Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
18 DEC, 2024 | 04:19 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனா யாழ். வைத்தியசாலை தொண்டர்  அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து சபைக்கு முரணான வகையிலும் நிலையியற் கட்டளைகளுக்கு முரணாகவும் உரையாற்றியதால் அவரின் உரை  சபாநாயகரால் ஹன்சாட் பதிவிலிருந்து  நீக்கப்பட்டது.

பாராளுமன்றம் புதன்கிழமை (18) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில்  கூடியது. இதனையடுத்து நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா வேளையின்போது  பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணம் வைத்தியசாலை தொண்டர்  அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்க சபாநாயகர் அனுமதியளித்தார்.

முதலில் யாழ். வைத்தியசாலை தொண்டர்  அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் தெளிவாக பேசிய அர்ச்சுனா பின்னர், தடம் மாறி நிலையியற்கட்டளைகளுக்கும் சபைக்கு முரணாகவும் பேசத் தொடங்கினார். அப்போது சில தடவைகள் குறுக்கிட்ட சபாநாயகர், விசேட கூற்று தொடர்பான ஆவணத்தில் என்ன இருக்கின்றதோ அதை மட்டும் பேசுமாறு வலியுறுத்தியபோதும் அர்ச்சுனா அதனை கவனத்தில் கொள்ளவில்லை.

யாழ். போதனா  வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மீது  கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எம்.பி. அர்ச்சுனா, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  ஆகியோரையும்  கடுமையாக  விமர்சித்தார்.  இதன்போது சபாநாயகரால் அர்ச்சுனா எம்.பி.க்கு மீண்டும்  எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரும் அரச தரப்பினரும் அர்ச்சுனா எம்.பி.யுடன் முரண்படத் தொடங்கினர்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ந்து விடயத்துக்கு முரணாகவே கூச்சலிட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது எழுந்த சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்னாயக்க, அர்ச்சுனா எம்.பி. யாழ். வைத்தியசாலை தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்கின்றார்.  ஆனால், விசேட கூற்றை முன்வைப்பதாயின் அதனுடன் தொடர்புபட்ட அமைச்சருக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். ஆனால், இந்த கூற்று தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு     அறிவிக்கப்படவில்லை. ஆகையால், இவருக்கு பாராளுமன்ற செயலாளர் எவ்வாறு கூற்றை முன்வைக்க அனுமதித்தார் எனக் கேட்கின்றேன் அத்துடன், இவர் விடயத்துக்கு முரணாக பேசும் விடயங்கள் தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இவ்வாறு சபை முதல்வர் கூறிக்கொண்டிருந்தபோதும் அர்ச்சுனா எம்.பி. கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரின்  நிலையியற்கட்டளைகளுக்கு முறையான கருத்துக்களை ஹன்சாட்  பதிவிலிருந்து நீக்குமாறு   சபாநாயகர் அறிவித்தார்.

https://www.virakesari.lk/article/201578

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடையும் போச்சா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, ஏராளன் said:
 

இவ்வாறு சபை முதல்வர் கூறிக்கொண்டிருந்தபோதும் அர்ச்சுனா எம்.பி. கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்.

'கங்குவா' படம் தான்.............🫣.

மாவை பாராளுமன்றில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ஒரு சாதனை  இருப்பதாகச் சொல்வார்கள்........அர்ச்சுனாவும் ஐந்து வருடங்களில் ஒரு சாதனை வைக்கப் போகின்றார்........... அதிகப் பேச்சுகள் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கப்பட்டதாக...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரியாக உணர்ச்சிவயப்படுகின்றார், கவுன்சலிங் தேவை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, RishiK said:

சரியாக உணர்ச்சிவயப்படுகின்றார், கவுன்சலிங் தேவை. 

இது உளவள ஆலோசனையினால் தீர்க்க இயலாத பிரச்சினை. இது நடத்தைப் பாதிப்பு என்பதை விட நடத்தைக்குக் காரணமான மூளையில் இருக்கும் organic disorder இன் வெளிப்பாடு. இதை வைத்து யூ ரியூபர்களும் வாக்களித்த வினோத விரும்பிகளும் மகிழ்ச்சியடையாமல் அர்ச்சுனாவை சும்மா இருக்க விடுவதே தீர்வு.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊரிலை “உசார் மடையன்” எண்டு கேள்விப்பட்டிருப்பியள்.  ஆளை ஊரிலை உள்ள வப்புகள் எல்லாஞ்சேர்ந்து உசாரேத்தி பப்பாமர உச்சியிலை  ஏத்திவிட்டிருவானுகள். ஏறின ஆளுக்கு ஏறினாப் பிறகுதான் தெரியும் தனக்கு இறங்கத் தெரியாது எண்டு. இப்ப கீழை பார்த்தால் உசார் ஏத்தின வப்புகள் எல்லாம் (கொழும்புக்கும் வெளிநாட்டுக்கும்) எஸ்க்கேப் ஆயிருப்பானுகள். 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரச்சனாவுக்கு பாராளுமன்ற நடை முறைகளோ நிலையியற் கட்டளைகள் பற்றியோ, பன்மைத்துவ அரங்கில் எப்படி உரையாற்ற வேண்டும் என்பதோ தெரியாது என்றில்லை. ஆனால்  இவரது Fan group  இற்கும் இவரை தேர்தெடுத்தவர்களுக்கும் இது பற்றிய அறிவு கிஞ்சித்தும் கிடையாது என்பதை நன்றாக அறிந்து அவர்களை திருப்திப்படுத்த மட்டுமே உரையாற்றுகிறார்.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாலி said:

ஊரிலை “உசார் மடையன்” எண்டு கேள்விப்பட்டிருப்பியள்.  ஆளை ஊரிலை உள்ள வப்புகள் எல்லாஞ்சேர்ந்து உசாரேத்தி பப்பாமர உச்சியிலை  ஏத்திவிட்டிருவானுகள். ஏறின ஆளுக்கு ஏறினாப் பிறகுதான் தெரியும் தனக்கு இறங்கத் தெரியாது எண்டு. இப்ப கீழை பார்த்தால் உசார் ஏத்தின வப்புகள் எல்லாம் (கொழும்புக்கும் வெளிநாட்டுக்கும்) எஸ்க்கேப் ஆயிருப்பானுகள்

ஏற்றும்போது விசில் அடித்து கத்தியையும் குடுத்து தானே ஏத்துறது.

பிறகு, பாபா காய் குலுங்கும் தண்டு பகுதியை வெட்டி பார் கீழே போடு என்று ...  



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.