Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புலவர் said:

https://x.com/drsenthil84/status/1881028773812019434

Gd5OheSj?format=jpg&name=small

Date and Time (Original) - 2008:02:14 21:48:36 Date and Time (Digitized) - 2008:02:14 21:48:36

சைமன், பிரபாகரனைச் சந்தித்தது உண்மை. ஆனால் இந்தப் படத்தைப் பார்க்கையில் பிரபாகரனின் வலது கை எங்கே என்ற கேள்வி ஒன்று வருகின்றது.

  • Replies 544
  • Views 26k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி.

  • விசுகு
    விசுகு

    யாழ் கள உறவுகளே... வணக்கம்  இவர் போன்றவர்கள் இங்கே வருவதே இது போன்ற குப்பைகளை இங்கே கொட்டவும் அதனைக் கொண்டு எம்மிடையே மேலும் மேலும் பிளவுகளையும் ஒருமித்து நிற்க முடியாத அளவுக்கு சிக்கல்களை ஏ

  • சீமான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும், நடத்திய இயக்கத்தையும் வைத்து தன் பிழைப்பை நடத்தாமல் இருந்தாலே யாரும் அவரையும், ஆதரவாளர்களையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வர். அது தொடரும் வரை இது போன்ற செய்திக

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

அப்போ பாலஸ்தீனர்களின் நிலத்தை இஸ்ரேலியர்கள் ஆட்டையை போடவில்லை என்கிறீர்களா?

https://www.aljazeera.com/news/2023/11/27/palestine-and-israel-brief-history-maps-and-charts

மேலே தெளிவாக சொல்லி உள்ளேனே எ.பொ.த.

காசா, மேற்குகரை, கிழக்கு ஜேருசலேம் என்பன இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகள் என்பதுதான் உலகத்தின், சர்வதேச சட்டத்தின் நிலைப்பாடு.

ஆனால் இதில் காசாவை பலவருடமாக, ஆக் 2023 வரை இஸ்ரேல் ஆக்கிரமிக்கவில்லை. மேற்குகரையில் பல பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. கிழக்கு ஜெருசலேமை முழுவதும் ஆக்கிரமித்து, ஒன்று பட்ட ஜெருசலேம் தம் தலைநகர் என்கிறது.

ஜெருசலம் சிக்கலான விடயம். 

ஆனால் ஏனைய பகுதிகள் ஒரு பலஸ்தீன நாடு உருவாக்கும் போது அதன் பகுதிகளாக வேண்டியன. இதை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதும், குடியேற்றுவதும் அடாத்து.

ஆனால் அதேபோல் இஸ்ரேல் என்பது இருக்கவே கூடாது என ஹமாஸ் சொல்லுவதும் நில அபகரிப்புத்தான். இதத்தான் வாலி கூறினார்.

பிகு

 கோலான் குன்றுகள் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு முக்கியமானவை, அதில் இருந்து இஸ்ரேலை தெளிவாக நோட்டம் விடலாம்.

இஸ்ரேலை வழித்தொழிப்போம் என சொல்லும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்றனவின் கையில் இப்படியான இடங்கள் விழக்கூடாது என்பது இஸ்ரேலின் வாதம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

சைமன், பிரபாகரனைச் சந்தித்தது உண்மை. ஆனால் இந்தப் படத்தைப் பார்க்கையில் பிரபாகரனின் வலது கை எங்கே என்ற கேள்வி ஒன்று வருகின்றது.

முட்டு கோஸ்டிகள் இதற்கு என்ன கதை சொல்லபோகிறார்கள் என காண ஆவலாக உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

முட்டு கோஸ்டிகள் இதற்கு என்ன கதை சொல்லபோகிறார்கள் என காண ஆவலாக உள்ளேன்.

நாங்க‌ள் முட்டு கொடுக்க‌ வில்லை

இந்த‌ ப‌ட‌ம் ப‌ற்றிய‌ உண்மை அவ‌ன் அறிவான்..................ந‌டேஷ‌ன் ஜ‌யா கூட‌ அண்ண‌ன் சீமான் கூட‌ நேர‌ம் ஒதுக்கி இருக்கிறார்..................ப‌ட‌ம் ப‌ல‌ கோன‌த்தில் இருப்ப‌தால் இப்போதைக்கு இதை ப‌ற்றி ஒன்றும் சொல்ல‌ முடியாது பிரோ..................

