Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, செம்பாட்டான் said:

இன்னும் ஒருக்கா சொல்லுங்க. நம்ம இந்தியா வெல்ல வேண்டும். 😁

நீங்க ரொம்பமோசம் சார்....

  • Replies 1.3k
  • Views 38.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்தாலும் இப்ராஹிம் ஸட்ரானின் அதிரடியான 177 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து சவாலான 325 ஓட்டங்களை எடுத்த

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது   சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், 

  • கிருபன்
    கிருபன்

    ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து சராசரியான 241 ஓட்டங்களை எடுத்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்!

இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியுசிலாந்து விளையாட உள்ளது, ஒருவரும் நியுசிலாந்து வெல்லும் என தெரிவு செய்யவில்லை எனும் பட்சத்தில் இறுதி போட்டியில் நியுசிலாந்து வென்றால் இந்தியா இறுதி போட்டியில் வெல்லும் என தெரிவு செய்தவர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு வெற்றிப்புள்ளியினை வழங்கமுடியுமா?🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, alvayan said:

எப்போதும் என்பதை நிரந்தரமாக என்று வைச்சுப்பம்...

இன்னும் மூன்று நாளைக்குத்தான்! இறுதியாட்டத்தில் இந்தியா வென்றால் அத்துடன் எனது ஆட்டம் ஓவர்!! 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

ஏதாவது...ஒரு கேள்விக்கு 26 புள்ளி கிடைக்குமோ ..ஒருவர் தொடங்கின நாள் முதல் அடியில் முதலாவது ஆளாய் இருக்கிறார்...அல்லது போட்டி நடத்துபவர் என்ற தார்மீக சிந்தனையில்...பிழையான விடைகளை எழுதி பின்னடிக்கிறாரோ..

5 hours ago, செம்பாட்டான் said:

அவர் வந்தால் ராசாவாத்தான் வருவேன் என்டு அடம் பிடிக்கிறார். நாம என்ன செய்ய முடியும்.

5 hours ago, ஈழப்பிரியன் said:

அவர் அடித்தா மொட்டை

அல்லது குடும்பி.

முன்னர் பெரிய குடும்பி வைச்சிருந்தேன்😜

சம்பியன்ஷிப் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றதால் உள்ளூர் சாதகம் இருக்கும் என்று பாகிஸ்தானை நம்பி குணா குகையில் விழுந்தவன் மாதிரி ஆகிவிட்டேன்😩

இனி மட்டன் வாங்குவதைத் தவிர்த்து வேறு ஒன்றிலும் பாகிஸ்தான்காரரை நம்பமாட்டேன்😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

கிருபன்!

இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியுசிலாந்து விளையாட உள்ளது, ஒருவரும் நியுசிலாந்து வெல்லும் என தெரிவு செய்யவில்லை எனும் பட்சத்தில் இறுதி போட்டியில் நியுசிலாந்து வென்றால் இந்தியா இறுதி போட்டியில் வெல்லும் என தெரிவு செய்தவர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு வெற்றிப்புள்ளியினை வழங்கமுடியுமா?🤣

ஆசை, தோசை அப்பளம் வடை!🤪

போட்டியில் இல்லாத அணிகளைத் தெரிவு செய்தவர்களுக்கு முதலிலேயே முட்டைகள் 🍳 கொடுக்கப்படும். புஸ்டியான ஆகாரத்தோடு மட்சைப் பார்க்கலாம்!

இந்தியா வெல்லும் என்றவர்களுக்கு ட்ரம்ப் - செலன்ஸிக்கான லஞ்ச்சில் கவியார்🍱🧆🥗 மாதிரி எக்ஸ்பென்சிவ் ஐயிட்டம் எல்லாம் ரெடி. செலன்ஸ்சி மாதிரி இந்தியா மட்சைக் கவிட்டால் எல்லோருக்கும் கூழ்முட்டைதான்🥚🥚😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

நியுசிலாந்து வென்றால், மிச்ச எல்லாரும், ஆளுக்கு இரண்டு புள்ளி போட்டு, கிருபனுக்குக் குடுப்பம். அப்ப என்டாலும் அவர் மேல வாறாரோ என்டு பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிலாமதி said:

நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்திருந்த @சுவைப்பிரியன் க்கு மாத்திரம் மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது.

