Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் செய்வதெல்லாம் களவு இனி செய்ய மாட்டேன்.மற்றவர்களும் செய்யாதீர்கள் என்று கம்பனியை விட்டுப் போன இளைஞன் மரணம்.

பொலிஸ் ரிப்போட்டும் தற்கொலை என்கிறது.

ஆனால் குடும்பத்தார் இது கொலை என்று தனி விசாரணைப்படையின் உதவியுடன் விசாரணை தொடர்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@ரசோதரன்

இதைப்பற்றிய மேலதிக தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

உறவுகளுக்கு விளக்கமாக சொல்லலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

இதேபோல ஒரு இறப்பு ரஸ்யாவிலோ அல்லது சீனாவிலோ இடம்பெற்றிருந்தால் யாழ் களமே அதகளப் பட்டிருக்கும். 

🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

OpenAI_Whistleblower_Death_77670.jpg

The mother of Suchir Balaji, a 26-year-old former OpenAI researcher who was found dead after accusing the company of violating copyright laws, alleged that her son was 'murdered' and demanded an FBI investigation into the matter. Poornima Rao, the mother of Suchir Balaji, claimed that her son's death was a "cold-blooded murder declared by authorities as suicide."

She also mentioned that a private autopsy report differed from the initial police report.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

இதேபோல ஒரு இறப்பு ரஸ்யாவிலோ அல்லது சீனாவிலோ இடம்பெற்றிருந்தால் யாழ் களமே அதகளப் பட்டிருக்கும். 

🤣

இது கொலை என்று நிரூபணமானால் பொலிசாருக்கும் பிரச்சனைகள் வரலாம்.

உடனேயே ஒரு ஸ்ராட்அப் கம்பனியும் தொடங்கியுள்ளார்.

பல கம்பனிகள் மில்லியன் டொலர்கள் முதலீடு செய்திருக்கலாம்.

இதற்குள்ளாலும் பிரச்சனைகள் வந்திருக்கலாம்.

உண்மை தான் கப்பிதான்.

ஆனால் இங்கு என்றபடியால் திரும்ப விசாரணையாவது செய்ய முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

@ரசோதரன்

இதைப்பற்றிய மேலதிக தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

உறவுகளுக்கு விளக்கமாக சொல்லலாமே.

இதை ஒரு செய்தியாகவே அறிந்திருந்தேன், அண்ணா. இதை ஒரு கொலை என்னும் கோணத்தில் முதலில் நினைத்திருக்கவில்லை. ஆனால், இது ஒரு கொலையாக இருப்பதற்கும் சாத்தியங்கள் இருக்கின்றன.

சில மாதங்களின் முன், எழுத்தாளர் ஜெயமோகன் எல்லா செயற்கை நுண்ணறிவு தகவல் திரட்டிகளையும் திருட்டுத் தகவல் திரட்டிகள் என்று குறிப்பிட்டிருந்தார். பாலாஜியின் மரணத்தின் முன்னரேயே, பாலாஜியுடன் ஒரு தொடர்பும் இல்லாமலேயே அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார். ஜெயமோகன் ஒரு படைப்பாளியாக அவருக்கு காப்புரிமை உள்ள அவரது படைப்புகள் எவ்வாறு இந்த தகவல் திரட்டிகளால் திரட்டப்பட்டு, உருமாற்றப்பட்டோ அல்லது உருமாற்றப்படாமலேயோ பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை வைத்து இப்படி ஒரு முடிவிற்கு வந்திருந்தார்.

யுவன் சங்கர் ராஜாவும் பின்னர் இதைப்பற்றி, தன் அனுபவத்தை ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

இதையே தான் காப்புரிமைகளை வைத்திருக்கும் எந்த படைப்பாளியும் சொல்வார்கள் என்று தான் நானும் நினைக்கின்றேன். எழுத்தோ, ஓவியமோ, இசையோ, மென்பொருள் நிரல்களோ........... எதுவென்றாலும் இன்று திருட்டுப் போவது தடுக்கப்பட முடியாததாக இருக்கின்றது. சட்டதிட்டங்கள் மிகவும் மேம்போக்காக, பழைய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையிலேயே உள்ளது. புதிதாக மிகவும் கறாரான ஒழுங்குமுறைகள் உருவாக்கப்படவேண்டும். இது முதலில் அமெரிக்காவிலேயே நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

