சுனா அவரை வெருட்ட முனைந்திருக்கின்றார். சேர் என்று  அழைக்கவேண்டும் எவரும் விதிகளைப் போடுவதில்லை. ஒரு பொறுப்பான பதவியில் உள்ளவரின் அலுவலகத்திற்கு அவரின் அனுமதி இல்லாமல் ஒரு பா.உ. போகமுடியாது. 

இந்தப் பைத்தியரின் நோக்கம் தான்  விலாசம் காட்டுவதை மற்றவர்கள் சமூக ஊடகங்களில் கதைக்கவேண்டும் என்பதுதான். அதைத்தான் நாங்களும் செய்கின்றோம்!

சார் என்று கூப்பிட்டால் எனக்கு துண்டறப் பிடிக்காது நியாயம். அது ஒரு அடிமைப் புத்தி.

மேலும், நான் அருச்சுனாவின் விசிறி கிடையாது. அதனால் அவரின் கூத்துகளை ரசிக்க நேரம் இல்லை. 

அர்ச்சனா அவர்களிடம் வெளிப்படைத்தன்மை உள்ளது. உத்வேகம் உள்ளது. தகமை உள்ளது.

தன்னடக்கம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். 

ஆயினும், சகலதையும் கூட்டி கழித்து பார்க்கும்போது எனது ஆதரவு அவருக்கு உண்டு.

அம்சடக்க கள்ளரை  விட இவர் எவ்வளவோ திறம் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

ஜேர்மனி இரண்டாவது உலக மாக யுத்தத்தின். பின்   இலங்கையை விட கேவலமாக இருந்த நாடு   

கிட்டத்தட்ட இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்து 40 வருடங்களில் நான் ஜேர்மனிக்கு வந்தபோது எனக்கு உணவு உடை மருத்துவம் மற்றும் இருப்பிடத்தையும் இலவசமாக தந்த நாடு. இதற்கான பணம் என் முன்னோர்களோ அல்லது நானோ வரியாக கட்டியதல்ல. அவர்களது முன்னோர்கள் அல்லது அவர்கள் வரியாக கட்டியது. கட்டிக் கொண்டு இருப்பது. அல்லது அவர்களது முன்னோர்கள் களவெடுத்தது. ஆனால் அப்பொழுது எமக்கு அமிர்தமாக இருந்தது அல்லவா. 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சம்பந்தப்பட்ட இருவர் பற்றியே எல்லோரும் பேசுகிறீர்கள்.

உண்மையில் பேச வேண்டியது கடந்த 3 வருடமாக பாதிக்கப்பட்ட 170 பேர் பற்றியே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வைத்து இந்த திட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என கூறமுடியாது🙏.

திட்டங்கள் ஒழிக்கபடவேண்டியதில்லை   இலவசம் என்பது தவிர்க்கப்பட வேண்டும்     ஏனெனில் அவை மக்களின் பணம் தான்   

நான் எழுதியதில்.  பிழை விட்டு விட்டேன்   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

கிட்டத்தட்ட இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்து 40 வருடங்களில் நான் ஜேர்மனிக்கு வந்தபோது எனக்கு உணவு உடை மருத்துவம் மற்றும் இருப்பிடத்தையும் இலவசமாக தந்த நாடு. இதற்கான பணம் என் முன்னோர்களோ அல்லது நானோ வரியாக கட்டியதல்ல. அவர்களது முன்னோர்கள் அல்லது அவர்கள் வரியாக கட்டியது. கட்டிக் கொண்டு இருப்பது. அல்லது அவர்களது முன்னோர்கள் களவெடுத்தது. ஆனால் அப்பொழுது எமக்கு அமிர்தமாக இருந்தது அல்லவா. 

உங்களை வேலைக்கு அனுப்பி அல்லது வேலைவாய்ப்பு தந்து  வரி அறவிடலாம்.  என்று தான் தந்தவர்கள்.   ஆனால்  நீங்கள் ஏமாற்றிக் கொண்டு ஒடி விட்டீர்கள்   🤣🤪🤣    நீங்கள் பிரான்ஸ்சில். வரிசைகட்டுவதில்லையா. ??

