Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் விதைகளை நாட்டுள்ளேன்😁

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, உடையார் said:

இப்பதான் விதைகளை நாட்டுள்ளேன்😁

முதன் முதலாக இப்போதான்... ஜக்கம்மாவை பார்க்கின்றேன். 😂
விதையை நட்ட உடையார்... சிலவருடங்களின் பின் 
காசு கொடுத்து மரத்தை தறிக்கின்றாரோ தெரியாது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப் பார்த்து திக்குமுக்காடி விட்டேன் உடையார்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இதுபற்றி அவ்வளவாகத் தெரியவில்லை . ........ யாராவது சமைத்துப் பார்த்து வீடியோ போடுங்கப்பா .........!   😁

  • கருத்துக்கள உறவுகள்

ஜீ  காமா கொடி போல வளரும் என எண்ணுகிறேன். பச்சையாகவே சாப்பிடலாம் போல .கவர்ச்சியான (?) தலைப்பு .....😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

முதன் முதலாக இப்போதான்... ஜக்கம்மாவை பார்க்கின்றேன். 😂
விதையை நட்ட உடையார்... சிலவருடங்களின் பின் 
காசு கொடுத்து மரத்தை தறிக்கின்றாரோ தெரியாது. 🤣

சிறித்தம்பியர்! ஆபிரிக்க ஆம்பிளையள் விரும்பி சாப்பிடுற கிழங்கு எண்ட மாதிரி கதைக்கிறாங்கள்.🤭 எதுக்கும் அடக்கி வாசிப்பம்...😎

உடையார்  எங்களுக்கு இரண்டு கிழங்கு அனுப்பாமலே இருப்பார்?😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பியர்! ஆபிரிக்க ஆம்பிளையள் விரும்பி சாப்பிடுற கிழங்கு எண்ட மாதிரி கதைக்கிறாங்கள்.🤭 எதுக்கும் அடக்கி வாசிப்பம்...😎

உடையார்  எங்களுக்கு இரண்டு கிழங்கு அனுப்பாமலே இருப்பார்?😂

குமாரசாமி அண்ணை…. ஆபிரிக்க ஆம்பிளையள் சாப்பிடுகிற கிழங்கு என்றால், கட்டாயம் நாங்களும் அந்த மரத்தின்ரை விதையை… உடையாரிடம் வாங்கி, வளவுக்குள்ளை நடத்தான் வேணும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை…. ஆபிரிக்க ஆம்பிளையள் சாப்பிடுகிற கிழங்கு என்றால், கட்டாயம் நாங்களும் அந்த மரத்தின்ரை விதையை… உடையாரிடம் வாங்கி, வளவுக்குள்ளை நடத்தான் வேணும். 😂

கனடாவுக்கும் ..இரண்டு கிழங்குக்கு ரெகமெண்ட் பண்ணிவிடுங்க சிறியர்

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, alvayan said:

கனடாவுக்கும் ..இரண்டு கிழங்குக்கு ரெகமெண்ட் பண்ணிவிடுங்க சிறியர்

அல்வாயன்…  உங்களுக்கும் இரண்டு கிழங்குக்கு உடையாரிடம் சொல்லி வைத்திருக்கு.
எதற்கும் இந்தக் கிழங்கு சாப்பிடுவதால்… பின்விளைவு எப்பிடி இருக்கு,
முன்விளைவு எப்பிடி இருக்கு என்று அறிந்து வைக்கிறது நல்லது. 😂

🤣

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

அல்வாயன்…  உங்களுக்கும் இரண்டு கிழங்குக்கு உடையாரிடம் சொல்லி வைத்திருக்கு.
எதற்கும் இந்தக் கிழங்கு சாப்பிடுவதால்… பின்விளைவு எப்பிடி இருக்கு,
முன்விளைவு எப்பிடி இருக்கு என்று அறிந்து வைக்கிறது நல்லது. 😂

🤣

எல்லாமே ஒத்திக்கை பார்த்து வச்சிருக்கிறன் சிறியர்...கிழங்கு வாறதுதான் தாமதம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

The 5 BENEFITS Of Adding Jicama To Your Diet | Dr. Steven Gundry

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கிழங்கில் பல சத்துகள் இருக்கின்றது, வளர்க்கும் போது நல்ல பராமரிப்பு தேவையாம், அடர்ந்து படரவிடக்கூடாதாம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

இந்த கிழங்கில் பல சத்துகள் இருக்கின்றது, வளர்க்கும் போது நல்ல பராமரிப்பு தேவையாம், அடர்ந்து படரவிடக்கூடாதாம்

பழம் எனக்கு

கொட்டை உனக்கு.