பாலாஜி இதையே தான் சொல்லியிருந்தார். அவரின் வேலை அனுபவத்தில் இருந்து மிக உறுதியான ஆதாரங்களை காட்டியிருக்கின்றார். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், சில முக்கியஸ்தர்கள் மற்றும் பேராசிரியர்களும் பாலாஜியின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுவான, 'உலகம் முன்னுக்குப் போகின்றது.............. நீ முட்டுக்கட்டை போடாதே...........' என்பது போன்ற அடிப்படையுடன், அவர்களின் புத்திக்கூர்மையையும் சேர்த்து திருட்டு என்று சொல்லப்படுவதை அது திருட்டே இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

எலான் மஸ்க்கும் பாலாஜியின் மரணம் தான் கொலை போன்று தெரிகின்றது என்று சொல்லியிருக்கின்றாரே தவிர, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும், அதில் இருக்கும் குறைபாடுகளையும் பற்றிக் கதைக்கவில்லை. அவரே இதில் மிகப்பெரிய ஒரு நிறுவனம் வைத்துள்ளார். எந்த எல்லைவரை போயும் இவர்கள் பணம் சேர்ப்பார்கள்.  

மிக மிகத் திறமையான ஒரு இளைஞன் இழக்கப்பட்டது மிகவும் வருத்தமான ஒரு நிகழ்வு. அச்சு அசலாக இங்கிருக்கும் பல பிள்ளைகள் போன்றே கள்ளம் கபடமற்ற, உள்ளுக்குள் நிகழ்ச்சிநிரல்கள் வைத்துக் கொள்ளாமல், சரியென்று தோன்றுவதை சரியென்றும், பிழையென்று தோன்றுவதை பிழையென்றும் சொல்லும் அறம் தெரிந்த பிள்ளை................🙏

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இது கொலை என்று நிரூபணமானால் பொலிசாருக்கும் பிரச்சனைகள் வரலாம்.

உடனேயே ஒரு ஸ்ராட்அப் கம்பனியும் தொடங்கியுள்ளார்.

பல கம்பனிகள் மில்லியன் டொலர்கள் முதலீடு செய்திருக்கலாம்.

இதற்குள்ளாலும் பிரச்சனைகள் வந்திருக்கலாம்.

உண்மை தான் கப்பிதான்.

ஆனால் இங்கு என்றபடியால் திரும்ப விசாரணையாவது செய்ய முடிகிறது.

பிற நாடுகளில் விசாரணை நடைபெறாது என்பது நிச்சயம் என்று என்னால் உறுதிபடக் கூற முடியாது. ஏனென்றால் அங்கே எவ்வாறு செயற்படுகிறார்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான் கப்பிதான்.

ஆனால் இங்கு என்றபடியால் திரும்ப விசாரணையாவது செய்ய முடிகிறது.

அது ...ரஸ்யாவில் நீதிமன்றுக்கு கொண்டு வந்த மூன்று தீவிரவாதிகளின் நிலையை பார்த்தோமல்ல...

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, putthan said:

அது ...ரஸ்யாவில் நீதிமன்றுக்கு கொண்டு வந்த மூன்று தீவிரவாதிகளின் நிலையை பார்த்தோமல்ல...

பாலாஜியின் மரணத்தை தற்கொலை என்கிறது காவற்றுறை. இல்லை, அது கொலை  என்கிறார் பாலாஜியின் தாயார்.  அவரது மரணம் நிச்சயம் தற்கொலையாக இருக்க முடியாது என்று சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த  ஒவ்வொரு மனிதனும் நம்புகிறார்கள். 

பாலாஜிக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறீர்களா? 

whistle blowers க்கு மேற்குலகில்  வழங்கப்படும் தண்டனைகளைப் பார்க்கும்போது  ரஸ்யாவையும் சீனாவையும் குறை சொல்ல  இங்கே யாருக்கும் அருகதை இல்லை. 

அதிகார வர்க்கம் எப்போதும் ஒரே விதமாகத்தான் செயற்படும். 

அது சீனாவாக இருக்கலாம், ரஸ்யாவாக இருக்கலாம் அல்லது USA யாக இருக்கலாம். எல்லோருக்கும் ஒரே முகம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்

தேரை இழுத்துக் கொண்டு போய் தெருவில் விட்டுவிட்டு ஓடி மறைவது போல, எல்லாத் திரிகளும் இப்படியே ஒரே பக்கமாக இழுபட்டுப் போகின்றனவே.......................🤣.

