Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு புதுடெல்லியில் சிறப்பான வரவேற்பு!

15 DEC, 2024 | 08:05 PM
image
 
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

WhatsApp_Image_2024-12-15_at_19.57.45_25

இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan) , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, (Santosh Jha), இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால் (Puneet Agrawal), இந்திய உபசரணைப் பிரதானி அன்ஷுமன் கவூர் (Anshuman Gaur) உள்ளிட்ட இராஜதந்திரிகள் ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பளித்தனர்.

WhatsApp_Image_2024-12-15_at_19.57.46_59

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் சிறப்பாக பிரசாரம் செய்திருந்ததுடன், புதுடில்லி நகரின் பிரதான சுற்றுவட்டாரத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.  

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்  (Dr. S. Jayashankar), இந்திய பாதுகாப்பு  ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) உள்ளிட்டவர்களை இன்று (15) இரவு சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு  வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர். 

https://www.virakesari.lk/article/201370

ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் ஆரவாரமான வரவேற்பு

ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் ஆரவாரமான வரவேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார்.

இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan) , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, (Santosh Jha), இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால் (Puneet Agrawal), இந்திய உபசரணைப் பிரதானி அன்ஷுமன் கவூர் (Anshuman Gaur) உள்ளிட்ட இராஜதந்திரிகள் ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பளித்தனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் சிறப்பாக பிரசாரம் செய்திருந்ததுடன், புதுடில்லி நகரின் பிரதான சுற்றுவட்டாரத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் (Dr. S. Jayashankar), இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) உள்ளிட்டவர்களை இன்று (15) இரவு சந்தித்து
கலந்துரையாடவுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

https://tamil.adaderana.lk/news.php?nid=197352

  • Replies 55
  • Views 2.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கடுப்பேத்திற நீ? இந்த வரவேற்பு, நாடகமெல்லாம் தங்கள் பாதுகாப்புக்கும் தங்கள் அபிவிருத்திக்குமே. இந்தியாவுக்கு உண்மையில் இலங்கை நலனில் அக்கறை இருந்திருந்தால்; போரைய

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • குமாரசாமி
    குமாரசாமி

    இந்தளவுக்கு பக்காவான வரவேற்பை அனுர எதிர்பார்த்திருக்க மாட்டார். சிங்களச்சனமும் எதிர்பார்த்திருக்க மாட்டாது.😂 இனியென்ன ஹபரணை சந்தியில காந்தி சிலை வைக்கலாம்.🤣 அமெரிக்க ஜனாதிபதிக்கு குடுக்கும் அ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 

15 DEC, 2024 | 09:49 PM
image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

462648704_594140606314412_19496919977022

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்பு  ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் உள்ளிட்டவர்களை இன்று (15 ) இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு  வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/201373

இலங்கையுடனான நட்புறவை என்றும் பேணுவோம் - ஜனாதிபதியிடம் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு

Published By: VISHNU   15 DEC, 2024 | 10:01 PM

image

இலங்கையுடனான நட்புறவை என்றும் பேணுவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

WhatsApp_Image_2024-12-15_at_21.59.19_8c

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு  வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/201375

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராஜதந்திர கலந்துரையாடல்களை ஆரம்பித்த ஜனாதிபதி

December 15, 2024  11:39 pm

இந்திய இராஜதந்திர கலந்துரையாடல்களை ஆரம்பித்த ஜனாதிபதி 

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தங்கியிருக்கும் புதுடில்லி ITC MAURYA ஹோட்டலுக்கு வருகைத் தந்த இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் (Dr.S. Jaishankar), மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் ஆகியோர்  சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்தியா – இலங்கை பொருளாதார ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ளல் மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்திக்கொள்வது தொடர்பில் இந்திய நிதி, நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனான இடையிலான சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

அதேநேரம் இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அதிகளவில் அழைத்து வருவது மற்றும் இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உடனான சந்திப்பு சிநேகபூர்வமாக இடம்பெற்றதோடு, இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியாவின் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்திக்கொள்வது குறித்தும் அதில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இந்நாட்டின் சுற்றுலா, முதலீடு மற்றும் வலுசக்தி துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவற்கும் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இதன்போது இணக்கம் தெரிவித்தார்.