(பாட்டு பாட்டு)

  • கருத்துக்கள உறவுகள்

ஹிகாமா (ஜக்கம்மா😎) வை ருசிப்பதில் தவறில்லை!

தோலைக் கவனமாக நீக்கிச் சாப்பிட வேண்டிய "இன்னொரு கிழங்கு",  அவ்வளவு தான். (தோலை நீக்கா விட்டாலோ அல்லது ஏனைய தாவரப் பகுதிகளை அதிகளவில் உட்கொண்டாலோ, கிட்டத்தட்ட 'சயனைட்" சாப்பிடுவது போல ஒக்சிசன் இல்லாமல் மரணிக்க வேண்டி வரும்)

ஆனால்: "இனுலின் இருப்பதால் குடல் பக்ரீரியாக்களுக்கு நல்லது", அல்லது "ஒட்சியேற்ற எதிரிகள் இருப்பதால் பல நோய்களைத் தவிர்க்க உதவும்" - இந்தக் கூற்றுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை. உண்மையில், இனுலின் குடல் பக்ரீரியாக்களை மாற்றுகிறது என்று செய்த ஆய்வுகள் பல போலியான, விஞ்ஞான முறைமையற்ற ஆய்வுகள் என நிரூபித்திருக்கிறார்கள்.

குடலில் இருக்கும் பக்ரீரியாக்கள் தளைக்க வேண்டுமெனில், எந்த தாவர நார்ச்சத்துடைய உணவையும் எடுத்துக் கொள்ளலாம், "றிஸ்க்" எடுத்து ஜக்கம்மாவைச் சாப்பிட வேண்டுமென்ற அவசியம் இல்லை.

Steven Gundry யின் போலி விஞ்ஞானத் தகவல்கள் பற்றியும் வாசகர்கள் அவதானமாக இருக்க வேண்டும். "The Plant Paradox" என்று இவர் எழுதிய புத்தகம் சக்கை போடு போட்டது விற்பனையில். பின்னர் மருத்துவ உலகம் புத்தகத்தில் மேற்கோள் காட்டப் பட்ட ஆய்வுகளைத் தேடிய போது, அப்படி ஒன்றையும் காணவில்லை. அப்படியான ஆய்வுகளே நிகழ்ந்திருக்கவில்லை. ஒப்ரா அறிமுகம் செய்த Dr. Oz போலவே, தனக்குத் தெரியாத விடயங்களை வியாபார நோக்கத்தில் "அற்புத நிவாரணிகளாக" பிரபலப்படுத்தி காசு பார்க்கும் இன்னொரு மருத்துவர் இவர்!

Edited by Justin
உச்சரிப்புப் பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இது கடைகளில் கிடைக்கின்றது. மத்திய, தென் அமெரிக்க மக்கள் புழங்கும் கடைகளில் அதிகமாகக் கிடைக்கின்றது. 'இது என்ன வஸ்து, புதுசா இருக்குதே............' என்று எடுத்து ஒரு உருட்டு உருட்டு விட்டு, எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு வருவது ஒரு வாடிக்கை. 

இந்த வருடத்தையும் தவற விட்டாயிற்று............. அடுத்த ஆங்கில புதுவருடத்தில் ஆரோக்கியமாக வாழ்வதாக ஒரு உறுதிமொழி எடுத்து, ஹிகாமாவை வீட்டை கொண்டு வரவேண்டும்.................🤣

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரசோதரன் said:

இங்கு இது கடைகளில் கிடைக்கின்றது. மத்திய, தென் அமெரிக்க மக்கள் புழங்கும் கடைகளில் அதிகமாகக் கிடைக்கின்றது. 'இது என்ன வஸ்து, புதுசா இருக்குதே............' என்று எடுத்து ஒரு உருட்டு உருட்டு விட்டு, எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு வருவது ஒரு வாடிக்கை. 

நீங்கள் ஜக்காம்மாவ உருட்டி பிரட்டியெல்லாம் பாத்திருக்கிறியள்! குடுத்து வைச்சனியள்😃 சிறித்தம்பியோ       @தமிழ் சிறி   நானோ அதை கண்ணாலை காணவேயில்லை 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Justin said:

"றிஸ்க்" எடுத்து ஜக்கம்மாவைச் சாப்பிட வேண்டுமென்ற அவசியம் இல்லை.

ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட உணவுகள் அத்தியாவசியமாக இருக்கும். அதுபோல் ஜக்காமாவும் அது சார்ந்த நாடுகளுக்கு அவசியமான உணவாக இருக்கலாம்.
இதை றிஸ்க் எடுத்து சாப்பிட வேண்டிய அவசியமில்லை என்றால்.....? நம்ம மரவள்ளிக்கிழங்கின் றிஸ்க் பெரிதல்லவா? :cool:

மேலைத்தேய மருத்துவங்கள்  தங்கள் வியாபாரத்திற்கு ஆப்பு வருமென்றால் கவனம்,நஞ்சு,அவதானம், அதை நாங்கள் ஆராயவில்லை என எச்சரிக்கைகள் விடுவதெல்லாம் சர்வசாதரணங்களப்பா. 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

Steven Gundry யின் போலி விஞ்ஞானத் தகவல்கள் பற்றியும் வாசகர்கள் அவதானமாக இருக்க வேண்டும். "The Plant Paradox" என்று இவர் எழுதிய புத்தகம் சக்கை போடு போட்டது விற்பனையில். பின்னர் மருத்துவ உலகம் புத்தகத்தில் மேற்கோள் காட்டப் பட்ட ஆய்வுகளைத் தேடிய போது, அப்படி ஒன்றையும் காணவில்லை. அப்படியான ஆய்வுகளே நிகழ்ந்திருக்கவில்லை. ஒப்ரா அறிமுகம் செய்த Dr. Oz போலவே, தனக்குத் தெரியாத விடயங்களை வியாபார நோக்கத்தில் "அற்புத நிவாரணிகளாக" பிரபலப்படுத்தி காசு பார்க்கும் இன்னொரு மருத்துவர் இவர்!

அவுஸ்ரேலியர்களிடையே இவர் கொஞ்சம் பிரபலமானவர்.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் ஜக்காம்மாவ உருட்டி பிரட்டியெல்லாம் பாத்திருக்கிறியள்! குடுத்து வைச்சனியள்😃 சிறித்தம்பியோ       @தமிழ் சிறி   நானோ அதை கண்ணாலை காணவேயில்லை 🤣

🤣.............

எங்கள் ஊர் வள்ளிக் கிழங்குகள் போலவே தான் உருவங்களும், அளவுகளும்.......... தோல் நிறம் தான் பழுப்பு....................😜.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

ஹிகாமா (ஜக்கம்மா😎) வை ருசிப்பதில் தவறில்லை!

தோலைக் கவனமாக நீக்கிச் சாப்பிட வேண்டிய "இன்னொரு கிழங்கு",  அவ்வளவு தான். (தோலை நீக்கா விட்டாலோ அல்லது ஏனைய தாவரப் பகுதிகளை அதிகளவில் உட்கொண்டாலோ, கிட்டத்தட்ட 'சயனைட்" சாப்பிடுவது போல ஒக்சிசன் இல்லாமல் மரணிக்க வேண்டி வரும்)

ஆனால்: "இனுலின் இருப்பதால் குடல் பக்ரீரியாக்களுக்கு நல்லது", அல்லது "ஒட்சியேற்ற எதிரிகள் இருப்பதால் பல நோய்களைத் தவிர்க்க உதவும்" - இந்தக் கூற்றுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை. உண்மையில், இனுலின் குடல் பக்ரீரியாக்களை மாற்றுகிறது என்று செய்த ஆய்வுகள் பல போலியான, விஞ்ஞான முறைமையற்ற ஆய்வுகள் என நிரூபித்திருக்கிறார்கள்.

குடலில் இருக்கும் பக்ரீரியாக்கள் தளைக்க வேண்டுமெனில், எந்த தாவர நார்ச்சத்துடைய உணவையும் எடுத்துக் கொள்ளலாம், "றிஸ்க்" எடுத்து ஜக்கம்மாவைச் சாப்பிட வேண்டுமென்ற அவசியம் இல்லை.

