Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரைனின் மீதான ரஷ்ய பூட்டினின் ஆக்கிரமிப்பு போர் தாக்குதல்களால் மூன்றாவது கடும் குளிர்காலத்தை மின் தடைகள் வெப்பமூட்டும் பாதிப்புகளுடன் உக்ரேனிய மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
ஆனால் இங்கே செய்யபடும் ரஷ்ய பிரசாரம் மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, கிருபன் said:

அசாத் பூட்டினின் விருந்தாளி என்பதால் பூட்டின் விசுவாசிகளுக்கு அவர் நல்லவர்! சொந்த நாட்டு மக்களையே இரசாயன ஆயுதம் பாவித்து அழித்தவரை, பல்லாயிரம் பேரை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்தவரை வெள்ளையடிக்க ஒரு விதமான மனம் வேண்டும்!

தாங்கள் பெரிய பிரித்தானியாவின் விசுவாசி என்பதை யாவரும் அறிந்ததே. :cool:

அதன் மூலம் தாங்களும் பெரிய பிரித்தானிய கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் என்பது நிரூபணமாகின்றது.😎

சதாம் ஹுசைனின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என நான் முன்னரே சொல்லியிருந்தேன் அதே போல் அசாத் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலவரங்கள் வெளிவரும் என நான் நினைக்கின்றேன்.

மேற்குலக செய்திகளை வைத்து நான் சொல்வதெல்லாம் உண்மை என  வாதிட நான் தயார் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, vasee said:

புலிகள் குடும்பங்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதனை  நானும் கேள்விப்பட்டதில்லை, ஆனால் 1995 இறுதிக்காலப்பகுதியில் புலிகளின் 3 போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்தார்கள், அவர்களுக்கு 3 மாத தண்டனைக்காலத்தில் தண்டனையாக சமையலறை வேலை இருந்தது, அந்த காலப்பகுதி முடிவடைவதற்கு வெகு சில நாள்கள் மட்டும் இருந்த நிலையில் அவர்கள் இருந்த சமையலறை மேல் புக்கார வீசிய குண்டில் 3 போராளிகளும் உடல் சிதறி பலியாகியிருந்தனர்.

அதில் ஒரு போராளி சாகவச்சேரியினை சேர்ந்தவர், அந்த குண்டு வீச்சு யாழ் மாவட்டத்திற்குள் நிகழ்ந்தது, இருந்தும் அந்த போராளிகளின் உடல்களை புலிகள் தாமே தகனம் செய்துவிட்டனர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை, இறந்தவர்களுக்கு போராளிகள் எனும் அந்தஸ்தும் வழங்கப்படவில்லை, 5 பேருக்கும் குறைவானவர்களே அவர்களது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

இந்த குற்றச்சாட்டை நீங்கள் மட்டும் அல்ல. வேறு எவரும் கேள்விபட்டிருக்க முடியாது. 

அது சிலரின் மனதில் உதித்த கற்பனை.

புலிகளின் பகுதியில் இருந்து மாற்று இயக்க உறுபினர்களின் குடும்பங்கள் வெளியேறியது உண்மை. குறிப்பாக, 89 இல் இந்தியன் ஆமியோடு சேர்ந்து வெறியாட்டம் ஆடிய பலரின் குடும்பங்கள் இந்தியாவுக்கும் கொழும்புக்கும் போயினர்.

அதே போல் யாழ் பல்கலைகழக ஆட்கள் சிலரும் ஓடித்தப்பினர். ஆனால் அரசியலில் சம்பந்தபடாத குடும்ப உறவுகளை புலிகள் இம்சித்ததாக தரவுகள் இல்லை.

அப்படி இருந்தாலும் கூட, கைது செய்து விடுவித்தார்கள், இந்தியாவுக்கு வள்ளம் எடுத்து அனுப்பி விட்டார்கள் என்பதும், அசாத் செய்ததை போல் கொலை செய்வதும் ஒன்றல்லவே.