எனக்கு இது காணும் .முதல்வர் என்ன பிரதமர் பதவியே கிடைத்த மாதிரி

பீலிங்க்ஸ் .😍

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

முன்னர் பெரிய குடும்பி வைச்சிருந்தேன்😜

சம்பியன்ஷிப் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றதால் உள்ளூர் சாதகம் இருக்கும் என்று பாகிஸ்தானை நம்பி குணா குகையில் விழுந்தவன் மாதிரி ஆகிவிட்டேன்😩

இனி மட்டன் வாங்குவதைத் தவிர்த்து வேறு ஒன்றிலும் பாகிஸ்தான்காரரை நம்பமாட்டேன்😜

நானும் அதைப் போலதான் நினைச்சன். பாக்கிஸ்தானோட, தென்னாபிரிக்காவையும் சேர்க்க வேணும். அவங்கள இனி மனுசன் நம்புவானா.

2 minutes ago, சுவைப்பிரியன் said:

எனக்கு இது காணும் .முதல்வர் என்ன பிரதமர் பதவியே கிடைத்த மாதிரி

பீலிங்க்ஸ் .😍

தனி ஒருவன். ஒற்றையாளாய் நிக்கிறதும் ஒரு லெவல்தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, செம்பாட்டான் said:

நியுசிலாந்து வென்றால், மிச்ச எல்லாரும், ஆளுக்கு இரண்டு புள்ளி போட்டு, கிருபனுக்குக் குடுப்பம். அப்ப என்டாலும் அவர் மேல வாறாரோ என்டு பார்ப்போம்.

சாரி! சில்லறை வாங்கிப் பழக்கமில்லை..😂

மொத்தமாக வாரிச் சுருட்டித்தான் பழக்கம்😝

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

மொத்தமாக வாரிச் சுருட்டித்தான் பழக்கம்

அண்ண வந்தோனா தருவியல் தானே🤣.

பெருமாள் முருகனை பெளசர் இலண்டன் கூட்டி வாறாராம்.. போறியளோ?

  • கருத்துக்கள உறவுகள்

25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக கிரிக்கெட்டில் ஒரு பெரிய ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன

இதற்கு முதல் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும்----

2001 உலகக் கிண்ண போட்டியிலும் விளையாடி இரு முறையும் நியூஸிலாந்தே வெற்றி பெற்றதாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பெருமாள் முருகனை பெளசர் இலண்டன் கூட்டி வாறாராம்.. போறியளோ?

ஓம். பெளசர் 6 புத்தகங்கள் எடுத்து வைச்சிருக்கின்றார். பெருமாள் முருகனையும் பாத்ததாகவும் இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

ஓம். பெளசர் 6 புத்தகங்கள் எடுத்து வைச்சிருக்கின்றார். பெருமாள் முருகனையும் பாத்ததாகவும் இருக்கும்!

6 இன் பெயரை சொல்லுங்கோ எனக்கு சரிவரும் மாதிரி ஏதும் இருக்குதா என பாப்பம்.

3 hours ago, வாத்தியார் said:

இரு முறையும் நியூஸிலாந்தே வெற்றி பெற்றதாம்

3rd time lucky என இந்தியா ரசிகர்கள் ஆர்பரிக்க போகிறார்கள்🤣

போன தடவை World Test Championship final இந்தியா தோற்பதை 5ம் நாள் டிக்கெட் எடுத்து போய் கண்குளிரப்பார்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

6 இன் பெயரை சொல்லுங்கோ எனக்கு சரிவரும் மாதிரி ஏதும் இருக்குதா என பாப்பம்.

ஏதாவது செட் ஆகுமா??

ஷோபாசக்தி கதைகள் 1997-2024

தீக்குடுக்கை - அனோஜன்

மணிமேகலை - அ.மார்க்ஸ்

இடபம் - கண்மணி

தாயைத்தின்னி - தில்லை

சிவப்புச் சட்டைச் சிறுமி - ஸர்மிளா செய்யத்

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

ஷோபாசக்தி கதைகள் 1997-2024

இதை தவிர மிச்சம் எல்லாம் செட் ஆகும்🤣.

ஷர்மிளா செய்யத் கிழக்கிலங்கையில் இஸ்லாமியவாதிகளுடன் முரண்பட்டுவிட்டு அமெரிக்கா போனவரா?

பிகு

ஷோபா சகதி அருமையான வார்த்தை-வியாபாரி. ஒரு நாவலை (கொரில்லா?) சும்மா வாசிக்க தொடங்கி இரவிரவாக வாசித்து விட்டு வேலைக்கு சிவந்த கண்களுடன் போயுள்ளேன்.

ஆனால் கண்முன் நடந்த உண்மைகளை தன் வயிற்று பொழைப்புக்காக பொய்யாக திரிக்கும் எவர் மீதும், இவர் மீதும் அபிமானம் இல்லை.

