Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிகு2

இங்கே புலிகள் மாற்று இயககங்களை தடை செய்தார்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை. 

ஆனால் அசாத்தை போல ஒரு குடும்ப ஆட்சியை அல்லது தனிமனிதனை நிலை நிறுத்த அவர்கள் அப்படி செய்யவில்லை.

ஏனையோர் துரோகம் இழைகிறார்கள், ஆகவே தடை செய்ய்ய வேண்டும் என்பதே எப்போதும் அவர்களின் நியாயமாக இருந்தது.

இதோடு முரண்படலாம். நான் முரண்படுகிறேன்.

ஆனால் இதை வைத்து அசாத்துடன் ஒத்த கோடு கீற முடியாது.

  • Replies 223
  • Views 12.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது.... இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில்,  வலு  அவதானமாக இருக்க வேண்டும்.    ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂 

  • கிருபன்
    கிருபன்

    அசாத் பூட்டினின் விருந்தாளி என்பதால் பூட்டின் விசுவாசிகளுக்கு அவர் நல்லவர்! சொந்த நாட்டு மக்களையே இரசாயன ஆயுதம் பாவித்து அழித்தவரை, பல்லாயிரம் பேரை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்தவரை வெள்ளையடிக்க

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

பிகு2

இங்கே புலிகள் மாற்று இயககங்களை தடை செய்தார்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை. 

ஆனால் அசாத்தை போல ஒரு குடும்ப ஆட்சியை அல்லது தனிமனிதனை நிலை நிறுத்த அவர்கள் அப்படி செய்யவில்லை.

ஏனையோர் துரோகம் இழைகிறார்கள், ஆகவே தடை செய்ய்ய வேண்டும் என்பதே எப்போதும் அவர்களின் நியாயமாக இருந்தது.

இதோடு முரண்படலாம். நான் முரண்படுகிறேன்.

ஆனால் இதை வைத்து அசாத்துடன் ஒத்த கோடு கீற முடியாது.

நானும் முரண்பட்டு ஆறு ஏழு மாதங்கள் வெளியே நின்றேன். பல பேச்சுவார்த்தைகள் விளக்கங்களுடன் தமிழர்களுக்கு ஒரு பலமான இயக்கத்தின் தேவை குறையவே இல்லாத தாயக நிலை. பலமான மீனை இன்னும் பலமாக்குவதை தவிர வேறு வழி எமக்கு இல்லை. மீண்டும் இணைந்து கொண்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எனக்கு இது செட்டாகவில்லை. இன்றைய பொன்மாலைப் பொழுதில் எனது நிலைப்பாட்டை சுருக்கமாக விளக்குகின்றேன். டண் 😎

மொழிபெயர்ப்பு:

பின்னேரம் கோசானுக்கு ராகுகாலம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் 

வாங்கிய காசுக்கு  மறக்காமல்  அதுக்கு ஒரு குத்து ❤️ , உன்னிடம் வாங்கிய காசுக்கு இதுக்கு ஒரு குத்து ❤️  

பின்னர், இதுக்கு ஒரு குத்து 🏆 என்கிற நகைச்சுவை போல இருக்கிறது சிலரின் Likes.  

சொந்தமாக யோசியுங்களேன். 😏 

  • கருத்துக்கள உறவுகள்

ஆசாத்திற்கு எதிரான கிளர்ச்சிப்படைகளை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று விமர்சிக்கும் மேற்கிற்கெதிரான ஆனால் மேற்குலகில் வசிக்கும் ஒரு சிலர், தாம் ஒற்றைக்காலில் நின்று ஆதரிக்கும் அதி மேன்மை தங்கிய, மனிதருள் மாணிக்கம் ஐயா புட்டின் அவர்கள் அப்கானிஸ்த்தானில் ஆட்சிபுரியும்  அடிப்படைவாதிகளான தலிபான்கள் மீதான தடையினை நீக்கி பரஸ்பரம் உறவுகளை மேற்கொள்ளப்போகிறாரே, அதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்? 

தலிபான்கள் நல்லவர்கள் என்று இனி எழுதிக்கொண்டு வருவார்கள். புட்டின் செய்தால் அது சரியாகத்தானே இருக்கும், என்ன நான் சொல்லுறது? 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2024 at 04:59, Kadancha said:

சிரியா - இப்போதும் சிரியாவாக இருக்க, ஆட்சிக்கு வந்திருக்கிற கூட்டத்துக்கு  கிடைத்ததற்கு  - அசாத்தும், தகப்பனும் காரணம்.

அடு மட்டும் ஆள்ள - சிரிய சனத்தின்  மதத்தீவிர போக்கை முடக்கி, நவீனத்தை  நோக்கி நகர வைத்தது தகப்பனும், அசாத்தும்.

சிரியாவுக்கு 50 வருடங்களில் - எப்போதும் வெளிஅச்சுறுத்தல - முக்கியமாக வல்லூறினால்.

அசாத் வென்று  இருந்தால் தேடித் சென்று தோண்டி எடுத்து எரிக்கும் போக்கு அல்ல - இது தான் அசாத்துக்கும், இப்பொது வந்துள்ளதுக்கும்  உள்ள வேறுபாடு (முதலில் அசாத் பகுதியாக வென்று இருந்தார், எதிர்த்த உயிரோடு பிடிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை, கொலை உட்பட)

மேற்கு, அதன் எதிரி என்பதால் சிறையை, அசாத்தின் இரும்பகர நசுக்கலை  தூக்கி பிடிக்கிறது.  

(அசாத்தை போல புலிகள் செய்தது - மற்ற இயக்கங்களை போட்டு தள்ளியது - பின்பும் சந்தேகத்தில் குடும்பதோடு இரவோடு இரவாக  கைது செய்து  போட்டு தள்ளியது - குடும்பங்கள் விடுக்கப்ட்டது - ஆனால் பூதவடல்கள் கொடுக்கப்படவில்லை -  மறுக்க  முடியமா? பல்வேறு பின் சூழ்நிலை ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது மற்ற இயக்கங்களை புலிகள் போட்டதின் மிக முக்கிய காரணம் புலிகள் தலைமைக்கு அச்ச்சுறுத்தல், தலைமையை பாதுகாப்பது என்ற புலிகளின் (கிட்டத்தட்ட) paranoia - ஆட்சி / அதிகாரத்தில் இருக்கும் போடு தான் அந்த மனப்பிரமை எவ்வளவு யதார்த்தமாக தோன்றும் என்பது. மற்ற இயக்கங்கள் எதிர்ப்பு தொடர்ந்து  இருந்தால் ... நிலைமை எப்படி இருந்து இருக்கும்?)

