Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 JAN, 2025 | 01:54 PM
image
 
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் தைப்பொங்கல் பண்டிகையினை இன்று செவ்வாய்க்கிழமை (14)  தமிழர்கள் சிறப்பாக கொண்டாடினர்.  

உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு  உலகளாவிய ரீதியில் தமிழர்கள்  ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.

அந்த வகையில் நாட்டிலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொங்கல் பண்டிகை சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு

சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.

WhatsApp_Image_2025-01-14_at_09.20.47.jp

WhatsApp_Image_2025-01-14_at_09.20.44__1

WhatsApp_Image_2025-01-14_at_09.20.43.jp

WhatsApp_Image_2025-01-14_at_09.20.53__1

மன்னார்

மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மற்றும் கத்தோலிக்க தமிழ் மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள  இந்து ஆலயங்களில் விசேட தைப் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

மேலும் வர்த்தக நிலையங்கள், நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட தோடு விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பொங்கல் பொங்கி  மக்கள் மகிழ்சியை பகிர்ந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் மக்கள் அமைதியான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

WhatsApp_Image_2025-01-14_at_9.14.09_AM.

WhatsApp_Image_2025-01-14_at_9.14.08_AM_

WhatsApp_Image_2025-01-14_at_9.14.08_AM.

கண்டி

கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர்  ஆலயத்தில் தைப்பொங்கல் விசேட சமய வழிபாடு கோயில் அறங்காவலர் கிருஸ்ணமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

காலையில் பொங்கல் நிகழ்வுகளுடன் விசேட சமய வழிபாடுகள் இடம்பெற்றன. பக்த அடியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

P1060120.JPG

P1060122.JPG

P1060131.JPG

யாழ்ப்பாணம்

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம் 

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை (14) சிறப்பு பொங்கல் வழிபாடு இடம்பெற்றது.

3__2_.jpg

3__1_.jpg

வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் 

யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் தைப்பொங்கல் விசேட பூசைகள் அதன் பிரதம குரு ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ சுதர்சன கணபதீஸ்வர குருக்கள்  தலமையில் இன்று இடம் பெற்றது.

IMG_20250114_085043.jpg

IMG_20250114_090258.jpg

IMG_20250114_083803.jpg

புத்தளம்

தைப்பொங்கள் விஷேடப் பூஜை புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டது

புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பொங்கள் விஷேட பூஜைகள் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ அம்பலவானன் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

VideoCapture_20250114-095113.jpg

VideoCapture_20250114-095100.jpg

வவுனியா

உழவர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்றன.

அதற்கிணங்க, வவுனியாவின் பிரதான ஆலயங்களில் ஒன்றாகிய கந்தசாமி ஆலயத்தில் புதுப் பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் இடம்பெற்றதுடன், ஆலய பிரதம குரு தலைமையில் விசேட பூசையும் இடம்பெற்றது.

IMG-20250114-WA0118.jpg

IMG-20250114-WA0105.jpg

https://www.virakesari.lk/article/203792

  • Replies 108
  • Views 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    பொங்கல் என்பது….. Wait for it…..: தனியே தமிழருக்கு மட்டும் உரிய ஒன்றல்ல…. வடகிழக்கு பருவ மழையால் பயிர் செய்து பயன் பெறும் அனைத்து இந்திய துணைக்கண்டத்தின் மக்களும் கொண்டாடும் பண்டிகை. இத

  • Kadancha
    Kadancha

    இதை பொதுவாகத் தான் சொல்கிறேன். எவரையும் குறை சொல்வதற்கு இல்லை. பொங்கலின்  அர்த்த குறியீடு முன்பே சொல்லிவிட்டேன்.  ஒரு விடயத்தை மட்டும் வைத்து பார்க்க முடியாது , தைப்பொங்கலுக்கு பல

  • தைப்பொங்கல் வரலாறு   தைப்பொங்கல் -  ஒரு வரலாற்று நோக்கு நீண்ட வரலாற்றையும் காலவோட்டத்தோடு நெருங்கிப் பிணைந்த தனித்துவமான பண்பாட்டு நீட்சியையும் கொண்ட தமிழர், காலந்தோறும் பல்வேற

  • கருத்துக்கள உறவுகள்

தைப்பொங்கல் விழா மதரீதியானதா இனரீதியானதா? 