மீன்பிடித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை மேம்பாடு உள்ளிட்ட இருநாடுகளுக்கும் அன்னியோன்யமான விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அதனையடுத்து இந்திய பாதுகாப்பு  ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) ஜனாதிபதியை சந்தித்து வலயத்தின் பாதுகாப்பு குறித்து  கலந்துரையாடினார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இதன்போது கலந்துகொண்டனர்.

https://tamil.adaderana.lk/news.php?nid=197356

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி அநுரகுமாரவை இந்திய ஜனாதிபதி, பிரதமர் வரவேற்றனர்

Published By: DIGITAL DESK 3

16 DEC, 2024 | 10:52 AM
image
 
இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று திங்கட்கிழமை (16) இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர்.

இந்த சம்பிரதாயபூர்வ வரவேற்பு நிகழ்வு புது டில்லியில் உள்ள இந்திய ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

75667660-a388-4ec5-9aa9-503f69695bb2.jpg

324a692a-208d-403a-83c7-b10495374d97.jpg

https://www.virakesari.lk/article/201393

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஆரம்பம்

ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஆரம்பம்

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு தற்போது இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதிபவனில் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சிக்குப் பிறகு, ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்த உள்ளார்.

பின்னர் ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் அங்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இருதரப்பு கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டு ஊடக அறிக்கை வௌியீடு இடம்பெறவுள்ளது.

அத்துடன் ஜனாதிபதி மற்றும் இந்திய துணை ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை ராஷ்டிரபதிபவனில் இடம்பெறவுள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=197365

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி அநுரவுக்கு ராஷ்டிரபதி பவனில் சம்பிரதாய வரவேற்பு!

ஜனாதிபதி அநுரவுக்கு ராஷ்டிரபதி பவனில் சம்பிரதாய வரவேற்பு!

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, இன்று திங்கட்கிழமை புது டெல்லியில் அமைந்துள்ள ராஷ்டிரபதி பவனில் சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி பவனில் வரவேற்றனர்.

இங்கு ஜனாதிபதி அநுரகுமார, ஒன்றிணைந்த இந்திய பாதுகாப்பு சேவையினரின் கௌரவிப்பு மரியாதையை பார்வையிட்டார்.

இதன்போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் தத்தமது அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு ஒருவரையொருவர் அறிமுகம் செய்து வைத்தனர்.

Image

Image

இலங்கை ஜனாதிபதி டிசம்பர் 15 முதல் டிசம்பர் 17 வரை இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த செப்டம்பரில் பதவியேற்ற பின்னர் அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, இலங்கை ஜனாதிபதியை டெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல் முருகன் வரவேற்றார்.

அவரது வருகையைத் தொடர்ந்து ஜனாதிபதி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் ஆகியோருடனும் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.

இந்திய-இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துதல், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலா மற்றும் முக்கிய துறைகளை முன்னேற்றுதல் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவை ஆழப்படுத்துவதற்கான உறுதிப்பாடு தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

https://athavannews.com/2024/1412454

  • கருத்துக்கள உறவுகள்

470205172_994594732705499_76500121253744

May be an illustration of text

May be an image of text

May be an illustration of text

May be an image of text

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, இன்று திங்கட்கிழமை புது டெல்லியில் அமைந்துள்ள ராஷ்டிரபதி பவனில் சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

Image

Image

இந்தளவுக்கு பக்காவான வரவேற்பை அனுர எதிர்பார்த்திருக்க மாட்டார். சிங்களச்சனமும் எதிர்பார்த்திருக்க மாட்டாது.😂

இனியென்ன ஹபரணை சந்தியில காந்தி சிலை வைக்கலாம்.🤣

அமெரிக்க ஜனாதிபதிக்கு குடுக்கும் அதியுச்ச மரியாதை போல கிடக்கு.😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கையை பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை; ஜனாதிபதி உறுதி

இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கையை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவிடம் உறுதியளித்துள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்கும் பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ள கடற்றொழில் பிரச்சினைக்கு நிரந்தரமானதும் நிலையானதுமான தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் எனவும், மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித் தொழில் அழிந்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், அந்த நிபந்தனைகள் மற்றும் அதை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமரிடம் ஜனாதிபதி கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

https://thinakkural.lk/article/313787

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஊடகவியலாளர் சந்திப்பு!

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஊடகவியலாளர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று (16) நடைபெற்றது.

ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது இந்திய விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் என்று கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தியப் பிரதமரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி,

2 வருடங்களுக்கு முன்னர் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதாகவும், அந்த நிலையில் இருந்து மீள்வதற்கு இந்தியா பெரும் ஆதரவை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் இந்தியா பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், இலங்கையும் அதே பாதையில் செல்வதாகவும், இந்த முயற்சிக்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இந்தியப் பிரதமர் உறுதியளித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், இரு நாடுகளுக்கும் பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ள கடற்றொழில் பிரச்சினைக்கு நிரந்தரமானதும் நிலையானதுமான தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் எனவும், மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித் தொழில் அழிந்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அந்த நிபந்தனைகள் மற்றும் அதை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமரிடம் ஜனாதிபதி கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

அத்துடன், இந்தியாவின் பாதுகாப்புக்கும், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கையை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=197374

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இந்தளவுக்கு பக்காவான வரவேற்பை அனுர எதிர்பார்த்திருக்க மாட்டார். சிங்களச்சனமும் எதிர்பார்த்திருக்க மாட்டாது.😂

இனியென்ன ஹபரணை சந்தியில காந்தி சிலை வைக்கலாம்.🤣

அமெரிக்க ஜனாதிபதிக்கு குடுக்கும் அதியுச்ச மரியாதை போல கிடக்கு.😁

அடுத்த மாதம்... அனுர, சீனா போகிறார். 
அங்கு என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்குது என்று பார்த்து விட்டு, 
ஹபரணை சந்தியில்... காந்தி சிலை வைக்கிறதா, இல்லையா... என்ற முடிவுக்கு வாங்கோ அண்ணை. 😂

Edited by தமிழ் சிறி

1. முருகன், ஜெய்சங்கர், நிர்மலா என தமிழ் பேசுவோரை வைத்து வரவேற்று ஒரு சின்ன ஜேர்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

2. தரை வழி பாலம்,  எண்ணை குழாய்,  காற்றாலை, புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் உட்பட்ட 5 ஐ நிறைவேற்றினால் - 13 ஐ வலியுறுத்த மாட்டோம் என சொல்லப்பட்டதாம். 

17 minutes ago, தமிழ் சிறி said:

அடுத்த மாதம்... அனுர, சீனா போகிறார். 
அங்கு என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்குது என்று பார்த்து விட்டு, 
ஹபரணை சந்தியில்... காந்தி சிலை வைக்கிறதா, இல்லையா... என்ற முடிவுக்கு வாங்கோ அண்ணை. 😂

ஹபரண ல காந்தி…

ஹரவபொத்தானயில மா வோ

கேம் ஒவர்

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

ஹபரண ல காந்தி…

ஹரவபொத்தானயில மா வோ

கேம் ஒவர்

எல்லா இடமும் கை ஏந்தி, கடைசியில் சுயத்தை இழக்க வேண்டி வந்துவிட்டது.
1948´ல் சுதந்திரம் கிடைத்த கையுடன்... தமிழருடன் ஒற்றுமையாக இருந்திருந்தால்,
ஸ்ரீலங்கா... இன்று சிங்கப்பூர் மாதிரி இருந்திருக்கும். 
இனவாதம் விடவில்லையே... போர் என்று தொடங்கியதால், முழு நாட்டையும் 
சீனன், இந்தியன், அமெரிக்கன் என்று பங்கு போட காத்து  இருக்கின்றார்கள்.
பிக்குகளுக்கும், இனவாதிகளுக்கும்  சமர்ப்பணம்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிகாவுக்கும் ஒரு அப்பத்துண்டு கொடுக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

9 minutes ago, nunavilan said:

அமெரிகாவுக்கும் ஒரு அப்பத்துண்டு கொடுக்கப்படும்.

அப்ப ட்ரம்பின் சிலையும் வைக்கப்படும்...அதுவும் பெட்டா மாக்கற்றின்  முன்பாக..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கிருந்த கடைசி பேரம்பேசும் சக்தியும் எண்ணைக் குழாய் + LNG pipeline  ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வருகிறது.  எம்மைத் துருப்புச் சீட்டாக வைத்து தனக்குரிய சகலவற்றையும் இந்தியாசாதித்துக் கொண்டது. 

இந்தியாவை நம்பியதன் பலன் இதுதான். 