ஆட்சி என்பது சமநிலைப்படுத்தி தான் பார்க்க முடியும், பார்க்கப்பட வேண்டும்.

அருமையான "சமப்படுத்தல்" செய்திருக்கிறீர்கள்.

"புரின் காதல்" முற்றினால் - அதுவும் புரின் புரியன்மாருக்கு  Red Bull , மன்னிக்கவும், Red Pill முழுங்கினால்- இப்படி முரட்டு முட்டுக் கொடுக்கும் பலம் வந்து விடுகிறதென நினைக்கிறேன்😎.   

குழந்தைகள் உட்பட பொதுமக்கள் மீது வானத்தில் இருந்து இரசாயன ஆயுதம் வீசிய, ஹிற்லருக்கு இணையான ஒருவர் அசாத்- இவர் சிறுபான்மையினரான அலவைற்றுகளுக்காகவும், ஷியாக்களுக்காகவும் இதைச் செய்யவில்லை. "அசாத்" குடும்பம் ஆட்சியில் இருக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகச் செய்தவையே இந்த மனித குலத்திற்கெதிரான செயல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2024 at 01:22, ரஞ்சித் said:

புலிகளால் தண்டிக்கப்பட்ட ஏனைய அமைப்புக்களின் செயற்பாடுகள் இவரைப் பொறுத்தவரையில் நியாயமாகப் படுகின்றதா?

ஏனைய இயக்கங்களை மக்கள் தண்டிக்க 30 வருடங்களுக்கு மேல் சென்றுள்ளது ...கடந்த தேர்தலில் தான் அதை செய்தாகள்...🤔

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2024 at 07:56, ரசோதரன் said:

அப்படியும் இருக்கலாம்..........

சமீபத்தில் அம்பாந்தோட்டையிலும் ராஜபக்‌ஷவின் சிலை விழுத்தப்பட்டது தானே..........

தமிழ்நாட்டில் பல இடங்களில் அம்பேத்கரின் சிலைகள் கூட்டுக்குள்ளேயே இருக்கும்........ இல்லாவிட்டால் இரவோடிரவாக உடைத்துவிடுவார்கள்............😌.

அந்த மக்கள் பட்டபாடுகள் போதும், இவைகளிலிருந்து மீண்டு அவர்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை தங்களின் பிரதேசங்களில் வாழும் நிலை வரவேண்டும். மத்திய கிழக்கில் பல நாடுகள் சத்தம் சந்தடியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அது போலவே சிரியாவும் வரவேண்டும் என்பது தான் அவா............ பார்ப்போம் என்று ஒரு நம்பிக்கையுடன் சொல்ல மட்டும் தான் முடிகின்றது...............   

அந்த மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை ..அதை தீர்மாணிப்பது அமெரிக்கா ,ரஸ்யா....மத்திய கிழக்கில் இவ்வளவு காலமும் சியா தீவிரவாத அமைப்புக்களும் ஈரான் ,சிரியா போன்ற சியா அரசுகளும் ஆதிக்கம் செலுத்தினர் ...அவர்களின் ஆதிக்கம் குறைந்து விட்டது...இனி சன்னி இஸ்லாமிய தீவிரவாதம் ஆதிக்கம்  செய்ய போகின்றது இதில துருக்கியா? சவுதியா தலமை எண்ட சிக்கல் வரும் மீண்டும் அங்கு தீவிரவாதம் தொடங்கும்...தியட்டர் ஒவ் ஒப்பெரெசன் எந்த நாடு என தெரியவில்லை....சில சமயம் ஈரான் ஆட்சியும் கலைக்கப்படலாம்...

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

எங்கேயாகிலும் அநீதியைக் கண்டு கொதிப்பாயாக இருந்தால் நீயும் என் தோழனே. சேகுவேரா 

நன்றி விசுகு🙏 ...அந்த தோழனுடன்(செகுவார) அது முடிந்த கதை ...அதன் பின் அவரின் வாரிசுகள் பின்பற்றவில்லை...எம் இனத்திற்கு  இன அழிப்பு நடை பெற்ற பொழுது ஐ.நா.சபையில் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக செயல் பட்ட நாடுகளில் கியுபாவும் ஒன்று ....செகுவாராவின் பூதவுடலை போலிவியாவில் தோண்டியெடுத்து கியுபாவுக்கு கொண்டு வந்து கல்லறை அமைத்த பெடல்கஸ்ரோவுக்கு ...கூட செகுவாராவின் "எங்கேயாகிலும் அநீதியைக் கண்டு கொதிப்பாயாக இருந்தால் நீயும் என் தோழனே. சேகுவேரா" இந்த கொள்கையை பின்பற்றவில்லை... வெளிநாட்டு விடுதலை இயக்கங்கள்,மக்களுக்காக பயன்படுத்த வரவில்லை...அவையின்ட் பெரியண்ணன் ரஸ்யா என்ன சொல்லுதோ அதை கண்மூடிகொண்டு செய்வினம் ... 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, putthan said:

 இதில துருக்கியா? சவுதியா தலமை எண்ட சிக்கல் வரும் மீண்டும் அங்கு தீவிரவாதம் தொடங்கும்...தியட்டர் ஒவ் ஒப்பெரெசன் எந்த நாடு என தெரியவில்லை....சில சமயம் ஈரான் ஆட்சியும் கலைக்கப்படலாம்...

👍................

ஒரு சாதாரண மனிதனின் சாதாரண வாழ்க்கையையே அந்த மனிதனுக்கு சம்பந்தமும் ஆர்வமும் இல்லாத எத்தனை எத்தனை புறக்காரணிகள் தீர்மானிக்கின்றன.....................😌

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

👍................

ஒரு சாதாரண மனிதனின் சாதாரண வாழ்க்கையையே அந்த மனிதனுக்கு சம்பந்தமும் ஆர்வமும் இல்லாத எத்தனை எத்தனை புறக்காரணிகள் தீர்மானிக்கின்றன.....................😌

மனித வாழ்வின் நிஜம் இது தான் ....அரசியல் ,ஆத்மீகம்,உத்தியோகம் என எத்தனை புறக்காரணிகள் மனிதனை ஆட்டிப்படைக்கின்றது ..பழமையவர்களின் தனிமனித கருத்தாதிக்க தொடர்ச்சிகள்,புதியவர்களின் கருத்தாதிக்க சிந்தனைகள் ...தாங்காதடா சாமி ...புத்தரை மாதிரி துறவறம் சென்று ஒழித்து வாழ நான் புத்தன் அல்ல மனிதன் 😅

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

🤣...............