  • கருத்துக்கள உறவுகள்

சூரிய பகவானுக்கு நன்றி கூறும் நிகழ்வே பொங்கல்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, RishiK said:

தைப்பொங்கல் விழா மதரீதியானதா இனரீதியானதா? 

உழவர் திருநாள். தமிழ் உழவர்கள் பாரம்பரியமாக அறுவடை நாள் முடிந்து தமது உழைப்பின் பயனை அனுபவித்து,  சொந்த பந்தங்களுடன் மகிழ்சசியையும் அன்பையும் பகிர்ந்து  கொள்ள கொண்டாடும் திருநாள். உழவர்களின்  உழைப்புக்கு நன்றி கூறும் நாள் என்பதால்,  தமிழர்கள் அனைவரும் அதைக் கொண்டாடுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கிறீஸ்தவ உழவர்களோ அல்லது கிறீஸ்தவ தேவாயலங்களோ இந்த திருநாளை கொண்டாடுகிறார்களா? 
 
இந்தியாவில் பல மாநிலங்களில்  UTTARAYAN , SANKARANTI என்ற பெயர்களில் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

Edited by MEERA

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, RishiK said:

தைப்பொங்கல் விழா மதரீதியானதா இனரீதியானதா? 

தைத்திருநாள் மத ரீதியானது. சூரியனை வணங்கும் நாள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் பண்டிகையானது தமிழர் கலாச்சாரத்தை உணர்த்தும் பண்டிகையாக விளங்குகிறது!

பொங்கல் பண்டிகையானது தமிழர் கலாச்சாரத்தை உணர்த்தும் பண்டிகையாக விளங்குகிறது!

பொங்கல் பண்டிகையானது தமிழர் கலாச்சாரத்தை உணர்த்தும் பண்டிகையாக விளங்குகிறது. சூரியனாக கருதப்படும் இறைவனுக்கு நன்றி கூறும் வகையில் இந்த பொங்கல் பண்டிகை தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையானது உழவர் திருநாளாக தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகை உருவான கதை:

பொங்கல் பண்டிகையின் தோற்றமானது எப்போது உருவானது என்று சரியாக தெரியவில்லை என்றாலும் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது என்று ஒரு கூற்று உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டாடப்படுகிறது என்று இன்னொரு கூற்றும் உள்ளது. சோழர் காலங்களில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர் இருந்தது. இதற்கு என்ன பொருள் என்றால் ஆண்டினுடைய முதல் அறுவடை என்று அர்த்தமாம். உழவர்கள் தை மாதம் முதல் நாளில் அறுவடை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். பின்னர் இதுதான் பொங்கல் பண்டிகையாக மாறியது என்று கூறுகிறார்கள்.

பொங்கல் பண்டிகையானது வேளாண்மையை அடிப்படையாக கொண்ட நாளாகும். பொங்கல் அன்று விவசாயிகள் தாங்கள் நிலத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியைஇ புதுப்பானையில் பொங்கலிட்டுஇ தோட்டத்தில் விளைந்த இஞ்சிஇ மஞ்சள்இ கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்துஇ நன்றி தெரிவிக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.

ஒரு சிலர் பொங்கல் அன்று புதிய பானையிலோ அல்லது வழக்கம் மாறாமல் எப்போதும் வைக்கும் பொங்கல் பானையில் மஞ்சள் குங்குமம் இட்டுஇ பொங்கல் பானையின் கழுத்து பகுதியில் விளைந்த மஞ்சள் கொத்தினை கட்டி நல்ல நேரம் பார்த்து பொங்கல் வைப்பார்கள்.
பால் பானையிலிருந்து பொங்கி வழியும் நேரத்தில் வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் ஒன்றாக சேர்ந்து பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் உரைப்பார்கள். பொங்கல் தயார் செய்த பிறகு அவர்களுடைய இஷ்ட தெய்வத்திற்கு படைத்துவிட்டு தீபம் காட்டிய பிறகு அனைவருக்கும் கொடுத்துவிட்டு உண்பார்கள்.

பொங்கல் பொதுவாக நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். முதல் நாளில் போகி பண்டிகையும் இரண்டாம் நாளில் பொங்கல் பண்டிகையும் மூன்றாம் நாள் பட்டிப்பொங்கல் அல்லது மாட்டுப்பொங்கலும் நான்காவது நாள் காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.