இந்தச் செயற்கை நுண்ணறிவால் கிடைத்துக் கொண்டிருக்கும் சாதக பாதகங்கள், அடுத்த நகர்வு, தேவையான ஒழுங்குமுறைகள் என்று சிலதையாவது இங்கு பகிர்வதற்கு இது ஒரு சந்தர்ப்பம்...............👍.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:
7 hours ago, ஈழப்பிரியன் said:

இங்கு என்றபடியால் திரும்ப விசாரணையாவது செய்ய முடிகிறது.

அது ...ரஸ்யாவில் நீதிமன்றுக்கு கொண்டு வந்த மூன்று தீவிரவாதிகளின் நிலையை பார்த்தோமல்ல..

ரஷ்யாவில் இப்படி பல பார்த்தாகிவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

இதை ஒரு செய்தியாகவே அறிந்திருந்தேன், அண்ணா. இதை ஒரு கொலை என்னும் கோணத்தில் முதலில் நினைத்திருக்கவில்லை. ஆனால், இது ஒரு கொலையாக இருப்பதற்கும் சாத்தியங்கள் இருக்கின்றன.

சில மாதங்களின் முன், எழுத்தாளர் ஜெயமோகன் எல்லா செயற்கை நுண்ணறிவு தகவல் திரட்டிகளையும் திருட்டுத் தகவல் திரட்டிகள் என்று குறிப்பிட்டிருந்தார். பாலாஜியின் மரணத்தின் முன்னரேயே, பாலாஜியுடன் ஒரு தொடர்பும் இல்லாமலேயே அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார். ஜெயமோகன் ஒரு படைப்பாளியாக அவருக்கு காப்புரிமை உள்ள அவரது படைப்புகள் எவ்வாறு இந்த தகவல் திரட்டிகளால் திரட்டப்பட்டு, உருமாற்றப்பட்டோ அல்லது உருமாற்றப்படாமலேயோ பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை வைத்து இப்படி ஒரு முடிவிற்கு வந்திருந்தார்.

யுவன் சங்கர் ராஜாவும் பின்னர் இதைப்பற்றி, தன் அனுபவத்தை ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

இதையே தான் காப்புரிமைகளை வைத்திருக்கும் எந்த படைப்பாளியும் சொல்வார்கள் என்று தான் நானும் நினைக்கின்றேன். எழுத்தோ, ஓவியமோ, இசையோ, மென்பொருள் நிரல்களோ........... எதுவென்றாலும் இன்று திருட்டுப் போவது தடுக்கப்பட முடியாததாக இருக்கின்றது. சட்டதிட்டங்கள் மிகவும் மேம்போக்காக, பழைய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையிலேயே உள்ளது. புதிதாக மிகவும் கறாரான ஒழுங்குமுறைகள் உருவாக்கப்படவேண்டும். இது முதலில் அமெரிக்காவிலேயே நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

பாலாஜி இதையே தான் சொல்லியிருந்தார். அவரின் வேலை அனுபவத்தில் இருந்து மிக உறுதியான ஆதாரங்களை காட்டியிருக்கின்றார். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், சில முக்கியஸ்தர்கள் மற்றும் பேராசிரியர்களும் பாலாஜியின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுவான, 'உலகம் முன்னுக்குப் போகின்றது.............. நீ முட்டுக்கட்டை போடாதே...........' என்பது போன்ற அடிப்படையுடன், அவர்களின் புத்திக்கூர்மையையும் சேர்த்து திருட்டு என்று சொல்லப்படுவதை அது திருட்டே இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

எலான் மஸ்க்கும் பாலாஜியின் மரணம் தான் கொலை போன்று தெரிகின்றது என்று சொல்லியிருக்கின்றாரே தவிர, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும், அதில் இருக்கும் குறைபாடுகளையும் பற்றிக் கதைக்கவில்லை. அவரே இதில் மிகப்பெரிய ஒரு நிறுவனம் வைத்துள்ளார். எந்த எல்லைவரை போயும் இவர்கள் பணம் சேர்ப்பார்கள்.  

மிக மிகத் திறமையான ஒரு இளைஞன் இழக்கப்பட்டது மிகவும் வருத்தமான ஒரு நிகழ்வு. அச்சு அசலாக இங்கிருக்கும் பல பிள்ளைகள் போன்றே கள்ளம் கபடமற்ற, உள்ளுக்குள் நிகழ்ச்சிநிரல்கள் வைத்துக் கொள்ளாமல், சரியென்று தோன்றுவதை சரியென்றும், பிழையென்று தோன்றுவதை பிழையென்றும் சொல்லும் அறம் தெரிந்த பிள்ளை................🙏

இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம் Morale  vs Money(அதிகாரம்) எனும் கற்பிதங்கள்தான். 