உங்களுக்கும், எனக்கும் பொதுவான ஒரு பிரச்சனை இருக்கின்றது என்று நினக்கின்றேன். நாங்களும் இருவரும் தேவைக்கு அதிகமாகவே கதைகள், கவிதைகள் வாசிக்கின்றோம் போல..................😜

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, putthan said:

நன்றி விசுகு🙏 ...அந்த தோழனுடன்(செகுவார) அது முடிந்த கதை ...அதன் பின் அவரின் வாரிசுகள் பின்பற்றவில்லை...எம் இனத்திற்கு  இன அழிப்பு நடை பெற்ற பொழுது ஐ.நா.சபையில் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக செயல் பட்ட நாடுகளில் கியுபாவும் ஒன்று ....செகுவாராவின் பூதவுடலை போலிவியாவில் தோண்டியெடுத்து கியுபாவுக்கு கொண்டு வந்து கல்லறை அமைத்த பெடல்கஸ்ரோவுக்கு ...கூட செகுவாராவின் "எங்கேயாகிலும் அநீதியைக் கண்டு கொதிப்பாயாக இருந்தால் நீயும் என் தோழனே. சேகுவேரா" இந்த கொள்கையை பின்பற்றவில்லை... வெளிநாட்டு விடுதலை இயக்கங்கள்,மக்களுக்காக பயன்படுத்த வரவில்லை...அவையின்ட் பெரியண்ணன் ரஸ்யா என்ன சொல்லுதோ அதை கண்மூடிகொண்டு செய்வினம் ... 

சேகுவேரா ஒரு வரலாற்றை எமக்கெழுதிச்சென்றார். பிடல் காஸ்ட்ரோ ஒரு வரலாற்றை எமக்கு காண்பித்தார். அவர்கள் செதுக்கிய கியூபா எமக்கு நம்பிக்கையூட்டி முதுகில் குத்தி பாடம் தந்தது. இவற்றை வைத்து வரலாறு வழிகாட்டியாக நாம் ஒரு பாதை காணவேண்டும். காணுவோம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

காலம் செல்லும் அதுவரை தொடரட்டும் தமிழ் தேசிய பணி...வரலாறு தானே பாடம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

சேகுவேரா ஒரு வரலாற்றை எமக்கெழுதிச்சென்றார். பிடல் காஸ்ட்ரோ ஒரு வரலாற்றை எமக்கு காண்பித்தார். அவர்கள் செதுக்கிய கியூபா எமக்கு நம்பிக்கையூட்டி முதுகில் குத்தி பாடம் தந்தது. இவற்றை வைத்து வரலாறு வழிகாட்டியாக நாம் ஒரு பாதை காணவேண்டும். காணுவோம் 

விசுகர்! இலங்கையில் போர்க்குற்றங்களுக்கும்,போர் அழிவுகளுக்கும் உறுதுணையாக இருந்தது யார் யார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, குமாரசாமி said:

எனக்கு இது செட்டாகவில்லை. இன்றைய பொன்மாலைப் பொழுதில் எனது நிலைப்பாட்டை சுருக்கமாக விளக்குகின்றேன். டண் 😎

@goshan_che

நான் மேற்குலக எதிர்ப்பாளன் இல்லை. ஆட்சியில் இருந்து அநியாய அரசியல் செய்யும் மேற்குலக அரசியலை எதிர்க்கின்றேன்.அவ்வளவுதான்.
நான் வாழும் நாட்டில் பல கட்சிகள் இருக்கின்றன. இரு பெரும்பான்மை கட்சிகளை விட ஏனைய கட்சிகள் ஆட்சியில் இருக்கும் அரசின் கொள்கைகளை எதிர்க்கின்றாகள். போராட்டங்களும் செய்கின்றார்கள்.பாராளுமன்றத்திலும் எதிர்க்குரல் எழுப்புகின்றார்கள்.இன்றைய அரசின் போக்கை கண்டிக்கின்றர்கள்.உக்ரேன் போரில் பேச்சுவார்த்தையும் சமாதானமும் முக்கியம் என கருதுகின்றார்கள்.நானும் அந்த கட்சிகளில் ஒருவன் என்றவகையில் மாற்று கருத்துக்களை வைக்கின்றேன் . அவ்வளவுதான் . இனிமேலும் மேற்குலக விசுவாசமில்லாதவன்,நன்றி கெட்டவன்,மேற்குலகில் சுகபோகமாக வாழ்ந்து கொண்டு....ரஷ்யாவில் தங்கியிருக்க வேண்டியது தானே எனும் கிழிஞ்சு போன பொன் வாக்கியங்களை உதிர வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.

ஒரே மாதிரியான வசனங்களை பழைய சீலை போல் எல்லா இடங்களிலும் கிழித்து போட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அது மட்டுமில்லாமல் உங்களைப்போன்றோர் வாழும் நாடுகளில் உள்ள அரசவையில் எதிர்க்கட்சிகளே இல்லையா? எல்லா கட்சிகளும் ஒரே கொள்கை உடையவர்களா? மாற்று கருத்துக்கள்,போர் எதிர்ப்புகள் ஏதும் இல்லையா? நீங்கள் சார்ந்தோர் நாட்டு மக்களும் ஒருமித்த கொள்கை உடையவர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

அருமையான "சமப்படுத்தல்" செய்திருக்கிறீர்கள்.

"புரின் காதல்" முற்றினால் - அதுவும் புரின் புரியன்மாருக்கு  Red Bull , மன்னிக்கவும், Red Pill முழுங்கினால்- இப்படி முரட்டு முட்டுக் கொடுக்கும் பலம் வந்து விடுகிறதென நினைக்கிறேன்😎.   

குழந்தைகள் உட்பட பொதுமக்கள் மீது வானத்தில் இருந்து இரசாயன ஆயுதம் வீசிய, ஹிற்லருக்கு இணையான ஒருவர் அசாத்- இவர் சிறுபான்மையினரான அலவைற்றுகளுக்காகவும், ஷியாக்களுக்காகவும் இதைச் செய்யவில்லை. "அசாத்" குடும்பம் ஆட்சியில் இருக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகச் செய்தவையே இந்த மனித குலத்திற்கெதிரான செயல்கள்.

