Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை நாடாளுமன்றிற்கு விடுத்து இன்று பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

2028 ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாகன இறக்குமதிக்கான அனுமதி மூன்று வழிமுறைகளில் வழங்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டு முதல் உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தம் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சேவை ஏற்றுமதி மீதான வரி 15 சதவீதமாக அமுல்படுத்தப்படும் என்றும், குறைந்த வருமானம் பெறுவோர் மீது புதிய வரிகளை விதிக்கும் நோக்கம் கிடையாது என்றும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/313902

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஏராளன் said:

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

என்ன இது இன்னும் கூத்து தொடங்கவேயில்லை......அதுக்கிடையில 2028 ஆண்டுமாம்...😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

என்ன இது இன்னும் கூத்து தொடங்கவேயில்லை......அதுக்கிடையில 2028 ஆண்டுமாம்...😁

சொன்னதை சரியாகச் செய்தால் கிடைக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அதை மக்கள்தான் முடிவெடுப்பார்கள்.
இது போன்று ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஆளும் தரப்பிலிருந்து விடப்படும் அறிவிப்புகள் வரப்போகும் சீர்கேட்ட ஆட்சிக்கு பிள்ளையார் சுழி போடாமல் பார்த்து நடந்தால் அனைவருக்கும் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

என்ன இது இன்னும் கூத்து தொடங்கவேயில்லை......அதுக்கிடையில 2028 ஆண்டுமாம்...😁

புதுப் பட்டுவேட்டியும்..சட்டையும் போட்டிருக்கிறார் ..உப்பிடித்தான் கதைப்பார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, alvayan said:

புதுப் பட்டுவேட்டியும்..சட்டையும் போட்டிருக்கிறார் ..உப்பிடித்தான் கதைப்பார்

கிந்தியா அனுரவிற்கு இவ்வளவு ராஜ மரியாதை கொடுக்கின்றது எனும் போதுதான் ஈழத்தமிழனாகிய எனக்கு பதட்டம் ஏற்படுகின்றது.

இலங்கை பழைய ஜானாதிபதிகளுக்கு இவ்வளவு தாரை தம்பட்ட வரவேற்புகள் இருந்ததில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வெட்ட முன் தெளிக்கிற மஞ்சள் தண்ணீரோ? 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, RishiK said:

வெட்ட முன் தெளிக்கிற மஞ்சள் தண்ணீரோ? 

அதே.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, RishiK said:

வெட்ட முன் தெளிக்கிற மஞ்சள் தண்ணீரோ? 

அயல் நாடுகளில் தெளிந்த நீரோடை என்பது கிந்தியனுக்கு கெட்ட கனவு. அவனுக்கு அயலவன் நிம்மதியாக வாழ பிடிக்காது.

a group of people are standing around a man in a green shirt and white skirt .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கிந்தியா அனுரவிற்கு இவ்வளவு ராஜ மரியாதை கொடுக்கின்றது எனும் போதுதான் ஈழத்தமிழனாகிய எனக்கு பதட்டம் ஏற்படுகின்றது.

இலங்கை பழைய ஜானாதிபதிகளுக்கு இவ்வளவு தாரை தம்பட்ட வரவேற்புகள் இருந்ததில்லை.

தகுதிக்கு எற்ற. மதிப்பு    தகுதி படிப்பை மட்டுமே குறிக்கவில்லை   

அரசியல்வாதிகளுக்கு    மக்கள் ஆதரவு 

நேர்மை எளிமை  தேவையானபோது விட்டு கொடுத்து  தீர்மானங்கள் திட்டங்களை  நிறைவு செய்தல். ....

............ இப்படி பல காரணங்கள் உண்டு” 

கொடுத்த வரவேற்புக்கு  அனுர பொருத்தமானவர்  தான் 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வரும் தோழரே....இன்னும் 30 வருடங்களுக்கு உங்கள் கட்சியின் ஆட்சிதான் ...அதுசரி அடுத்த தேர்தலில் ஜனாதிபதியாக இருப்பியளோ பிரதமராக இருப்பியளோ ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, Kandiah57 said:

தகுதிக்கு எற்ற. மதிப்பு    தகுதி படிப்பை மட்டுமே குறிக்கவில்லை   

அரசியல்வாதிகளுக்கு    மக்கள் ஆதரவு 

நேர்மை எளிமை  தேவையானபோது விட்டு கொடுத்து  தீர்மானங்கள் திட்டங்களை  நிறைவு செய்தல். ....