அதற்கமைய போகி பண்டிகை தினத்தன்று காலையிலேயே அனைவரும் குளித்து வீட்டில் இருக்கக்கூடிய தேவையில்லாத பொருள்களை வீட்டின் முன்பு எரித்து போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

பொங்கல் பண்டிகை – இந்த பண்டிகைக்கு சர்க்கரை பொங்கல் என்ற பெயரும் உள்ளது. புதுப்பானை எடுத்துஇ மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டிஇ புதுப் பாலில்இ புது அரிசியிட்டுஇ வெல்லம் உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிடுவார்கள். வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்த பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும்.
மாட்டு பொங்கல்: உழவர்களின் வாழ்வில் முக்கிய பங்காக இருப்பது கால்நடைகள். கிராமங்களில் மாட்டு பொங்கலானது மிக சிறப்பாக கொண்டாடப்படும். மாடுகள் இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்தி மாடுகளை குளிப்பாட்டி வண்ணம் பூசி உழவு கருவிகள் அனைத்தையும் வைத்து படையல் வைத்துஇ வருடம் முழுவதும் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக பொங்கல் வைக்கபடுகிறது. மாட்டு பொங்கலின் போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

காணும் பொங்கல்: காணும் பொங்கல் அன்று பிரிந்த நண்பர்கள்இ உறவினர்களை சந்திக்கும் நாளாகும். பெண்கள் தங்களுடைய சகோதரின் நலனுக்காக படைப்பது காணும் பொங்கல். இந்த நான்காம் தின பொங்கலை கன்னி பொங்கல்இ கணு பொங்கல்இ காணும் பொங்கல் என்று அழைப்பார்கள்.

பொங்கல் விளையாட்டு:

பொங்கல் என்றாலே கிராமங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நிறைய விளையாட்டு போட்டிகள் நடைபெறும். பொங்கல் நிகழ்ச்சிகள் அன்று
காலம் காலமாக கபடிஇ சிலம்பம்இ உறியடிஇ மாட்டு வண்டி பந்தயம்இ ஏறுதழுவுதல் பெண்களுக்கான சில போட்டிகளும் நடைப்பெறும்.

தமிழர்களின் திருநாளாக உழவர் திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையைஇ தமிழக அரசு தமிழ்ப் புத்தாண்டு தினமாகவும் அறிவித்துள்ளதால்இ தமிழர்கள் அனைவரும் இந்த இனிய நாளை இரட்டிப்பு சந்தோஷத்துடன்இ தித்திப்புடன் கொண்டாட வாழ்த்துவோம். எந்நாளும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கி அது நீங்காமல் இருக்க உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். வரும் ஆண்டில் எல்லா வளமும் நலமும் பெற்று அமைதியுடன் வாழவும் சூரியக் கடவுளைப் பிரார்த்திப்போம்.

https://athavannews.com/2025/1416289

  • கருத்துக்கள உறவுகள்

 புறநானூறில் இருந்து சங்க கால தமிழர் பொங்கல். 

 புறநானூறு 168 வது பாட்டு
 
அருவி பாயும் மூங்கில்-காடு. அந்த மூங்கிலில் மிளகுக் கொடிகள் படர்ந்திருக்கும். காட்டுப் பன்றிக் குடும்பம் அங்குள்ள காந்தள் கிழங்குகளைக் கிண்டி உண்ணும். அவை கிண்டிய புழுதியில் அங்கு வாழும் குறவர்-மக்கள் தினையை உழாமலேயே விதைப்பர். அதில் விளைந்த தினையை மரையான் என்னும் காட்டுப்பசுக்கள் மேயும். அந்த மரையானின் பாலைக் கறந்து ஊற்றி மான்கறியை அதில் ஊற்றிப் புன்கம் (பொங்கல்) சமைப்பர். சந்தன விறகில் தீ மூட்டிச் சமைப்பர். அவர்களின் வீட்டு முற்றத்தில் கூதளம்பூ பூத்துக் கிடக்கும். வரும் விருந்தினர்களுக்கெல்லாம் வாழை இலையில் அந்த முற்றத்தில் பங்கிட்டுத் தருவர்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, island said:

சைவர்களுக்கு நிறைய பொங்கல் வகைகள் இருக்கின்றன. புதுமனை புகுதலுக்கும் பொங்குவார்கள். நெல் கதிர் அறுவைக்கும் பல இடங்களில் பொங்கல் வைப்பர். இப்படி பல பொங்கல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.அதிலும் விவசாயிகள்  எல்லா தொடக்க செயலுக்கும் பொங்கல் பொங்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, MEERA said:

தமிழ் கிறீஸ்தவ உழவர்களோ அல்லது கிறீஸ்தவ தேவாயலங்களோ இந்த திருநாளை கொண்டாடுகிறார்களா? 
 