இனிமேலாவது தமிழன் தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

1. முருகன், ஜெய்சங்கர், நிர்மலா என தமிழ் பேசுவோரை வைத்து வரவேற்று ஒரு சின்ன ஜேர்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

2. தரை வழி பாலம்,  எண்ணை குழாய்,  காற்றாலை, புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் உட்பட்ட 5 ஐ நிறைவேற்றினால் - 13 ஐ வலியுறுத்த மாட்டோம் என சொல்லப்பட்டதாம்.

🤣...............

தரைவழிப் பாலம் ஒன்றே போதும்................ பாண்டிச்சேரியும் தங்களை தனிமாநிலம் ஆக்குமாறு கேட்டுக் கொண்டேயிருக்கின்றார்கள். அது ஒரு மாநிலம், இது ஒரு யூனியன் பிரதேசம் என்று மாற்றிவிடலாம்.

அமெரிக்கா மட்டும் தான் கனடாவை ஒரு மாநிலம் என்று, பகிடியாக ஆனால் உண்மையாக, சொல்ல முடியுமா............. இந்தியாவிற்கும் ஒரு கெத்து தேவைப்படுகின்றது...........

எல். முருகனை புதிதாக டாக்டர் முருகன் என்று போட்டிருக்கின்றார்கள். ரணில் இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க மாட்டாரா...................😜.  

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரசோதரன் said:

தரைவழிப் பாலம் ஒன்றே போதும்................ பாண்டிச்சேரியும் தங்களை தனிமாநிலம் ஆக்குமாறு கேட்டுக் கொண்டேயிருக்கின்றார்கள். அது ஒரு மாநிலம், இது ஒரு யூனியன் பிரதேசம் என்று மாற்றிவிடலாம்.

குறைந்த பட்சம் இரெண்டு யூனியன் பிரதேசமாவது வேணும் யுவர் ஆனர் 🤣.

52 minutes ago, ரசோதரன் said:

எல். முருகனை புதிதாக டாக்டர் முருகன் என்று போட்டிருக்கின்றார்கள். ரணில் இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க மாட்டாரா...................😜.  

🤣இது உண்மையான பட்டம் என நினைக்கிறேன்.

முன்பே சட்ட முதுகலை முடித்திருந்தார்….முனைவருக்கு படிக்கிறார் என வாசித்த நியாபகம்.

முடித்துவிட்டார் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

குறைந்த பட்சம் இரெண்டு யூனியன் பிரதேசமாவது வேணும் யுவர் ஆனர் 🤣.

🤣இது உண்மையான பட்டம் என நினைக்கிறேன்.

முன்பே சட்ட முதுகலை முடித்திருந்தார்….முனைவருக்கு படிக்கிறார் என வாசித்த நியாபகம்.

முடித்துவிட்டார் போலும்.

🤣.............

ஆடு-புலி-புல்லுக்கட்டு போன்றது இலங்கை மக்களின் கதை........... இந்தியா அவர்களின் நாட்டுக்குள் இதுவரை பார்த்திராத ஒரு படைப்புகள் நாங்கள்................ பாலத்தை போடட்டும், நாங்கள் யாரென்று காட்டுகின்றோம்................🤣.

முருகனின் பட்டம் முறையானதே............... இப்ப எவராவது 'டாக்டர்' என்று சொன்னாலே, உடனே சிரிப்பு வருகின்றது............. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழ் சிறி said:

அடுத்த மாதம்... அனுர, சீனா போகிறார். 
அங்கு என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்குது என்று பார்த்து விட்டு, 
ஹபரணை சந்தியில்... காந்தி சிலை வைக்கிறதா, இல்லையா... என்ற முடிவுக்கு வாங்கோ அண்ணை. 😂

அனுர சீனா போய் வந்த பின் அமெரிக்க நல்லெண்ணை கப்பல் ஒன்று கொழும்பு நோக்கி வரும்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா குடுத்த கடனை திரும்ப கேட்காட்டி சரி

  • கருத்துக்கள உறவுகள்

அடடா... என்ன அழகு, என்ன கம்பீரம். அது சரி ....., கடைக்கு போன மனுஷனை கொண்டுபோய் இந்தியாவில இறக்கிவிட்டார்களோ? இல்லை.... எந்தவொரு ஆடம்பரமுமில்லாத உடை, நடை கெத்தில்ல! மற்றையவர் கடந்த காலங்களில் வெளிநாட்டுக்கு உத்தியோகபூர்வ பயணம் போனால் உடை, நடை, படை, என தனி விமானத்தில்  போய் சொகுசு விடுதிகளில் தங்கி உல்லாசம் அனுபவித்து வருவார்கள். இவர் எத்தனை பேருடன் போனாராம்?