............ இப்படி பல காரணங்கள் உண்டு” 

கொடுத்த வரவேற்புக்கு  அனுர பொருத்தமானவர்  தான் 

தமிழ் மக்களுடன் சேர்ந்த ஏகோபித்த ஆதரவுடன் அனுரவின் வெற்றி கிந்தியாவை கொஞ்சம் கலங்க வைத்து விட்டது. ஏனென்றால் கிந்தியாயின் அரசியல் துருப்பு சீட்டு ஈழத்தமிழர்கள் அல்லவா. அவர்களே சிங்கள கட்சிக்கு ஏகோபித்த ஆதரவு தெரிவித்தால்......கிந்தியன் ஆட்டம் போட சீட்டு ஏதுமில்லையே.....👈 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kandiah57 said:

தகுதிக்கு எற்ற. மதிப்பு    தகுதி படிப்பை மட்டுமே குறிக்கவில்லை   

அரசியல்வாதிகளுக்கு    மக்கள் ஆதரவு 

நேர்மை எளிமை  தேவையானபோது விட்டு கொடுத்து  தீர்மானங்கள் திட்டங்களை  நிறைவு செய்தல். ....

............ இப்படி பல காரணங்கள் உண்டு” 

கொடுத்த வரவேற்புக்கு  அனுர பொருத்தமானவர்  தான் 

இந்தியாவுக்கு போக முதல் இந்திய எதிர்ப்பு போய் வந்த பின்பு அதாணி குழுமத்தின்  திட்டங்களை அமுல் படுத்த தீயா வேலை செய்வதாக தெரிகிறது .....நல்ல தெளிவா தோழர் செயல் படுகிறார் ..

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

தமிழ் மக்களுடன் சேர்ந்த ஏகோபித்த ஆதரவுடன் அனுரவின் வெற்றி கிந்தியாவை கொஞ்சம் கலங்க வைத்து விட்டது. ஏனென்றால் கிந்தியாயின் அரசியல் துருப்பு சீட்டு ஈழத்தமிழர்கள் அல்லவா. அவர்களே சிங்கள கட்சிக்கு ஏகோபித்த ஆதரவு தெரிவித்தால்......கிந்தியன் ஆட்டம் போட சீட்டு ஏதுமில்லையே.....👈 

ஈழத்தமிழன் என்பதை விட "சிறிலங்கன் இந்து" என்ற அடையாளத்துடன் அரசியல் நடத்துவதை இந்தியா விரும்புகின்றது ...அதற்காக இந்தியா நன்றாகவே செயல் படுகின்றது.,,ஈழத்தமிழர் என்ற அடையாளத்தை நாம் இழந்து சிறிலங்கன் என்ற அடையாளத்தை பெறுவது சிங்கள்வனை விட இந்திய கொள்கை வகுப்பாளருக்கு மிகவும் மகிழ்ச்சி தரும்  செயலாக இருக்கும்...

இந்து (இந்தியர்கள்) என்ற அடையாளத்துடன் சிறிலங்காவின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து விளையாடுவார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, putthan said:

ஈழத்தமிழன் என்பதை விட "சிறிலங்கன் இந்து" என்ற அடையாளத்துடன் அரசியல் நடத்துவதை இந்தியா விரும்புகின்றது ...அதற்காக இந்தியா நன்றாகவே செயல் படுகின்றது.,,ஈழத்தமிழர் என்ற அடையாளத்தை நாம் இழந்து சிறிலங்கன் என்ற அடையாளத்தை பெறுவது சிங்கள்வனை விட இந்திய கொள்கை வகுப்பாளருக்கு மிகவும் மகிழ்ச்சி தரும்  செயலாக இருக்கும்...

இந்து (இந்தியர்கள்) என்ற அடையாளத்துடன் சிறிலங்காவின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து விளையாடுவார்

தமிழன் இந்துவாகவும் சிங்களவன் பௌத்தனாகவும் இருக்கட்டும்.
இலங்கை  தமிழன் சகல உரிமையுடனும் வாழணும். அதை உங்கள்  தோழர் செய்து கொடுப்பாரா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் முன்னைய ஜனாதிபதிகளுக்கு முப்படைகளின் பாதுகாப்பு கொடுப்பதற்கு கடந்த ஒரு வருடத்தில் செலவான தொகை........................ கிட்டத்தட்ட 1500 மில்லியன் ரூபாய்கள். இது ஒவ்வொரு வருடமும் நடந்து கொண்டிருந்தது. 