விழுமியங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும்  தேவை என்பது ஒரு சாரார் வாதம். ஆனால் விழுமியங்களாவது மயி,....து என்பது இன்னொரு பகுதியினர்  வாதம். 

விசித்திரம் என்னவென்றால் இங்கே விழுமியங்கள் மனிதனுக்கு அவசியமா இல்லையா  என்பதைக்கூட பணபலமும் அதனூடாக வரும் அதிகாரமும்தான் தீர்மானிக்கிறது. 

😏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இந்தச் செயற்கை நுண்ணறிவால் கிடைத்துக் கொண்டிருக்கும் சாதக பாதகங்கள், அடுத்த நகர்வு, தேவையான ஒழுங்குமுறைகள் என்று சிலதையாவது இங்கு பகிர்வதற்கு இது ஒரு சந்தர்ப்பம்..

இப்போ இன்னொரு தமிழ் இளைஞன் ரம்,ராமசாமி,எலானுடன் கைகோர்த்துள்ளார்.

அவர் பல உள்வீட்டு வேலைகளை காட்டிக் கொடுக்கிறார் என்கிறார்கள்.

அவரும் ஏஐயில் கில்லாடி .

இவரைப்பற்றி அறிந்திருப்பீர்கள்இஉங்கள் அபிப்பிராயம் தான் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

விசித்திரம் என்னவென்றால் இங்கே விழுமியங்கள் மனிதனுக்கு அவசியமா இல்லையா  என்பதைக்கூட பணபலமும் அதனூடாக வரும் அதிகாரமும்தான் தீர்மானிக்கிறது. 

இல்லை கபிதன், அதிகாரமும் செல்வாக்கும் தான் எங்களின் செயல்களை தீர்மானிக்கும் என்றில்லை. கூட்டத்துக்குள் சிக்காமல் நாங்கள் நாங்களாகவே வாழலாம். ஆனால் தனிப்பட்ட ரீதியில் சில இழப்புகள் இதனால் ஏற்படும். ஆனாலும், அப்படி வாழும் போது உள்ளுக்குள் இருக்குமே ஒரு செருக்கு...........

பாரதியார் கவிதைகள் புனையும் போது, அவர் நிமிர்ந்து, அவரது கண்கள் ஆகாயத்தில் குத்தி சிவந்து இருக்கும் என்பார்கள்.............. அற்ப மாயைகளாகவே அவருக்கு சுற்றி இருந்தவர்கள் தெரிந்தார்கள்........

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

100%

சில இழப்புக்கள் எங்களுடன் முடிந்தால் அதைச் செரித்துக் கொள்ளலாம். இழப்புகள் எங்களுடன் சேர்த்து   பிள்ளைகளையும்  தாக்கும்போது நாங்கள் கட்டிக்காக்கும்  விழுமியங்கள் உண்மையில் எங்கள் இழப்புக்களுடன் ஒப்பிடுகையில்  பெறுமதியானவைதானா என எண்ணத் தோன்றுகிறது. 

ஆனாலும்  ஒரு அந்தச் செருக்கு இருக்கிறதே,..❤️

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போ இன்னொரு தமிழ் இளைஞன் ரம்,ராமசாமி,எலானுடன் கைகோர்த்துள்ளார்.

அவர் பல உள்வீட்டு வேலைகளை காட்டிக் கொடுக்கிறார் என்கிறார்கள்.

அவரும் ஏஐயில் கில்லாடி .

இவரைப்பற்றி அறிந்திருப்பீர்கள்இஉங்கள் அபிப்பிராயம் தான் என்ன?

அவர் பெயர் ஶ்ரீராம் கிருஷ்ணன், அண்ணா. ஶ்ரீராமை ட்ரம்ப் இந்தப் பதவிக்கு நியமித்த உடனே, சில நாட்களின் முன், அவரைப்பற்றி மிகச் சுருக்கமாக இங்கு எழுதியிருந்தோம்.

இங்குள்ள ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிலும் நீங்கள் சொல்லும் குணாதிசயங்கள் உள்ள நம்மவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அநேகமாக இருப்பார்கள். என்னுடைய சொந்த அனுபவத்தில் கூட நான் இப்படியான சிலரைப் பார்த்திருக்கின்றேன். போட்டுக் கொடுப்பவர்கள். ஶ்ரீராமிடம் இந்தக் குணாதிசயங்கள் இருக்கின்றதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் மிகக்கடுமையான் உழைப்பாளி, எலான் மஸ்க் போன்றே, என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இருவரும் வேலைத்தளத்திலேயே தூங்கி எழுபவர்கள்.............