வரவேற்பு என்னவோ பிரமாதமாகத்தான் இருக்கிறது. ஆனால் சந்தித்தவர்கள் ஏன் இப்படி மூஞ்சியை இறுக்கமாக வைத்திருக்கிறார்கள்? எல்லாருக்கும் முன்பாக அழைத்து விருந்து கொடுத்து மருந்தும் கொடுத்துவிடுவார்கள். அனுராவுக்கு நன்கு தெரியும் இந்தியாவின் சகுனித்தனம். பாப்போம் எப்படி வெட்டியாடுகிறாரென்று!

15 hours ago, குமாரசாமி said:

இந்தளவுக்கு பக்காவான வரவேற்பை அனுர எதிர்பார்த்திருக்க மாட்டார். சிங்களச்சனமும் எதிர்பார்த்திருக்க மாட்டாது.

கவிழ்க்கப்போகிறார்கள் என்று அர்த்தம் சாமியார்! அனுராவின் வீரியம் தெரியும் அவர்களுக்கு போனவுடன் கோயிலில் விழுந்து கும்பிடும்  கூட்டமல்ல இவர்.

8 hours ago, ரசோதரன் said:

எல். முருகனை புதிதாக டாக்டர் முருகன் என்று போட்டிருக்கின்றார்கள். ரணில் இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க மாட்டாரா.

வீட்டுக்கு வீரன், காட்டுக்கு கள்ளன் ரணில் என்னத்தை சொல்லுறது? எத்தனை நாடகம் தந்திரம் துரோகம் பவ்வியம் பிரிச்சாளுகை? என்ன செய்தாலும் ஒருமுறையாவது தனது ஆட்சிக்காலத்தை முழுமையாக, நிம்மதியாக, வெற்றியாக  நிறைவு செய்ய முடியவில்லையே இவரால். பிறர்க்கிடும் பள்ளம் தான் விழும் குழி.     

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

எல். முருகனை புதிதாக டாக்டர் முருகன் என்று போட்டிருக்கின்றார்கள். ரணில் இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க மாட்டாரா....

கவலையே வேண்டாம்! சூட்டோடு சூடு தட்டிக்கேட்க ரணில் இந்தியா புறப்படுகிறார். சுமந்திரனின் தோழராச்சே! என்ன சூழ்ச்சி செய்யப்போறாரோ தெரியலை? 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

தரை வழி பாலம்

இதை இலங்கை செய்யாது எனவே கருதுகிறேன், யாரும் சொந்த செலவில் சூனியம் செய்ய மாட்டார்கள், சில வேளை மற்ற அரச தலைவர்களை விட இவர் தலையில் இலகுவாக மிளகாய் அரைக்கலாம் என நினைக்கிறார்களோ🤔

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

1. முருகன், ஜெய்சங்கர், நிர்மலா என தமிழ் பேசுவோரை வைத்து வரவேற்று ஒரு சின்ன ஜேர்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

2. தரை வழி பாலம்,  எண்ணை குழாய்,  காற்றாலை, புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் உட்பட்ட 5 ஐ நிறைவேற்றினால் - 13 ஐ வலியுறுத்த மாட்டோம் என சொல்லப்பட்டதாம்.

இந்தியா வடக்கே இருப்பதால் துட்ட கைமுனு கால் நீட்டி படுக்க முடியாமல் அவதிப்பட்டதாக சிங்களவர்களின் புனைகதைகளில் உள்ளதாக கூறுகிறார்கள், தற்போது நீங்கள் கூறுவது போல் நிகழ்ந்தால் அதனை சிங்களவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இது நிகழ்ந்தால் இலங்கை அரசியலில் ஒரு புயல் உருவாகலாம்(நீங்கள் கூறுவது போல நிகழ்ந்தால் ஏற்கனவே கால் நீட்டி படுக்க முடியாமல் அவதிப்படும் துட்ட கைமுனுவிற்கு அதனோடு சேர்ந்து மூல நோயும் வந்த நிலைதான்).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.