முப்படைகளின் பாதுகாப்பை இப்பொழுது தூக்கியாகிவிட்டது. சில போலீஸ்காரர்கள் மட்டுமே இப்பொழுது பாதுகாப்பு கொடுக்கின்றார்கள்......

ரம்மி விளையாட்டில் (13 சீட்டு) கிடைக்கும் ஜோக்கர் கார்ட்டுகள் போன்றவை இந்த விடயங்கள்......... ஓரளவு நல்ல கார்ட்டுகளுடன், இவற்றையும் இடைக்கிடை செருகினால்............... 2028 இலும் டிக் தான்................ 

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

தகுதிக்கு எற்ற. மதிப்பு    தகுதி படிப்பை மட்டுமே குறிக்கவில்லை   

அரசியல்வாதிகளுக்கு    மக்கள் ஆதரவு 

நேர்மை எளிமை  தேவையானபோது விட்டு கொடுத்து  தீர்மானங்கள் திட்டங்களை  நிறைவு செய்தல். ....

............ இப்படி பல காரணங்கள் உண்டு” 

கொடுத்த வரவேற்புக்கு  அனுர பொருத்தமானவர்  தான் 

இது வாலில்லை, தலைதான்! பயம் தெளிஞ்சு போச்சுது போல. 

கோசானுக்கு தெரியுமோ இந்த விஷயம்?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

தமிழன் இந்துவாகவும் சிங்களவன் பௌத்தனாகவும் இருக்கட்டும்.
இலங்கை  தமிழன் சகல உரிமையுடனும் வாழணும். அதை உங்கள்  தோழர் செய்து கொடுப்பாரா?

இப்பவும் சம உரிமை இருக்கு தமிழனுக்கு ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் தான் சிக்கல்..அனுராவும் அவரின்ட தோழர்களும் சம் ஔரிமை பற்றி பேசிவிட்டு போய்விடுவார்கள் அதன் பின் வேறு ஆட்சியாளர்கள் வந்தால் என்ன நடக்கும்.....மாகாணசபையை கொடுப்பதற்கு பயப்படும் இவர்கள் எப்படி தமிழ மக்களின் அரசியல் உரிகமைகளை கொடுக்கப்ப போகின்ற்னர்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

மாற்ற முடியாத அரசியல் என்று தமிழருக்கு சாதகமானவையை  நீக்கி யாப்பு வடிச்சு வைச்சிருக்கினமெல்லோ, அப்படி, வலுவான, மாற்றமுடியாத, அசைக்க முடியாத சட்டமாக இயற்றி, நடைமுறைப்படுத்தவேண்டும் இவரது காலத்திலேயே. இவர் சொன்னவற்றை  நிறைவேற்றினால்; இவர்தான்  சதாகால ஜனாதிபதி! சின்னப்பொடியன்தானே, காலம் நிறைய இருக்கு அவருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

கிந்தியா அனுரவிற்கு இவ்வளவு ராஜ மரியாதை கொடுக்கின்றது எனும் போதுதான் ஈழத்தமிழனாகிய எனக்கு பதட்டம் ஏற்படுகின்றது.

இலங்கை பழைய ஜானாதிபதிகளுக்கு இவ்வளவு தாரை தம்பட்ட வரவேற்புகள் இருந்ததில்லை.

11 hours ago, RishiK said:

வெட்ட முன் தெளிக்கிற மஞ்சள் தண்ணீரோ? 

11 hours ago, alvayan said:

அதே.....

இதே இந்தியாதான் இவர் ஆட்சிக்கு வரக்கூடாதென்பதற்காக ரணிலையும் சஜித்தையும் கூட்டணி வைக்க முயற்சித்தது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, satan said:

மாற்ற முடியாத அரசியல் என்று தமிழருக்கு சாதகமானவையை  நீக்கி யாப்பு வடிச்சு வைச்சிருக்கினமெல்லோ, அப்படி, வலுவான, மாற்றமுடியாத, அசைக்க முடியாத சட்டமாக இயற்றி, நடைமுறைப்படுத்தவேண்டும் இவரது காலத்திலேயே. இவர் சொன்னவற்றை  நிறைவேற்றினால்; இவர்தான்  சதாகால ஜனாதிபதி! சின்னப்பொடியன்தானே, காலம் நிறைய இருக்கு அவருக்கு.