அதி உச்சத்தை அடைவதற்கு அதி உச்ச புத்திசாலித்தனமோ அல்லது அதி கூடிய திறமையோ தேவையில்லை, ஆனால், அளவான திறமைகளுடன், மிகக்கடுமையான உழைப்பும், விடா முயற்சியும். அர்ப்பணிப்பும் தேவை. அது ஶ்ரீராமிற்கு அளவுக்கதிகமாகவே இருக்கின்றது. 

சென்னையில் எஸ்ஆர்எம் கல்லூரியிலேயே பொறியியல் படித்தார் என்று நினைக்கின்றேன். அதைவிட தமிழ்நாட்டில் மட்டுமே குறைந்தது பத்துக் கல்லூரிகள் ஆவது தரவரிசையில் கூடியவை. ஏதோ சில காரணங்களால் அன்று ஶ்ரீராமால் தரவரிசையில் முன்னிருக்கும்   ஐஐடியிலோ அல்லது அண்ணா பல்கலையிலோ சேர முடியவில்லை. சிலருக்கு இதுவே வாழ்க்கை முழுவதும் ஒரு பெரிய உந்துதலாக இருக்கும்.     

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

அவர் பெயர் ஶ்ரீராம் கிருஷ்ணன், அண்ணா. ஶ்ரீராமை ட்ரம்ப் இந்தப் பதவிக்கு நியமித்த உடனே, சில நாட்களின் முன், அவரைப்பற்றி மிகச் சுருக்கமாக இங்கு எழுதியிருந்தோம்.

ஓ நான் கவனிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ChatGPT திருடுகிறது என்ற கருத்தே ஒரு நகைச்சுவையானது தான். ஒரு இணையதளத்தில் "search" என்ற வசதி இருந்தாலே அது தகவல்களை எங்கோ பதிந்து வைத்திருக்கிறது என்று தான் பொருள். இப்பொழுது இந்த search வசதி இல்லாமல் ஒரு இணையமும் இல்லை. 

ChatGPT தன்னை தானே வளர்த்துக்கொள்ளும் ஒரு மிருகம். அதனை இனி நிறுத்தமுடியாது. ஆனால் அதற்கு தீனி போடுவது நாங்கள் தான் என்பதை மறந்து தான் இங்கே குய்யோ முய்யோ என்று குதிக்கின்றோம். அதை வளர்ப்பதால் எங்களுக்கு இணையங்களில் "லைக்" என்ற அங்கீகாரம் கிடைக்கிறது. அதில் எங்களுக்கு ஒரு சுகம் இருக்கிறது தானே. 

ChatGPT தகவல்களை உள்வாங்கி, அதனை செதுக்கி, பின்னர் எங்களுக்கு ஒன்றை தருகிறது. இந்த செதுக்கும் இடம் ஒரு "black box". உள்ளே என்ன நடக்கிறது என்பதை இனி மனித அறிவால் பிரித்து மேய முடியாது. அவ்வளவு தூரம் இடியாப்பச் சிக்கல் போன்றது அதன் அல்கோரிதம். 

அந்த இளைஞன் வெறுமனே தகவல் திருட்டு என்பதற்காக கொலைசெய்யப்பட்டிருக்க மாட்டார். தகவல் திருட்டு என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்று தான். கொலை என்றால் அதை தாண்டி அவருக்கு வேறு ஏதோ ஒன்று தெரிந்திருக்க வேண்டும். 

கையில் எப்பொழுது தொலைபேசி வந்ததோ அன்றோடு "privacy" க்கு சாவுமணி அடித்தாகிவிட்டது. 
முன்னர் எங்களுடைய புகைப்படத்தை யாராவது இணையத்தில் வெளியிட்டால் அதை நாம் விரும்பமாட்டோம். ஆனால் இப்பொழுது நாங்களாகவே இணையத்தில் ஏற்றுகிறோம். 

உங்களிடம் ஒரு இணையதளம் இருந்தால் ChatGPT  அந்த தளத்தினை தொடர்புகொள்ளாமல் இருப்பதற்கு வேண்டும் என்றால் இப்போதைக்கு நீங்கள் செட்டிங் செய்துகொள்ளலாம். 