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் - பிரபாகரன் சந்திப்பு புகைப்படம் சர்ச்சையாவது ஏன்? பின்னணி என்ன?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து நிற்பது போன்ற புகைப்படம் தான் எடிட் செய்தது என்று திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இந்த கருத்து குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

சீமானுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர், தான் ஒரு செய்தித் தொலைக்காட்சியில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, தன்னிடம் புகைப்படங்களை கொடுத்து எடிட் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

சீமான் பிரபாகரனை நேரில் சந்தித்தாரா இல்லையா, சந்தித்த போது புகைப்படம் எடுத்தாரா இல்லையா என்று தனக்கு தெரியாது என்று கூறும் சங்ககிரி ராஜ்குமார், இந்த புகைப்படம் பிரபாகரனுடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்டதாக கூறுவது பொய் என்று கூறுகிறார்.

சீமான் மீதும் பிரபாகரன் மீதும் கொண்ட மரியாதை காரணமாகவும், இந்த புகைப்படம் சீமானுக்கு தமிழக அரசியலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த உதவட்டும் என்று நினைத்தும், தான் எடிட் செய்த விசயத்தை இதுவரை வெளியில் சொல்லவில்லை என்று சங்ககிரி ராஜ்குமார் கூறுகிறார்.

மேலும், பெரியார் மீதான அவதூறு பேச்சு உட்பட சமீப காலமாக சீமானின் கருத்துகள் தனக்கு உடன்பாடாக இல்லாததால், பொது சமூகத்தின் நலன் கருதி இந்த உண்மையை இப்போது கூறும் கட்டாயத்தில் இருப்பதாக அவர் கூறுகிறார்.

இது குறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "அந்த புகைப்படத்தை அவர் சீமானுக்கு பரிசளிக்கப் போவதாக கூறி செங்கோட்டையன் என்ற நண்பர் அந்த புகைப்படத்தை எடிட் செய்ய சொல்லி கேட்டுக் கொண்டார். பிறகு, அந்த புகைப்படமே சந்திப்புக்கான ஆதாரமாக ஊடகங்களில் பகிரப்பட்டன'' என கூறுகிறார் சங்ககிரி ராஜ்குமார்,

''இன்றைய தலைமுறைக்கு பிரபாகரன் என்றால் சீமானுக்கு ஆமைக்கறி சமைத்துக் கொடுத்தவர் என்று நினைவுக் கொள்ளும்படி செய்துள்ளார் சீமான். சமீப காலமாக, தமிழர்களுக்காக குரல் கொடுத்த பெரியாரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். இனிமேலும் இதை சொல்லாமல் இருக்க முடியாது என்ற கட்டாயத்தினால் இதை சொல்கிறேன்" என்றார் அவர்.

இதை நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் பக்கத்தில், ''டைம் ட்ராவல் செய்து 2009-ம் ஆண்டிலேயே ஏ.ஐ தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டு புகைப்படத்தை எடிட் செய்திருப்பார் போல'' என்று பதிவிட்டிருந்தார்.

சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மையா இல்லையா என்பது குறித்து அவ்வபோது தமிழக அரசியல் களத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.

2018-ஆம் ஆண்டு மதுரையில் பேசியிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரபாகரனோடு சீமான் புகைப்படம் எடுக்கவில்லையென்றும் கிராபிக்ஸில் அதுபோல புகைப்படம் உருவாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

சீமான் பிரபாகரன் சந்திப்பு
படக்குறிப்பு,சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குள்ளாகும் புகைப்படங்களில் ஒன்று

இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்த போது, ஏழு ஆண்டுகளுக்கு முன் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும்? சந்தித்தது நானும் அவரும். மூன்று கி.மீ.க்கு இருட்டுக்குள் ஓடுகிறது வண்டி. கூட்டிட்டு வந்த போராளிகள் இறங்கி விட்டனர், அண்ணன் நடேசன்தான் வாகனம் ஓட்டுகிறார். மூன்று கி.மீக்கு மின்சாரமே கிடையாது. அடர்ந்த காட்டுக்குள் சந்திக்கிறோம். அருகில் யாருமே கிடையாது" என்றார்

சங்ககிரி ராஜ்குமார் கூறுவதை நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் கு.செந்தில் குமார் மறுக்கிறார்.

அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், " விடுதலை புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு. அப்படிப்பட்ட அமைப்பின் தலைவரோடு சந்தித்ததாக பொய் கூற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" என்றார்.

மேலும், "இது 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான புகைப்படம். சங்ககிரி என்பவர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படத்தை எடிட் செய்திருப்பதாக கூறினால், அவர் மீது தான் வழக்கு தொடர வேண்டும்" என்றார்.

"சில கட்சிகள் மாவீரன் தினத்தை ஒரு சடங்காக மட்டுமே நடத்தி வந்தனர். அதனை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்ந்தது நாங்கள்தான். பிரபாகரன் மீது இங்குள்ள மக்கள் சிலருக்கு ஈர்ப்பும் மரியாதையும் உண்டு. அந்த மக்களின் ஆதரவை தாங்கள் பெற வேண்டும் என்பதற்காகவே எங்கள் கட்சிக்கு எதிராக அவதூறு பரப்பி வருகிறார்கள்" என்கிறார்.

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

Seeman: 'சீமான் ஈழம் சென்றது உண்மைதான்; ஆனால் அந்தப் புகைப்படம்...' - கொளத்தூர் மணி சொல்வதென்ன?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரன் உடன் இருக்கும் போட்டோவை 'எடிட்' செய்து கொடுத்ததே நான்தான் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்திருந்தார்.
 
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சங்ககிரி ராஜ்குமார் சொன்ன எடிட்டிங் பற்றிய தகவல் உண்மையாக இருக்கலாம்.

சீமான் - கேப்டன் பிரபாகரன்
 
சீமான் - கேப்டன் பிரபாகரன்
 
சீமான் ஈழம் சென்று வந்த இரண்டு ஆண்டுக்கு பிறகு, இந்தப் புகைப்படம் கிராபிக்ஸ் என்ற தகவல்கள் வெளியானது. அப்போது அதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, பின்னர் மறந்துவிட்டோம். புகைப்படம் கிராபிக்ஸ் ஆக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. சீமான் ஈழம் சென்றபோது, அங்கிருந்தவர்கள் அவர் வந்து சென்ற செய்தியை மட்டும் தான் சொன்னார்கள்.

எனக்கு கிடைத்த தகவலின் படி அவர் சென்று வந்தது உண்மை. ஆனால் மிகக் குறைவான நேரம் மட்டும் பிரபாகரனை சந்திக்க, சீமானுக்கு வாய்ப்பு கிடைத்தது. பிரபாகரனுடன் பலரும் திறந்தவெளியில் தான் புகைப்படம் எடுத்துள்ளார்கள்.

கொளத்தூர் மணி
 
கொளத்தூர் மணி
 
தனியாக ஸ்டூடியோ போன்று இருக்கிறதா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. சீமான் தன்னை முழுமையாக வெளிக்காட்டிக் கொள்வாரா? அல்லது இரண்டு முகமும் காட்டுவாரா? என்பது தெரியவில்லை" என்று பேசியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பிழம்பு said:

சீமான் - பிரபாகரன் சந்திப்பு புகைப்படம் சர்ச்சையாவது ஏன்? பின்னணி என்ன?

அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் பக்கத்தில், ''டைம் ட்ராவல் செய்து 2009-ம் ஆண்டிலேயே ஏ.ஐ தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டு புகைப்படத்தை எடிட் செய்திருப்பார் போல'' என்று பதிவிட்டிருந்தார்.

இப்படி ஒரு எடிற் செய்ய செயற்கை நுண்ணறிவு அவசியம் என்று நினைக்கும் அளவுக்கு சாட்டையின் உலக அறிவு இருப்பது வியப்பில்லை😂.

1930 களில், பிலிம் (film) கமெராக்களில் எடுத்த போட்டோக்களையே மிக நுணுக்கமாக வெட்டி, ஒட்டி, பெரிதாக்கி தன் விம்பத்தை செதுக்கிய ஒருவர் இருந்தார்: அவர் பெயர் தோழர் ஸ்ராலின்!