Steven Gundry யின் போலி விஞ்ஞானத் தகவல்கள் பற்றியும் வாசகர்கள் அவதானமாக இருக்க வேண்டும். "The Plant Paradox" என்று இவர் எழுதிய புத்தகம் சக்கை போடு போட்டது விற்பனையில். பின்னர் மருத்துவ உலகம் புத்தகத்தில் மேற்கோள் காட்டப் பட்ட ஆய்வுகளைத் தேடிய போது, அப்படி ஒன்றையும் காணவில்லை. அப்படியான ஆய்வுகளே நிகழ்ந்திருக்கவில்லை. ஒப்ரா அறிமுகம் செய்த Dr. Oz போலவே, தனக்குத் தெரியாத விடயங்களை வியாபார நோக்கத்தில் "அற்புத நிவாரணிகளாக" பிரபலப்படுத்தி காசு பார்க்கும் இன்னொரு மருத்துவர் இவர்!

சிறீயர் ..என்னுடைய ஓடரை ரத்துச் செய்துவிடுங்கோ...புண்ணியமாப் போகும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

சிறீயர் ..என்னுடைய ஓடரை ரத்துச் செய்துவிடுங்கோ...புண்ணியமாப் போகும்🤣

அல்வாயன்,   சும்மா… ஒரு கிழங்கை தோல் சீவாமல் சாப்பிட்டு பாருங்கோவன். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட உணவுகள் அத்தியாவசியமாக இருக்கும். அதுபோல் ஜக்காமாவும் அது சார்ந்த நாடுகளுக்கு அவசியமான உணவாக இருக்கலாம்.
இதை றிஸ்க் எடுத்து சாப்பிட வேண்டிய அவசியமில்லை என்றால்.....? நம்ம மரவள்ளிக்கிழங்கின் றிஸ்க் பெரிதல்லவா? :cool:

மேலைத்தேய மருத்துவங்கள்  தங்கள் வியாபாரத்திற்கு ஆப்பு வருமென்றால் கவனம்,நஞ்சு,அவதானம், அதை நாங்கள் ஆராயவில்லை என எச்சரிக்கைகள் விடுவதெல்லாம் சர்வசாதரணங்களப்பா. 😂

அத்தியாவசிய உணவாக மரவள்ளிக் கிழங்கு இருந்த காலம் வடக்கில் பொருளாதாரத் தடை இருந்த காலம் அல்லவா? மற்றபடி அது அத்தியாவசிய உணவாக இருந்ததில்லை, மக்களும் றிஸ்க் இல்லாத அரிசிச் சோற்றை எடுத்துக் கொண்டார்கள்.

நீங்கள் "எதையும்" சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள், உரிமை இருக்கிறது உங்களுக்கு😂!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, Justin said:

அத்தியாவசிய உணவாக மரவள்ளிக் கிழங்கு இருந்த காலம் வடக்கில் பொருளாதாரத் தடை இருந்த காலம் அல்லவா? மற்றபடி அது அத்தியாவசிய உணவாக இருந்ததில்லை, மக்களும் றிஸ்க் இல்லாத அரிசிச் சோற்றை எடுத்துக் கொண்டார்கள்.

நீங்கள் "எதையும்" சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள், உரிமை இருக்கிறது உங்களுக்கு😂!

சிறிலங்கா சனத்துக்குத்தான் மரவள்ளிக்கிழங்கு பிச்சைக்கார சாப்பாடு. 😎
தென்னமெரிக்க,ஆபிரிக்க நாடுகளில் மரவள்ளிக்கிழங்கு முக்கிய சாப்பாடுகளில் ஒன்று...😂

என்னது அரிசிச்சோறு றிஸ்க் இல்லாத சாப்பாடா? இப்பவெல்லாம் டாக்குத்தர்மார் சோறு கனக்க சாப்பிட்டால் சுகர் றிஸ்க் எண்டீனம்....😃.  நீங்கள் என்னடாவெண்டால்.....சும்மா தமாஷ் பண்ணாதீங்க சார்...🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எந்த அர்த்தத்தில் "றிஸ்க் எடுத்து ஜக்கம்மாவைச் சாப்பிட வேண்டியதில்லை" என்று எழுதியிருக்கிறேன் என்று விளங்கிக் கொள்ளப் பாருங்கள்.

இல்லை "கீரைக்கடை" சின்ட்றோம் காரணமாக எழுதுகிறீர்கள் என்றால் தனியே அலட்டிக் கொண்டிருங்கள்! நமக்கு முக்கியமான வேலை இருக்கிறது😎!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

அல்வாயன்,   சும்மா… ஒரு கிழங்கை தோல் சீவாமல் சாப்பிட்டு பாருங்கோவன். 😂 🤣

வேணாம் சாமியோவ்....இலங்கையில் இன்னும் இரண்டு ..மூன்று கோவில் நேர்த்தி முடிக்கவில்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.