Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித்  திணைக்களத்தின் கீழ் உள்ள சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி தற்போது புனரமைக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதி புனரமைக்கப்படுகின்ற பொழுது வீதியின் குறிப்பிட்ட சில இடங்களில் ஒரு அடி ஆழமான  நீளமான குழிகள் தோண்டப்பட்டு அதற்குள் காவோலைகள் போடப்பட்டு அதற்கு மேலாக கற்கள் போடப்பட்டு வீதி புனரமைப்பது பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான முறையில் பிரதான வீதி ஒன்று புனரமைக்கப்படுமா என்று மக்கள் விசனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர்  உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதோடு அதற்கான விளக்கத்தையும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் கோரிக்கை விடுத்துள்ளார். (ச)

காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி - கிஷோர் விசனம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, பிழம்பு said:

இவ்வாறான முறையில் பிரதான வீதி ஒன்று புனரமைக்கப்படுமா என்று மக்கள் விசனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

அர்ச்சுனாவின் ஏரியாவிலேயே கார்பெட் ரோடு என்ற பெயரில் காவோலை ரோடு போடுகின்றீர்களா............. என்ன துணிவு உங்களுக்கு...............

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனரக வாகன அதிர்வுகளைக் குறைக்க புதிய முயற்சியா??

1 minute ago, ரசோதரன் said:

அர்ச்சுனாவின் ஏரியாவிலேயே கார்பெட் ரோடு என்ற பெயரில் காவோலை ரோடு போடுகின்றீர்களா............. என்ன துணிவு உங்களுக்கு...............

அருச்சுனாவிற்கும் கிஷோருக்கும் இடையே தற்போது நட்புறவு இல்லை என்பதாலோ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, ரசோதரன் said:

அர்ச்சுனாவின் ஏரியாவிலேயே கார்பெட் ரோடு என்ற பெயரில் காவோலை ரோடு போடுகின்றீர்களா............. என்ன துணிவு உங்களுக்கு...............

அர்ச்சுனாவின் பெயரைக் கேட்டதுவே அதிருதில்ல.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, ரசோதரன் said:

அர்ச்சுனாவின் ஏரியாவிலேயே கார்பெட் ரோடு என்ற பெயரில் காவோலை ரோடு போடுகின்றீர்களா............. என்ன துணிவு உங்களுக்கு...............

சிங்கன் கிண்டி கிழங்கெடுக்கப்போறார்😆

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, RishiK said:

கனரக வாகன அதிர்வுகளைக் குறைக்க புதிய முயற்சியா??

அருச்சுனாவிற்கும் கிஷோருக்கும் இடையே தற்போது நட்புறவு இல்லை என்பதாலோ? 

ஆனால் காவோலை எத்தனை நாட்கள் நின்று பிடிக்கும், ரிஷி............ அத்துடன் காவோலைத் துண்டுகள் உக்கிப் போய்விட, அந்த இடத்தில், உள்ளே, வெற்றிடம் உருவாகிவிடும் அல்லவா, அதுவே பின்னர் முழு அமைப்பின் ஆதாரத்தையும் கெடுத்தும் விடலாம்.................. இது என்னவென்று எனக்குத் தெரியவில்லை.........கேட்டுப் பார்ப்போம்..............

அர்ச்சுனா - கிஷோர் என்று ஒன்றும் இருக்கின்றதா..............🫣

13 minutes ago, ஈழப்பிரியன் said:

அர்ச்சுனாவின் பெயரைக் கேட்டதுவே அதிருதில்ல.

அந்த அதிர்வைக் கட்டுப்படுத்தவே காவோலையைப் போட்டோம் என்று சொல்லப் போகின்றார்கள், அண்ணா.......🤣

5 minutes ago, goshan_che said:

சிங்கன் கிண்டி கிழங்கெடுக்கப்போறார்😆

இது ஒரு பொன்னான சந்தர்ப்பம்............ அவர் சாவகச்சேரி மக்களுக்கு ஒரு கைமாறு செய்தே தீருவேன் என்று ஒற்றைக்காலில் வேறு நிற்கின்றார்.............🤣.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒருவேளை றோட்டோரமாக தென்னம்பிள்ளை வைக்கப்போகின்றார்களோ? 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ரசோதரன் said:

இது என்னவென்று எனக்குத் தெரியவில்லை......

சிவில் எஞ்சினியருக்கே தெரியாட்டி பிறகு நாங்கள் எங்க போறது ரசோ அண்ணை (உங்கள் பட்ஜை சொன்ன பின் ரசோ எண்டு அழைக்க ஒரு மாரியாக உள்ளது). 

ஒருவேளை - போடப்படும் materials ஐ கூல் பண்ண இப்படி நடக்கிறதோ?

பாஸ்சுன்னே க்கள் கொங்ரீட் போடும் போது இப்படி எதையோ போட்டு தண்ணீர் ஊற்றுவதை கண்டுள்ளேன்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முந்திய பிறப்பில் நாங்கள் இரவு பகலாக சயிக்கிள் சவாரி செய்த றோட்டு, வடிவாகப் போட்டு விடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, goshan_che said:

சிவில் எஞ்சினியருக்கே தெரியாட்டி பிறகு நாங்கள் எங்க போறது ரசோ அண்ணை (உங்கள் பட்ஜை சொன்ன பின் ரசோ எண்டு அழைக்க ஒரு மாரியாக உள்ளது). 