மற்றும் இந்த கொடுபனவுகளை   இங்கே இலவசம் என்று அழைப்பதில்லை    ஆனால் இலங்கையில் ஏன் இலவசம் என்று அழைக்கப்படுகிறது??  இங்கே எங்கள் சந்ததி.  இப்போது உதவிகளை கோர வாய்ப்புகள் இல்லை அவர்கள் கட்டும் வரியில் தான்  ஜேர்மன்காரருக்கு  உதவிகள். வழஙகப்படுகிறது 🤣🤣🤣🤪

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இங்கே சம்பந்தப்பட்ட இருவர் பற்றியே எல்லோரும் பேசுகிறீர்கள்.

உண்மையில் பேச வேண்டியது கடந்த 3 வருடமாக பாதிக்கப்பட்ட 170 பேர் பற்றியே.

அண்ணா, அர்ச்சுணாவிற்கு உண்மையிலேயே 170 பேரில் அக்கறை இருந்தால் சட்டரீதியாக அணுகியிருக்கலாம் அதைவிடுத்து லூசுத்தனமாக Sir என்று கூப்பிட வேண்டும் என்று அடம்பிடித்துள்ளார்.

மேலும் முதல் நாள் பாராளுமன்றில் கதிரைக்கு சண்டை பிடித்து இறுதியில் மன்னிப்பு கேட்டது தான் மிச்சம்.

இவரும் பழிவாங்குவதிலும் விலாசம் காட்டுவதிலும் காலத்தைக் கடத்துகிறார்.

ஆனால் இறுதியில் மூக்குடைபடுவதும் இவர் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

திட்டங்கள் ஒழிக்கபடவேண்டியதில்லை   இலவசம் என்பது தவிர்க்கப்பட வேண்டும்     ஏனெனில் அவை மக்களின் பணம் தான்   

நான் எழுதியதில்.  பிழை விட்டு விட்டேன்   

இல்லை.

உங்களுக்கு வாழ்க்கை சுட்டெண் பற்றி தெரிந்திருக்கும். இப்போ இதை மனித முன்னேற்ற சுட்டெண் என்பார்கள். Human Development Index.

இதில் முன்னுக்கு நிற்பது பின்லாந்து போன்ற நாடுகள். இலங்கை ஒப்பீட்டளவில் பராவாயில்லை.

காரணம்? இலவச கல்வி, இலவச மருத்துவம், இத்யாதிகள்.

இவை இல்லாவிட்டால் பாகிஸ்தான் போல இருந்திருக்கும் இலங்கை.

சுட்டெண் பற்றிய தகவல் கீழே.

இதில் தெற்காசியாவில் பச்சை நிறத்தில் உள்ள ஒரே நாடு இலங்கை. மற்றும் மாலதீவு.

https://en.m.wikipedia.org/wiki/List_of_countries_by_Human_Development_Index

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஆனால் இலங்கையில் ஏன் இலவசம் என்று அழைக்கப்படுகிறது??

இதை ஆங்கிலத்தில் free at the point of delivery என்பார்கள்.

அதாவது சேவை வழங்கும் தறுவாயில் இலவசம்.

ஜேர்மனியிலும், யூகேயிலும் அரச மருத்துவ சேவை இந்த அடிப்படையில்தான் நடக்கிறது. அதாவது தனிமனிதர்களி வரி அல்லது காப்புறுதிவாங்கி, அதை வைத்து தேவைப்படும் சகலருக்கும், சேவை வழங்கும் போது (at the point of delivery) இலவசமாக வழங்கப்படும்.

இலங்கையிலும் இப்படித்தான். வரிப்பணம்+கடன்+உதவிகள் கொண்டு, at the point of delivery கல்வியும், மருத்துவமும் இலவசமாக கொடுக்கப்படுகிறன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.