மற்றும்படி தனிப்பட்ட தகவல், பிரைவசி எல்லாம் எதிர்காலத்தில் ஊ ஊ ஊ தான். இதிலிருந்து தப்பிக்க அமேசான் காடுகளில் குடியேறி செருக்கு காட்டலாம்.

25 minutes ago, ஊர்க்காவலன் said:

ChatGPT தன்னை தானே வளர்த்துக்கொள்ளும் ஒரு மிருகம். அதனை இனி நிறுத்தமுடியாது. ஆனால் அதற்கு தீனி போடுவது நாங்கள் தான் என்பதை மறந்து தான் இங்கே குய்யோ முய்யோ என்று குதிக்கின்றோம்.

நீங்கள் சொல்வது நூறு வீதம் உண்மை. ஆனாலும் எனது அணுகுமுறை வேறானது.

நான் இப்போதெல்லாம் சந்தேகங்களுக்கு கூகிளை நாடுவது குறைவு. அண்மையில் வீட்டுத் திருத்த வேலைகள் செய்தபோது வெப்ப வழங்கலுக்காகச் சில பழைய fan coil களை வாங்கினேன். இதன் நீர்/காற்று வெப்பம்/வேகம் போன்றவற்றைக் கணக்கிடுவதற்காகப் பல மணிநேரமாக கூகிளில் முயன்று தேடியும் சரியான தகவல் கிடைக்கவில்லை. ChatGPT யிடம் ஒரு தடவைதான் கேட்டேன். மிகத் துல்லியமாக சகல குறுகிய விளக்கங்களுடன் ஒரு அட்டவணையையும் தயாரித்துத் தந்தது. இத் தகவல்களை எங்கிருந்து பெற்றது என்று தெரியவில்லை. 

எனது பிள்ளைகளுக்கு நான் சொல்வது இதுதான். தாராளமாக செயற்கை நுண்ணறிவைப் பாவியுங்கள். படிப்பில் எங்கெங்கு இவற்றை இவற்றைப் புகுத்த முடியுமோ தயங்காமல் செய்யுங்கள். நாங்கள் அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டுமானால் ஏணியைப் பயன்படுத்தத் தயங்கக் கூடாது. ஏனென்றால் தக்கன பிழைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருதும் இதுவே தான். 
முக்கியமாக எனக்கு கல்விக்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது. 

AI  2041 என்ற புத்தகத்தை பரிந்துரைக்கின்றேன். இந்த செயற்கை நுண்ணறிவில் பல ஆண்டு கூகிள், facebook போன்ற நிறுவனங்களில் தலைமை நிர்வாகியாக இருந்தவர் எழுதியது. 
செயற்கை நுண்ணறிவு மின்சாரம் போன்றது. அதனை கட்டுக்குள் வைத்துக்கொள்ள மனிதர்கள் பழகிக்கொண்டார்கள். அதுபோல AI தொழில்நுட்பமும். வேண்டுமா இல்லையா என்பதல்ல கேள்வி. அதனை இன்னும் பல நுற்றாண்டுகளிற்கு தவிர்க்கமுடியாது. 

40 minutes ago, இணையவன் said:

நீங்கள் சொல்வது நூறு வீதம் உண்மை. ஆனாலும் எனது அணுகுமுறை வேறானது.

நான் இப்போதெல்லாம் சந்தேகங்களுக்கு கூகிளை நாடுவது குறைவு. அண்மையில் வீட்டுத் திருத்த வேலைகள் செய்தபோது வெப்ப வழங்கலுக்காகச் சில பழைய fan coil களை வாங்கினேன். இதன் நீர்/காற்று வெப்பம்/வேகம் போன்றவற்றைக் கணக்கிடுவதற்காகப் பல மணிநேரமாக கூகிளில் முயன்று தேடியும் சரியான தகவல் கிடைக்கவில்லை. ChatGPT யிடம் ஒரு தடவைதான் கேட்டேன். மிகத் துல்லியமாக சகல குறுகிய விளக்கங்களுடன் ஒரு அட்டவணையையும் தயாரித்துத் தந்தது. இத் தகவல்களை எங்கிருந்து பெற்றது என்று தெரியவில்லை. 