இந்தியாவில் பல மாநிலங்களில்  UTTARAYAN , SANKARANTI என்ற பெயர்களில் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

15 வருசம் , அதற்கு முதல் தெரியாது.

16 minutes ago, Kapithan said:

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, MEERA said:

15 வருசம் , அதற்கு முதல் தெரியாது.

இந்த மாற்றம் ஒரு  குறிப்பிட்ட காலப்பகுதியின் பின்னரே ஏற்பட்டது.  உலகெங்கிலும் கத்தோலிக்க திருச்சபை மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவில், கத்தோலிக்கர் தங்கள் இனத்தின்  கலை கலாசார பண்பாட்டு அடிப்படையில் மதச் சடங்குகளை நடாத்தும் மாற்றம் 1970களில்  கொண்டுவரப்பட்டது. அதில் ஒன்று சொந்த மொழிகளில் பிரார்த்தனை செய்தல். அதற்கு  முன்னர் லத்தீன் மொழியிலேயே பிராரசெய்யப்பட்டதாக நினைக்கிறேன். 

(எங்கிருந்தோ வயிறெரிந்து  புகை கிளம்புகிற மணம் வருகிறது ) 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

மேலும் வர்த்தக நிலையங்கள், நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட தோடு விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

9 hours ago, RishiK said:

தைப்பொங்கல் விழா மதரீதியானதா இனரீதியானதா? 

இனரீதியானது ...ஆனால் இன்று சிறிலங்காவில் சிறிலங்கா தேசிய விழாவாக கொண்டாடுகிறார்கள் ...தேசிய மக்கள் சக்தியினர்...இதற்கு ஏற்ற வகையில் சுயேட்சையில் வென்ற எம்.பி வீடியோ வெளியிட்டுள்ளார் .,தமிழ் சிங்கள  தை பொங்கல் எண்டு...
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இந்த மாற்றம் ஒரு  குறிப்பிட்ட காலப்பகுதியின் பின்னரே ஏற்பட்டது.  உலகெங்கிலும் கத்தோலிக்க திருச்சபை மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவில், கத்தோலிக்கர் தங்கள் இனத்தின்  கலை கலாசார பண்பாட்டு அடிப்படையில் மதச் சடங்குகளை நடாத்தும் மாற்றம் 1970களில்  கொண்டுவரப்பட்டது. அதில் ஒன்று சொந்த மொழிகளில் பிரார்த்தனை செய்தல். அதற்கு  முன்னர் லத்தீன் மொழியிலேயே பிராரசெய்யப்பட்டதாக நினைக்கிறேன். 

இதற்கான ஆதாரத்தை இணைக்க முடியுமா?

1970 இல் களில் ஏற்பட்ட மாற்றம் பாசையூருக்கு போய்  15 வருசம் தான் ஆச்சு.

2 hours ago, Kapithan said:

(எங்கிருந்தோ வயிறெரிந்து  புகை கிளம்புகிற மணம் வருகிறது ) 

உங்கட வீட்டு  புக்கைப் பானையிலிருந்து வருகிறதென நினைக்கிறேன்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

இதற்கான ஆதாரத்தை இணைக்க முடியுமா?

1970 இல் களில் ஏற்பட்ட மாற்றம் பாசையூருக்கு போய்  15 வருசம் தான் ஆச்சு.

இது கண்டிக்கு அருகில் அம்பிட்டியவில் இருக்கும் கத்தோலிக்க குருக்கள் பயிற்சிக் கல்லூரி (National Seminary) யில் நிகழ்ந்த பொங்கல் நிகழ்வு:

https://www.facebook.com/Philosophate.Kandy/

கபிதான் குறிப்பிட்ட மாற்றங்கள் 70 களில் நிகழ்ந்தன. இரண்டாம் வத்திக்கான் சங்கம் (Vatican Council II) என்ற தொடர் ஆய்வு 1965 வரை நடத்தப் பட்டு, ஒவ்வொரு இனமக்களினதும் பண்பாட்டு அடிப்படையில் வழிபாடு செய்யப் பட வேண்டுமென்ற அறிவுறுத்தல் 70 களில் கொண்டு வரப் பட்டது. ஆனால், 90 களில் தான் யாழ் மறைமாவட்டத்தில் இந்த மாற்றங்களில் பெரும்பாலானவை நடைமுறைப் படுத்த ஆரம்பித்தார்கள். "பண்பாட்டுத் திருப்பலி" என்ற முறையில் தமிழ் பாரம்பரியங்களில் ஒன்றாக பொங்கல் நிகழ்வுகளும் சேர்க்கப் பட்டன.