(இது எல்லோருக்கும் தான்.)

புலிகளையும், அசாத்தையும் அல்ல.

அவர்களின் பார்வையில், அவர்களுக்குத் தெரிந்த அச்சுறுத்தல்களும், அவற்றை எதிர்  கொண்ட (அழித்த) விதமும்  (வன்முறை பிரயோகம்).

எவ்வாறாயினும், அது நான் சொல்லியதை மாற்றவில்லை.

அதாவது,  அவர்களின் (அசாத், புடினும் நீங்கள் விரும்பினால் சேர்த்து கொள்ளுங்கள்) பார்வையில் இருப்புக்கான அச்சுறுத்தல்,  இருப்புக்கான அச்சுறுத்தலை அகற்றுவது.

நீங்கள் உட்பட, எல்லோரும் அவர்களை அறியாமலே நான் சொல்லும் நிலைக்கு வந்துள்ளனர்.

அதை தவிர்ப்பதற்கு, அவர்கள் கின்டியா, மேற்கு, மூளைச்சலவை, டெல்லி அழைப்பு என்று மதி, மனம் போன போக்கில் சுற்றிவளைத்தும், நியாயப்படுத்தியும் அவர்களால் அவர்களை அறியாமல் நான்  சொல்லும் நிலைக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. 

அதன் சுருக்கமான காரணம், விளக்கம் - பாலசிங்கம் சொல்லியத்தில்  தான்.

அனால், அதற்கு வசதிக்கு ஏற்ற விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பாலசிங்கம் துறைசார் அரசியல் புலமை உள்ளவர் - அந்த புலமையின் அடிப்படையில் அவர் சொன்னதின்  (big fish ... ) என்பதன் கருத்து அரசியலுக்கும், அரசுக்கும்  பொருந்தி வருவது. அரசியலில், big fish .. என்பது ஓர் குறிப்பிட்ட உட்கருத்து

வலியது இருப்புக்கு வாய்ப்பு கூடிய (ஆயுத) அரசியல் எனும் விதியில்லா காட்டில் அல்லது ஆட்டத்தில்,  (big fish ... என்பது) எவ்வாறு அச்சுறுத்தல்களை  விதியில்லாது (அழித்து) நீக்குவது, ஏனெனில் விதியில்லா காட்டில் ஒவ்வொன்றும் மற்றதுக்கு அச்சுறுத்தல், அவை ஒவ்வொன்றின் பார்வையிலும்,

இது பின் (பலம் ஓங்கியவுடன்) அமைக்கப்படும் அரசு என்பதோடு ஒத்துப்போவது. 

state (அரசு) என்பதன் பொருள் என்ன - state of mind. பலவேறு அச்சுறுத்தல் மத்தியில் மதி தடுமாறாமல், ஒருமுகப்படுத்தி,  இருப்பை எந்தவழியேனும் (வேண்டுமாயின் அதன் விதிகளை கூடி புறந்தள்ளி)  தக்கவைப்பது. இதுவே தமிழ் அரசு, ஆங்கிலத்தில் state என்பதன் கருத்து.    

(பாலசிங்கம் சொன்னதுக்கு அவரவர் தமக்கு விரும்பிய தொப்பியை போடலாம்.)

ஆனால், ஒரு தொப்பி தான் அரசோடு, அதன் தன்மையோடு  ஒத்து வரும்.

புலிகள் செய்த அழிப்பை, பாலசிங்கத்துக்கு நியாயப்படுவதில் வேறு பல சொல்லாடல்கள் இருந்தும், குறிப்பிட்ட big fish ... என்பதையே பாவித்து உள்ளார் என்பதும்.
 
அரசியல் துறை சார் புலமை உள்ள பாலசிங்கம் சரியாகவே பாவித்து உள்ளார் (அனால் இங்கே பாலசிங்கதுக்கு இங்கே பாடம்  எடுக்கப்படுகிறது என்பது வேறு விடயம்).

பாலசிங்கம் எதை  சொல்லி இருப்பார் என்பதை  வாசகர்கள் கணித்து பார்க்கலாம்.

தவிர, எமது இடத்தில், புலிகளும் அதையே செய்தனர், பிரயோக தன்மையே வேறுபாடு.  

அதே  போல , மற்ற இயக்கங்கள் ஆயுத எதிர்ப்பு தொடர்ந்து இருந்தால், புலிகளின் வன்முறை  பிரோயோகம் பரவி இருக்கும். 

மாறாக, பகுதி மக்கள் (மற்ற இயக்கங்கள்) மீது குழுமமாக  வன்முறை பிரோயோகித்த பின், தொடருமாயின், எல்லை எது? இருப்பை தக்கவைத்தல். 

வேடிக்கை, அரசியல் துறை சார் புலமை பெற்ற பாலசிங்கம் சொல்லுவதை, வளைக்க முயற்சித்தும்  சூழ்நிலை என்பதை தவிர்க்க முடியவில்லை. பாலசிங்கத்துக்கு பாடம் எடுக்கப்படுகிறது.

இங்கே தார்மீகம், நீதி ... போன்றவை பொருட்டு அல்ல இருப்புக்கு அதிகாரத்தை பிரயோகிக்கும் போது.

(இது அரசியலிலிருந்து வர்த்தக உலகத்துக்கும் தொத்தி கொண்டுள்ளது என்பதும், குறிப்பாக swot இல், வர்த்தக உலகின் அரசியல் என்று அழைக்கலாம்).

ஆனால், இதை முதலில்  எழுதும் போது பாலசிங்கம் சொன்னது எனது நினைவில் வரவில்லை, ஆனால் வசித்து இருக்கிறேன் 

நான் சொன்னது.

...

சைரஸ் 

...

அலெக்சாண்டர் ...
...
சோழர் ... (சோழர் கடைசியில்  இதில் பிழை விட்டு விட்டனர் அரசின் தந்தையான ஒட்டக்கூத்தர் சொல்லைத் தட்டி. விக்கிரம சோழனின் தகப்பன் இழவு படுக்கையில் இருக்கும் போது அரசின் தந்தையான  ஒட்டக்கூத்தரின் கையை பிடித்து, பாண்டியருக்கு சுயாட்சி கொடுத்து, பாண்டிய இளவரசியை விக்கிரம சோழன் மணம் முடிக்க அனுமதிக்கும் படி, அதுவே சோழ இராச்சியத்தின் முடிவின் தொடக்கம்)

ஆங்கிலேயர்...