எந்த சிங்கள் ஆட்சியாளர்களும் துணிந்து தமிழர் நலன் சார்பான அரசமைப்பை உருவாக்க மாட்டார்கள் ...பார்ப்போம் ...காலம் பதில் சொல்லட்டும்..

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, satan said:

மாற்ற முடியாத அரசியல் என்று தமிழருக்கு சாதகமானவையை  நீக்கி யாப்பு வடிச்சு வைச்சிருக்கினமெல்லோ, அப்படி, வலுவான, மாற்றமுடியாத, அசைக்க முடியாத சட்டமாக இயற்றி, நடைமுறைப்படுத்தவேண்டும் இவரது காலத்திலேயே. இவர் சொன்னவற்றை  நிறைவேற்றினால்; இவர்தான்  சதாகால ஜனாதிபதி! சின்னப்பொடியன்தானே, காலம் நிறைய இருக்கு அவருக்கு.

அவர் நிறைவேற்றுவதாக கூறியவை எவை? நான் நினைகிறேன் அவர் கூறிய விடயங்கள் பொதுச்சேவையின் தரத்தினை உயர்த்தல், ஊழல் அற்ற ஆட்சி, பயங்கரவாத தடை சட்ட நீகம், பொருளாதார வளர்ச்சி, சிறுபான்மையினரின் மொழியுரிமை.

இதற்கு முன்னரிருந்த ஜனாதிபதிகள் இதனைவிட ஜனரஞ்சகமான வாக்குறுதிகளை வழங்கினார்கள், பொதுச்சேவை தரமுயர்த்தல், அபிவிருத்தி, பயங்கரவாத தடைசட்டம் நீக்கம், இனப்பிரச்சினை தீர்வு, ஜனாதிபதி முறைமை நீக்கம் என்பவை இலங்கை அரசியலின் வழமையான cliche தானே?

எனக்கு தெரிந்து புதிதாக புதிய ஜனாதிபதி எதுவும் கூறிய மாதிரி தெரியவில்லை, அல்லது நான் ஏதாவதை தவற விட்டுள்ளேனா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

எனக்கு தெரிந்து புதிதாக புதிய ஜனாதிபதி எதுவும் கூறிய மாதிரி தெரியவில்லை, அல்லது நான் ஏதாவதை தவற விட்டுள்ளேனா?

இல்லை நீங்கள் எதையும் தவறவிடவில்லை.

தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்? என்ற ரஞ்சித் அண்ணாவின் கட்டுரை இவர்களை பற்றி அறிந்து கொள்ள உதவும்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

முன்னரிருந்த ஜனாதிபதிகள் இதனைவிட ஜனரஞ்சகமான வாக்குறுதிகளை வழங்கினார்கள், பொதுச்சேவை தரமுயர்த்தல், அபிவிருத்தி, பயங்கரவாத தடைசட்டம் நீக்கம், இனப்பிரச்சினை தீர்வு, ஜனாதிபதி முறைமை நீக்கம் என்பவை இலங்கை அரசியலின் வழமையான cliche தானே?

அப்படித்தான் நினைத்தாலும், இங்கு ஒருவர், இவர் சொன்னதை மட்டும் தூக்கிக்கொண்டு மேடைபோட்டு விமர்ச்சிக்கிறார். அதனாலஅனுரா நடைமுறைப்படுத்தினாலும் படுத்தலாம்.  அல்லாட்டி சிங்கன் குடைச்சல் கொடுத்து, வழக்கு போட்டு பதவிவிலக வைத்துவிடுவார்.  அனுரா இவரை உள்ளுக்கு இழுக்குமட்டும், சிறிதரன் பதவி விலகுமட்டும் திரும்பத் திரும்ப பழைய சீலை கிழிஞ்ச மாதிரித்தான். ஆடின காலும் பாடின வாயும் சும்மா இராது கண்டியளோ! இன்னும் கொஞ்ச நாளில் தன்னிலேதான் கதைக்க வேண்டி வரப்போகுது. மக்கள் எத்தனை அல்லோல கல்லோல பட்டார்கள், வைத்தியசாலை அதிகாரிகளின் முறைகேடுகளால், இன்னும் பல ஊழல்களால். அதை கவனிக்க நேரமில்லை விரும்பவில்லை, தைரியமில்லை. தனக்கு கதிரை கிடைக்கேல என்கிற கடுப்பில் உளறிக்கொண்டு திரியிறார்.   

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

இவரைப் பிடித்து ஒரு மாகாண ஆளுனராக நியமிக்க முடியுமா என்று அனுராவைக் கேட்டால் போச்சு. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.