உருமாற்றிய போட்டோக்களை வைத்து அரசியல் விம்பங்களை உருவாக்கும் வழமை இருந்திருக்கிறது.ஆர்வமுள்ளோருக்கு கீழே ஒரு கட்டுரை:  

https://www.history.com/news/josef-stalin-great-purge-photo-retouching

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

ப‌ட‌ம் ப‌ல‌ கோன‌த்தில் இருப்ப‌தால் இப்போதைக்கு இதை ப‌ற்றி ஒன்றும் சொல்ல‌ முடியாது பிரோ

ம்ம்ம்…அவசரப்பட்உ. .முட்டு கொடுக்க முடியாதளவுக்கு சங்ககிரி ராஜ்குமார் வசம் ஏதோ இருக்க கூடும் என யோசிக்கிறீர்கள் போலும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இப்படி ஒரு எடிற் செய்ய செயற்கை நுண்ணறிவு அவசியம் என்று நினைக்கும் அளவுக்கு சாட்டையின் உலக அறிவு இருப்பது வியப்பில்லை😂.

1930 களில், பிலிம் (film) கமெராக்களில் எடுத்த போட்டோக்களையே மிக நுணுக்கமாக வெட்டி, ஒட்டி, பெரிதாக்கி தன் விம்பத்தை செதுக்கிய ஒருவர் இருந்தார்: அவர் பெயர் தோழர் ஸ்ராலின்!

உருமாற்றிய போட்டோக்களை வைத்து அரசியல் விம்பங்களை உருவாக்கும் வழமை இருந்திருக்கிறது.ஆர்வமுள்ளோருக்கு கீழே ஒரு கட்டுரை:  

https://www.history.com/news/josef-stalin-great-purge-photo-retouching

1988 இல் பிரபாகரன் இறந்தார் என்ற பத்திரிகை செய்தியை தலைவரே வாசிப்பது போல நக்கீரன் அட்டைபடம் போட்டது.

பின்னாளில் அந்த படம் போலியானது என்றும், தலைவர் உயிருடன் உள்ளார் என நம்பகமாக தெரிந்தபின், அந்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க தான் அப்படி செய்ததாக கோபால் ஒத்துக்கொண்டார்.

அதேபோல் ஒரு நல்லெண்ணத்தில்தான்  சங்ககிரிராஜ்குமாரும் உதவியுள்ளார்.

இப்போதுதான் தான் பால் வார்த்தது பாம்புக்கு என்பது உறைத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்ஞமலி சீமான் அண்ணாவை கயல்விழி அண்ணியும் சின்னவனும் பெரியவனும் விஜி அண்ணியுடன் சேர்ந்து காறித்துப்பும் ஒரு நாள் வரும். இருந்து பாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படம் போலி எண்டதை காவித்திரியிறது யாரெண்டு பாத்தா எங்கட அறிவுஜீவி கும்பல்கள்தான்..

யார்டாப்பா நீங்கல்லாம்... கொஞ்சமாவது பகுத்தறிவ பயன்படுத்துங்க.. சீமான எதிர்த்து யார் எத சொன்னாலும் சில்லறைய சிதறவிடுறீங்கள்.. எந்த காலத்திலயும் சுயமா யோசிக்கவோ தேடவோ மாட்டிங்களா? எல்லா காலத்திலயும் எவனோ ஒருத்தன் தண்ட அரசியலுக்கு பயன்படுத்திட்டு போற மழுமட்டைகளா இருக்காதிங்க... 

ஒரே ஒரு போட்டோ எடிட் பண்ணி கொடுத்தேன்னு அந்த இயக்குனர் சொல்லுறார்... கூகிள்ள சீமான் பிரபாகரன் சந்திப்பு குறித்து தேடினிங்க எண்டாலே ரெண்டு மூண்டு போட்டோ வரும்… அப்பிடில்லாம் எடிட் பண்ணனும் எண்டா சீமானையும் பிரபாகரனையும் அதேபோல போஸ் கொடுக்கவச்சு போட்டோ எடுத்துத்தான் எடிட் பண்ணனும்... அப்பிடில்லாம வேற எங்கயோ ஒவ்வொண்டா எடுத்து எடிட் பண்ணியிருந்தா இவ்வளவு காலத்துக்க அதோட ஒரிஜினல் Source வெளிய வந்திருக்கும்... இதுவரைக்கும் அப்பிடி ஏதாச்சும் கிடைச்சிருக்கா? தலைவர் அல்லது சீமான் எங்கயாவது இப்படி வெட்டி ஒட்ட உதவிய மூலப்போட்டோக்கள் தனிய நிற்க வந்திருக்கா..? சரி.. எடிட் பண்ணின அந்த இயக்குனரிட்டயே Source images ஐ கேட்டு பாருங்களன்... இதுவே அது ஒரிஜினல் என்பதற்கு போதுமானது…