...

என்று எல்லோரும் அவரவர்  சூழ்நிலை அடிப்படையில் வன்முறையை உள்ளுக்குள் இருப்புக்கு பிரயோகித்தனர்.

அதெ போன்று, உள்ளுக்குள் இருப்புக்கு வன்முறையையை பிரயோகித்த பின், எல்லை  எது புலிகளுக்கு

சூழ்நிலையே தீர்மானிக்கும்.

இருப்பே அடிப்படை காரணமும் உந்துதலும்.

இங்கே புலிகள் விதிவிலக்கு என்பதே  மற்றவர்கள் சொல்லுதுவது.

அப்படி இல்லை என்று, பாலசிங்கம் முற்றுப்புள்ளி வைத்தார், அதாவது  புலிகளே முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

(பாலசிங்கம் சொல்லுவதை  வளைப்பது அவர்களின் பிரச்சனை).

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், சொல்ல மறந்த்துவிட்டேன்.

நான் சொன்னதுக்கு ஒத்த கரூத்தை ஏற்படுத்தக்கூடிய வசனங்கள், அமெரிக்காவின் யாப்பின் முதல் வரைபில் இருந்தது என்றே எங்கோ வாசித்த நினைவு.

குறிப்பாக, internal threats என்பது பாவிக்கப்பட்டு இருந்ததாக.

திருத்தங்கள், மொழியை மாற்றியுள்ளதே தவிர, கருத்தை மாற்றவில்லை.

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

ஆம், சொல்ல மறந்த்துவிட்டேன்.

நான் சொன்னதுக்கு ஒத்த கரூத்தை ஏற்படுத்தக்கூடிய வசனங்கள், அமெரிக்காவின் யாப்பின் முதல் வரைபில் இருந்தது என்றே எங்கோ வாசித்த நினைவு.

குறிப்பாக, internal threats என்பது பாவிக்கப்பட்டு இருந்ததாக.

திருத்தங்கள், மொழியை மாற்றியுள்ளதே தவிர, கருத்தை மாற்றவில்லை.

உள்ளக ஆபத்து அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, எந்த தேசத்திற்கு வந்தாலும் என்ன செய்ய வேண்டுமென்று யாப்பில் எழுதியிருக்கும். இப்போதும் ஜனவரி 6 கலவரத்தில் ஈடுபட்ட ஒருவர் மீது seditious conspiracy குற்றம் நீதிமன்றில் விசாரணை செய்து நிரூபணமாகி சிறையில் இருக்கிறார், நிலத்தின் கீழ் சித்திரவதைக் கூடத்தில் அல்ல😎.

இப்ப இவை பற்றியா பேசுகிறோம்? ஒரு தனிக் குடும்பம் - அதுவும் சோசலிஸ்ட் பாத் கட்சி என்று கட்சிப் பெயரில் சோசலிசம் வைத்துக் கொண்டு- தான் ஆட்சியில் இருக்க செய்த படுகொலைகளைப் பேசுகிறோம்.

இதையெல்லாம் "சகஜமயப்படுத்த" நீங்கள், உங்களுக்கு பின்னால் இருந்து உசுப்பேத்த ஒருவர்😂. உங்கள் போன்ற போலிப் புத்திஜீவிகளால் தான் உலகம் இன்று ட்ரம்ப்,புரின், கிம், பராஜ், லீ பென் போன்ற ஆட்களையெல்லாம் "விடுதலை வீரர்களாகக்" கொண்டாடும் நிலையில் நிற்கிறது.

இந்த முட்டாள் தனங்களை தமிழ் சமூகத்திலும் அறிமுகம் செய்தால் இன்னும் ஒரு தலைமுறையில் நம் கதையும் கந்தல் தான்!

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

@goshan_che

நான் மேற்குலக எதிர்ப்பாளன் இல்லை. ஆட்சியில் இருந்து அநியாய அரசியல் செய்யும் மேற்குலக அரசியலை எதிர்க்கின்றேன்.அவ்வளவுதான்.
நான் வாழும் நாட்டில் பல கட்சிகள் இருக்கின்றன. இரு பெரும்பான்மை கட்சிகளை விட ஏனைய கட்சிகள் ஆட்சியில் இருக்கும் அரசின் கொள்கைகளை எதிர்க்கின்றாகள். போராட்டங்களும் செய்கின்றார்கள்.பாராளுமன்றத்திலும் எதிர்க்குரல் எழுப்புகின்றார்கள்.இன்றைய அரசின் போக்கை கண்டிக்கின்றர்கள்.உக்ரேன் போரில் பேச்சுவார்த்தையும் சமாதானமும் முக்கியம் என கருதுகின்றார்கள்.நானும் அந்த கட்சிகளில் ஒருவன் என்றவகையில் மாற்று கருத்துக்களை வைக்கின்றேன் . அவ்வளவுதான் . இனிமேலும் மேற்குலக விசுவாசமில்லாதவன்,நன்றி கெட்டவன்,மேற்குலகில் சுகபோகமாக வாழ்ந்து கொண்டு....ரஷ்யாவில் தங்கியிருக்க வேண்டியது தானே எனும் கிழிஞ்சு போன பொன் வாக்கியங்களை உதிர வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.

ஒரே மாதிரியான வசனங்களை பழைய சீலை போல் எல்லா இடங்களிலும் கிழித்து போட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அது மட்டுமில்லாமல் உங்களைப்போன்றோர் வாழும் நாடுகளில் உள்ள அரசவையில் எதிர்க்கட்சிகளே இல்லையா? எல்லா கட்சிகளும் ஒரே கொள்கை உடையவர்களா? மாற்று கருத்துக்கள்,போர் எதிர்ப்புகள் ஏதும் இல்லையா? நீங்கள் சார்ந்தோர் நாட்டு மக்களும் ஒருமித்த கொள்கை உடையவர்களா? 

நீங்கள் ஜேர்மனியில் எந்த கட்சியில் இருந்தாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லை அண்ணை.

ஆனால் ஜேர்மனியின் எந்த கட்சியாயினும் அவர்கள் எல்லாரும் பிரதிநிதிதுவ ஜனநாயகம். சட்டதின் ஆளுமை, ஐரோப்பிய மனித உரிமை சாசனம் போன்ற சட்டங்களும் விழுமியங்களும் மதிக்கப்படும் ஒரு நாட்டில்தான் தம் அரசியலை செய்கிறனர். நீங்கள் AfD இல்லை என நினைக்கிறேன். கிரீன்ஸ் ஆக இருக்கலாம் என ஊகிக்கிறேன்.