உண்மை இல்லாதவர்களின் எழுத்துகளும் பொய்களே.

தாயைதின்னி - கவர்ந்திழுக்கும் தலைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாத்தியார் said:

25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக கிரிக்கெட்டில் ஒரு பெரிய ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன

இதற்கு முதல் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும்----

2001 உலகக் கிண்ண போட்டியிலும் விளையாடி இரு முறையும் நியூஸிலாந்தே வெற்றி பெற்றதாம்

2001 உலகக் கிண்ணம் அல்ல. 2000ம் ஆண்டு நடந்த இதே சாம்பியன் கிண்ணம். கிரிஸ் கெய்ன்ஸ் (Chris Cairns) அடிச்ச அடி அப்பிடி. சதம் அடிச்சு வென்று குடுத்தார். கங்குலியும் சதம் அடிச்சிருப்பார்.

அந்தப் போட்டி விபரம் இதோ:

ESPNcricinfo
No image preview

IND vs NZ Cricket Scorecard, Final at Nairobi, October 15...

Live Cricket Scoreboard: Get India vs New Zealand Final, cricket scorecard, ICC KnockOut 2000/01 dated October 15, 2000.
  • கருத்துக்கள உறவுகள்

481661507_1330786241590596_4579560833850

481674635_620855463913657_35969395688617

481062234_1128632625941146_7902483205208

நோன்பு பிடிக்காமல்... கிரிக்கெட் விளையாடிய

மொஹமெட் ஷமிக்கு, முஸ்லீம் ஜமாத் தலைவர் கண்டனம்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

இதை தவிர மிச்சம் எல்லாம் செட் ஆகும்🤣.

ஷர்மிளா செய்யத் கிழக்கிலங்கையில் இஸ்லாமியவாதிகளுடன் முரண்பட்டுவிட்டு அமெரிக்கா போனவரா?

பிகு

ஷோபா சகதி அருமையான வார்த்தை-வியாபாரி. ஒரு நாவலை (கொரில்லா?) சும்மா வாசிக்க தொடங்கி இரவிரவாக வாசித்து விட்டு வேலைக்கு சிவந்த கண்களுடன் போயுள்ளேன்.

ஆனால் கண்முன் நடந்த உண்மைகளை தன் வயிற்று பொழைப்புக்காக பொய்யாக திரிக்கும் எவர் மீதும், இவர் மீதும் அபிமானம் இல்லை.

உண்மை இல்லாதவர்களின் எழுத்துகளும் பொய்களே.

தாயைதின்னி - கவர்ந்திழுக்கும் தலைப்பு.

ஷோபாசக்தியின் எல்லாக் கதைகளையும் படித்திருப்பேன். புத்தகம் வாங்குவது எழுத்தின் அபிமானத்தால்தான். அவர் எழுத்தை வைத்து பிழைப்பதாக நான் நினைக்கவில்லை.

சர்மிளா செய்யத் துருக்கியில் போய் இருந்தார். இப்போதும் அங்குதான் என்று நினைக்கின்றேன். சிலவேளை அநுர சகோதரயவின் ஆட்சியில் நல்லதே நடக்கும் என்று ஊர் போனாவோ தெரியாது!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

481661507_1330786241590596_4579560833850

481674635_620855463913657_35969395688617

481062234_1128632625941146_7902483205208

நோன்பு பிடிக்காமல்... கிரிக்கெட் விளையாடிய

மொஹமெட் ஷமிக்கு, முஸ்லீம் ஜமாத் தலைவர் கண்டனம்.

ஒரு சந்தேகம். எப்படி படங்களை இவ்வாறு இணைக்கிறீர்கள். சாதாரணமாக வெட்டி ஒட்ட முடியவில்லை. file size பெரிதாக இருக்கிறது என்ற தகவல் வருகிறது

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, செம்பாட்டான் said:

ஒரு சந்தேகம். எப்படி படங்களை இவ்வாறு இணைக்கிறீர்கள். சாதாரணமாக வெட்டி ஒட்ட முடியவில்லை. file size பெரிதாக இருக்கிறது என்ற தகவல் வருகிறது

படங்களை இணைப்பதற்கு.... @கிருபன் ஜீ, @ஈழப்பிரியன் போன்றோர், அழகு தமிழில் விரிவாக விளங்கப்படுத்துவார்கள் என நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

@செம்பாட்டான் நீங்கள் படத்தை நேரடியாக கொப்பி பண்ணினால்..

படம் அனுமதித்த அளவைவிட பெரிது என காட்டும்.