பெரியார் வழியில் அல்லாமல் தன்வழியில் திமுக பொய் புரட்டை முன்வைத்து அரசியல் செய்கிறது... என்ன, திமுக தன்னை முற்போக்கு கட்சியாக பெரியதொரு பொய்யையும் முன்வைப்பதால் இந்த அறிவுஜீவிகள்., முற்போக்காளர்களாக தங்களை அடையாளப்படுத்தும் போலிகளும் இலகுவாக எடுபட்டுவிடுகிறார்கள்…

அத்துடன் சீமான் எதிர்ப்பாளர்கள்.. அவர்களுக்கு சீமான் விடயத்தில் மட்டும் உண்மையெல்லாம் தேவைப்படாது... வதந்திகளிலயே வாழும் நபர்கள்... இப்பிடியான தகவல்களை கண்டால் குண்டிதட்டின புழுகில் ஓடித்திரிவார்கள்.. 😂

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இது நல்லா பிடிச்சிருக்கு............... எவ்வளவு பணிவு, அடக்கம்...............

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

கீழே இணைக்கப்பட்டிருக்கும் படம், குறித்த புகைப்படத்தை Forensic Analyze மூலம் ELA முறையில் Analyze செய்த ரிசல்ட்... சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் இப்புகைப்படத்தின் Pattern மற்றும் Brightness இல் ஒத்த தன்மை இருக்கும்... எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தில் அது இருக்காது... Brightness ஏ முழுமையாக வேறாக இருந்து காட்டிக்கொடுத்துவிடும்… 

இது மொபைலில் சில Photo Forensic tools மற்றும் AI மூலமாக வெறும் ஐந்து நிமிடங்களுக்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட ரிசல்ட்... 

large.IMG_2395.jpeg.754daeeb07410cdf1045b67d1c724264.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த படம் போலி எண்டதை காவித்திரியிறது யாரெண்டு பாத்தா எங்கட அறிவுஜீவி கும்பல்கள்தான்..

 இந்த அறிவுஜீவிகள்., முற்போக்காளர்களாக தங்களை அடையாளப்படுத்தும் போலிகளும் இலகுவாக இப்பிடியான தகவல்களை கண்டால் குண்டிதட்டின புழுகில் ஓடித்திரிவார்கள்.. 😂

சிரிப்புக்குறி இந்த வரிகளுக்கு....🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

பிரபாகரனுடன் பலரும் திறந்தவெளியில் தான் புகைப்படம் எடுத்துள்ளார்கள்.

தனியாக ஸ்டூடியோ போன்று இருக்கிறதா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை.
 
கொளத்தூர் மணி ஜயா மீது எனக்கு அளப்பரிய மரியாதை இருக்கிறது எமது போராட்டம் மீது நீங்கள் செய்தவைக்கு.. உங்களுக்கும் சீமானுக்குமான சண்டை இருக்கட்டும்.. அது உங்கள் பிரச்சினை.. ஆனால் புலிகள் பின்நாட்களில் பாதுகாப்பு கருதி தலைவர் தங்குமிடங்களில் பின்னுக்கு ஸ்ரூடியோவில் இருப்பதுபோல் திரைச்சீலை கட்டித்தான் எடுப்பார்கள் எதிரிகளுக்கு அடையாளம் தெரியக்கூடாது இருக்குமிடத்தினது என்று.. உதாரணத்துக்கு ஒன்று..👇

large.IMG_2399.jpeg.3ab45edc7caaff6de4c611e17989cd64.jpeg

11 hours ago, Kavi arunasalam said:

சைமன், பிரபாகரனைச் சந்தித்தது உண்மை. ஆனால் இந்தப் படத்தைப் பார்க்கையில் பிரபாகரனின் வலது கை எங்கே என்ற கேள்வி ஒன்று வருகின்றது.

large.IMG_2398.jpeg.e4afad90d88386e89fb7fcf1cf33e227.jpeg

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Justin said:

அவருக்கு சிங்சாங் போட நீங்கள் உட்பட பலர் இருப்பதால் அவர் ஒருமையில் எழுதினாலும் அவரை யாரும் ஒன்றும் செய்யாமல் பாதுகாப்பு இருக்கிறது. 