எனது பிள்ளைகளுக்கு நான் சொல்வது இதுதான். தாராளமாக செயற்கை நுண்ணறிவைப் பாவியுங்கள். படிப்பில் எங்கெங்கு இவற்றை இவற்றைப் புகுத்த முடியுமோ தயங்காமல் செய்யுங்கள். நாங்கள் அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டுமானால் ஏணியைப் பயன்படுத்தத் தயங்கக் கூடாது. ஏனென்றால் தக்கன பிழைக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஊர்க்காவலன் said:

அந்த இளைஞன் வெறுமனே தகவல் திருட்டு என்பதற்காக கொலைசெய்யப்பட்டிருக்க மாட்டார். தகவல் திருட்டு என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்று தான். கொலை என்றால் அதை தாண்டி அவருக்கு வேறு ஏதோ ஒன்று தெரிந்திருக்க வேண்டும். 

தற்போதுவரை தற்கொலை என்றே சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

நீங்கள் சொல்வது நூறு வீதம் உண்மை. ஆனாலும் எனது அணுகுமுறை வேறானது.

நான் இப்போதெல்லாம் சந்தேகங்களுக்கு கூகிளை நாடுவது குறைவு. அண்மையில் வீட்டுத் திருத்த வேலைகள் செய்தபோது வெப்ப வழங்கலுக்காகச் சில பழைய fan coil களை வாங்கினேன். இதன் நீர்/காற்று வெப்பம்/வேகம் போன்றவற்றைக் கணக்கிடுவதற்காகப் பல மணிநேரமாக கூகிளில் முயன்று தேடியும் சரியான தகவல் கிடைக்கவில்லை. ChatGPT யிடம் ஒரு தடவைதான் கேட்டேன். மிகத் துல்லியமாக சகல குறுகிய விளக்கங்களுடன் ஒரு அட்டவணையையும் தயாரித்துத் தந்தது. இத் தகவல்களை எங்கிருந்து பெற்றது என்று தெரியவில்லை. 

எனது பிள்ளைகளுக்கு நான் சொல்வது இதுதான். தாராளமாக செயற்கை நுண்ணறிவைப் பாவியுங்கள். படிப்பில் எங்கெங்கு இவற்றை இவற்றைப் புகுத்த முடியுமோ தயங்காமல் செய்யுங்கள். நாங்கள் அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டுமானால் ஏணியைப் பயன்படுத்தத் தயங்கக் கூடாது. ஏனென்றால் தக்கன பிழைக்கும்.

அண்மையில் பெற்ற இரு அனுபவங்கள் இந்த செயற்கை நுண்ணறிவு ஒரு முட்டாள் தலைமுறையை உருவாக்கி விடுமென்ற அச்சத்தை எனக்குத் தந்திருக்கிறது.

1. ஒரு மாணவர் ஆராய்ச்சி பழகுகிறேன் என்று வந்தார். ஆனால், வரவேண்டிய நாட்களில், நேரங்களில் வருவதில்லை. நானே அவர் சம்பந்தப் பட்ட வேலைகளை முடித்து விட்டு இருந்த போது புள்ளிகள் பெற கடைசி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய காலம் வந்தது. வேலை செய்யாமல் எப்படி அறிக்கை எழுதுவது? எனவே இரக்கப் பட்டு "ஒரு தியரிப் பேப்பர் எழுது, புள்ளிகள் தரலாம்" என்று சலுகை கொடுத்தேன். மாணவரின் அறிக்கை, கிடைக்க வேண்டிய இறுதி நாளில் வந்தது. ஒரு பிழையுமில்லாமல் திறமாக இருந்த அறிக்கை சந்தேகம் தரவே, 4 வெவ்வேறு AI detectors மூலம் சோதித்துப் பார்த்தேன். நான்கிலும் "இந்த ஆவணம் 98 முதல் 100 வீதம் செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப் பட்டது" என்ற தீர்ப்பு வந்தது. அப்படியே அந்த தீர்ப்பை அவரது மேற்பார்வையாளருக்கு அனுப்பி விட்டு "இனி இங்கே வராதே" என்று துரத்தி விட்டேன்.

2. சஞ்சிகைகளில் ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரிக்க முதல் குறைந்தது 2 பேர், துறை அனுபவம் இருப்போர் (peer reviewers) பரிசோதித்து பிரசுரிக்க தகுதியானதா என்று சோதிக்க வேண்டும். சீனாவில் இருந்து அப்படி அனுப்பப் பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையை என்னிடம் பரிசீலிக்க அனுப்பி வைத்தார்கள். ஒரு இலக்கண, எழுத்துப் பிழை கூட இல்லாமல் இருந்த கட்டுரை சந்தேகம் தரவே, சஞ்சிகை இதை பரிசோதிக்க வேண்டுமெனக் கேட்டேன். சஞ்சிகையின் பரிசோதனையில், "80 முதல் 90 வீதம்  செயற்கை நுண்ணறிவு எழுதிய கட்டுரை" என முடிவு வந்தது.