அதனால்... மவுசால் இணைக்கப் பட வேண்டிய படத்தை கிளிக் பண்ணும் போது,

படத்தின் அட்ரஸ் என்று ஒரு தெரிவு காட்டும்.

அதனை கொப்பி பண்ணி, பதியும் போது... படம் இணைக்கப் பட்டு விடும்.

இதே முறையில்தான் நான் செய்கின்றனான்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, செம்பாட்டான் said:

ஒரு சந்தேகம். எப்படி படங்களை இவ்வாறு இணைக்கிறீர்கள். சாதாரணமாக வெட்டி ஒட்ட முடியவில்லை. file size பெரிதாக இருக்கிறது என்ற தகவல் வருகிறது

கூக்கில்ல‌ போய் இப்ப‌டி எழுதுங்கோ

postimaes என்று வ‌ரும் அத‌ற்க்குள் போனால்

நீங்க‌ள் யாழில் இணைக்க‌ விரும்பும் ப‌ட‌த்தை கேக்கும் அதை உப்பிலேட்செய்த‌ பின்

Screenshot-20250306-193406-Chrome.jpg

பிற‌க்கு

Screenshot-20250306-193446-Chrome.jpg

Direct link கொப்பி ப‌ண்ணி போட்டு

இதுக்கை அந்த‌ லிங்கை போட்டால் நீங்க‌ள் தெரிவு செய்த ப‌ட‌ம் வ‌ரும்...............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

ஒரு சந்தேகம். எப்படி படங்களை இவ்வாறு இணைக்கிறீர்கள். சாதாரணமாக வெட்டி ஒட்ட முடியவில்லை. file size பெரிதாக இருக்கிறது என்ற தகவல் வருகிறது

Postimages — free image hosting...
No image preview

Postimages — free image hosting / image upload

Provides free image upload and hosting integration for forums. Free picture hosting and photo sharing for websites and blogs.

வணக்கம் செம்பாட்டான்.

இந்த சுட்டியில் போய் சுலபமாக இணைக்கலாம்.

பையன் விபரமாக இணைத்துள்ளார்.

படத்தை அப்லோட் பண்ணிய பின் இரண்டாவதாக Direct link என்பதை காப்பி பேஸ்ட் செய்யுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

ஆசை, தோசை அப்பளம் வடை!🤪

போட்டியில் இல்லாத அணிகளைத் தெரிவு செய்தவர்களுக்கு முதலிலேயே முட்டைகள் 🍳 கொடுக்கப்படும். புஸ்டியான ஆகாரத்தோடு மட்சைப் பார்க்கலாம்!

இந்தியா வெல்லும் என்றவர்களுக்கு ட்ரம்ப் - செலன்ஸிக்கான லஞ்ச்சில் கவியார்🍱🧆🥗 மாதிரி எக்ஸ்பென்சிவ் ஐயிட்டம் எல்லாம் ரெடி. செலன்ஸ்சி மாதிரி இந்தியா மட்சைக் கவிட்டால் எல்லோருக்கும் கூழ்முட்டைதான்🥚🥚😂🤣

பையன் கற்பூரத்திலை அடிச்சு சத்தியம் செய்யிறமாதிரி சொல்கிறார், இந்தியா வெல்லும் என அதனால் பிரச்சினை வராது ஆனால் இந்தியா தோற்கட்டும் இருக்கு களோபரம்.

இந்திய இரசிகர்கள் ஈடன் காடனில் செய்தமாதிரி யாழில் கலவரம் செய்ய வாய்ப்புள்ளது.🤣

12 hours ago, செம்பாட்டான் said:

நியுசிலாந்து வென்றால், மிச்ச எல்லாரும், ஆளுக்கு இரண்டு புள்ளி போட்டு, கிருபனுக்குக் குடுப்பம். அப்ப என்டாலும் அவர் மேல வாறாரோ என்டு பார்ப்போம்.

பல இந்திய இரசிகர்களுக்கு இந்த வார இறுதியில் இருதய நோய் வர வாய்ப்புள்ளது, நீங்கள் புள்ளிகளை பற்றி கவலைப்படுகிறீர்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

https://img1.hscicdn.com/image/upload/f_auto,t_ds_w_1280,q_70/lsci/db/PICTURES/CMS/72000/72095.3.gif

13 மார்ச் 1996 இல் ஈடன் காடன் மைதானத்தில் இந்திய இரசிகர்கள் இந்தியாவின் தோல்வியினை தாங்காது கலவரத்தில் ஈடுபட்டனர், 09 மார்ச் 2025 இல் இந்திய இரசிகர்கள் மீண்டும் ஒரு கலவரத்தில் இறங்கலாம்.

🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.