சாதாரணமாக இப்படி ஆதரவு கிடைப்போர், காலப் போக்கில் அதை உணர்ந்து திருந்துவர், இவரிடம் அந்த வாய்ப்புகள் இல்லை. 

துயரமான உண்மை அது தான். ஜனநாயக மறுப்பு காண்டுமிராண்டிதனங்களை தமிழர்களின் பாதுகாக்கபட வேண்டிய சமூக கலாச்சாரங்களாக நம்பி பெருமைபடும் ஒருவராக இருக்கின்றார்.

18 hours ago, நியாயம் said:

அண்ணை நீங்கள் கமாசையும் அடிக்கிறீங்கள். பூதினையும் அடிக்கிறீங்கள். சீமானையும் அடிக்கிறீங்கள். நீங்கள் யார்? யார்? யார்?

😀

தீயவர்களை வாலி அடிப்பார் என்பது விளங்குகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விளங்க நினைப்பவன் said:

துயரமான உண்மை அது தான். ஜனநாயக மறுப்பு காண்டுமிராண்டிதனங்களை தமிழர்களின் பாதுகாக்கபட வேண்டிய சமூக கலாச்சாரங்களாக நம்பி பெருமைபடும் ஒருவராக இருக்கின்றார்.

😀

தீயவர்களை வாலி அடிப்பார் என்பது விளங்குகின்றது.

அப்ப‌டி அடிப்ப‌தால் உல‌கில் ஏதும் மாற்ற‌ம் வ‌ந்து விட‌வா போகுது ஹா ஹா

அவ‌ர் அவ‌ர்களுக்கு பிடிச்ச‌ ஆட்க‌ளை யாழில் பெருமை ப‌டுத்தி எழுதுவின‌ம் அம்ம‌ட்டும்........................

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சீமான் படமும் புலிகளின் தலைவரின் படமும் இரு வேறு வேறு வகையான ஒளியமைப்பினை பயன்படுத்தி உள்ளமை தெரிகிறது சீமானின் படத்தில் கூரை ஒளி அமைப்பு அல்லது கூரை தெறிப்பு ஒளி அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது(Softener) மறு வளமாக புலிகளின் தலைவரின் புகைப்படத்தில் நேரடி ஒளி அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

சீமான் - கேப்டன் பிரபாகரன்

அத்துடன் இரண்டு உருவத்திற்கும் வேறு வேறுபட்ட குவியத்தூரம் காணப்படுகிறது Focal length.

இவற்றினை பார்க்கும் போது இரு வேறு படங்களாக இருப்பதாக கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்).

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த படம் போலி எண்டதை காவித்திரியிறது யாரெண்டு பாத்தா எங்கட அறிவுஜீவி கும்பல்கள்தான்..

யார்டாப்பா நீங்கல்லாம்... கொஞ்சமாவது பகுத்தறிவ பயன்படுத்துங்க.. சீமான எதிர்த்து யார் எத சொன்னாலும் சில்லறைய சிதறவிடுறீங்கள்.. எந்த காலத்திலயும் சுயமா யோசிக்கவோ தேடவோ மாட்டிங்களா? எல்லா காலத்திலயும் எவனோ ஒருத்தன் தண்ட அரசியலுக்கு பயன்படுத்திட்டு போற மழுமட்டைகளா இருக்காதிங்க... 

