Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை நாடாளுமன்றிற்கு விடுத்து இன்று பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

2028 ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாகன இறக்குமதிக்கான அனுமதி மூன்று வழிமுறைகளில் வழங்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டு முதல் உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தம் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சேவை ஏற்றுமதி மீதான வரி 15 சதவீதமாக அமுல்படுத்தப்படும் என்றும், குறைந்த வருமானம் பெறுவோர் மீது புதிய வரிகளை விதிக்கும் நோக்கம் கிடையாது என்றும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/313902

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

என்ன இது இன்னும் கூத்து தொடங்கவேயில்லை......அதுக்கிடையில 2028 ஆண்டுமாம்...😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

என்ன இது இன்னும் கூத்து தொடங்கவேயில்லை......அதுக்கிடையில 2028 ஆண்டுமாம்...😁

சொன்னதை சரியாகச் செய்தால் கிடைக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஏராளன் said:

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அதை மக்கள்தான் முடிவெடுப்பார்கள்.
இது போன்று ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஆளும் தரப்பிலிருந்து விடப்படும் அறிவிப்புகள் வரப்போகும் சீர்கேட்ட ஆட்சிக்கு பிள்ளையார் சுழி போடாமல் பார்த்து நடந்தால் அனைவருக்கும் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

என்ன இது இன்னும் கூத்து தொடங்கவேயில்லை......அதுக்கிடையில 2028 ஆண்டுமாம்...😁

புதுப் பட்டுவேட்டியும்..சட்டையும் போட்டிருக்கிறார் ..உப்பிடித்தான் கதைப்பார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, alvayan said:

புதுப் பட்டுவேட்டியும்..சட்டையும் போட்டிருக்கிறார் ..உப்பிடித்தான் கதைப்பார்

கிந்தியா அனுரவிற்கு இவ்வளவு ராஜ மரியாதை கொடுக்கின்றது எனும் போதுதான் ஈழத்தமிழனாகிய எனக்கு பதட்டம் ஏற்படுகின்றது.

இலங்கை பழைய ஜானாதிபதிகளுக்கு இவ்வளவு தாரை தம்பட்ட வரவேற்புகள் இருந்ததில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

கிந்தியா அனுரவிற்கு இவ்வளவு ராஜ மரியாதை கொடுக்கின்றது எனும் போதுதான் ஈழத்தமிழனாகிய எனக்கு பதட்டம் ஏற்படுகின்றது.

இலங்கை பழைய ஜானாதிபதிகளுக்கு இவ்வளவு தாரை தம்பட்ட வரவேற்புகள் இருந்ததில்லை.

வெட்ட முன் தெளிக்கிற மஞ்சள் தண்ணீரோ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, RishiK said:

வெட்ட முன் தெளிக்கிற மஞ்சள் தண்ணீரோ? 

அதே.....

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, RishiK said:

வெட்ட முன் தெளிக்கிற மஞ்சள் தண்ணீரோ? 

அயல் நாடுகளில் தெளிந்த நீரோடை என்பது கிந்தியனுக்கு கெட்ட கனவு. அவனுக்கு அயலவன் நிம்மதியாக வாழ பிடிக்காது.

a group of people are standing around a man in a green shirt and white skirt .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

கிந்தியா அனுரவிற்கு இவ்வளவு ராஜ மரியாதை கொடுக்கின்றது எனும் போதுதான் ஈழத்தமிழனாகிய எனக்கு பதட்டம் ஏற்படுகின்றது.

இலங்கை பழைய ஜானாதிபதிகளுக்கு இவ்வளவு தாரை தம்பட்ட வரவேற்புகள் இருந்ததில்லை.

தகுதிக்கு எற்ற. மதிப்பு    தகுதி படிப்பை மட்டுமே குறிக்கவில்லை   

அரசியல்வாதிகளுக்கு    மக்கள் ஆதரவு 

நேர்மை எளிமை  தேவையானபோது விட்டு கொடுத்து  தீர்மானங்கள் திட்டங்களை  நிறைவு செய்தல். ....

............ இப்படி பல காரணங்கள் உண்டு” 

கொடுத்த வரவேற்புக்கு  அனுர பொருத்தமானவர்  தான் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ஏராளன் said:

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வரும் தோழரே....இன்னும் 30 வருடங்களுக்கு உங்கள் கட்சியின் ஆட்சிதான் ...அதுசரி அடுத்த தேர்தலில் ஜனாதிபதியாக இருப்பியளோ பிரதமராக இருப்பியளோ ....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, Kandiah57 said:

தகுதிக்கு எற்ற. மதிப்பு    தகுதி படிப்பை மட்டுமே குறிக்கவில்லை   

அரசியல்வாதிகளுக்கு    மக்கள் ஆதரவு 

நேர்மை எளிமை  தேவையானபோது விட்டு கொடுத்து  தீர்மானங்கள் திட்டங்களை  நிறைவு செய்தல். ....