ஆகவே எப்படி பார்த்தாலும் - அசாத்தை புலிகளோடு ஒப்பீடு செய்து இரெண்டும் ஒன்றே என எழுதியது விஷமத்தனம்தான்.

இந்தளவுக்கு இறங்கி அசாத்துக்கு ஏன் வெள்ளை அடிக்க வேண்டும்?

இப்படி எழுதுவதன் நோக்கம் புலம்பெயர் தமிழ் மந்தைகளை மேற்கின் எதிரிகளாக்கி வைத்திருப்பது.

இந்த மந்தைகள் மேற்கில் இருந்த படி மேற்கை எதிர்க்கும் மட்டும், இவர்கள் மூலம் இலங்கையில் இந்திய நலன் பாதிக்கப்படாது.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, valavan said:

ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு. 

டெலோ புலிகள் சண்டை உக்கிரமாக நடந்த இடத்தின் (கட்டைபிராய் டெலோ இன் முக்கிய இயங்கு தளம் ) அயலில் உள்ள இடத்தில்.

இது தான்  நான் அறிந்தது. 

அனால், அது நடந்தது புளொட் என்ற சந்தேகத்தில் (டெலோ ஐ  தொடர்ந்து புளொட் தடைசெய்யப்பட்டது, குறுகிய காலத்தில்).

குடும்பம் என்று சொல்லியது - தந்தை, சகோதரம் - கிட்டத்தட்ட பிணையாக அவர்களாகவே வந்து ஒப்படைக்கும் வரையும். (ஆயினும் அவர்களை ஏன் போட்டு தள்ள  வேண்டிய அவசியம் என்பது இப்போதும் நான் யோசிப்பது உண்டு. அவர்கள், எதோ நோட்டீஸ் பதிப்பித்து கொடுத்தவர்கள் என்பதே வெளியில் சொல்லப்டடது. அதாவது கைது செய்ய வந்தவர்கள் சொன்னதாக. ஆயினும், ஏன் பூதவுடல்கள்  கொடுக்கப்படவில்லை? சித்திரவதையில் சிதைந்து விட்டது என்றே சந்தேகம். இவர்கள் இளம் குடும்பஸ்தர்கள் அனா நேரத்தில்.)

அனால், இது நடந்தது ஓர் பகிரங்க இடத்தில (இங்கே கேட்கிறீர்கள், அதாவது அந்த இடத்தில இருந்த குறித்த சிலரை தவிர  எவருக்கும் இது தெரியாது).

அதனால் இப்படியான சம்பவங்கள் வேறு ஒதுக்கு புறத்திலும் நடந்து இருக்கலாம். 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

அனால், இதை விட கொடுராமானது, தமிழ் நாடில்  புலிகள் செய்ததாக நான் அறிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் நிறைய சிரியர்களுடன் வேலை செய்துள்ளேன், இதில் பலர் சிரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அசாதுக்கே அதரவு தெரிவிப்பர்கள். அவர் செய்வது சரி என விவாதிப்பர்கள். மற்ற இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தால் தாங்களும் ் முஸ்லீமாக மாற வேண்டும் என கூறுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

தாங்கள் பெரிய பிரித்தானியாவின் விசுவாசி என்பதை யாவரும் அறிந்ததே. :cool:

அதன் மூலம் தாங்களும் பெரிய பிரித்தானிய கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் என்பது நிரூபணமாகின்றது.😎

@குமாரசாமி ஐயா இப்ப மூக்குச் சாத்திரம் பார்ப்பதை முழுநேர தொழிலாக்கிவிட்டார்🤪

நான் பிரித்தானியாவில் உள்ள பெரிய கட்சிகள் நான்குக்கும் ஒருபோதும் வாக்களிப்பதில்லை! ஆனால் The Guardian பத்திரிகையை வாசிப்பவன். அப்படியென்றால் என்னவென்று நீங்கள் தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்😃



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.