ஒரே ஒரு போட்டோ எடிட் பண்ணி கொடுத்தேன்னு அந்த இயக்குனர் சொல்லுறார்... கூகிள்ள சீமான் பிரபாகரன் சந்திப்பு குறித்து தேடினிங்க எண்டாலே ரெண்டு மூண்டு போட்டோ வரும்… அப்பிடில்லாம் எடிட் பண்ணனும் எண்டா சீமானையும் பிரபாகரனையும் அதேபோல போஸ் கொடுக்கவச்சு போட்டோ எடுத்துத்தான் எடிட் பண்ணனும்... அப்பிடில்லாம வேற எங்கயோ ஒவ்வொண்டா எடுத்து எடிட் பண்ணியிருந்தா இவ்வளவு காலத்துக்க அதோட ஒரிஜினல் Source வெளிய வந்திருக்கும்... இதுவரைக்கும் அப்பிடி ஏதாச்சும் கிடைச்சிருக்கா? தலைவர் அல்லது சீமான் எங்கயாவது இப்படி வெட்டி ஒட்ட உதவிய மூலப்போட்டோக்கள் தனிய நிற்க வந்திருக்கா..? சரி.. எடிட் பண்ணின அந்த இயக்குனரிட்டயே Source images ஐ கேட்டு பாருங்களன்... இதுவே அது ஒரிஜினல் என்பதற்கு போதுமானது…

பெரியார் வழியில் அல்லாமல் தன்வழியில் திமுக பொய் புரட்டை முன்வைத்து அரசியல் செய்கிறது... என்ன, திமுக தன்னை முற்போக்கு கட்சியாக பெரியதொரு பொய்யையும் முன்வைப்பதால் இந்த அறிவுஜீவிகள்., முற்போக்காளர்களாக தங்களை அடையாளப்படுத்தும் போலிகளும் இலகுவாக எடுபட்டுவிடுகிறார்கள்…

அத்துடன் சீமான் எதிர்ப்பாளர்கள்.. அவர்களுக்கு சீமான் விடயத்தில் மட்டும் உண்மையெல்லாம் தேவைப்படாது... வதந்திகளிலயே வாழும் நபர்கள்... இப்பிடியான தகவல்களை கண்டால் குண்டிதட்டின புழுகில் ஓடித்திரிவார்கள்.. 😂

ஓணாண்டி,

மேலே உள்ள படத்தில் - தலைவரின் ஹோல்சர் பெல்ட் இற்கு கீழ், தலைவருக்கும் சீமானுக்கும் இடையில் உள்ள அந்த சிறிய இடைவெளியை கவனித்து பாருங்கள் - மிச்ச படத்தின் பின்புல நிறத்துக்கு அறவே சம்பந்தமில்லாத கடும்பச்சை நிறம் மற்றும் பளீர் வெள்ளை தெரிகிறது.

தெரிகிறதா அல்லது சீமான் விசுவாசம் கண்ணை மூடி விட்டதா🤣.

29 minutes ago, vasee said:

இந்த சீமான் படமும் புலிகளின் தலைவரின் படமும் இரு வேறு வேறு வகையான ஒளியமைப்பினை பயன்படுத்தி உள்ளமை தெரிகிறது சீமானின் படத்தில் கூரை ஒளி அமைப்பு அல்லது கூரை தெறிப்பு ஒளி அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது(Softener) மறு வளமாக புலிகளின் தலைவரின் புகைப்படத்தில் நேரடி ஒளி அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

சீமான் - கேப்டன் பிரபாகரன்

அத்துடன் இரண்டு உருவத்திற்கும் வேறு வேறுபட்ட குவியத்தூரம் காணப்படுகிறது Focal length.

இவற்றினை பார்க்கும் போது இரு வேறு படங்களாக இருப்பதாக கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்).

நன்றி. நான் மேலே சொன்ன விடயத்தை பற்றி உங்கள் கருத்து என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

எனக்கு இது நல்லா பிடிச்சிருக்கு............... எவ்வளவு பணிவு, அடக்கம்...............

spacer.png

3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கீழே இணைக்கப்பட்டிருக்கும் படம், குறித்த புகைப்படத்தை Forensic Analyze மூலம் ELA முறையில் Analyze செய்த ரிசல்ட்... சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் இப்புகைப்படத்தின் Pattern மற்றும் Brightness இல் ஒத்த தன்மை இருக்கும்... எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தில் அது இருக்காது... Brightness ஏ முழுமையாக வேறாக இருந்து காட்டிக்கொடுத்துவிடும்… 

இது மொபைலில் சில Photo Forensic tools மற்றும் AI மூலமாக வெறும் ஐந்து நிமிடங்களுக்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட ரிசல்ட்... 

