Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர

anura-us.jpg

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது அடுத்த வெளிநாட்டு விஜயமாக அமெரிக்கா செல்லவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்தார்.

அதன் பின்னர் ஜனாதிபதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, பிராந்திய வல்லரசுகளாக இந்தியா மற்றும் சீனாவுக்கு விஜயம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகின் அனைத்து நாடுகளுடனும் பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த விஜயங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://akkinikkunchu.com/?p=308530

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த் வேறு எந்த நாடுகளையும் அனுமதிக்க மாட்டாம் ...அனுரா அமெரிக்காவில் கூறினார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கையும் ராஜமரியாதை கிடைக்கும் எண்டு கனவு காணப்படாது 😎

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா பக்கமும் மணியை அடிச்சு பார்க்கிறார் .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, putthan said:

அமெரிக்காவுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த் வேறு எந்த நாடுகளையும் அனுமதிக்க மாட்டாம் ...அனுரா அமெரிக்காவில் கூறினார்

5 hours ago, குமாரசாமி said:

அங்கையும் ராஜமரியாதை கிடைக்கும் எண்டு கனவு காணப்படாது 😎

4 hours ago, பெருமாள் said:

எல்லா பக்கமும் மணியை அடிச்சு பார்க்கிறார் .

எல்லா குதிரைகளிலும் சவாரி செய்த

சக்கடத்தார் இங்கே தான் தவறி விழப்போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

எல்லா குதிரைகளிலும் சவாரி செய்த

சக்கடத்தார் இங்கே தான் தவறி விழப்போகிறார்.

அதுவும் ரம்பிடம்...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

அதுவும் ரம்பிடம்...

தம்பி நீ போய் வா ,உன்ட ரட்ட  அமெரிக்காவின் தத்து பிள்ளை ....நான் விரும்பினால் 52 ஆவ்து மாநிலமகா மற்றி விடுவேன் ..போய் வா ...சத்தம் போடாமல் ...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

அதுவும் ரம்பிடம்...

"ஒழுங்கு மரியாதையாய் திருகோணமலையை அமெரிக்காவுக்கு எழுதி தந்து விட்டு கிளம்பி போ"

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

தம்பி நீ போய் வா ,உன்ட ரட்ட  அமெரிக்காவின் தத்து பிள்ளை ....நான் விரும்பினால் 52 ஆவ்து மாநிலமகா மற்றி விடுவேன் ..போய் வா ...சத்தம் போடாமல் ...

இதுக்கு நான்  கன டாக்கரன் சப்போட்டு..ஒரே நாட்டுக்காரர் ஆகிடுவோமில்ல.

28 minutes ago, பெருமாள் said:

"ஒழுங்கு மரியாதையாய் திருகோணமலையை அமெரிக்காவுக்கு எழுதி தந்து விட்டு கிளம்பி போ"

இது காணாவிட்டால்..  வடக்கையும் சேர்த்து எடுங்கோ....என்னைவிட்டால் காணும் என்றூ..எழும்பி ஓடி வந்திடுவார்...🤣

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தொடர்ந்தும் சிங்களத்தில் அரசியல் மதிநுட்பத்திறனைக் குறைத்து மதிப்பிட்டு வருவதன் விளைவாகவே வீழ்த்தப்பட்டு வரும் அதேவேளை சிங்களம் பெரும் தமிழின அழிப்பைத் தொடர்ந்து செய்தவாறு புதுப்புது அரசியல் முகங்களோடு முன்னோக்கி நகர்கிறது. தமிழினமோ சிங்களத்தை ஒருவகை எள்ளலோடு நோக்குவதன் விளைவாக இழப்புகளைச் சந்தித்து வருகிறது. புலம்பெயர் நாடுகள் முதல் தாயகம் வரை தமிழரிடையே 2009பின்னர் ஒரு நிலைத் தன்மையற்ற சூழலையே காணமுடிகிறது. இவற்றைக் கடந்து உண்மையான சுய ஆய்வைத் தமிழினம் மேற்கொள்வதே தன்னைத தகவமைத்துக்கொள்ள வழிபிறக்கும்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, putthan said:

அமெரிக்காவுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த் வேறு எந்த நாடுகளையும் அனுமதிக்க மாட்டாம் ...அனுரா அமெரிக்காவில் கூறினார்

🤣

அவர் பேச இருந்ததை அப்படியே சொல்லிவிட்டீர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, putthan said:

தம்பி நீ போய் வா ,உன்ட ரட்ட  அமெரிக்காவின் தத்து பிள்ளை ....நான் விரும்பினால் 52 ஆவ்து மாநிலமகா மற்றி விடுவேன் ..போய் வா ...சத்தம் போடாமல் ...