கீழே இருப்பது இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ஆவணங்கள் பற்றிய இணைப்பு.

https://www.britannica.com/event/Second-Vatican-Council

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, MEERA said:

இதற்கான ஆதாரத்தை இணைக்க முடியுமா?

1970 இல் களில் ஏற்பட்ட மாற்றம் பாசையூருக்கு போய்  15 வருசம் தான் ஆச்சு.

உங்கட வீட்டு  புக்கைப் பானையிலிருந்து வருகிறதென நினைக்கிறேன்.

நீங்கள்  ஆதாரம் கேட்பது உண்மையை அறிந்துகொள்வதற்காக  அல்ல, மாறாக கிறீஸ்தவர்களின் மீதான காழ்ப்புணர்வின் காரணமாக ஏற்பட்ட சந்தேகம்தான். 

நீங்கள் ஒரு சாதி, சமய வெறியர் என்கிற எனது அனுமானம்  சரி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள். எனது தேவையும் ஆட்டுத் தோல் போர்த்த ஓநாய்களை இனம் காட்டுவதுதான். உங்கள் கோபமே உங்களை யார் என்று காட்டிக் கொடுக்கிறது. அதற்கு முதற்கண் உங்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக. 

உங்களுக்குரிய ஆதாரத்தை நீங்களே தேடிப் பாருங்கள். 

🤣

👉.       Second Vatican Council 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சைவர்களுக்கு நிறைய பொங்கல் வகைகள் இருக்கின்றன. புதுமனை புகுதலுக்கும் பொங்குவார்கள். நெல் கதிர் அறுவைக்கும் பல இடங்களில் பொங்கல் வைப்பர். இப்படி பல பொங்கல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.அதிலும் விவசாயிகள்  எல்லா தொடக்க செயலுக்கும் பொங்கல் பொங்குவார்கள்.

புகையிலைக் கன்றுக்கு தலைப்பு  முதல் முறிக்கும் பொழுதும் பொங்கல் வைப்பது எங்கள் ஊரில் வழமை. விவசாயீகள் அடிக்கடி போங்குவார்கள். உழவர்திருநாள்தானே பொங்கல். அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, putthan said:

இனரீதியானது ...

அதாவது தமிழினம் ரீதியானதா தைப்பொங்கல்?

  • கருத்துக்கள உறவுகள்

மதங்களைக்கடந்து ஒரு பண்டிகையை தமிழர் பண்டிகையாக அனைத்து தமிழரும் கொண்டாட முன்வருவதை வரவேற்று அதை ஊக்குவித்து  மகிழாமல் இதற்குள்ளும் மத பிரிவினைகளை ஊக்கிவித்து சுகம் காணும் இழி  மனநிலையுடன் தமிழர் தாயகவிடுதலை என்று  தனி நாடு  கேட்டிருக்கிறோம். இப்போதும் தன்னாட்சி என்று வெற்று கோஷங்களை மட்டும் செய்கிறோம்.   ஒன்றிணைந்து அனைவரையும் மதங்களை கடந்து அரவணைக்கும் பக்குவம் இல்லை என்றால் அரசியல் விடுதலை கானல் நீர் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

அதாவது தமிழினம் ரீதியானதா தைப்பொங்கல்?

இயற்கைக்கு நன்றி செலுத்தும் வழக்கம்  உலகம் முழுவதும் உள்ள நடைமுறைதான். இந்தியக் கண்டத்தில் மாத்திரம் அதனை சாதி சமய ரீதியில் பிரித்துப் பார்க்கிறார்கள். 