large.IMG_2395.jpeg.754daeeb07410cdf1045b67d1c724264.jpeg

ரசோதரன் நீங்கள் இணைத்த புட்டின் படத்தில் சீமான் படத்தினை பொருத்தியது மிக தெளிவாக தெரிகிறது, சீமானின் இடது கை புட்டின் படத்துடன் இணையும் பகுதிகளில் ஆனால் ஓணாண்டியின் ELA இல் இரண்டு சீமானும் புலிகளின் தலைவர் உள்ள படமும் மிக ஒத்த பொருத்தத்துடன் உள்ளதுதான் ஆச்சரியமாக இருக்கிறது அனால் சில மேலே நான் குறிப்பிட்ட வித்தியாசங்களை மற்றும் கவிஅருணாசலம் கூறிய வலது கை போன்றவற்றை தவிர்த்து பார்த்தால் இது உண்மையான படம் என்பதாக ELA  கூறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

large.IMG_2398.jpeg.e4afad90d88386e89fb7fcf1cf33e227.jpeg

மாட்டினான் சிங்கன். இதில் அந்த பின்புல விரிப்பு முழுதாக தெரிகிறது. அதில் எங்கேயும் கடும் பச்சை நிறமோ, பளீர் வெள்ளை நிறமோ இல்லை.

தலைவரின் பிரத்தியேக படப்பிடிப்பு அறையில் அவர் இருக்கும் படங்களின் மீது செக்ஸ் சைக்கோ சீமானை சூப்பர் இம்போஸ் பண்ணி உள்ளார்கள்.

இதை ஒரு இயக்குனர் செய்ய முன்பே அவ்வை சண்முகி, ஆளவந்தான் நந்து, அபூர்வசகோதரர் அப்பு என பல மேஜிக்கை தமிழ்சினிமா காட்டி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நன்றி. நான் மேலே சொன்ன விடயத்தை பற்றி உங்கள் கருத்து என்ன?

ஓணாண்டி இணைத்த ELA இல் அது காணப்படவில்லை அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது, ஆனால் சும்மா பார்க்கும் போது இரு வேறுபட்ட ஒளி அமைப்பு ப்யன்படுத்தப்பட்டதால்தான் நீங்கள் கூறுவது போல புலிகளின் தலைவர் படத்தில் பளீர் ஒளியும் சீமான் படத்தில் மென் ஒளியும் காணப்படுகிறது.

பொதுவாக ELA இல் அது தெளிவாக தெரியும் ஆனால் இந்த ELA  இல் இது தெரியவில்லை அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கீழே இணைக்கப்பட்டிருக்கும் படம், குறித்த புகைப்படத்தை Forensic Analyze மூலம் ELA முறையில் Analyze செய்த ரிசல்ட்... சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் இப்புகைப்படத்தின் Pattern மற்றும் Brightness இல் ஒத்த தன்மை இருக்கும்... எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தில் அது இருக்காது... Brightness ஏ முழுமையாக வேறாக இருந்து காட்டிக்கொடுத்துவிடும்… 

இது மொபைலில் சில Photo Forensic tools மற்றும் AI மூலமாக வெறும் ஐந்து நிமிடங்களுக்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட ரிசல்ட்... 

large.IMG_2395.jpeg.754daeeb07410cdf1045b67d1c724264.jpeg

இதுவும் ஜோம்பிகள் உருட்டியதை நீங்கள் காவி வருகிறீர்கள்?

இது நீங்களகவே சோதித்து பார்த்ததா?

அப்படி எனில் என்ன tools, process என்ன என விளக்கவும்.

எல்லாரும் 65+ அல்ல கேள்வி கேட்காமல் லைக் அடிக்க🤣

3 minutes ago, vasee said:

பொதுவாக ELA இல் அது தெளிவாக தெரியும் ஆனால் இந்த ELA  இல் இது தெரியவில்லை அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

ELA போல் போலியாக ஒரு இமேஜை உருவாக்கி பரப்பபமுடியும் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ELA போல் போலியாக ஒரு இமேஜை உருவாக்கி பரப்பபமுடியும் அல்லவா?

ELA படத்தினை எடிட் செய்து தவறுகளை மறைக்க வாய்ப்புள்ளதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vasee said:

ELA படத்தினை எடிட் செய்து தவறுகளை மறைக்க வாய்ப்புள்ளதுதான்.

களம் 8 க்கு @பாலபத்ர ஓணாண்டி வரவும் 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.