இந்தியாவில் தற்போது மோடி ஆட்சி இருப்பதால் எதுவுமே சொல்ல முடியாது.ஆனால் அனுரவிற்கு தாரை தம்பட்ட வரவேற்பு இருக்காது எண்டு இப்பவே அடிச்சு சொல்லுறன்.😃

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nochchi said:

நாங்கள் தொடர்ந்தும் சிங்களத்தில் அரசியல் மதிநுட்பத்திறனைக் குறைத்து மதிப்பிட்டு வருவதன் விளைவாகவே வீழ்த்தப்பட்டு வரும் அதேவேளை சிங்களம் பெரும் தமிழின அழிப்பைத் தொடர்ந்து செய்தவாறு புதுப்புது அரசியல் முகங்களோடு முன்னோக்கி நகர்கிறது. தமிழினமோ சிங்களத்தை ஒருவகை எள்ளலோடு நோக்குவதன் விளைவாக இழப்புகளைச் சந்தித்து வருகிறது. புலம்பெயர் நாடுகள் முதல் தாயகம் வரை தமிழரிடையே 2009பின்னர் ஒரு நிலைத் தன்மையற்ற சூழலையே காணமுடிகிறது. இவற்றைக் கடந்து உண்மையான சுய ஆய்வைத் தமிழினம் மேற்கொள்வதே தன்னைத தகவமைத்துக்கொள்ள வழிபிறக்கும்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

கவலைப்பட வேணாம் சிங்களம் எந்தபக்கம் மூவ் பண்ணினாலும் "செக்மேட்" தான் .

முதலில் தமிழருக்கு ஒரு நிலையான தீர்வை கொடுக்குமட்டும் .

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பெருமாள் said:

கவலைப்பட வேணாம் சிங்களம் எந்தபக்கம் மூவ் பண்ணினாலும் "செக்மேட்" தான் .

முதலில் தமிழருக்கு ஒரு நிலையான தீர்வை கொடுக்குமட்டும் .

நன்று. நடப்பவை நல்லவையாக நடந்தால் நன்மையே. ஆனால், எப்படி இவளவு உறுதியாகக் கூறுகின்றீர்கள். ஆயுதமற்ற தமிழர்களோடு ஒரு சத்தமற்ற இன அழிப்பை சிறிலங்கா தொடர்கிறது. தமிழர் பிரதேசங்கள் ஊடறுக்ப்பட்டு சிதைக்கப்பட்டுவரும் சூழலில் அரசுதான் புதிதே தவிர அதனது இனவாதமுகம் புதிதல்லவே. அவர்கள் 13ஐயே ஒழித்தக்கட்டும் திட்டத்தோடு, நீங்களோ இப்படிக் கூறுகின்றீர்கள். யார் குத்தியாவது அரிசியானால் சரி. ஆனால், உமியைத் தந்துவிட்டு அரிசையைக் கொடுத்தோம் என்று சிங்களத்தோடு சேர்ந்து உலகு சொல்லாதவரை நன்மையே. ஏதோ சட்டுபுட்டெண்டு முடிந்தால் AfD  காரன் அனுப்பமுதல் ஊருக்குக் கிளம்பிவிடலாம். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, putthan said:

அமெரிக்காவுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த் வேறு எந்த நாடுகளையும் அனுமதிக்க மாட்டாம் ...அனுரா அமெரிக்காவில் கூறினார்

அமெரிக்கா அம்பலாங்கொடையில் 1.3 பில்லியன் செலவில் சூரிய ஆலை திட்டத்தை ஆரம்பிப்பதாக அனுரவிடம் டிரம்ப் உறுதியளித்தார்!

8 hours ago, ஈழப்பிரியன் said:

எல்லா குதிரைகளிலும் சவாரி செய்த

சக்கடத்தார் இங்கே தான் தவறி விழப்போகிறார்.

1948 இல் இருந்து சக்கடத்தர் குதிரைகள் மாறி மாறி இலாவகமாக ஓடுகிறார். விழுந்தாலும் எழுந்து ஓடுகிறார். குதிரைகளும் கை கொடுக்கிறன.

எங்களுக்குத்தான் ஒரு கழுதையில் ஏற கூட தெம்பில்லை🤣.

2 hours ago, nochchi said:

நாங்கள் தொடர்ந்தும் சிங்களத்தில் அரசியல் மதிநுட்பத்திறனைக் குறைத்து மதிப்பிட்டு வருவதன் விளைவாகவே வீழ்த்தப்பட்டு வரும் அதேவேளை சிங்களம் பெரும் தமிழின அழிப்பைத் தொடர்ந்து செய்தவாறு புதுப்புது அரசியல் முகங்களோடு முன்னோக்கி நகர்கிறது. தமிழினமோ சிங்களத்தை ஒருவகை எள்ளலோடு நோக்குவதன் விளைவாக இழப்புகளைச் சந்தித்து வருகிறது. புலம்பெயர் நாடுகள் முதல் தாயகம் வரை தமிழரிடையே 2009பின்னர் ஒரு நிலைத் தன்மையற்ற சூழலையே காணமுடிகிறது. இவற்றைக் கடந்து உண்மையான சுய ஆய்வைத் தமிழினம் மேற்கொள்வதே தன்னைத தகவமைத்துக்கொள்ள வழிபிறக்கும்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

அருமையான கருத்து. ஆனால் எமது மக்களில் 1% க்கு கூட இது விளங்காது.