ஆனால் நீங்கள் ரஸ்யாவையும், சீனாவையும், ஈரானையும் - மேற்கில் உள்ள ஜனநாயக நாடுகளோடு ஒப்பிட்டு எல்லாம் ஒன்றே என எழுதும் போது தான் பிணக்கு வருகிறது.

இப்படி எழுத:

1. நீங்கள் சும்மா டைம்பாசுக்கு எழுத வேண்டும் அல்லது

2. மேற்கின் மீதான வெறுப்பில் எழுத வேண்டும்

3. அல்லது இன்னும் இருவர் போல் சம்பளத்துக்கு எழுத வேண்டும்.

இதில் மூன்றாவது இல்லை என அறுதியாக தெரியும். முதலாவதை ஒரு அளவுக்கு மேல் செய்ய முடியாது, ஆகவேதான் 2வது என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.

இது மட்டும் அல்ல - எமது இழப்பில் மேற்கு அளவுக்கு ரஸ்யா, சீனா வுக்கு பங்கு இருக்கிறது என உங்களை விட வேறு எவருக்கும் தெரிந்ததல்ல. இருந்தும் மேற்கை மட்டுமே பழி சொல்வதுடன், ஒரு படி மேலே போய் ரஸ்யாவுக்கு முட்டு கொடுக்க வேண்டும் என்பதால் - இந்தியா புலிகள் விடயத்தில் நடந்தது கூட சரி என்று எழுதினீர்கள்.

இதை வேறு எப்படி விளங்கி கொள்வது? புலிகள் விடயத்தில் இந்தியா நடந்தது சரி, என வாதாடும் அளவுக்கு உங்களுக்கு புட்டின் காதல். இப்படி காரைக்கால் அம்மையார் கடவுள் மேல் கொண்டதை ஒப்ப உங்கள் புட்டின் மீதான காதல் ஏன் வந்தது? அவர்தான் மேற்கின் எதிரி நம்பர் 1.

அதே போல மேற்கில் எந்த பிழை இருந்தாலும், நாம் இலங்கையை விட பலமாக இருப்பது இங்கே மேற்கில்தான். எனவே மேற்கினூடுதான் எமக்கு ஒரு தீர்வு வர வாய்ப்பு அதிகம். ஒரு போதும் ரஸ்யா, சீனா மூலம் இது வராது.

இது தெரிந்தும், பலதடவை எடுத்து சொல்லியும் நீங்கள் - தமிழருக்கு இரு தரப்பும் ஒன்றே என்ற பொய் சமன்பாட்டை மீள மீள எழுதிவருகிறீர்கள்.

இவை எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்தால் - நீங்கள் மிக மோசமான மேற்கு எதிர்ப்பு மனோநிலையில் அவதிபடுவது தெளிவு.

இது அநேகமாக உங்களோடு முரண்படும் நான் மட்டும் கண்ட உண்மை அல்ல.

இதை உங்களுடன் மிகுதி அனைத்திலும் உடன்படும் நண்பர்கள் கூட எழுதியுள்ளார்கள். 

பிகு

தனிப்பட்டு உங்களுக்கு தனிமனித துதிபாடும் hero worshipping tendency உள்ளது எனவும் நான் அபிபிராயப்படுகிறேன்.

தலைவருக்கு முன்பு முட்டு கொடுப்பீர்கள் அது நியாயமானது (இப்போ எல்லாம் இதை கடந்து போய் விடுகிறீர்கள், மினகெடுவதில்லை), ஆனால் அதே வீரியத்துடன் சீமானுக்கும், புட்டினுக்கும், லேட்டஸ்டாக அனுரவுக்கும் முட்டு கொடுக்கும் போது - 

தொலைந்த காதலியை காணும் பெண்களில் எல்லாம் தேடும் காதலன் போல தலைவரை இவர்களில் project பண்ணுவதாகவே எனக்கு படுகிறது.

இதுவும் உங்கள் மேற்கு எதிர்ப்பை வலுபடுத்துவதாக நான் எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kadancha said:

(இது எல்லோருக்கும் தான்.)

புலிகளையும், அசாத்தையும் அல்ல.

அவர்களின் பார்வையில், அவர்களுக்குத் தெரிந்த அச்சுறுத்தல்களும், அவற்றை எதிர்  கொண்ட (அழித்த) விதமும்  (வன்முறை பிரயோகம்).

எவ்வாறாயினும், அது நான் சொல்லியதை மாற்றவில்லை.

அதாவது,  அவர்களின் (அசாத், புடினும் நீங்கள் விரும்பினால் சேர்த்து கொள்ளுங்கள்) பார்வையில் இருப்புக்கான அச்சுறுத்தல்,  இருப்புக்கான அச்சுறுத்தலை அகற்றுவது.

நீங்கள் உட்பட, எல்லோரும் அவர்களை அறியாமலே நான் சொல்லும் நிலைக்கு வந்துள்ளனர்.

அதை தவிர்ப்பதற்கு, அவர்கள் கின்டியா, மேற்கு, மூளைச்சலவை, டெல்லி அழைப்பு என்று மதி, மனம் போன போக்கில் சுற்றிவளைத்தும், நியாயப்படுத்தியும் அவர்களால் அவர்களை அறியாமல் நான்  சொல்லும் நிலைக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. 

அதன் சுருக்கமான காரணம், விளக்கம் - பாலசிங்கம் சொல்லியத்தில்  தான்.