என்னுடைய துறை/வேலைப் புலம் சாதாரண உலகத்தில் இருந்து ஒரு மூலையில் (niche) இருக்கலாம். ஆனால், இந்த துறையில் செயற்கை நுண்ணறிவை துஷ்பிரயோகம் செய்வதால் வரும் விளைவுகள் பெரும் எண்ணிக்கையானோருக்கு அநீதி விளைவிக்கும். உழைத்து எழுத வேண்டிய அறிக்கைகளை, இப்படி உழைக்காத சோம்பேறிகள் உரிமை கொண்டாட  செயற்கை நுண்ணறிவு இலகுவாக வழி செய்திருக்கிறது. 10 வருடங்களில், பொதுவான சமூகத்தில் இதன் விளைவுகள் வெளிப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

உழைத்து எழுத வேண்டிய அறிக்கைகளை, இப்படி உழைக்காத சோம்பேறிகள் உரிமை கொண்டாட  செயற்கை நுண்ணறிவு இலகுவாக வழி செய்திருக்கிறது. 10 வருடங்களில், பொதுவான சமூகத்தில் இதன் விளைவுகள் வெளிப்படும்.

👍..................

இதையே தான் ஜெயமோகனும், யுவன்சங்கர்ராஜாவும் சொன்னதாக மேலே ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன். 

என்னுடைய ஒரு அனுபவத்தை இங்கு களத்தில் முன்னர் பகிர்ந்திருந்தேன். அகாலமான ஒரு நண்பனுக்கு நினைவஞ்சலி மலர் ஒன்று வெளியிட நண்பர்களிடமிருந்து ஆக்கங்களை பெற்றிருந்தோம். ஆக்கங்களை பரிசீலித்து, திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி என்னிடமும் கொடுக்கப்பட்டது. 

நான்கு கட்டுரைகள் ஒரே மாதிரியானவை. எந்த வித உணர்வும் அற்ற, இந்த தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட 'பிளாஸ்டிக்' கட்டுரைகள். நான்கையும் திருப்பி அனுப்பி, சொந்தமாக சில வசனங்கள் எழுதிக் கொடுங்கள், அது போதும் என்று சொன்னோம்.

  • கருத்துக்கள உறவுகள்

 OpenAI CEO Sam Altman இன் தங்கை தன்னை சாம் சிறுவயதில் இருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கும், வன்கொடுமைக்கும் உட்படுத்தினார் என்று நட்ட ஈடு கேட்கின்றார். Elon Musk, Mark Zuckerberg, Sam Altman போன்ற அறமில்லாத சுயநலமிகள் உலகை ஆளும் நிலை வரும்போது அது தானாகவே அழியும்!

  • கருத்துக்கள உறவுகள்

மனித மூளைக்கு வேலையுமில்லை, மதிப்புமில்லை. இது, ஒரு பரீட்சையில் பார்த்தெழுதுதல்  போன்றது. கஸ்ரப்பட்டு படித்து, மீண்டும் உடலை வருத்தி உழைப்பவனுக்கு ஊதியம் குறைவு, கேள்வி அதிகம், மதிப்பும் சொல்லும்படி இல்லை பணி நிலையங்களில். ஆனால் இவர்கள் எல்லாவற்றையும் எந்த கஸ்ரமும் இல்லாமல் பெற்று விடுகிறார்கள். இனி வருங்காலத்தில் பாடசாலைக்கு சென்று கஸ்ரப்பட்டு கல்வி கற்கும் தேவையும் வராது. அறிவு, தொழில் நுட்பம் வளர்வது முன்னேற்றமாக இருந்தாலும், உடலுழைப்பு இல்லாமை, அழிவு, களவு போன்ற சீர்கேடுகளையும் வளர்க்கிறது. வீட்டிலிருந்தபடியே அடுத்தவன் கஸ்ரப்பட்டு சேர்த்த செல்வத்தையெல்லாம் மிக கச்சிதமாக அவர்களின் சம்மதத்துடனேயே திருடி மறைந்து போகிறார்கள்.  நாங்கள் நினைப்பதையெல்லாம் வெளிப்படுத்திவிடும் தொழில் நுட்பம் வெகு விரைவில். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.