ஒரு இனத்தை ஒன்று சேர்க்கும் விடயங்கள் எல்லாம் வரவேற்கப்பட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி ஆகிய அறுவடை நாள் விழாக்களுக்கும் அந்த மக்களின் மதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு 

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோற்றம் பெற்ற தனித்தமிழ் இயக்கம் மற்றும் திராவிட இயக்கத்தினரால்  வட இந்திய வேத மரபில் வந்த தீபாவளி போன்ற கொண்டாட்டங்களுக்கு எதிராக, தமிழர்களுக்கு என்று தாம் ஒரு தனி இனம் எனக் காட்டிட, ஒரு கொண்டாட்டம் தேவை எனும் புரிதல் ஏற்பட்டது. அதற்காக பொங்கல் பண்டிகையின் மத அடையாளம் மறைக்கப்பட வேண்டிய தேவை அன்றைய தமிழ் ஆர்வலர்களுக்கு இருந்தது. இதற்கு உதவியாக பண்டைய சில தமிழ் செய்யுள்கள் அமைந்து விட்டது அவர்களுக்கு தமது காரியத்தை செயல்படுத்த இலகுவாக்கி விட்டது . எமது முன்னோர்கள் அதை வேத பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராகவும் தமிழரை ஒற்றுமைப் படுத்தவுமே செய்தார்கள் 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, island said:

மதங்களைக்கடந்து ஒரு பண்டிகையை தமிழர் பண்டிகையாக அனைத்து தமிழரும் கொண்டாட முன்வருவதை வரவேற்று அதை ஊக்குவித்து  மகிழாமல் இதற்குள்ளும் மத பிரிவினைகளை ஊக்கிவித்து சுகம் காணும் இழி  மனநிலையுடன் தமிழர் தாயகவிடுதலை என்று  தனி நாடு  கேட்டிருக்கிறோம். இப்போதும் தன்னாட்சி என்று வெற்று கோஷங்களை மட்டும் செய்கிறோம்.   ஒன்றிணைந்து அனைவரையும் மதங்களை கடந்து அரவணைக்கும் பக்குவம் இல்லை என்றால் அரசியல் விடுதலை கானல் நீர் தான். 

முதலில் எல்லோரும் சமம் என்ற கொள்கையை தூக்கியவர்கள் தமிழர்கள் தான்,மாற்று மதங்களையும் பண்டிகைகளையும் தூக்கி பிடித்தவர்களும் தமிழர்கள் தான். இருந்தும் தமிழர்களுடன் விசுவாசமாக இல்லாமல் இன்றும் அழிவு  சிந்தனையுடன் அலைபவர்கள் அவர்களே ஒழிய தமிழர்கள் அல்ல.

1 hour ago, Kapithan said:

இயற்கைக்கு நன்றி செலுத்தும் வழக்கம்  உலகம் முழுவதும் உள்ள நடைமுறைதான்.

எங்கே ஒவ்வொன்றாக சொல்லுங்கள் பார்க்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

முதலில் எல்லோரும் சமம் என்ற கொள்கையை தூக்கியவர்கள் தமிழர்கள் தான்,மாற்று மதங்களையும் பண்டிகைகளையும் தூக்கி பிடித்தவர்களும் தமிழர்கள் தான். இருந்தும் தமிழர்களுடன் விசுவாசமாக இல்லாமல் இன்றும் அழிவு  சிந்தனையுடன் அலைபவர்கள் அவர்களே ஒழிய தமிழர்கள் அல்ல.

தமிழர்களுடன் விசுவாசமாக இல்லாமல் இருப்பது யார் என்று  நீங்கள் நேரடியாகவே அவர்களைக்  கூறலாம். பூடகமாகச் சொல்வதால் பயனில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

l

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

முதலில் எல்லோரும் சமம் என்ற கொள்கையை தூக்கியவர்கள் தமிழர்கள் தான்,மாற்று மதங்களையும் பண்டிகைகளையும் தூக்கி பிடித்தவர்களும் தமிழர்கள் தான். இருந்தும் தமிழர்களுடன் விசுவாசமாக இல்லாமல் இன்றும் அழிவு  சிந்தனையுடன் அலைபவர்கள் அவர்களே ஒழிய தமிழர்கள் அல்ல.

எங்கே ஒவ்வொன்றாக சொல்லுங்கள் பார்க்கலாம்?

ஒவ்வொன்றாகச் சொல்வதற்கு நாள்  போதாது. ஏனென்றால் நன்றி செலுத்துதல் என்பது உலகளாவிய பண்பாடு. 

சமூகவியல் கற்றவர்களுக்கு அது தெரியும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.