அனால், அதற்கு வசதிக்கு ஏற்ற விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பாலசிங்கம் துறைசார் அரசியல் புலமை உள்ளவர் - அந்த புலமையின் அடிப்படையில் அவர் சொன்னதின்  (big fish ... ) என்பதன் கருத்து அரசியலுக்கும், அரசுக்கும்  பொருந்தி வருவது. அரசியலில், big fish .. என்பது ஓர் குறிப்பிட்ட உட்கருத்து

வலியது இருப்புக்கு வாய்ப்பு கூடிய (ஆயுத) அரசியல் எனும் விதியில்லா காட்டில் அல்லது ஆட்டத்தில்,  (big fish ... என்பது) எவ்வாறு அச்சுறுத்தல்களை  விதியில்லாது (அழித்து) நீக்குவது, ஏனெனில் விதியில்லா காட்டில் ஒவ்வொன்றும் மற்றதுக்கு அச்சுறுத்தல், அவை ஒவ்வொன்றின் பார்வையிலும்,

இது பின் (பலம் ஓங்கியவுடன்) அமைக்கப்படும் அரசு என்பதோடு ஒத்துப்போவது. 

state (அரசு) என்பதன் பொருள் என்ன - state of mind. பலவேறு அச்சுறுத்தல் மத்தியில் மதி தடுமாறாமல், ஒருமுகப்படுத்தி,  இருப்பை எந்தவழியேனும் (வேண்டுமாயின் அதன் விதிகளை கூடி புறந்தள்ளி)  தக்கவைப்பது. இதுவே தமிழ் அரசு, ஆங்கிலத்தில் state என்பதன் கருத்து.    

(பாலசிங்கம் சொன்னதுக்கு அவரவர் தமக்கு விரும்பிய தொப்பியை போடலாம்.)

ஆனால், ஒரு தொப்பி தான் அரசோடு, அதன் தன்மையோடு  ஒத்து வரும்.

புலிகள் செய்த அழிப்பை, பாலசிங்கத்துக்கு நியாயப்படுவதில் வேறு பல சொல்லாடல்கள் இருந்தும், குறிப்பிட்ட big fish ... என்பதையே பாவித்து உள்ளார் என்பதும்.
 
அரசியல் துறை சார் புலமை உள்ள பாலசிங்கம் சரியாகவே பாவித்து உள்ளார் (அனால் இங்கே பாலசிங்கதுக்கு இங்கே பாடம்  எடுக்கப்படுகிறது என்பது வேறு விடயம்).

பாலசிங்கம் எதை  சொல்லி இருப்பார் என்பதை  வாசகர்கள் கணித்து பார்க்கலாம்.

தவிர, எமது இடத்தில், புலிகளும் அதையே செய்தனர், பிரயோக தன்மையே வேறுபாடு.  

அதே  போல , மற்ற இயக்கங்கள் ஆயுத எதிர்ப்பு தொடர்ந்து இருந்தால், புலிகளின் வன்முறை  பிரோயோகம் பரவி இருக்கும். 

மாறாக, பகுதி மக்கள் (மற்ற இயக்கங்கள்) மீது குழுமமாக  வன்முறை பிரோயோகித்த பின், தொடருமாயின், எல்லை எது? இருப்பை தக்கவைத்தல். 

வேடிக்கை, அரசியல் துறை சார் புலமை பெற்ற பாலசிங்கம் சொல்லுவதை, வளைக்க முயற்சித்தும்  சூழ்நிலை என்பதை தவிர்க்க முடியவில்லை. பாலசிங்கத்துக்கு பாடம் எடுக்கப்படுகிறது.

இங்கே தார்மீகம், நீதி ... போன்றவை பொருட்டு அல்ல இருப்புக்கு அதிகாரத்தை பிரயோகிக்கும் போது.

(இது அரசியலிலிருந்து வர்த்தக உலகத்துக்கும் தொத்தி கொண்டுள்ளது என்பதும், குறிப்பாக swot இல், வர்த்தக உலகின் அரசியல் என்று அழைக்கலாம்).

ஆனால், இதை முதலில்  எழுதும் போது பாலசிங்கம் சொன்னது எனது நினைவில் வரவில்லை, ஆனால் வசித்து இருக்கிறேன் 

நான் சொன்னது.

...

சைரஸ் 

...

அலெக்சாண்டர் ...
...
சோழர் ... (சோழர் கடைசியில்  இதில் பிழை விட்டு விட்டனர் அரசின் தந்தையான ஒட்டக்கூத்தர் சொல்லைத் தட்டி. விக்கிரம சோழனின் தகப்பன் இழவு படுக்கையில் இருக்கும் போது அரசின் தந்தையான  ஒட்டக்கூத்தரின் கையை பிடித்து, பாண்டியருக்கு சுயாட்சி கொடுத்து, பாண்டிய இளவரசியை விக்கிரம சோழன் மணம் முடிக்க அனுமதிக்கும் படி, அதுவே சோழ இராச்சியத்தின் முடிவின் தொடக்கம்)

ஆங்கிலேயர்...

...

என்று எல்லோரும் அவரவர்  சூழ்நிலை அடிப்படையில் வன்முறையை உள்ளுக்குள் இருப்புக்கு பிரயோகித்தனர்.

அதெ போன்று, உள்ளுக்குள் இருப்புக்கு வன்முறையையை பிரயோகித்த பின், எல்லை  எது புலிகளுக்கு

சூழ்நிலையே தீர்மானிக்கும்.

இருப்பே அடிப்படை காரணமும் உந்துதலும்.

இங்கே புலிகள் விதிவிலக்கு என்பதே  மற்றவர்கள் சொல்லுதுவது.

அப்படி இல்லை என்று, பாலசிங்கம் முற்றுப்புள்ளி வைத்தார், அதாவது  புலிகளே முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

(பாலசிங்கம் சொல்லுவதை  வளைப்பது அவர்களின் பிரச்சனை).

தம்பி…. அந்த வடை (பாலசிங்கம் கொடுத்த பேட்டியின் நகல்) இன்னும் வரவில்லை.

அது வரும் வரைக்கும் நீங்கள் வாயால் வடை சுடுவது அம்பலம் ஏறாது.

புலிகள் தமது இருப்புக்காக அல்ல இனத்தில்ல்ன் இருபுக்ககாகவே மாற்று இயக்கங்களை தடை செய்தனர்.

அசாத், புட்டின் தம் தனிமனித இருப்புக்காக ஒப்பிடவே முடியாத பெரும் மனித அழிவுகளை உருவாக்கினர்.

இரெண்டும் ஒன்றே - புலிகளின் தலைவரின் இருப்புக்காகவே அவர்கள் மாற்று இயக்கத்தை தடை செய்தானர் என்பது உங்கள் வாதம்.

உங்கள் co-conspirator தவிர வேறு யாரும் இதை யாழில் ஆதரிக்கவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

நீங்கள் ஜேர்மனியில் எந்த கட்சியில் இருந்தாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லை அண்ணை.