............ இப்படி பல காரணங்கள் உண்டு” 

கொடுத்த வரவேற்புக்கு  அனுர பொருத்தமானவர்  தான் 

தமிழ் மக்களுடன் சேர்ந்த ஏகோபித்த ஆதரவுடன் அனுரவின் வெற்றி கிந்தியாவை கொஞ்சம் கலங்க வைத்து விட்டது. ஏனென்றால் கிந்தியாயின் அரசியல் துருப்பு சீட்டு ஈழத்தமிழர்கள் அல்லவா. அவர்களே சிங்கள கட்சிக்கு ஏகோபித்த ஆதரவு தெரிவித்தால்......கிந்தியன் ஆட்டம் போட சீட்டு ஏதுமில்லையே.....👈 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, Kandiah57 said:

தகுதிக்கு எற்ற. மதிப்பு    தகுதி படிப்பை மட்டுமே குறிக்கவில்லை   

அரசியல்வாதிகளுக்கு    மக்கள் ஆதரவு 

நேர்மை எளிமை  தேவையானபோது விட்டு கொடுத்து  தீர்மானங்கள் திட்டங்களை  நிறைவு செய்தல். ....

............ இப்படி பல காரணங்கள் உண்டு” 

கொடுத்த வரவேற்புக்கு  அனுர பொருத்தமானவர்  தான் 

இந்தியாவுக்கு போக முதல் இந்திய எதிர்ப்பு போய் வந்த பின்பு அதாணி குழுமத்தின்  திட்டங்களை அமுல் படுத்த தீயா வேலை செய்வதாக தெரிகிறது .....நல்ல தெளிவா தோழர் செயல் படுகிறார் ..



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொதுவாக முழுவதையும் நீக்குவதில்லை. சில பகுதிகளை, சொற்களை மட்டுமே நீக்குவதாக சொல்லுவார்கள். 'அவைக்குறிப்பிலிருந்து இந்தச் சொல் நீக்கப்பட்டது............' என்று தமிழ்நாட்டுச் செய்திகளில் பார்த்திருக்கின்றேன். ஆனால், அர்ச்சுனா முறையான அனுமதியே இல்லாமல் அந்த விடயத்தை பேசினார் என்று வரும் போது, முழுவதையும் நீக்கினாலும் ஆச்சரியம் இல்லை.  100 மில்லியன் ரூபாய்கள் கேட்டு சத்யன் வழக்கு தொடர்ந்திருக்கின்றார்............... இந்த நிலையில் அவைக்குறிப்பு இல்லாமல் போனாலும் நல்லது தான்..............  
    • இந்தியாவுக்கு போக முதல் இந்திய எதிர்ப்பு போய் வந்த பின்பு அதாணி குழுமத்தின்  திட்டங்களை அமுல் படுத்த தீயா வேலை செய்வதாக தெரிகிறது .....நல்ல தெளிவா தோழர் செயல் படுகிறார் ..
    • அவர் ஒருவர் சல்லி சல்லி ஆக்கும்போது   இந்த படத்திலுள்ள. மற்றவர்கள் எல்லோரும் தமிழரசு கட்சியில். தானே இருந்தார்கள்    !     என்ன செய்து கொண்டு இருந்தார்கள்  ???  தட்டி கேட்டாகள???  இல்லை   .இப்பவும்  அவர் நினைத்தபடி தான் எல்லாம் நடக்கிறது  .. தட்டி கேட்பது கிடையாது   அவர் சொல்லு கேட்டு   செய்து  ஒரு தொழில்சாலை ஊழியர்கள் போல் நடத்து  வருகிறார்கள்    பயம். அங்கத்துவம் பறிபோகும் என்ற பயம்.  உந்த. கட்சியை  காட்சியை. விட்டு தள்ளுங்கள்.    எங்களுக்கு அர்ச்சுனா.   இருக்கிறார் 🤣😂.    இப்படிக்கு   .............வாலு.      இடைவெளியை உங்கள் விருப்பம் போல. நிரப்பவும். 🙏
    • 30 இலட்சம் மக்களை தமிழ்த்தேசியத்திற்காக ஓருங்கிணைத்து  புலிகளைப் பற்றியே டபேசப் பயந்த  தமிழகத்தில் புலிகளையும் மாவீரர்களையும் தமிழ்த்தேசியத்தலைவரின் பட்ததையும் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்ற சீமான் மோசமான அரசியல்வாதி. ஆனால் ஈழத்தில் இனப்படுகொலை ஊச்சத்தில் இருந்த போது மகள் கனிமொழிக்கு மந்திரிப்பதவி கேட்டு டெல்லக்கு பறந்த ஊழல்வாதி  குடும்பக்கட்சி நடத்திய கருணாநிதியைுயும் சுpமானையும் ஒரே மாதிரி  எடை போடுவது எப்படி? சுமத்திரன் தோற்கடிக்கப்பட்ட கடுப்பில் எரியுதடிமாலா!!!!
    • தமிழ் மக்களுடன் சேர்ந்த ஏகோபித்த ஆதரவுடன் அனுரவின் வெற்றி கிந்தியாவை கொஞ்சம் கலங்க வைத்து விட்டது. ஏனென்றால் கிந்தியாயின் அரசியல் துருப்பு சீட்டு ஈழத்தமிழர்கள் அல்லவா. அவர்களே சிங்கள கட்சிக்கு ஏகோபித்த ஆதரவு தெரிவித்தால்......கிந்தியன் ஆட்டம் போட சீட்டு ஏதுமில்லையே.....👈 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.