டிசை அப்படி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

நன்று. நடப்பவை நல்லவையாக நடந்தால் நன்மையே. ஆனால், எப்படி இவளவு உறுதியாகக் கூறுகின்றீர்கள். ஆயுதமற்ற தமிழர்களோடு ஒரு சத்தமற்ற இன அழிப்பை சிறிலங்கா தொடர்கிறது. தமிழர் பிரதேசங்கள் ஊடறுக்ப்பட்டு சிதைக்கப்பட்டுவரும் சூழலில் அரசுதான் புதிதே தவிர அதனது இனவாதமுகம் புதிதல்லவே. அவர்கள் 13ஐயே ஒழித்தக்கட்டும் திட்டத்தோடு, நீங்களோ இப்படிக் கூறுகின்றீர்கள். யார் குத்தியாவது அரிசியானால் சரி. ஆனால், உமியைத் தந்துவிட்டு அரிசையைக் கொடுத்தோம் என்று சிங்களத்தோடு சேர்ந்து உலகு சொல்லாதவரை நன்மையே. ஏதோ சட்டுபுட்டெண்டு முடிந்தால் AfD  காரன் அனுப்பமுதல் ஊருக்குக் கிளம்பிவிடலாம். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

இப்படி சட்டென்று கேள்வி கேட்கப்படாது…அப்படியே ஓடி போய்விடுவோம்.

உங்களுக்கு தெரியாதாக்கும், எமக்கு படியளக்கும் தெய்வம், பார் புகழும் சிறி இராஜதந்திரதில் அனுரவை செக்மேட்,  பண்ணி வைத்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

நன்று. நடப்பவை நல்லவையாக நடந்தால் நன்மையே. ஆனால், எப்படி இவளவு உறுதியாகக் கூறுகின்றீர்கள். ஆயுதமற்ற தமிழர்களோடு ஒரு சத்தமற்ற இன அழிப்பை சிறிலங்கா தொடர்கிறது.

சிம்பிள் அதானியின் திட்டம் கள் முழுமையாக தடை செய்ய பட்டதா ?

இல்லை 

ஏன் அனாவசியம் அற்று யாழில் இந்திய துணை துதரகம் ? அதயேன் அனுரா அரசு விட்டு வைத்து இருக்கு ?

  • கருத்துக்கள உறவுகள்

பார் போற்றும் என் டீலர்…சை…லீடரின் கெட்டித்தனம்தான் எல்லாம் 🤣.

அதானிக்கே அமிர்தாஞ்சன் தடவினம்ல 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nochchi said:

நாங்கள் தொடர்ந்தும் சிங்களத்தில் அரசியல் மதிநுட்பத்திறனைக் குறைத்து மதிப்பிட்டு வருவதன் விளைவாகவே வீழ்த்தப்பட்டு வரும் அதேவேளை சிங்களம் பெரும் தமிழின அழிப்பைத் தொடர்ந்து செய்தவாறு புதுப்புது அரசியல் முகங்களோடு முன்னோக்கி நகர்கிறது. த

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

அதில் ஒன்று யாழப்பாணத்தில் தேசிய பொங்கல் என தமிழர் அடையாளங்களை மெல்ல மெல்ல அழித்தல்....எம்மவர்கள் இதில் என்ன தப்பு இருக்கு என விவாதிக்க வரலாம்....நீண்ட கால்த்தின் பின் விளைவுகளை நாங்கள் அனுபவிப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

அமெரிக்கா அம்பலாங்கொடையில் 1.3 பில்லியன் செலவில் சூரிய ஆலை திட்டத்தை ஆரம்பிப்பதாக அனுரவிடம் டிரம்ப் உறுதியளித்தார்!

எங்களுக்குத்தான் ஒரு கழுதையில் ஏற கூட தெம்பில்லை🤣.

அருமையான கருத்து. ஆனால் எமது மக்களில் 1% க்கு கூட இது விளங்காது.

டிசை அப்படி.

அந்த கழுதையும் நல்ல கழுதையாக, நாலு காலும் நல்லதா இருக்க வேணும் ,மூட்டை சுமக்க கூடியாத இருக்க வேணும் என அடம் பிடிக்கிறோம் ....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.