Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ரசோதரன் said:

எல். முருகனை புதிதாக டாக்டர் முருகன் என்று போட்டிருக்கின்றார்கள். ரணில் இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க மாட்டாரா...................😜.  

இந்தியா அப்படி தான் அங்கே இருந்து இலங்கைக்கு தொற்றிய நோய் தானே கலாநிதி பட்டம் விடுவதும் நல்ல காலம் தமிழ்நாட்டு தளபதி முருகன்  என்று பட்டம் கொடுக்காமல் விட்டார்களே.ரணில் வெளிநாட்டுகாரர் இந்திய இறையாண்மையில் தலையிட முடியுமா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி!

adminDecember 17, 2024
ANURA-at-india-1170x671.jpg

மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம்  மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (16.12.24) பிற்பகல் புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்திய கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலில் இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையில் முதலீடு செய்யுமாறு இந்திய தொழில் முனைவோரிடம் கோரிக்கை விடுத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை விஸ்தரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்ததுடன், அதற்குத் தேவையான முதலீட்டு வசதிகளை வழங்க இலங்கை அரசாங்கம் உடன்பாடு தெரிவித்தது.

தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவும் இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார்.
 

https://globaltamilnews.net/2024/209367/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதி அநுரகுமார புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு விஜயம்!

ஜனாதிபதி அநுரகுமார புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு விஜயம்!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (17) காலை பீகாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு சென்றுள்ளார்.

பீகாரைச் சென்றடைந்த ஜனாதிபதியை, கயா விமான நிலையத்தில் வைத்து மூத்த அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

அத்துடன், புத்த கயாவின் மகாபோதி ஆலய வளாகத்திற்குள் சென்ற ஜனாதிபதியை அநுரவை பௌத்த பிக்குகள் அன்புடன் வரவேற்றனர்.

Image

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் விளங்கும் மகாபோதி கோயில், புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

புத்தர் ஞானம் பெற்றதாகக் கூறப்படும் இடத்தைக் குறிக்கும் வகையில், புத்த கயாவில் உள்ள ஒரு பழங்கால புத்த கோவில் இதுவாகும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே வலுவான பங்காளித்துவத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய தருணத்தை குறிக்கிறது என்று திங்கட்கிழமை விசேட மாநாட்டில் இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

அநுரகுமார பதவியேற்றதன் பின்னர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் பன்முக உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அவர் வலியுறுத்தினார்.

இந்த விஜயத்தின் நோக்கம் இரு நாடுகளிடையிலான வலுவான பங்காளித்துவத்தை விரிவுபடுத்துவதையும் அதன் எல்லைகளை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதிப்படுத்தியதாக வெளிவிவகார செயலாளர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக திங்கட்கிழமை, இலங்கைத் தூதுக்குழுவினருக்கு அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு இலங்கை ஜனாதிபதி அனுரகுமார, பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

Image

இது குறித்து எக்ஸில் பதிவிட்ட ஜனாதிபதி அநுரகுமார,

ஜனாதிபதியாக எனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தது ஒரு பாக்கியம், பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஆதரவளித்ததற்காகவும் கடன் மறுசீரமைப்பிற்கு உதவுவதற்காகவும். வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, BRICS, UNCLCS மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தலை நிறுத்துவது குறித்து இன்றைய சந்திப்பின் போது விவாதித்தோம்.

நான் பிரதமர் மோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன், மேலும் இலங்கையின் பிரதேசம் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று இந்தியாவுக்கு உறுதியளித்தேன் என்று குறிப்பிட்டார்.

டிசம்பர் 15 முதல் 17 வரை மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

செப்டம்பரில் பதவியேற்ற பின்னர் அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும்.

https://athavannews.com/2024/1412636

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

May be an illustration of text

 

May be an illustration of fishing and text

 

May be a doodle of tree

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

 

May be an illustration of text

 

May be an illustration of fishing and text

 

May be a doodle of tree

இந்த ஓவியம் வரைத்தவர்களை   ஐனதிபதியாக   பிரதமராக   பதவியில் அமர்த்தப்பட வேண்டும்   என்ன பிடுங்கி தாருவார்கள். ??பார்ப்போம்    வைக்கோல் பட்டடை   ..........இல்   இருத்து சத்தம் போட்டித் தான்   முடியும்      வைக்கோல் சாப்பிடவும் விடாமல் தங்களும். சாப்பிட மாடடாதுகள்.    🙏

Just now, Kandiah57 said:

இந்த ஓவியம் வரைத்தவர்களை   ஐனதிபதியாக   பிரதமராக   பதவியில் அமர்த்தப்பட வேண்டும்   என்ன பிடுங்கி தாருவார்கள். ??பார்ப்போம்    வைக்கோல் பட்டடை   ..........இல்   இருத்து சத்தம் போட்டித் தான்   முடியும்      வைக்கோல் சாப்பிடவும் விடாமல் தங்களும். சாப்பிட மாடடாதுகள்.    🙏

போடத் 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.