ஒருவேளை - போடப்படும் materials ஐ கூல் பண்ண இப்படி நடக்கிறதோ?

பாஸ்சுன்னே க்கள் கொங்ரீட் போடும் போது இப்படி எதையோ போட்டு தண்ணீர் ஊற்றுவதை கண்டுள்ளேன்.

🤣..................

இதுக்கு நான் ஜெயக்கொடிக்கு ஆதரவாக ஆஜராகாமலேயே விட்டிருக்கலாம்..........😜.

இலங்கையில் படித்தால் உடனேயே சபாநாயகர் ஆகலாம், மருத்துவர் ஆகலாம்............. ஆனால் பொறியியலாளர் ஆக வேண்டும் என்றால், படித்த பின்னர் தெருவிலும் போய் சில வருடங்கள் இறங்கி நிற்கவேண்டும்................ நான் அங்கே நிற்கவில்லை.................😜.

கதையோடு கதையாக ஒரு விசயம்.............. அநுரவும் உங்களுக்கு ஒரு அண்ணன் முறையே.......... அதுக்காக அவரை குத்தக் கூடாது என்றில்லை................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அல்லாரை மக்கள் ஒரு வீடியோ எடுத்து X தளத்தில் போட்டு வீதி அமைச்சரையும்  tag பண்ணி விடவும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, ரசோதரன் said:

கதையோடு கதையாக ஒரு விசயம்.............. அநுரவும் உங்களுக்கு ஒரு அண்ணன் முறையே.......... அதுக்காக அவரை குத்தக் கூடாது என்றில்லை..............

சீமானும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காவோலைகளுக்கு மேல் காப்பற் வீதி

adminDecember 16, 2024
2-5-1170x878.jpg

சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் வீதியின் சில இடங்களில் காவோலைகள் போடப்பட்டு , அதன் மீது கற்கள் பரவப்பட்டு , வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வீதி புனரமைப்பின் போது , காவோலைகள் போடப்பட்டு கற்கள் பரவப்படும் முறையை தாம் முதல் முதலாக நேரில் காண்பதாகவும் , இதற்கு காரணம் என்ன என வீதி புனரமைப்பு பணியாளர்களிடம் கேட்ட போது , அதற்கு அவர்கள் விளக்கம் கூறவில்லை எனவும் , அதனால் உரிய தரப்பினர் இது தொடர்பில் விளக்கம் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

2-1-1-800x600.jpg2-2-1-800x450.jpg2-3-1-800x600.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

அர்ச்சுனாவின் ஏரியாவிலேயே கார்பெட் ரோடு என்ற பெயரில் காவோலை ரோடு போடுகின்றீர்களா............. என்ன துணிவு உங்களுக்கு...............

இங்கே பணத்தை தான் பார்க்கிறார்கள்   

லாபம் தான் நோக்கம் 

காவோலை மலிவு      அத்துடன்  இரண்டு வருடங்களில்   இடம். கீழே இறங்கும்   மீண்டும் றோட்டு போடலாம்   

அதற்கான நிதியை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில்  பல மணிநேரம் பேசி பெறுவார்கள்   தொடர்ந்து உழைக்கவும் முடியும்     

நீங்கள் மட்டுமே உழைத்தால். போதுமா  ???? 🤣🙏🤪😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Kandiah57 said:

அதற்கான நிதியை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில்  பல மணிநேரம் பேசி பெறுவார்கள்   தொடர்ந்து உழைக்கவும் முடியும்.

இந்தக் காவோலைக்கு பின்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதுங்கி இருக்கின்றார்கள் என்கிறீர்கள்.......... அவர்கள் ஊழலால் உழைக்கின்றார்கள், அதில் திளைக்கின்றார்கள் என்கிறீர்கள்................

அர்ச்சுனா சார், நோட் த பாயிண்ட்.......... நீங்கள் தான் பாராளுமன்ற உறுப்பினர், உங்களைத் தான் கந்தையா அண்ணா நேரடியாகவே குற்றம் சாட்டுகின்றார்................😜.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, கிருபன் said:

வீதி புனரமைப்பின் போது , காவோலைகள் போடப்பட்டு கற்கள் பரவப்படும் முறையை தாம் முதல் முதலாக நேரில் காண்பதாகவும் , இதற்கு காரணம் என்ன என வீதி புனரமைப்பு பணியாளர்களிடம் கேட்ட போது , அதற்கு அவர்கள் விளக்கம் கூறவில்லை எனவும் , அதனால் உரிய தரப்பினர் இது தொடர்பில் விளக்கம் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

ஏதாவது ஒரு விளக்கம் சொல்லிவினம் தானே. அதுக்கு பிறகு பாப்பம் 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, குமாரசாமி said:

ஏதாவது ஒரு விளக்கம் சொல்லிவினம் தானே. அதுக்கு பிறகு பாப்பம் 😂

றோட்டு போட்ட பிறகு விளக்கம் கேட்டு என்ன அண்ணா செய்கிறது? 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.