ஆனால் ஜேர்மனியின் எந்த கட்சியாயினும் அவர்கள் எல்லாரும் பிரதிநிதிதுவ ஜனநாயகம். சட்டதின் ஆளுமை, ஐரோப்பிய மனித உரிமை சாசனம் போன்ற சட்டங்களும் விழுமியங்களும் மதிக்கப்படும் ஒரு நாட்டில்தான் தம் அரசியலை செய்கிறனர். நீங்கள் AfD இல்லை என நினைக்கிறேன். கிரீன்ஸ் ஆக இருக்கலாம் என ஊகிக்கிறேன்.

ஆனால் நீங்கள் ரஸ்யாவையும், சீனாவையும், ஈரானையும் - மேற்கில் உள்ள ஜனநாயக நாடுகளோடு ஒப்பிட்டு எல்லாம் ஒன்றே என எழுதும் போது தான் பிணக்கு வருகிறது.

இதைத் தான் நானும் அண்ணைக்கு எழுத இருந்தேன்.

50 minutes ago, goshan_che said:

இப்படி எழுத:

1. நீங்கள் சும்மா டைம்பாசுக்கு எழுத வேண்டும் அல்லது

இப்படி தான் ஆரம்பத்தில் நானும் நினைத்தேன். அது தொடர்ந்தபோது இங்கே அதை சில நாட்களின் பின்னர் சுட்டிக் காட்டினேன். 

50 minutes ago, goshan_che said:

 பிழை இருந்தாலும், நாம் இலங்கையை விட பலமாக இருப்பது இங்கே மேற்கில்தான். எனவே மேற்கினூடுதான் எமக்கு ஒரு தீர்வு வர வாய்ப்பு அதிகம். ஒரு போதும் ரஸ்யா, சீனா மூலம் இது வராது.

இதையும் இங்கே பல தடவைகள் சுட்டிக் காட்டி இருக்கின்றேன். 

எமக்கான நீதி வேண்டும் என்று நாம் முயலும் முன் இவ்வுலகில் யார் நீதிக்கு எதிரானவர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதுவே முதற்படி 

உலகின் எந்த நாட்டிலும் எந்த கட்சியிலும் இருக்கலாம். அவர்கள் எவராயினும் எமது அநீதிகளுக்கு குரல் தரவேண்டும் என்றால் நாம் மற்றவர்களின் அநீதிகளுக்கு குரல் கொடுப்பவராக கொடுத்தவராக இருக்கவேண்டும்.

நன்றி சகோ.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

சிலருடைய ஆவேசமான எழுத்துக்களைப் பார்த்தால் ஏதோ மேற்குலகு புனித பூமி போன்றும் கிழக்கு நாகரீகமடையாத கற்கால மனிதர்கள் போலவும் இருக்கிறது. 

உண்மைகளை துணிந்து சொல்வதனால் சொல்பவர்கள் மேற்கின் எதிரிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல மேற்கிற்கு ஆதரவாக கூப்பாடுபோடுபவர்கள் எல்லோரும் உண்மையான மேற்கின் விசுவாசிகளாக இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. 

மேற்கிற்கு ஆதரவாக எழுதும்  பலரும் தீவிர  இந்திய விசுவாசிகளாக  இருப்பதை யாழ்.கொம் ல் பார்க்கலாம். 

😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

3. அல்லது இன்னும் இருவர் போல் சம்பளத்துக்கு எழுத வேண்டும்.

🫢.............

இங்கு சம்பளத்திற்கும் எழுதுகின்றார்களா...................

ஏற்கனவே ஒரே ஆள் பல அடையாளங்களுடன் இங்கே வந்து போகின்றார்கள் என்ற தகவலே சாடையாக தலையைச் சுற்ற வைத்தது................🤣.

இந்த சம்பள விசயம் காலுக்கு கீழே பூமியை வழுக்க வைக்கின்றது.............

சாரு பாவம்....... ஆறு மாதங்கள் ஆராய்ச்சி செய்து நல்ல நாவல்களாக எழுதினாலும், 50 பிரதிகள் கூட விற்பனை ஆகவில்லை, ஆயிரம் ரூபாய் கூட வருகுதில்லை என்று மொத்த தமிழ் சமூகத்திற்கும் சாபம் விட்டுக் கொண்டிருக்கின்றார்..... அவர் இங்கே வந்து சேரலாம் போல...........

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

நீங்கள் புதிசுதானே? 🤣

சில விடயங்கள் யாழ் கள உறவுகள் குறைந்தது நால்வர் தனி தனியாக கையாளப்பட எத்தனித்து - எதேற்சையாக அது வெளி வந்து - ஒரு குட்டு உடைக்கப்பட்டது.

குட்டை உடைத்தவர்களுக்கு யாழ் நிர்வாகமும் நன்றியை சொல்லி இருந்தது.

இது நடந்தது அநேகம் திண்ணையில்.

அநேக யாழ்கள உறுப்பினர்களிற்கு குறித்த நபர் யாரென்பதும் - அவர் இயற்பெயர், வெளி உலகில் அவர் நடத்தும் இந்திய சார்பு இணையத்தளம் என்ன என்பதும் தெரியும்.

யாழில் இந்திய எதிர்ப்பு வேஷம். ஆனால் உண்மையான நோக்கம் மேற்கை நோக்கி புலம்பெயர் தமிழர்களை திருப்புவது.

சும்மா சொல்லக்கூடாது - மஹாராசன் - தொழில் ரொம்ப சுத்தம்.

வாங்குவற்கும் மேலாலயே கூவிறாண்டா கொய்யால ரகம்.

மற்றையவர் தான் இந்திய இராஜதந்திரிகளிடம் பேசுவதாக அவரே யாழில் கூறி உள்ளார். இவர் காசு வாங்காமலே கூவும் ரகமாக இருக்க கூடும் என்பது என் அனுமானம்.

இலங்கையில் இவ்வளவு மினக்கெடும் இந்தியா - யாழ் போன்ற ஒரு தளத்தில் ஊடுவாது விட வாய்ப்பே இல்லை. அது யார் என்பதை உய்தறிவது கஸ்டம் ஆனால் முடியாத காரியமில்லை.

Rule of thumb -

1. யார் இந்தியாவை கடுமையாக எதிர்ப்பது போல் காட்டி கொள்கிறார்களோ, குறிப்பாக ஹிந்தியா போன்ற வார்த்தைகளை பயன்படுத்திகிறார்களோ - அவர்கள் மீது ஒரு கண் வைக்க வேண்டும். (நெடுக்காலபோவான் விதி விலக்கு).

2. கணக்குகள் 2009 க்கு பின் உருவானவையாக இருக்கும்.

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.